Saturday, 23 February 2013

ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-02(பாலியல் கல்வி)


அந்த ரெயினிங்கில் தந்த பயிற்சிகளை ஓரளவிற்குக்கூறினேன் காலையில் தேசிய கீதம் பாடிவிட்டு.மலை வீதிகளில் ஓடினோம் வழக்கமாக பாடசாலைகளில் கொடுக்கப்படும் பயிற்சிகளே கொடுக்கப்பட்டன.என்றாலும் மலைவீதிகளில் ஓடுவது ஒன்றும் அவளவு இலகுவாக இருக்கவில்லை.ஓடி முடித்ததும் காலை சாப்பாடு பெரும்பாலும் சோறுகிடைத்தது அல்லது அரை றாத்தல் பாண் சகல்தும் முடிந்ததும்.ஒவ்வொரு குரூப்பிற்கும் வேறு வேறு இடங்களில் லெக்ஸர் நடந்தது.எமது குழுவிற்குப்பொறுப்பான அதிகாரியிம் முதல் நாள் லெக்ஸர்...அவர் சிங்களத்தில் கூற எங்களுக்கு ரான்சிலேட் செய்யப்பட்டது..இங்கே வரும்போது  நீங்கள் பெற்றோர் எல்லோருமே சற்று பயந்துகொண்டுதான் வந்திருப்பீர்கள்.பலருக்கு இதுதான் பெற்றோரைப்பிரிந்து வெளியே 10,14 நாட்களைக்கழிக்கும் முதலாவது அனுபவமாகக்கூட இருந்திருக்கும்.ஆனால் எதற்கும் பயப்படவேண்டாம் நாம் உங்களை எமது பிள்ளைகள் மாதிரித்தான் பார்த்துக்கொள்வோம். என்று கூறினார்.பின்னர் ஜென்ரல் கோப்ரல்,லெப்டினல் என்று பதவிகளின் ஓடர்களை கூறினார்கள்.அவர்களுக்கிடையிலான வேறுபாடு இராணுவ உடைகளில் உள்ள அரச இலச்சனைகள் என்பவை தொடர்பான விளக்கமும் அளிக்கப்பட்டது.அங்கு 3 மொழிகளையும் கதைக்கக்கூடிய பெண் ஒருவர் இருந்ததால் ரான்சிலேட்டர்கள் இல்லாத  நேரத்தில் அவர்தான் ரான்சிலேட்டராக உதவி செய்தார்.


எமக்கு மொத்தமாக 6 விரிவுரைகள் நடாத்தப்பட்டன.

1.முரண்பாட்டுமுகாமைத்துவம் 
2.உளரீதியான சிக்கல்களும் உளச்சிகிச்சையும்
3.சட்டம் மற்றும் மனித உரிமை
4.சமூகத்தின் பின்னோக்கியபயணமும் கட்டுப்பாடும்
5.சமூகவிழுமியங்கள்
6.விடுதிகள் பாவனை மற்றும் தனிப்பட்ட சுத்திகரிப்பு

