Wednesday, 26 November 2014

மை நேம் இஸ் லீ புரூஸ் லீ

புரூஸ் லீ தந்தை பெயர் தாயின் பெயர் பிறப்பு இவற்றை விக்கியின் உதவியால் நேரடியாக தெரிந்துகொள்ளலாம் விடயத்திற்கு வருகிறேன்.லீயைப்பற்றிக்கூறினால்
லீ சர்வதேச பைட்டிங்க் ஐக்கன்.லீயை பைட்டிங்க் பிராண்ட் என்றுகூட சொல்லலாம்.எந்த ஒரு தற்பாதுகாப்புக்கலையும் தெரியாத ஒரு சைனிஸ்,ஜெப்பானிஸ் ஒருவன் சும்மா கையையும் காலையும் தூக்கினால் நாம் மிரளுமளவிற்கு தன் விம்பத்தை வலுவாக பதித்துவிட்டு சென்றவர் புரூஸ்லீ. அண்மையில் ஒரு பிசி கேமை வெளியிட்டது Ultimate Fighting Championship(ufc) ஐ கேமாக்கியிருந்தது அந்த நிறுவனம்.(இது ஒரு மிக்ஸ் மார்ஸல் ஆர்ட்ஸ் பைட்டிங்க்.இங்கே பொக்ஸிங்க்,கராத்தே என்று எந்த கலை தெரிந்தவர்களும் சென்று மோதமுடியும்,அதோடு WWE ஐப்போல் போலியான matchகள் இங்கே இல்லை பெரும்பாலான பைட்டிங்களில் 1 நிமிடத்திற்கும் குறைவான நேரத்திலேயே இரத்தம் கொப்பளிக்கும்,தற்போது லீடிங்க்ல் இருப்பது இன் நிறுவனம்தான்) கேமை புரமோட் செய்வதற்கு அவர்கள் ஒரு விளம்பரத்தை செய்திருந்தார்கள்.அதில் புரூஸ்லீ UFC இற்கு சண்டையிடவருவார்.வெறும் 64 கிலோதான் புரூஸ்லீ எலும்பும் தோலுமாக இருப்பார்.ufc இல் brock lesnar போன்ற மலைமாடுகள் எல்லாம் இருக்கின்றார்கள் என்ன புடுங்கமுடியும் என்று நீங்கள் கேட்டால் பதில் 15 punches 1 kick களை வெறும்  11 second இல் அடித்து ஒருவரை மூர்ச்சையாக்கியிருக்கிறார் லீ.ஆனால் லெஸ்னரிடமிருந்து வாங்கும் ஒரு குத்தை தாங்குமளவுக்கு லீக்கு உடலில் பலம் இருக்கின்றதா என்பது சந்தேகமே ஆனால் புரூஸ்லீயின் வேகமே பலம் டைசனுடன் லீ மோதினாலும் இதே பதில்தான் அவர்களிடம் குத்துவாங்காதவரை லீயை எதுவும் செய்யமுடியாது.மிக வேகமாக அவர்களுக்கு அருகே சென்று பஞ்களை தாராளமாக கொடுத்துவிட்டு மீண்டும் தூர சென்றுவிட லீயால் முடியும்.

அந்த விளம்பரத்தில் தற்போதைய நடப்பு சாம்பியன் கள் புரூஸ்லீபற்றிக்கூறிக்கொண்டிருந்தார்கள் .புரூஸ்லீயின் ஸ்டைலை பயன்படுத்தி தான் நடனம் ஆடுவது பற்றி black eyed peas இன் ஒரு மெம்பரான will i am  கூறியிருந்தார்(just pump it),MMA புரமோஸனில் லீ பற்றி அப்போதைய champion கள் கூறிக்கொண்டிருந்தார்கள் அப்போது ஒரு பரீட்சயமான குரல் யார் தெரியுமா மைக்டைசன் " life is like water fight is like water you have to adopt" wow...டைசன் செப்பிக்கொண்டிருந்தார்.
முன்ணனியில் இருக்கும் இப்போதைய பெரும்பாலான martial artistகளிற்கு ஏதாவது ஒருவிதத்தில் லீ முன்னோடியாக இருந்திருக்கிறார்,பலருக்கு இருந்துகொண்டிருக்கின்றார்.

