Wednesday, 27 February 2013

மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா?

இன்னும் நாற்பது கடக்காத, வாசிப்புப் பழக்கம் உள்ள தமிழர்களுள் சுஜாதாவின் படைப்புக்களை வாசித்தறியாதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. தான் உச்சத்தில் இருந்த முப்பது வருட காலத்தின் அத்தனை இளம் எழுத்தாளர்களையும், வாசகர்களையும் வியந்து பார்க்கவைத்த எழுத்தாளர் சுஜாதா. அவர் இறந்து இத்தனை நாட்களின் பின்னரும் அவருக்கான வீச்சு குறையாதிருப்பது தமிழ் எழுத்துலகில் அதிசயமே. ஏனெனில், பல எழுத்தாளர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களை மறந்துவிடுவதுதான் தமிழர்களின் ஸ்டைல். உதாரணமாக, ஜெயகாந்தன் என்கிற தமிழ் இலக்கிய உலகின்... இலக்கிய உலகின் உச்சங்களில் ஒருவர் இருக்கிறாரா, இல்லையா என்பது பலருக்கு தெரியாது, அவர்களுக்கு தேவைப்படவும் இல்லை. ஆனால் சுஜாதா? இறந்த பிறகும் இரண்டு திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிறார்.

மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கை வாசிக்கலாம் என்று வந்தால் இது என்னப்பா ஆவணப்படம் மாதிரி போகிறது என்று முணுமுணுப்பது கேட்கிறது. சுஜாதா என்கிற பௌதீக மனிதரைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும், அல்லது எங்கே தெரிந்துகொள்ளலாம் என்பதாவது தெரிந்திருக்கும். இந்தப் பதிவு அவர் சம்பந்தப்பட்ட இருவேறு பார்வைகள் பற்றியது. என்னதான் இருந்தாலும் அந்த ஜோக்கை சொல்லாமல் சமாளிக்க முடியாது என்பதால், அது கடைசியில்.
உண்மையில் சுஜாதா என்கிற மனிதரின்- எழுத்தாளரின் பிரபலம், அவரைப்பற்றிய அடுத்த பக்கத்தை புரட்டிப் பார்க்க விடுவதில்லை. இளைய தலைமுறையின் வாசிப்புப் பழக்கமுள்ள அனைவருமே – நான் உட்பட – சுஜாதா ரசிகனாக இருந்த, அல்லது இருக்கும் காலம் ஒன்று இருக்கிறது. திரைத்துறையில் ரஜினிகாந்தை எப்படி மறை விமர்சனம் செய்யக் கூடாது என்கிற சட்டம் உள்ளதோ, அதுபோல சுஜாதாவை விமர்சிக்கக் கூடாது என்கிற எழுதப்படாத சட்டமும் உள்ளது. அது ஓரளவுக்கு உண்மைதான். சுஜாதா அளவுக்கு தமிழ் எழுத்துலகில் பிரபலமோ, சுஜாதாவை ஒத்த வாசிப்பு வீச்சோ இல்லாத நமக்கு அவரை விமர்சிக்க என்ன தகுதி இருந்துவிடப் போகிறது? (இறந்துபோனவரை விமர்சனம் செய்யக் கூடாது என்று யாரும் பாட்டுப் பாட வேண்டாம். ஒரு படைப்பாளியின் படைப்புக்கள் உள்ளவரை விமர்சனங்களும் இருக்கும். அல்லது விஸ்வரூப பாணியில் சொல்லப்போனால், “செத்துட்டா? எல்லா பாவங்களையும் மன்னிச்சுடலாமா? )

சுஜாதாவை நான் வாசித்த காலத்தில் அந்த எழுத்தின் வசீகரத்துக்கு அடிமையாக இருந்தேன். எளிமையான, நகைச்சுவையான, அதேவேளை அடர்த்தியான நடை அவருடையது. சாதாராண நாவல்களில் உலக இலக்கியங்களை, மாற்றுக் கொள்கைகளை உறுத்தாமல், அதேவேளை அலுக்காமல் சொல்லிச் செல்லும் அவரது திறமை லாவகமானது. அவரது சிந்தனை வீச்சும் அதி அற்புதமானது. சொளிப்சிசம், ஹோலோகிராம் போன்ற சிந்தனாவாத எண்ணக்கருக்களை புரிந்துகொண்டதோடு மட்டுமல்லாது தனது படைப்புக்களிலும் பயன்படுத்தியவர்.

இன்னும் எத்தனையோ உயர்ந்த மதிப்பீடுகளை எல்லாம் நான் வைத்திருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது சுஜாதாவுக்கும், ரமணி சந்திரனுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

நீ யாரடா சுஜாதாவை பற்றி கதைக்க? ப்ளொக்கரில் நாலு போஸ்ட் எழுதிய நீ சுஜாதாவை விமர்சிப்பதா? என்ன ***? என்று கொந்தளிக்கும் ரசிகர்கள் சுஜாதாவுக்கு இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் எல்லாம் ஆரம்ப கட்ட ரசிகர்கள். கணேஷ், வசந்த் சுவாரசியத்துக்காக நாவல் வாசிப்பவர்கள். மணிரத்னத்தை பிடிக்கும் என்று சொன்னால் உயர்ந்த சினிமா ரசிகன் என்ற அங்கீகாரம் கிடைக்கும் என்கிற மாயை போல, சுஜாதா ரசிகன் என்பது இங்கே ஒரு அடையாள அட்டை மாதிரி இருக்கிறது. அத்துடன் சுஜாதா தங்களுக்கு பெண் தந்தவர் மாதிரி அவரைப்பற்றி தப்பாக பேசினால் அதற்கு கொந்தளிப்பு வேறு. ஒரு படைப்பாளன் என்பவன் விமர்சகர்கள் பந்தாடவே ஒரு படைப்பை படைக்கிறான். ஒவ்வொரு வாசகனும் விமர்சகனே. இது சுஜாதாவே ஒத்துக்கொண்ட உண்மை. (ஏற்றுக்கொண்ட உண்மை அல்ல.) ஒரு படைப்பாளியை விமர்சிக்க அவரை விட உயர்ந்த படைப்பாளியாக இருக்கவேண்டும் என்பதில்லை. அவரது வாசகனாக இருந்தால் போதும். எனவே, சுஜாதாவை விமர்சிப்பதற்கு ஒரு தேர்ந்த வாசகன் என்கிற எனது தகுதி போதுமானது. உலகத்தர இலக்கியக்காரனாகவோ, உச்சப்புகழ் பிரபலமாகவோ இருக்கத் தேவையில்லை. இவ்வளவு ஏன், அந்த சுஜாதாவே லா.ச.ர, டோல்ஸ்டோய் என்று தனது தகுதிக்கு உயர்ந்தவர்களை எல்லாம் அர்ச்சித்தவர்தான்.

எதற்கும் முதலில் சுஜாதாவின்  இனியவை நாற்பதை பார்ப்போம். வாசகர்கள் கடுப்பாகி விடக்கூடாதல்லவா?

சுஜாதாவின் மகத்தான சாதனை தமிழ் எழுத்து நடையையும், பொருளையும் உலகத்தின் போக்குக்கு வார்த்தது. சுஜாதாவை பின்தொடர்ந்த தலைமுறை வணிக நோக்கு எழுத்தாளர்கள் அனைவரதும் நடையும் பாடுபொருளும் உலகத்தின் பேரிலக்கியப் பண்பாட்டோடு ஒட்ட முயற்சிப்பதற்கான வித்தை இட்டதுதான் சுஜாதாவின் முக்கியமான இலக்கியப் பணி. சுஜாதாவுக்கு முந்திய பெரும் எழுத்தாளர்களின் நடையும் உள்ளடக்கமும் ஒருவிதமான மணிப்பிரவாள நடையாக, பிராமண அசையுடன், சிலபல சங்கடமான சொற்கள் தூவப்பட்டதாக மோடித்தனமாக இருந்துவந்தது. கதைப்பொருட்களும் நடுத்தர பிராமண பாணி சார்ந்ததாகவே பெரும்பாலும் இருந்தது. அடுத்த நாளுக்கு உத்தரவாதமில்லாத மனிதர்களின் ஒரு நாள் கழிவதே பெரும்பாலான கதைகளின் உட்பொருள்.

சுஜாதாதான் எழுத்துலகின் பல சாத்தியங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். அதற்கு அவரது உலகளாவிய வணிக இலக்கிய வாசிப்புப் பரிச்சயமே காரணம். அவர் படித்த ஏராளமான புத்தகங்களிலிருந்து பெற்றுக்கொண்ட பல நடைகளையும், உத்திகளையும், பொருள்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். தனக்கேயுரித்தான ஒரு நடையை உருவாக்கி, அதற்கு தனது வாசகர் வட்டத்தை பழக்கியது மட்டுமல்லாது, அடுத்துவரும் அனைத்து முயர்சியாளர்களுக்கும் அதை விதியாக மாற்றியவர். தமிழின் நெகிழ்ச்சித் தன்மையை சாதகமாகக் கொண்டு, புதிய வார்த்தை அமைப்புக்களை உருவாக்கினார். இலக்கணத்தை விட, ஒரு சிறுகதைக்கு எளிமையே முக்கியமானது. கச்சிதமாக இருப்பதே உரைநடை இலக்கியத்தின் அடிப்படைத் தேவை என்கிற கவித்துவ அனுமதியை சாதகமாக்கி தமிழையே புதிதாக மாற்றியவர்.

அடுத்தது, உலக இலக்கியத்தின் புதிய புதிய வடிவங்களை அறிமுகப்படுத்தியதும், முயன்றதும் இவர்தான். விஞ்ஞானச் சிறுகதைகள் என்கிற பெயரிலும், அது அல்லாமலும் இவர் எழுதிய (அல்லது எழுதியதாக சொன்ன) சிறுகதைகள் தமிழுக்கு ஒரு புதிய இலக்கிய வடிவத்தை கொண்டுவந்தது. இப்போது அறிவியல் புனைகதை என்பதன் சுருக்கமாக அறிபுனை என்கிற பெயரில் நாடோறும் ஆயிரக்கணக்கான கதைகள் எழுதப்படுவதற்கு ஆரம்பம் சுஜாதாதான்.

அறிபுனை மட்டுமல்லாது, ஒரு வார்த்தை கதை, கவிதை கதை, சிறுகவிதை என்று பல வடிவங்களை தமிழில் முயன்றார். உலக இலக்கிய வடிவங்கள் மட்டுமல்லாது, தமிழின் பழைய இலக்கிய வடிவங்களையும் மீள உயிர்ப்பிக்க முயன்றார். ஆனால் உரைநடை இலக்கியத்தில் புரட்சிகள் செய்த அளவுக்கு இவரால் செய்யுள் உலகில் பிரகாசிக்க முடியவில்லை.

அடுத்தது சாதனை அல்ல, சாதிப்பு. தமிழ் இலக்கிய உலகத்தில்  சுஜாதாவுக்கு மட்டுமே உள்ள இடம். இவரைப்போல இன்னொருவர் இல்லாத இடம். தமிழ் எழுத்துலகின் பிரபலம். ஒரு திரைப்பட நட்சத்திரத்துக்கு இணையான புகழும், பிரபலமும், செல்வாக்கும் உள்ள ஒரே எழுத்தாளர் இவர்தான். முன்னமே சொன்னதுபோல, ஜெயகாந்தன் வாசகன் என்றோ, சுந்தர ராமசாமி வாசகன் என்றோ, ஏன், பிரான்ஸ் காஃப்க வாசகன் என்றோ சொல்லுவதிலும் சுஜாதா வாசகன் என்று சொல்லுவது ஒரு தேர்ச்சி பெற்ற வாசகனாக காட்டிக்கொள்ளுவதற்கான அடையாளமாக இன்றளவும் இருந்துவருகிறது.

சுஜாதாவின் சில்லறை இனியவை நிறைய. தமிழ் எழுத்தாளர்களில் கணணி, விமான தொழில்நுட்பம் பற்றி கற்றவர் என்பதால் இவரது எழுத்துக்களில் அதன் தேர்ச்சி தெரியும். பல விடயங்களை தமிழில் எளிமையாக அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். உலகத்தின் ஓட்டத்தோடு தமிழர்கள் ஓடுவதற்கான அறிவை அறிமுகப்படுத்திய, பழைய பாட்டுக்களை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த தமிழர்களை அடுத்த கலாசாரத்துக்கு நெறிப்படுத்திய முக்கியமானவர்களில் இவரும் ஒருவர்.

இன்னா நாற்பது? சுஜாதாவின் இன்னா தான் நாற்பது என்ன, நானூறே சொல்லலாம். அவரே சொல்லுவதுபோல் சொன்னால், பிரபலமாக இருப்பதன் பக்க விளைவு இதுதான். இனியவை நாற்பது கிடைத்தால் ஒரு விமர்சிப்பவருக்கு இன்னாதவை நானூறு கிடைக்கும்.

சுஜாதாவின் இன்னாதவற்றை முறைப்படி ஒழுங்குபடுத்த முதல் அவரது முக்கியமான இன்னாதது இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அவரது நிலைப்பாடு. காலத்துக்குக் காலம் மாறுபட்ட பல நிலைப்பாடுகளை எடுத்தாலும், அவரது பொதுவான கருத்து, இலங்கை மக்களின் போராட்டம், ஒரு முட்டாள்தனமான தீவிரவாதம். அவரது கொலை அரங்கம் நாவல் அந்த அடிப்படையில் எழுதப்பட்டதுதான்.

சுஜாதா மீதான என் மட்டத்தில்  முக்கியமான பிரச்சனை அவரது கொள்கை அளவிலான வக்கிரம்தான். அவரது அனைத்து படைப்புக்களிலும் சில அம்சங்களை மாறாமல் காணலாம். அவற்றில் முதன்மையானது பெண்கள் மேல் அவர் கொண்டுள்ள மட்டமான பார்வை. பெண்களை காமத்துக்கான வடிகாலாக மட்டுமே அவர் பார்த்திருப்பது எல்லா புனைகதைகளிலும் தெரியும். பெரும்பாலான கதைகளில் அறிமுகம் இல்லாத ஆண் மார்பில் கை வைத்தாலும் விபரீதம் புரியாத அப்பாவியாக, காசுக்காக என்னவும் செய்யும் சுயநலமியாக, காதலுடன் திருமணத்துக்கு முன் கூடும் காமியாக ஒரு பெண் இருப்பாள். மேலும், எந்தப் பெண்ணினதும் பெற்றோரோ, மாமனோ, ஏன், வீதியில் போபவனோ அவளது அந்தரங்கத்தை பற்றி அப்பட்டமாக பேச, அவளும் அதற்கு சாதரணமாக பதில் சொல்லுவதான காட்சிகள் இருந்தே தீரும். சிறுமிகளின் மார்பு, குளிக்கும் இளம்பெண்கள் இப்படி தனது சுய காம ஆசைகளை தனது கதை மாந்தர்களூடாக அவர் ரசித்தார் என்பதே உண்மை. அதேபோல, பெண்கள் சூழ்நிலை விபரீதம் புரிந்துகொள்ளக்கூடியளவு பக்குவம் இல்லாதவர்களாகவும், சுயமாக முடிவு எடுக்கும் அளவுக்கு சுயம் இல்லாதவர்களாகவும், ஆண்களது இழுப்புக்கெல்லாம் போவதாகவும் அவரது புனைகதைகளில் வரும். இதெல்லாம் அவரது பெரும்பாலான கதைகளில் வருவதல்ல, எல்லாக் கதைகளிலும்வருவது. இதிலும் கொடுமை என்ன என்றால், சஞ்சிகைகளில் சினிமா தொப்புள் பக்கங்களை வாசிப்பவர்கள் முட்டாள்கள் என்றும், தனது பக்கங்களை வாசிப்பவர்கள் புத்திசாலிகள் என்றும் பொருள்பட பல இடங்களில் எழுதியுள்ளார். உண்மையில் இவரே ஒரு மஜா சுஜாதாதான். தேங்காய், கொடியேற்றுவது போன்று பல மறைமுக வார்த்தைகளையும், சில வார்த்தைகளை நேரடியாகவும் இவர் பயன்படுத்தத் தயங்குவதில்லை. மெக்சிக்கோ சலவைகாரி ஜோக் போன்ற அப்பட்ட அசிங்கங்களை வைத்து கதைகளை நகர்த்தியது மட்டுமல்லாது, அந்த ஜோக்கை ரசிக்கும் அளவுக்கு தமிழ் வாசகர்களுக்கு ரசனை வளரவில்லை என்று சரடு விட்டவர். அந்த ஜோக்கை படித்த பிறகு சொல்லுங்கள், அது கேவலமா, ரசனையா என்று.  ஒட்டுமொத்தமாக பார்த்தால், எந்தக் கதையிலுமே இவர் பெண்ணை மரியாதையாக காட்டி இருக்கமாட்டார்.

