செவ்வாய், 15 மே, 2018

தைரியமானவர்கள் மட்டும் இவ்விடத்திற்கு செல்லலாம்

உலகம் முழுவதும் பல அழகான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன எமக்கு போதிய அளவு பணமும் நேரமும் கிடைத்துவிட்டால் போதும் விரும்பிய இடங்களுக்கு சென்று சுற்றுலாத்தலங்களை இரசித்து அனுபவித்துவிட்டுவரலாம் ஆனால் நாம் இங்கே பார்க்கப்போகும் இடங்களுக்கு அவளவு இலகுவில் யாரும் சென்றுவிடமுடியாது.ஆபத்துக்கள் நிறைந்த இந்தப்பகுதிகள் பல, அரசாங்கங்களினால் பொதுமக்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன அதோடு இவ்வாறான ஆபத்தான சுற்றுலாத்தலங்களில் பலவற்றை இயற்கையே தனிமைப்படுத்தித்தான் வைத்திருக்கின்றது.

இப்படியான உயிர் ஆபத்துக்கள் நிறைந்த இடங்களைப்பற்றித்தான் இப்போது பார்க்கப்போகின்றோம்

பாம்புத்தீவு


பிரேசில் நாட்டுக்கு அருகே அமைந்திருக்கும் அழகிய சிறிய தீவுதான் பாம்புத்தீவு .இங்கே மனிதர்கள் யாரும் இல்லை பாம்புகளும் பறவைகளும் மட்டுமே உயிர்வாழ்கின்றன.ஒட்டுமொத்தமாக 430 000 பாம்புகள் இத்தீவில் வாழ்வதனால் இத்தீவிற்கு பாம்புத்தீவு என்று பெயர் ஆனால் உண்மையில் இத்தீவின் பெயர் கெய்மாடா கிராண்டி தீவு என்பதாகும்.சுருக்கமாக இத்தீவு அழிவடையும் ஆபத்தில் உள்ள பாம்புகளின் சரணாலயம் என்று கூறலாம்.

உலகின் மிக ஆபத்தான விஷமுள்ள பாம்புகள் அனைத்தும் இங்கேதான் இருக்கின்றன.இத்தீவில் ஒரு கலங்கரைவிளக்கம் ஒன்றும் அமைந்திருக்கின்றது இத்தீவில் இருக்கும் ஒரே ஒரு கட்டிடம் என்றால் அது இதுதான். 1909இல் மிகவிரைவாக கட்டிமுடித்துவிட்டு கட்டிடப்பணியில்
ஈடுபடுபவர்கள் ஓடித்தப்பவேண்டியதாயிற்று அதோடு அங்கே வேலைசெய்தவர்களில் சிலர் பாம்புக்கடியால் மரணமடைந்து அவர்களது உடல் கரை ஒதுங்கியதாகவும் செய்திகள் இருக்கின்றன.
தங்க நிற தலையைக்கொண்ட  golden lancehead relies என்ற பாம்பும் இங்கேதான் இருக்கின்றது.இத்தீவின் ஆட்சியான வேட்டைக்காரனாக இருப்பது இந்த தங்கத்தலையைக்கொண்டபாம்புதான் இங்கே வாழும் பறவைகள்தான் இந்தப்பாம்பின் உணவு.இத்தீவிற்குள் யாராவது மனிதர்கள் சென்றால் பாம்பிடம் கடிவாங்குவதற்கான வாய்ப்புக்கள் மிக மிக அதிகம்.பாம்புக்கடிக்கு உடனடியான மருத்துவ சிகிச்சை பெறப்படவில்லையாயின் மரணம் சம்பவிக்கலாம்.இதனால்தான் பிரேசில் நாடு தன் நாட்டின் கடற்படையையும் சில ஆராய்ச்சியாளர்களையும் மட்டுமே இத்தீவிற்குள் நுழைய அனுமதித்துள்ளது.