சமூகவிழுமியங்கள் ஒரு வெள்ளிக்கிழமைதான்அந்த சம்பவம் நடந்தது.சமூக விழுமியங்கள் என்ற அந்தவிரிவுரையைப்பற்றித்தான் கூறுகின்றேன்.காலை சாப்பாடு முடிந்ததும் ஆன்மீகம் சம்பந்தமான விரிவுரை என்றார்கள் அனைவரது முகத்திலும் பீதி ஏது ஆன்மீகமா வேண்டாம் வேண்டாம்  எனக்கத்தியும் கதறக்கதற அழைத்துச்சென்று இருத்திவிட்டார்கள். ஆன்மீகப்பேச்சுக்கள் என்றால் பொதுவாகவே எம் வயதினருக்கு ஒரு மரணபீதி அடிமனதில் இருக்கவே செய்யும்.தரம் 6 இல் இருந்து ஓ.எல் வரை 16 வயதுவரை சம்பந்தர் அப்பர் என்று சகலவற்றையும் பாடமாக்கி எழுதி முடித்தாயிற்று என்றால் வருடா வருடம் கோவில் திருவிழாக்களில் ஒவ்வொரு பிரசங்கியும் தன்பாணியில் அக்கதையைப்போட்டுத்தாளித்து கதை பழையசாதம் ஆகியிருக்கும்.ஏதோ சு.கி சிவம் கடைசி தென்கச்சிக்கோ.சுவாமிநாதன் ,கிருபானந்தவாரியார் போல் பேசினால் கூடக்கேட்கலாம்  ஆனால்  நம்மவர்கள் ஒரே பாணிதான் பழைய ரேப் ரக்கோர்டர்..எக்ஸாம் எழுதும்போதும் அவர்களது ஸ்பீச்சைக்கேட்ட அனுபவம் உள்ளதாகையால் பயந்தோம்.பயந்ததுபோலவே நடந்தது.விழுமியங்கள் என்று பேச ஆரம்பித்தார் அந்த விரிவுரையாளர்.காலையில் அவளவு பயிற்சிகளை செய்து வியர்வை ஆறுவதற்குள் சாப்பிட்டுவிட்டு அப்படியே போய் பானிற்குக்கீழே அமர்ந்து விரிவுரையைக்கேட்டால் சொர்க்கம் தானாகவே தெரியும் நித்திரை அதிகமாகி ஒருவன் முன்னால் விழ நித்திரை வருகின்றதா என அவர் கேட்க அவனும் ஆம் என்றான்(வெளியே செல் என கூறுவார் என எதிர்பார்த்தான் போலும்) அவர் கூறினார் இப்படி வெளிப்படையாகக்கூறுவதும் ஒருவிழுமியம் என்று அத்துடன் அவன் தலையுடன் எங்கள்தலையும் சேர்ந்து தொங்கிவிட்டது.45 நிமிடத்திற்கு மேல் தாளித்தனுப்பினார் அவர்.இப்படித்தான் முடிந்தது அந்த விரிவுரை.


சட்டம் மற்றும் மனித உரிமை...என்னது மனித உரிமைபற்றி விரிவுரையான்னு கேட்டிடப்படாது.மனித உரைமைகள் தனி ஒரு மனிதனுக்கு இலங்கையில் என்னென்ன உரிமைகள் இருக்கின்றன.உரிமைகள்  எந்த ஆண்டுகளில் சட்டமாக்கப்பட்டன.உரிமை மீறப்பட்டால் யாரிடம் சென்று முறையிடவேண்டும் என்றெல்லாம் சிங்களத்தில் விரிவுரை செய்யப்பட்டது.அருகிலே ரான்சிலேட்டர் தமிழில் மொழிபெயர்த்தார். நான் மனிதஉரிமையை பாடப்புத்தகத்தில்தான் அதிகமாக படித்திருக்கின்றேன்.அதோடு கருத்துசுதந்திரம் 16 ஆம் சரத்து என்று அடிக்கடி சூரியன் எப்.எம்மில் போடுவார்கள் அவளவுதான்.


சமூகத்தின் பின்னோக்கியபயணமும் கட்டுப்பாடும்..இதுதான் என்ன இளவு என்றே புரியாமல் இருந்தது  வந்த  விரிவுரையாளர் சிங்களத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் நடத்திக்கொண்டிருந்தார்.அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றியெல்லாம் அந்த விரிவுரையாளர் சிங்களத்தில் பேசினார்.இடையில் எழும்பிச்சென்றால் வெளியில் நின்றவர்கள் பேசினார்கள் என்னசெய்வதென்று சிலர் மீண்டும் உள்ளே வந்தார்கள்.45 நிமிடம் முடிய மறுபடியும் முதலில் இருந்து தமிழ் ரான்சிலேட்டர் பேச ஆரம்பித்தார்.சீ என்று ஆகிவிட்டது. ஏதோ இடையில் நான் எழும்பி வந்துவிட்டேன் தலையிடிதான் முக்கியமான காரணம். ஒவ்வொரு லெக்ஸரும் ஒவ்வொரு நாட்கள்  நடைபெறும்.