அடுத்தது இவரது குழப்பம். இவரே வெறுப்பதாக சொல்லும் விஷயத்தை இவரே செய்வார். முக்கியமாக, இவரது படைப்புக்களை யாராவது குறை சொன்னால் இவருக்கு பிடிக்காது. அவர்களை கழுவி கழுவி ஊற்றுவார். குத்தல் கதைகள் கதைப்பார். ஆனால், இவர் அறிமுகம் செய்யும், சர்வதேசப் பிரபலமோ, உள்ளூர் அரிவரியோ, ஏதாவது குறையை அவர்களது படைப்பிலே காட்டாமல் விடமாட்டார். இவர் எந்த விடயத்திலாவது குறை சொல்லாமால் விட்டவர்கள் யாருமில்லை. (இப்போது நீ சுஜாதாவை குறை சொல்லுகிறாயே, அதுபோலத்தானே? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அதுபோலவேதான்.) இதிலே லோதக்காசி என்னவென்றால், இவர் ஆரம்ப காலத்தில் குறை கூறிய ஆனந்த விகடன், கமல், மணி ரத்னம், ஷங்கர் போன்றவர்களே, பிற்காலத்தில் இவர் உலகப் பிரபலம் ஆகக் காரணம். சிறிய பதிப்பாளர்களை மதிப்பதில்லை, (பாக்கெட் நாவல் அசோகனை, சென்னையிலிருந்து பெங்களூர் வரை அலைக்கழித்து, பின்னர் மறுதலித்தவர். இதை அசோகனே சொல்லி அழுதிருக்கிறார்.) அன்பளிப்பவர்களை நக்கல் அடிப்பார் அப்படி இப்படி என்று சுஜாதா என்கிற தனி மனிதன்மேல் ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், எமக்குத் தேவை சுஜாதா என்கிற எழுத்தாளரின் குறைகள்.

இவரது ஏறத்தாழ எல்லா நாவல்களும் சராசரி மாதநாவல் வகை என்பதை உணர்ந்திருக்கலாம். (ஆனால் இவரே மாத நாவல்களை நக்கல் அடிப்பார்.) அதுவும் கணேஷ் வசந்த் வரும் நாவல்கள்.. அவை தமிழின் ஏனைய எந்த நாவல்களை விடவும் அதி சுவாரசியமானவை என்கிறபோதும், ஒரேமாதிரியானவை. ஒரு நடுத்தர வயது ஓய்வூதியர், அவருக்கு ஒரு அழகிய மகள், அவள் வசந்துடன் கட்டிப்பிடிக்குமளவு பரோபகாரமாயிருப்பாள், ஆனால் அப்பாவி. எந்தப் பெண்ணுக்கும் சித்தப்பாவோ, வளர்ப்புத் தந்தையோ இருந்தால், அவர் அவளுடன் மார்பை தடவும் அளவுக்கு பழகுவார். கதை எவ்வளவு எதார்த்தமாக நடந்தாலும், கிளைமாக்சில் அது சர்வதேச ஆயுத ஊழலுடன் சம்பந்தப்படும். கதையில் நடுப்பாகத்தின் இறுதியில் யாராவது ஒருவர் இதெல்லாம் மாயையா என்கிற ரீதியில் சொளிப்சிச தத்துவார்த்த ரீதியில் குழம்புவார். எல்லாவற்றிலும் கெட்டவர்களுக்கு நன்மை, அப்பாவிகளுக்கு நீதி கிடைக்காது என்கிற சுஜாதா என்கிற தனிமனிதரின் நிஜ வாழ்க்கை இயலாமை தென்படும். இப்படி ஆயிரம் ஒற்றுமைகளை நீங்கள் காணலாம். சுஜாதா வெளிநாட்டு கதைகளை திருடினார் என்பது பொதுவானகுற்றச்சாட்டு. கமல், சுஜாதா என்ற அந்தக்கால நவீன படைப்பாளிகள் அனைவரதும் தோல்வி இதுதான். வாசகர்களுக்கு உலகப் படைப்பின் பரிச்சயம் இல்லாத காலத்திலே தங்கள் படைப்புக்களாக சுட்டு சுட்டு பரிமாறினார்கள். இப்போது குட்டு வெளிப்படுகிறது.

சுஜாதாவின் கதை, கட்டுரைகளில் அவரது ஜாதிய வக்கிரம் தென்பட்டிருக்கலாம். ஐயங்கார்கள் எல்லோரும் புத்திசாலிகள், வன்முறை அறியாத அப்பாவிகள், தர்மவான்கள் என்பதாக அள்ளி விடுவார். அத்துடன் அந்தக் காலத்தில் பரபரப்பாக இருந்த திராவிடக் கட்சிகளின் போராட்டங்களை நையாண்டுவதையும் தனது கடமையாக கருதினார். //ஐயங்கார்களில் வலங்கலை, இடங்கலை என்று இரண்டு பிரிவு உள்ளது. திராவிடக் கட்சிகளில் சேர்ந்த எச்சக்கலை என்பது மூன்றாவது பிரிவாக....//


கேள்வி பதிலில் தனது மேதாவித்தனத்தை காட்டுவதற்கு வலிந்து திணிப்பார், தமிழை கொச்சைத்தனமாக பயன்படுத்துவார், ஹைக்கு கவிதை வடிவத்தை தானே சரியாகப் புரிந்து கொள்ளாமல், எழுதும் அனைவரையுமே விமர்சிப்பார்... இப்படி சுஜாதாவில் சொல்லுவதற்கு ஆயிரம் குற்றச்சாட்டுக்கள். ஆனால் எத்தனை சொன்னாலும் அழியாத புகழ் அவருடையது. இது கட்டுரையை யாருக்கும் பாதகமில்லாமல் முடிக்கும் உத்தி என்று புன்னகைக்க வேண்டாம். நான் எப்போதுமே சுஜாதா ஒரு ஜனரஞ்சக போலி எழுத்தாளர் என்கிற எனது நிலைப்பாட்டை மாற்றுவதற்கில்லை. ஆனால் எழுத்து உத்தி என்கிற அரிய திறமை அற்புதமாக வாய்த்த ஒரு தமிழ் எழுத்தாளர் அவர்தான். அவரது ரசிகன் என்கிற நிலை கடந்த பின்னரும், ஒரு கதையை தொடங்கினால் முடிக்காமல் வைக்க முடியாதளவுக்கு என்போன்றோரை இன்றளவும் கட்டி வைத்திருப்பதுதான் சுஜாதா. இன்று அவரது நினைவு நாள். என்று அவரை நினையாத நாள்?

(ஜோக் எங்கே என்றா கேட்கிறீர்கள்? உஷார் இல்லாத ஆளையா நீங்கள்...)

Tuesday, 26 February 2013

ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-03(ராக்கிங்க்)இதன் முன்னைய பதிவில் விரிவுரைகள் முக்கியமாக அதிக பயனுள்ளதாக இருந்த பாலியல்கல்வி தொடர்பான விரிவுரைகள் தொடர்பாக பார்த்தோம் இவை முரண்பாட்டுமுகாமைத்துவம் என்ற தலைப்பினூடு நடத்தப்பட்ட விரிவுரைகள். இதே தலைபின் கீழ் அடுத்து ஒரு விரிவுரை நடத்தப்போகின்றோம் அதற்கு சாப்பாடு வழங்குமிடமான மெஸ்ஸிற்கு செல்லுமாறு கூறினார்கள்.சென்றோம் அங்கே சென்று அனைவரும் அமர்ந்தோம்  ஒவ்வொரு குழுவும் இப்போது முரண்பாட்டு முகாமைத்துவம் தொடர்பில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை செய்துகாட்டவேண்டும் என்று கூறினார்கள்.ஏ யில் இருந்து ஏஜ் வரைக்குழுக்கள் இருந்தன.ஒரு குழு முன்னே சென்று  நாடக பாணியில் ஒன்றை செய்தார்கள்  தரப்பட்ட தலைப்பு தொடர்பில் நாடகம் ஒன்றைசெய்வோம் என்று அக்குழுவைச்சேர்ந்த போய்ஸ் கூற ஆரம்பிக்க கேர்ல்ஸ் இல்லை இல்லை வேறு கொன்செப்டைசெய்வோம் என்று கருத்துமோதலில் ஈடுபட்டார்கள் முடிவில் இப்படி  கருத்துமோதலில் ஈடுபடுவதைவிடுத்து புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளவேண்டுமென தமது நாடகத்தை முடித்தார்கள்.இவ்வாறு ஒவ்வொரு குழுவும் ஒவ்வொன்றை செய்துகாட்டினார்கள்.இவை முடிந்ததும் புரொஜக்ரரில் சிலைடர் சிலைடராக அடுத்த விரிவுரை ஆரம்பமானது.விரிவுரையின் தலைப்பு "ராக்கிங்க்"

 ஒரு ரான்சிலேட்டர்தான் அந்தவிரிவுரையை நடத்தினார்.அவருக்கு தமிழ் நன்றாகவே தெரியும்.தமிழ்மாணவர்களுக்கு,சிங்கள மாணவர்களுக்கு என தனித்தனியாகத்தான் இந்த விரிவுரை நடத்தப்பட்டது.

ராக்கிங்க் என்றால் என்ன? இது இன்றைக்கு ஒரு முக்கியபிரச்சனை.அனைவரும் அறிந்திருப்பீர்கள். நீங்கள் இந்தப்பயிற்சிமுடிந்ததும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்துக்கு போகப்போகின்றீர்கள் அங்கே உங்களை வரவேற்க உங்கள் சீனியர் காத்துக்கொண்டிருப்பார் ஆனால் அவர்கள் காத்துக்கொண்டிருப்பது உங்களை வரவேற்பதற்காக அல்ல உங்களை பகிடிவதை செய்வதற்கு. என் நண்பர் ஒருவர் கூறினார் நான் சீனியராக பல்கலைக்கழகத்தில் ராக்கிங்கிற்கு காத்துக்கொண்டிருந்தேன் அப்போது ஜூனியர் பெண்களை பல்கலைக்கழகத்துக்கு கொண்டுவந்துவிடும் பேரன்ஸைக்கண்டால் சிரிப்பாக இருந்தது.ஆனால் நான் என்னுடைய மகளுடன் பல்கலைக்கழக வாசலைமிதிக்கும்போது அப்போது அந்த தந்தைபட்ட துன்பம் என்னவென்று எனக்குப்புரிந்தது.சரி  ராக்கிங்க் என்றால் என்ன.சிலைடரில் ஓடியது

Ragging is a verbal, physical or psychological abuse on newcomers to educational institutions. It is similar to the American phenomenon known as hazing. Sri Lanka is said to be its worst affected country in the world.It involves insults (simple or suggestive sexual, sarcastic and even physical), running errands for seniors, and many other complex activities

முன்னைய பதிவு- ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-02(பாலியல் கல்வி)
உடல் ரீதியான அல்லது மன ரீதியான துன்புறுத்தல்கள் பல்கலைக்கழகங்கள் போன்ற கற்பித்தல் நிலையங்களில்  இவை சீனியர் மாணவர்களினால் நடத்தப்படுகின்றன.இது தனிப்பட்ட ஒரு மனிதனை அவமானப்படுத்தும் செயற்பாடாக கருதப்படுகின்றது.இது ஒருவகை மனித உரிமை மீறல்தான்.இது உடல் ரீதியான தாக்குதல்களைக்கடந்து  பாலியல் ரீதியான தாக்குதலாக பகிடிவதை மாறும்போதுதான் அது மிக மோசமடைகின்றது.
(எமது ரான்சிலேட்டர் தொடர்ந்து பேசுகின்றார்)

எனக்குத்தெரிந்த ஒரு பாதிரியார் இருக்கின்றார்.அவர் பாதிரியார்களுக்கு கற்புக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஜூனியராக சேர்ந்தார்.அவருக்கும் ராக்கிங்க் கொடுக்கப்பட்டது பேனாவால் 6 கிலோமீட்டர்கள் அளக்கவேண்டும் என்பதுதான் அவருக்குக்கொடுக்கப்பட்ட தண்டனை.அவர் அதை ஒழுங்காக செய்யவேண்டும் கொஞ்சம் பிழைத்தாலும் ஆரம்பத்தில் இருந்து மீண்டும் அளக்கசெல்லிவிடுவார்கள் சீனியர்கள்.அந்த சீனியருக்குத்தான் 6 கிலோமீட்டர் முடிவு எங்கிருக்கின்றது என்பது தெரியும்.இவருக்கு பின்னேரம் 6 மணிக்கு ஆரம்பிக்குமாறு கூறினார்கள்.அவரும் செய்ய ஆரம்பித்தார். அடித்த நாள் காலை 7 மணிவரை அதை தொடர்ந்து செய்தார்.அப்போது வீதியில் காரில் சென்றவர்கள் காரை நிறுத்திவிட்டு கூறினார்களாம் யார் இந்தப்பைத்தியக்காரன் உடையேதும் இல்லாமல் ரோட்டில் என்ன செய்கிறான் என்று.
ஆம் அவருக்கு மேலதிகமாக கூறியிருந்தார்கள் அந்த 6 கிலோமீட்டர் தூரத்தை உடைஏதுமில்லாமல் அளக்கவேண்டும்.இதை அந்தப்பாதிரியார் ஒரு  நிகழ்ச்சியில் மேடையில் வைத்துக்கூறிக்கொண்டிருக்கின்றார். அவர் ஒரு பாதிரியார் நாம் அவர்மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றோம் அவருக்கு அப்படி ஒன்று நடந்திருக்கும் என்று நாம் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை.
அவர் மேலும் கூறினார்.எனது நண்பன் ஒருவனுக்கும் இதே  ராக்கிங்தான் வழங்கப்பட்டது அதனால் அவன்  மனதளவில் மிகவும் குழம்பி பைத்தியமாகிவிட்டான் இப்போது அவன் எனக்குத்தெரிந்த ஒரு ரெயில்வே ஸ்ரேஸனில் பிச்சைஎடுத்துக்கொண்டிருக்கின்றான்.இது போன்ற பல சம்பவங்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று கூறிமுடித்தார்.கேட்டுக்கொண்டிருந்தோம் வயித்தில் லேசாக புளியைக்கரைத்ததுபோல்தான் இருந்தது.

2 ஆம் உலகயுத்தத்தில் பல்கலைக்கழகமாணவர்கள் இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டார்கள்.இராணுவ வீரர்களாக இருக்கும்போது இப்பகிடிவதை ஒரு  நிகழ்ச்சியாக இடம்பெற்றது.அடித்த நாள் இருப்போமா இல்லையா என்று தெரியாது எனவே ஒருவருக்கொருவர் பகிடிவதை செய்து மகிழ்ச்சியடைந்தார்கள்.போர் முடிந்ததும் மீண்டும் பல்கலைக்கழகங்களுக்குத்திரும்பிய மாணவர்கள் அவற்றை தமது பல்கலைக்கழகங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.அது  அப்படியே தொடர்ந்து மாற்றமடைந்து வன்முறையும் அதனோடு இணைக்கப்பட்டுவிட்டது.


அவர்  பவர் பொயிண்ட் சிலைடரில் காண்பித்த அனைத்தும் விக்கிபீடியாவின் துணைகொண்டு எடுக்கப்பட்டது அவை கீழே..


Introduction
Inception of ragging can be pleasant at first, hence the name Mal Samaya. During this week or so, all newcomers are ordered to memorize the name and hometown of their peers. The objective of this exercise is said to be increasing the friendship among batch mates (locally termed as batch fit).

