Friday, 22 February 2013

ஆர்மி ரெயினிங்க் அனுபவம்


காம்ப் வாசல்

உள்ளே இருந்து வெளியே
உண்மையில் அதன் பெயர் தலைமைத்துவப்பயிற்சி பல்கலைக்கழகத்திற்குள் உள்ளீர்க்கப்படும்மாணவர்களுக்கு தலைமைத்துவத்தையும் நேரிய சிந்தனையையும் மேம்படுத்தும் முகமாக உருவாக்கப்பட்டபயிற்சி.இதற்கு  நம்மவர்மத்தியில் பலத்தஎதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டன. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதை நிறுத்தாமாறு 2011 இல் கோரியது பயிற்சிக்கு சென்றமாணாவி இறந்தமையே முக்கியகாரணம்.அது தொடர்பான செய்தி(குறித்த இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மாணவி மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து பதுளை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மாணவி உயிர் இழந்து உள்ளார். உயிரிழந்தவர் நிசாந்தி மதுஷானி ( வயது – 24 ) என்பவராவார். ஒவ்வாத பயிற்சியும், மாசு நிறைந்த சூழலில் தங்கி இருந்து அசுத்தக்காற்றினை சுவாசித்ததன் காரணமாக சுவாசப் பையினுள் கிருமிகள் புகுந்ததனாலேயே இவ் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. )

எதிர்ப்புக்கள் அரசாங்கத்தின் மீதுகேஸ்கள் என எதுபோடப்பட்டாலும் அசராமல் பயிற்சி நடந்துவருகின்றது.எனக்கும் எனது நண்பர்களுக்கும் தலைமைத்துவப்பயிற்சிக்காக லெட்டர் வீடுதேடிவந்தது.ஊரிலோ வீட்டிலோ அல்லது வேறு எங்கும் தலைமைத்துவப்பயிற்சிக்காக லெட்டர் வந்திட்டுதா என்று யாருமே வாய்தவறிக்கூட கேட்டுவிடமாட்டார்கள்.சகலரும் கேட்பது"ஆர்மி ரெயிங்கிற்கு வந்திட்டுதா?" என்றுதான்.ஆரம்பத்தில் ரெயினிங்கைப்பற்றி எதுவுமே தெரியாதாகையால் ஆர்மி ரெயினிங்க் என்றதும் ஏ.கே 47 ஐ கையில் தருவார்கள்.டாங்கியில் ஏறியிருந்துகொண்டு அமெரிக்காவில் ஆர்மி ரெயினிங்கைப்பெறும் பாடசாலைமாணவர்கள் போல் டாங்கியில் ஏறியிருந்து பேஸ்புக்கில் ஒரு போட்டோவை போடலாம் என்று சின்னப்பிள்ளைத்தனமான கற்பனை செய்தால் ஏமாற்றம்தான்.ஆகவே சென்றவருடம் சென்றமாணவர்கள் ரெயினிங்கைப்பற்றிகூறியவற்றைகேட்டு நடக்கப்போவதை ஓரளவு புரிந்துகொள்ளவேண்டியதுதான்.ரெயினிங்கிற்கு மாணவன் தெரிவானதும் லெட்டர் வரும்.அதில் என்னென்ன பொருட்கள் கொண்டுவரவேண்டும் என்று ஒரு லிஸ்ட் போடப்பட்டிருக்கும்.
அந்த லிஸ்ட் இதுதான்....

