Sunday, 22 April 2018

போதும்யா under taker

wrestlemania 34 நடந்துமுடிந்திருக்கிறது 90s kidsகளில் நானும் ஒருவன் என் சகபாடிகள் cricket cricket என்று அலையும்போது நான் wrestling wrestling என்று அலைந்துகொண்டு திரிந்தேன்.cricket தொடர்பாக ஒரு ஈரவெங்காயமும் தெரியாது என்றாலும் wrestling தொடர்பாக தெரிந்தது ஒரு 4,5 கிலோக்கள் தேறும்.தரம் 9,10களில் பாடசாலை முடிந்ததும் இந்துக்கல்லூரிக்கு முன்னே இருக்கும் கஜீ என்ற சீடிக்கடையில்தான் தஞ்சம்புகுவது வழக்கம் அங்கே ஒரு ஆல்பமில் நிரப்பிவைக்கப்பட்டிருந்த 90ஆம் ஆண்டுகளில் வெளிவந்த சீடிக்கள் 2000மாம் ஆண்டுகளில் வெளிவந்த சீடிக்களை வாங்கிக்கொண்டுசெல்வதுதான் நான் வழக்கமாக ஆற்றும் பணி சீடிக்கடை போடுமளவிற்கு வீட்டில் சீடிக்களை குவித்துவைத்திருந்தேன்.2007 ஆம் ஆண்டு அப்போது வீடுகளில் அவளவாக இணையவசதிகிடையாது.இணையத்தைபயன்படுத்தவேண்டுமென்றால் ஏதாவது net cafeக்கு சென்று மணித்தியாலத்திற்கு 50ரூபா கொடுத்துத்தான் இணையத்தைப்பயன்படுத்தவேண்டும்.அப்போது wrestlemania 23 நடந்துகொண்டிருந்தது batista vs undertaker எப்படியும் ரேக்கர் வின்பண்ணிவிடுவார் ஏற்கனவே 17 வருடமாக wrestlemaniaவில் தோற்கவில்லை சோ இப்போதும் தோற்கமாட்டார் ஆனால் பற்ரிஸ்ராவின் மாட்டு உடம்பைப்பார்க்கத்தான் பயமா இருக்கு இப்படி மஸ் நடைபெறமுன்பாகவே நண்பர்களுடன் பல கலந்துரையாடல்கள் சென்றுகொண்டிருக்கும்.

april இல் தான் வழக்கமாக ரெஸ்டில்மேனியா  நடைபெறும் ஆனால் 1 கிழமையின் பின்னர்தான் ஸ்ரார் டிவி அல்லது ரென்ஸ் ஸ்போர்ட்ஸ்ஸில் போடுவார்கள் அவளவு தூரம் பொறுமையில்லாத காரணத்தினால் நண்பனுடன் நெட் கபே சென்று அடுத்த நாளே ரிசல்ட் பார்ப்பதற்காக கூகிளைத்தட்டினால் ரேக்கர்தான் வின் ,ரேக்கர் வின் என்று உணர்ச்சிவசப்பட்டு கத்தியதோடு மட்டுமல்லாமல் ரேபிளில் ஓங்கி ஒரு அடியடிக்க சுத்தியிருந்தவனெல்லாம் அதிர்ச்சியாகி அரக்கபரக்கபார்த்தது இன்றும் நினைவில் இருக்கின்றது அவளவு தூரம் வெறியனாக இருந்திருக்கிறேன்.நான் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரேக்கர் பெரிய ரசிகர் பட்டாளத்தையை தன் வசம் வைத்திருந்தார்.ஒரு pc கேமில் இறுதியாக மோதவேண்டிய boss வில்லனைப்போல் இல் ரேக்கர்தான் பல வருங்களாக இறுதிக்கட்டத்தில் அனைவரும் சந்திக்கவேண்டிய பெரிய பிளேயராக சிம்மசொப்பனமாக கொடிகட்டிப்பறந்துகொண்டிருந்தார்.

