Sunday, 14 April 2013

x men கதாப்பாத்திரங்கள் உண்மையில் இருக்கின்றார்களா?-02"xmenபெரும்பாலானவர்கள்இத்திரைப்படத்தைப்பார்த்திருப்பீர்கள்.இப்படத்தில்  இயற்கையில் இருக்கும் சக்திகளைக்கட்டுப்படுத்தும் அபூர்வமான மனிதர்களை  மனிதப் பரிணாமத்தின் அடுத்த   நிலைகளாக காட்டியிருப்பார்கள்.இவர்களை அத்திரைப்படம்  மியூட்டன்கள் என அழைத்தது.படத்தில் மின்னலைக்கட்டுப்படுத்தும் காதாப்பாத்திரம்.உலோகங்களைக்கட்டுப்படுத்தும் கதாப்பாத்திரம் இவர்தான் படத்தின் வில்லன் "மக்னிட்டோ".வேறு ஒருவரின் மனதில் இருப்பவற்றை அறிவதுடன் மனிதர்களது மனதை ஊடுருவி செல்லும் சக்திவாய்ந்த கதாப்பாத்திரமான சேவியர்.ஹீரோ லோகன்.இன்னும் பல சக்திகளைக்கொண்ட பல சூப்பர் ஹியூமன்ஸ்களை எக்ஸ்மான் திரைப்படத்தில் நாம் பார்த்திருக்கின்றோம்." இவ்வாறான சூப்பர் ஹியூமன்கள் நிஜவாழ்க்கையிலும் இருக்கின்றார்களா என்றால் பதில் ஆம். சாதாரணமனிதர்கள் செய்யமுடியாத அசாதாரணவிடயங்களை போகிறபோக்கில் செய்துவிடும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.ஆனால் எமது பிரதேசங்களில் அல்லது எம்மை அண்டியபிரதேசங்களில் இருக்கும் இவ்வாறான அசாதாரண சக்திகொண்டமனிதர்களைப்பற்றியதகவல்களே பெரும்பாலும் எம்மைவந்தடையும் ஆனால் உலகத்தின் கோடிகளில் இவ்வாறானவர்கள் இருக்கின்றார்கள் இவ்வாறானவர்களை கண்டுபிடித்து வெளி உலகிற்கு இவ்வாறான அசாதாரணமனிதர்களையும் அவர்களது திறமைகளையும் வெளிக்கொண்டுவரும்வேலையை செய்கின்றார் ஸ்ரான்லி பிரபல  கொமிக்ஸ்ஸான மார்வெல் கொமிக்ஸின் முன்னாள்  chairman,இந்த பொறுப்பான வேலையை ஒரு சூப்பர் ஹியூமனிடம்தான் ஒப்படைத்திருக்கின்றார். Daniel Browning Smith என்ற ஒரு சூப்பர் ஹியூமனிடம்தான் ஒப்படைத்திருக்கிறார் ஸ்ரான்லீ. இவர் உலகின் the most flexible man in the world என்ற பெயர்வாங்கியவர்.
 x man கதாப்பாத்திரமெல்லாம் கடவுள்களை இமிட்டேட் செய்வதற்காக உருவாக்கப்பட்டவை ...கடவுள்களுக்கு இருப்பதாக நாம் நம்பும் சக்திகளை சாதாரணமான மனிதர்களின் எவலூஸனின் அடுத்தகட்ட மனிதர்களாக எக்ஸ்மானை உருவாக்கியிருப்பார்கள் கடவுளும் சரி எக்ஸ்மானும் சரி மிகைப்படுத்தல்தான்.சூப்பர்மான் ஹல்க் போன்ற கதாப்பாத்திர உருவாக்கங்களை இப்படியும் கொள்(ல்)லலாம்.

சென்றபதிவில் சில எலக்ரோ சூப்பர் ஹியூமன்களை பார்த்தோம் இப்போது தேடல் தொடர்கின்றது...
சென்றபதிவுக்கு இங்கே கிளிக்..

சூப்பர் ஹியூமன்ஸ் அசாதாரணவிடயங்களை  தோமே என்று செய்துமுடிப்பவர்கள் ஆனால் அவர்கள் அவ் அசாதாரணங்களை பிஸிக்கலாகத்தான் செய்யவேண்டுமா? இல்லை என்கிறார் Ron White swears.

