Sunday, 31 March 2013

ஹொலிவூட்டில் உங்களுக்குத்தெரியாதவை-02


இதன் முதலாவது பகுதியை வெளியிட்டு சில மாதங்கள் கடந்துவிட்டது என்பது உண்மைதான்..அதற்காக மன்னிப்புடன் தொடர்கின்றேன்.தொடர்களை இலகுவாக ஆரம்பித்துவிட்டு தொடரும் என்று போட்டுவிட முடிகின்றது.ஆனால் பின்னர் ஆரம்பத்தில் இருந்து தேடுதலை தொடரவேண்டியிருக்கின்றது.

ஹொலிவூட் படங்களில் மிக பிரபலமாக காட்டப்படும் ஒருவிடயம் மறை குறியீடுகள்.ஏதாவது ஒரு விடயத்தை நோக்கி ஹீரோவை சரியான திசையில் கொண்டுசெல்வதற்கு இவை உதவும்.நிக்கொலஸ்கேஜ் நடித்த நஸனல் ரெஷர்,ரொம் ஹான்ஸ் நடித்த டாவின்சி கோட்,ஏஞ்சல்ஸ் அன்ட் டெமோன்ஸ்,ஹரிசன் போர்ட்டின் சிலபடங்கள் போன்றவற்றில் இவற்றைக்காணமுடியும்.ஏதாவது ஒரு உருவத்தில் ஹீரோவுக்கு ஒரு துருப்புச்சீட்டுக்கிடைக்கும்.அதில் வார்த்தைகள் சங்கேதமான கோர்வைகளாகவோ அல்லது வேறு விடயங்களை செய்வதன் மூலம்(தேசிச்சாற்றை தடவி சிறிது வெப்பமாக்கல்,பின் புறம் மெழுகை ஒட்டி சூடாக்கல்..அல்றா வைலட் ஒளியில் பார்த்தல்,வேறு வேறு நிறங்களைக்கொண்ட கண்ணாடியால் பார்த்தல்) பெறக்கூடியவாறு இருகும் ஹீரோயினுடன் லூட்டி அடித்துக்கொண்டே இந்த குளூக்களின் பின்னால் ஹீரோ சென்றுகொண்டிருப்பார் வில்லனும் சென்றுகொண்டிருப்பார்.அவ்வாறான மறைகுறியீடுகளைப்பற்றிய பதிவுதான் இது.

முதலாவது பதிவை வாசிக்காதவர்கள் வாசித்துவிட்டு தொடருங்கள் சற்று குழப்பமில்லாமல் இருக்கும்.

இவற்றைப்பற்றிய கற்கைகளை Cryptography என்று அழைப்பார்கள்.இது கிரேக்கவார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டது.மறைந்துள்ள/மறைக்கப்பட்ட எழுத்துக்கள் என்பதுதான் பொருள்.

முதல் பதிவில் ROT1 என்ற முறையை பார்த்திருந்தோம்...ஹொலிவூட்டில் உங்களுக்குத்தெரியாதவை

(ஒரு எழுத்து எழுதப்பட்டிருக்குமாயின் அந்த எழுத்தின் அடுத்த எழுத்தை ஆங்கில நெடுங்கணக்கு முறைப்படி இடுதல்.இப்படி ஒரு ஒழுங்கான சொல்லை நேரே எழுதாமல் அடுத்துவரும் ஆங்கில எழுத்துக்களால் எழுதுதல்.BQQMF என்றொருவார்த்தை இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.இதை நீங்கள் குறி நீக்கவேண்டுமாயின்  B இற்கு முன்னைய எழுத்து  A ,Qஇற்கு முன்னைய எழுத்து P,M இற்கு முன்னைய எழுத்துL, Fற்கு முன்னைய எழுத்து E.
அப்படியெனில் அதை ஒன்றாக எழுதினால் "APPLE". கண்டுபிடித்துவிட்டீர்கள்.)
ROT1 ஐப்போல் பல முறைகள் இருக்கின்றன ROT2 ,ROT3 ,ROT3 ......என்றவாறு செல்லும்.இப்படி ROT25 வரை செல்கின்றது.இவற்றின் அர்த்தம் இதுதான் ROT1 என்றால் ஒரு எழுத்திற்கு அடுத்த எழுத்தை எழுதுவதுபோல் (உதாரணத்திற்கு APPLE என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களை ஒவ்வொரு எழுத்துக்கும் அடுத்த ஆங்கில எழுத்தை எழுதினால் BQQMF என்று வரும்)ROT25 என்றால் 25 எழுத்துக்களின் பின் வரும் எழுத்தை எழுதவேண்டும்.

இந்த 25 இற்குள் ROT5, ROT18 , ROT47  என்ற 3ம் வித்தியாசமானவை.