கன்வஸ் ஷூ,2 ஜீன்ஸ்,புல்சிலீப் 2 ,பழைய யட்டியைக்கொண்டு செல்லமுடியாதாகையால் புதிதாக 4,5 வேண்டி செல்லவேண்டும்.எல்லாமாக சேர்த்து செலவு குறைந்தது 15 000 ரூபாவேண்டும்.இவளவும் செலவழித்து சகலவற்றையும் பக்செய்தபின்னர் நண்பர்களுடன் பயணம் ஆரம்பமானது.வேறு வேறு இடங்களில் தலைமைத்துவப்பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.எனக்கும் எனது நண்பர்களுக்கும் ரந்தெனிகலவில்தான் பயிற்சி.வா ஒண்ணாசேர்ந்து நாசமாய் போவம்னு பயணத்தை ஆரம்பிச்சாச்சு.பஸ் யாழ்ப்பாணத்தில இருந்து 6.30 க்கு புறப்பட்டது போய் 10.30 க்கு மதவாச்சிக்கு அருகில் உள்ள இக்கிரிக்கெலாவை என்ற இடத்தில் சாப்பிடுவதற்காகவும் இன்னபிறகருமங்களுக்காகவும் பஸ் நிறுத்தப்பட்டது.பஸ்பிரயாணம் எதிர்பார்ப்பு ஏப்படி இருந்தது ரியாலிட்டி எப்படி இருந்தது என்று அருகில் உள்ளமீம்ஸைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.ஆனால் அங்கிருந்துவரும்போது கண்ணுக்கு குளிர்ச்சியாகத்தான் இருந்தது. நேரே ரந்தெனிகலவில்தான் நான் போஸ்ட்டை நிறுத்தியிருக்கவேண்டும் ஆனால் இக்கிரியில் நிறுத்தியதற்குக்காரணம் இருக்கின்றது.பஸ் ஒரு கடையின் முன்னால் நின்றது சாப்பிடலாம் என்று ஒரு ரொட்டியின் விலையைக்கேட்டால் ஒரு ரொட்டி 50 ரூபா.கொய்ய்யாலே யாழ்ப்பாணத்திலே அதுவும் பாதம்பரியிலேயே 25 ரூபாதான்.என்ன செய்வதென்று யோசித்துவிட்டு வெறும் ரீயைமட்டும் குடித்துவிட்டேன்.உண்மையில் வடக்கில் இருந்து தெற்கிற்கு பஸ்ஸில் செல்லும் அனைத்துப்பயணிகளும் இதே பிரச்சனையை எதிர் நோக்குகின்றார்கள். நாம் பதிவு செய்து செல்லும் பஸ் நிறுவனத்துடன் இவ்வாறான கடை உரிமையாளர்கள் ஒப்பந்தம் செய்துவைத்துள்ளார்கள்.அதாவது இடையில் எங்கேயாவது சாப்பாட்டுக்கு,வேறு அவசரத்திற்கு பஸ்ஸை நிறுத்தவேண்டும். எனது கடையில் பஸ்ஸை நிறுத்தினால் இவளவுபணம் தருவேன் என்பதுதான் ஒப்பந்தம்.பஸ்ஸில் செல்லும் பிரயாணிகளுக்கு வேறு சொயிஸ்கிடையாது அதே கடையில் சாப்பிடவேண்டியதுதான்.

கடைக்காரனிற்கும் பிரயாணிகள் அனைவரும் ஒரு நாள் வாடிக்கையாளர் மட்டுமே எனவே உணவின் தரத்தைப்பற்றியோ விலையைப்பற்றியோ அவன் கவலைப்படத்தேவையில்லை.ஒரு சோடாவின் விலை 90 ரூபா.ஆனால் விற்கும் விலை 100 ரூபா ஏன் என்று கேட்டதற்கு கூல்செய்வதற்கு 10 ரூபாவாம்.ஒருவேளை அந்த ஏரியாவிற்கே அவன்தான்  பில் கட்டுகின்றானோ என்று கடுப்பாகின்றது.போத்தலிலே விற்கக்கூடிய அதிகபட்சவிலை 90 என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.கூல் பண்ண அவளவு செலவா என்று கேட்க (நக்கலாக) முடிந்தால் கேஸ்போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினான்.ஒரு வேளை சிராணியே போய்ட்டாவாம் இவன்யாரு புடுங்க என்று யோசித்தானோ என்னவோ?பேசாமல் வந்துவிட்டேன்.


பஸ்அண்ணளவாக  காலை 5.30 க்கு ரந்தெனிகல பயிற்சிப்பாசறையை சென்றடைந்தது.போனதும் ஒருவர் வந்து பக்கத்தில் இருக்கும் ரூம்களில் தங்குமாறு கூறினார் காலையில்  அனைவருக்கும் ரீ வரும் என்றும் கூறினார். மதியம்ஆனதும் அனைவரையும் காம்பின் கிரவுண்டிற்கு வரும்படி அழைத்தார்கள் பதிவு செய்வதற்காக.அது ஒரு வழக்கமான போமாக இருக்கவில்லை.ஆக வீட்டில் இருக்கும் நாயைப்பற்றி மட்டும்தான் கேட்கவில்லை ஏனைய அனைத்தையுமே கேட்டிருந்தார்கள்.பெற்றோரின் வேலை,தொலைபேசி,வீட்டின் அருகில் இருக்கும் பொலீஸ்ரேசன்,வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவில் தெரிந்த 2 அரச உத்தியோகத்தர்களின் பெயர்கள் போன் நம்பர்கள் என்று 4 பக்கத்திற்கு கேள்விகள் அடுக்கப்பட்டிருந்தன.ஆண்கள் பெண்கள்(சிங்கள,தமிழ்,முஸ்லீம்) என அண்ணளவாக 800 பேர் வந்திருந்தோம் அனைவருக்கும் இந்த பதிதல் நடந்தது.பதிவு முடிந்ததும் ரக் சூட் 2,2 ரீசேர்ட்களும் தந்தார்கள் இலவசமாகத்தான்.காம்பில் எல்லாமே இலவசம்தான்.அந்த ரீசேர்ட்டில் பியூச்சர் லீடேர்ஸ் என்று எழுதப்பட்டிருந்தது.எல்லாம் முடிய.குரூப் குரூப்பாக பிரித்தார்கள்.ஒரு குறூப்பில் கட்டாயம் சிங்கள,தமிழ் மாணவர்கள் இருக்கவேண்டும்,சிங்களம் தனியவோ தமிழ் தனியாகவோ ஒரு குரூப் இருக்கமுடியாது.அப்படியானால் முஸ்லீம்? ஒட்டு மொத்தமாக அனைத்துமுஸ்லீமக்ளையும் தனியான ஒரு பவிலியனில் தங்கவைத்துவிட்டார்கள் இது காம்பில் இருப்போர் அவர்களாக எடுத்த முடிவல்ல.முஸ்லீம் மாணவர்களே தமக்கு தனியாக இடம் வேண்டும் என்று எழுதிக்கொடுத்திருக்கின்றார்கள்.தொழுகை செய்வதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காக ஒதுக்கப்பட்டதாம்.