கராத்தே பயில ஆரம்பித்ததில் இருந்து அவரைப்பற்றி தேடி தேடி அவரது தீவிர விசிறியாகிவிட்டேன்.ஆனால் அவரது மரணத்தின் மர்மம் இன்னும் தொடர்கிறது என்று நான் நம்பவில்லை(இன்னும் வெறியனாகவில்லை) தீவிரமான தலைவலிகாரணமாக 2,3 மருந்துகளை ஒரேயடியாக பயன்படுத்தியமையால் அந்த மருந்துகளுக்கிடையில் இடைத்தாக்கம் நடைபெற்று மூளை வீக்கமுற்றமையால் லீ மரணமடைந்தார்.எனக்கு தெரிந்தவரையில் இதுதான் உண்மை.

லீ தற்காப்பு கலையை பயில ஆரம்பித்தது தனது 13 ஆவது வயதில்தான்,அப்போது ஹொங்கொங்கில் பிரிட்டிஸ் காலணியாதிக்கம் இருந்தது.அங்கு பாடசாலைகளில் பயிலும் பிரிட்டிஸ் மாணவர்கள் மேலானவர்களாக ஏனையோர்களால் பார்க்கப்பட்டார்கள்.இடையிடையே பிரிட்டிஸ் மாணவர்களுக்கும் சைனிஸ் மாணவர்களுக்குமிடையே மோதல்களும் நடைபெறுவதுண்டு இவைதான் லீயை தற்காப்பு கலைபயில்வதற்கு தூண்டின.இதன் பின்னர் லீக்கு அறிமுகமானவர் லீயின் தற்காப்புக்கலை குருவான Yip Man.(2008இல் ip Man என்று ஒரு திரைப்படம் வெளியாகியிருந்தது donnie yen இதில் Yip Man ஆக நடித்து அசத்தியிருந்தார் ஆனாலும் 10 கராத்தே பிளக் பெல்ட் உடன் தனி ஒரு ஆளாக சண்டையிட்டது கொஞ்சம் ஓவர்தான்). லீ ஆரம்பத்தில் பயின்ற தற்காப்பு கலை குங்க் ஃபூ இதில் லீ பயின்ற தற்காப்பு கலையின் style "Wing Chun".அதோடு  interschool Boxing மச்சில்Champion ஆனான் லீ அதுவும் பிரிட்டிஸ் மாணவர் ஒருவருடன் மோதி Champion ஆனான்.அதோடு லீ ஒரு சிறந்த நடனக்கலைஞர்.1958 இல் நடைபெற்ற Hong Kong Cha Cha Championship போட்டியில் லீ சாம்பியன் ஆகியமை குறிப்பிடத்தக்கது.லீ ஒரு multi talented person என்பது உண்மை நடிப்பில் கூட இவருக்கு ஆர்வம் இருந்திருக்கின்றது 18 வயதிற்குள் 20 படங்களில் இவர் நடித்துள்ளார்.

லீக்கு இவ்வாறு பல திறமைகள் இருந்தாலும் படிப்பு அவளவாகவரவில்லை எனவே லீயின் பெற்றோர் லீயை சான்ஸ்பிரான்ஸிஸ்கோவிற்கு அனுப்பிவைத்தார்கள்.100 டொலர் பணத்துடன் தன் பயணத்தை ஆரம்பித்தான் லீ.கப்பலில் சென்ற லீக்கு அங்கு தன்னுடன் பயணித்த பயணிகளுக்கு Cha Cha நடனம் பயிற்றுவிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.பின்னர் சான்ஸ்பிரான்ஸிஸ்கோவில் நடம் கற்பிக்க ஆரம்பித்தார் லீ ஆனாலும் பட்டப்படிப்பை மேற்கொள்ளவேண்டுமென்ற காரணத்தால் நடனம் கற்பிக்கும் தொழிலை கைவிட்டுவிட்டார் லீ.பல்கலைக்கழகத்தில் லீக்கு மிகவும் பிடித்தது தத்துவவியல் குஙக்ஃபு வுடன் தத்துவவியலை இணைத்துக்கொண்டார் லீ .50,60 களில் குங்க் பூ என்ற பெயரை பெரும்பாலானோர் கேள்விப்பட்டதேயில்லை ஏன் கராத்தே கூட பிரபலமாக இருக்கவில்லை அப்போது ஜூடோவே பிரபல தற்காப்புக்கலையாக இருந்தது.

63 இல் Washington பல்கலைக்கழகத்தில் லிண்டாவை முதன்முதலில் சந்தித்தார் லீ.இருவருக்கும் இடையில் நட்பு தொடர ஆரம்பித்தது.பின்னர் லிண்டா லீயிடம் குங்க்பூ பயில ஆரம்பித்தார்.இது திருமணத்தில் சென்று முடிந்தது.