ROT13 ஐ எடுத்துக்கொண்டால்

சாதாரண ஆங்கில நெடுங்கணக்கு ஒழுங்கு-abcdefghijklmnopqrstuvwxyz
ROT13 என்பதால் ஒவ்வொரு எழுத்துக்களையும் 13 எழுத்துக்களால் இடம்பெயர்க்கவேண்டும்.(Each letter is shifted 13 places)

அப்படி 13 எழுத்துக்களால் இடம்மாற்றியபின் நெடுங்கணக்கு-nopqrstuvwxyzabcdefghijklm

மேலே வித்தியாசமானவை என கூறிய ROT5, ROT18 , ROT47  களைத்தவிர்ந்த ஏனைய அனைத்து ROT முறைகளுக்கும் பொதுவாக பின்வரும் விதியைக்கூறலாம்.
ROT N என்றால் எழுதவேண்டிய எழுத்தை நாம்  N தடவையான எழுத்துக்களால் நகர்த்தவேண்டும்,(Each letter is shifted N places..ஆங்கிலத்தின் உதவி இல்லாவிடில் எனக்கு விளக்குதல் கடினமாக இருக்கின்றது)

அந்த 3 ROT களில் அப்படி வித்தியாசமாக என்னதான் இருக்கின்றது?..

ROT5-இம்முறையில் எண்கள் மாத்திரமே பயன்படுத்தப்படும்.
எண்களின் ஓடர் இப்படி மாற்றப்படும்

0123456789 இது 5678901234 ஆக எழுதப்படும் (Each number is shifted 5 places)

ROT18  இல் எழுத்துக்களும் எண்களும்

abcdefghijklmnopqrstuvwxyzABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ0123456789 என்பது nopqrstuvwxyzabcdefghijklmNOPQRSTUVWXYZABCDEFGHIJKLM5678901234  ஆக மாற்றப்படும்.

ROT47 என்பது 25 இற்குள்ளும் இல்லாத ஒரு வகை.இந்தவகையில் ஆங்கில நெடுங்கணக்கிற்குப்பதிலாக அஸ்கி எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கும்.47 என்ற வகையாதலால் Each character is shifted 47 places:


Early Cryptography

மறைசெய்தியியல் இதைSteganography என்று அழைப்பார்கள் இதில் பலமுறைகள் உள்ளன இவற்றை ஆரம்பத்தில் இருந்து பார்த்திருக்கின்றோம்.இந்த வார்த்தை கிரேக்கத்தில் இருந்து தோன்றியது.Greek origin and means "concealed writing",இந்த பதத்தைப்பயன்படுத்திSteganography இதைப்பற்றியபதிவை முதன் முதலில் எழுதியவர்Johannes Trithemius  என்பவர்தான்.இவர் எழுதிய  Steganographia என்ற புத்தகத்தில் இவற்றைப்பற்றிய குறிப்புக்களை கூறியிருக்கின்றார்.
மறைசெய்தியியலின் முதல் பதிவு பெற்ற பயன்பாடுகள் கிமு 440 காலத்திலேயே துவங்கி விட்டன. ஹெரோடோடஸ் தனது தி ஹிஸ்டரிஸ் ஆஃப் ஹெரோடோடஸ் படைப்பில் மறைசெய்தியியலின் இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடுகிறார். கிரீஸ் தாக்குதலைச் சந்திக்க இருப்பதைக் குறித்து டெமாராடஸ் ஒரு எச்சரிக்கை அனுப்பினார். ஒரு மெழுகுப் பலகையில் அதன் பரப்பில் மெழுகு பூசப்படும் முன்னதாக அந்த பலகையில் நேரடியாய் செய்தியை எழுதியிருந்தார். மெழுகுப் பலகைகள் அக்காலத்தில் அழித்து மீண்டும் பயன்படுத்தும் எழுது பரப்புகளாக பொதுவான பயன்பாட்டில் இருந்தன; சிலசமயங்களில் சுருக்கெழுத்துக்கும் பயன்பட்டன. இன்னொரு பழங்கால உதாரணம் ஹிஸ்டியேயஸ், தனது மிகவும் நம்பகமான அடிமையின் தலையை மொட்டையடித்து அதில் செய்தியை பச்சை குத்தி விடுவார். அந்த அடிமைக்கு முடி வளர்ந்ததும், அந்த செய்தி மறைந்திருப்பதாய் ஆகி விடும். பெர்சியர்களுக்கு எதிரான ஒரு கலகத்தைத் தூண்டும் நோக்கத்தோடு அவர் இதனைச் செய்தார்.
மெஸேஜ்ஜை கொண்டுசெல்பவரிடம் அதை பெறுபவரிடமும் படத்தில் காட்டப்பட்டுள்ள மரத்தால் ஆனா உருளை இருக்கவேண்டும்.அதாவது மெஸேஜை உருவாக்கும்போது எந்த விட்டத்தைகொண்ட உருளையில் துணியைச்சுற்றி மெஸேஜை உருவாக்கினார்களோ அதேவிட்டத்தைக்கொண்ட உருளை இருந்தால் படத்தில் காட்டியவாறு உருளையைச்சுற்றிமெஸேஜை அறியமுடியும்.
செய்தியைப் படிக்க முடிந்ததை குறித்து ஹெரோடோடஸ் குறிப்பிடுகிறார். இந்த செய்தி பெர்சியாவின் ஆக்கிரமிப்பு திட்டங்கள் குறித்து கிரீஸ் நாட்டுக்கான எச்சரிக்கை செய்தியை சுமந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழிமுறைகளில் குறைபாடுகள் இருப்பது வெளிப்படை. ஏனெனில் அடிமையின் முடி வளரும் வரை காத்திருப்பதால் நேரம் தாமதமாகும், மற்றும் ஒரு தடவை பயன்படுத்தி விட்ட பின் அடுத்தடுத்த செய்திகளுக்கு கூடுதலான அடிமைகள் தேவைப்படுவது ஆகியவை குறைபாடுகளாகும். இரண்டாம் உலகப் போரில், பிரெஞ்சு எதிர்ப்புப்படையினர் தகவல் சுமப்பவர்களின் பின்னால் கண்ணுக்குத் தெரியாத மை கொண்டு சில செய்திகளை எழுதி அனுப்பினர்.