Dress code ragging

The freshmen are asked to dress in a specific dress code for a particular period of time. For the dress code prescribed is generally weird, e.g. dressing totally in white or black with the hair oiled and combed in a particular style, dressing shirts that do not contain stripes, dressing long skirts for girls. The dress code ragging may make the freshmen feel awkward and uncomfortable as it often brings them unnecessary attention from everybody else.

Playing the fool
The freshmen may be asked to do silly things like climbing a tree, kissing a tree, proposing to someone from the opposite sex, holding a hand of someone from opposite sex and walking etc.


Verbal torture
Verbal torture involves indulging in loose talks. The freshmen may be asked to sing the lyrics of any vulgar song or use abusive language in the presence of a large number of peers. During this time, seniors assign an abusive and demeaning nickname, known as card to the juniors and they have to be called by that name throughout their entire university life. In some universities, this nickname is changed to a less vulgar name after the ragging period. These aliases are used primarily as a means of preventing the university authorities identifying the students who are involved in ragging and other unlawful activities. The form of verbal ragging differs from one institution to another. In some universities, students have to memorize poems made up of filth and recite them in front of others.

Physical torture

This is the severest form of ragging that could take place in a university. Some seniors are mainly interested in details such as the anatomical description of one’s body parts, his or her sexual interests etc. In many cases, the freshmen have been asked to strip before the seniors. However, sexual abuse of female students remains rare. Outstation students who stay in hostels are most vulnerable to ragging. They may be asked to do odd acts such as having showers several times per day, and having showers around midnight with cold water. Some extreme cases like inserting candles in vaginae (as in the case of Rupa Rathnaseeli), putting testicles in a drawer and having it closed, pushing straightened out coat-hangers into ears, striking the penis over a long period of time (termed bonchi kadeema) are also reported.[5] This period of time is termed Bheeshana Samaya in university jargon.
சில சீனியர் மாணவர்கள் ஒருவரது உடலின் பாகங்களை பாலியல் ரீதியாக விபரிக்குமாறு கூறுவார்கள்.சீனியர் மாணவர்களின் முன் ஆடைகளைக்களையுமாறு கூறப்படுவார்கள்,ஆனால் பெண்களை பாலியல் துன்புறுத்தும் ஆண்கள்தொடர்பிலான பகிடிவதைகள் மிகக்குறைவாகத்தான் நடைபெறுகின்றது.வெளியில் தங்கும் மாணவர்களைவிட பல்கலைகழகவிடுதிகளில் தங்கும்மாணவர்களே மிகவும் பாரதூரமாக பாதிக்கப்படுகின்றார்கள்.ஒரு நாளுக்கு அதிக தடவைகள் குளிக்குமாறு வற்புறுத்தப்படுவார்கள்,சீனியர் மாணவர்களுக்கு முன்னால் குழுவாக நின்று சுய இன்பம் அனுபவிக்குமாறும் கட்டளையிடப்படலாம்,இரவில் குளிரான நீரினால் குளிக்குமாறு கட்டளையிடப்படலாம்,பெண்களின் பெண்ணுறுப்பிற்குள் மெழுகுவர்த்திகள் செருகப்பட்டிருக்கின்றது,விதையை அலுமாரிக்குள் இட்டு அலுமாரியின் கதவுகள் சாத்தப்படலாம், நீண்ட நேரம் ஆண்குறியை பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கவேண்டியேற்படலாம் மாணவர்களால் இவை  தொடர்பான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பகிடிவதையால் நடந்த முக்கிய சம்பவங்கள்,இடங்கள்(இலங்கையில்)


In 1974, ragging of some trainee mathematics teachers at the then Vidyalankara University (now University of Kelaniya) prompted Prime Minister Sirimavo Bandaranaike's Government to appoint V. W. Kularatne Commission to probe the incident. As a result, twelve undergraduates were expelled and four officials were penalised for their failure to take appropriate action. This is the first major step taken against university ragging by a Sri Lankan government.

In 1975, University of Peradeniya reported the first ragging related death when a 22 year old female student of the Faculty of Agriculture, Rupa Rathnaseeli became paralyzed as a result of jumping from the second floor of the hostel "Ramanathan Hall" to escape the physical ragging carried out by her seniors. It was reported that she was about to have a candle inserted in her vagina just before she had jumped out of the hostel building.[5] She committed suicide in 1997
இலங்கையில் ராக்கிங்க் மூலம் மரணத்தை ஏற்படுத்திய முதல் முதல் யூனிவேர்சிட்டி என்ற பெருமை பெரதேனியாப்பல்கலைக்கழகத்தைசாரும்.22 வயதையுடைய Rupa Rathnaseeli  என்ற மாணவி ராமனாதன் ஹோல் என்ற ஹொஸ்ரலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார் ராக்கிங்கில் இருந்து தப்புவதற்காக. அவரது பெண் உறுப்பிற்குள் மெழுகு திரியை நுழைத்து பகிடிவதை செய்யப்பட்டதே இதற்கு முக்கியகாரணம்.

In 1993, Chaminda Punchihewa, a student of University of Ruhuna, died as a result of ragging.[a]
Prasanga Niroshana, a student from Hakmana, died as a result of ragging he underwent at Schools of Agriculture, Angunakolapallassa.[a]

In 1997, 21 year old S. Varapragash, an Engineering student of University of Peradeniya, died from a kidney failure following severe ragging by senior students(கிட்னி பெயிலியரால் இறந்தமாணவன்)

A a first year female student of University of Ruhuna committed suicide in 1997 as a result of ragging.(ருகுன பல்கலைக்கழகத்தின் முதலாவது தற்கொலை)

In 1997, Kelum Thushara Wijetunge, a first year student at the Hardy Technical institute in Ampara, died from a kidney failure after he was forced to do tough exercises and drink excessive quantities of liquor.(அம்பாறையில் மானவன் கிட்னி பெயிலியராகி இறந்தான் அதிகமாக மதுபானத்தை  அவனுக்கு வழங்கியதுதான் முக்கியகாரணம்)

In 2002, Samantha Vithanage, a third year Management student at the University of Sri Jayewardenepura, who pioneered an anti-ragging campaign was killed at a meeting, while in a discussion on ragging.(சிறீ ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் 3 ஆம் வருட முகாமைத்துவ பீட மாணவன் ஒரு அன்ரிராக்கராக 3 ஆம் வருடத்தை தொடர்ந்தார் ராக்கிங்க் பற்றிய ஒரு கலந்துரையாடலில் Samantha Vithanage என்ற அம்மாணவன் கொலைசெய்யப்பட்டான்)

In 2006, Prof. Chandima Wijebandara, the Vice Chancellor of University of Sri Jayewardenepura resigned from his post as a result of students failing to comply with his orders to eliminate ragging from the university.

In 2011, a female student attached to the Faculty of Humanities and Social Sciences, University of Ruhuna, was semi-paralysed in one limb as a result of ragging she underwent at the faculty canteen.

World wide-


அவர் இவற்றை புரொஜெக்டரில் போட்டுக்காட்டிக்கொண்டு கேட்டார்.உங்களில் ராக்கிங்க் என்பது தேவைதான் என்று நினைபவர்கள் கைகளை உயர்த்துங்கள்.கேர்ஸில் ஒருவரும் உயர்த்தவில்லை போய்ஸில் சிலர் உயர்த்தினார்கள் நானும் உயர்த்தினேன்.

எங்களை ராக்கிங்க் செய்தால் பரவாயில்லை நாம் ராக்செய்வதை அனுமதிக்கின்றோம் என்று நினைப்பவர்கள் கைகளைத்தூக்குங்கள்.அதற்கும் சிலர் உயர்த்தினார்கள்.ஏன் ராக்கிங்தேவை என்று நினைக்கின்றீர்கள் என்று கூறமுடியுமா?கையை உயர்த்தியவர்கள் கூறுங்கள்.(நீலத்தால் காட்டப்படுவது எமக்கு விரிவுரை செய்தவரின் கூற்றுக்கள்)

மாணவர்கள் எழுந்து காரணங்களைக்கூறுகின்றார்கள்-

ஜூனியராக செல்லும் மாணவர்களிடத்தே ஒரு ஒற்றுமையை(batch fit) வளர்க்கின்றது...

எப்படி? நீயும் ராக்பண்ணப்பட்டாய் நானும் ராக்கிங்க்பண்ணப்பட்டேன் அப்படித்தானே..ம்ம் ஓகே அடுத்தது

நான் எழும்பிக்கூறினேன்...மேடைக்கூச்சம் போன்றவற்றை இல்லாது செய்யமுடியும் என்று..(நான் ராக் செய்வதாக இருந்தால் சகலருக்கும் முன்னால்வந்து எதைப்பற்றியாவது பேசு அல்லது 2 வரி பாடுமாறு கேட்பதாக  முடிவு செய்திருந்தேன்..இதனால் இந்த மேடைக்கூச்சம் இல்லாது போகும் என்பது என் நம்பிக்கையாக இருந்தது)

அதாவது முன்னுக்கு வருவதற்கு வேறுயாருடனும் பேசுவதற்குபயப்படுபவர்களின் பயத்தை ஒளிக்கமுடியும்..ம்ம் அடுத்து

ஜூனியேர்சிடம் பாரபட்சங்கள் குறையும்...

அதாவது ஜூனியராக வருபவர்களில் பணக்காரன் ஏழை இருப்பார்கள் சகலரையும் ராக் பண்ணுவதால் அந்த சம நிலை பேணப்படுகின்றது என்கிறீகள்

ராக் செய்தால்தான் ஜூனியேர்ஸ் மதிப்பாங்கள்

அதாவது ஒருவரின் திறமையினாலோ நல்ல செயலினாலோ மரியாதை வராது எனவே ராக் செய்வதன் மூலம் அதைப்பெற்றுக்கொள்ளல் ஓகே 


இப்போது இவர்கள் கூறிய  அதே காரணங்களைத்தான் சீனியேர்ஸும் கூறுகின்றார்கள்.அதோடு superiority complex  என்ற விடயமும் இருக்கின்றது.அத்துடன் வேறு காரணங்கள் யாராவது?

இப்போது இருக்கும் சீனியர்ஸ் முன்னர் ஜூனியேர்ஸாக இருக்கும்போது தமது சீனியர்களிடம் வாங்கிய அடிகளை திருப்பி அவர்களுக்கு வழங்கமுடியாது  அதை ஜூனியேர்ஸிடம் தீர்த்துக்கொள்கின்றார்கள்.

Everybody wants to become heroes,and the cowards are not an exception. And ragging is the only way by which they could do some "heroisms".These nonsense idiots somehow develops a feeling that they are on the top of the world , when they are harassing somebody in the name of ragging.
And definitely the guys who shows such ""heroisms" are the biggest zeros in their real life.They might be the biggest bafoons among their friends,useless in the home,and a garbage in the society. This "useless,baffooonish, waste" feeling will be creeping high on them,and they will find pleasure and satisfaction while doing ragging by becoming 'a hero in their own mind'.

ராக்கிங்க் பற்றிய கட்டுரை ஒன்று by-Nishika Fonseka

Ragging in our universities: A symptom or a disease?

ஒருவரை துன்பப்படுத்தி அதன் மூலம் இன்பம் காணல் என்பது ஒருவித மனோவியாதியாக இருக்குமெனில் அதை ராக்கிங்க் செய்பவர் உணரப்போவதில்லை..ஒரு மன நிலைபாதிக்கப்பட்டவரால் தான் மன நிலைபாதிக்கப்பட்டவன் என்பதை முழுமையாக உணரமுடியாது.உணரவும் விரும்பமாட்டான்/டாள்.முயற்சி செய்து எந்தபயனும் இல்லை.ஆனால் மன நிலைக்காப்பகத்தில் கவுன்சிலிங்க்வேண்டுமானால் செய்யலாம்.

ஆனால் நீங்கள் பல காரணங்களைக்கூறினாலும் உலக அளவில் செய்யப்பட்ட ஆய்வு என்ன கூறுகின்றது தெரியுமா.ராக்கிங்க் என்பது ஒரு மாணவனின் தலைமைத்துவப்பண்பையோ ஆளுமையையோ வளர்க்கவில்லை.மாறாக அது அவனை இல்லாமல் செய்கின்றது அழிக்கின்றது.ம்ம்ம் அப்போதுதான் எனக்கு உறைத்தது சரிதான் கட்டாயத்தின்பேரில் முன்னால் வந்து பேசுபவன் அதன்பிறகு தானாக வருவானா என்றால் இல்லை.அதோடு இன்னொன்றும் இருக்கின்றது.எம்மை விட பின்னர் வந்த  ஜூனியேர்ஸ் தம்மை மதிக்கவேண்டும் என்பதற்காக ராக்கிங் செய்வது சரியென்றால்  இலங்கையில் பெரும்பான்மை இனம் எங்களை அடக்கமுயல்வதில் என்ன தவறு இருக்கின்றது இரண்டும் ஒன்றுதானே?

அதோடு கூறினார் ராக்கிங்செய்பவர்கள் ஒருவகையில் மன நோயாளிகள்.இன்னொருவரின் துன்பத்தை ரசிப்பதன்மூலம் தாம் இன்பங்காண்பவர்கள். அவர்கள் வளர்ந்த விதம் சமூகக்காரணிகளால் இப்படியானவர்கள் தோற்றுவிக்கப்படுகின்றார்கள்.ராக்கிங்கால் பலர் தற்கொலை செய்துள்ளார்கள்.இலங்கைப்பல்கலைக்கழகங்களில் பல தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன.பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள்  எல்லைமீறும்போது இவை ஏற்படுகின்றன.

தனக்கு நடந்த சம்பவம் ஒன்றைப்பற்றிக்கூறினார் அவர்.

எனது தங்கையை ஆசிரியர்கலாசாலைப்பயிற்சிக்காக  ஒரு பல்கலைக்கழகத்துக்குசெல்லவேண்டியிருந்தது. நான் என் தங்கையை அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன் பல பெண்களின் சகோதரர்கள்,பெற்றோர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.யுத்தகாலம் ஆகையால் ஆண்களின் பெற்றோரும் வந்திருந்தார்கள்.அப்போது  17 இடங்களில் 17செக்பொயிண்ட்களில்(இராணுவப்பரிசோதனைச்சாவடிகள்) ஆண்கள் பெண்கள் என எங்கள் அனைவரையும் முழுமையாக பரிசோதனை செய்து பரிசோதனை செய்து அனுப்பினார்கள் அண்ணளவாக 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்தோம் வந்ததும் எமக்காக காத்து நின்ற சீனியர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.அனைவரையும் உடனே ஒரு அறைக்கு வருமாறு அழைத்தார்கள்.அங்கு அனைத்து ஜூனியருக்கும் ராக்கிங்க் கொடுக்கப்பட்டது.ஒருவர் பின்னால் ஒருவர் ரெயில் வண்டியைப்போல் பிடித்துக்கொண்டு ஓடவேண்டுமாம் அந்த அறைக்குள்.பெரும்பாலான பெண்கள் அழஆரம்பித்துவிட்டார்கள்.என்னால் பொறுக்கமுடியவில்லை.அண்ணளவாக 8 மணித்தியாலங்கள் வீதியில் நடந்து அங்கு சென்றிருந்தோம் தண்ணியில்லை சாப்பாடில்லை ஒண்டுக்கு ரண்டுக்குக்கூட போக வழியில்லை.சோதனைச்சாவடிகளில் முழு உடமையையும் பரிசோதனை செய்துகளைத்துப்போய் 8 கிலோமீட்டர் தூரம் நடந்துவரும் எங்களை இப்படியா நடத்துவது? பெற்றோர் வேறு பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைவருக்கும் இதே நிலைதான். நான் போய் ஒரு சீனியரை அழைத்துக்கேட்டேன்.என்ன நியாயம் இப்படியா செய்வது இங்கே இருக்கும் எத்தனை பெண்கள் இன்னும் ரொய்லெட்டுக்குபோனார்கள் என்று தெரியாது.சாப்பிட்டார்களா என்று தெரியாது.கொண்டுவந்த சுமைகளுடன் 8 கிலோமீட்டர் தூரம் நடந்தே அனைவரும் வந்திருக்கின்றோம்.யாரும் வரும் வழியில் ஓய்வெடுக்க வில்லை.இங்கே பலரின் பெற்றோரும்வந்திருக்கின்றார்கள் இதுதான் நீங்கள்  உங்கள் சீனியேர்ஸை வரவேற்கும் முறையா?
அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

 இப்பதான் இப்படி ராக்கிங்க் பீரியட் முடியட்டும் பாருங்க நான்க ஒன்னுக்குள்ள ஒன்னா அவளவு பிற்றா இருப்பம்...Monday, 25 February 2013

என்ன ஒரு அசத்தலான விளம்பரம்- Help a child

இது ஒரு சோப் விளம்பரம்.பிஸ்னஸுக்கான அட்களில் இதுவும் ஒன்று ஆனால் இதைப்பாருங்கள் சற்று அழுத்தமாக ஒரு செய்தியைக்கூறுகின்றது.
Every year 2 million children under the age of 5, die of infections like Diarrhoea and Pneumonia.