எமது குறூப்பில் 4 தமிழ் 5 சிங்களம்,அவர்களை சந்தித்ததும் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் கதைக்க ஆரம்பித்தோம்.ஆங்கிலத்தில் பேசுவதற்கு வாய்ப்புக்கள் கிடைக்காமையால் மிகவும் கஸ்ரப்படவேண்டியாகிவிட்டது அவர்களுக்கும் அதே நிலைதான்.எமக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஒரு சிறிய வீடு ஹோலில் 5 டபிள் பெட்கள் ஹோல் சிறிய கோல்தான். நாம்தான் இறுதியாக சென்றவர்கள் என்பதால் இடம் கிடைக்காது போனது.அதோடு அந்த ஹோலில் தங்கினால் மூச்சுவாங்கக்கடினமோ என்றும் தோன்றியது.அந்த வீட்டிற்கு அருகாமையில் அதேபோன்றதொரு சிறிய வீடு(pavillion) பிறீயாகத்தான் இருந்தது.உடனே அங்கே போய் எமது உடமைகளைவைத்துவிட்டோம்.அங்கு யாரும் இல்லை.பின்புதான் சொன்னார்கள் அது அடுத்த குரூப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம் என்று.ஓடிச்சென்று எமது குறூப்பிற்குப்பொறுப்பான கொமாண்டரிடம் நிலமையை சிங்கள மாணவர்களைக்கொண்டு விளக்கி இறுதியில் ரூம் கிடைத்தது.உண்மையில் அந்த வீட்டில் இருக்கவேண்டாம் என வேறுலெப்டினல்கள் கூற மாறி மாறி 2பவிலியனுக்கும் அலையவேண்டியதாக இருந்தது.ஒரு வழியாக ரூம் கிடைத்தது.

அந்த நாள் இரவில் சிங்கள  நண்பர்களுடன் எம்மை அறிமுகப்படுத்துக்கொண்டோம்.முதல் முதலில் பெயரைக்கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளல் கடினமாக இருந்தது.அதைவிட ஒரே பெயரில் எமது pavillionனிலேயே 3 நண்பர்கள் இருந்தார்கள்.அடுத்த நாள் காலையில் பொதுக்கூட்டமொன்றில் இனிதொடர்ந்துவரும் நாட்களில் நாம் நேரகிரமத்தின்படி என்னென்ன செய்யவேண்டும் என்றுகூறினார்கள்.பெயரைப்பதிவு செய்யும்போது ஒரு புத்தகம்தந்தார்கள் அதில் நேர அட்டவணை தரப்பட்டிருந்தது.

அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கவேண்டும்(எதுக்கு நாம மூச்சா போகவா?) இதுவரை அதிகாலை 4 மணியை கடிகாரத்தில்காணாத என்னைப்போன்ற ஜீவன்களுக்கு விழுந்த முதலாவது பேரிடி அதுதான்.அடுத்து 5 மணிக்குள் முகச்சவரம் எல்லாம் செய்து காலை 6 மணிக்கு மைதானத்தில் அனைவரும் சமூகம்தரவேண்டும்"சிறீலங்கா மாதா அபி சிறீலங்கா நமோ நமோ நமோ மாதா" தேசியகீதம் பாடுவதற்கு.சரின்னு அடுத்த நாள் காலை 4 மணிக்கு எழுந்தோம்.குளிர்வேற ஜில்லின்னு இருந்திச்சு அதோட குளிக்கவேண்டியதாயிற்று.நாம் குளித்தோம் ஆனால் சிங்கள நண்பர்கள் குளிக்கவே இல்லை.என்னடா கொடுமைன்னு பார்த்தா அவர்கள் இரவில்தான் குளிப்பார்களாம் ஓகோ..காலில் ஸூ அவர்கள் தந்த ரக்சூட்,பியூச்சர் லீடேர்ஸ் பொறித்த வெள்ளை ரீசேர்ட்டுடன்
காலை 6 மணிக்கு சிறீலங்காதாயே பாடிவிட்டு எம்மை அப்படியே வீதிக்கு அழைத்துசென்றார்கள்.சுற்றிவர மலைதான்.வீதி ஏறி இறங்கி அதுபாட்டுக்குசென்றுகொண்டிருந்தது.அனைவரும் லைனில் சென்றோம்.சிறிது தூரம் நடத்தி சென்றார்கள் பின்னர்.ஓடுமாறு கூறினார்கள் மலையில் உள்ள வீதியாயிற்றே மூச்சிரைக்க ஓடினோம்.பயிற்சிகள் ஆரம்பம் கையைத்தூக்கிக்கொண்டு ஓடினோம் இடையில் நடந்தோம் துள்ளினோம்.காலையில் பயிற்சிசெய்தல் ஆனந்தம்தான்.ஆனால் ஸூவேறு காலைக்கடித்துக்கொண்டிருந்தது.சகல் குறூப்களிலும் பெண்களும் கூடவே இருப்பார்கள் சோ பெண்களும் சேர்ந்துதன் பயிற்சிகளை செய்துகொண்டிருப்பார்கள்.ஆகவே உற்சாகமாக அனைத்து ஆண்களும் பயிற்சிகளை செய்தோம்(எவளவு நேரம்தான்  நானும் களைக்காதமாதிரியே நடிக்கிறது?).பயிற்சி முடிந்ததும் மெஸ்ஸிற்கு உணவிற்காக செல்லுமாறு கூறினார்கள்.வரும்போது பிளேட் கொண்டுவர சொன்னார்கள் இல்லையா.ஆகவே மெஸ்ஸில் போய் லைனாக ஒரு கையில் கோப்பை மறுகையில் கப்புடன் நின்றோம் சாப்பாட்டிற்காக.எல்லாம் செல்ப்சேர்விஸில்தான் .அதுசரி காலைசாப்பாடு என்னவென்று நினைக்கின்றீர்கள் சோறு.வழக்கமாக மதியம் சோறுசாப்பிடுவதே எனக்கு சற்றுகடினமானவிடயம் அங்கே பலவேளைகளில் 3 வேளையும் சோறுதான் போடுவார்கள்.கறி ஒரு அண்டாவில் கோழிக்குழம்பு அல்லது மீன் குழம்பு வெஜிரேரியனுக்காக தக்காளிசம்பல் செய்துவைத்திருந்தார்கள்.எனக்கு மச்சம் அவளவு பழக்கமில்லை "சைவமும் தமிழும் ஓங்கும்" அதெல்லாம் ஓங்கட்டும் என்று கோழிக்குழம்பை போட்டு சாப்பிட்டுப்பார்த்தேன்...ம்ம்ம்ம் நன்றாகத்தான் இருந்தது.கோழிக்குழம்புடன் உருளைக்கிழங்குபோல் ஒரு கிழங்கில் கறிவைத்திருந்தார்கள்.உணவில் சிங்கள வாடைதான் அடித்தது என்றாலும் அதுவும் ஒரு புதிய அனுபவம்தானே.அதோடு மீன்சம்பல் போன்றதொரு சம்பல் மிகரேஸ்ராக இருந்தது.ஆனால் வெறுப்பேத்திய ஒரு கறியும் இருந்தது.அன்னாசியை வெட்டி உறைப்புக்கறிசெய்திருந்தார்கள் உருளைக்கிழங்கு என்று நம்பி அதைவாய்க்குள்போட்டபோது.வாயினுள் சென்றதும் உறைத்தது கடித்ததும் இனித்தது சத்தியே வந்துவிடும்போல் இருந்தது.சிங்கள நண்பர்களைக்கேட்டதில் அவர்களது சைட்டில் அது பிரபலமான உணவாம்.சாப்பாட்டைப்பொறுத்தவரை 3 வகை கறிகள்.கோழி/மீன் குழம்பு,பயற்றங்காய் கறி,மீன்சம்பல் பலவேளைகளில் சோறு.ஒருசில நாட்களில் காலை உணவாக பாண் தந்தார்கள் அரைறாத்தல்பாண் பாணும் இல்லையானால் கடலை/சுண்டல்.இவ்வாறு தரப்படும் உணவுடன் அப்பிள் அல்லது ஒரு யோகட்டும் தருவார்கள்.ஆரம்பத்தில் வழமையான உணவை விட அவர்களது உணவு வித்தியாசமான ஸ்ரைலாக இருந்ததால் பிடித்துக்கொண்டது போகபோக வெறுத்துவிட்டது மொத்தமாக 14 நாட்கள் அங்கே இருந்தோம்5,6 நாட்களில் வீட்டுச்சாப்பாடு நினைவுக்கு வந்தது.அம்மா சுடும் ஓட்டை இல்லாத உழுந்துவடையை ஆராய்ச்சிசெய்து அம்மாவை அடிக்கடி நகைச்சுவையாக இமிட்டேட் பண்ணும்போது அம்மா சொல்லுவார் வர்ரவளின்ர சமயலை சாப்பிடும்போது தெரியுமென்று ஆனால் அவளவு காலம் இடம்கொடுக்காமல் வெறும் 14 நாட்களில் வீட்டுச்சாப்பாட்டின் அருமை புரிந்துவிட்டது வேறுகதை.4,5 நாட்களின்  பின்னர் காம்பிற்கு வெளியில் 3 கடைகள் இருந்ததை அறிந்துகொண்டோம்.அத்தனையும் சாப்பாட்டுக்கடைதான்.அதில் ஒருகடையை ஒரு இராணுவவீரர் வைத்திருந்தார்.அங்கு ரொட்டி நன்றாக இருந்தது.மில்ரி ரொட்டி இல்லையா காய்ந்துபோய் இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும்.ஒரே ஒரு நாள் அங்கே சாப்பிடும்போது நாவில் வேலைசெய்யமறந்த அனைத்து நரம்புகளும் வேலைசெய்ய ஆரம்பித்ததை உணரமுடிந்தது.எமது ரூமிற்கு வந்து ரொட்டி என்றால் அதுதான்யா என்று ஓகோ  என்று வாய்தவறிப்புகழ்ந்துகதைத்துவிட்டோம்.இதே போல் வேறு சில நண்பர்களும் அவர்களது ரூம்களில் கதைத்துவிட.மெஸ் சாப்பாட்டின் மீதிருந்த கடுப்பின் காரணமாக அத்தனை பேரும் படைஎடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.வழக்கமாக நாம் செல்லும் ரைமில் சென்று ரொட்டியை கேட்டால் ரொட்டி நா என்று பதில்வந்தது.ரொட்டி நாய் என்றால் சம்பல் பூனையா? இல்லைடா ரொட்டி இல்லையாம்.சோ  ரொட்டிக்கான ஓட்டம் தொடங்கியது.வழக்கமாக லெக்ஸர் 4.30 போல் முடியும் அப்போது விழுந்தடித்து ரொட்டிக்காக ஓடினோம்.முந்திக்கொண்ட குழுவுக்கு ரொட்டிகிடைத்தது.

