Thursday, 7 February 2013

தமிழக மின்தடையை நீக்க -உருத்திராக்கம் அரியகண்டுபிடிப்புஇணையத்தில் அதுவும் விக்கியில் உருத்திராக்கம் என்ற கட்டுரையில் உருத்திராக்கம்பற்றிய கட்டுரையை படிக்கமுடிந்தது.உருத்திராக்கம் என்பது பற்றிய ஒரு விஞ்ஞானவிளக்கத்தை அடித்துவிட்டிருக்கின்றார்கள்.சூப்பர்மான் கதையில் வரும் கிரிப்டினைட் என்ற கனிமக்கல்லின் சக்திகளை ஒத்த சக்திகளை உருத்திராக்கம் கொண்டிருப்பதுபோல் இருந்தது அக்கட்டுரை.
உருத்திராக்கம் என்ற தலைப்பில் விக்கியில் உள்ள அக்கட்டுரையின் ஆங்கிலவேர்சனில் கீழே குறிப்பிடப்பட்ட அக்கட்டுரை இல்லை.அதோடு கட்டுரையின் மூலம் என்றுகுறிப்பிடப்பட்ட இடத்தில் ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது.முத்துக்கமலம் இணைய இதழில் சிங்கப்பூர் கிருஷ்ணன் எழுதிய "உருத்திராட்சம் தெரிந்து கொள்வோம் கட்டுரை
அந்த லிங்கிற்கு சென்றால் அங்கே அந்தக்கட்டுரையையே காணவில்லை.என்ன் காரணம் என்று தெரியவில்லை லிங்க் நீக்கப்பட்டிருந்தது.ஆனால் அந்தக்கட்டுரைக்கான லிங்க் இங்கே கிளிக்.கீழே உருத்திராக்கம் பற்றிய விஞ்ஞானவிளக்கத்தைப்பார்க்கவும்.ஏதோ உண்மையில் கிரிப்டனைட் போல் தோற்றத்தை உங்களுக்கு ஏற்படுத்தலாம் வழக்கமாக சமயப்பிரச்சாரப்புத்தகங்களில் வழக்கமான கடவுள் செய்த அதிசயங்களை சொன்னால் மன நிலைகுன்றியவன் கூட இப்போது நம்பமாட்டான் என்பதை உணர்ந்து.சயன்ஸை மிக்ஸ்பண்ணுவார்களே லைக் 9 கிரகங்களை விஞ்ஞானிகள் அறிவதற்கு முன்பே நாம் அறிந்துகொண்டோம் அதோடு நில்லாமல் அக்கிரகங்களின் நிறங்களைக்கூட நாம் அறிந்தோம்.அதேவகையறாத்தான் இதுவும்.இந்தக்கட்டுரையை வாசிப்பதற்கு முன் இந்த வசனங்களை வாசித்துவிடுங்கள். Electromagnetic,Pargmagnetic,Inductive,Neuro Transmiters (சில ஹார்மோன்கள்),Acupressure,இவளவற்றையும் இன்னும் சில அறிவியல் விளக்கங்களையும் துணைக்கழைத்திருக்கின்றது கீழே  நீங்கள் வாசிக்கப்போகும் கட்டுரை.

ஆரம்பியுங்கள்...