மற்ற செய்திகளின் கீழ் அல்லது மற்ற செய்திகளின் காலிப் பகுதிகளில்(எஞ்சிய பகுதிகளில்), ரகசிய மை கொண்டு காகிதங்களில் எழுதப்பட்ட மறை செய்திகள்.

தையல் நூலில் மோர்ஸ் குறியீடு கொண்டு செய்திகளை எழுதி பின் அதனை செய்தி கொண்டு செல்பவரின் ஆடையின் ஒரு பகுதியில் தைத்து விடுவது.

(wanted என்ற ஹொலிவூட் படம் ஒன்று வந்திருந்தது மேர்கன் பிரீமன் இதேமுறையில் யார் யாரைக்கொல்வது என்று  ஆடை நூற்கும் இயந்திரத்தில் இருந்து உற்பத்தியாகும் துணியில் இருந்து பெயர்களை டீகோட் செய்வார்)

அஞ்சல் தலைகளின் பின்னால் எழுதப்பட்ட செய்திகள்.

இரண்டாம் உலகப் போர் சமயத்திலும் அதற்குப் பிந்தைய சமயத்திலும், ரகசிய ஒற்று முகவர்கள் தகவலை அனுப்பவும் பெறவும் புகைப்படம் மூலம் உருவாக்கப்படும் மைக்ரோபுள்ளிகளைப் பயன்படுத்தினர். மைக்ரோபுள்ளிகள் பொதுவாக ரொம்பவும் நுண்ணியதாய் இருக்கும், ஒரு தட்டச்சு எந்திரத்தில்உருவாக்கப்படும் ஒரு புள்ளியின் அளவுக்கு அல்லது அதனையும் விடச் சிறிதாய் இருக்கும். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் மைக்ரோபுள்ளிகள் ஒரு காகிதத்தில் பொதிக்கப்பட்டு ஒரு பசையால் ஒட்டப்பட்டிருந்தது. இது பிரதிபலிக்கத்தக்கதாய் இருக்கும், எனவே ஒளிரும் வெளிச்சத்திற்கு எதிராய் இதனைக் கண்டறிய முடியும். அஞ்சல் அட்டைகளின் விளிம்பில் வெட்டப்பட்ட பிளவுகளுக்குள் இந்த மைக்ரோபுள்ளிகளைச் செருகுவது உள்ளிட்ட மற்ற மாற்று உத்திகளும் இருந்தன.


Velvalee Dickinson
இரண்டாம் உலகப் போர் சமயத்தில், நியூயார்க் நகரத்தில் இருந்த ஒரு ஜப்பான் உளவாளியான வெல்வாலீ டிக்கின்சன், நடுநிலை தென் அமெரிக்காவில் இடவசதி முகவரிகளுக்கு தகவல் அனுப்பினார். பொம்மைவிற்பனை விநியோகஸ்தராக இருந்தார் அப்பெண்மணி. அவரது கடிதங்கள் எல்லாம் எந்த பொம்மைகளை எவ்வளவு அனுப்ப வேண்டும் என்பது குறித்து விவாதிக்கும். மறைசெய்திகொண்ட உரை பொம்மைக்கான ஆர்டர்களாய்த் தான் தோற்றமளிக்கும். ஆனால் மறைந்திருக்கும் ‘சாதாரண உரை’யோ கப்பல் நடமாட்டம் குறித்து தகவல் அளித்தது. இந்த பெண்மணியின் வழக்கு மிகவும் பிரபலமுற்று அப்பெண்மணி பொம்மை பெண் என்று அழைக்கப்பட்டார்.