சென்டினல் தீவுவங்காளவிரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் தீவுக்கூட்டங்களில் ஒரு சிறிய தீவுதான் சென்டினல் தீவு.60 000 வருடத்திற்கு மேலாக வெளி உலகத்துடன் எந்ததொடர்பும் இல்லாமல் இருக்கும் அடர்த்தியான காடுகளைக்கொண்ட தீவு இதுவாகும்.இங்கே வாழும் பழங்குடியினர் வெளி உலகத்துடன்,மனிதர்களுடன் எந்த உறவையும் வைத்துக்கொள்ளவிரும்புவதில்லை.ஹெலிஹாப்டரில் தவறுதலாக இத்தீவுப்பக்கம் சென்ற சுற்றுலாப்பயணிகள் மீதும் அம்புகளால் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.2004 இல் சுனாமி இத்தீவை  தாக்கியதன் காரணமாக மீட்புப்பணிக்காகவும் முதலுதவிக்காகவும் ஹெலிஹாப்டர்கள் இங்கே சென்றபோது பறந்துகொண்டிருக்கும் ஹெலிஹாப்டர்கள்மீது சரமாரியாக அம்புமழை பொழியவே மீட்புக்குழு அங்கிருந்து திரும்பிவந்துவிட்டது.

ஒட்டுமொத்தமாக பழங்குடியினரின் எண்ணிக்கை 50 இல் இருந்து 500 வரை இருக்கலாம்.உணவுக்காக தீவுக்குள்ளேயே இவர்கள் அடிக்கடி இடம்பெயர்வார்கள்.இவர்கள் நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்றும் ஒரு கதை இருக்கின்றது. சுராஜ்,பண்டித் திவாரி என்ற இந்திய மீனவர்கள் நண்டுபிடிப்பதற்காக இத்தீவிற்குசென்றுள்ளார்கள் அவர்கள் உறங்கும் தருவாயில் அவர்களைகொன்று கடலில் வீசியிருக்கிறார்கள் பழங்குடியினர்.இவர்களின் உடலைமீட்கும் இராணுவமுயற்சியும் தோல்வியடையவே மீட்புப்பணியை அரசு ஒத்திவைத்துள்ளது.
1880 இல் இத்தீவில்வாழும்  கணவன் மனைவி மற்றும் அவர்களது குழந்தைகளை கடத்தி துறைமுகத்திற்கு கொண்டுவரும்போது அவர்களுக்கு நோய் ஏற்பட ஆரம்பிக்கவே உடனடியா மீண்டும் அத்தீவிற்கே அவர்களை கொண்டுசென்றுவிட்டுவிட்டார்கள்.இத்தீவில் உள்ளமக்களின் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதனாலும் பழங்குடியினர் வெளி உலகத்துடன் எந்ததொடர்பையும் ஏற்படுத்தவிரும்பவில்லை என்பதனாலும் இத்தீவு தனிமைப்படுத்தப்பட்டதீவாகவே இருக்கட்டும் என்று இந்தியா முடிவெடுத்துள்ளது.


சினோர்பெல் வட உக்ரேனில் அமைந்திருக்கும் ஒரு நகரம்தான் சினோர்பெல்
.இன் நகரத்திற்கு சென்றால் அங்கே கைவிடப்பட்ட பொம்மைகள் வாகனங்கள் வீடுகள் என்று பலவற்றை நீங்கள் காணலாம்.ரெஸிடன்ற் ஈவில் திரைப்படத்தில் வரும் கைவிடப்பட்ட நகரம்போல்தான் இன் நகரம் காட்சியளிக்கும்.அப்படி என்னதான் நடந்தது?1981 ஆம் ஆண்டில்தான் இச்சம்பவம் நடைபெற்றது.ஒரே நாளில் நகரத்தின் அனைத்துமக்களும் உடனடியாகவெளியேற்றப்பட்டார்கள்.இதன் காரணமாக பொருட்களை எடுத்துச்செல்லக்கூட அவர்களுக்கு நேரமில்லாமல் தலைதெறிக்க ஓடவேண்டியதாயிற்று.

சினோர்பெல் நகரத்திற்கு அருகே அமைந்திருக்கும் அணு உலை ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணத்தினாலேயே அரசு மக்களை உடனடியாக நகரத்தைவிட்டு வெளியேற்றியது. அணு உலையில் உள்ள நீர் குளிர்சாதனம் செயற்படாமையின் காரணத்தினால் அணு உலையின் மையவெப்ப நிலை அதிகரித்தது ஒரு கட்டத்தில் அணு உலையின் மையம் வெடித்து சிதறியது.கதிரியக்கம் கொண்டகாபன் துகள்களும் கதிரியக்க அலைகளும் காற்றில் பரவ ஆரம்பித்தன.இவ்விபத்தின்போது வெளியிடப்பட்ட கதிர்வீச்சின் அளவு ஹீரோசிமாவில் போடப்பட்ட அணுகுண்டுக்கதிர்வீச்சைவிட 10 மடங்காகும்.உடனடியாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 30தான் ஆனால் இக்கதிர்வீச்சுப்பாதிப்பால் நீண்டகாலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4000ஆகும்.