For the past 10 years, Lifebuoy soap has tried to help prevent these deaths by teaching children the simple act of washing hands with soap.

We now take our life saving mission to Thesgora, an Indian village with one of the highest rates of Diarrhoea.


Saturday, 23 February 2013

ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-02(பாலியல் கல்வி)


அந்த ரெயினிங்கில் தந்த பயிற்சிகளை ஓரளவிற்குக்கூறினேன் காலையில் தேசிய கீதம் பாடிவிட்டு.மலை வீதிகளில் ஓடினோம் வழக்கமாக பாடசாலைகளில் கொடுக்கப்படும் பயிற்சிகளே கொடுக்கப்பட்டன.என்றாலும் மலைவீதிகளில் ஓடுவது ஒன்றும் அவளவு இலகுவாக இருக்கவில்லை.ஓடி முடித்ததும் காலை சாப்பாடு பெரும்பாலும் சோறுகிடைத்தது அல்லது அரை றாத்தல் பாண் சகல்தும் முடிந்ததும்.ஒவ்வொரு குரூப்பிற்கும் வேறு வேறு இடங்களில் லெக்ஸர் நடந்தது.எமது குழுவிற்குப்பொறுப்பான அதிகாரியிம் முதல் நாள் லெக்ஸர்...அவர் சிங்களத்தில் கூற எங்களுக்கு ரான்சிலேட் செய்யப்பட்டது..இங்கே வரும்போது  நீங்கள் பெற்றோர் எல்லோருமே சற்று பயந்துகொண்டுதான் வந்திருப்பீர்கள்.பலருக்கு இதுதான் பெற்றோரைப்பிரிந்து வெளியே 10,14 நாட்களைக்கழிக்கும் முதலாவது அனுபவமாகக்கூட இருந்திருக்கும்.ஆனால் எதற்கும் பயப்படவேண்டாம் நாம் உங்களை எமது பிள்ளைகள் மாதிரித்தான் பார்த்துக்கொள்வோம். என்று கூறினார்.பின்னர் ஜென்ரல் கோப்ரல்,லெப்டினல் என்று பதவிகளின் ஓடர்களை கூறினார்கள்.அவர்களுக்கிடையிலான வேறுபாடு இராணுவ உடைகளில் உள்ள அரச இலச்சனைகள் என்பவை தொடர்பான விளக்கமும் அளிக்கப்பட்டது.அங்கு 3 மொழிகளையும் கதைக்கக்கூடிய பெண் ஒருவர் இருந்ததால் ரான்சிலேட்டர்கள் இல்லாத  நேரத்தில் அவர்தான் ரான்சிலேட்டராக உதவி செய்தார்.


எமக்கு மொத்தமாக 6 விரிவுரைகள் நடாத்தப்பட்டன.

1.முரண்பாட்டுமுகாமைத்துவம் 
2.உளரீதியான சிக்கல்களும் உளச்சிகிச்சையும்
3.சட்டம் மற்றும் மனித உரிமை
4.சமூகத்தின் பின்னோக்கியபயணமும் கட்டுப்பாடும்
5.சமூகவிழுமியங்கள்
6.விடுதிகள் பாவனை மற்றும் தனிப்பட்ட சுத்திகரிப்பு

சமூகவிழுமியங்கள் ஒரு வெள்ளிக்கிழமைதான்அந்த சம்பவம் நடந்தது.சமூக விழுமியங்கள் என்ற அந்தவிரிவுரையைப்பற்றித்தான் கூறுகின்றேன்.காலை சாப்பாடு முடிந்ததும் ஆன்மீகம் சம்பந்தமான விரிவுரை என்றார்கள் அனைவரது முகத்திலும் பீதி ஏது ஆன்மீகமா வேண்டாம் வேண்டாம்  எனக்கத்தியும் கதறக்கதற அழைத்துச்சென்று இருத்திவிட்டார்கள். ஆன்மீகப்பேச்சுக்கள் என்றால் பொதுவாகவே எம் வயதினருக்கு ஒரு மரணபீதி அடிமனதில் இருக்கவே செய்யும்.தரம் 6 இல் இருந்து ஓ.எல் வரை 16 வயதுவரை சம்பந்தர் அப்பர் என்று சகலவற்றையும் பாடமாக்கி எழுதி முடித்தாயிற்று என்றால் வருடா வருடம் கோவில் திருவிழாக்களில் ஒவ்வொரு பிரசங்கியும் தன்பாணியில் அக்கதையைப்போட்டுத்தாளித்து கதை பழையசாதம் ஆகியிருக்கும்.ஏதோ சு.கி சிவம் கடைசி தென்கச்சிக்கோ.சுவாமிநாதன் ,கிருபானந்தவாரியார் போல் பேசினால் கூடக்கேட்கலாம்  ஆனால்  நம்மவர்கள் ஒரே பாணிதான் பழைய ரேப் ரக்கோர்டர்..எக்ஸாம் எழுதும்போதும் அவர்களது ஸ்பீச்சைக்கேட்ட அனுபவம் உள்ளதாகையால் பயந்தோம்.பயந்ததுபோலவே நடந்தது.விழுமியங்கள் என்று பேச ஆரம்பித்தார் அந்த விரிவுரையாளர்.காலையில் அவளவு பயிற்சிகளை செய்து வியர்வை ஆறுவதற்குள் சாப்பிட்டுவிட்டு அப்படியே போய் பானிற்குக்கீழே அமர்ந்து விரிவுரையைக்கேட்டால் சொர்க்கம் தானாகவே தெரியும் நித்திரை அதிகமாகி ஒருவன் முன்னால் விழ நித்திரை வருகின்றதா என அவர் கேட்க அவனும் ஆம் என்றான்(வெளியே செல் என கூறுவார் என எதிர்பார்த்தான் போலும்) அவர் கூறினார் இப்படி வெளிப்படையாகக்கூறுவதும் ஒருவிழுமியம் என்று அத்துடன் அவன் தலையுடன் எங்கள்தலையும் சேர்ந்து தொங்கிவிட்டது.45 நிமிடத்திற்கு மேல் தாளித்தனுப்பினார் அவர்.இப்படித்தான் முடிந்தது அந்த விரிவுரை.


சட்டம் மற்றும் மனித உரிமை...என்னது மனித உரிமைபற்றி விரிவுரையான்னு கேட்டிடப்படாது.மனித உரைமைகள் தனி ஒரு மனிதனுக்கு இலங்கையில் என்னென்ன உரிமைகள் இருக்கின்றன.உரிமைகள்  எந்த ஆண்டுகளில் சட்டமாக்கப்பட்டன.உரிமை மீறப்பட்டால் யாரிடம் சென்று முறையிடவேண்டும் என்றெல்லாம் சிங்களத்தில் விரிவுரை செய்யப்பட்டது.அருகிலே ரான்சிலேட்டர் தமிழில் மொழிபெயர்த்தார். நான் மனிதஉரிமையை பாடப்புத்தகத்தில்தான் அதிகமாக படித்திருக்கின்றேன்.அதோடு கருத்துசுதந்திரம் 16 ஆம் சரத்து என்று அடிக்கடி சூரியன் எப்.எம்மில் போடுவார்கள் அவளவுதான்.


சமூகத்தின் பின்னோக்கியபயணமும் கட்டுப்பாடும்..இதுதான் என்ன இளவு என்றே புரியாமல் இருந்தது  வந்த  விரிவுரையாளர் சிங்களத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் நடத்திக்கொண்டிருந்தார்.அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றியெல்லாம் அந்த விரிவுரையாளர் சிங்களத்தில் பேசினார்.இடையில் எழும்பிச்சென்றால் வெளியில் நின்றவர்கள் பேசினார்கள் என்னசெய்வதென்று சிலர் மீண்டும் உள்ளே வந்தார்கள்.45 நிமிடம் முடிய மறுபடியும் முதலில் இருந்து தமிழ் ரான்சிலேட்டர் பேச ஆரம்பித்தார்.சீ என்று ஆகிவிட்டது. ஏதோ இடையில் நான் எழும்பி வந்துவிட்டேன் தலையிடிதான் முக்கியமான காரணம். ஒவ்வொரு லெக்ஸரும் ஒவ்வொரு நாட்கள்  நடைபெறும்.


விடுதிகள் பாவனை மற்றும் தனிப்பட்ட சுத்திகரிப்பு

இதில் எப்படி எமது ரூமை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று கூறினார்கள்.இராணுவம் அல்லவா எனவே அவர்களது முறை சற்றுவித்தியாசமாகத்தான் இருக்கும்.எமக்கு .ஒன்றுக்குமேல் ஒன்றாக உள்ள பெட் ஒன்றை எடுத்து அதைவைத்து பரிசோதனை போல் நேரடியாக விளக்கப்பட்டது தலையணை எப்படிவைக்கவேண்டும்  நித்திரையால் எழும்பியதும் பெட் சீட்டை அனைவரும் ஒரே பாணியில் மடித்துவைக்கவேண்டும்.பெட்டின் கீழே எமது பாதணிகள் பாக்குகளை வைக்கலாம் ஆனால் ஒவ்வொருவர் ஒவ்வொரு மூலையில் வைத்தால் எடுப்பதற்கு இலகுவாக இருக்கும் எனக்கூறினார்கள்.உடைகளைக்காயப்போடுவதற்கு கொடியில் இடம்போதாமையால். நான்களாகவே ஒரு கொடியை அமைத்தோம்.பின்னர் ஒரு பிரச்சனைவந்தது அனைவருக்கும் ஒரே பாணியில் உடைகள் தந்ததால் உடைகள் மாறுபட ஆரம்பித்தது அதனால் ரூமிற்குள் கயிறுகளைக்கட்டி உடைகளைப்போட்டோம்.முக்கியமாக அதைசெய்யவேண்டாம் என்று கூறினார்கள்,திடீர் என்று ஒரு நாள் ரூம் பார்க்கவருவோம்  ரூம் கிளீனாக வைத்திருப்பதற்கும்புள்ளிகள் உண்டு எனக்கூறிவிட்டார்கள்..
இதைவிட 5 ஸ்ரார் ஹோட்டல்களில் எப்படி உணவை உண்பது என்று ஒரு ஒத்திகை செய்துகாட்டினார் எமது குழுவுக்குப்பொறுப்பானவர்.
முள்கரண்டி மற்றும் உண்பதற்குத்தரப்படும் ஏனைய கரண்டிகளை எமக்கு இருபக்கமும் வைத்தால் சாப்பிட்டு முடிந்துவிட்டது என்று அர்த்தமாம்.வெயிட்டர் சொல்லாமல் கொள்ளாமல் பிளேட்டை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்.அதே போல் மேலும் கீழுமாக வைத்தால் சாப்பிட்டு முடியவில்லைஎன்று அர்த்தமாம்.ஒவ்வொரு வைன் குடிக்கும் கிளாஸ்கள்.செறிவுக்கேற்ப கிளாஸ்கள் வேறுபடும்விதம் என்பவைபற்றியும் கற்பிக்கப்பட்டது.

5 ஸ்ரார்  ஆவது பரவாயில்லை ஒரு இராணுவ இரவு போசன விருந்தில் எப்படி உண்ணவேண்டும் என்று கூறினார்கள்.ஹெஸ்ட் சாப்பிட இருக்கும்போது அனைவரும் இருக்கவேண்டும்.அவர் உண்ண ஆரம்பிக்கும்போது உண்ண ஆரம்பிக்கவேண்டும்.அவர் வைன் குடித்தால் குடிக்கவேண்டும்.அவர் குடித்து முடித்தால் எம்மிடம் மேலதிகமாக வைன் இருந்தாலும் குடிக்கக்கூடாது.சாப்பிட்டு எழுந்துசென்றால் சாப்பாட்டை நிறுத்தவேண்டியதுதான்.(என்ன கொடுமை சரவணா)

(எமக்கு நடக்கும் இச்செயற்பாடுதான் ஏனைய அனைத்துமாணவர்களுக்கும் நடக்கும்.எமக்கு விடயங்களைக்கற்பிப்பவர்கள் எமக்கு பொறுப்பானவர்கள் அனைவருமே இராணுவ சீருடையில்தான் இருந்தார்கள்.ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையின் வேறுவேறு பிரதேசங்களில் இருந்துவந்த ஆசிரியர்கள்.ஆசிரியர்களுக்கு பயிற்சிகொடுத்து  எம்மைப்போன்ற மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றார்கள்.என்னடா ஆர்மி இப்படி தமிழில் கதைக்கிறாரே என்ற ஆச்சரியத்தை இந்தடீட்டியல்தான் நீக்கியது.)

முரண்பாட்டுமுகாமைத்துவம்-மிகவும் பயனுள்ளதாக அமைந்தவிரிவுரை இதுதான்.கண்டீனுக்கு முன்னால் சகலதமிழ் மாணவர்களையும் ஒன்றுகூட சொன்னார்கள்.அனைவரும் வந்து அமர்ந்தோம் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் நீங்கள் கூறலாம் என்று  எமக்கு பொறுப்பாக இருந்த ஒரு லெப்டினல் கூறினார்.எமது கூட்டத்தில் இருந்து ஒருவன் எழும்பிக்கூறினான்.. "நாங்கள் கதைத்தால் கேர்ல்ஸ் திருப்பி கதைக்கினம் இல்லை" என்று.அனைவரும் சிரித்துவிட்டோம்.அதோடு அவன் ஒரு பெண்ணைக்காட்டிவிட்டான்.அவளவுதான் அந்தப்பெண் அழ ஆரம்பித்துவிட்டார். உடனே லெப்டினல் அவனுக்கு பேசினார் இப்படியா  பப்பிளிக்காக நடந்துகொள்வது? அந்தப்பெண்ணை ஏன் அடையாளம் காட்டினீர்கள்...பேசவில்லை என்பதுடன் நிறுத்தியிருக்கலாமே என்று பேசினார்.உடனே இன்னொருவன் எழும்பிக்கூறினான் லெப்டினலுக்கு சேர் நீங்கள் என் நண்பனிடம் மன்னிப்புக்கேட்கவேண்டும்...என்ன இருந்தாலும் நீங்கள் இப்படி பப்பிளிக்காய் என்ர பிறண்டை பேசியிருக்கக்கூடாது..அதால மன்னுப்புக்கேளுங்கள்...லெப்டினல்-அதாவது உங்கள் நண்பன் ஒரு பெண்ணை பப்பிளிக்காக கதைக்கவில்லை என்று அடையாளம்காட்டியது சரி அதற்கு அப்பெண் அழுவதும் சரி...  அதற்காக நான் பேசியது பிழையா? ஓம் சேர் என்னதான் இருந்தாலும் பப்பிளிக்கா என் பிறண்டை பேசியிருக்ககூடாது..எங்களுக்கு என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை சிறிது நேரம் அதிர்ச்சியாகிவிட்டது இங்கே என்னதான்யா நடக்குது?.. நாம் கூறினோம் நீ இருடா சேர் பேசினதில பிழையில்லை என கூற... நீங்கள் என்ன அவருக்கு வாழியாடா பொத்துங்கடா என்று கத்திவிட்டான் அவன்.. பின்னர் ஒருசிலர் எதிர்ப்புத்தெரிவிக்க..அப்படியே சலசலப்புத்தொடர்ந்தது..உடனே லெப்டினல் ஒரு குண்டைத்தூக்கிப்போட்டார் இவளவு நேரம் நடந்தது ஒரு  நாடகம். முன்னரே ஏற்பாடு செய்துதான் அந்த மாணவன் எழும்பிக்கேட்டிருக்கின்றான் அவள் என்னிடம் கதைக்கவில்லை என அதே போல் என் நண்பனிடம் மன்னிப்புக்கேட்கவேண்டும் என ஒருவன் எழும்பிக்கத்தியதும் ஏற்பாடாம்.ஆனால் அவற்றை அப்பெண்ணிடம் யாரும் முன்பேகூறவில்லை அதனால்தான் அழுதுவிட்டார்.ஏதோ பிரச்சனையாகியது சுமூகமாக முடிந்தது.