பனிப் போர் எதிர்-பரப்புரை. 1968 ஆம் ஆண்டில், USS ப்யூப்ளோ (AGER-2) உளவுக் கப்பலில் சென்றவர்கள் வடகொரியாவினால் சிறைப் பிடிக்கப்பட்ட போது, தாங்கள் தேசதுரோகம் செய்யவில்லை மாறாக வடகொரியாவால் பிணைக் கைதிகளாய் இருக்கிறோம் என்பதை அமெரிக்காவிற்கு உணர்த்துவதற்கு, அந்த கப்பல் பணியாளர்கள் தங்களுக்குக் கிடைத்த புகைப்பட வாய்ப்புகளின் சமயத்தில் ஜாடை மொழியில் தகவல் தெரிவித்தனர். அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட பிற புகைப்படங்களில், யாரும் காணாத வண்ணம் அந்த பணியாளர்கள் வடகொரியர்களை நோக்கி ‘விரல்’ நீட்டிக் கொண்டிருந்தனர், இதன்மூலம் அவர்கள் சிரித்துக் கொண்டிருப்பது போலவும் வசதியாக இருப்பது போலவும் காட்டப்பட்ட புகைப்படங்கள் தவறான தகவலை அளிப்பதை உணர்த்தினர்


மறைசெய்திக்கலை உதாரணம். இந்த படத்துக்குள், ஒரு மறைந்த செய்தியின் எழுத்துகளின் இடநிலை அதிகரிக்கும் எண்களால் (1 முதல் 20 வரை) குறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு எழுத்து மதிப்பை வலையில் அதன் குறுக்குவெட்டு இடநிலையில் காணலாம். உதாரணமாக, மறை செய்தியின் முதல் எழுத்து 1 மற்றும் 4 இன் குறுக்குவெட்டில் உள்ளது. எனவே, சில முயற்சிகளின் பின்னர், செய்தியின் முதல் எழுத்து ஆங்கில எழுத்துகளில் 14வது எழுத்து என்பதைக் காணலாம்; கடைசி (எண் 20) 5வது எழுத்து.

ஒரு மரத்தின் படம். ஒவ்வொரு நிறக் கூறிலும் கடைசி இரண்டு பிட்டுகளைத் தவிர்த்து அனைத்தையும் நீக்கினால் ஏறக்குறைய முற்றுமுதலாய் கறுப்பான ஒரு படத்தை காணலாம். அந்த படத்திற்கு 85 மடங்கு ஒளிர்ப்பூட்டினால் கீழ்க்காணும் படத்தை உண்டாக்கும்.
மேற்கண்ட படத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சித்திரம்.சாதாரணபார்வைக்கு மரமாக தெரிந்தது மேற்கூறப்பட்டசெயன்முறையின் மூலம் அதனுள் ஒரு பூனையின் உரு மறைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் சர்ச்சை...
மறைசெய்தியியல் செய்திகள் மின்னஞ்சல் செய்திகளில், அதிலும் குறிப்பாக e-mail spam  மின்னஞ்சல்களில் மறைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதும் போது, spam அஞ்சல் என்னும் கருத்தே ஒரு புதிய வெளிச்சத்தைப் பெறுகிறது. ”சாஃபிங் மற்றும் வினோயிங்” தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அனுப்புநர் அஞ்சல் செய்திகளை அகற்றி விட்டு தங்களது தடங்களை உடனடியாக நிரப்பி வைக்க முடியும்.

பயங்கரவாதிகள் மறைசெய்தியியல் நுட்பத்தைப் பயன்படுத்துவது
குறித்த வதந்திகள் முதல்முதலாய் யுஎஸ்ஏ டுடே நாளிதழில் வெளிவந்தது. பிப்ரவரி 5, 2001 அன்று ”பயங்கரவாத கட்டளைகள் இணையவெளியில் மறைவாய் உலாவருகின்றன” மற்றும் “இணைய குறியீடாக்க தொழில்நுட்பத்தின் பின்னால் பயங்கரவாதக் குழுக்கள் ஒளிந்து கொள்கின்றன’’ ஆகிய தலைப்புகளில் இரண்டு கட்டுரைகள் வெளிவந்தன. அதே வருடம் ஜூலையில், ஒரு கட்டுரை இன்னும் துல்லியமாய் எழுதியது: "தீவிரவாதிகள் ஜிகாத்துக்கு இணையத்தில் வலை பின்னுகின்றனர்”. அந்த கட்டுரையில் இவ்வாறு மேற்கோளிடப்பட்டது: “சமீப காலத்தில், அல் காயிதாவைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கான ரகசியக் குறியீட்டு செய்திகளை ஏல விற்பனை இணையத்தளமான eBay.com தளத்தில் வெளியாகும் எண்மருவிப் புகைப்படங்களில் மறைத்து அனுப்புகின்றனர் ”. உலகெங்கும் உள்ள மற்ற ஊடகங்களும் இந்த ஊகங்களை குறிப்பாக 9/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் பலமுறை வெளியிட்டன. ஆனால் ஆதாரங்களை அவை ஒருபோதும் காட்டவில்லை. இத்தாலிய செய்தித்தாளான கோரியெரெ டெல்லா செரா வெளியிட்ட செய்தியில், மிலனில் உள்ள வியா குவாரன்டா மசூதியில் பிடிபட்ட அல் கெய்தா பிரிவினர் தங்களது கணினிகளில் ஆபாசப்படங்களைக் கொண்டிருந்தனர். இந்த படங்கள் எல்லாம் ரகசிய செய்திகளை ஒளித்து வைக்க பயன்பட்டவையாகும் என்று கூறியது. (ஆயினும் வேறு எந்த இத்தாலிய செய்தித்தாளும் இது பற்றி எப்போதும் செய்தி வெளியிடவில்லை). யுஎஸ்ஏ டுடே கட்டுரைகள் பழம்பெரும் அயலுறவு செய்தியாளரான ஜேக் கெல்லியால் எழுதப்பட்டவையாகும். செய்திகளையும் ஆதாரங்களையும் திரித்ததாகக் கூறி இவர் 2004 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார்.
அக்டோபர் 2001 இல் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு கட்டுரையில், அல்கெய்தா படங்களில் செய்திகளை மறைக்க மறைசெய்தியியல் நுட்பங்களைப் பயன்படுத்தியது என்றும், அந்த படங்கள் மின்னஞ்சல் வழியாக (யூஸ்நெட் வழி அனுப்பப்பட்டிருக்கும் சாத்தியம் அதிகம்) அனுப்பப்பட்டன என்றும், செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதலுக்கு தயாரிப்பு செய்யவும் அதனைச் செயல்படுத்தவும் இவ்வாறு அவர்கள் செய்தனர் என்றும் தெரிவித்தது. 2006 ஏப்ரலில் வெளியான தி பெடரல் பிளான் ஃபார் சைபர் செக்யூரிட்டி அன்ட் இன்பர்மேஷன் அஸூரன்ஸ் ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட் பின்வரும் கூற்றுகளை அடக்கியிருந்தது:

