Sunday, 6 January 2013

ஏ.ஆர் ரகுமானைrole modelலாக கொள்ளலாமா?


கலைஞர்கள் என்ற லிஸ்டில் இன்னபிறதுறைகளுடன் சினிமாத்துறையும் சேர்ந்தே அடங்குகின்றது.கலைஞர்களில் யாரையாவது நமது ரோல்மொடலாக கொள்வதென்றால் அதிலும் பல பிரச்சனைகள் வரும் கலையுலகில் மேதாவிகளாக இருப்பார்கள் ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை சற்று பிரச்சனைக்குரியதாக சர்ச்சைக்குரியதாக இருக்கும்.மைக்கல் ஜாக்ஸனை ஒரு உதாரணத்திற்கு எடுத்தால்கூட இதே நிலைதான்.ஆனால் ஏ.ஆர் ரகுமான் ரகுமானின் எந்த பரிமாணத்தையும் யாரும் ரோல்மொடலாக கொள்ளமுடியும்.அதுதான் ரகுமானின் ஸ்பெஸல்.பல பிரபலங்கள் முதற்கொண்டு அனைவரும் ரகுமான்போல் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.இசை ஒரு மாஜிக் அதில் என்னைப்பொறுத்தவரை மிகப்பெரிய மாஜிக்ஸன் ஏ.ஆர் ரகுமான்.

கலைஞனுக்கு ஞானச்செருக்கு அழகு என்று கூறுவார்கள்.ஆனால் அதையும் உடைத்தெறிந்தவர் ரகுமான்.வந்தே மாதரம் பாடல்மூலம்தான் எனக்கு ரகுமான் அறிமுகம்.பின்னர் அனைத்துப்பாடல்களுமே மயக்குவனவாகத்தான் இருந்தன.இறுதியாக தற்போது வெளிவந்த கடல் திரைப்படத்தின் பாடல்களிக்  என்னை கட்டிப்போட்ட பாடல் "அடியே என்ன .... எங்க நீ கூட்டி... போறா ?".பிற கலைஞர்களின் பாடலும் பிடிக்கும் ஆனால் அவர்களின் பாடல்களில் பெரும்பாலும் ஏதோ ஒன்று குறைந்திருப்பதாகவே உணரமுடிகின்றது.(இதில் இளையராஜா விதி விலக்கு)அமைதியான அறையில் எமக்கே தெரியாமல் எங்கோ ஒரு ஜன்னல் திறந்திருக்கும்போது ஏற்படும் இரிட்டேட்டிங்க் போன்ற உணர்வு.


 ரகுமானின் தந்தையாரான  R K Shekhar ரகுமானின் 9 வயதில் இறந்துவிட்டார்.இன் நிகழ்ச்சியும் ரகுமானின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.ரகுமானின் வாழ்க்கையில் அடுத்த திருப்புமுனை திலீப்குமாரை ரகுமானாக்கியது.ரகுமானின் தங்கை தீவிரகாய்ச்சலில் வீழ்ந்தார் ரகுமானின் முஸ்லீம் நண்பன் ரகுமானை பள்ளிவாசலில் தொழுகைசெய்யுமாறு கூற திலீப்குமார் தொழுகைசெய்தார்.தங்கைக்கு குணமாகியது ஒட்டு மொத்த குடும்பமும் முஸ்லீம் மதத்தை தழுவினார்கள்.1992 இல் ரோஜாபடத்தில் இசையமைத்து Best Music Director  க்கானதேசிய விருதான  Silver Lotus Award ஐ பெற்றுக்கொண்டார் ரகுமான்.அடுத்த முக்கிய திருப்பம் ஒஸ்கார்.உலகத்தையே தமிழை நோக்கி திரும்பவைத்தார் ரகுமான்.உலக்த்தமிழருக்கான ஒரு முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக ஆகிப்போனது அந் நிகழ்வு.ரகுமான் பொங்கல் பேட்டி-பி.எச்.அப்துல் ஹமீர் 

எந்தவொரு துறையிலும் புதிய திருப்பங்களை ஏற்படுத்தமுனையும்போது பல முனைகளில் இருந்து விமர்சனத்தாக்குதலுக்குள்ளாவதை தவிர்க்கவே முடியாது.அந்தவகையில் காழ்ப்புணர்ச்சிகாரணமாக சிலர் அள்ளிவீசும் குற்றச்சாட்டுக்கள்,அரைகுறை ஞானம் கொண்டவர்கள் எழுதும் ஆரோக்கியமற்றவிமர்சனங்கள்,தம்மை அறிவு ஜீவிகள் என தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமக்கு சம்பந்தமானவிடயம்கூட ஜனஞ்சக அந்தஸ்துப்பெறும்போது அதைப்பற்றி சொல்லும் அரைவேக்காட்டுத்தனமான அபிப்பிராயங்கள் அத்தனையும் கடந்து ஏ.ஆர் ரகுமானின் புகழ் சர்வதேச அளவில் பெருகி அவரது படைப்புகள் உலகளாவிய ரீதியில்  வரவேற்பைப்பெறுகின்றன என்றால் அதற்குகாரணம் என்ன என்று பலரால்விடை சொல்லமுடியாது.இதனால்தான் கலா அபிமானிகளின் பார்வையில் ஏ.ஆர் ரகுமான் புதிராக காணப்படுகின்றார்.