//உயர்ந்த மன அழுத்தம் கூர்ந்த மனக்குவிவு ஆகியவை ஒருவருக்கு ஏற்படும் போது, மூளைக்கும் மூளையிலிருந்து இரத்த ஓட்டம் பீறிட்டும் செல்வது நோக்கத் தக்கது. இந்த மணிகளின் துணையுடன் ஒருவகைச் சாந்தம் ஒரு முகக்குவிவு, கூர்ந்த குவிவு ஆகியவற்றை எளிதில் பெறமுடிகிறது. அத்துடன் உருத்திராக்கம் அணிவோருக்கு குறிப்பிடத்தக்க அளவு மனத்திடத்தையும், உள்ளார்ந்த பலத்தையும் அளிப்பதாகக் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டிற்கான உருத்திராக்க மணிகளைவிட, ஒன்றிலிருந்து இருபத்தொரு முகங்கள் வரை உள்ள அதிக ஆற்றலுள்ள உருத்திராக்க மணிகளுமுண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும், நம்மைச் சுற்றியுள்ள ஆக்கபூர்வமான சக்திகளையும் ஒரு நிலைப்படுத்தி, செழிப்பு, ஆக்கம், உள்ளுணர்வுத் திறன், எதிர்கால நிகழ்வுகள் குறித்து ஆய்தல், பாலின ஒத்திசைவு போன்ற சிறப்புப் பண்புகளை அளிக்கின்றன. உறுதியாக, உருத்திராக்கங்கள் நாம் இன்னும் திறம்படச் செயலாற்றவும், இன்னும் வெற்றி காணும் வாழ்க்கையை வாழவும் உதவுகின்ற வியத்தகு மணிகளாகும்.உருத்திராக்கத்திற்கு, சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic) காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic) அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive) ஆகியன உள்ளன என்பதை இவர்கள் நிலை நிறுவினர். மேற்கூறிய ஆற்றல்கள் உருத்திராக்கத்தின் முகப்புகள் அல்லது முகங்கள் மேற்பரப்பிலுள்ள பகுப்புகளின் எண்ணிக்கை பொறுத்து அமையும். ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய உருத்திராக்கத்தையோ அன்றேல் ஒரு தொகுதி முகங்கள் கொண்ட உருத்திராக்க மணிகளையோ அணிவோருக்கு, ஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள் (Transformation in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன் ஆர்வம், மனத்திட்பம் ஆகியன மாற்றம் பெறுகின்றன. மேலும் இந்த ஆய்வாளர்கள், உருத்திராக்க மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் நிறுவினர்.//ஒருவரின் ஆளுமையை மாற்றவும், அவருக்கு நேரான நன்நோக்கு உண்டாக்கவும் வல்ல பலவேறு ஆற்றல் மிக்க பண்புகள் உத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் மிக்க பண்புகள் உருத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த போதும், எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது. குறிப்பாக, இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே உருத்திராக்கம் புகழ்பெற்றது. இவர்கள் உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து உத்திராக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இவர்கள் உருத்திராக்கத்தின் ஆற்றலை அறிவியல் நோக்கில் நிறுவியதுடன், தாம் கண்ட முடிவுகளை மீண்டும் செய்து காட்ட இவர்களுக்கு முடிந்தது.
உருத்திராக்க மணிகள் அணிபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்துள்ளதையும் அவர்கள் கண்டனர். இவ்வாறு மன அழுத்த நிலை குறைவது, தொடர்ச்சியாகச் சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் உட்கொள்வதால் மட்டுமே செய்ய முடிந்துள்ளது. உருத்திராக்க மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன.
இந்த ஆய்வாளர்களால் நரம்பு மாற்றிகள் (Neuro Transmiters) டொபமைன் (Dopamine), செறொரின் (Serotinin), போன்ற செயல்பாடுகளில் உருத்திராக்க மணிகளை அணிவதால் ஏற்படும் தாக்கங்களையும் நிலைநாட்ட முடிந்தது. இத்தகைய தாக்கங்களினால் ஒருவரது ஆளுமையிலும் மனப்பாங்கிலும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்கின்றன. உருத்திராக்கத்தை அணிவோர், தமக்கு ஏற்படும் ஏனைய நன்மைகளுடன், அவர்களுடைய மன அழுத்த நிலை எதிர்பாராத அளவு குறைந்திருப்பதையும் கண்டனர். இத்தகைய மன அழுத்த நிலைகுறைவு, இதுவரை சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் தொடர்ந்து உட்கொள்வதால் பெறப்பட்டுள்ளது மட்டுமே உருத்திராக்க மணிகள், ஆக்கபூர்வமான அதிர்வலைகளை வெளிக்கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும், மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன. உருத்திராக்க மணிகள் ஒருவரை 'அல்பா மன நிலைக்கு' (Alpha state of mind) இட்டுச் செல்கின்றன.