பல குழந்தைகள் குறைபாட்டுடன் பிறந்துள்ளன,பல சிறுவர்கள் தைரோயிட் கான்சரினால் மரணமடைந்துள்ளார்கள்.1981இல் இருந்து 2004 வரை கதிரியக்கபாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் அதிகம் என்று பதிவாகியிருக்கின்றது.

இவ்வாறான அணுக்கதிர்தாக்குதல்களோ அல்லது விபத்துக்களோ நடைபெறும்போது அவற்றின் கதிர்ப்பு அளவீடுகளை அளப்பதற்காக ஒரு அளவீட்டை வைத்திருக்கிறார்கள் அதில் அதி உச்சத்தில் 7 ஆம் இடத்தில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.அதாவது உலகில் இதுவரை நடைபெற்ற அணு
உலை விபத்து மற்றும் அணுகுண்டுத்தாக்குதல்களில் அதி உச்ச கதிர்வீச்சு அளவைத்தொட்ட ஒரே ஒரு சம்பவம் இதுவாகும்.இச்சம்பவம் நடைபெற்றதும் சோவியத் ஒன்றியம் சம்பவத்தைமூடி மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டது ஆனால் 1000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் சுவீடன் நாட்டின் அணு உலையில் ,கதிர்வீச்சு உணரப்படவே அங்கு அலாரம் அலற ஆரம்பித்தது.உடனடியாக சுவீடன் நாடு சோவியத்தை எச்சரிக்கை செய்யவே இவர்கள் கண்டுகொள்ளவில்லை.சுவீடன் நாடு அதோடு நிறுத்திக்கொள்ளாமல் international atomic energy authorityக்கும் அறிவித்தபின்னர்தான் சோவியத் விரைந்து செயற்படவே ஆரம்பித்தது.

சினோர்பெல்லில் இன்னும் கதிர்வீச்சுக்கள் இருந்துகொண்டு  இருப்பதுடன் உலகின் அதி கூடிய அணுக்கதிர்வீச்சுடைய பகுதி என்ற பெயரை இன்னும் தக்கவைத்துக்கொண்டிருப்பதால் சுற்றுலாப்பயணிகளுக்கு சிலமணித்தியாலங்கள்மட்டுமே இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அப்படி அனுமதிக்கப்பட்டாலும் அணுக்கதிர்வீச்சை அளக்கப்பயன்படும் கருவிகளுடனேயே இங்கே செல்லமுடியும் காரணம் இங்கே சில இடங்களில் கதிர்வீச்சு மிக அதிகமாகக்கூட இருக்கலாம்.ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இங்கே விலங்குகள்,பறவைகள் எல்லாம் எந்தப்பாதிப்பும் இல்லாமல் வாழ்கின்றன.ஆராய்ச்சியின்போது இங்கே இருக்கும் கதிர்வீச்சு இவைகளைபாதிப்பதில்லை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

