Thursday, 26 April 2018

இவற்றையெல்லாம் மனித உடலில் இருந்து எடுத்திருக்கிறார்களா? என ஆச்சரியப்படவைக்கும் 10 பொருட்கள்

இங்கே நீங்கள் பார்க்கப்போகும் பெரும்பாலானவிடயங்கள் ஏதோ கற்பனைபோல தோன்றலாம் இப்படியான பொருட்கள் எப்படி உடலுக்குள் சென்றன என்று நீங்கள் ஆச்சரியப்படலாம் ஆனால் அவை நிஜத்தில் நடந்தவை.இவற்றில் சிலது விபத்துக்களால் நிகழ்ந்தவை ஏனையவை தாங்களே தமக்கு ஏற்படுத்தப்பட்டவை.மருத்துவத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் சரியான நேரத்தில் பெறப்பட்ட உதவியின் காரணமாகவுமே இவர்கள் தப்பியுள்ளார்கள்.


swordfish /வாள் மீன் இன் முள்


பெண் ஒருவர் தனது விடுமுறைகாலத்தின்போது குடும்பத்துடன் கடலில் நீந்திக்கொண்டிருந்தார்,திடீர் என்று யாரோ கத்தியால் தனதுவயிற்றில் குத்தியதைப்போல் உணர்ந்தார்.வயிற்றை தடவிப்பார்க்கும்போது ஏதோ ஒன்று வயிற்றில் குத்திக்கொண்டிருக்க அதை புடுங்கி எறிந்தார் அந்தப்பெண் உடனே இரத்தம் பீறிட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார் அந்தப்பெண்.
வைத்தியசாலையின் தீவிரசிகிச்சைப்பிரிவில் இருந்து தியேட்டருக்கு மாற்றப்பட்ட அந்தப்பெண்ணை ஸ்கான் செய்த டாக்ரர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.வயிற்றில் ஆழமான ஒரு துளை போடப்பட்டிருந்தது.சத்திரசிகிச்சை நிபுணர் அந்தப்பெண்ணின் சேதமடைந்த இழையங்களை அகற்றி சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு அந்தப்பெண்ணை காப்பாற்றிவிடுகின்றனர் ஆனால் அவரது முள்ளந்தண்டென்பிலும் ஒரு பகுதி இருப்பதாக ஸ்கான் ரிப்போட்கள் தெரிவித்தன.அங்குதான் எலும்பு போன்ற ஒரு சிறிய துண்டு உள்ளே இருந்தது.
swordfish எனப்படும் ஆபத்தான கடல்வாழ் மீன் இனம் எலும்புகளைப்போன்ற வலுவுள்ள நீண்ட வாயை கொண்டது.இதைக்கொண்டு கடலில் குளிப்பவர்களையும் மீன் களையும் இந்த மீன் தாக்கும்.வருடத்திற்கு குறைந்தது 5 நபர்களாவது இந்த மீனால் தாக்கப்படுகின்றார்கள்.இந்த மீனின் வாயின் ஒரு பகுதியே பெண்ணின் முள்ளந்தண்டென்புக்குள் போய் முறிந்திருந்தது.பல மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் அந்த துண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது ஆனால் முழுமையாக தேறி வைத்தியசாலையில் இருந்து வெளியேற அந்தப்பெண்ணுக்கு சில மாதங்கள் எடுக்கின்றன.

பட்டாணி


2010 கலிபோர்னியாவைச்சேர்ந்த 75 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர் Ron Sveden வைத்தியசாலையில் மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான இருமல் காரணமாக வைத்தியசாலையின் அதிதீவிரசிகிச்சைப்பிரிவிற்கு அனுமதிக்கப்படுகிறார்.வைத்தியர்கள் அவருக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பதாக தவறான ஒரு முடிவை எடுத்துவிடுகிறார்கள்.ஆனால் எக்ஸ் ரே ரிப்போட் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.எக்ஸ் ரே ரிப்போட்டில் 1 செண்டிமீட்டர் அளவிலான ஒரு தாவரத்தை வைத்தியர்களால் அவதானிக்கமுடிந்தது.இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்னால் பட்டாணிப்பிரியரான Ron Sveden  பட்டாணியை தனதுகுடும்பத்துடன் உண்டுகழித்துக்கொண்டிருந்தபோது இதே போல் இருமல் ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கின்றது.அது உடனடியாக சரியாகிவிடவே அதை கவனிக்காமல் விட்டுவிட்டார்   Ron Sveden .அவர் பட்டாணியை உண்டபோது அதில் ஒன்று தொண்டைவழியாக இறங்காமல் நுரையீரலுக்குள் இறங்கியிருக்கின்றது.வழக்கமாக காற்றைத்தவிர்ந்த வேறு எந்த அன்னியப்பொருள் நுரையீரலுக்குள் நுழைந்தாலும் மனித உடல் கடுமையான இருமல் மற்றும் தும்மலின் மூலமாக அப்பொருளை வெளியே எறிந்துவிடும். ஆனால்  Ron Sveden இன் விடயத்தில் அது நடைபெறவில்லை.உடனடியாக  Ron Sveden ஐ சத்திரசிகிச்சைக்கூடத்திற்கு அழைத்துசென்று சத்திரசிகிச்சையின்மூலம் அந்த தாவரத்தை அகற்றிவிடுகிறார்கள் வைத்தியர்கள்.சத்திரசிகிச்சைமுடிந்து சாதாரண வாட்டுக்கு மாற்றப்பட்ட  Ron Sveden முதன்முதலில் கேட்டு வாங்கி உண்ட உணவு என்ன தெரியுமா? அதுவும் பட்டாணிதான்.