பட்டப்படிப்பு முடிந்ததும் லீயின் திட்டம் தற்காப்புகலைக்கென பாடசாலைகளை யு.எஸ்ஸில் ஆரம்பிக்கவேண்டும் என்பதாய் இருந்தது.தனது எண்ணத்தின் படியே பாடசாலைகளை ஆரம்பித்தார் லீ தன் நண்பர்களை நிர்வாகிகளாக்கினார் லீ.அப்போது ஒரு பொதுவான வழக்கமொன்று இருந்தது தற்காப்புகலையை சைனிஸ் சைனிஸ் மாணவர்களுக்கே கற்றுக்கொடுப்பார்கள் வேறு மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கமாட்டார்கள் ஆனால் லீ அனைவருக்கும் கற்றுக்கொடுத்தார் இதன் காரணமாக லீயை  பிரபல தற்காப்புகலை நிபுணரான Wong Jack Man   சண்டைக்கு அழைத்தார்.லீயின் தற்காப்பு கலைவாழ்க்கையின் திருப்புமுனை இங்குதான் ஆரம்பித்தது.

இந்த சண்டையில் லீ தோற்றால் லீ சைனிஸ் அல்லாதவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்றுவிப்பதை நிறுத்தவேண்டும் வெற்றிபெற்றால் தொடர்ந்து பயிற்றுவிக்கலாம்.அந்த பிரபல தற்காப்பு கலை நிபுணரை தோற்கடிக்க லீக்கு 3 நிமிடங்கள் தேவைப்பட்டது. நடைபெற்ற சண்டைபற்றி பார்வையாளரின் விபரிப்பு

"The two came out, bowed formally and then began to fight. Wong adopted a classic stance whereas Bruce, who at the time was still using his Wing Chun style, produced a series of straight punches. "Within a minute, Wong's men were trying to stop the fight as Bruce began to warm to his task. James Lee warned them to let the fight continue. A minute later, with Bruce continuing the attack in earnest, Wong began to backpedal as fast as he could. For an instant, indeed, the scrap threatened to degenerate into a farce as Wong actually turned and ran. But Bruce pounced on him like a springing leopard and brought him to the floor where he began pounding him into a state of demoralization. "Is that enough?" shouted Bruce, "That's enough!" pleaded his adversary. Bruce demanded a second reply to his question to make sure that he understood this was the end of the fight."

ஆனால் புரூஸ் லீ தான் பெற்ற வெற்றியால் சந்தோஸமடையவில்லை கவலையுடன் படிக்கட்டில் அமர்ந்து யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.அப்போதுதான் லீ உணர்ந்தார் தன் தற்காப்புக்கலை இந்த மாதிரியான ஒரு சண்டைக்கு தன்னை தயார்படுத்தவில்லை.தற்காப்புக்கலையில் உள்ள குறைபாடுகள் லீக்கு தெரிய ஆரம்பித்தது இதன் பின்னர்தான்.இதன் பின்னர் traditional arts மீதான நம்பிக்கையை முழுவதுமாக இழந்தார் லீ.இதன் பின்னர் யாருக்கும் குங்க்பு கராத்தே வின்சங்க் போன்ற எதையும் கற்றுக்கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார் லீ.இதன் பின்னர் தானாக ஒரு கலையை உருவாக்கினார் அதுதான் jeet kune do.இது ஒரு mix martial art அதாவது பல கலைகளை அடிப்படையாகக்கொண்டு இது உருவாக்கப்பட்டது.( western fencing,western boxing,wing chunk ).


உங்களுக்கு ஏதாவது ஒரு தற்காப்பு கலை தெரிந்திருந்தால் அல்லது பயின்றுகொண்டிருந்தால் கீழே வரும் விடயங்கள் மிக இலகுவாக விளங்கும்  


பிரச்சனை இதுதான் கராத்தே தெரிந்த இருவர் மோதிக்கொண்டால் அவர்களுள் ஒருவர் வெற்றிபெற  குறைந்தது15 நிமிடங்கள் தேவைப்படும்.இருவரும் கராத்தேயில் பயிற்றுவிக்கப்பட்டதற்கேற்ப மோதுவார்கள்.லீ கூறியது இதைத்தான் styles became law.லீ உருவாக்கிய JKD இல் ஒரு பொதுவான ஒழுங்கு எதுவுமில்லை.அதோடு அதில் உள்ள பஞ்,கிக்ஸ்,கிரப்பிங்க்ஸ்.லொக்ஸ் எல்லாமே சாதாரணமாகத்தான் இருக்கும்,ஒரு காலை நெற்றி தொடும் அளவிற்கு உயர்த்தி வைத்திருக்கும் எந்த மூவும் இதில் இல்லை.