Ron White swears இவர் ஒரு சூப்பர் ஹியூமன். எந்த ஒரு சாதாரண மனிதரைவிடவும் அதிகமான ஞாபகசக்தியைக்கொண்டவர்Ron White.USA Memory Championship இல் பங்குபற்றி இருதடவைகள் சாம்பியன் பட்டத்தைவென்றவர்.2009 இல் இவர் செய்த சாதனை  இதுதான், எழுந்தமானமாக அடுக்கியிருக்கும் கார்ட்ஸ்களை நினைவுபடுத்தவேண்டும்.இக்கார்ட்ஸ்களை நினைவுபடுத்த ரொன் வைட் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 80 செக்கண்ட்கள்.
ஒருவரது போன் நம்பரை நாம் முதல்முதலில் கேட்டாலே அதை  நினைவுபடுத்தல்கடினம்.ஆனால் ரொன் வைட்டின் அடுத்த சாதனை 167-digit numberகளை நினைவுபடுத்தியுள்ளார்.இந்த நம்பரில் 55 comma(,)கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இதை மீண்டும் நினைவுபடுத்த அவருக்கு எடுத்த நேரம் வெறும் 5  நிமிடங்கள்.

எனவே இவர் ஒரு சூப்பர் ஹியூமன்தானா என்பதைப்பரிசோதிக்க டானியல் ரொன் வைட்டிடம் சென்றார்.ரொன் வைட்டைப்பரிசோதிக்கும் முதலாவது பரிசோதனை.ரெக்ஸஸில் 3 மைல் தூரத்தை கடக்கும் சைக்கிள் ரேஸ்போட்டி இவருக்காகவென்றே ஒழுங்குபடுத்தப்பட்டது.போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் 100க்கு மேற்பட்ட போட்டியாளர்களை ரொன்வைட் சந்தித்து அவர்களது பெயரை கேட்டு தெரிந்துகொண்டார்.பின்னர் போட்டி முடிவடையும் இடத்தை அடைந்தார்.அங்கு போட்டியாளர்களை வரவேற்பதற்காகக்காத்திருந்தார்.இப்போது ரொன்வைட் போட்டியாளர்களின் பெயர்களை சரியாகக்கூறவேண்டும்.

இதில் உள்ள பிரச்சனை என்னவெனில் ஆரம்பத்தில் நின்ற ஒழுங்கிலே போட்டியாளர்கள் முடிவிடத்தை நெருங்கமாட்டார்கள்.அதோடு இறுதியாக எஞ்சும் 50 போட்டியாளர்கள்தான் இறுதியிடத்தைவந்தடைந்தார்கள். எனவே பெயர்களை நினைவுபடுத்தல் மிகக்கடினமான ஒன்று.ஆனால் அவர்கள் முடிவிடத்தை அடைந்தபோது அனைவரதுபெயரையும் கூறிவிட்டார் ரொன் வைற்.எப்படி  இதை செய்கின்றீர்கள் எனக்கேட்டபோது.ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் இருக்கும் வித்தியாசமான அடையாளங்கள் பெரியமூக்கு,அடர்ந்தபுருவம் போன்றவற்றை அவதானிக்கின்றேன் அவை எனக்கு அதிக தகவல்களைத்தருகின்றன எனக்கூறினார்.

உடனடியாக ரொன் வைற்றை University of Texas இற்கு கொண்டுசென்றார் டானியல் அங்கு ரொன்வைட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.பரிசோதனை முடிவுகள் ஆச்சரியத்தைக்கொடுத்தன.சாதாரண மனிதன் பயன்படுத்தும் மூளையின் பகுதிகளைவிட 35% அதிக மூளையின் பகுதிகளை ரொன்வைற் பயன்படுத்துகின்றார் என்பதுதான் அது.அதோடு அங்கு டொக்ரர் டேவிட்டால் மேற்கொள்ளப்பட்ட பரீட்சையில் 100 புள்ளிகளைப்பெற்றார் வைற்.இதுவரை அவரது பரீட்சைக்கு 100 புள்ளிகளைப்பெற்ற ஒரே ஒரு நபர் வைற்தான்.