Heard island


அவுஸ்ரேலியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையே அமைந்திருக்கும் தனிமையான ஒரு தீவுதான்
அவுஸ்ரேலியா நாட்டில் இருந்து 4000கிலோமீட்டர்கள் தொலைவில் இத்தீவு அமைந்துள்ளது.இத்தீவின் சிறப்பம்சம் என்ன்வென்றால் இத்தீவின் கால நிலை மாறிக்கொண்டே இருக்கும்.பனிப்பொழிவு,மழை,கடுமையான வெயில் என்று வானிலை மாறிக்கொண்டே இருக்கும்.அதோடு 2 ஆபத்தான எரிமலைகளும் இத்தீவிலேயே அமைந்திருக்கின்றது.சாதாரணமாக எந்த மனிதராலும் தாங்கிக்கொள்ளமுடியாத அளவிற்கு ஏற்படும் சடுதியான வானிலை மாற்றங்கள் காரணமாகவும் எரிமலைகள் இங்கே அமைந்திருப்பதனாலும் இது ஆபத்தான தீவாகக்கருதப்படுகின்றது.குரங்குத்தீவு(monkey island puerto rico)அமரிக்கவிற்கு அருகில் அமைந்திருக்கும் puerto rico என்ற தீவுதான் குரங்குத்தீவு என்று அழைக்கப்படுகின்றது.1938 இல் கிளாறின் என்ற விஞ்ஞானியால் 400க்கு மேற்பட்ட குரங்குகள் இத்தீவுக்கு கொண்டுவரப்பட்டன.இத்தீவுக்கு குரங்குகள் கொண்டுவரப்பட்டதன் முக்கிய நோக்கமே குரங்குகளை ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தி அவைகள் மீது பரிசோதனைகளை மேற்கொள்ளவதற்காகத்தான்.குரங்குகள் இங்கே கொண்டுவரப்பட்டதன் பின்னர் மருத்துவர்கள்,சத்திரசிகிச்சை நிபுணர்கள்,விஞ்ஞானிகள் என பெரிய ஒரு கூட்டமே இத்தீவினுள் சென்று பரிசோதனைகளை ஆரம்பித்தார்கள் அதோடு இப்பரிசோதனைகளை கொலம்பியா யூனிவேர்சிட்டி தன் மேற்பார்வையின் கீழ் நடத்தியது.

மருத்துவத்துறையில் பல ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ரீஸஸ் என்ற குரங்குகள் இத்தீவில் வைத்துத்தான் பரிசோதனைகளுக்கும் சத்திரசிகிச்சைகளுக்கும் உட்படுத்தப்பட்டன.75 வருடங்களாக இத்தீவு இப்படியான பரிசோதனைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இத்தீவில் 1000இற்கு மேற்பட்ட குரங்குகள் வாழ்ந்துவருகின்றன.தொடர்ச்சியாக பல வருடங்களாக குரங்குகளில் நடாத்தப்பட்ட பரிசோதனைகளால் குரங்குகளின் டி என் ஏ மாற்றமடைந்திருப்பதால் இவற்றில் மனிதர்களுக்கு தீங்குவிளைவிக்கும் வைரஸ்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.இதானால் இத்தீவிற்கு பிரயாணம் செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கைவிடுக்கப்படுகின்றது.என்ன நடந்தாலும் சரி குரங்கின் சிறு நீர் மட்டும் உடலில் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதுதான் அது.


Death valley


சாவுப்பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இப்பள்ளத்தாக்கு கலிபோர்னியாவில் அமைந்துள்ளது.அமெரிக்காவின் மிகத்தாழ்ந்ததும் வெப்பமானதுமான பகுதி இதுவாகும்.கடல் மட்டத்தில் இருந்து 282 மீட்டர் ஆழத்தில் இது அமைந்துள்ளது.இப்பள்ளத்தாக்கின் அசாதாரணமானவிடயம் இப்பள்ளத்தாக்கின் வெப்ப நிலைதான்.1913 இல் இப்பள்ளத்தாக்கில் 56.7 செல்ஸியஸ் வளிமண்டல வெப்ப நிலையும் 93.0 செல்ஸியஸ் நிலவெப்ப நிலையும் பதிவாகியுள்ளது.
1850 இல் ஒரு குழு இப்பள்ளத்தாக்கைக்கடக்கும்போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்கள் இதன் காரணமாகத்தான் மக்கள் இப்பள்ளத்தாக்கை இதை சாவுப்பள்ளத்தாக்கு என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
Room 39


வடகொரியாவின் உளவுப்பிரிவின் பெயர்தான் ரூம் 39.இவ் அமைப்பின் முக்கியமான வேலையே வடகொரியாவின் அரசியல் தலைவர்களுக்கு பினாமியாக செயற்படுவதுதான்.இந்த உளவுப்பிரிவு வருடத்திற்கு குறைந்தது 500மில்லியனில் இருந்து 1000மில்லியன் டாலர்கள்வரை தலைவர்களுக்கு பணத்தை எப்படியாவது புரட்டிக்கொடுத்துவிடும்.இதற்காக சட்டரீதியான வியாபாரமுறைகளையும் பல சட்டவிரோத நடவடிக்கைகளிலும் இந்த அமைப்பு செயற்பட்டுவருகின்றது.முற்றுமுழுதாக அரசியல்தலைவர்களின் நலனுக்காக மட்டுமே செயற்படும் இந்த அமைப்பின் கட்டடத்திற்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை.இவ் அமைப்பு வேறுவேறு
நாடுகளில் பல கம்பனிகளை ஓபின் செய்வதுடன் அங்கு பெருந்தொகைப்பணத்தை முதலீடும் செய்கின்றது.சீனாவைத்தான் வடகொரியா இதற்காகப்பயன்படுத்துகின்றது.தங்கம் வைரம் போன்றவிலையுயர்ந்த பொருட்களுடன்,மருந்துகள் போலி ஆவணங்களையும் பிளாக்மார்க்கட்டில் விற்றுவருகின்றது இந்த அமைப்பு.