முடி


அமெரிக்காவைச்சேர்ந்த 18 வயதேயான பெண் ஒருவர் வயிறு வீக்கம் மற்றும் கடுமையான்வாந்தியின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார்.அதோடு அவர் சடுதியாக தனது எடையில் இருந்து 18 கிலோகிராம்களை இழந்திருந்தார்.அவரை சோதனை செய்தவைத்தியர்கள் வயிற்றில் ஒரு பெரிய கட்டிபோன்ற ஒன்றை அவதானித்தார்கள்.அவரது வயிறை ஸ்கான் செய்தவைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்.அந்தப்பெண்ணின் வயிற்றில் பெரிய முடித்திரள் ஒன்று இருந்தது.உடனடியாக சத்திரசிகிச்சைமூலம் அதை அகற்றினார்கள் ஒட்டுமொத்தமாக 5கிலோ அளவிலான முடி அந்தப்பெண்ணின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது.முடி மற்றும் நகத்தில் கெராட்டின் என்னும் பதார்த்தம் இருக்கின்றது இதை சமிபாடடையச்செய்யும் பதார்த்தம் எமது இரப்பையில் இருப்பதில்லை இதன் காரணமாகவே முடி அனைத்தும் வயிற்றில் திரண்டு உணவு செல்லும் பாதையை அடைத்திருந்தது.
வைத்தியர்கள் அந்தப்பெண்ணிற்கு மிக அரிதான நோயாகிய trichophagia (aka Rapunzel syndrome) இருப்பதாக கண்டறிகின்றார்கள்.இன் நோய் இருப்பவர்கள் தமதுமுடியை தாமே உண்பார்கள்.ஆனால் இந்த தீவிர சத்திரசிகிச்சை சில மாத வைத்தியசாலை அனுபவங்களின் பின்னர் முடியை உண்ணும் பழக்கத்தில் இருந்து பூரணமாக விடுபடுகின்றார் அந்தப்பெண்.


ஆணி


34 வயதான Dante Autullo மேசன் வேலை செய்பவர்.வேலைத்தளத்தில் ஆணிசுடும் இயந்திரத்தைப்பயன்படுத்தும்போது தவறுதலாக தன் தலையில் சுட்டுவிடுகிறார்.மிக சிறிய அளவில் இரத்தம்வர அதைபெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.ஆனால் அடுத்த நாள் Dante Autullo  இன் உடல்வலு குறைவடைய தொடங்குகிறது.உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார் Dante Autullo.அங்கு அவரது எக்ஸ் ரே ரிப்போர்ட்டை சோதனை செய்தவைத்தியர்கள் அதிர்ச்சியடைகின்றார்கள்.அவரது தலையில் 3.5இஞ் 9 செண்டிமீட்டர்கள் அளவிலான ஆணி ஒன்று உள்ளே இருந்தது அந்த ஆணி மூளையின் 4 ஆவது சோணையறைவரை சென்றிருந்தது.உடனடியாக Dante Autulloஐ சத்திரசிகிச்சைக்கூடத்திற்கு அழைத்துசென்று பலமணி நேர சத்திரசிகிச்சைக்குப்பின் நரம்புவைத்தியர் ஆணியை வெற்றிகரமாக எடுத்துவிடுகின்றார்.அதிஸ்ரவசமாக Dante Autullo இன் உடலில் எந்தபாதிப்பும் ஏற்படவில்லை.இந்த சத்திரசிகிச்சைக்காக Dante Autulloஇன் மண்டைஓட்டில் இரு துளை இடப்பட்டு தலையோட்டின் பகுதி ஒன்று வெட்டி எடுக்கப்படுகிறது அதற்குப்பதிலாக டைட்டேனியத்தாலான தகடு ஒன்றை பொருத்தி மூடிவிடுகிறார்கள் வைத்தியர்கள்.
சத்திரசிகிச்சைமுடிந்ததும் ஆணியையும் வெட்டப்பட்ட தலையோட்டின் பகுதியையும் கேட்டுவாங்கிக்கொள்கின்றார் Dante Autullo அதற்கு அவர் கூறிய காரணம் தெரியுமா? இந்த ஆணியை எலும்புத்துண்டில் பொருத்தி பிரேம் செய்து சுவற்றில் மாட்டப்போகிறேன் என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார் Dante Autullo.

RPG2006இல் ஆப்கானுக்கு சென்ற அமெரிக்கத்துருப்பின் மீது தாலிபான் கள் RPG தாக்குதலை மேற்கொள்கின்றார்கள்.அப்போது அமெரிக்கப்படையும் திருப்பவும் தாக்குதலை மேற்கொள்கின்றார்கள்.தொடர்ந்து நடந்த யுத்தத்தில் தாலிபான் கள் தோற்கடிக்கப்பட்டாலும் அமெரிக்க துருப்பைச்சேர்ந்த வீரர் ஒருவர் படுகாயம் அடைகின்றார்.காயமடைந்த வீரரை சோதனைசெய்துபார்க்கும்போது அவரது உடலில் ஒரு RPG யின் குண்டு ஒன்று அவரை ஊடறுத்து உள்ளேயே இருந்தது.உடனடியாக மெடிக்கல் டீமும் வெடிகுண்டுகளை அகற்றும் டீமும் இணைந்து சிலமணி நேரங்களில் அந்தக்குண்டை வெற்றிகரமாக அகற்றுகின்றனர்.சரியான நேரத்தில் கிடைத்த உதவியின் காரணமாகவும் பயமில்லாமல் உதவிய மெடிகல் டீமின் முயற்சியாலும் அந்த வீரர் காப்பாற்றப்படுகின்றார்.ஆனால் இதன்பின்னரும் பல சத்திரகிச்சைகள் மற்றும் பிஸிக்கல் ரெயினிங்க் என்பவை முடிந்தபின்னரேயே அந்த வீரர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகின்றார்.