யோகிகள் வியத்தகு வகையில், மனதைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்திருக்கின்றனர். அதாவது உடலில் தன்முனைப்புடன் கூடிய செயல்கள், தன்முனைப்பற்றுச் செய்யும் செயல்கள் இரண்டையும், குறிப்பாக உருத்திராக்க மணிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்தனர். இவர்கள், உடலின் பாதுகாப்பிற்கு எந்த விதத் துணிகளும் அணியாமலேயே இமாலய மலையின் கடுங்குளிரைத் தாங்கினார்கள். இவர்கள் தமது உடலிலுள்ள வெப்பத்தை வெளிக் கொணரும் போது அதைக் கட்டுப்படுத்தி அதன் வழி குளிரைத் தாங்கினார்கள். இது சாதாரணமாக செய்யத்தக்க செயல் அல்ல.
உருத்திராக்க மணிகளுக்குச் சில விளக்க முடியாத, ஆனால் வியக்கத்தக்க மின்காந்தப் பண்புகளும், ஊசி அடுத்த முறைப் பண்புகளும் [Acupressure] உண்டு என்பதைப் ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். கழுத்தைச் சுற்றி உருத்திராக்கத்தை அணிவதால், அது இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுவதுடன் நமக்கு உகந்ததாகவும் ஆகிறது. நமது இதயத் துடிப்புகளை கட்டுப்படுத்துவதால் சாத்தியமாகிறது.
உடலில் அல்லது மனதில் அசாதாரண நிலையோ அன்றேல் ஏதாவது நோயோ இருந்தால் அவற்றைச் சுட்டிக் காட்டும் இரத்தச் சுற்றோட்டம் விளங்குகிறது. எடுத்தக்காட்டாக ஒருவர் உயர்ந்த மன அழுத்த நிலையையோ அன்றேல் உறுப்பு உறுப்புகளில் சீர்கேட்டையோ உணரும் நேரத்தில் அவருடைய இரத்தச் சுற்றோட்ட வீதம் அதிகமாகிறது.இதற்கு மாறாக இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுத்துவதால் அவருடைய மன அழுத்த நிலை குறைகிறது. சோமடைசேசன் (Somatisation) அதாவது சீரற்ற சுவாசமும் இரத்தச் சுற்றோட்டமும் கட்டுப்படுத்தப்பட்டவுடன் அதற்கான காரணி அதன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது. இந்த அடிபப்டை விதிமுறையைக் கொண்டே எல்லா சைகோ பார்மகோலொஜின் (Psycho pharmacological) மருந்துகளும் செயல்படுகின்றன். இரத்தச் சுற்றோட்டம் சாதாரண நிலைக்கு வந்ததும், ஒருவருக்கு மனத்தெளிவு ஏற்படுத்துவதுடன், உடல் மனம் ஆகிய இரண்டின் செயல்பாடுகளிலும் கூர்ந்த நோக்கு உண்டாகின்றது.
உருத்திராக்கம் நமக்கு, உடலில் இலேசாக இருக்கும் உணர்வையும் சாந்தத்தை அளிக்கிறது. அத்துடன் அது நமது ஒட்டு மொத்த நலத்தையும் திறனையும் மேம்படுத்துகிறது. உருத்திராக்க மணிகளை அணிவதால் மட்டும் ஏற்படும் வியத்தகு விளைவுகளைக் கண்ட பலர், இம்மணிகள் தெய்வீகமானவை இறைவனால் அனுப்பப்பட்டவை எனக் கருதி அவற்றை வணங்கினர்.
உண்மையான உருத்திராக்க மணிகளை அணிந்த ஆயிரக்கணக்கான் மக்கள், அவை தமக்கு இரத்த அழுத்தம், மனச்சோர்வு, மற்றும் நரம்புக் கோளாறு உட்பட்ட மனத்துடன் தொடர்பான தொல்லைகள் ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரனம் கிடைத்ததாக அறிகிறார்கள். அதை அணிவோருக்குத் தன்னம்பிக்கை, உள்ளார்ந்த பலம் (Inner Strength) இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் மேலோங்கச் செய்வதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
சாதாரண பயன்பாட்டிலுள்ள உருத்திராக்க மணிகளை விட, மிகச் சக்தி வாய்ந்த ஒன்று முதல் இருபத்தொரு உருத்திராக்க மணிகளும் உண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும், நம்மைச் சுற்றியுள்ள ஆக்கப்பூர்வமான சக்திகளையும் நேர்ப்படுத்தி, அவற்றைச் செழிப்பு (Prosperity) படைக்கும் ஆற்றல் (Creativity) உள்ளுணர்வுத் திறன் (Inductivity) எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை, தீமை பற்றி ஆய்ந்து நோக்கும் திறன், பாலின ஒத்திசைவு போன்றவை செயல்படவும், மேலும் வெற்றியுள்ள வாழ்க்கையை நாம் வாழவும் உதவுகின்றன//
உருத்திராக்கம் என்று அழைக்கப்படும் Elaeocarpus ganitrus இன் பழம் நீல நிறமானது அதுவிழுந்து உலர்ந்தால் உள்ளே இருக்கும் காய்ந்துபோனவிதைஎச்சம்தான் நாம் அழைக்கும் உருத்திராக்கம்.பழமாக இருக்கையில் அல்லது உலராத விதையாக இருக்கையில்  ஏனைய மரங்களில் விதைகளில் இருப்பதைப்போல் உருத்திராக்கத்தினுள்ளும் பல அசிட்கள் கெமிக்கல் கொம்பவுண்ட்கள் இருக்கும்.சில பழங்களின்,விதைகளின் இரசாயங்களை மருத்துவத்திற்கு பயன்படுத்துகின்றார்கள் இது அனைவருக்கும் தெரிந்தவிடயம் சில உதாரணங்கள் இங்கேகிளிக்.