Using No Way As Way, Having No Limitation As Limitation


ஒரு பைட்டிங்கில் வெற்றியை தீர்மானிப்பதில் சில விடயங்கள் தாக்கம் செலுத்தும்.

opponent stance

our stance 

our movement 

speed

cheating

hip movement 

ஒவ்வொரு fighter இற்கும் ஒரு fighting rhythm இருக்கும் அவரை வெற்றிபெற அந்த rhythmஐ உடைக்கவேண்டும்.உதாரணத்திற்கு நீங்கள் பொக்ஸிங்க் அல்லது கராத்தே பயின்றிருக்கலாம் நீங்கள் உங்களுக்கே தெரியாமல் ஒரு ஸ்ரைலை உருவாக்கிவைத்திருப்பீர்கள்.உதாரணத்திற்கு முதலில் Low Roundhouse Kick பின்பு Hook ,Uppercut,Backfist.மீண்டும் மீண்டும் இதே ஒடரில் நீங்கள் தாக்கினால் இதுதான் உங்கள் ரிதம்.இதை உடைத்துவிட்டால் அதாவது இந்த தொடரை மேற்கொள்ளமுடியாது உங்களை தாக்கினால் நீங்கள் குழம்பிவிடுவீர்கள்,இப்படி ஒரு ரிதத்தை நீங்கள் கொண்டிருக்கக்கூடாது என்பதைத்தான் லீ கூறினார்.அதேபோல் மோதுபவரும் தன் ரிதத்தை சடுதியாக மாற்றவேண்டும் அப்போதுதான் எமது எதிர்வரும் அசைவுகளை எதிரியால் ஊகிக்கமுடியாதுபோகும்.ஆனால் இது professional fighting இற்கு மட்டும்தான்.அதாவது 2 தற்காப்புகலை தெரிந்தவர்கள் மோதிக்கொண்டால் இது உதவும் தெரியாதவர்களுக்கு இவளவு தூரம் சிந்திக்க தேவையில்லை ஒரு kickடன் ஆளை மூர்ச்சையடைய(knockout) செய்யமுடியும்.லீயின் JKD street fight இற்கு மிகவும் உதவியாக இருக்கும்.sports  என்பது வேறு real fight  என்பது வேறு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இப்படி தனது 19 வருட தற்காப்பு கலை அனுபவத்தை புத்தகங்களாக எழுதி வெளியிட்டிருக்கிறார் லீ.
லீ யின் வீட்டில் லீ உருவாக்கிய ஒரு சிறிய புத்தகசாலை இருக்கின்றது அதில் 2000இற்கு மேற்பட்ட தற்காப்புகலை பற்றிய புத்தகங்கள் இருக்கின்றன.அதோடு லீ நிறையவே குத்துச்சண்டை வீடியோக்களை பார்ப்பார். லீயின் மூவ்மெண்டிற்கும் பிரபல குத்துச்சண்டைவீரர் அலியின் மூவ்மெண்டிற்கும் ஒரு ஒற்றுமையிருக்கின்றது.அலியின் மூவ்மெண்டை ரீவைண்ட் செய்தால் லீயின் லெக் மூவ்மெண்ட் வரும்.பைட்டிங்க் செய்யும்போது கால்களின் மூவ்மெண்டை கூறினேன்.லீ மொகமட் அலியின் மூவ்மெண்டை அவதானித்தே தன் மூவை உருவாக்கினார்.

லீயைப்பொறுத்தவரை தற்காப்புகலை என்பது ஒரு மனிதனின் வெளிப்பாடு உண்மையான வெளிப்பாடாக இருக்கவேண்டும்.ஏதாவது ஒரு விடயத்தில் தீவிரமாக சென்றுவிட்டால் நீங்கள் மனிதராக வாழமுடியாது.நீங்கள் ஒரு கிரிக்கட் வெறியராக இருந்து சாதாரணமனிதனாக மிகவும் நகைச்சுவை உணர்வுள்ளவராக இருக்கமுடியும் ஆனால் தற்காப்புக்கலையில் வெறியராக இருப்பீர்களேயானால் நீங்கள் மனிதராக இருக்கவே முடியாது.அதை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவது நம் கைகளில் உள்ளது என்கிறார் லீ.
காரணம் உங்களுக்கு கராத்தேயோ பொக்ஸிங்கோ தெரிந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு சண்டைக்கான சந்தர்ப்பத்தை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பவராக நீங்கள் மாறிவிட்டிருப்பீர்கள்,அதில் தீவிரமாக சென்றீர்களாயின் சண்டை வாழ்க்கையாகிவிடலாம் ஒரு பிரச்சனையை புத்தி சாலித்தனமாக கட்டுக்குள் கொண்டுவரும் வழியை விடுத்து வன்முறைக்குள் சர்வசாதாரணமாக இறங்கிவிடுவீர்கள்.
இதனால்தான் என்னவோ பொதுவாக ஒரு விடயம் கூறுவார்கள் தற்காப்புக்கலை தெரியாத ஒருவனிடத்தில் எமது கலையின் திறமையைக்காட்டுவது கோழைத்தனம் என்று .
அதோடு ஒரு தற்காப்புக்கலைபயில்பவன் எந்த ஒரு தற்காப்பு கலைக்கும் தன்னை தகவமைத்துக்கொள்பவனாக தன்னை மாற்றுக்கொள்ளக்கூடியவனாக இருக்கவேண்டும் என்கிறார் லீ 