”மறைசெய்தியியல் தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறையில் சர்வதேச ஆர்வமும் அவற்றின் வர்த்தகமயமாக்கம் மற்றும் பயன்பாடுகளும் சமீப வருடங்களில் வெடிப்பாய் விரிவடைந்திருக்கின்றன. இந்த தொழில்நுட்பங்கள் எல்லாம் தேசிய பாதுகாப்புக்கான ஒரு அச்சுறுத்தலை முன்நிறுத்துகின்றன. மறைசெய்தியியல் தொழில்நுட்பம் கூடுதலான, ஏறக்குறைய கண்டறிய முடியாத, தகவல்களை எண்மருவித் தயாரிப்புகளில் ரகசியமாய் பொதிக்கத்தக்கதாய் இருப்பதால், வேவு மென்பொருள், கைபேசி நிரல் வழியே தகவல்களின் ரகசிய பரவலுக்கான சாத்தியம் பெரிதாய் உள்ளது.” 
“மறைசெய்தியியலால் முன்நிறுத்தப்படும் அச்சுறுத்தல் ஏராளமான உளவுத்துறை அறிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.” 
இதுதவிர, ஜிகாதிக்களுக்கான பயிற்சி கையேடான ”தி டெக்னிக்கல் முஜாஹித்” என்னும் இணையத்தின் ”பயங்கரவாதப் பயிற்சி நிரல்கூறு” ஒன்று, “ரகசிய தகவல்தொடர்பு மற்றும் படங்களில் ரகசியங்களை மறைப்பது” என்னும் தலைப்பில் ஒரு பிரிவைக் கொண்டிருந்தது
இவையெல்லாம் இருந்தாலும், பயங்கரவாதிகள் கணினி மறைசெய்தியியலைப் பயன்படுத்திய நிகழ்வு என்று ஒன்றும் வெளிவரவில்லை . அல் கெய்தாவின் மறைசெய்தியியல் பயன்பாடு என்பது சற்று எளிமையானது: 2008 ஆம் ஆண்டில், ரங்சீப் அக்மது என்னும் ஒரு பிரிட்டிஷ் முஸ்லீம் அல் காயிதா தொலைபேசி எண்கள் கொண்ட ஒரு முகவரி புத்தகத்தை கண்ணுக்குப் புலப்படாத மை கொண்டு எழுதி வைத்திருந்ததாகக் கூறப்பட்டது. அவர் மீது பயங்கரவாதக்குற்றம் உறுதி செய்யப்பட்டது.
The History of Encryption

Friday, 29 March 2013

Ballpoint Pens எப்படி இயங்குகின்றது?