விதைவங்கிநோர்வேயின் ஸ்பிட்ஸ் பேர்கனில் அமைந்துள்ள தானியசேமிப்புவங்கியைத்தான் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள மரபணு வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் தாவரவிதைகளின் பிரதிகள் இங்கே பாதுகாப்பாக சேமித்துவைக்கப்பட்டுள்ளன.உலகில் ஏற்படும் சடுதியான கால நிலைமாற்றங்கள் இயற்கை அழிவு போன்றவற்றில் இருந்து தாவர இனங்களை பாதுகாப்பதற்காகவே இவ் வங்கி அமைக்கப்பட்டுள்ளது.8.8 மில்லியன் அமேரிக்க டாலர்கள் செலவில் 2008 இல் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றுவரை ஒட்டுமொத்தமாக 9 இலட்சம் அளவிலான தாவரவிதைகள் இங்கே சேமித்துவைக்கப்பட்டுள்ளன அதோடு இவ்விதைகளை சுமார் 1000 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக இங்கே சேமித்துவைக்கமுடியும்.தாவரவிதைகள் மனிதர்களிடம் காணப்படும் வைரஸ்,பக்ரீரியா,பங்கஸ் போன்றவற்றினால் பாதிப்படையும் அபாயம் இருப்பதனால் இங்கு வெளிமனிதர்கள் அனுமதிக்கப்படுவதில்லை அதோடு எதிர்காலத்தில் உலகில் பட்டினி ஏற்பட்டால் இவ் வங்கி தாக்கப்படும் அபாயம் இருக்கின்றது என்பதற்காக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Area 51அமெரிக்காவின் நிவாடாப்பகுதியில் அமைந்துள்ள இரகசியவிமான நிலையம்தான் Area 51
நவீன ஆயுதங்களையும்,விமானங்களையும் பரிசோதனை செய்வதற்காகவே இந்த இடம் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது. ஆரம்பத்தில் அமெரிக்க அரசு இப்படி ஒரு இடம் இருப்பதையே மறுத்துவந்த நிலையில் தற்போது இப்படியான ஒரு இடம் இருப்பதை மட்டும் ஒத்துக்கொண்டுள்ளது.ஏலியன்ஸ் தொடர்பான ஹொலிவூட் திரைப்படங்களில் ஏரியா 51 என்ற இடத்தை ஏலியன் கள் ஏலியன் களின் விமானாங்கள் தொடர்பான ஆராய்ச்சி நடைபெறும் இடமாக 
காட்டுவார்கள்.ஆரம்பத்தில் கூகிள் இல் கூட இந்த இடம் மறைக்கப்பட்டிருந்தாலும் தற்போது இதைப்பார்வையிடமுடியும் ஆனாலும் பொதுமக்கள் இவ்விடத்திற்கு செல்லவோ பார்வையிடவோ அனுமதியில்லை.ரேடரின் மூலமாகவும் சென்சார்களின் மூலமாகவும் இவ்விடம் தீவிரமாக கண்காணிக்கப்படுவதுடன் நடைபெறும் ஆராய்ச்சிகள் முழுவதும் நிலத்தின் கீழேயே நடைபெறுவதனால் எம்மால் எதையுமே அவதானிக்கமுடியாது.இவ்விடத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள் வழமைக்குமாறாக வித்தியாசமான பறக்கும்பொருட்களை
அவதானிக்கும்போது ஊடகங்களில் அவை செய்திகளாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தும் அப்போது அமெரிக்க அரசு எமது விமானங்களையே மக்கள் தவறுதலாக புரிந்துகொண்டுள்ளார்கள் என்ற வழக்கமான பதிலைக்கூறி தப்பிவிடுவார்கள் இது காலாகாலமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக