Thursday, 20 March 2014

விண்வெளியில் கவசத்தை கழற்றினால் என்ன ஆவோம்?


இது தொடர்பான ஆராய்ச்சிகளைப்பார்ப்பதற்கு முன்னார் கிராவிட்டி என்ற ஹொலிவூட் படத்தைப்பற்றி பார்த்துவிடுவோம்.கிராவிட்டி 7 ஒஸ்கார் விருதுகளை அள்ளியுள்ளது...(Best visual effects,Best sound editing,Best sound mixing,Best cinematography,Best film editing,Best original score,Best director) இதை தயவுசெய்து விமர்சனமாக கொள்ளவேண்டாம்.கருந்தேள் குழந்தை போன்றவர்கள் இருக்கும்போது இதை விமர்சனமாக கருதினால் டொன்கு டொடால் போல் இருக்கும்.
Gravity

தடவைகள் பார்த்தாயிற்று நான் பார்த்த அனைத்து ஹொலிவூட் படங்களையும் விழுங்கிவிட்டது கிராவிட்டி
ஒரு விண்வெளிவீராங்கனை எப்படி உயிர் தப்புகின்றார் என்பதுதான் கதை கதையின் பெரும்பாலான பகுதி Sandra Bullock உடனேயே நகர்கிறது
ஒரு வகையில் லைப் ஒப் பையில் சுராஜ் சர்மாவுக்கு ஏற்பட்ட தனிமை காஸ்ட் எவேயில் ரொம் ஹான்ஸுக்கு ஏற்பட்ட அதே தனிமை.படம் முழுவதும் Sandra Bullock என்ற ஒரே ஒரு கதாப்பாத்திரம்தான் ஆனால் அவர் நிஜ விண்வெளியில் இல்லை நிஜமாகவே அப்படியான ஒரு ஆபத்தில் மாட்டியிருக்கவில்லை ஆனால் அப்படியே கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றார்.
படத்தில் ஓளிப்பதிவு கிராபிக்ஸ் எல்லாம் மக்ஸிமமாக இருந்தது.படத்தில் பல குறியீடுகள்கூட இருக்கின்றன.

படத்தில் என்னை மிகவும் கவர்ந்தவை

புல்லொக்கின் முகத்தை குளோசப்பில் காட்டி அப்படியே முகத்தின் அருகில் சென்று அப்படியே அவரது விண்வெளி கவசத்தின் கண்ணாடி ஊடாக கமரா உள்ளே சென்று அவரது வியூவில் விண்வெளி மக்ஸிமமாக இருந்தது.
யன்னலினூடாக பூமியைப்பார்க்கும்போது யன்னல் கண்ணாடியில் புல்லொக்கின் முகமும் தெரியும் பூமியும் தெரியும்.
வது விண்வெளிவீரர் ஒருவர் விண்வெளிக்குப்பைகள் தாக்கியதில் இறந்துவிடுவார் அவரைப்பற்றிய எந்த அறிமுகமும் படத்தில் இல்லை ஆனால் பிய்த்தெறியப்பட்ட அவரது முகத்தின் அருகே அவரது கவச உடையில் அவரது குடும்பபுகைப்படத்தை காட்டுவார்கள்
சகலதையும் விட படத்தில் எனக்கு மக்ஸிமம் பிடித்த சீன்


ரஸ்யன் ஸ்பேஸ் ஸ்ரேசனிற்குள் புல்லொக் புகுந்ததும்(சுவாசித்தலுக்கான ஒட்சிசன் முடிந்து மிகுந்த போராட்டத்தின் பின் இதை அடைந்தார்புல்லொக்கின் பொஸிஸன் காட்டுவார்கள் ஒரு குழந்தை தாயின் கர்ப்பப்பைக்குள் எப்படி இருக்குமோ அந்த நிலையில் புல்லொக் இருப்பார் இதே போல் பூமியை அடைந்ததும் புதிதாக ஒரு குழந்தை புவியீர்ப்புடன் மோதி அதை எதிர்த்து நடைபயில்வதைப்போல் திணறி நடைபயின்று செல்லும்போது படம் முடிவடையும்

சரி விடயத்திற்கு வருவோம்


விண்வெளியின் சூழல் எமது பூமி போன்ற சாதாரண சூழல் அல்ல மிகவும் வேறுபாடான சூழலை விண்வெளி தன் வசம்கொண்டுள்ளது.பூமியுடன் ஒப்பிடுகையில் கொடூரமான சூழலைக்கொண்டுள்ளது.இத்தகைய அசாத்திய சூழ் நிலையை சமாளிக்கும்முகமாகவே விண்வெளிவீரர்கள் அதற்கென உருவாக்கப்பட்ட கவசங்களை அணிந்து விண்வெளிக்கு செல்கின்றார்கள்.ஆனால் விண்வெளி என்ற பதத்திலேயே சிறிது மயக்கம் உண்டு.ஒரு கேள்வி நாம் எங்கே இருக்கின்றோம்?எக்ஸாட்டாக எங்கு நாம் இருக்கின்றோம் என கேட்காமல் பூமியுடன் தொடர்பு படுத்தினால் நாம் விண்வெளியில்தான் இருக்கின்றோம்.


நாம் பூமியின் மேல் இருக்கின்றோம் சோ விண்வெளியில்தான் இருக்கின்றோம் ஆனால் எம்மை சுற்றி பூமியின் ஈர்ப்புவிசைக்குள் அகப்பட்டுக்கொண்ட காற்றுமண்டலம் இருக்கின்றது.காற்றுமண்டலத்திற்கு அப்பாலான வெளியில் காற்று இல்லை.வெப்ப நிலை சடுதியாக மாறும்.இப்படி விண்வெளியில் சில பல அசாத்திய சூழ் நிலைகள் உள்ளன.எமது உடல் பூமியில் இருக்கும் காற்று,அமுக்கம்,வெப்ப நிலை,ஈர்ப்புவிசை போன்றவற்றிற்கு ஏற்றவகையிலே உருவாக்கப்பட்டுள்ளது,தன்னை தகவமைத்துள்ளது.சாதாரணமாக எமது  சுவாசத்தில் வளி அமுக்கம் முக்கிய பங்குவகிக்கின்றது.எமது சுவாசத்தில் நுரையீரல் முக்கிய பங்குவகிக்கின்றது. நுரையீரலுக்கு உள்ளே இருக்கும் வளி அமுக்கத்திற்கும் வெளியே சூழலில் இருக்கும் அமுக்கத்திற்கும் இடையிலான வேறுபாட்டின் அடிப்படையிலேயே எமது சுவாசப்பொறிமுறை அடங்கியுள்ளது.வெளி அமுக்கம் குறித்த எல்லைக்கு மேல் அதிகரிக்குமானால் உள் இழுத்த வளியை எம்மால் வெளியேற்றமுடியாது.அதேபோல் வெளியே இருக்கும் அமுக்கம் குறித்த எல்லைக்கு கீழ் குறைந்தால் எம்மால் வளியை உள்ளிழுக்கமுடியாது.

அடுத்து வெப்ப நிலை எமது உடலில் 78% நீரினால் ஆனது.இரத்தம் முதற்கொண்டு எமது உடலில் இருக்கும் ஏனைய பாயிகள் நீரை தம்வசம் கொண்டவைதான்.எனவே பூமியில் இருக்கும் சாதாரண வெப்ப நிலையை விட வெப்ப நிலை வெகுவாக குறைவடையுமாயின் பாயிகள் உறைந்துவிடும் இரத்தமும் சேர்ந்து கணத்தில் உறைந்துவிடும்.இதற்கு முன்பாக பாயிகள் கொதினிலையை அடைந்து ஆவியாகிவிடும்.

(இதில் கொதி நிலை என்பது தொடர்பாக ஒரு மயக்கம் உள்ளது.அதென்னையா வெப்ப நிலை குறைந்தால் பாயி கொதிக்குமா?ஏன் தண்ணீர் வெப்ப நிலை குறைந்தாலா கொதிக்கின்றது? அடுப்பில் வைத்தால்தானே கொதிக்கின்றது?