விடுதிகள் பாவனை மற்றும் தனிப்பட்ட சுத்திகரிப்பு

இதில் எப்படி எமது ரூமை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று கூறினார்கள்.இராணுவம் அல்லவா எனவே அவர்களது முறை சற்றுவித்தியாசமாகத்தான் இருக்கும்.எமக்கு .ஒன்றுக்குமேல் ஒன்றாக உள்ள பெட் ஒன்றை எடுத்து அதைவைத்து பரிசோதனை போல் நேரடியாக விளக்கப்பட்டது தலையணை எப்படிவைக்கவேண்டும்  நித்திரையால் எழும்பியதும் பெட் சீட்டை அனைவரும் ஒரே பாணியில் மடித்துவைக்கவேண்டும்.பெட்டின் கீழே எமது பாதணிகள் பாக்குகளை வைக்கலாம் ஆனால் ஒவ்வொருவர் ஒவ்வொரு மூலையில் வைத்தால் எடுப்பதற்கு இலகுவாக இருக்கும் எனக்கூறினார்கள்.உடைகளைக்காயப்போடுவதற்கு கொடியில் இடம்போதாமையால். நான்களாகவே ஒரு கொடியை அமைத்தோம்.பின்னர் ஒரு பிரச்சனைவந்தது அனைவருக்கும் ஒரே பாணியில் உடைகள் தந்ததால் உடைகள் மாறுபட ஆரம்பித்தது அதனால் ரூமிற்குள் கயிறுகளைக்கட்டி உடைகளைப்போட்டோம்.முக்கியமாக அதைசெய்யவேண்டாம் என்று கூறினார்கள்,திடீர் என்று ஒரு நாள் ரூம் பார்க்கவருவோம்  ரூம் கிளீனாக வைத்திருப்பதற்கும்புள்ளிகள் உண்டு எனக்கூறிவிட்டார்கள்..
இதைவிட 5 ஸ்ரார் ஹோட்டல்களில் எப்படி உணவை உண்பது என்று ஒரு ஒத்திகை செய்துகாட்டினார் எமது குழுவுக்குப்பொறுப்பானவர்.
முள்கரண்டி மற்றும் உண்பதற்குத்தரப்படும் ஏனைய கரண்டிகளை எமக்கு இருபக்கமும் வைத்தால் சாப்பிட்டு முடிந்துவிட்டது என்று அர்த்தமாம்.வெயிட்டர் சொல்லாமல் கொள்ளாமல் பிளேட்டை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்.அதே போல் மேலும் கீழுமாக வைத்தால் சாப்பிட்டு முடியவில்லைஎன்று அர்த்தமாம்.ஒவ்வொரு வைன் குடிக்கும் கிளாஸ்கள்.செறிவுக்கேற்ப கிளாஸ்கள் வேறுபடும்விதம் என்பவைபற்றியும் கற்பிக்கப்பட்டது.

5 ஸ்ரார்  ஆவது பரவாயில்லை ஒரு இராணுவ இரவு போசன விருந்தில் எப்படி உண்ணவேண்டும் என்று கூறினார்கள்.ஹெஸ்ட் சாப்பிட இருக்கும்போது அனைவரும் இருக்கவேண்டும்.அவர் உண்ண ஆரம்பிக்கும்போது உண்ண ஆரம்பிக்கவேண்டும்.அவர் வைன் குடித்தால் குடிக்கவேண்டும்.அவர் குடித்து முடித்தால் எம்மிடம் மேலதிகமாக வைன் இருந்தாலும் குடிக்கக்கூடாது.சாப்பிட்டு எழுந்துசென்றால் சாப்பாட்டை நிறுத்தவேண்டியதுதான்.(என்ன கொடுமை சரவணா)

(எமக்கு நடக்கும் இச்செயற்பாடுதான் ஏனைய அனைத்துமாணவர்களுக்கும் நடக்கும்.எமக்கு விடயங்களைக்கற்பிப்பவர்கள் எமக்கு பொறுப்பானவர்கள் அனைவருமே இராணுவ சீருடையில்தான் இருந்தார்கள்.ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையின் வேறுவேறு பிரதேசங்களில் இருந்துவந்த ஆசிரியர்கள்.ஆசிரியர்களுக்கு பயிற்சிகொடுத்து  எம்மைப்போன்ற மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றார்கள்.என்னடா ஆர்மி இப்படி தமிழில் கதைக்கிறாரே என்ற ஆச்சரியத்தை இந்தடீட்டியல்தான் நீக்கியது.)