அதன்பின்னர் நமக்குள் முரண்பாடு ஏன் ஏற்படுகின்றது?எவ்வாறு அதைத்தவிர்த்துக்கொள்வது என்று கூறினார்.அதோடு பாலியல்கல்வியும் நடாத்தப்பட்டது.உண்மையில் பயனுள்ளபகுதி அதுதான்.இன்னமும் இந்தக்கல்விமுறை தொடர்பில் சமூகத்தில் மாற்றுக்கருத்துக்கள் இருந்துவருகின்றன.வெறும் சுகாதாரப்புத்தகத்தில் இருகும் உடலைப்பற்றிய அடிப்படைவிடயங்கள்பற்றிய தோலுரித்தல்மட்டும் இக்கல்வியில் போதுமானதல்ல என்பது பலருக்குபுரிந்தவிடயம்தான்.
அவர் கூறினார் இப்போதைய சமூகத்தில் மன நிலைபாதிப்படைந்தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள்.அவர்கள் மன நிலைபாதிப்படைந்தவர்களாக இருப்பதற்கு அவர்கள் காரணமல்ல.ஆனால் அவர்களிடமிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.முக்கியமாக பெண்கள்பாலியல் கொடுமையால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.சுற்றியிருக்கும் உறவுகளால்,ஆசிரியர்களால் ஏன் சொந்த தந்தையினால் கூட  பாலியல் தொந்தரவுக்குள்ளாகின்றார்கள் என்று கூறி அவருக்குத்தெரிந்த உதாரணங்கள் பல கூறினார்.ஒரு தடவை பாடசாலையில் இருக்கும் ஒரு மாணவிக்கு நடந்தவிடயம் இது.அவர் மிகவும் சுறுசுறுப்பானவர்,மிகத்திறமையான மாணவி ஆனால் போக போக அவர் மிகவும் சோகமடைந்துகாணப்பட்டார்,எடுக்கும் புள்ளிகள் மிக மோசமாகக்குறைந்தன முகம் மிக வித்தியாசமாக மாறத்தொடங்கியது.மாற்றத்தை அவதானித்த ஆசிரியர்கள் ஒன்றைக்கவனித்தார்கள்  அந்தப்பெண் வழக்கமாக காதுகளில் தோடு அணிபவர் இப்பொழுது அணிவதில்லை அதோடுகாதில் சிறு காயங்களும் காணப்பட்டன.விசாரித்ததில் தெரிந்தது குடித்துவிட்டு சொந்தத்தந்தையே அந்தப்பெண்ணை பாலியல் கொடுமைக்குள்ளாக்கியிருக்கின்றார்.அந்தப்பெண்ணுடன் உடலுறவுவைத்துக்கொள்ளும்போது காதைக்கடிப்பாராம் அதற்குத்தோடு தடையாக இருப்பதனால் தோடு அணியவேண்டாம் என்று கட்டளையிட்டிருக்கின்றார் அந்தத்தந்தை. பின்னர் அப்பெண் மீட்கப்பட்டார்.  சொந்தத்தந்தையால் நடத்தப்பட்ட கொடுமை.பாலியல் விருப்பம் என்பது அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒன்றுதான் ஆனால் அதற்கான எல்லைகளை நாம் புரிந்துவைத்திருக்கவேண்டும். இதன் பின்னர் ஜனாதிபதி ராஜபக்ஸ அவர்கள் ஒரு சட்டம் இயற்றினார்.வீட்டில் 18 வயதுக்குக்குறைந்த பெண்பிள்ளைகள் இருந்து தாய் வெளி நாடு சென்றால் அதற்கு சேர்ட்டிபிக்கட்வாங்கியபின்னரே வெளி நாடுசெல்லமுடியும் என்பதுதான் அது.

அவர் மேலும் கூறினார் தனக்குத்தெரிந்த ஒரு ஆசிரியர் வெளித்தோற்றத்திற்கு மிகவும் பண்பாகவும் நல்ல நடத்தையுடையவராகவும் காணப்பட்டார்.அவரது வீட்டைச்சுற்றி ஒரு சம்பவம் நடந்துகொண்டிருந்தது அவரது வீட்டின் அருகில் உள்ள பெண்களின் கொடியில் காயப்போடும் உள்ளாடைகள் அடிக்கடி காணமல்போயின.இறிதியில் அந்த ஆசிரியரின் வீட்டில் 163 உள்ளாடைகள் கைப்பற்றப்பட்டன.அவர் அவ் ஆடைகளை எடுத்து அவற்றை முகர்ந்து சுயஇன்பம் அனுபவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றார்.ஆரம்பத்தில் இது தவறு என்று அவர் உணர்ந்திருந்தாலும் அவரால் அதைக்கட்டுப்படுத்தமுடியாமல்போனது.பின்னர் அவர் மன நலமருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இவையெல்லாம் நீங்கள் அடிக்கடி கேள்விப்படும் செய்திகள்தான்.இன்று நீங்கள் மாணவர்கள்  நாளை நீங்கள்தான் சமூகம் எனவே விழிப்பாக இருக்கவேண்டும்.

ஓரினச்செயர்க்கை பற்றி அறிந்திருப்பீர்கள் இப்பொழுது அதுவும் சமூகத்தில் முக்கிய பிரச்சனைதான்.சிறியவயதில் பெற்றோரிடம் இருந்து சரியான அன்பைப்பெறாத பிள்ளைகள் தம் பாலினத்திலேயே அத்தகைய தேவையைப்பூர்த்துசெய்யமுயலுவதன் விளைவே இதன் ஆரம்பம்.பெண்கள் ஓரினச்செயற்கையில் ஈடுபட்டால் லெஸ்பியன் என்றுகூறுவார்கள் ஆண்கள் என்றால் கேய் என்று கூறுவார்கள்.இத்தகையக அனுபவத்தைப்பெற்ற ஆண்,பெண்ணுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லாது போகும்.பெற்றோருக்குவிடயம் எதுவும் தெரியாமல் அவர்களுக்கு திருமணம் செய்துவைத்துவிடுகிறார்கள் ஆனால் திருமணத்தின் பின்னரான எதிர்ப்பாலருடனான உடலுறவில் சிறிதும் நாட்டமில்லாது போவதால் அவர்களது திருமணவாழ்க்கையே கேள்விக்குறியாகின்றது எனக்கூறினார்.
அவர்கூறியவை எல்லாம் சரிதான் ஆனால் இங்கே ஆசியாவில் உள்ள நாடுகளில் ஓரினச்செயற்கையாளர்கள் தொடர்பிலான விடயங்கள் கண்டுகொள்ளப்பட்டதாக தெரியவில்லை.சில நாடுகளில் ஓரினச்செயற்கையாளர்களின் திருமணமே அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான்.ஆனால் இங்கு சமூக ரீதியாக அது குற்றமாகவே கருதப்படுகின்றது.

பெண்கள் வயதானவர்களால் அதிகமாக பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்றால்  வாலிப ஆண்களை குறிவைப்பவர்கள் ஆண்டிகள்.அவர்களிடமிருந்தும் நீங்கள் உங்களைப்பாதுக்காக்கவேண்டிய  கடற்பாட்டில் இருக்கின்றீர்கள் என்றார் அவர்.இப்படி பல சம்பவங்களை நாம் அன்றாடம் செய்திகளில் அவதானித்துவருகின்றோம்.சரி இப்படியான சந்தர்ப்பங்களில் இருந்து எவ்வாறு தப்புவது என்று கேட்டார் கேட்டுவிட்டு கூறினார் பிரபல ரஸ்யப்பழமொழி இருக்கின்றது சந்தர்ப்பத்தைக்கண்டால் ஓடிவிடு அதாவது தவறு செய்வதற்கான சந்தர்ப்பத்தைக்கண்டால் ஓடிவிடு என்பதுதான் அது. சந்தர்ப்பம் கிடைக்காதவரையில் நாம் எல்லோருமே நல்லவர்கள்தான் எனவே சந்தர்ப்பத்தைத்தவிர்த்துக்கொண்டாலே போதுமானது என்றார்.அண்ணளவாக 1.30 மணித்தியாலங்கள் விரிவுரை செய்திருப்பார் போரடிக்காமல் இருந்து கேட்கமுடிந்தது.எந்த ஒரு மேடைப்பேச்சையும் குறைந்தபட்சம் 20 நிமிடத்திற்கு மேல் அக்ரிவாக அவதானிக்கமுடியாது.ஆனால் அந்த லாஜிக்கே அவரது ஸ்பீச்சில் உடைந்தது என்றுதான் கூறவேண்டும்.கண்களை மூட சொன்னார். நீங்கள் உங்கள் வீட்டிற்கு திரும்பி செல்கின்றீர்கள் வாசலில் உங்கள் தாய் தந்தை உங்களை வரவேற்கின்றனர்.உங்கள் தாய் தந்தையின் கண்களில் கண்ணீர் உங்களை முதல் முதலில் பிரிந்திருக்கின்றார்கள்.உங்கள் தாய் அழுதுகொண்டு ஓடிவந்து உங்களை அணைத்துக்கொள்கின்றார்.உங்களை உச்சிமுகருகின்றார்.தந்தை உங்களை அரவணைத்துக்கொள்கின்றார்.இப்போது உங்கள் பெற்றோருடன் வீட்டுக்குள் நுழைகின்றீர்கள்.உங்களை சாப்பாட்டு மேசைக்கு அழைத்துச்செல்கின்றார் உங்களது தாயார் அங்கே உங்களுக்கு பிடித்த உணவு சமைத்துவைக்கப்பட்டிருக்கின்றது,தந்தையும் தாயும் உங்களுக்கு உணவுபரிமாறுகின்றனர் என்று கூறிமுடித்துவிட்டு கண்களைத்திறவுங்கள் என்று கூறினார்.வீட்டின் சிந்தனை இல்லாமல் 8 நாட்கள் வீட்டைப்பிரிந்திருந்தோம் திடீரென்று இப்படி  சகலவற்றையும் நினைவுபடுத்திவிட ஒரு மாதிரித்தான் ஆகிவிட்டது.விரிவுரையைக்கேட்டுக்கொண்டிருந்த அனேக பெண்கள் அழுதுவிட்டார்கள்.

தொடரும்...

Friday, 22 February 2013

ஆர்மி ரெயினிங்க் அனுபவம்


காம்ப் வாசல்

உள்ளே இருந்து வெளியே
உண்மையில் அதன் பெயர் தலைமைத்துவப்பயிற்சி பல்கலைக்கழகத்திற்குள் உள்ளீர்க்கப்படும்மாணவர்களுக்கு தலைமைத்துவத்தையும் நேரிய சிந்தனையையும் மேம்படுத்தும் முகமாக உருவாக்கப்பட்டபயிற்சி.இதற்கு  நம்மவர்மத்தியில் பலத்தஎதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டன. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதை நிறுத்தாமாறு 2011 இல் கோரியது பயிற்சிக்கு சென்றமாணாவி இறந்தமையே முக்கியகாரணம்.அது தொடர்பான செய்தி(குறித்த இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மாணவி மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து பதுளை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மாணவி உயிர் இழந்து உள்ளார். உயிரிழந்தவர் நிசாந்தி மதுஷானி ( வயது – 24 ) என்பவராவார். ஒவ்வாத பயிற்சியும், மாசு நிறைந்த சூழலில் தங்கி இருந்து அசுத்தக்காற்றினை சுவாசித்ததன் காரணமாக சுவாசப் பையினுள் கிருமிகள் புகுந்ததனாலேயே இவ் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. )

எதிர்ப்புக்கள் அரசாங்கத்தின் மீதுகேஸ்கள் என எதுபோடப்பட்டாலும் அசராமல் பயிற்சி நடந்துவருகின்றது.எனக்கும் எனது நண்பர்களுக்கும் தலைமைத்துவப்பயிற்சிக்காக லெட்டர் வீடுதேடிவந்தது.ஊரிலோ வீட்டிலோ அல்லது வேறு எங்கும் தலைமைத்துவப்பயிற்சிக்காக லெட்டர் வந்திட்டுதா என்று யாருமே வாய்தவறிக்கூட கேட்டுவிடமாட்டார்கள்.சகலரும் கேட்பது"ஆர்மி ரெயிங்கிற்கு வந்திட்டுதா?" என்றுதான்.ஆரம்பத்தில் ரெயினிங்கைப்பற்றி எதுவுமே தெரியாதாகையால் ஆர்மி ரெயினிங்க் என்றதும் ஏ.கே 47 ஐ கையில் தருவார்கள்.டாங்கியில் ஏறியிருந்துகொண்டு அமெரிக்காவில் ஆர்மி ரெயினிங்கைப்பெறும் பாடசாலைமாணவர்கள் போல் டாங்கியில் ஏறியிருந்து பேஸ்புக்கில் ஒரு போட்டோவை போடலாம் என்று சின்னப்பிள்ளைத்தனமான கற்பனை செய்தால் ஏமாற்றம்தான்.ஆகவே சென்றவருடம் சென்றமாணவர்கள் ரெயினிங்கைப்பற்றிகூறியவற்றைகேட்டு நடக்கப்போவதை ஓரளவு புரிந்துகொள்ளவேண்டியதுதான்.ரெயினிங்கிற்கு மாணவன் தெரிவானதும் லெட்டர் வரும்.அதில் என்னென்ன பொருட்கள் கொண்டுவரவேண்டும் என்று ஒரு லிஸ்ட் போடப்பட்டிருக்கும்.
அந்த லிஸ்ட் இதுதான்....

கன்வஸ் ஷூ,2 ஜீன்ஸ்,புல்சிலீப் 2 ,பழைய யட்டியைக்கொண்டு செல்லமுடியாதாகையால் புதிதாக 4,5 வேண்டி செல்லவேண்டும்.எல்லாமாக சேர்த்து செலவு குறைந்தது 15 000 ரூபாவேண்டும்.இவளவும் செலவழித்து சகலவற்றையும் பக்செய்தபின்னர் நண்பர்களுடன் பயணம் ஆரம்பமானது.வேறு வேறு இடங்களில் தலைமைத்துவப்பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.எனக்கும் எனது நண்பர்களுக்கும் ரந்தெனிகலவில்தான் பயிற்சி.வா ஒண்ணாசேர்ந்து நாசமாய் போவம்னு பயணத்தை ஆரம்பிச்சாச்சு.பஸ் யாழ்ப்பாணத்தில இருந்து 6.30 க்கு புறப்பட்டது போய் 10.30 க்கு மதவாச்சிக்கு அருகில் உள்ள இக்கிரிக்கெலாவை என்ற இடத்தில் சாப்பிடுவதற்காகவும் இன்னபிறகருமங்களுக்காகவும் பஸ் நிறுத்தப்பட்டது.பஸ்பிரயாணம் எதிர்பார்ப்பு ஏப்படி இருந்தது ரியாலிட்டி எப்படி இருந்தது என்று அருகில் உள்ளமீம்ஸைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.ஆனால் அங்கிருந்துவரும்போது கண்ணுக்கு குளிர்ச்சியாகத்தான் இருந்தது. நேரே ரந்தெனிகலவில்தான் நான் போஸ்ட்டை நிறுத்தியிருக்கவேண்டும் ஆனால் இக்கிரியில் நிறுத்தியதற்குக்காரணம் இருக்கின்றது.பஸ் ஒரு கடையின் முன்னால் நின்றது சாப்பிடலாம் என்று ஒரு ரொட்டியின் விலையைக்கேட்டால் ஒரு ரொட்டி 50 ரூபா.கொய்ய்யாலே யாழ்ப்பாணத்திலே அதுவும் பாதம்பரியிலேயே 25 ரூபாதான்.என்ன செய்வதென்று யோசித்துவிட்டு வெறும் ரீயைமட்டும் குடித்துவிட்டேன்.உண்மையில் வடக்கில் இருந்து தெற்கிற்கு பஸ்ஸில் செல்லும் அனைத்துப்பயணிகளும் இதே பிரச்சனையை எதிர் நோக்குகின்றார்கள். நாம் பதிவு செய்து செல்லும் பஸ் நிறுவனத்துடன் இவ்வாறான கடை உரிமையாளர்கள் ஒப்பந்தம் செய்துவைத்துள்ளார்கள்.அதாவது இடையில் எங்கேயாவது சாப்பாட்டுக்கு,வேறு அவசரத்திற்கு பஸ்ஸை நிறுத்தவேண்டும். எனது கடையில் பஸ்ஸை நிறுத்தினால் இவளவுபணம் தருவேன் என்பதுதான் ஒப்பந்தம்.பஸ்ஸில் செல்லும் பிரயாணிகளுக்கு வேறு சொயிஸ்கிடையாது அதே கடையில் சாப்பிடவேண்டியதுதான்.