முதலில் கொதி நிலை என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம் கொதி நிலை என்றால் வரையறை இதுதான்"The boiling point of a substance is the temperature at which the vapor pressure of the liquid equals the pressure surrounding the liquid and the liquid changes into a vapor" இதை சற்றி இலகுவாக்கினால்
ஒரு திரவம் கொதி நிலையில் இருக்கின்றது  என்பதை அந்தத்திரவத்தில் ஏற்படும் வாயுக்குமிழ்களைக்கொண்டு கண்டறியலாம்.அதாவது ஒரு திரவம் கொதி நிலையில் இருக்கும்போது அத்திரவத்தின் சகல பகுதிகளில் இருந்தும் வாயு ஆவியாகிவெளியேறும்.பாத்திரத்தின் அடிப்புறத்திரவம் ஆவியாகும்போது அது குமிழ்களாக மாறி மேலெழுகின்றது. ஆனால் இன் நிலைக்கான வெப்ப நிலை திரவத்திற்கு திரவம் வேறுபட்டது இதுதான்முக்கியமான விடயம்.இதை அமுக்கமும் பாதிக்கின்றது.அதாவது அமுக்கத்தை மாற்றுவதன் மூலம் கொதி நிலையை மாற்றமுடியும். சாதாரண வெப்ப நிலையில் சென்ற் போத்தலை திறந்தோமேயானால் அது ஆவியாகிவிடும் அது கொதி நிலைக்கு சென்றுதான் ஆவியாகின்றது.ஆனால் நீர் சாதாரண வெப்ப நிலைக்கு 28-33 செல்ஸியசிற்கெல்லாம் கொதிக்காது எனவே சூடாக்கவேண்டிய தேவை ஏற்படுகின்றது.உலோகம் உருகவேண்டுமானால் அதிக வெப்பம் தேவை என மனதில் ஒரு உருபகம் வைத்திருக்கின்றோம் ஆனால் பாதரசம் ஒரு உலோகம் ஆனால் அறைவெப்ப நிலையில் திரவம் இதேபோன்ற முரண் தான் கொதி நிலையும்.)


விண்வெளி  கவசம்  அதை அணிந்திருக்கும் வீரரை எப்படி பாதுகாக்கின்றது ?

முதலில்  விண்வெளி வீரரை சூழ செயற்கையாக ஒரு வாயு சூழலை உருவாக்க உதவி புரிகின்றது.ஆனால் கவசத்தினுள்ளே இருக்கும் அமுக்கம் சாதரணமாக பூமியில் இருக்கும் வளிமண்டல அமுக்கத்தைவிட குறைவாகத்தான் இருக்கும்.காரணம் விண்வெளியில் காற்று இல்லை அமுக்கம் பூச்சியம்.எனவே உள்ளே காற்றை பூமியில் இருக்கும் அமுக்கத்தில் நிரப்பினால் கவசம் பலூன் போல் வீங்கிவிடும்.இதை தவிர்ப்பதற்காக குறைந்த வளி அமுக்கம் பேணப்படுகின்றது.

அடுத்து கவசத்தினுள்ளே ஒட்சிசன் வாயு மட்டுமே அடைக்கப்பட்டிருக்கும்.சாதரணமாக பூமியில் உள்ள வளிமண்டலத்தில் நைதரசன் 78 வீதம்.ஒட்சிசன் 20 வீதங்களும் இருக்கும்.ஆனால் இதே வீதத்தில் உள்ளே காற்றினை அடைத்தால் ஒட்சிசன் செறிவு மிகவும் குறைந்துவிடும்.சாதாரண அமுக்கத்தை விட குறைவான அமுக்கத்தில் வாயு அடைக்கப்பட்டிருக்கும் என்பதை முதலில் பார்த்தோம் எனவே 2 காரணிகளும் சேர்ந்து வீரரை மரணம் வரை அழைத்து சென்றுவிடும்.எனவே உள்ளே ஒட்சிசன் மட்டுமேஅடைக்கப்பட்டிருக்கும்.