வணக்கம் ரகுமான் இந்தத்திருப்பம் உங்கள் வாழ்க்கையைப்பொறுத்தவரையில் நீங்கள் எதிர்பார்த்த ஒன்றா?

நீங்க சின்ன கேள்விகேக்கிரீங்க அதற்கு பெரிய ஆன்சர் தரப்போறன்

சொல்லுங்கள்

மனிதன் ஆசைப்படுவதெல்லாம் இறைவன் தருவதில்லை உடனே
யாராவது உங்க எதிர்காலத்தைப்பற்றி நீங்க என்ன யோசிக்கிறீங்க என்று  கேட்டால் என் எதிர்காலம் இறைவனிடம் இருக்கின்றது என்னு சொல்லுவேன்
அந்த நாள்ள நான் சினிமாவேர்ல்ட்ல கீபோர்ட் பிளேயராய்த்தான் இருந்தேன்.கிட்டத்தட்ட 15 வருசம் கீபோர்ட் வாசிச்சுக்கிட்டிருந்தேன் திடீர் என்று விரக்தி வந்துவிட்டது என்னது டெய்லி இதையே வாசிச்சுக்கிட்டிருக்கோம் காலைல டண்டுடக்கா  டண்டுடக்கா சாயந்த்ரம்  அதே மாதிரி இதைவிட்டுட்டு போகனும் அந்த ரைம்ல கடவுள் பக்தி அதிகமாகிடிச்சு...அதனால நம்ம எதுவும் நினைக்கதேவையில்லை அவனே கொடுப்பான் என்று டிஸைட்பண்ணிட்டன் அதில இருந்து எனக்கு எல்லாமே சஸ்ஸஸ்ஸாகவந்துகொண்டிருக்கு

எல்லாப்புகழும் இறைவனுக்கே என்கிறீர்கள்

பெண்களிடம்தான் வயதைக்கேட்கக்கூடாது என்பர்கள் ஆனால் ரகுமானிடம் கேட்கலாம் பிழையில்லை உங்களுக்கு இப்போது என்னவயது?
27 முடிந்து 28

ஏன் கேட்கிறேன் என்றால் 15 வருடமாக நீங்கள் கீபோர்ட் வாசித்துவருவதாக குறிப்பிட்டீர்கள் 28வயதை எட்டிப்பிடித்தால் நீங்கள் 12,13 வயதுகளிலேயே இசைக்குழுக்களிலே அங்கம்வகிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள் ஆகவே நீங்கள் இளம் வயதிலேயே இசைக்கலைஞனாக அறிமுகமாகி இருக்கின்றீர்கள்.உங்கள் தந்தை புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆர்.கே சேகர் அவர்மட்டுமல்ல இதுபோன்று கலைத்துறையிலே புகழ்பெற்றவர்கள் எல்லோரும் அத்துறையிலே பெற்றகசப்பான அனுபவங்களின் காரணமாக தங்கள் பிள்ளைகள் தமது எதிர்கால சந்ததி இந்தத்துறையில் ஈடுபடவேண்டாம் என்றுதான் விரும்புவார்கள் பெரும்பாலும் விரும்புவார்கள்.உங்களை பொறுத்தவரை வெகுஇளம் வயதிலேயே தந்தையை இழந்தவர் என்பது நமக்குத்தெரியும்.உங்கள் அன்னைக்கு அல்லது தந்தைக்கு நீங்கள் ஒரு இசைக்கலைஞனாக வரவேண்டும் என்ற விருப்பம் இருந்ததா?

6,7 வயது இருக்கும்போது அப்பாகூட ஸ்ரூடியோவுக்கு போய் இருக்கேன்
அப்போ ஒரு ஆர்மோனியெப்பெட்டிவச்சு வாசிக்கும்போது எல்லாருமே
இவன் பெரிய மியூஸிக் டயரக்ரராவருவான்னு தமாஸா சொல்லுவாங்க
அப்பாவும் அவங்ககூட சேர்ந்துசிரிப்பாரு அப்போ பெயினாகத்தான் எனக்கு நினைவிருக்கு

ஆனா அப்பா இறந்ததும் என் அம்மா உங்க அப்பாசெய்த தொழில நீயும் செய்யனும் என்னு ரொம்ப அக்ஸெப்ட் பண்ணினாங்க அவங்களாலதான் இந்த பீல்டுக்குவந்தேன்

இன்றைய இசையமைப்பாளர்களைப்பொறுத்தவரையில் ஒருமாற்றம் படைப்பாட்டல் திறமைமட்டும்போதாது விஞ்ஞான ரீதியான தொழில் நுட்ப அறிவும் தேவை என்பது நிர்ப்பந்தமாகிவிட்டது.உங்களைப்பொறுத்தவரை உங்கள் தந்தை இசைக்கலைஞராக இருந்தாலும் இளம்வயதிலேயே அவரை இழந்துவிட்டீர்கள் அதன்பிறகு கல்வித்துறை மட்டுமல்லாது கம்பியூட்டர் துறைசார்ந்த அறிவையும் எப்படி பெற்றுகொண்டீர்கள்?