கடைக்காரனிற்கும் பிரயாணிகள் அனைவரும் ஒரு நாள் வாடிக்கையாளர் மட்டுமே எனவே உணவின் தரத்தைப்பற்றியோ விலையைப்பற்றியோ அவன் கவலைப்படத்தேவையில்லை.ஒரு சோடாவின் விலை 90 ரூபா.ஆனால் விற்கும் விலை 100 ரூபா ஏன் என்று கேட்டதற்கு கூல்செய்வதற்கு 10 ரூபாவாம்.ஒருவேளை அந்த ஏரியாவிற்கே அவன்தான்  பில் கட்டுகின்றானோ என்று கடுப்பாகின்றது.போத்தலிலே விற்கக்கூடிய அதிகபட்சவிலை 90 என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.கூல் பண்ண அவளவு செலவா என்று கேட்க (நக்கலாக) முடிந்தால் கேஸ்போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினான்.ஒரு வேளை சிராணியே போய்ட்டாவாம் இவன்யாரு புடுங்க என்று யோசித்தானோ என்னவோ?பேசாமல் வந்துவிட்டேன்.


பஸ்அண்ணளவாக  காலை 5.30 க்கு ரந்தெனிகல பயிற்சிப்பாசறையை சென்றடைந்தது.போனதும் ஒருவர் வந்து பக்கத்தில் இருக்கும் ரூம்களில் தங்குமாறு கூறினார் காலையில்  அனைவருக்கும் ரீ வரும் என்றும் கூறினார். மதியம்ஆனதும் அனைவரையும் காம்பின் கிரவுண்டிற்கு வரும்படி அழைத்தார்கள் பதிவு செய்வதற்காக.அது ஒரு வழக்கமான போமாக இருக்கவில்லை.ஆக வீட்டில் இருக்கும் நாயைப்பற்றி மட்டும்தான் கேட்கவில்லை ஏனைய அனைத்தையுமே கேட்டிருந்தார்கள்.பெற்றோரின் வேலை,தொலைபேசி,வீட்டின் அருகில் இருக்கும் பொலீஸ்ரேசன்,வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவில் தெரிந்த 2 அரச உத்தியோகத்தர்களின் பெயர்கள் போன் நம்பர்கள் என்று 4 பக்கத்திற்கு கேள்விகள் அடுக்கப்பட்டிருந்தன.ஆண்கள் பெண்கள்(சிங்கள,தமிழ்,முஸ்லீம்) என அண்ணளவாக 800 பேர் வந்திருந்தோம் அனைவருக்கும் இந்த பதிதல் நடந்தது.பதிவு முடிந்ததும் ரக் சூட் 2,2 ரீசேர்ட்களும் தந்தார்கள் இலவசமாகத்தான்.காம்பில் எல்லாமே இலவசம்தான்.அந்த ரீசேர்ட்டில் பியூச்சர் லீடேர்ஸ் என்று எழுதப்பட்டிருந்தது.எல்லாம் முடிய.குரூப் குரூப்பாக பிரித்தார்கள்.ஒரு குறூப்பில் கட்டாயம் சிங்கள,தமிழ் மாணவர்கள் இருக்கவேண்டும்,சிங்களம் தனியவோ தமிழ் தனியாகவோ ஒரு குரூப் இருக்கமுடியாது.அப்படியானால் முஸ்லீம்? ஒட்டு மொத்தமாக அனைத்துமுஸ்லீமக்ளையும் தனியான ஒரு பவிலியனில் தங்கவைத்துவிட்டார்கள் இது காம்பில் இருப்போர் அவர்களாக எடுத்த முடிவல்ல.முஸ்லீம் மாணவர்களே தமக்கு தனியாக இடம் வேண்டும் என்று எழுதிக்கொடுத்திருக்கின்றார்கள்.தொழுகை செய்வதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காக ஒதுக்கப்பட்டதாம்.

எமது குறூப்பில் 4 தமிழ் 5 சிங்களம்,அவர்களை சந்தித்ததும் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் கதைக்க ஆரம்பித்தோம்.ஆங்கிலத்தில் பேசுவதற்கு வாய்ப்புக்கள் கிடைக்காமையால் மிகவும் கஸ்ரப்படவேண்டியாகிவிட்டது அவர்களுக்கும் அதே நிலைதான்.எமக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஒரு சிறிய வீடு ஹோலில் 5 டபிள் பெட்கள் ஹோல் சிறிய கோல்தான். நாம்தான் இறுதியாக சென்றவர்கள் என்பதால் இடம் கிடைக்காது போனது.அதோடு அந்த ஹோலில் தங்கினால் மூச்சுவாங்கக்கடினமோ என்றும் தோன்றியது.அந்த வீட்டிற்கு அருகாமையில் அதேபோன்றதொரு சிறிய வீடு(pavillion) பிறீயாகத்தான் இருந்தது.உடனே அங்கே போய் எமது உடமைகளைவைத்துவிட்டோம்.அங்கு யாரும் இல்லை.பின்புதான் சொன்னார்கள் அது அடுத்த குரூப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம் என்று.ஓடிச்சென்று எமது குறூப்பிற்குப்பொறுப்பான கொமாண்டரிடம் நிலமையை சிங்கள மாணவர்களைக்கொண்டு விளக்கி இறுதியில் ரூம் கிடைத்தது.உண்மையில் அந்த வீட்டில் இருக்கவேண்டாம் என வேறுலெப்டினல்கள் கூற மாறி மாறி 2பவிலியனுக்கும் அலையவேண்டியதாக இருந்தது.ஒரு வழியாக ரூம் கிடைத்தது.

அந்த நாள் இரவில் சிங்கள  நண்பர்களுடன் எம்மை அறிமுகப்படுத்துக்கொண்டோம்.முதல் முதலில் பெயரைக்கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளல் கடினமாக இருந்தது.அதைவிட ஒரே பெயரில் எமது pavillionனிலேயே 3 நண்பர்கள் இருந்தார்கள்.அடுத்த நாள் காலையில் பொதுக்கூட்டமொன்றில் இனிதொடர்ந்துவரும் நாட்களில் நாம் நேரகிரமத்தின்படி என்னென்ன செய்யவேண்டும் என்றுகூறினார்கள்.பெயரைப்பதிவு செய்யும்போது ஒரு புத்தகம்தந்தார்கள் அதில் நேர அட்டவணை தரப்பட்டிருந்தது.

அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கவேண்டும்(எதுக்கு நாம மூச்சா போகவா?) இதுவரை அதிகாலை 4 மணியை கடிகாரத்தில்காணாத என்னைப்போன்ற ஜீவன்களுக்கு விழுந்த முதலாவது பேரிடி அதுதான்.அடுத்து 5 மணிக்குள் முகச்சவரம் எல்லாம் செய்து காலை 6 மணிக்கு மைதானத்தில் அனைவரும் சமூகம்தரவேண்டும்"சிறீலங்கா மாதா அபி சிறீலங்கா நமோ நமோ நமோ மாதா" தேசியகீதம் பாடுவதற்கு.சரின்னு அடுத்த நாள் காலை 4 மணிக்கு எழுந்தோம்.குளிர்வேற ஜில்லின்னு இருந்திச்சு அதோட குளிக்கவேண்டியதாயிற்று.நாம் குளித்தோம் ஆனால் சிங்கள நண்பர்கள் குளிக்கவே இல்லை.என்னடா கொடுமைன்னு பார்த்தா அவர்கள் இரவில்தான் குளிப்பார்களாம் ஓகோ..காலில் ஸூ அவர்கள் தந்த ரக்சூட்,பியூச்சர் லீடேர்ஸ் பொறித்த வெள்ளை ரீசேர்ட்டுடன்
காலை 6 மணிக்கு சிறீலங்காதாயே பாடிவிட்டு எம்மை அப்படியே வீதிக்கு அழைத்துசென்றார்கள்.சுற்றிவர மலைதான்.வீதி ஏறி இறங்கி அதுபாட்டுக்குசென்றுகொண்டிருந்தது.அனைவரும் லைனில் சென்றோம்.சிறிது தூரம் நடத்தி சென்றார்கள் பின்னர்.ஓடுமாறு கூறினார்கள் மலையில் உள்ள வீதியாயிற்றே மூச்சிரைக்க ஓடினோம்.பயிற்சிகள் ஆரம்பம் கையைத்தூக்கிக்கொண்டு ஓடினோம் இடையில் நடந்தோம் துள்ளினோம்.காலையில் பயிற்சிசெய்தல் ஆனந்தம்தான்.ஆனால் ஸூவேறு காலைக்கடித்துக்கொண்டிருந்தது.சகல் குறூப்களிலும் பெண்களும் கூடவே இருப்பார்கள் சோ பெண்களும் சேர்ந்துதன் பயிற்சிகளை செய்துகொண்டிருப்பார்கள்.ஆகவே உற்சாகமாக அனைத்து ஆண்களும் பயிற்சிகளை செய்தோம்(எவளவு நேரம்தான்  நானும் களைக்காதமாதிரியே நடிக்கிறது?).பயிற்சி முடிந்ததும் மெஸ்ஸிற்கு உணவிற்காக செல்லுமாறு கூறினார்கள்.வரும்போது பிளேட் கொண்டுவர சொன்னார்கள் இல்லையா.ஆகவே மெஸ்ஸில் போய் லைனாக ஒரு கையில் கோப்பை மறுகையில் கப்புடன் நின்றோம் சாப்பாட்டிற்காக.எல்லாம் செல்ப்சேர்விஸில்தான் .அதுசரி காலைசாப்பாடு என்னவென்று நினைக்கின்றீர்கள் சோறு.வழக்கமாக மதியம் சோறுசாப்பிடுவதே எனக்கு சற்றுகடினமானவிடயம் அங்கே பலவேளைகளில் 3 வேளையும் சோறுதான் போடுவார்கள்.கறி ஒரு அண்டாவில் கோழிக்குழம்பு அல்லது மீன் குழம்பு வெஜிரேரியனுக்காக தக்காளிசம்பல் செய்துவைத்திருந்தார்கள்.எனக்கு மச்சம் அவளவு பழக்கமில்லை "சைவமும் தமிழும் ஓங்கும்" அதெல்லாம் ஓங்கட்டும் என்று கோழிக்குழம்பை போட்டு சாப்பிட்டுப்பார்த்தேன்...ம்ம்ம்ம் நன்றாகத்தான் இருந்தது.கோழிக்குழம்புடன் உருளைக்கிழங்குபோல் ஒரு கிழங்கில் கறிவைத்திருந்தார்கள்.உணவில் சிங்கள வாடைதான் அடித்தது என்றாலும் அதுவும் ஒரு புதிய அனுபவம்தானே.அதோடு மீன்சம்பல் போன்றதொரு சம்பல் மிகரேஸ்ராக இருந்தது.ஆனால் வெறுப்பேத்திய ஒரு கறியும் இருந்தது.அன்னாசியை வெட்டி உறைப்புக்கறிசெய்திருந்தார்கள் உருளைக்கிழங்கு என்று நம்பி அதைவாய்க்குள்போட்டபோது.வாயினுள் சென்றதும் உறைத்தது கடித்ததும் இனித்தது சத்தியே வந்துவிடும்போல் இருந்தது.சிங்கள நண்பர்களைக்கேட்டதில் அவர்களது சைட்டில் அது பிரபலமான உணவாம்.சாப்பாட்டைப்பொறுத்தவரை 3 வகை கறிகள்.கோழி/மீன் குழம்பு,பயற்றங்காய் கறி,மீன்சம்பல் பலவேளைகளில் சோறு.ஒருசில நாட்களில் காலை உணவாக பாண் தந்தார்கள் அரைறாத்தல்பாண் பாணும் இல்லையானால் கடலை/சுண்டல்.இவ்வாறு தரப்படும் உணவுடன் அப்பிள் அல்லது ஒரு யோகட்டும் தருவார்கள்.ஆரம்பத்தில் வழமையான உணவை விட அவர்களது உணவு வித்தியாசமான ஸ்ரைலாக இருந்ததால் பிடித்துக்கொண்டது போகபோக வெறுத்துவிட்டது மொத்தமாக 14 நாட்கள் அங்கே இருந்தோம்5,6 நாட்களில் வீட்டுச்சாப்பாடு நினைவுக்கு வந்தது.அம்மா சுடும் ஓட்டை இல்லாத உழுந்துவடையை ஆராய்ச்சிசெய்து அம்மாவை அடிக்கடி நகைச்சுவையாக இமிட்டேட் பண்ணும்போது அம்மா சொல்லுவார் வர்ரவளின்ர சமயலை சாப்பிடும்போது தெரியுமென்று ஆனால் அவளவு காலம் இடம்கொடுக்காமல் வெறும் 14 நாட்களில் வீட்டுச்சாப்பாட்டின் அருமை புரிந்துவிட்டது வேறுகதை.4,5 நாட்களின்  பின்னர் காம்பிற்கு வெளியில் 3 கடைகள் இருந்ததை அறிந்துகொண்டோம்.அத்தனையும் சாப்பாட்டுக்கடைதான்.அதில் ஒருகடையை ஒரு இராணுவவீரர் வைத்திருந்தார்.அங்கு ரொட்டி நன்றாக இருந்தது.மில்ரி ரொட்டி இல்லையா காய்ந்துபோய் இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும்.ஒரே ஒரு நாள் அங்கே சாப்பிடும்போது நாவில் வேலைசெய்யமறந்த அனைத்து நரம்புகளும் வேலைசெய்ய ஆரம்பித்ததை உணரமுடிந்தது.எமது ரூமிற்கு வந்து ரொட்டி என்றால் அதுதான்யா என்று ஓகோ  என்று வாய்தவறிப்புகழ்ந்துகதைத்துவிட்டோம்.இதே போல் வேறு சில நண்பர்களும் அவர்களது ரூம்களில் கதைத்துவிட.மெஸ் சாப்பாட்டின் மீதிருந்த கடுப்பின் காரணமாக அத்தனை பேரும் படைஎடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.வழக்கமாக நாம் செல்லும் ரைமில் சென்று ரொட்டியை கேட்டால் ரொட்டி நா என்று பதில்வந்தது.ரொட்டி நாய் என்றால் சம்பல் பூனையா? இல்லைடா ரொட்டி இல்லையாம்.சோ  ரொட்டிக்கான ஓட்டம் தொடங்கியது.வழக்கமாக லெக்ஸர் 4.30 போல் முடியும் அப்போது விழுந்தடித்து ரொட்டிக்காக ஓடினோம்.முந்திக்கொண்ட குழுவுக்கு ரொட்டிகிடைத்தது.