பெரியஹோல்தான் மெஸ் அங்குபோடப்பட்டிருக்கும் கதிரைகளில் அமர்ந்து எமக்குத்தரப்பட்ட உணவை உண்டுமுடித்தோம்.பின்னர் ஒவ்வொரு குழுவையும் தனித்தனியாக அழைத்துசென்று லெக்ஸர் செய்தார்கள்.ஒவ்வொரு குழுவுக்கும் வேறுவேறு பயிற்சிகள்.ஒரு குழு யோகாசனத்திற்கு சென்றுவிட்டது.ஒரு குழுவுக்கு லெக்ஸர்.முதலில் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்தினார்கள்.எமது பயிற்றுவிப்பாளர்கள் அனைவரும் இராணுவ சீருடையிலேயே இருந்தார்கள் ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருந்தாலும் போக போக இராணுவ சீருடை பழகிவிட்டது.மேஜர்.லெப்டினல்,கோப்ரல்கள் எல்லோரும் எம்முடன் பிறண்ட்லியாகவே பழகினார்கள்.அங்கே லெப்டினல்,கோப்ரலாக இருந்த பலருக்கு சிங்களம்மட்டுமே தெரிந்திருந்தது ஆங்கிலமோ தமிழோ தெரியவில்லை ஆகையால் 2 ரான்சிலேட்டர்கள் இருந்தார்கள். சிங்களத்தில் கதைப்பதை தமிழில் ரான்சிலேட்செய்வதற்கு.