கத்தி


இந்தியாவைச்சேர்ந்த வயோதிபர் ஒருவர் வயிற்று வலிக்காக வைத்தியரை
அணுகுகின்றார். ஆரம்பத்தில் சாதாரண வயிற்றுவலிக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றது ஆனால் எந்தப்பலனும் கிடைக்காமல் போகவே வைத்தியர்கள் அவரது வயிற்றை ஸ்கான் செய்துபார்க்கின்றார்கள்.ஸ்கான் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.அந்த வயோதிபரின் வயிற்றில் கத்திகளின் குவியல் இருப்பதை அவதானித்தார்கள் வைத்தியர்கள்.உடனடியாக அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது.5 மணித்தியால போராட்டங்களுக்குப்பின் அவரது வயிற்றில் இருந்து 40 கத்திகளை வைத்தியர்கள் மீட்டு எடுத்தார்கள்.அதிலும் ஒரு கத்திதான் மிகப்பெரியதாக இருந்தது அதன் நீளம் 18 செண்டிமீட்டர்கள்.இவ் வயோதிபர் கடுமையான pica வினால் அவதிப்படுபவர்.இந்த pica வினால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமான உணவு தவிர்ந்த வேறு எதையாவது உணவாக் உண்பார்கள் உதாரணமாக சாம்பல்,நகம்,இறப்பர்,பென்சில்

போத்தல்


73 வயதான விவசாயி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்.தனது மலவாயிலில் வலி இருப்பதாக கூறிய வயோதிபரை பரிசோதனை செய்தவைத்தியர்கள் இரத்தப்போக்கு நிற்காமல் தொடர்வதை அவதானிக்கிறார்கள்.அவரது வயிற்றை ஸ்கான் செய்து பார்த்ததில் போத்தலின் பகுதி ஒன்று குதத்தின் உள்ளே இருப்பதை அவதானித்தார்கள் வைத்தியர்கள்.வயோதிபரிடம் என்ன நடந்தது என்று கேட்க அவர் நம்பும்படியாக ஒரு கதையை கூறுகின்றார்.வயலில் மலசலகூடத்தின் அடிப்பகுதி மரப்பலகையால் ஆனது அதைத்தாங்குவதற்காக 4 போத்தல்களை நிலத்தில் புதைத்திருந்தேன் எனது உடல்பாரம் தாங்கமுடியாமல் போத்தல் உடைந்து நான் அதன்மேல் விழ போத்தல் உள்ளே சென்றுவிட்டது அதோடு உள்ளே உடைந்தும் விட்டது எனக்கூறினார் வயோதிபர்.சில மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் வைத்தியர்களால் போத்தல் துண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

பலூன் மனிதன்

Steven McCormack  அமெரிக்காவைச்சேர்ந்த ட்ரக் வாகன சாரதி இவர் வேலைத்தளத்தில் தனது வாகனத்தை பழுதுபார்க்கும்போது  தவறுதலாக பிரேக் சிலிண்டருக்குப்போகும் அதி அழுத்த காற்றுறைக்கொண்ட வால்வு மீது விழுந்துவிடுகிறார்.அப்போது இவரின் பின்புறம் ஊடாக வால்வு துளைத்துக்கொண்டு உள்ளே சென்றதோடு மட்டுமில்லாமல் காற்றும் இவரின் உடலினுள்ளே சென்றுவிடுகின்றது.இதன் காரணமாக இவரின் சாதாரண உடலின் அளவைவிட இரண்டுமடங்கு உடலமைப்பிற்கு வீங்கிவிடுகிறார் Steven.உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படுகிறார் Steven.அங்கே அவரது உடலில் துளையிடப்பட்டு காற்று அகற்றப்படுகிறது ஆனால் அவர் சாதரண உருவத்திற்கு வர 3 நாட்கள் எடுக்கின்றன.Steven உடலின் உள்ளே சென்ற அதி அமுக்க வாயு Stevenஇன் நெஞ்சு,வயிறு மற்றும் கண்ணின் பின்பகுதிகளில் தேங்கி அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.Steven இன் நல்ல நேரம் வால்வு அவரது இரத்த நாடி, நாளங்களுக்கு செல்லவில்லை சென்றிருந்தால் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருப்பார். தவறி விழுந்ததும் என்னை பலூன்போன்று உணர்ந்தேன் என்று தனது அனுபவத்தை சிரித்துக்கொண்டே கூறுகிறார் Steven.பற்கள்


அமெரிக்காவை சேர்ந்த 59 வயதான பெண் ஒருவர் கடுமையான மூக்கடைப்பு மற்றும் 2 வருடமாக கடும் துர் நாற்றம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்.வைத்தியர்கள் அவரை ஸ்கான் செய்து பார்த்ததில் அவரது மூக்கு குழியினுள் கறுப்புப்படலம் ஒன்று இருப்பதை கண்டுபிடிக்கின்றார்கள்.அதை ஆய்வுகூடத்திற்கு அனுப்பியபோது அவரின் மூக்கிற்குள் Aspergillus என்னும் பங்கஸ் இருப்பதாக ரிப்போட் வந்திருந்தது அதோடு மூக்குக்குழிக்குள் அசாதாரணமான பல்வளர்ச்சியிருப்பதையும் ஸ்கான் காட்டியது.
இதே போன்று இந்தியாவைச்சேர்ந்த Ashik Gavai என்ற இளைஞன் கடுமையான தாடைவலி காரணமாக வைத்தியசாலையில்
அனுமதிக்கப்படுகின்றார்.அவரை ஸ்கான் செய்துபார்த்ததில் தாடையில் பற்களின் திரள் இருப்பதை வைத்தியர்கள் கண்டுபிடிக்கிறார்கள் வைத்தியர்கள்.உடனடியாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையில் ஒட்டுமொத்தமாக 230 பற்களை வெற்றிகரமாக அகற்றியிருக்கிறார்கள் வைத்தியர்கள்.odontoma என்ற ஒருவகை கான்சரினால் இந்த இளைஞன் பாதிக்கப்பட்டிருந்தார் வைத்தியர்களின் சத்திரசிகிச்சையின் மூலமாக வெற்றிகரமாக இவரது பற்கள் அகற்றப்பட்டுள்ளன.