பேனைகளில்/பேனாக்களில் பலவகைகள் இருக்கின்றட்ன.fountain pen ,ballpoint pen ,rollerball pen ஆனால் பெருமளவானவர்களால் இப்போது Ballpoint Pensதான் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.உலக அளவில் மாணவர்கள் இதை அதிகமாகப்பயன்படுத்துகின்றார்கள். Ballpoint Pens  எவ்வாறு இயங்குகின்றது?
90 களில் பிறந்தவர்களுக்கு இந்தப்பேனாவை நினைவிருக்கும்.
Ballpoint Pen குமிழ்முனைப்பேனா...reed pen, quill pen, metal nib pen,  fountain pen போன்றவற்றைவிட இது வித்தியாசமான முறையில் உருவாக்கப்படுகின்றது,இதன் குமிழ் செப்பு,ஸ் ரீல்,தங்குதன் கார்பைட் போன்றவற்றினால் உருவாக்கப்படுகின்றது.இப்பேனைக்குப்பயன்படுத்தும் மை பின்வரும் இயல்புகளைக்கொண்டிருக்கவேண்டும்.
1)ஒரே சீராகப்பரவும் இயல்பைக்கொண்டிருக்கவேண்டும்.
2)மை பேனாவைவிட்டுவெளியே காற்றில் தொடுகையுறும்போது மெதுவாக உறையக்கூடியதாக இருக்கவேண்டும்.ஏனெனில் தவறுதலாக பேனாவின் உள்ளேயே மை உறைந்துவிட்டால் பேனாவை எறிவதைத்தவிரவேறு எதுவும் செய்யமுடியாது.அத்துடன் குமிழ்முனையும் இறுகிவிடும்.

ஆனால் இவ்விரு இயல்புகளையும் கொண்ட மை இருத்தல் ஒரு  பேனாவை உருவாக்கப்போதுமானதா? 
பேனாக்களில் fountain pen என்ற ஒரு பேனா இருக்கின்றது.இதற்குள் குமிழ்முனைப்பேனாபோன்றல்லாது தனியாக நாமே மையை உட்செலுத்தமுடியும்.சிறிய பிளாஸ்டிக் குப்பிகளிலும் மை கிடைக்கும் அல்லது மைப்போத்தல்களிலும் மைகிடைக்கும்.


இப்பேனை தனது நிப்பில் இருக்கும் சிறு பிளவினூடாக மையை கசியவிடுவதனூடாக இயங்குகின்றது.முனையில் மிகவும் சிறிய இடைவெளி உருவாக்கப்பட்டிருக்கும்.இப்பேனையால் எழுதும்போது எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்கக்கூடாது.பிரயோகித்தால் முனை முறிந்துவிடும்.தவிர இப்பேனையால் எழுதுவது சற்றுக்கடினம்.எடுத்தவிடன் யாரும் எழுதமுடியாது.
இப்பேனாதான் ஆரம்பத்தில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டது.ஆனால் இப்பேனாவில் இருக்கும் பல பிரச்சனைகளுள் ஒன்று விமானங்களில் செல்லும்போது இதை எடுத்துச்சென்றாலோ அல்லது மலை போன்ற உயரமான இடங்களுக்கு எடுத்துச்சென்றாலோ மைவெளியே வந்துவிடும். உங்கள் உடை நாசமாகிவிடும்.இரண்டாம் உலகப்போர்வரை இதற்கு ஒரு மாற்றுத்தீர்வை சகலருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஹங்கேரியைச்சேர்ந்த Laszlo Biro என்ற ஊடகவியலாளருக்கு திடீர் என்று இதற்கான மாற்றுயோசனை தோன்றியது.பத்திரிகைகள் அச்சிடப்படும் இடத்திற்குசெல்லும்போது பத்திரிக்கைகள் அச்சிடப்படுவதை அவதானித்தார்.அச்சிடப்பட்ட உடனேயே மை காய்ந்துபோவதை அவதானித்தார்.இதையே பயன்படுத்தினால் என்னவென்று சிந்தித்தார்.இவருக்கு இவ் யோசனை தோன்றியது June 15, 1938 இல். ஆனால் மை பேனையினுள்ளேயே காய்ந்துவிடக்கூடாது அதுவும் மிகமுக்கியமானது.இதற்காக அவர் கண்டுபிடித்தவிடயம்தான் குமிழ்முனை.....அதாவது குமிழ்முனைப்பேனா...இதன்போது பயன்படுத்தப்படும் குமிழ் 2 வேலைகளை செய்யும்.

1)உள்ளே இருக்கும் மை வெளியேறாமல் அடைப்பானாக தொழிற்படும்.
2)உள்ளே இருக்கும் மையை கட்டுப்படுத்திய அளவில் வெளியேசெல்ல அனுமதித்தல்.

1943 ஜூனில்Biroவும் அவரது சகோதரரும் இரசாயனவியளாளருமானGeorg ம் இணைந்து இப்பேனைக்கான உரிமத்தைப்பெற்றுக்கொண்டார்கள்.பின்னர் இவர்களிடமிருந்து உரிமத்தை பிரித்தனிய அரசாங்கம்வாங்கிக்கொண்டது.சிறிய கால அளவிலேயே வான்படையில்  இவர்களது பேனா பயன்படுத்தப்பட்டது.உயரமான இடங்களிலும் அதிக காற்றழுத்தமுள்ள இடங்களிலும் இப்பேனாவால் எழுதமுடிவதால் அதிகவரவேற்பைப்பெற்றது.இதற்கு முன்வரை பயன்படுத்தப்பட்ட fountain pen அதிக உயரமான இடங்களில்,விமானங்களில் செல்லும்போது அதனுள் இருக்கும் மைகசிந்துவிடும்.குமிழ்முனைப்பேனாவில் இது தவிர்க்கப்பட்டது.