முரண்பாட்டுமுகாமைத்துவம்-மிகவும் பயனுள்ளதாக அமைந்தவிரிவுரை இதுதான்.கண்டீனுக்கு முன்னால் சகலதமிழ் மாணவர்களையும் ஒன்றுகூட சொன்னார்கள்.அனைவரும் வந்து அமர்ந்தோம் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் நீங்கள் கூறலாம் என்று  எமக்கு பொறுப்பாக இருந்த ஒரு லெப்டினல் கூறினார்.எமது கூட்டத்தில் இருந்து ஒருவன் எழும்பிக்கூறினான்.. "நாங்கள் கதைத்தால் கேர்ல்ஸ் திருப்பி கதைக்கினம் இல்லை" என்று.அனைவரும் சிரித்துவிட்டோம்.அதோடு அவன் ஒரு பெண்ணைக்காட்டிவிட்டான்.அவளவுதான் அந்தப்பெண் அழ ஆரம்பித்துவிட்டார். உடனே லெப்டினல் அவனுக்கு பேசினார் இப்படியா  பப்பிளிக்காக நடந்துகொள்வது? அந்தப்பெண்ணை ஏன் அடையாளம் காட்டினீர்கள்...பேசவில்லை என்பதுடன் நிறுத்தியிருக்கலாமே என்று பேசினார்.உடனே இன்னொருவன் எழும்பிக்கூறினான் லெப்டினலுக்கு சேர் நீங்கள் என் நண்பனிடம் மன்னிப்புக்கேட்கவேண்டும்...என்ன இருந்தாலும் நீங்கள் இப்படி பப்பிளிக்காய் என்ர பிறண்டை பேசியிருக்கக்கூடாது..அதால மன்னுப்புக்கேளுங்கள்...லெப்டினல்-அதாவது உங்கள் நண்பன் ஒரு பெண்ணை பப்பிளிக்காக கதைக்கவில்லை என்று அடையாளம்காட்டியது சரி அதற்கு அப்பெண் அழுவதும் சரி...  அதற்காக நான் பேசியது பிழையா? ஓம் சேர் என்னதான் இருந்தாலும் பப்பிளிக்கா என் பிறண்டை பேசியிருக்ககூடாது..எங்களுக்கு என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை சிறிது நேரம் அதிர்ச்சியாகிவிட்டது இங்கே என்னதான்யா நடக்குது?.. நாம் கூறினோம் நீ இருடா சேர் பேசினதில பிழையில்லை என கூற... நீங்கள் என்ன அவருக்கு வாழியாடா பொத்துங்கடா என்று கத்திவிட்டான் அவன்.. பின்னர் ஒருசிலர் எதிர்ப்புத்தெரிவிக்க..அப்படியே சலசலப்புத்தொடர்ந்தது..உடனே லெப்டினல் ஒரு குண்டைத்தூக்கிப்போட்டார் இவளவு நேரம் நடந்தது ஒரு  நாடகம். முன்னரே ஏற்பாடு செய்துதான் அந்த மாணவன் எழும்பிக்கேட்டிருக்கின்றான் அவள் என்னிடம் கதைக்கவில்லை என அதே போல் என் நண்பனிடம் மன்னிப்புக்கேட்கவேண்டும் என ஒருவன் எழும்பிக்கத்தியதும் ஏற்பாடாம்.ஆனால் அவற்றை அப்பெண்ணிடம் யாரும் முன்பேகூறவில்லை அதனால்தான் அழுதுவிட்டார்.ஏதோ பிரச்சனையாகியது சுமூகமாக முடிந்தது.