சத்திரசிகிச்சைக்கத்தி


அமெரிக்காவில் மட்டுமே ஒரு வருடத்திற்கு 43 மில்லியன் சத்திரசிகிச்சைகள் நடைபெறுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.சத்திரசிகிச்சையின்போது எந்த தவறுகளும் இடம்பெறக்கூடாது.ஆனால் தவறுகள் பலவழிகளில் நடைபெறத்தான் செய்கின்றன.உதாரணமாக கமல் நடித்த பம்பல் கே சம்பந்தம் படத்தில் வைத்தியரான சிம்ரன் தன் மணிக்கூட்டை கமலின் வயிற்றில் தவறுதலாக விட்டிருப்பார்.இதே போல் சத்திரசிகிச்சையின்போது பாவிக்கப்படும் பஞ்சு கோஸ் மற்றும் உபகரணங்கள் தவறுதலாக உடலினுள்ளே விடப்படலாம்.ஆனால் இது சட்டவிரோதமானது இப்படியான சம்பவம் நடைபெறுமானால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் வைத்தியர் உட்பட அந்த வைத்தியசாலையும் இதற்கு பொறுப்புக்கூறவேண்டியேற்படுவதுடன் பாதிக்கப்பட்ட நபருக்கு பெரும்தொகை பணம் நட்ட ஈடாகக்கொடுக்கவேண்டும்.அபிவிருத்தி அடைந்த நாடுகளில் நமது நாட்டு அரசவைத்தியசாலைபோல் அதை மூடி எல்லாம் மறைக்கமுடியாது.அமெரிக்காவைச்சேர்ந்த 39 வயதான பெண் ஒருவருக்கு அவரது ஈரலில் அறுவைச்சிகிச்சை நடைபெறுகின்றது.சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அந்தப்பெண் கடுமையான வயிற்று வலியினால் பாதிக்கப்படுகிறார்.உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்தப்பெண்ணை ஸ்கான் செய்தபோது அவரின் வயிற்றினுள்ளே சத்திரசிகிச்சை கத்தி விடப்பட்டிருந்தது.உடனடியாக அவசர சத்திரசிகிச்சை மேற்கொண்டு கத்தி அகற்றப்படுகின்றது.அந்தப்பெண் அந்தவைத்தியர் மீதும் வைத்தியசாலைமீதும் வழக்குதொடுக்கின்றார் அதன் மூலம் பெருந்தொகையான பணம் அவருக்கு கிடைத்திருக்கின்றது.

Tuesday, 24 April 2018

சிறுநீரகநோய் மற்றும் இரத்தச்சுத்திகரிப்புமுறை

சிறுநீரகநோய் மற்றும் இரத்தச்சுத்திகரிப்புமுறை

சிறு நீரகம் என்பது எமது உடலின் முக்கிய சில செயற்பாடுகளை ஆற்றுகின்ற ஒரு உறுப்பாகும்.எமது உடலின் கழிவுகளை அகற்றுதல்,உடலின் இரத்த அழுத்தத்தை பேணுதல்,உடலின் சோடியம்,பொட்டாசியத்தின் அளவைப்பேணுதல்,அமோனியா போன்ற நச்சுக்கழிவுகளை அகற்றுதல் போன்றபல முக்கியமான தொழிற்பாடுகளை புரிகின்றது..ஒரு நபரில் சிறு நீரகத்தின் இந்த சாதாரண செயற்பாடுகள் நீண்டகால அளவில் சிறுது சிறிதாக குறைவடைந்து செல்லுமாயின் அவ் நோய் நிலையை நீண்டகால சிறு நீரகக்கோளாறு என்று அழைப்பார்கள்.அதாவது Chronic kidney disease (CKD). சிறு நீரகம் பல லட்சக்கணக்கான சிறு நீரகத்திகளைக்கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். சிறு நீரக நோய் சிறு நீரகத்தியின் வடிகட்டுவீதத்தின் அடிப்படையில் 5 வகையாகப்பிரிப்பார்கள்.இதன் இறுதி நிலை அதாவது நிலை 5 , சிறு நீரகத்தின் முற்றுமுழுதான செயலிழப்பு
(endstage kidney failure) என்று அழைப்பார்கள்.இந்த நிலைக்கு சென்ற நோயாளிகளுக்கே இரத்த சுத்திகரிப்பு செய்யவேண்டிய நிலை ஏற்படும்.
சிறு நீரகக்கோளாறின் ஆரம்ப கட்டங்களில் நோய்க்கான அறிகுறிகளை இனங்காண்பது கடினம், ஆனால் இறுதி நிலையில் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.
·         உடல் நிறையில் குறைவு ஏற்படும்
·         உணவில் விருப்பமின்மை
·         கை,கால்களில் வீக்கம்
·         களைப்பு/இளைப்பு,மூச்சுத்திணறல்
·         சிறு நீரில் இரத்தம்
·         நித்திரைக்குழப்பம்.