அஜித்தைப்போல் அண்டர்ரேக்கரும் தன் வாழ் நாளில் பல சேஜரிகளை சந்தித்திருந்தார்.நீண்டகாலமாக wwe இல் பல ஜாம்பவாங்களோடு நடந்த சண்டைகளிலெல்லாம் கை,கால்,முதுகு என பல இடங்களில் சத்திரசிகிச்சைகளை சந்தித்தார்.சத்திர சிகிச்சை நடந்ததும் ஒரு அறிக்கைவரும் இதுதான் ரேக்கரின் இறுதி மஸ் இதோடு ரேக்கர் retired ஆகிவிடுவார் என்று அந்த மனிசனும் சேஜரி முடிந்து வருடக்கணக்காக வீட்டில் போதும்டா சாமி என்று ரெஸ்ட் எடுத்தால் wwe அவரை ஓய்வெடுக்க அனுமதிக்காது. எப்போதெல்லாம் wwe இன் ரி ஆர் பி மண்ணைக்கவ்வுகிறதோ அப்போதெல்லாம் ரேக்கர் மீண்டும் அழைத்துவரப்படுவார்.ரேக்கர் வருடக்கணக்காக wwe பக்கமே வராமல் ஓய்வில் இருக்கும் சில வருடங்களில் wwe இல் ஒருவர் ஹீரோவாக்கப்படுவார் ஆனால் ரசிகர்கள் வெறுத்துப்போய் மீண்டும் ரி ஆர் பி மண்ணைக்கவ்வ மீண்டும் ரேக்கரை அழைத்துவந்து அந்த புது ஹீரோவுடன் மோதவிடுவார்கள்.இது காலா காலமாக நடந்துவந்துகொண்டிருந்தது.அதோட சொந்தவாழ்க்கையிலும் விவாகருத்து என பல பிரச்சனைகளை சந்தித்தார் ரேக்கர்.

wwe இல் ஒரு வழக்கம் இருக்கிறது நீண்டகாலம் பார்த்தவர்களுக்குப்புரியும்
இங்கே ஒரு பெரிய ஹீரோ ஒரு பெரிய வில்லன் இருப்பார் காலத்துக்கு காலம் ஒருவர் ஹீரோவாக்கப்படுவார்.அப்படி நடக்கும்போது அதற்கு முன்னர் வரை ஹீரோவாக இருந்தவர் 40 வயதைத்தாண்டி கிழவனாகிக்கொண்டிருப்பர் உடனே அவருக்கும் புது ஹீரோவுக்கும் மச்சை நடத்தி அதில் பழைய ஹீரோ தோற்கடிக்கப்பட பழைய ஹீரோ புது ஹீரோவிற்கு match முடிந்ததும் மேடையில்வைத்து கைகொடுத்துவிட்டு செல்வார் இதேடு பழைய ஹீரோவின் காலம் முடிந்தது இனி எல்லாமே இவர்தான் என்று புரிந்துகொள்ளவேண்டியதுதான்.இந்த சம்பவம் hogan,rock,austin,mick foily,HHH,shawn michal என்று ஒவ்வொருவருக்கும் நடந்துகொண்டுதான் இருந்தது ஆனால் ரேக்கரின் துரதிஸ்ரம் இந்த லிஸ்டில் கூட ரேக்கர் இல்லை.