அதன்பின்னர் நமக்குள் முரண்பாடு ஏன் ஏற்படுகின்றது?எவ்வாறு அதைத்தவிர்த்துக்கொள்வது என்று கூறினார்.அதோடு பாலியல்கல்வியும் நடாத்தப்பட்டது.உண்மையில் பயனுள்ளபகுதி அதுதான்.இன்னமும் இந்தக்கல்விமுறை தொடர்பில் சமூகத்தில் மாற்றுக்கருத்துக்கள் இருந்துவருகின்றன.வெறும் சுகாதாரப்புத்தகத்தில் இருகும் உடலைப்பற்றிய அடிப்படைவிடயங்கள்பற்றிய தோலுரித்தல்மட்டும் இக்கல்வியில் போதுமானதல்ல என்பது பலருக்குபுரிந்தவிடயம்தான்.
அவர் கூறினார் இப்போதைய சமூகத்தில் மன நிலைபாதிப்படைந்தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள்.அவர்கள் மன நிலைபாதிப்படைந்தவர்களாக இருப்பதற்கு அவர்கள் காரணமல்ல.ஆனால் அவர்களிடமிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.முக்கியமாக பெண்கள்பாலியல் கொடுமையால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.சுற்றியிருக்கும் உறவுகளால்,ஆசிரியர்களால் ஏன் சொந்த தந்தையினால் கூட  பாலியல் தொந்தரவுக்குள்ளாகின்றார்கள் என்று கூறி அவருக்குத்தெரிந்த உதாரணங்கள் பல கூறினார்.ஒரு தடவை பாடசாலையில் இருக்கும் ஒரு மாணவிக்கு நடந்தவிடயம் இது.அவர் மிகவும் சுறுசுறுப்பானவர்,மிகத்திறமையான மாணவி ஆனால் போக போக அவர் மிகவும் சோகமடைந்துகாணப்பட்டார்,எடுக்கும் புள்ளிகள் மிக மோசமாகக்குறைந்தன முகம் மிக வித்தியாசமாக மாறத்தொடங்கியது.மாற்றத்தை அவதானித்த ஆசிரியர்கள் ஒன்றைக்கவனித்தார்கள்  அந்தப்பெண் வழக்கமாக காதுகளில் தோடு அணிபவர் இப்பொழுது அணிவதில்லை அதோடுகாதில் சிறு காயங்களும் காணப்பட்டன.விசாரித்ததில் தெரிந்தது குடித்துவிட்டு சொந்தத்தந்தையே அந்தப்பெண்ணை பாலியல் கொடுமைக்குள்ளாக்கியிருக்கின்றார்.அந்தப்பெண்ணுடன் உடலுறவுவைத்துக்கொள்ளும்போது காதைக்கடிப்பாராம் அதற்குத்தோடு தடையாக இருப்பதனால் தோடு அணியவேண்டாம் என்று கட்டளையிட்டிருக்கின்றார் அந்தத்தந்தை. பின்னர் அப்பெண் மீட்கப்பட்டார்.  சொந்தத்தந்தையால் நடத்தப்பட்ட கொடுமை.பாலியல் விருப்பம் என்பது அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒன்றுதான் ஆனால் அதற்கான எல்லைகளை நாம் புரிந்துவைத்திருக்கவேண்டும். இதன் பின்னர் ஜனாதிபதி ராஜபக்ஸ அவர்கள் ஒரு சட்டம் இயற்றினார்.வீட்டில் 18 வயதுக்குக்குறைந்த பெண்பிள்ளைகள் இருந்து தாய் வெளி நாடு சென்றால் அதற்கு சேர்ட்டிபிக்கட்வாங்கியபின்னரே வெளி நாடுசெல்லமுடியும் என்பதுதான் அது.

அவர் மேலும் கூறினார் தனக்குத்தெரிந்த ஒரு ஆசிரியர் வெளித்தோற்றத்திற்கு மிகவும் பண்பாகவும் நல்ல நடத்தையுடையவராகவும் காணப்பட்டார்.அவரது வீட்டைச்சுற்றி ஒரு சம்பவம் நடந்துகொண்டிருந்தது அவரது வீட்டின் அருகில் உள்ள பெண்களின் கொடியில் காயப்போடும் உள்ளாடைகள் அடிக்கடி காணமல்போயின.இறிதியில் அந்த ஆசிரியரின் வீட்டில் 163 உள்ளாடைகள் கைப்பற்றப்பட்டன.அவர் அவ் ஆடைகளை எடுத்து அவற்றை முகர்ந்து சுயஇன்பம் அனுபவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றார்.ஆரம்பத்தில் இது தவறு என்று அவர் உணர்ந்திருந்தாலும் அவரால் அதைக்கட்டுப்படுத்தமுடியாமல்போனது.பின்னர் அவர் மன நலமருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இவையெல்லாம் நீங்கள் அடிக்கடி கேள்விப்படும் செய்திகள்தான்.இன்று நீங்கள் மாணவர்கள்  நாளை நீங்கள்தான் சமூகம் எனவே விழிப்பாக இருக்கவேண்டும்.