இதுவரை ஹோஸ்ரல் லைபை அனுபவித்தது கிடையாது.எனவே ஒரே அறையில் 3 நண்பர்களுடனும் அந்த சிறிய வீட்டில் வேறு சிங்கள நண்பர்களுடன் ஒன்றாக இருந்தமை புதிய அனுபவம்தான்.பயிற்சியின் இறுதியில் மேஜேர்.ஜென்றல் கூறினார் இதுவரை எந்த ஒரு சிறியவிடயத்திற்கும் உங்கள் பெற்றோரை மட்டும் நம்பியிருந்த அவர்களில் மட்டுமே தங்கியிருந்த நீங்கள் இங்குவந்த 14 நாட்களில் உங்களை நீங்களே சகல விடயங்களிலும் பராமரிப்பதற்கு பயிற்றுவித்திருக்கின்றோம்...என்றார்,முற்றிலும் உண்மையான ஒரு விடயம். எம்மோடு வந்த சில அல்லது பல மாணவர்களின் வீட்டில் இந்த பயிற்சிக்கு பங்குபற்றாதவரை அவர்கள் சாப்பிட்டுவிட்டு கோப்பைகளை  கழுவாமல் சிங்கிலே போட்டுவிட்டு வருபவர்களாகவோ...தமது உடைகளை துவைக்கும் பொறுப்பை தாயிடமே விட்டுவிடுபவர்களாகவோ தமது சூக்களை தாமே துடைக்க,சுத்தம் செய்யாதவர்களாகவோ இருந்திருக்ககூடும்.ஆனால் பயிற்சி நிலையத்துக்குள் அந்தக்கதை எல்லாம் எடுபடாது.நீங்கள்தான் பல் விளக்கவேண்டும்.டி.வி பார்த்துக்கொண்டு சாப்பிடமுடியாது சாப்பிட்ட அரைவாசியில் வரும் காதலியின் மிஸ்கோலைக்கண்டு பதறியடித்துக்கொண்டு  சாப்பிட்டகுறையில் விரலைச்சூப்பிக்கொண்டு கோப்பையை போட்டுவிட்டு ஓடமுடியாது காரணம் கவரேஜும் இல்லை.
சோ ஒரு தனி நபராக நீங்கள் செய்யவேண்டிய அனைத்தையுமே நீங்கள்தான் செய்யவேண்டும் எந்த உதவியும் உங்களுக்குக்கிடைக்காது.

எமக்கு சிங்களம் அவளவாகத்தெரியாது.ஆகவே தட்டுத்தடுமாறி தமிழில் கதைக்கும் சிங்கள நண்பன் ஒருவன் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.அவன் பெயர் பிறின்ஸ்.போன 2 ஆவது நாளே சிங்களம் சிறிது சிறிதாக படிக்க ஆரம்பித்தோம் எல்லாம் வாய் வழியாகத்தான்.கூட வந்த வேறொரு நண்பன் நோட்புக்கில் வார்த்தைகளை எழுதிவைத்துகொண்டான்.அதிலும் பிறின்ஸ் என்ற சிங்கள நண்பன் தமிழ்கற்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தமிழ்ப்படம் பார்க்கின்றான்.. நான் மிகைப்படுத்தவில்லை உண்மை.அவர்களை வெற்றிகரமாக சென்றடைந்த ஹீரோ விஜய்தான்.விஜயின் பாடல்கள்தான் அவர்களிடம் மிகவும் பிரபலம்.எதை முதல் முதலில் சிங்களத்தில் அங்கே படித்தோமென்று நினைக்கின்றீர்கள்?தமிழ் கெட்டவார்த்தைகள்.உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளுக்குமான சிங்களம் அங்கே எமக்குக்கற்பிக்கப்பட்டது. நல்ல ஆரம்பம் ஹி ஹி.சிங்களத்தில் எது தெரியாமலும் இருக்கலாம் ஆனால் எவனாவது பப்பிளிக்காக போட்டுத்தாக்கினால் எம்மைபேசுகின்றானா அல்லது ஏதாவது கேட்கின்றானா என்று புரியவேண்டாம்?அதனால்தான் அந்த மூச்சுப்பயிற்சி.ஏதோ அதைத்தாண்டியும் சில பல வார்த்தைகளைக்கற்றுக்கொண்டோம்.சிங்களம் அறவே தெரியாத தமிழ் மாணவர்கள்,தமிழ் அறவே தெரியாத சிங்கள நண்பர்கள் அங்கு தாராளமாகவே இருந்தோம் இதனால் குரூப் அக்டிவிட்டியின் இடையிலான இடைவேளை மிக மகிழ்ச்சியாக சென்றது.காரணம் இதுதான் சிங்கள மாணவர்கள் ஒரு கெட்டவார்த்தையை கூறி மற்ற சிங்கள நண்பர்களுக்கு கூறுமாறு கூறினான்.எனக்குத்தான் எதுவுமே தெரியாதே நானும் கேட்டேன் அவனது முகம் வெளிறிவிட்டது உடனே சிங்கள நண்பர்கள் எக்காளமிட்டு சிரித்தார்கள்.அவனுக்கு புரிந்துவிட்டது அவனும் சிரித்தான் பின்னர் அதன் அர்த்தத்தைக்கேட்டு நானும் சிரித்தேன்.விடுவோமா அதேவேலையை அவர்களுக்கு நாங்களும் செய்தோம் பன்னாக கழிந்தது  அப்படியான நாட்கள்.