அடுத்து வெப்பநிலை மாற்றத்தில் இருந்து வீரரைப் பாதுகாக்கின்றது.உள்ளே இருக்கும் வீரரின் தோலிற்கும் விண்வெளிக்கும் இடையே உள்ள கவசம் 14 அடுக்குகளால் ஆன உலோகம் மற்றும்  நார் இழைகளால் ஆக்கப்பட்டுள்ளது. அதோடு இது புல்லட் புரூப்அதோடு இவ்வாறு பல அடுக்களை கவசம் தன் வசம் கொண்டிருப்பதால் micrometeoroids என்று அழைக்கபப்டும்  விண்வெளியில் காணப்படும் பாறைத்துகள்களில் இருந்து வீரரைப்பாதுகாக்கின்றது.

எமக்கு சாதரணமாக தெரிவது வீரர்கள் வெளியே அணிந்திருக்கும் கவசமே ஆனால் அதை அணிவதற்கு முன்பாக அதனுள்ளே வன்மையான ஒரு கவசத்தை வீரர்கள் அணிவார்கள்.இது display and control moduleஐ   கவசத்துடன் இணைப்பதற்கு உதவியாக இருக்கும்.
கவசத்தின் முற்பக்க முகப்பு பிளாஸ்டிகால் செய்யப்பட்டது அதில் தங்கம் பூசப்பட்டிருக்கும்.சூரியனில் இருந்து வரும்  கழி ஊதாக்கதிர்கள் போன்றவற்றில் இருந்து உள்ளே இருக்கும் வீரரை இது பாதுகாக்கும் .


வீரரின்   பின்புறத்தில்  PLSS என அழைக்கப்படும் primary life support subsystemபொருத்தப்பட்டு   இருக்கும் .

அதோடு SAFER  என்ற உபகரணமும் இதோடு சேர்த்து பொருத்தப்பட்டிருக்கும்.இது jetpack போல் தொழிற்படும் ஜாய் ஸ்டிக் மூலம் இதை வீரர் இயக்குவார்.இதன் உதவியுடனேயே விண்வெளியில் பிரயாணம் செய்யமுடியும்

இவ்வாறு பல விடயங்கள் விண்வெளி வீரரை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன.இவற்றின் முக்கியமான நோக்கம் சகிக்கக்கூடிய அளவில் பூமியை ஒத்த சூழ்நிலையை வீரருக்கு வழங்கலாகும்.

சரி கேள்விக்கான விடைக்கு வருவோம்.விண்வெளியில் கவசத்தை கழற்றினால் என்ன ஆவோம்?


15 செக்கண்டில் நீங்கள் சுயநினைவை இழந்துவிடுவீர்கள்.காரணம் விண்வெளியில் ஒட்சிசன் இல்லை.

உங்கள் உடலினுள்ளே இருக்கும் இரத்தம் அதோடு உடலினுள் இருக்கும் பாயிகள் கொதி நிலையை அடைந்து உறைந்துவிடும்.

உடலின் உள்ளே  இருக்கும் திரவங்கள் பாயிகள் ,இரத்தம் கொதி நிலையை அடைதலின் காரணமாக   திசுக்கள்,இதயம் நுரையீரல் போன்றவை விரிவடையும்.

சகிக்கமுடியாத சடுதியான  வெப்பநிலை மாற்றத்திற்கு முகம் கொடுக்கவேண்டி ஏற்படும்.
நிழலில் --148°F (-100°C)
நேரடி சூடிய வெளிச்சத்தில் -248°F (120°C)

gama ray ,cosmic rayபோன்ற பல கதிரியக்கங்களுக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படும்

விண்வெளியில் அசுரவேகத்தில் அலைந்துகொண்டிருக்கும் துகள்கள் உங்கள் உடலை சல்லடையிடலாம்.

30 sec இல்  இருந்து 1 நிமிடத்திற்குள் மரணம் சம்பவிக்கும்.