ஓரினச்செயர்க்கை பற்றி அறிந்திருப்பீர்கள் இப்பொழுது அதுவும் சமூகத்தில் முக்கிய பிரச்சனைதான்.சிறியவயதில் பெற்றோரிடம் இருந்து சரியான அன்பைப்பெறாத பிள்ளைகள் தம் பாலினத்திலேயே அத்தகைய தேவையைப்பூர்த்துசெய்யமுயலுவதன் விளைவே இதன் ஆரம்பம்.பெண்கள் ஓரினச்செயற்கையில் ஈடுபட்டால் லெஸ்பியன் என்றுகூறுவார்கள் ஆண்கள் என்றால் கேய் என்று கூறுவார்கள்.இத்தகையக அனுபவத்தைப்பெற்ற ஆண்,பெண்ணுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லாது போகும்.பெற்றோருக்குவிடயம் எதுவும் தெரியாமல் அவர்களுக்கு திருமணம் செய்துவைத்துவிடுகிறார்கள் ஆனால் திருமணத்தின் பின்னரான எதிர்ப்பாலருடனான உடலுறவில் சிறிதும் நாட்டமில்லாது போவதால் அவர்களது திருமணவாழ்க்கையே கேள்விக்குறியாகின்றது எனக்கூறினார்.
அவர்கூறியவை எல்லாம் சரிதான் ஆனால் இங்கே ஆசியாவில் உள்ள நாடுகளில் ஓரினச்செயற்கையாளர்கள் தொடர்பிலான விடயங்கள் கண்டுகொள்ளப்பட்டதாக தெரியவில்லை.சில நாடுகளில் ஓரினச்செயற்கையாளர்களின் திருமணமே அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான்.ஆனால் இங்கு சமூக ரீதியாக அது குற்றமாகவே கருதப்படுகின்றது.

பெண்கள் வயதானவர்களால் அதிகமாக பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்றால்  வாலிப ஆண்களை குறிவைப்பவர்கள் ஆண்டிகள்.அவர்களிடமிருந்தும் நீங்கள் உங்களைப்பாதுக்காக்கவேண்டிய  கடற்பாட்டில் இருக்கின்றீர்கள் என்றார் அவர்.இப்படி பல சம்பவங்களை நாம் அன்றாடம் செய்திகளில் அவதானித்துவருகின்றோம்.சரி இப்படியான சந்தர்ப்பங்களில் இருந்து எவ்வாறு தப்புவது என்று கேட்டார் கேட்டுவிட்டு கூறினார் பிரபல ரஸ்யப்பழமொழி இருக்கின்றது சந்தர்ப்பத்தைக்கண்டால் ஓடிவிடு அதாவது தவறு செய்வதற்கான சந்தர்ப்பத்தைக்கண்டால் ஓடிவிடு என்பதுதான் அது. சந்தர்ப்பம் கிடைக்காதவரையில் நாம் எல்லோருமே நல்லவர்கள்தான் எனவே சந்தர்ப்பத்தைத்தவிர்த்துக்கொண்டாலே போதுமானது என்றார்.அண்ணளவாக 1.30 மணித்தியாலங்கள் விரிவுரை செய்திருப்பார் போரடிக்காமல் இருந்து கேட்கமுடிந்தது.எந்த ஒரு மேடைப்பேச்சையும் குறைந்தபட்சம் 20 நிமிடத்திற்கு மேல் அக்ரிவாக அவதானிக்கமுடியாது.ஆனால் அந்த லாஜிக்கே அவரது ஸ்பீச்சில் உடைந்தது என்றுதான் கூறவேண்டும்.கண்களை மூட சொன்னார். நீங்கள் உங்கள் வீட்டிற்கு திரும்பி செல்கின்றீர்கள் வாசலில் உங்கள் தாய் தந்தை உங்களை வரவேற்கின்றனர்.உங்கள் தாய் தந்தையின் கண்களில் கண்ணீர் உங்களை முதல் முதலில் பிரிந்திருக்கின்றார்கள்.உங்கள் தாய் அழுதுகொண்டு ஓடிவந்து உங்களை அணைத்துக்கொள்கின்றார்.உங்களை உச்சிமுகருகின்றார்.தந்தை உங்களை அரவணைத்துக்கொள்கின்றார்.இப்போது உங்கள் பெற்றோருடன் வீட்டுக்குள் நுழைகின்றீர்கள்.உங்களை சாப்பாட்டு மேசைக்கு அழைத்துச்செல்கின்றார் உங்களது தாயார் அங்கே உங்களுக்கு பிடித்த உணவு சமைத்துவைக்கப்பட்டிருக்கின்றது,தந்தையும் தாயும் உங்களுக்கு உணவுபரிமாறுகின்றனர் என்று கூறிமுடித்துவிட்டு கண்களைத்திறவுங்கள் என்று கூறினார்.வீட்டின் சிந்தனை இல்லாமல் 8 நாட்கள் வீட்டைப்பிரிந்திருந்தோம் திடீரென்று இப்படி  சகலவற்றையும் நினைவுபடுத்திவிட ஒரு மாதிரித்தான் ஆகிவிட்டது.விரிவுரையைக்கேட்டுக்கொண்டிருந்த அனேக பெண்கள் அழுதுவிட்டார்கள்.

தொடரும்...

No comments:

Post a Comment