ஆர்மி ரெயினிங்க் 3 கட்டங்களாக நடைபெறுகின்றது. நாம் 2 ஆவது பச் சோ முதலில் சென்று அனுபவப்பட்ட நண்பர்கள் சில பல டிப்ஸ்தந்தார்கள். பெண்களிடம் போன் நம்பர் வாங்குவது எப்படி? இறுதி நாளில் சிங்கள,தமிழ்(எல்லாரும் தரமாட்டங்க) பெண்களிடமிருந்து ஓட்டோக்கிராப் வாங்கமுடியும் இலையாக இருந்தாயே சருகாக உதிர்ந்தாயே பாணியில் எதையாவது கிறுக்கிவிட்டு இறுதியில் இப்படிக்கு என்பதுடன் பேஸ்புக் ஐடி,நம்பரும் கிடைக்கும் என்ற செய்தி ஆரம்பத்தில் கேட்டதும் இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே.ஆனால் ஒன்று அதற்கு  பெண்களுடன் நன்றாக பழகவேண்டும்.எது பழகுறதா போய்தைரியமாக கதைத்தாலே பெரியவிஸயம் என்றபயம் ஒரு மூலையில் இருந்துகொண்டுதான் இருந்தது.

காம்பிற்குள்ளேயே ஒரு கண்டீன் இருந்தது.பொருட்களுக்கு அவற்றின் கம்பனி அரச சட்டங்களின் அடிப்படையில் பொறிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச உயர்ந்தவிலையாகிய மிகக்குறைந்தவிலைக்கு பொருட்களை அங்குவாங்க முடியும் ஏனெனில் விற்பதும் இராணுவம் ஏதாவது கோக்குமாக்குவிட்டால் கணக்குக்காட்டவேண்டுமாம்.அந்தக்கண்டீனுக்கு முன்னால்தான் அனைத்துமாணவர்களும் நேரம்கிடைக்கும்போதெல்லாம் அமர்ந்திருந்தோம்.வழக்கமாக நல்லூர் கந்தனிடம்  என்னைப்போன்ற பலர்/சிலர் செல்வது அங்கு கிடைக்கும் தாவணி பஞ்சாவி தரிசனத்திற்காக.முருகன் 2 வச்சிருக்கார் எனக்கு ஒன்னுகூட வாய்க்கல சரி கண்குளிர காட்சியாவது கிடைக்குமேன்னு பிரன்ஸிகூட சுத்தவேண்டியதுதான்.பக்தன்கூட 3 தடவை வலம்சுழியாகத்தான் சுத்துவான்.ஆனா நாம சிக்ஸாக்கா சுத்துவம்.சந்து பொந்து மூலை முடக்கு என அனைத்துஇடங்களிலும் இருந்து வரும் பெண்களையும் பார்க்கும்வாய்ப்பு வருடத்திற்கு 7 நாட்கள்.அந்த 7 நாட்கள் ஊகும்...சொர்க்கமேதான்.அண்ணளவாக அதே பீலிங்கை அந்த கண்டீனும் எமக்குத்தந்தது என்றுதான் கூறவேண்டும் தமிழ் என்பதுடன் நின்றுவிடாது சிங்களப்பெண்களும் வந்திருந்தார்கள். அந்தக்கூர்மையான அறிவிருக்கே சப்பா என்னபோட்டுவளத்தாங்களோ(மிக புத்திசாலிகள் என்று சொல்லவந்தேன்).அக்கரைக்கு இக்கரை பச்சைஎன்ற அர்த்தத்தில் சிங்களமாணவர்கள் ஏதோ காதில் ஓதினார்கள்.