இறுதியாக வைற்றை ஒரு Home Depot விற்கு அழைத்து சென்றார் டானியல்.அங்கு 60 பொருட்களை வாங்கினார்.வைற்றிடம் கேட்டுக்கொண்டது இதுதான் 60 பொருட்களின் விலைகளையும் நினைவில் வைத்திருக்கவேண்டும்.ஒரு பொருளின் விலை 42.69 டாலர் என்பதுபோல்தான் அங்கு பொருட்களின் விலைகள் இருந்தன.வாசலில் இருக்கும் computer  இல் பொருட்களின் விலை கணிக்கப்பட்டது.வைற்றும் கல்குலேட்டரின் உதவியுடன் கணித்தார் computer  3 தடவைகள் தவறாக விலைகளைக்காட்டியது ஆனால் வைற் சரியாகத்தான் விலைகளைக்கூறினார்.வைற்  பாடசாலைகள்,யூனிகள்,கொலிஜ் போன்றவற்றிற்கு சமூகமளித்து  மாணவர்களுக்கு நினைவுபடுத்தல் தொடர்பான விரிவுரைகளை  மேற்கொண்டுவருகின்றார்.


Salim Haini Jaws Of Steels


சலீம் அல்ஜீரியாவைச்சேர்ந்தவர்.25 வயதான இவரது செல்லப்பெயர்"Man Who Eats Anything." எல்லாவற்றையும் சாப்பிடுபவர்.இவருக்கு நீங்கள் எதைக்கொடுத்தாலும் சாப்பிட்டுவிடுவார் பல்ப்புகள் பிஸாஸ்ரிக்,இரும்புத்துகள்கள்,பேப்பர்கள் எதைக்கொடுத்தாலும் அவரிடமிருந்து ஏப்பமே பதிலாக மிஞ்சுகின்றது.தனக்கு இப்படி ஒரு அசாதாரண திறமை இருப்பதை சலீம் சிறியவயதில் கண்டுகொண்டார். நோன்பு முடிந்ததும்  பசியில் இவைகளை உண்ண ஆரம்பித்தார் அப்போதுதான் இதை இவரால் அறியமுடிந்தது.இவற்றை உண்ணுதல் ஒரு பெரியவிடயமில்லாது இருக்கலாம் ஆனால் ஸ்பெஸல் என்னவெனில் இவர் எதை உண்டாலும் அது ஜீரணம் ஆகிவிடுகின்றது.

The Human Calculator

13456*2345 விடை என்ன என்று கேட்டு 15 செக்கண்ட்களுக்குள் ஒருவர் விடைசொல்லிவிடுகின்றார் ஆனால் அவரது கையில் கல்குலேட்டர்,போன் எதுவுமே இல்லை உங்கள் ரியாக்ஸன் எப்படி இருக்கும்? மேலும் 4 கேள்விகளைக்கேட்பீர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள பதில் அதேவேகத்தில் வரும்.அமெரிக்காவை சேர்ந்த Scott Flansburg  என்பவர்தான் இந்த ஹியூமன் கல்குலேட்டர்.இதில் இவர் கின்னஸ்சாதனையும் படைத்துள்ளார்.Scott தனது 9 ஆவது வயதில் தனக்கு இப்படி இரு மென்ரல்பவர் இருப்பதைக்கண்டறிந்தார் பின்னர் படிப்படியாக இதைவளர்த்துவிட்டார்.World Maths Day இற்கு கெஸ்ராக அழைக்கப்பட்டிருக்கின்றார் இவர்(World Maths Day  is an online international mathematics competition).அதோடு 13 மாதங்களைக்கொண்ட கலண்டர் ஒன்றையும் இவரே கண்டுபிடித்திருக்கின்றார்.டானியலும் இவரது ஆற்றலை பரிசோதனை செய்தார் மனிஷன் அசராமல் பதில் கூறத்தொடங்கிவிட்டார் அடுத்த ஸ்ரெப் எவ்வாறு இதை செய்கின்றார்.உடனே ஹியூமன் கல்குலேட்டர் பரிசோதனைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.அங்கே நியூரோலஜிஸ்ட் கேட்டகேள்வி இதுதான் நீங்கள் இதை உங்கொன்ஸியஸ்ஸில் செய்கின்றீர்களா அல்லது பிறீகொன்ஸியஸ்ஸில் செய்கின்றீர்களா என்பதுதான்.ஸ்கொட்டிற்கு கேள்விகளைக்கேட்கும்போது எம்.ஆர்.ஐ ஸ்கான் செய்தால் மூளையின் எப்பகுதி அதிகமாக தொழிற்படுகின்றது என்பதை கண்டறியமுடியும் ஆனால் அதற்கு ஒரு கட்டுப்பாட்டு பரிசோதனையாளர் தேவை சோ டானியலுக்கும் அதே பரிசோதனை செய்யப்பட்டது.டானியலின் மூளையை விட ஸ்கொட்டின் மூளை குறைவாகவே செயற்பட்டிருந்தது ஆனால் டானியல் தனது கணிப்புக்கு பயன்படுத்திய மூளையின் பகுதியைவிட வேறு ஒரு பகுதியையே ஸ்கொட் பயன்படுத்தியிருந்தார்.சோ இதை அவர் பழக்கப்படுத்தியிருக்கிறார் இதனால் ஸ்கொட்டுக்கு இவைகள் அசாதாரணமாக சாத்தியமாக்கியிருக்கின்றன.
 Lightning Fast Trigger Fingers