இதற்கான சிகிச்சை முறைகள்1)வாழ்க்கைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தல்(தினசரி உடற்பயிற்சி செய்தல்,மது மற்றும் புகைத்தலைக்கட்டுப்படுத்தல்,நிறையுணவை உண்ணுதல்,நிறையை கட்டுக்குள் வைத்திருத்தல்)
2)மருந்துகள் மூலம் உயர்குருதியமுக்கம்,கொலஸ்ரோல் மற்றும் நீரிழிவு நோயைக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்.
3)இரத்தச்சுத்திகரிப்பு முறையைப்பயன்படுத்தல்.(dialysis)
4)சிறு நீரகமாற்று சத்திரசிகிச்சை(kidney transplantation)

இரத்தச்சுத்திகரிப்பு முறை (Hemodialysis)

இது செயற்கைமுறையில் இரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு முறையாகும்.சிறு நீரகம் செயலிழப்பதன் காரணமாக சிறு நீரகச்செயற்பாடு பாதிப்படைந்த நோயாளர்களுக்கு இம்முறைமூலம் இரத்தம் சுத்திகரிக்கப்படுகின்றது. இச்செயற்பாட்டின்போது இரத்தத்தை ஒரு இயந்திரத்தினுள்( dialyser)செலுத்துவார்கள்.இவ் இயந்திரம் செயற்கைச்சிறு நீரகம் போன்று தொழிற்பட்டு இரத்தத்தில் இருக்கும் யூரியா நைட்ரஜன் போன்ற கழிவுகளை அகற்றுவதுடன் இரத்தத்தில் இருக்கும் சோடியம் பொற்றாசியம் சமநிலையையும் இது சரிசெய்யும். இந்த இயந்திரத்தை உடலினுள் இணைப்பதற்காக நாடியையும் நாளத்தையும் இணைத்து fistula/graft ஒன்றை உருவாக்குவார்கள் இதனூடகவே இயந்திரத்திற்கு இரத்தம் பரிமாற்றப்படும்.

இச்செயன்முறையின்போது நோயாளிக்கு எந்த வலியும் ஏற்படாது. சாதாரணமாக இச்செயன்முறை 3அல்லது 4 மணித்தியாலங்கள்வரை நீடிப்பதால் பொதுவாக நோயாளிகள் நித்திரைக்கு சென்றுவிடுவார்கள். ஆனால் சில நோயாளிகளுக்கு குருதியமுக்கம் குறையுமாயின் தசைப்பிடிப்பு,சத்தி,தலைவலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.இவ் இரத்தச்சுத்திகரிப்பு செயன்முறைக்கு எடுக்கும் நேர அவகாசம் நோயாளியின் சிறுநீரகத்தின் தொழிற்பாட்டின் அளவு, நிறை என்பவற்றிற்கேற்ப வேறுபடும்.இரத்தச்சுத்திகரிப்புக்கு அடுத்தபடியாக சிறுநீரக நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்புச்செயன்முறையை Peritoneal dialysis என்று அழைப்பார்கள். இச்செயன்முறையின்போது ஒரு இறப்பர் குழாய் வயிற்றுப்பகுதிக்குள்(peritoneal cavity)அனுப்பப்பட்டு சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டும்.
இது இரத்தச்சுத்திகரிப்புச்செயன்முறையைவிட இலகுவானது,செலவு குறைந்தது.இச் சுத்திகரிப்புச்செயன்முறைகளானது சிறு நீரக செயலிழத்தலுக்கான தற்காலிகத்தீர்வையே தரும். இறுதி நிலை சிறு நீரகக்கோளாறைக்கொண்டிருக்கும் நோயாளி வாழ் நாள் முழுவதும் இச்சுத்திகரிப்பு செயன்முறையில் தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்படும்.ஆனால் அவ் நோயாளி சிறு நீரக மாற்று சத்திரசிகிச்சையை மேற்கொள்ளுமிடத்து சுத்திகரிப்பிற்கான தேவையை தவிர்த்துக்கொள்ளமுடியும்.

சிறு நீரகச்செயலிழத்தல் நோய்க்கு உள்ளான நோயாளிகள் தமது உணவு தொடர்பில் முக்கியகவனம் எடுக்கவேண்டும்.சோடியம்,பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை குறைக்கவேண்டும் முக்கியமாக பழங்கள்(அப்பிள்,ஒரேஞ்,வாழைப்பழம்..).உணவில் உப்புச்சேர்த்தலை முடிந்த அளவிற்கு குறைக்கவேண்டும்.பால் உணவுப்பொருட்கள்(சீஸ்,யோகட்...) உண்பதை குறைக்கவேண்டும்.

இலங்கையை பொறுத்தவரையில் Chronic kidney disease of unknown aetiology (CKDu) என்ற சிறு நீரக நோய் காணப்படுகின்றது.வழமையாக நீண்டகால சிறு நீரக செயலிழத்தலுக்கு(CKD) உயர்குருதியமுக்கம் மற்றும் நீரிழிவு நோய் என்பன முக்கிய காரணிகளாக இருந்தாலும் (CKDu) இவ் வகை சிறு நீரக செயலிழத்தலுக்கு சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இன் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அனுராதபுரம்,பொலனறுவை மற்றும் பதுளை மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள்.

பொதுவாக இரத்தச்சுத்திகரிப்பு சிகிச்சைபெறும் நோயாளிகளின் ஆயுட்காலம் 5-10 வருடங்கள்வரை நீடிக்கப்படுகின்றது.இருப்பினும் சிலர் 15 வருடங்கள் வரை தொடர்ச்சியான இரத்தச்சுத்திகரிப்புமுறை மூலம் உயிர்வாழ்கின்றனர்.பொருத்தமான உணவுப்பழக்கம்,உடற்பயிற்சி மற்றும் இன் நோய் நிலைக்கு பங்களிப்புச்செய்யும் உயர்குருதியமுக்கம்,நீரிழிவு நோய் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல்,நடத்தையியலில் மாற்றத்தைக்கொண்டுவருதல் ஆகியவற்றின் ஒருமித்த பங்களிப்பின் மூலம் நோயாளி தன் வாழ்க்கைக்காலத்தை அதிகரித்துக்கொள்ளமுடியும்.

Sunday, 22 April 2018

ECG என்றால் என்ன?எப்படி தொழிற்படுகின்றது?