பெரியஹோல்தான் மெஸ் அங்குபோடப்பட்டிருக்கும் கதிரைகளில் அமர்ந்து எமக்குத்தரப்பட்ட உணவை உண்டுமுடித்தோம்.பின்னர் ஒவ்வொரு குழுவையும் தனித்தனியாக அழைத்துசென்று லெக்ஸர் செய்தார்கள்.ஒவ்வொரு குழுவுக்கும் வேறுவேறு பயிற்சிகள்.ஒரு குழு யோகாசனத்திற்கு சென்றுவிட்டது.ஒரு குழுவுக்கு லெக்ஸர்.முதலில் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்தினார்கள்.எமது பயிற்றுவிப்பாளர்கள் அனைவரும் இராணுவ சீருடையிலேயே இருந்தார்கள் ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருந்தாலும் போக போக இராணுவ சீருடை பழகிவிட்டது.மேஜர்.லெப்டினல்,கோப்ரல்கள் எல்லோரும் எம்முடன் பிறண்ட்லியாகவே பழகினார்கள்.அங்கே லெப்டினல்,கோப்ரலாக இருந்த பலருக்கு சிங்களம்மட்டுமே தெரிந்திருந்தது ஆங்கிலமோ தமிழோ தெரியவில்லை ஆகையால் 2 ரான்சிலேட்டர்கள் இருந்தார்கள். சிங்களத்தில் கதைப்பதை தமிழில் ரான்சிலேட்செய்வதற்கு.

இதுவரை ஹோஸ்ரல் லைபை அனுபவித்தது கிடையாது.எனவே ஒரே அறையில் 3 நண்பர்களுடனும் அந்த சிறிய வீட்டில் வேறு சிங்கள நண்பர்களுடன் ஒன்றாக இருந்தமை புதிய அனுபவம்தான்.பயிற்சியின் இறுதியில் மேஜேர்.ஜென்றல் கூறினார் இதுவரை எந்த ஒரு சிறியவிடயத்திற்கும் உங்கள் பெற்றோரை மட்டும் நம்பியிருந்த அவர்களில் மட்டுமே தங்கியிருந்த நீங்கள் இங்குவந்த 14 நாட்களில் உங்களை நீங்களே சகல விடயங்களிலும் பராமரிப்பதற்கு பயிற்றுவித்திருக்கின்றோம்...என்றார்,முற்றிலும் உண்மையான ஒரு விடயம். எம்மோடு வந்த சில அல்லது பல மாணவர்களின் வீட்டில் இந்த பயிற்சிக்கு பங்குபற்றாதவரை அவர்கள் சாப்பிட்டுவிட்டு கோப்பைகளை  கழுவாமல் சிங்கிலே போட்டுவிட்டு வருபவர்களாகவோ...தமது உடைகளை துவைக்கும் பொறுப்பை தாயிடமே விட்டுவிடுபவர்களாகவோ தமது சூக்களை தாமே துடைக்க,சுத்தம் செய்யாதவர்களாகவோ இருந்திருக்ககூடும்.ஆனால் பயிற்சி நிலையத்துக்குள் அந்தக்கதை எல்லாம் எடுபடாது.நீங்கள்தான் பல் விளக்கவேண்டும்.டி.வி பார்த்துக்கொண்டு சாப்பிடமுடியாது சாப்பிட்ட அரைவாசியில் வரும் காதலியின் மிஸ்கோலைக்கண்டு பதறியடித்துக்கொண்டு  சாப்பிட்டகுறையில் விரலைச்சூப்பிக்கொண்டு கோப்பையை போட்டுவிட்டு ஓடமுடியாது காரணம் கவரேஜும் இல்லை.
சோ ஒரு தனி நபராக நீங்கள் செய்யவேண்டிய அனைத்தையுமே நீங்கள்தான் செய்யவேண்டும் எந்த உதவியும் உங்களுக்குக்கிடைக்காது.

எமக்கு சிங்களம் அவளவாகத்தெரியாது.ஆகவே தட்டுத்தடுமாறி தமிழில் கதைக்கும் சிங்கள நண்பன் ஒருவன் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.அவன் பெயர் பிறின்ஸ்.போன 2 ஆவது நாளே சிங்களம் சிறிது சிறிதாக படிக்க ஆரம்பித்தோம் எல்லாம் வாய் வழியாகத்தான்.கூட வந்த வேறொரு நண்பன் நோட்புக்கில் வார்த்தைகளை எழுதிவைத்துகொண்டான்.அதிலும் பிறின்ஸ் என்ற சிங்கள நண்பன் தமிழ்கற்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தமிழ்ப்படம் பார்க்கின்றான்.. நான் மிகைப்படுத்தவில்லை உண்மை.அவர்களை வெற்றிகரமாக சென்றடைந்த ஹீரோ விஜய்தான்.விஜயின் பாடல்கள்தான் அவர்களிடம் மிகவும் பிரபலம்.எதை முதல் முதலில் சிங்களத்தில் அங்கே படித்தோமென்று நினைக்கின்றீர்கள்?தமிழ் கெட்டவார்த்தைகள்.உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளுக்குமான சிங்களம் அங்கே எமக்குக்கற்பிக்கப்பட்டது. நல்ல ஆரம்பம் ஹி ஹி.சிங்களத்தில் எது தெரியாமலும் இருக்கலாம் ஆனால் எவனாவது பப்பிளிக்காக போட்டுத்தாக்கினால் எம்மைபேசுகின்றானா அல்லது ஏதாவது கேட்கின்றானா என்று புரியவேண்டாம்?அதனால்தான் அந்த மூச்சுப்பயிற்சி.ஏதோ அதைத்தாண்டியும் சில பல வார்த்தைகளைக்கற்றுக்கொண்டோம்.சிங்களம் அறவே தெரியாத தமிழ் மாணவர்கள்,தமிழ் அறவே தெரியாத சிங்கள நண்பர்கள் அங்கு தாராளமாகவே இருந்தோம் இதனால் குரூப் அக்டிவிட்டியின் இடையிலான இடைவேளை மிக மகிழ்ச்சியாக சென்றது.காரணம் இதுதான் சிங்கள மாணவர்கள் ஒரு கெட்டவார்த்தையை கூறி மற்ற சிங்கள நண்பர்களுக்கு கூறுமாறு கூறினான்.எனக்குத்தான் எதுவுமே தெரியாதே நானும் கேட்டேன் அவனது முகம் வெளிறிவிட்டது உடனே சிங்கள நண்பர்கள் எக்காளமிட்டு சிரித்தார்கள்.அவனுக்கு புரிந்துவிட்டது அவனும் சிரித்தான் பின்னர் அதன் அர்த்தத்தைக்கேட்டு நானும் சிரித்தேன்.விடுவோமா அதேவேலையை அவர்களுக்கு நாங்களும் செய்தோம் பன்னாக கழிந்தது  அப்படியான நாட்கள்.

ஆர்மி ரெயினிங்க் 3 கட்டங்களாக நடைபெறுகின்றது. நாம் 2 ஆவது பச் சோ முதலில் சென்று அனுபவப்பட்ட நண்பர்கள் சில பல டிப்ஸ்தந்தார்கள். பெண்களிடம் போன் நம்பர் வாங்குவது எப்படி? இறுதி நாளில் சிங்கள,தமிழ்(எல்லாரும் தரமாட்டங்க) பெண்களிடமிருந்து ஓட்டோக்கிராப் வாங்கமுடியும் இலையாக இருந்தாயே சருகாக உதிர்ந்தாயே பாணியில் எதையாவது கிறுக்கிவிட்டு இறுதியில் இப்படிக்கு என்பதுடன் பேஸ்புக் ஐடி,நம்பரும் கிடைக்கும் என்ற செய்தி ஆரம்பத்தில் கேட்டதும் இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே.ஆனால் ஒன்று அதற்கு  பெண்களுடன் நன்றாக பழகவேண்டும்.எது பழகுறதா போய்தைரியமாக கதைத்தாலே பெரியவிஸயம் என்றபயம் ஒரு மூலையில் இருந்துகொண்டுதான் இருந்தது.

காம்பிற்குள்ளேயே ஒரு கண்டீன் இருந்தது.பொருட்களுக்கு அவற்றின் கம்பனி அரச சட்டங்களின் அடிப்படையில் பொறிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச உயர்ந்தவிலையாகிய மிகக்குறைந்தவிலைக்கு பொருட்களை அங்குவாங்க முடியும் ஏனெனில் விற்பதும் இராணுவம் ஏதாவது கோக்குமாக்குவிட்டால் கணக்குக்காட்டவேண்டுமாம்.அந்தக்கண்டீனுக்கு முன்னால்தான் அனைத்துமாணவர்களும் நேரம்கிடைக்கும்போதெல்லாம் அமர்ந்திருந்தோம்.வழக்கமாக நல்லூர் கந்தனிடம்  என்னைப்போன்ற பலர்/சிலர் செல்வது அங்கு கிடைக்கும் தாவணி பஞ்சாவி தரிசனத்திற்காக.முருகன் 2 வச்சிருக்கார் எனக்கு ஒன்னுகூட வாய்க்கல சரி கண்குளிர காட்சியாவது கிடைக்குமேன்னு பிரன்ஸிகூட சுத்தவேண்டியதுதான்.பக்தன்கூட 3 தடவை வலம்சுழியாகத்தான் சுத்துவான்.ஆனா நாம சிக்ஸாக்கா சுத்துவம்.சந்து பொந்து மூலை முடக்கு என அனைத்துஇடங்களிலும் இருந்து வரும் பெண்களையும் பார்க்கும்வாய்ப்பு வருடத்திற்கு 7 நாட்கள்.அந்த 7 நாட்கள் ஊகும்...சொர்க்கமேதான்.அண்ணளவாக அதே பீலிங்கை அந்த கண்டீனும் எமக்குத்தந்தது என்றுதான் கூறவேண்டும் தமிழ் என்பதுடன் நின்றுவிடாது சிங்களப்பெண்களும் வந்திருந்தார்கள். அந்தக்கூர்மையான அறிவிருக்கே சப்பா என்னபோட்டுவளத்தாங்களோ(மிக புத்திசாலிகள் என்று சொல்லவந்தேன்).அக்கரைக்கு இக்கரை பச்சைஎன்ற அர்த்தத்தில் சிங்களமாணவர்கள் ஏதோ காதில் ஓதினார்கள்.

ஒரு நாள் மாலைபொழுதில் 2,3 பட் 2 புட்போல்களைத்தந்து போய் விளையாடுங்கள் என்று எமது குரூப்பை கட்டவிழ்த்துவிட்டுவிட்டார்கள்,வழக்கமாக நடப்பதுபோல் பெண்களுக்கு வொலிபோல்.அப்போது ஒரு சிங்கள மாணவன் வந்து கேட்டான்..ஐ வோண்ற் ரு ரோல்க் வித் தமிழ் கேர்ஸ் பற் தே டோண்ற் ரிப்பிளே அஸ் மோஸ்ட் ஒப் த ரைம் வை? ஏது வையா அடபோய்யா அவனவன் பின்னால 4,5 வரிசமா திரிஞ்சே யாழ்ப்பாணப்பெட்டையள் கதைக்கிறாளவ இல்ல நீவேற(இல்லை நாயே நீ சொல்லுறது போனமாசம்னு நீங்க சொன்னா சாரி) பேசினாலேகற்புப்போடும் எண்டு நினைக்கிறாளவயோ என்னவோ? உணர்ச்சிவசப்பட்டு நான் தமிழில் அவனைப்பேச அவனுக்கு நான் பேசுவது விளங்கவில்லை ஆனால் சுற்றி நின்ற தமிழ் நண்பர்கள் கொல் என்று சிரித்துவிட்டார்கள்.பிறகு ஓரளவு ஆங்கிலத்தில் விளங்கப்படுத்தினேன் உங்களுக்கு மாத்திரமில்லைசாமி எங்களோடயும் அவையள் கதைக்கிறதுக்கு கஸ்ரப்படுவினம் சமூகம் அப்படி ஆக்கிடிச்சு என்று.ஆனால் வேறு மொழி கதைப்போரிடம் நம்பிபேசுவார்கள் என்றேன்.சரி என்று போய் விட்டான்.ஆனால் சிங்கள கேர்ல்ஸ் அப்படியல்ல போய் கதைத்தால் கதைப்பார்கள் என்று கூறிசென்றான்.ஓகோ மர்ச்சுவேர்ட்டான ஆக்கள் போல.சோ கதைப்பதற்கு ஒரு தைரியம்வந்ததுபோல்தான் இருந்தது.

சரி என்று ஒரு சிங்கள கேர்லிடம் கண்டீனில் வைத்து பேச்சுக்கொடுத்தேன்.அவளும் கதைத்தாள்..முதலில் போய்க்கதைத்ததும் முஸ்லீமா என்று கேட்டுவிட்டாள்..பின்னர்தான் தமிழ் என்றேன்.வற் இஸ் யுவர் நேம்?வட் ஸ் யுவர் ஸ்ரீம்? என்பதைத்தவிர வேறுஎன்ன கதைப்பது என்றுபுரியவில்லை.எப்படித்தான் பசங்க கடலைபோடுறாங்களென்றே தெரியலப்பா.( நான் அப்பவிங்கோ)பிறகு அவளாக கதையைத்தொடக்க எனக்குப்பின்னால ரண்டு சனிவந்து நின்னிச்சு.சனி என்று செல்லமாகத்தான் கூறுவதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஆர்மி ரெயினிங்கில் மேல் கூறியது போல் லொள்ளாக கிளுகிளுப்பாக நடந்ததைத்தவிர சீரியஸ்ஸான வாழ்க்கைக்குத்தேவையான பல விடயங்களை,தகவல்களைப்பெறமுடிந்தது.அதில் ஒன்றுதான் புதிய நட்பு,பழகிய 10 நாட்களிலேயே பலருடன் நெருங்கிப்பழகமுடிந்தது. கீத்தன்,வாகீசன் என்ற இருவரும் எனக்குக்கிடைத்த புதிய குளோஸ் நண்பர்கள்.அந்த ரண்டும்தான்  நான் கூறிய அந்த இரண்டு சனி.அவளுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போது எனக்குப்பின்னால் வந்து.மாமா ஐஸ்கிரீம் ஓனத என்றார்கள்.பின்பு மல்கடுனவா எப்பா என்றார்கள்  என்றார்கள்.பாவிகள் அரைகுறைசிங்களத்தில் சொன்னால் அவளுக்குவிளங்காதோ என்று நான் நினைக்க தெளிவாக ஆங்கிலத்தில் அங்கிள் வீவோன்ற் ஐஸ்கிரீம் என்று பெரிய ஆப்பொன்றை தூக்கிவைத்தார்கள்.ம்ம் அவள் சிரித்துவிட்டாள்..புரிந்துவிட்டது என்ன செய்வது பல்ப்பு வாங்கியது வாங்கியதுதான்.அன்றைய நாள் அதைவிட இனிமையான நாளாக அமையாது என்பதை புரிந்துகொண்டு பாய் சொல்லிவிட்டு எஸ்ஸாகிவிட்டேன்.அட நாம பல்புவாங்கிறதெல்லாம் சாதாரணமப்பா..ஹரிபொற்றர் ஓல்ஸோ டீல் த சேம் புரோப்பளம் ஒன் திஸ் சப்ரர்...என்னென்ன பயிற்சிகள் வழங்கப்பட்டது எப்படியெல்லாம் வதைத்தார்கள் நொந்துகொண்டதும் நோகாததும் அடுத்த பதிவில்..

Wednesday, 20 February 2013

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-எதிர்ப்பு-சிலம் டோக் மில்லியனர்


பதிவின் நீளத்திற்கு மன்னிக்க...


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி அடுத்த சீசனுக்கு பிரகாஸ்ராஜ் தெரிவுசெய்யப்பட்டு அதற்கான விளம்பரம் இடையிடையில் விஜய் டி.வியில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

படிச்ச படிப்பு என்னைக்குமே காப்பாத்தும்...