ஆனால் இவர்களுக்கு முன்னரே குமிழ்முனைப்பேனாவை ஒருவர் பயன்படுத்தியிருந்தார் ஆனால் அவர் அதை கரடுமுரடான மேற்பரப்புக்களுக்காக மட்டுமே உருவாக்கியிருந்தார்.John J. Loud என்பவர் 1888 இல் குமிழ்முனைப்பேனாவை உருவாக்கியிருந்தார்.இவர் ஒரு தோல் வியாபாரி.இவரது காலத்தில் பவுண்டேஸன் பென்கள் போன்ற பேனைகளே காணப்பட்டன அவற்றின் உதவியுடன் தோற்களின் மேல் எழுத்துக்களை பொறித்தல் நடைமுறையில் சாத்தியமற்றதாகிவிட.குமிழ் முனைப்பேனா அவரது எண்ணத்தில் உதயமானது.ஆனால் இவர்கள் அனைவருக்கும் முன்னர் கலிலியோ இவ்வாறான குமிழ்முனைப்பேனையை உருவாக்கி பயன்படுத்தியிருக்கின்றார் என்றும் கருத்துக்கள் உள்ளன.
 Milton Reynolds என்பவர் அமெரிக்காவில் முதன்முதலில் வணிகரீதியாக வெற்றிகரமாக விற்கப்பட்ட குமிழ்முனைப்பேனாக்களை விற்றார்.ரெனோல்டை அறிமுகப்படுத்தும்போதே 10 000 பேனைகளைவிற்கப்பட்டது.பேனையின் அன்றையவிலை 10 டொலர்கள்.முதன் முதலில் நீரிற்குள்வைத்து பேனாவால் எழுதி பேனாவிற்குவிளம்பரம்கொடுக்கப்பட்டிருந்தது.அப்போதைய நாளில் இந்தவிலை அதிகம்தான் ஆனால் முதல் முதலில் விலைகுறைந்த பேனையை உருவாக்கும்பணியை BIC கம்பனி செய்துவெற்றியும்கண்டது.
"Writes First Time, Every Time!," என்று அசராமல் செய்த டி.வி விளம்பரங்கள் மற்றும் இதர விளம்பரங்கள் காரணமாக பேனா உலகில் முதல் இடத்தை அடுத்த 10 வருடங்களில் எட்டிப்பிடித்தது BIC.இப்பொழுது 10 சென்ற்ஸுக்கும் குறைவாகவும் BIC பேனைகள் கிடைக்கின்றன.


பேனாவின் முனையில் உள்ள குமிழ் இயங்கும் முறை


பேனாவின் குமிழ் முனையின் மாதிரி உரு
This ball acts as a buffer between the material you're writing on and the quick-drying ink inside the pen. The ball rotates freely and rolls out the ink as it is continuously fed from the ink reservoir
பேனாவின் குமிழ்  socketற்குள் பொருத்தப்பட்டுள்ளது.பேனாவை எவளவுக்கு நாம் அழுத்தி எழுதும்போதும் அந்த குமிழ் சுழல்வதற்கு ஏற்றவகையில் அவ் socketற்குள் இடம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருக்கின்றது.இல்லையாயின் குமிழ் இறுகிவிடும்.
பேனாவால் எழுதும்போது என்ன நடைபெறுகின்றது?
பேனாவால் நாம்  எழுத ஆரம்பிக்கும்போது முதலில் பேனாவை தாளின் மீது அழுத்துகின்றோம்.பின்னர் அப்படியே அழுத்தியபடி பேனாவை நகர்த்துகின்றோம்.சோ அழுத்தியதும் புவியீர்ப்புக்காரணமாக உள்ளே இருக்கும் மை வெளியே வர ஆரம்பிக்கும் அப்போது நாம் பேனாவை நகர்த்த ஆரம்பித்திருப்போம்.குமிழ் உருளஆரம்பிக்கும் அப்போது குமிழின் மேற்பரப்பினால் மை வெளியே கொண்டுவரப்படுவதுடன் புவியீர்ப்புக்காரணமாகவும் மை தாளின்மீது பரப்பப்படுகின்றது.வெளியேறிய மை உடனே உலர ஆரம்பிக்கும் (வெளியே சூழலில் உள்ள வாயிவின் காரணமாக)ஆனால் பேனாவின் உள்ளே உள்ள மை உலராது.காரணம் பேனாவின் முனையினூடாக் மை வந்துகொண்டிருப்பதால் காற்று உள்ளே செல்வது குறைக்கப்பட்டுவிடும்.

பேனாக்களில் 0.5 mm,0.7 mm என எழுதப்பட்டிருக்கும் இது குமிழின் விட்டத்தைக்குறிக்கின்றது.0.7 mm என குறிப்பிடப்பட்டுள்ள பேனாவால் வரையப்படும் கோடின் அளவு 0.7 mm என்பதாகும்.