நெஞ்சுவலி அல்லது நெஞ்சு எரிவு என்றுவைத்தியசாலைக்கு சென்றால் பெரும்பாலும் ECG எடுப்பார்கள்.சில சாதனங்களை உடலில் பொருத்தி ஒரு மெசினில் இருந்து பிறின்ற் எடுப்பார்கள்.ஆமாம் என்ன இது? எப்படி இது வேலை செய்கின்றது? வாருங்கள் பார்க்கலாம்.ECG இதன் full form "Electrocardiography"இதை இதய துடிப்பலைஅளவி அல்லது இதய துடிப்பலை வரைபு என்று கூறுவார்கள்.உடலின் அங்கங்களுக்கு தேவையான அளவு இரத்தத்தை வழங்குவதே இதயத்தின் முக்கிய தொழிலாகும்.இதற்காகத்தான் இதயம் நிமிடத்திற்கு 72 தடவைகள் துடிக்கின்றது.அதாவது 72 தடவைகள் இதய அறைகள் சுருங்கிவிரியும்.இப்படி இதய  அறைகளின் சுருக்கத்தின்போது ஏற்படும் அழுத்தத்தினாலேயே எமது உடலின் ஏனைய பகுதிகளுக்கு இரத்தம் செல்கின்றது.
இந்த அழுத்தத்தையே நாம் அளந்து இரத்த அழுத்தத்தை(பிளட் பிரஸர்) அளக்கின்றோம்.

ஆனால் இந்த இதயம் எப்படி சுருங்கிவிரிகின்றது?

இதற்காகவே இதயத்திற்குள் ஒரு மின்சாரவலை இருக்கின்றது அந்த மின்சாரவலையில் ஏற்படும் கணத்தாக்கங்கள்(electrical impulses)(சிறிய மின்சார தூண்டல்கள்) காரணமாகவே இதயத்தின் இதய சோணை அறைகள் சுருக்கமடைகின்றன.இதயத்தில் காணப்படும் இந்த மின்சாரதொகுதியை conducting system of the heart என்று அழைப்பார்கள் அதாவது இதய மின் கடத்தல் தொகுதி.
மேலே உள்ள படத்தைப்பாருங்கள் அந்தப்படத்தில் உள்ள  SA node,AV node,AV bundle,bundle branches என்ற இந்த நான்கு பகுதிகள்தான் இப்போதைக்கு எமக்கு தேவையானவை.இங்கே SA node,AV node என்பவை மின்சாரத்தை பிறப்பிக்கும் நரம்புக்கலங்களின் திரட்சியால் உருவானவை.இவற்றில் உருவாகும் மின்சாரம் படிப்படியாக இதயத்தின் பகுதிகளுக்கு பரவும்போதே இதயம் சுருங்கலடைகிறது.இதயத்தில் ஏற்படுத்தப்படும் இந்த் மின்சாரத்தை அளக்கும்போது ஒரு அலைவடிவம் பெறப்படும் இதைத்தான் ECG என்று அழைக்கின்றோம்.


இதயத்தில் உருவாகும் இந்த மின்சாரம் மிக மிக சொற்ப அளவிலேயே இருக்கும் இதனால்தான் இதை எம்மால் உணரமுடிவதில்லை எனவே இதை அளப்பதற்காக சில கருவிகளை நெஞ்சில் பொருத்துவார்கள் இக்கருவிகளை லீட்ஸ்(Leads) என்று அழைப்பார்கள்.இவற்றை நெஞ்சில் பொருத்தும்போது இதயத்திற்கு சமாந்தரமாகவே பொருத்தவேண்டும்.கீழே உள்ள படத்தில் வர்ண நிறங்களில் காணப்படுபவைதான் லீட்ஸ் ,6 லீட்ஸ்கள் நெஞ்சில் பொருத்தப்படும்(chest leads).

4 (limb leads)லீட்ஸ்கள் கால்,கைகளில் இவ்விரண்டாக பொருத்தப்படும்.


மொத்தம் 12 லீட்ஸ் நெஞ்சில் 6 லீட்ஸ்,கை கால்களில் 3 லீட்ஸ்(1 ஏர்த்),அதோடு வெக்டர் லீட்ஸ் 3 ஆக மொத்தம் 12 லீட்ஸ்.இந்த 12 லீட்ஸ்களாலும் உணரப்படும் மின்சார ஏற்ற இறக்கங்களின் தொகுப்பே ECGஆக வெளியே பிறின்ற் செய்யப்படுகின்றது.
ஒட்டுமொத்த லீட்ஸ்கள் இதயத்தை நோக்கி அமைந்திருக்கும் தளங்கள்


ECG யின் மூலம் ஹார்ட் அட்டாக் போன்றவற்றை கண்டறிவது எப்படி?இன் அடிப்படை அலை வடிவமும் விளக்கமும்
தொடரும்....

போதும்யா under taker

wrestlemania 34 நடந்துமுடிந்திருக்கிறது 90s kidsகளில் நானும் ஒருவன் என் சகபாடிகள் cricket cricket என்று அலையும்போது நான் wrestling wrestling என்று அலைந்துகொண்டு திரிந்தேன்.cricket தொடர்பாக ஒரு ஈரவெங்காயமும் தெரியாது என்றாலும் wrestling தொடர்பாக தெரிந்தது ஒரு 4,5 கிலோக்கள் தேறும்.தரம் 9,10களில் பாடசாலை முடிந்ததும் இந்துக்கல்லூரிக்கு முன்னே இருக்கும் கஜீ என்ற சீடிக்கடையில்தான் தஞ்சம்புகுவது வழக்கம் அங்கே ஒரு ஆல்பமில் நிரப்பிவைக்கப்பட்டிருந்த 90ஆம் ஆண்டுகளில் வெளிவந்த சீடிக்கள் 2000மாம் ஆண்டுகளில் வெளிவந்த சீடிக்களை வாங்கிக்கொண்டுசெல்வதுதான் நான் வழக்கமாக ஆற்றும் பணி சீடிக்கடை போடுமளவிற்கு வீட்டில் சீடிக்களை குவித்துவைத்திருந்தேன்.2007 ஆம் ஆண்டு அப்போது வீடுகளில் அவளவாக இணையவசதிகிடையாது.இணையத்தைபயன்படுத்தவேண்டுமென்றால் ஏதாவது net cafeக்கு சென்று மணித்தியாலத்திற்கு 50ரூபா கொடுத்துத்தான் இணையத்தைப்பயன்படுத்தவேண்டும்.அப்போது wrestlemania 23 நடந்துகொண்டிருந்தது batista vs undertaker எப்படியும் ரேக்கர் வின்பண்ணிவிடுவார் ஏற்கனவே 17 வருடமாக wrestlemaniaவில் தோற்கவில்லை சோ இப்போதும் தோற்கமாட்டார் ஆனால் பற்ரிஸ்ராவின் மாட்டு உடம்பைப்பார்க்கத்தான் பயமா இருக்கு இப்படி மஸ் நடைபெறமுன்பாகவே நண்பர்களுடன் பல கலந்துரையாடல்கள் சென்றுகொண்டிருக்கும்.