ஒரு நாள் மாலைபொழுதில் 2,3 பட் 2 புட்போல்களைத்தந்து போய் விளையாடுங்கள் என்று எமது குரூப்பை கட்டவிழ்த்துவிட்டுவிட்டார்கள்,வழக்கமாக நடப்பதுபோல் பெண்களுக்கு வொலிபோல்.அப்போது ஒரு சிங்கள மாணவன் வந்து கேட்டான்..ஐ வோண்ற் ரு ரோல்க் வித் தமிழ் கேர்ஸ் பற் தே டோண்ற் ரிப்பிளே அஸ் மோஸ்ட் ஒப் த ரைம் வை? ஏது வையா அடபோய்யா அவனவன் பின்னால 4,5 வரிசமா திரிஞ்சே யாழ்ப்பாணப்பெட்டையள் கதைக்கிறாளவ இல்ல நீவேற(இல்லை நாயே நீ சொல்லுறது போனமாசம்னு நீங்க சொன்னா சாரி) பேசினாலேகற்புப்போடும் எண்டு நினைக்கிறாளவயோ என்னவோ? உணர்ச்சிவசப்பட்டு நான் தமிழில் அவனைப்பேச அவனுக்கு நான் பேசுவது விளங்கவில்லை ஆனால் சுற்றி நின்ற தமிழ் நண்பர்கள் கொல் என்று சிரித்துவிட்டார்கள்.பிறகு ஓரளவு ஆங்கிலத்தில் விளங்கப்படுத்தினேன் உங்களுக்கு மாத்திரமில்லைசாமி எங்களோடயும் அவையள் கதைக்கிறதுக்கு கஸ்ரப்படுவினம் சமூகம் அப்படி ஆக்கிடிச்சு என்று.ஆனால் வேறு மொழி கதைப்போரிடம் நம்பிபேசுவார்கள் என்றேன்.சரி என்று போய் விட்டான்.ஆனால் சிங்கள கேர்ல்ஸ் அப்படியல்ல போய் கதைத்தால் கதைப்பார்கள் என்று கூறிசென்றான்.ஓகோ மர்ச்சுவேர்ட்டான ஆக்கள் போல.சோ கதைப்பதற்கு ஒரு தைரியம்வந்ததுபோல்தான் இருந்தது.

சரி என்று ஒரு சிங்கள கேர்லிடம் கண்டீனில் வைத்து பேச்சுக்கொடுத்தேன்.அவளும் கதைத்தாள்..முதலில் போய்க்கதைத்ததும் முஸ்லீமா என்று கேட்டுவிட்டாள்..பின்னர்தான் தமிழ் என்றேன்.வற் இஸ் யுவர் நேம்?வட் ஸ் யுவர் ஸ்ரீம்? என்பதைத்தவிர வேறுஎன்ன கதைப்பது என்றுபுரியவில்லை.எப்படித்தான் பசங்க கடலைபோடுறாங்களென்றே தெரியலப்பா.( நான் அப்பவிங்கோ)பிறகு அவளாக கதையைத்தொடக்க எனக்குப்பின்னால ரண்டு சனிவந்து நின்னிச்சு.சனி என்று செல்லமாகத்தான் கூறுவதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஆர்மி ரெயினிங்கில் மேல் கூறியது போல் லொள்ளாக கிளுகிளுப்பாக நடந்ததைத்தவிர சீரியஸ்ஸான வாழ்க்கைக்குத்தேவையான பல விடயங்களை,தகவல்களைப்பெறமுடிந்தது.அதில் ஒன்றுதான் புதிய நட்பு,பழகிய 10 நாட்களிலேயே பலருடன் நெருங்கிப்பழகமுடிந்தது. கீத்தன்,வாகீசன் என்ற இருவரும் எனக்குக்கிடைத்த புதிய குளோஸ் நண்பர்கள்.அந்த ரண்டும்தான்  நான் கூறிய அந்த இரண்டு சனி.அவளுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போது எனக்குப்பின்னால் வந்து.மாமா ஐஸ்கிரீம் ஓனத என்றார்கள்.பின்பு மல்கடுனவா எப்பா என்றார்கள்  என்றார்கள்.பாவிகள் அரைகுறைசிங்களத்தில் சொன்னால் அவளுக்குவிளங்காதோ என்று நான் நினைக்க தெளிவாக ஆங்கிலத்தில் அங்கிள் வீவோன்ற் ஐஸ்கிரீம் என்று பெரிய ஆப்பொன்றை தூக்கிவைத்தார்கள்.ம்ம் அவள் சிரித்துவிட்டாள்..புரிந்துவிட்டது என்ன செய்வது பல்ப்பு வாங்கியது வாங்கியதுதான்.அன்றைய நாள் அதைவிட இனிமையான நாளாக அமையாது என்பதை புரிந்துகொண்டு பாய் சொல்லிவிட்டு எஸ்ஸாகிவிட்டேன்.அட நாம பல்புவாங்கிறதெல்லாம் சாதாரணமப்பா..ஹரிபொற்றர் ஓல்ஸோ டீல் த சேம் புரோப்பளம் ஒன் திஸ் சப்ரர்...என்னென்ன பயிற்சிகள் வழங்கப்பட்டது எப்படியெல்லாம் வதைத்தார்கள் நொந்துகொண்டதும் நோகாததும் அடுத்த பதிவில்..

No comments:

Post a Comment