விண்வெளி ரசிப்பதற்கு மிக அழகானது ஆனால் ஆபத்தானதும் கூட.
விண்வெளியில் வீரர்கள் தமது விண்வெளி கவசங்களை கழற்றினால் வெடிகுண்டு போல் வெடித்து சிதறிவிடுவர்கள் என்பதாகக்கூட ஒரு கருத்து இருக்கின்றது.இதற்கு அவர்கள் கூறும் கரணம் இதயத்தின் உள்ளே இருக்கும் அமுக்கம் மிக அதிகம் எனவே வெளியில் அமுக்கம் குறையும் போது வெடித்து சிதறிவிடுவோம் என்கின்றார்கள்.ஆனால் உண்மையில் அமுக்கவித்தியாசம் காரணமாக எமது இதயம் பலூனைப்போல் வீங்கும் அதோடு இரத்தம் கொதிநிலையை அடைந்துவிடும் அதனாலும் வீங்கும் ஆனால் இது நடைபெறுவதற்கு முன்னராகவே இரத்தம் ஆவியாகிவிடும் எனவே வெடிக்க சந்தர்ப்பம் கிடைக்காது.

chicken fryபோல் ஆகிவிடுவோம் என்பதே உண்மை.Gravity படத்தில் அப்படி ஒரு சீனைக்காட்டியிருந்தார்கள்.