முதல் சீசனில் சூர்யா  கலக்கிசென்றிருந்தார். நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் சூரியா கண்கலங்கி  சிலபல வார்த்தைகள் பேசி அனைவருக்கும் நன்றிகூறி விடைபெற்றுசென்றது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

அந்த இறுதி எபிசோட்...ஆரம்பத்தில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி அதிகவரவேற்பைப்பெற்றாலும்.பின்னர் போக போக ஒரே பாணியிலான கேள்விகளால் பலர் சலிப்படைந்தார்கள் சோ..சாதாரணமான மக்கள் நிகழ்ச்சியில் பங்குபற்றுவது இடையில் நின்று கோபினாத்,சிவகார்த்தி,போன்ற விஜய் ஸ்ரார்களும்,ஸ்ருதி கார்த்தி,சிவகுமார்,சுஹாசினி,ஜெயம் ரவி,சத்தியராஜ் போன்றவர்களும் நிகழ்ச்சியில் பங்குபற்றி டி.ஆர்.பியை ஓரளவு தாக்குப்பிடித்தார்கள்.

கோபினாத்,சிவார்த்தி இருவரும்வந்ததுடன் மட்டுமல்லாது தமது சோகவரலாறுகளைச்சொல்லி கண்ணீர்சிந்திச்சென்றார்கள்..

சிவகார்த்தி  கண்ணீர் சிந்தியது...


கோபிநாத்...நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொடர்பில் மாற்றுப்பார்வைகள் பலவும் பதிவர்களால் முன்வைக்கப்பட்டன.மிமிக்ரி ஆர்டிஸ்டான சீனிப்பிரபு நீங்களும் வெல்லாம் ஒரு கோடி எவ்வாறு மக்களிடம் கொள்ளையடிக்கின்றது என்று தனது ஸ்ரைலில் ஒரு வீடியோவைவெளியிட்டிருந்தார்இன் நிகழ்ச்சிமீது வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு கோல் வெயிட்டிங்க்,எஸ்.எம்.எஸ் மூலமாக விஜய் டி.வி மக்களிடம் கொள்ளை அடிக்கின்றது என்பதுதான்.திறமைக்கு பரிசுதர விரும்பினால் பிரீகோல் வசதியை செய்திருக்கலாமே என்று பலர் கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள்.

இணையத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட அந்த எஸ்.எம்.எஸ் மேட்டர்

//நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் “கொள்ளை லாபம்.’
இதேபோல்தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பதிவு செய்ய குறைந்த பட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம்.
இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.
இதேபோலத்தான் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் தங்களை தேர்ந்தெடுக்க எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டுப் போடுங்க என்று கூறுகின்றனர். இதெல்லாம் நம் பணம் நம்மையறியாமலேயே கையை விட்டுப்போகிறது.(kalapam)//

திடீர் என்று இன்று விஜய்  டி.வியில் சிலம் டோக் மில்லியனர் பார்க்கமுடிந்தது. இசைக்கு ரகுமானுக்கு ஒஸ்காரை வாங்கிக்கொடுத்த படம்  ஆகையால் பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று எத்தனையோ தடவை யோசித்தும் ஒரு தடவைகூட பார்க்கமுடியாமல் போனது சோகமே விஜயில் வேரு 2,3 தடவைகளுக்குமேல் போட்டுவிட்டார்கள் இன்றுதான் பார்க்கமுடிந்தது.

படம் என்னை வெகுவாகக்கவர்ந்துவிட்டது.

இப்படம் இந்திய எழுத்தாளரான Vikas Swarup இன் கியூ அண்ட் ஏ நாவலைத்தழுவி எடுக்கப்பட்டது.
Vikas Swarup

சேரிப்புறத்து சிறுவர்களில் ஆரம்பிக்கின்றது கதை...

அமிதாப்பச்சனைப்பார்ப்பதற்காக மலக்குழிக்குள் விழுந்து எழுந்து சென்று அவரின் ஓட்டோக்கிராப் வாங்க முயலும் சிறுவன் ஆனால் அவர் ஓட்டோக்கிராபை வைத்து அனுப்புகின்றார்.
கலவரத்தில் இறக்கும் தாய்..
நெக்கட்டிவ் காரக்ரரான அண்ணன் சலீம்..
சிறியவயதில் ஒட்டி அவர்களுடனேயே வளர்ந்த காதல்..
பம்பாய் கலவரத்தில் இறக்கும் ஜமாலின் தாய்..
அதிலும் முக்கியமாக ஒரு சீன் வரும் ஜமாலும் அவனின் அண்ணனும் தப்பி ஓடிக்கொண்டிருக்கும்போது இடையே ஒரு சிறுவன் ராமன் வேடத்தில்  வந்து நிற்பான்(அவனும் ஓடிக்கொண்டிருந்தவன்தான்)5 செக்கண்ட் உறைந்துபோய்ப்பார்த்துவிட்டு ஜமாலும் அண்ணனும் மீண்டும் ஓடுவார்கள்  கருத்துள்ள அசத்தலான சீன் அது அதற்காக இயக்குனருக்கு ஒரு சபாஸ்.இதற்கும்  வழக்கம்போல் எதிர்ப்புக்களை கிளப்பிவிட்டார்கள் மதவாதிகள் இதில் ராமர் இடதுகையை தூக்கிக்காட்டுகிறார் உண்மையில் ராமர் வழமையாக வலதுகையைத்தான் காட்டுவார்.சோ பிரச்சனையை ஆரம்பித்தார்கள்.பாவம் இயக்குனர் கூறவந்தவிடயம் முழுமையாக விளிங்கியிருந்தால் கலவரம்தான்.

(mpact of denigration and the need to combat denigration
A. Denigration can shatter faith of individuals and set unwanted examples for future generations.
B. Create a doubt about the credibility of the Divine and / or its symbol. Finally, it can even cause exclusion of religious practices, and facilitate destruction of religion.
One can understand denigration of individuals; it can show an individual in a light, which tarnishes his reputation. Commenting on a Politician’s / public figure’s misdeeds or sketching their cartoons, are two such examples.
At the level of individuals, such caricatures, cartoons, creations or lampooning are the lightest forms of denigration – and subject to differences in personal opinions.
Whereas denigrating the Divine, questions the very relationship humans have with the Divine. It questions the faith of a human in Divinity and Its powers. It erodes values – moral, social and spiritual.
Thus, the urgent need to strongly oppose and stop denigration through any medium, of Deities and Divine symbols.)
இதுவரை பல படங்களில் தாஜ்மஹால் என்பது காதலின் சின்னமாக மிக அழகான வியூவில் மட்டுமே காட்டப்பட்டது.ஆனால் இந்தப்படத்தில் தாஜ்மகாலை காட்டும்போது அதற்குமுன்னே கூவம்போன்ற ஒரு கழிவுச்சாக்கடையைத்தாண்டித்தான் தாஜ்மஹாலைப்பார்க்கமுடிந்தது. வருடம் முழுவதும் அங்கே வெளி நாட்டுப்பயணிகள் வந்து குவிவார்கள் இந்தியாவின்  பெருமைகூறும் முக்கியமான அடையாளங்களில்  ஒன்று ஆனால் அதன் அருகிலேயே அந்த சேரிவாழ்க்கை.

கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் சேரிச்சிறுவனான ஜமால் மாலிக் கலந்துகொள்கின்றான்.நிகழ்ச்சி நடத்துபவரான அனில்கபூர் ஜமால் டீ ஊற்றிக்கொடுக்கும் அஸிஸ்ரென்ற்,சேரி சிறுவன் என்பதற்காக பல இடங்களில்  வெளிப்படையாக ஜமாலை வாரிவிடுகின்றார்.அதிலும் ஒரு கேள்விக்கான பதிலை அனில்கபூர்  ரொய்லெட்டுக்குள்வைத்து  ஜமாலிடம் கூறிவிடுகின்றார்.திக் திக் என்று ஆகிவிட்டது அந்தக்காட்சி.

பல இடங்களில் சலீமின் வில்லத்தனம் கோபத்தை ஏற்படுத்தியது.இறுதியில் சலீம் நம்மைவிட்டு விலகும் காட்சியிலும் தனது காரக்ரரை செம்மையாக பதித்துவிட்டே செல்கின்றார்.

நிகழ்ச்சியின் இறுதிப்பகுதிக்குமுன்னர் வெளியில் வந்த ஜமாலை பொலீஸ் பிடித்துசென்று போடு போடென்று போடுகின்றது.சேரிப்புறத்து சிறுவன் நீ எப்படி இவளவு பணத்தை ஜெயித்தாய்?ஏதாவது மைக்குரோ சிப் வைத்திருக்கின்றாயா? என்று பல கேள்விகளுடன் வெளுத்துவாங்குகின்றார்கள். அப்படியே அங்கிருந்து இடையிடையே பிளாஸ்பக் சொல்லும் விதம் அருமை.

பல கேள்விகளுக்கு ஜமாலுக்கு பதில் தெரிந்திருந்தது என்பதை விட..ஜமாலுக்கு சந்தர்ப்பவசத்தால் தெரிந்த பதில்களையே துரதிஸ்ரவசமாக அனில்கபூர் கேட்டார் என்றும் கூறலாம்...அதை அதிஸ்ரம் என்று சந்தோஸப்பட்டுக்கொண்டாலும் ஓகேதான்.

படத்தில் பல இடங்களில் இரசிக்கக்கூடிய பல கட்டங்கள் திருப்பங்கள் நிறையவே இருக்கின்றன.இப்படியான ஒரு படத்தை இவளவுகாலம் தாழ்த்திப்பார்த்தது கவலைதான்.ஒருவேளை இதுவரை பார்க்க சந்தர்ப்பம் வாய்க்காத என்னைப்போன்ற துரதிஸ்ரசாலிகள் இருந்தால் பார்த்துவிடுங்கள்..

ஒரு சேரியில் வாழும் சிறுவன் கோடீஸ்வரன் ஆகினால் என்ற கற்பனைக்கதை இது ஆனால் உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

//மிகவும் ஏழ்மையான நிலையில் சேரி வாழ்க்கை வாழ்ந்து வந்த சுஷில் குமாருக்கு அவரது வீட்டில் சொந்தமாகத் தொலைக்காட்சிப் பெட்டி கூட இல்லையாம். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஒளிபரப்பாளர் அமிதாப் பச்சன், சுஷில் குமாரை வெற்றியாளராக அறிவித்தார்., அவரையும், அவரது மனைவியையும் அழைத்து, ரூ 50 மில்லியன் (ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல்) பரிசுத்தொகையை நேரடியாக வழங்கி அவர்களைப் பரவசப்படுத்தினார். நீங்கள் புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களது அர்ப்பணிப்பும், ஆர்வமும், இதுவரை உங்களை இந்நிகழ்ச்சியில் கொண்டு வந்துள்ளது என அமிதாப் பச்சன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் குமார் பங்குபெற்ற முன்னர், அவரது மாதச் சம்பளம் டாலர் மதிப்பில் 120 அமெரிக்க டாலர்களே! பீஹார் மாநிலத்தின் மொதிஹாரியில் சின்னதாக ஒரு தனியார் வகுப்பு நடத்தி வருவதால் கொஞ்சம் மேலதிக வருமானம் வந்துள்ளது. மற்றும் படி அரசு உத்தியோகம் தான்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கு பற்றுவதைக்கூட அவரது குடும்பத்தினர் பக்கத்துவீட்டு டீவியில் தான் பார்த்திருக்கிறார்கள். நிகழ்ச்சியின் முதல் சுற்றுக்களில் அவர் சரியான பதில்களை டிக் செய்யச் செய்ய அவரைக் கிடைத்த பணத்துடன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேரிவிடுமாறு நெருங்கியவர்களால் வற்புறுத்தப்பட்டிருக்கிறார்.

இந்தப் பணத்தை வைத்து என்னென்ன செய்வதற்கு அவர் திட்டமிட்டிருக்கிறீர்கள் என நிருபர்கள் கேட்ட போது, இந்திய சிவில் சேர்விஸ் பரீட்சை எழுத வேண்டும். அதற்கான பயிற்சிகளுக்காக சில பணம் செலவிடுவேன். இப்பரீட்சை மூலம், மிக பாதுகாப்பானதும், பெறுமதியானதுமான நிரந்தர தொழிலொன்று எனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றார்.

மனைவிக்காகப் புதிய வீடு ஒன்று வாங்குவேன். பெற்றோருக்குத் தேவையான பணம் வழங்குவேன். சகோதரர் சிறிய வர்த்தகமொன்றை தொடங்கிட மூலதனமாகக் கொஞ்சம் பணம் வழங்குவேன் என தன்னை சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக பேசத்தொடங்கிய குமார், தனது சொந்த ஊரான மோதிஹாரியில், ஒரு நூலகம் கட்டப்போவதாகவும் இதன் மூலம் அந்த ஊரில் உள்ள சிறார்கள் தங்கள் கல்வி அறிவைப் பெருக்கி கொள்ளலாம் எனவும் இறுதியாக தெரிவித்தார்//

குவித்த விருதுகள்...


அகாதமி விருது - 2009
சிறந்த படம்
சிறந்த இயக்குனர் – டானி பொயில்
சிறந்த இசையமைப்பு – ஏ. ஆர். ரகுமான்
சிறந்த மூலப் பாடல் – "ஜெய் ஹோ", (ஏ. ஆர். ரகுமான் (இசை) & குல்சார் (பாடல்)
சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை– சைமன் பியூஃபோய்
சிறந்த ஒளிப்பதிவு – ஆந்தனி டொட் மாண்டில்
சிறந்த படத்தொகுப்பு – கிறிஸ் டிக்கன்ஸ்
சிறந்த ஒலிக்கலப்பு – ரெசுல் பூக்குட்டி, ரிச்சார்ட் பிரைக், இயன் டாப்
பரிந்துரைப்பு: சிறந்த ஒலித்தொகுப்பு – டொம் சயேர்ஸ்
பரிந்துரைப்பு: சிறந்த மூலப் பாடல் – "ஓ..சாயா", ஏ. ஆர். ரகுமான், எம். ஐ. ஏ (பாடல்)
[தொகு]கோல்டன் குளோப் விருது - 2009
சிறந்த திரைப்படம்
சிறந்த தயாரிப்பாளர் (டானி பொயில்)
சிறந்த திரைக்கதை (சைமன் பியூஃபோய்)
சிறந்த இசையமைப்பாளர் (ஏ. ஆர். ரகுமான்)

ரகுமானின் ஒஸ்கார் புயலில் நான் கவனிக்காதுவிட்ட ஒரு விடயமும் இருக்கின்றது..இப்படத்திற்கு மும்பாய் சேரிகளில் வாழும் மக்கள் எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள்...இப்படம் எங்களை அவமானப்படுத்திவிட்டதாக எதிர்ப்பிக்கோஸங்களை எழுப்பியிருக்கின்றார்கள்.

("They have made a mockery of us, they have hurt our sentiments," said N.R. Paul, a protest leader and resident in Dharavi, Asia's largest slum.

The protesters, who were forced by policemen to assemble a few hundred meters from Dharavi, shouted "Down, down Danny Boyle" and "Down, down Censor Board."

"Slum dwellers are human beings, not dogs," said one poster.

Protesters also slapped pictures of Boyle and the film's actors with slippers, saying their depiction of poverty was demeaning to millions.

"They should change at least the title. Why did our Censor Board allow such a title in India? It is very sad," said Kallubhai Qureshi, a resident in Dharavi.

Nicholas Almeida, a social activist and slum dweller who has filed a complaint in a local court against the title, said the filmmakers also had a responsibility toward the slums in which they shot the movie.

"It is making so many millions of dollars, why can't they spend some money here to improve our lives?" said Almeida.)
இந்தியாவின் இந்த அவலத்தை விற்றா ஒஸ்கார் வாங்கவேண்டுமென்ற கேள்விகள்  ஒரு வகையில் நியாயமானதுதான்..சிலம் டோக்... நாங்கள் நாய்களல்ல இந்தியாவின் எதிர்காலம்.
இது கூட ஒரு பேசும் புகைப்படம்தான்..


சில கார்ட்டூன்கள்..
நீங்களும் வெல்லாம் ஒரு கோடியின் அடுத்த சீசனுக்கு விஜய் டி.வியின் புத்திசாலித்தனமான விளம்பரம்தான் இன்றைய சிலம் டோக் மில்லியனர்...