அதோடு ரசிகர்கள் 2 பெரிய ஜாம்பவான் களுக்கிடையில் (match)மோதல் நடந்தால் எப்படி இருக்கும்? என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள் அல்லது எதிர்பார்க்கவைக்கப்படுவார்கள் ஆனால் அந்த Match அவளவு சீக்கிரம் நடைபெறாது வருடக்கணக்காக இழுத்தடித்து எல்லாம் வெறுத்துப்போன காலகட்டத்தில்தான் அந்த match நடைபெறும்.1984 இல்தான் ரேக்கரின் ரெஸ்லிங்க் வாழ்க்கை ஆரம்பித்தது.உண்மையான பெயர் Mark William Calaway. 1990 இல் தன்னை wwf உடன் இணைத்துக்கொண்டார் taker.தன்னை அமானுஸ்யமான ஒரு மனிதனாக மந்திரவாதியாக அசாதாரணமானவனாகவே மேடையில் தன்னைக்காண்பித்துக்கொண்டிருந்தார் ரேக்கர் இதுவே அவரின் அடையாளமாக மாறியது.இதற்கு ஏற்றாற்போல் பல மாஜிக் விளையாட்டுக்களையும் ரசிகர்களின் கண்முன்னே ரேக்கர் செய்துகாட்டத்தவறவில்லை.திடீர் என்று விளக்குகள் அணையும் மேடை இரண்டாக பிளக்க உள்ளே இருந்து வருவார், தூரத்தில் ஒரு சவப்பெட்டி வைத்திருப்பார்கள் திடீர் என்று அதன் மீது மின்னல் அடித்து சவப்பெட்டி தீப்பற்றி எரியும் அதற்குள் இருந்து ரேக்கர் வெளியே வருவார்,விளக்கு அணைந்த சில செக்கன்களிலேயே மேடையில் திடீர் என்று தோன்றுவார்.இப்படி பல சித்துவிளையாட்டுக்களை taker செய்ய ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது.
ஒவ்வொரு வருடமும் wwe ஸ்தாபிக்கப்பட்ட நாளில் wrestelemania என்ற பெயரில் மிகப்பெரிய விழாவாக கொண்டாட்டமாக matchகள் நடைபெறும். உலகெங்கிலும் உள்ள ரெஸ்லிங்க் ரசிகர்கள் குவியும் நாள் இதுதான் அவளவு பிரமாண்டமாக் நடைபெறும் ஒவ்வொருவருடமும் பங்குபற்றும் ரசிகர்களின் எண்ணிக்கை முன்னையவருடங்களில் பங்குபற்றிய ரசிகர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகிக்கொண்டே போகும்.இந்த ஸ்பெஸல் இவன்றிற்கு உலகப்பிரபலங்கள் பலர் ஹெஸ்ட்டாக வந்திருக்கின்றார்கள் mayweather,ஆர்னோல்ட்,மைக் டைசன் இவளவு ஏன் டோனால்ட் ரம் கூட ஒருதடவை ஹெஸ்ட்டாக வந்திருந்தார்.
இந்த Eventல் பங்குபெறுவதுதான் ஒவ்வொரு ரெஸிலரினது கனவாக இருக்கும் சும்மா எல்லாம் விடமாட்டர்கள், செமி பைனல் குவாட்டர் பைனல் பைனல் என்று பல தடைகளைத்தாண்டித்தான் இந்த இறுதிக்கட்டத்தை நெருங்கமுடியும்.இப்படி நடைபெறும் களில் 23 வருடங்களாக தோற்காமல் ஒரு ரக்கோர்ட்டை வைத்திருந்தார் ரேக்கர்.இறுதியாக broke leshner உடன் நடைபெற்ற மச்சில் இவளவு காலமும் கட்டி காப்பாற்றிய ரக்கோர்டும் உடைந்துபோக ரேக்கரின் ரசிகர்கள் உண்மையிலேயே சகலதும் முடிந்துவிட்டது என்றுதான் நம்பினார்கள்.

ஆனால் ரஜனி அரசியலுக்கு வருவதும் ரேக்கர் retired ஆவதும் ஒன்றுதான்
என்று மீண்டும் மீண்டும் நிரூபித்தது wwe.இதோ இப்போதுதான் wrestlemania 34 நடைபெற்று முடிந்திருக்கிறது அதுவும் ஜோன் சீனாவுடன் ரேக்கர் மோதியிருக்கிறார்.ரிசல்ட் சகலருக்குமே தெரிந்ததுதான் விளைவு நெட்டிசன் கள் பலர் wweஐ கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள்.நடந்த Matchகளில் இந்த matchமுக்கியத்துவம் பெறவில்லை ரசிகர்கள் பலர் இந்தmatchஐ பெரிதாக கருதவில்லை இதனால் ஒப்பீட்டளவில் இந்த matchஇற்கான ரிக்கட் வியாபாரமும் படுத்துவிட்டதாம்.

காரணம் இதுதான் இருவருமே தமது காலகட்டங்களைதாண்டிவிட்டார்கள் இதுதான் உண்மை, இவளவு காலமும் WWE இற்கு முதுகெலும்பாக விளங்கிய ரேக்கர் இனி தேவையில்லை என்பதை test  செய்து நிரூபிப்பதற்காகவே அவரை மீண்டும் மோதவைத்து நிரூபித்து வெற்றிகண்டிருக்கிறது WWE நிர்வாகம் என்று குறிப்பிடுகிறது forbes சஞ்சிகை.

போதும்யா ரேக்கர் 53 வயதாகிறது hip replacement surgery வேறு செய்துவிட்டு வந்திருக்கிறீர் இனியாவது போய் ஓய்வெடுமையா விருப்பமில்லையா இமயமலைக்கு செல்லலாம் அல்லது இருக்கவே இருக்கிறது அரசியல் பேசாமல் அரசியலுக்கு வந்துவிடவும்.

1 comment:

 1. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

  இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

  அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

  நன்றி..
  Tamil US
  www.tamilus.com

  ReplyDelete