Tuesday, 18 March 2014

தானம்-சிறுகதை

“உங்கட காணில ஏதாவது வேலையிருந்தா சொல்லுங்கோவன்?மனிசன் வேலையில்லாமல் ரண்டு நாளா வீட்டிலதான் இருக்கிறார்”.படிக்கட்டில் இருந்தபடி கதிரையில் இருந்த பாலரை கெஞ்சிக்கொண்டிருந்தது கனகு.
"சரி கனகு இருந்தா சொல்லமாட்டனா? சரி சரி போய்ட்டு நாளைக்குவாவெணை"
கனகு கந்தல்துணிகளை சுருட்டிக்கட்டிக்கொண்டு புறப்பட ஆயத்தமானது.கனகிற்கு நான்கு பிள்ளைகள் கடைசி மகன் ஸ்கொலர்சிப் படித்துக்கொண்டிருக்கின்றான்.மூத்தவளுக்கு கல்யாணமாகிவிட்டது.கனகின் கணவர் கூலிவேலை செய்பவர். நிவாரண அரிசியின் துணையுடனும் கனகு வேலைக்கு செல்லுமிடங்களில் கொடுக்கும் பரிசுகளுடனும்தான் கனகின் குடும்பம் வாழ்கின்றது.
பாலர் எழும்பி சென்றதும் பாலரின் மூத்தமகன் கூப்பிட்டான் "அக்கா.....இண்டைக்கு வைரவருக்கு பொங்கினது புக்கை வடையெல்லாம் இருக்கு பொறுன்கோவன் கொண்டுவாறன்".
"எடுத்துவையெணை நான் பின்னால வாறன்" என்று கூறிவிட்டு கனகு விறுவிறுவென்று பாலரின் வீட்டைச்சுற்றி குசினிக்கு வந்துசேர்ந்தாள்.
சாதிப்பிரச்சனை கனகிற்கு வீட்டுக்குள் செல்லவோ வீட்டினுள்ளே இருக்கும் தளபாடங்களை பயன்படுத்தவோ அனுமதியில்லை. வீட்டின் உள்ளே குறையுயிரில் படுத்திருக்கும் பாலரின் தாயைகவனிக்கமட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தாள் கனகு.
இஞ்ச வா கனகு....இந்தா... என்று பேரன்புடன் பாலரின் மனைவி கனகிற்கு பிரசாதம்கொடுத்தார்.கனகு வாங்கிக்கொண்டு விடைபெற்றது.கனகு பாலர் வீட்டில் நான்கு ஐந்து வருடங்களாக வேலைசெய்கின்றது.பாலரின் தாய்க்கு உடம்பு முடியாமல் படுத்திருக்கும்போது அவரைகவனிக்க பாலரால் குறைந்த செலவில் கனகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாள்.கனகை நம்பி ஊரில் கடன் கொடுக்க யாருமில்லை.கஷ்ரமான நேரங்களில் அவளது பிரார்த்தனைக்கு ஓரளவாவது செவிசாய்க்கும் ஓரேயிடம் பாலரின்வீடுதான்.இதனால் பாலர்குடும்பத்தில் கனகிற்கு தனிபாசம்,ரியாதை இருந்தது.இதனால்தான் மகளின் கல்யாணவீட்டிற்கு பாலர் அழைத்தாலும் வரமாட்டார் என்று தெரிந்து மாப்பிள்ளையையும் மகளையும் பாலரின் வீட்டிற்கு அழைத்துவந்திருந்தாள்.வீட்டின் படலையுடன் அவர்களை அனுப்பிவிடாது வீட்டுவாசல்வரை அழைத்து காசுகொடுத்து தனது பெரும்தன்மையை பறைசாற்றியிருந்தார் பாலர்.ஏன் கனகு சுருட்டிக்கொண்டு சென்ற கந்தல்துணிகள்கூட பாலர்குடும்பத்து பழையதுணிகள்தான்.
அன்று கனது தன் கடைசிமகனை பாலர்வீட்டிற்கு அழைத்துவந்திருந்தாள்.
"என்ர கடைசிமகன்...கொலசிப்பு படிக்கிறான்"..
ஆ..அப்பிடியே...எப்புடி நல்லா படிக்கிறானோ? பாலர் இழுத்தார்.
"ம்...ஓம் நல்லா இங்கிலீசும் கதைப்பான்" வெத்திலைக்காவியாகிவிட்ட தனது 23 பற்களையும் வெளியே காட்டினாள் கனகு.
பாலருக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.
கனகு பாலரிடம் விடைபெற்று செல்ல ஆயத்தமானாள்.
அடியே கனகு... பாலரின் மனைவி அழைத்தார். "இந்தா இதைக்கொண்டுபோ உனக்குத்தான்" என்று மூன்று அங்கர் பால்மாபெட்டிகளைக்கொடுத்தார் பாலரின் மனைவி.
கனகு அதிர்ச்சியுடன் "எணை ஒருபெட்டியே முன்னூறு நானூறுரூபாக்கிட்ட வருமேயெணை"
"பறுவாயில்லை கனகு எல்லாம் உனக்குத்தானே"
கனகு மிகுந்த மகிழ்ச்சியுடன் அவற்றை வாங்கிக்கொண்டு படலைக்கு வந்தாள்.அங்கே நின்ற கடைசி மகனை பெருமிதத்துடன் பார்க்க
என்னம்மா இது?
"அங்கர் ட்டியெடா மூண்டுமே ஆயிரத்துக்கு மேலவரும் எனக்கெண்டபடியால்தாண்டா தந்தவை"
அம்மா எரிச்சலுடன் கத்தினான் அவன்
என்ன?
நீ பேப்பரும் வாசிக்கிறேல்ல அதால உனக்கு ஒரு இழவும் தெரியுதுமில்லை
ஏண்டா?
அங்கரில டி.சி.டி எண்ட சாமானிருக்காம் குடிச்சாவருத்தம்வருமாமெணை கான்சரெல்லாம் வருமாம் அரசாங்கம் கூட தடைசெய்திருக்கு.கடையில இருக்கிறத அவனவன் விக்கேலாம அல்லாடுறானாம். முதல் நாள் பாடசாலைக்கூட்டத்தில் அதிபர் பேசியவற்றின் சாராம்சத்தை கொட்டித்தீர்த்தான் அவன்.
கனகிற்கு யாரோ பிடரியில் அறைந்ததுபோல் இருந்தது.தன் கைகளில் ஒன்று பிடுங்கப்பட்ட உணர்வு.கண்ணீரைக்கட்டுப்படுத்தவில்லை கண்ணீர் கொப்பளித்தது.
மகனைப்பார்த்து மெதுவாக சிரித்தாள்.மகனின் கையைப்பற்றிக்கொண்டு அவ்விடத்தைவிட்டு நீங்கினாள்.
அங்கர்ப்பெட்டி படலையில் அநாதையாகக்கிடந்தது.
யோ.கிருத்திகன்


வாசகர்களுக்கு ஒரு விடயம் -D.C.D எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் இரசாயனம் இருப்பதால் அங்கர் பால்மா அண்மையில்  இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்தது.