Phsio-Chemical Properties
 
Fatty Acid Composition
Moisture  8.87
Oil %   0.68
Colour of Oil   pale yellow
Consistency Liquid
Refractive index 1.4650
Specific gravity 0.9300
Saponification value 176.30
Saponification equivalent 317.8
IV 72.28
AV  34.89
Unsaponifiable matter  3.76

காய்ந்துசருகாகி உருத்திராக்கமாக மாறுவதற்கு முன் அவ்விதைகொண்டுள்ள விடயங்கள்தான் மேலே உள்ளவை

சமய அடையாளத்தை உருத்திராக்கத்திற்கு(Elaeocarpus sphaericus )அளிப்பதைவிடுத்து அதை ஒரு மெடிக்கல் யூஸிற்கான விதையாக அதை பலர் ஆராய்ச்சி செய்திருக்கின்றார்கள்.துரதிஸ்ரம் என்னவெனில் வழமையான சமப பிரச்சாரங்களுக்கு அவற்றையும் பயன்படுத்திவிட்டார்கள்.

  Important Contemporary Research Articles / Books
  • "Antimicrobial activity of Elaeocarpus sphaericus" by Singh RK, Nath G., Department of Pharmacology, Institute of Medical Sciences, Banaras Hindu University, Varanasi - 221 005.
  • Anti-inflammatory activity of Elaeocarpus sphaericus fruits extracts in rats" by R. K. Singh and B. L. Pandey Department of Pharmacology, Institute of Medical Sciences, Banaras hindu University, Varanasi-221 005.
  • "Pharmacological activity of Elaeocarpus sphaericus" by R. K. Singh, S. B. Acharya, Dr S. K. Bhattacharya, Department of Pharmacology, Institute of Medical Sciences, Banaras Hindu University, Varanasi - 221 005, India.
  • "A note on rudraksha, Elaeocarpus sphaericus (Gaertn.) K. Schum" by Krishnamurthy, T.(1964), Indian Forester.
  • "Anticonvulsant activity of the mixed fatty acids of Elaeocarpus ganitrus roxb. (Rudraksha)"   by Dasgupta A, Agarwal SS, Basu DK., Indian Pharmacology, 1984.
  • "The Healing Power of Rudraksha" (CD) by H. H. Swami Chinmayananda, Chinmaya Mission.
  • "Ultra structural basis and function of iridescend blue colour of fruits in Elaeocarpus" by David W. Lee, Nature, Vol. 349, No.6306, pp. 260-262,1991
  • "Action of a fraction of Elaeocarpus Ganitrus on Muscles" - Bhattacharya S. S and Sarkar P. K., R. G. Kar (Medical College Kolcutta)
  • "Further observations with Elaeocarpus Ganitrus on Normal and Hypodynamic Heart" - by Sarkar. P. K., Bhattacharya S. S and Sengupta S. S., Department of Pharmacology, Medical College, Kollcutta 
  • "Celled stone of Elaeocarpus ganitrus Roxb" - by Oza. GM, Current Science, 1972
  • “Isolation of microsatellite loci from a rainforest tree, Elaeocarpus grandis (Elaeocarpaceae), and amplification across closely related taxa" - R. C Jones, J McNally, M Rossetto (Molecular Ecology Notes, 2002) 
  • "More about Rudraksha" by Joyce Diamanti, 2001, The Bead Society of Greater Washington Newsletter
  • "Notes on The Botanical Identity of Beads Found Under The Name: Rudraksha" - by Yelne, M. B., BIORHYTHM, AYU. ACADEMY SERIES, 1995 
  • "Pharmacological investigations on Elaeocarpus ganitrus." by Bhattacharya SK, Debnath PK, Pandey VB, Sanyal AK., Planta Med. 1975
  • Regeneration status and population structure of Rudraksh (Elaeocarpus ganitrus Roxb.) in relation to cultural disturbances in tropical wet evergreen forest of Arunachal Pradesh" - Bhuyan, Putul; Khan, M. L. and Tripathi, R. S. 2002.
  • "Rudraksa Properties and Biomedical Implications" by Subas Rai,2000.
  • "Rudraksam" by N. Swarnalatha (Journal of Sukrtindra Oriental Research Institute, Vol. II, No. 1, Oct. 2000)
  • "Rudraksha - A Religious Tree and Its Economic Importance" - by Mitra, B., Das Gupta, R., & Sur, P. R., Ethnobotany in India, Scientific Publishers, Jodhpur, 1992. 
  • "Rudraksha - Not Just a Spiritual Symbol But Also a Medicinal Remedy" - Dennis, T. J. (1993), Sachitra Ayurved (on Elaeocarpus ganitrus Roxb) 
  • "Rudraksha therapy for perfect health" by Panduranga Rao, J. I., Sathyanarayana Swamy, K., International Institute of Ayurveda AVR Educational Foundation of Ayurveda, 1995
  • "Scientific appraisal of rudraksha (Elaeocarpus ganitrus): chemical and pharmacological studies" - Pandey, V. B. and S. K. Bhattacharya (1985)