லக்கிலூக் கொமிக்ஸ் கதாப்பாத்திரத்தை உங்களுக்கு நினைவிருக்கலாம் குதிரை,லக்கிலூக்  இருவரும் சேர்ந்து அசத்துவார்கள்.அதில் லக்கிலூக்கின் ஸ்பெஸல் நிழலைவிட வேகமாக சுடுவது.லக்கிலூக் சுடும்போது கீழே போட்டிருப்பார்கள்"ஆசிரியர்-லக்கிலூக்கின் நிழலைக்கவனிக்க" என்று.தம் நிழலைவிட வேகமாக ஓடவேண்டும் என்ற எண்ணம் பலருக்கு சிறியவயதில் தோன்றியிருக்கலாம். ஆனால் நிழலைவிடவேகம் என்றால் அதன் அர்த்தம்  ஒளியைவிட வேகம் எனவே அது இந்த பிரபஞ்சத்தொகுதிக்கு அசாத்தியமான விடயம்.லக்கிலூக்போல் அனிமேஸன் கார்ட்டூன்களில் பிளாஸ் என்ற ஒரு காரக்ரர் வரும்.சூப்பர் மான்,பாட் மான்,டார்க் ஸைட் போல் அதுவும் பிரபலமான கரக்ரர்.பிளாஸின் ஸ்பெஸல் ஸ்பீட் மக்ஸிமஸ் ஸ்பீட் லைட் ஸ்பீட்தான்.இவைகள் கார்ட்டூன்கள்,அனிமேஸன் கதாப்பாத்திரங்கள்.ஆனால் ஒரு மனிதர் இதே போன்ற சக்திகளைக்கொண்டிருக்கின்றார்.லைட் ஸ்பீட் லெவலில் அல்ல ஆனால் சாதாரண மனிதர்களுக்கு அசாதாரணமான அளவில்.இவர் துப்பாக்கி சுடுவதில் சூப்பர் ஹியூமன் ஆகியிருக்கின்றார்.இவர் 10 செக்கண்ட் களுக்கு மிகக்குறைவான நேரத்தில் துப்பாக்கியால் சுடவல்லவர் எனவே இவர் துப்பாக்கியால் சுடும்போது வெடி சத்தத்தைக்கேட்கமுடியுமே தவிர இவர் துப்பாக்கியால் சுடுவதை எம்மால் அவதானிக்கமுடியாது.இவ் சூப்பர் ஹியூமனுடைய பெயர் bob morden . சாதாரண மனிதர்கள் துப்பாக்கியால் சுடுவதென்றால் குறிவைத்தே சுடுவார்கள் ஆனால் bob morden  சுடும்போது குறிவைப்பதில்லை கைத்துப்பாக்கியை அதன் உறையில் இருந்து சில மில்லிமீட்டர் தூரம் மட்டுமே மேலே எடுத்து சுட்டுவிடுகின்றார் ஆனால் துப்பாக்கிக்குறியை உள்ளுணர்வால் பெற்றுக்கொள்கின்றார்.துப்பாக்கியை உறையில் இருந்து எடுத்து சுட்டுவிட்டு உள்ளேவைத்துவிடுவார் ஆனால் எம்மால் அதை அவதானிக்கமுடியாது. டானியல் 2 பலூன்களை 6 அடி இடைவெளியில் நிறுத்தி சுடுமாறு கூறினார் பொப் சுட்டார் ஆனால் கேட்டது ஒரே ஒரு வெடிசத்தம்......உடைந்தது 2 பலூன்கள்....தொடரும்.....

உலகப்புகழ் பெற்ற 'ஒப்பன் கங்க்னம் ஸ்டைல்' PSY இன் புதிய வெளியீடு 'Gentilman'..!!

சரி சரி ஒபாமா எங்கே அழைத்துவாருங்கள் இதே மாதிரி ஆடிவிட்டால் போகிறது 

No comments:

Post a Comment