april இல் தான் வழக்கமாக ரெஸ்டில்மேனியா  நடைபெறும் ஆனால் 1 கிழமையின் பின்னர்தான் ஸ்ரார் டிவி அல்லது ரென்ஸ் ஸ்போர்ட்ஸ்ஸில் போடுவார்கள் அவளவு தூரம் பொறுமையில்லாத காரணத்தினால் நண்பனுடன் நெட் கபே சென்று அடுத்த நாளே ரிசல்ட் பார்ப்பதற்காக கூகிளைத்தட்டினால் ரேக்கர்தான் வின் ,ரேக்கர் வின் என்று உணர்ச்சிவசப்பட்டு கத்தியதோடு மட்டுமல்லாமல் ரேபிளில் ஓங்கி ஒரு அடியடிக்க சுத்தியிருந்தவனெல்லாம் அதிர்ச்சியாகி அரக்கபரக்கபார்த்தது இன்றும் நினைவில் இருக்கின்றது அவளவு தூரம் வெறியனாக இருந்திருக்கிறேன்.நான் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரேக்கர் பெரிய ரசிகர் பட்டாளத்தையை தன் வசம் வைத்திருந்தார்.ஒரு pc கேமில் இறுதியாக மோதவேண்டிய boss வில்லனைப்போல் இல் ரேக்கர்தான் பல வருங்களாக இறுதிக்கட்டத்தில் அனைவரும் சந்திக்கவேண்டிய பெரிய பிளேயராக சிம்மசொப்பனமாக கொடிகட்டிப்பறந்துகொண்டிருந்தார்.

அஜித்தைப்போல் அண்டர்ரேக்கரும் தன் வாழ் நாளில் பல சேஜரிகளை சந்தித்திருந்தார்.நீண்டகாலமாக wwe இல் பல ஜாம்பவாங்களோடு நடந்த சண்டைகளிலெல்லாம் கை,கால்,முதுகு என பல இடங்களில் சத்திரசிகிச்சைகளை சந்தித்தார்.சத்திர சிகிச்சை நடந்ததும் ஒரு அறிக்கைவரும் இதுதான் ரேக்கரின் இறுதி மஸ் இதோடு ரேக்கர் retired ஆகிவிடுவார் என்று அந்த மனிசனும் சேஜரி முடிந்து வருடக்கணக்காக வீட்டில் போதும்டா சாமி என்று ரெஸ்ட் எடுத்தால் wwe அவரை ஓய்வெடுக்க அனுமதிக்காது. எப்போதெல்லாம் wwe இன் ரி ஆர் பி மண்ணைக்கவ்வுகிறதோ அப்போதெல்லாம் ரேக்கர் மீண்டும் அழைத்துவரப்படுவார்.ரேக்கர் வருடக்கணக்காக wwe பக்கமே வராமல் ஓய்வில் இருக்கும் சில வருடங்களில் wwe இல் ஒருவர் ஹீரோவாக்கப்படுவார் ஆனால் ரசிகர்கள் வெறுத்துப்போய் மீண்டும் ரி ஆர் பி மண்ணைக்கவ்வ மீண்டும் ரேக்கரை அழைத்துவந்து அந்த புது ஹீரோவுடன் மோதவிடுவார்கள்.இது காலா காலமாக நடந்துவந்துகொண்டிருந்தது.அதோட சொந்தவாழ்க்கையிலும் விவாகருத்து என பல பிரச்சனைகளை சந்தித்தார் ரேக்கர்.

wwe இல் ஒரு வழக்கம் இருக்கிறது நீண்டகாலம் பார்த்தவர்களுக்குப்புரியும்
இங்கே ஒரு பெரிய ஹீரோ ஒரு பெரிய வில்லன் இருப்பார் காலத்துக்கு காலம் ஒருவர் ஹீரோவாக்கப்படுவார்.அப்படி நடக்கும்போது அதற்கு முன்னர் வரை ஹீரோவாக இருந்தவர் 40 வயதைத்தாண்டி கிழவனாகிக்கொண்டிருப்பர் உடனே அவருக்கும் புது ஹீரோவுக்கும் மச்சை நடத்தி அதில் பழைய ஹீரோ தோற்கடிக்கப்பட பழைய ஹீரோ புது ஹீரோவிற்கு match முடிந்ததும் மேடையில்வைத்து கைகொடுத்துவிட்டு செல்வார் இதேடு பழைய ஹீரோவின் காலம் முடிந்தது இனி எல்லாமே இவர்தான் என்று புரிந்துகொள்ளவேண்டியதுதான்.இந்த சம்பவம் hogan,rock,austin,mick foily,HHH,shawn michal என்று ஒவ்வொருவருக்கும் நடந்துகொண்டுதான் இருந்தது ஆனால் ரேக்கரின் துரதிஸ்ரம் இந்த லிஸ்டில் கூட ரேக்கர் இல்லை.