மை தொடர்பான சிறியவரலாறு...
According to Encyclopedia Britannica, writing inks date from about 2500 BC and were used in hieroglyphics found in ancient Egypt and China. They consisted of lampblack ground with a solution of glue or gums. The resulting mixture was molded into sticks and allowed to dry. Before use, the sticks were mixed with water.
Various colored juices, extracts, and suspensions of substances from plants, animals, and minerals also have been used as inks, including alizarin, indigo, pokeberries, cochineal, and sepia. For many centuries, a mixture of a soluble iron salt with an extract of tannin was used as a writing ink and is the basis of modern blue-black inks.

Close up of an extra fine roller ball pen next to something written with it

list of pen types, brands and companies


Tuesday, 26 March 2013

நீயா? நானா? கோபிநாத்துக்கு அக்கறை இருக்கிறதா?நாமக்கல்லில் இருந்து மாணவர் அரவிந்தன் அனுப்பியது
--------------------------------------------------------------------------

விஜய் டிவி கோபிநாத் நீயா? நானா? வில் தமிழக மாணவர்களுக்கு சமூக விசயங்களில் எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது? என்று சென்ற மாதத்தில் (Feb 10, 2013) ஒரு நிகழ்ச்சி  நடத்தினார்.

எங்கிருந்து மாணவர்களை தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை... மாணவர்களுக்கு தமிழக சமூக விசயங்களின் ஜீரோ அளவுக்கு அறிவு இருப்பதாக ஒரு தோற்றத்தை உண்டு பண்ணினர்.

அதை பார்த்த பலரும் இது போன்ற மாணவர்களை வைத்து கொண்டு தமிழ் சமுதாயம் என்ன செய்ய போகிறது. மாணவர்கள் சினிமா பார்க்கவும், பெண்கள் பின் சுற்றவும்தான் லாயக்கு. அந்தோ பரிதாபம்!! என்ற அளவுக்கு பேஸ்புக்கிலும், சமூக தளங்களிலும் விமர்சனங்களை எழுதித் தள்ளினர்.

என்னை போன்ற மாணவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பெருத்த அவமானமாகவே பட்டது. ஒரு தொலைகாட்சி ஐம்பது பேரை மாணவர்கள் பிரதிநிதியாக பிரதிபலித்து மாணவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் போன்ற தோற்றத்தை எவ்வளவு மலிவாக தோற்றுவித்தது.

இதோ இன்று மாணவர்கள் ஈழத்திற்காக போராட்டத்தை கையில் எடுத்து உள்ளனர். அரசியல் அமைப்புகளும், ஆட்சியாளர்களும் சற்றே அதிர்ச்சியில் தான் உள்ளனர்.

இப்போதும் மாணவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்றே விஜய் டிவி, நீயா நானா நிகழ்ச்சி, கோபிநாத் போன்றவர்கள் நினைக்கிறார்களா?

மாணவன் இன்று தைரியமாக சாலையில் இறங்கி போராடுகிறான். விஜய் டிவிக்கு ஈழம் தொடர்பாக மாணவர்களை அழைத்து கலந்துரையாடல் நடத்த தைரியம் இருக்கிறதா?

விஜய் டிவியை வலியுறுத்த நீயா? நானா? கோபிநாத்துக்கு அக்கறை இருக்கிறதா?

ஈழம் தொடர்பான வீடியோக்களை ஒளிபரப்பி மக்களிடையே ஈழப்பிரச்சனையை கொண்டு செல்ல விஜய் டிவி எதுவும் முயற்சி எடுத்ததா?

சமூக விசயங்களில் மிக அக்கறை கொண்ட கோபிநாத் ஈழ பிரச்சனை தொடர்பாக வாய் திறக்கலாமே?

பவர் ஸ்டாரை புரட்டி எடுத்த சமூக சிந்தனையாளர் கோபிநாத், ராஜபக்சேவை ஒரு நிகழ்ச்சியில் புரட்டி எடுக்கலாமே?

கல்லூரிகள்தோறும் சென்று மாணவர்கள் சமூக விசயங்களில் அக்கறை கொள்ளுங்கள் என்று பேருரை நடத்தும் கோபிநாத், விஜய் டிவி ஈழம் பற்றி நிகழ்ச்சி நடத்த மறுத்தால் அதிலிருந்து வெளியேறி மாணவர்களுடன் போராட முன் வருவாரா?

மாணவர்கள் போராட்டம் நடைபெற்ற எங்காவது கோபிநாத் சென்று மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தாரா?

தெரிந்தவர்கள், மாணவர்களை விமர்சித்தவர்கள் சொல்லுங்கள்.......

Monday, 25 March 2013

உலக /சமூக அரசியலை வெளிப்படுத்தும் ஓவியங்கள்


Polish illustrator Pawel Kuczynski உலக சமூக கலாச்சார அரசியல்களை வெளிப்படுத்தும் ஓவியங்கள். நிச்சயமாக ஒவ்வொரு ஓவியத்திற்கும் ஒவ்வொருபதிவை எழுதுமளவிற்கு கருத்துக்களை விட்டு சென்றிருக்கின்றார்.