உருத்திராக்கத்தை பயன்படுத்துபவர்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது அதம் இறுதிமுடிவில் உருத்திராக்கத்தை ஆன்மீகமாக பயன்படுத்துவதைவிட வேறுதேவைகளிற்கும் மக்கள் பயன்படுத்திவருகின்றார்கள் என்பது அறியப்பட்டது.
According to a survey, 35 per cent of people using Rudraksh use them for mental troubles, 35 per cent for cardiac troubles (எது cardiac troubles ஆ இதயப்பிரச்சனைகளுக்கும் ருத்திராக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியாது)and 30 per cent for spiritual benefits. Regarding its effects, 85 per cent of the cardiac patients and 71 per cent mentally affected patients were found to be relieved while 50 per cent of those seeking spiritual benefits claimed relief. These studies clearly point out thatRudraksh has a therapeutic value, besides its spiritual significance.

முடிவா சொல்லவாரது என்னான்னா உருத்திராக்கத்தை உருத்திராக்கமாக யாராவது பார்த்தால் அது அவர்களது சமய நம்பிக்கை அது அவர்களுடன் இருத்தல் நலம்.ஆனால் உருத்திராக்கத்தை Elaeocarpus ganitrus  ஆக நீங்கள் பார்த்தால் மருத்துவதேவைகளிற்கு அவற்றைப்பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

கட்டுரையின் இடையில் அக்குபஞ்சரையும் இழுத்திருக்கின்றார்கள்.உருத்திராக்கம் அணிவது அக்குபஞ்சரின் சில பயன்களை தரும் என்பதுபோல் சென்றது கதை.எனக்குத்தெரிந்து அக்குபஞ்சர் என்பது அழுத்தங்கள் மஸாஜ்,சில நரம்பு முடிவிடங்களில் ஊசிகளால் குற்றி உணர்வூட்டல் போன்றவற்றால் சிகிச்சையளிக்கப்படும் முறை.குறைந்த பட்சம் உடலில் சிறிய அழுத்தத்தையாவது ஏற்படுத்தினால்தான் அது அக்குபஞ்சர்.உருத்திராக்கத்தைவெறும் மாலையாக அணிந்துகொண்டால் அது கழுத்தில்  தொங்குவதைத்தவிர வேறு எதையும் செய்யாது.

ஆரம்பித்த இடத்திற்குவருகின்றேன்.//மின்காந்தப் பண்புகள் (Electromagnetic) காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic) அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive) ஆகியன உள்ளன என்பதை இவர்கள் நிலை நிறுவினர்.//
தமிழகத்தில் மின் பிரச்சனை தீர்வு இதோ மின்காந்தப் பண்புகள் இருப்பதனால்,காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மைகள் இருப்பதால்(உருத்திராக்கம் உலோகமாம்சாமி) உருத்திராக்கத்தில் இடையிடையே சீரான மின் துடிப்பை செலுத்துவதன் மூலம்  அதை நிலையான காந்தமாக மாற்றிவிட்டு காந்தத்தை சுருளினுள் அசைப்பதன் மூலம் மின்சாரத்தைப்பெற்றுக்கொள்ளமுடியும்.மின்சாரம் பெரிய அளவில் வராது என்றாலும் பல விதைகளைப்பயன்படுத்தி ஏதோ 1,2 குண்டு பல்ப்புகளை எரிப்பதற்கு முயற்சி செய்யலாம்.

காய்ந்து உலர்ந்த உருத்திராக்கவிதையைவேண்டுமானால் தீ மூட்டி ஓளியைப்பெற்றுக்கொள்ளலாம்.

ருத்திராட்சத்தை வைத்து ஒரு அணுவிஞ்ஞானி செய்த பரிசோதனை கீழே...அதற்கு ஒரு விளக்கம்வேறுகொடுத்திருந்தார்கள்..

Rare One Mukhi Rudraksha Of Java Origin . 
This Video Show the copper plate testing of 1 facet rudraksha of java . 
It is clear shown in this video that Natural rudraksha will be rotate between two copper coins. 


No comments:

Post a Comment