அதோடு ரசிகர்கள் 2 பெரிய ஜாம்பவான் களுக்கிடையில் (match)மோதல் நடந்தால் எப்படி இருக்கும்? என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள் அல்லது எதிர்பார்க்கவைக்கப்படுவார்கள் ஆனால் அந்த Match அவளவு சீக்கிரம் நடைபெறாது வருடக்கணக்காக இழுத்தடித்து எல்லாம் வெறுத்துப்போன காலகட்டத்தில்தான் அந்த match நடைபெறும்.1984 இல்தான் ரேக்கரின் ரெஸ்லிங்க் வாழ்க்கை ஆரம்பித்தது.உண்மையான பெயர் Mark William Calaway. 1990 இல் தன்னை wwf உடன் இணைத்துக்கொண்டார் taker.தன்னை அமானுஸ்யமான ஒரு மனிதனாக மந்திரவாதியாக அசாதாரணமானவனாகவே மேடையில் தன்னைக்காண்பித்துக்கொண்டிருந்தார் ரேக்கர் இதுவே அவரின் அடையாளமாக மாறியது.இதற்கு ஏற்றாற்போல் பல மாஜிக் விளையாட்டுக்களையும் ரசிகர்களின் கண்முன்னே ரேக்கர் செய்துகாட்டத்தவறவில்லை.திடீர் என்று விளக்குகள் அணையும் மேடை இரண்டாக பிளக்க உள்ளே இருந்து வருவார், தூரத்தில் ஒரு சவப்பெட்டி வைத்திருப்பார்கள் திடீர் என்று அதன் மீது மின்னல் அடித்து சவப்பெட்டி தீப்பற்றி எரியும் அதற்குள் இருந்து ரேக்கர் வெளியே வருவார்,விளக்கு அணைந்த சில செக்கன்களிலேயே மேடையில் திடீர் என்று தோன்றுவார்.இப்படி பல சித்துவிளையாட்டுக்களை taker செய்ய ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது.
ஒவ்வொரு வருடமும் wwe ஸ்தாபிக்கப்பட்ட நாளில் wrestelemania என்ற பெயரில் மிகப்பெரிய விழாவாக கொண்டாட்டமாக matchகள் நடைபெறும். உலகெங்கிலும் உள்ள ரெஸ்லிங்க் ரசிகர்கள் குவியும் நாள் இதுதான் அவளவு பிரமாண்டமாக் நடைபெறும் ஒவ்வொருவருடமும் பங்குபற்றும் ரசிகர்களின் எண்ணிக்கை முன்னையவருடங்களில் பங்குபற்றிய ரசிகர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகிக்கொண்டே போகும்.இந்த ஸ்பெஸல் இவன்றிற்கு உலகப்பிரபலங்கள் பலர் ஹெஸ்ட்டாக வந்திருக்கின்றார்கள் mayweather,ஆர்னோல்ட்,மைக் டைசன் இவளவு ஏன் டோனால்ட் ரம் கூட ஒருதடவை ஹெஸ்ட்டாக வந்திருந்தார்.
இந்த Eventல் பங்குபெறுவதுதான் ஒவ்வொரு ரெஸிலரினது கனவாக இருக்கும் சும்மா எல்லாம் விடமாட்டர்கள், செமி பைனல் குவாட்டர் பைனல் பைனல் என்று பல தடைகளைத்தாண்டித்தான் இந்த இறுதிக்கட்டத்தை நெருங்கமுடியும்.இப்படி நடைபெறும் களில் 23 வருடங்களாக தோற்காமல் ஒரு ரக்கோர்ட்டை வைத்திருந்தார் ரேக்கர்.இறுதியாக broke leshner உடன் நடைபெற்ற மச்சில் இவளவு காலமும் கட்டி காப்பாற்றிய ரக்கோர்டும் உடைந்துபோக ரேக்கரின் ரசிகர்கள் உண்மையிலேயே சகலதும் முடிந்துவிட்டது என்றுதான் நம்பினார்கள்.

ஆனால் ரஜனி அரசியலுக்கு வருவதும் ரேக்கர் retired ஆவதும் ஒன்றுதான்
என்று மீண்டும் மீண்டும் நிரூபித்தது wwe.இதோ இப்போதுதான் wrestlemania 34 நடைபெற்று முடிந்திருக்கிறது அதுவும் ஜோன் சீனாவுடன் ரேக்கர் மோதியிருக்கிறார்.ரிசல்ட் சகலருக்குமே தெரிந்ததுதான் விளைவு நெட்டிசன் கள் பலர் wweஐ கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள்.நடந்த Matchகளில் இந்த matchமுக்கியத்துவம் பெறவில்லை ரசிகர்கள் பலர் இந்தmatchஐ பெரிதாக கருதவில்லை இதனால் ஒப்பீட்டளவில் இந்த matchஇற்கான ரிக்கட் வியாபாரமும் படுத்துவிட்டதாம்.

காரணம் இதுதான் இருவருமே தமது காலகட்டங்களைதாண்டிவிட்டார்கள் இதுதான் உண்மை, இவளவு காலமும் WWE இற்கு முதுகெலும்பாக விளங்கிய ரேக்கர் இனி தேவையில்லை என்பதை test  செய்து நிரூபிப்பதற்காகவே அவரை மீண்டும் மோதவைத்து நிரூபித்து வெற்றிகண்டிருக்கிறது WWE நிர்வாகம் என்று குறிப்பிடுகிறது forbes சஞ்சிகை.

போதும்யா ரேக்கர் 53 வயதாகிறது hip replacement surgery வேறு செய்துவிட்டு வந்திருக்கிறீர் இனியாவது போய் ஓய்வெடுமையா விருப்பமில்லையா இமயமலைக்கு செல்லலாம் அல்லது இருக்கவே இருக்கிறது அரசியல் பேசாமல் அரசியலுக்கு வந்துவிடவும்.