“You must be shapeless, formless, like water. When you pour water in a cup, it becomes the cup. When you pour water in a bottle, it becomes the bottle. When you pour water in a teapot, it becomes the teapot. Water can drip and it can crash. Become like water my friend.”

fighting இல் முக்கிய விடயம் உங்கள் மனதை நீங்கள் வெறுமையாக வைத்திருக்கவேண்டும் எதிரே நிற்பவர் அடுத்து ஹை கிக் அடிப்பார் அதற்கடுத்து எல்போ எனவே நான் இப்படி மூவ் செய்யவேண்டும் என்று எல்லாம் சிந்தித்தால் சண்டையிடமுடியாது  எதிரே நிற்பவரது அடுத்தடுத்த அசைவுகள் ஒருவேளை நாம் எதிர்பார்ப்பதைப்போல் அமையாதுவிட்டால் அடிவாங்கி தோற்பது நிச்சயம். 

Emptiness the starting point. In order to taste my cup of water you must first empty your cup. My friend, drop all your preconceived and fixed ideas and be neutral. Do you know why this cup is useful? Because it is empty.

லீயின் motivation -

I fear not the man who has practiced 10,000 kicks once, but I fear the man who has practiced one kick 10,000 times.

As you think, so shall you become.

Obey the principles without being bound by them.
Always be yourself, express yourself, have faith in yourself, do not go out and look for a successful personality and duplicate it.

Nowadays you don't go around on the street kicking people, punching people — because if you do (makes gun shape with hand), well that's it — I don't care how good you are.

Don't think, feel....it is like a finger pointing a way to the moon. Don't concentrate on the finger or you will miss all that heavenly glory!

லீ பற்றி பிரபலங்கள்-

When I was having dinner with Chuck Norris(7 time world karate champion) I did ask him: "If you and Bruce would be in a real fight to death, who would win?", and he said without thinking: "Bruce of course. Nobody can beat him."

John Benn
When Bruce Lee kicked, you don't shut your eyes. Because when you shut your eyes, you cannot see Bruce Lee kick it´s so fast! Human beings cannot move like cartoon [sound effects], that´s the fastest you can be. Even Muhammad Ali or Mike Tyson, their punches are fast, but you still can see [them].


 Jackie Chan (அட நம்ம ஜாக்கி)


Bruce Lee is a killer, you hurt your man as much as you can and get out, without getting hurt. I have so much respect for his philosophy, it is the ultimate warrior philosophy; 'Life is like water, fighting is like water, you have to adapt. Wow... this is deep. Bruce Lee gets me deep, when I talk about Bruce Lee. 

Mike Tyson, on Bruce Lee


லீ jeet kun do தொடர்பாக தானே வெளியிட்ட புத்தகம் tao of jeet kun do  9 மொழிகளில் 300 000 பிரதிகளுக்கு மேல்விற்றுள்ளது.

fightingமுறைகள்,பயிற்சிகள்,தத்துவங்கள் விளக்கப்படங்களுடன் இதில் கூறப்பட்டுள்ளன.


இந்தலிங்கில் ஆக டவுன்லோட் செய்யமுடியும்.

Bruce Lee's Fighting Method 

இங்கே கிளிக்


Top 10 Reasons Bruce Lee May Have Been Superhuman
Nunchuk ஐ சாதாரணமாக கையாள்வதே கடினம் Bruce lee lost interview

 Fastest kicks ever seen by the world
லீயின் பிரபலமான 1 இஞ் பஞ்
nunchuk
Bruce Lee's Unnoticed Movements

நீங்கள் ஏதாவது ஒரு தற்காப்புகலை பயில்பவராக இருந்தால் இந்த வீடியோவில் இருந்து சிலcheating களை கற்றுக்கொள்ளமுடியும்
Bruce lee documentary history channel