நான் ஹை ஸ்கூலில் இருக்கும்போது எலக்ரோனிக் ஹட்ஜேட்ஸ் , கம்பியூட்டர் துறையில் எனக்கு இன்ரெஸ்ட் இருந்தது ஆனா குடும்ப சூழ் நிலைகாரணமாக மியூஸிக் உனக்குத்தெரியும் அதனாலயே  நீ சம்பாதிக்கலாம் என்று அம்மா சொன்னாங்க அப்பதான் கம்பியூட்டர்கள் வர ஆரம்பிச்சுது.மனுவல்ஸ் எல்லாவற்றையும் பார்த்து ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டேன்

கிராமப்புறங்களில் உள்ள மக்கள் சிறுவர்களிடம் கூட உங்கள் இசை ஒலிக்கின்றது.பட்டிதொட்டியெல்லாம் உங்கள் காதலன் பட பாடல்கள்தான் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.இவற்றிற்கு உங்கள் திறமை மட்டும்தான் காரணமா அல்லது இப்பொழுதெல்லாம் செய்மதிகள் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்,அதனால் வெளி  நாட்டு நிகழ்ச்சிகள் இசைப்பாணிகளை கேட்கும் வாய்ப்பு இருக்கின்றது.இதன் மூலம் ஏற்பட்ட கலாச்சாரக்கலப்புத்தான் காரணம் என்று நினைக்கின்றீர்களா?

சொல்லப்போனா ஒரு ஸீஸன் சேஞ் என்று சொல்லலாம் எல்லாம் ஒன்னா நடக்குது சட்டலைட் வந்துதான் நடக்குதென்னும் சொல்லமுடியாது நான் வந்துதான்  நடக்குதென்னும் சொல்லமுடியாது மாறனும்னு இருந்துதென்னா அது மாறும்.

அங்கிருந்து இங்கு வந்திருக்கிறது இங்கிருந்து அங்குபோகுமா? அதாவது நம் நாட்டு பாரம்பரிய இசைவடிவங்கள் எல்லாம் மேலை நாட்டவர்கள் ரசிக்கக்கூடிய காலம் வரும் என்று நினைக்கின்றீர்களா?


அங்கேயும் ஒரு மாஸ்ரர்பீல்ட் ஓடியன்ஸ் இருக்கு ஒரு சுஜர் கோடிங்க் கொடுத்த மியூஸிக்தான் போய் சேரும்

நம்ம கிளாஸிக்கல் மியூஸிக் என்னவடிவத்தில் அங்கு சென்று சேரும் என்பதைப்பொறுத்து அதை யார் செய்யிறாங்க என்பதைப்பொறுத்து கடவுளுக்குத்தான் தெரியும் அதை நான் பண்ணுவனா அல்லது வேறுயாராவது செய்வார்களா என்றுஉலக விழாக்களில் எல்லாம் ஆங்கிலப்பாடல்களுக்குத்தான் அவார்ட்கள் கொடுப்பார்கள் என்று அர்த்தமில்லை வேற்றுமொழிப்பாடல்களுக்குக்கூட வழங்குகின்றார்கள் அப்படி ஒரு பொன்னான காலம் நமது தமிழ்ப்பாடல்களுக்கு வரும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?அந்தத்திசையை நோக்கி நீங்கள் பயணம் செய்வீர்களா?

நம்ம தமிழ் மியூசிக்குக்கிடைக்கனும்னா அது 10 ஓடு 11 ஆக இருக்கக்கூடாது அது முதலாவது இடத்தைப்பெறனும் அதால இப்ப இருந்தே நான் வேர்க் பண்ண ஆரம்பிக்கிறேன்.

வைரமுத்து-
ஒரு நாள்  நள்ளிடவு லண்டனில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசிவந்தது.பேசியவர் எனது அருமை நண்பர் லண்டன் தமிழ்ச்சங்கப்பொருளாளர் அசோகன் அவர்கள் என்ன இந்த நெரத்தில் என்று கேட்டேன் ஸ்ரார் டி.வியில் உங்கள் பாட்டு ரகுமான் இசையமைத்த பாட்டு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது இதைவிட பெரிய மகிழ்ச்சி எங்களுக்கு எதுவுமில்லை என்று கூறினார்.

அகில உலக் தொலைக்காட்சியில் தமிழ் இசையும் தமிழ்வார்த்தைகளும் இடம்பெறக்கூடிய அளவிற்கு ரகுமான் அதை உயர்த்தியிருக்கின்றார் என்றால் சர்வதேச இசையின் தரத்தில் ஒலிப்பதிவு செய்யவேண்டும் சர்வதேச தரத்திற்கு இசையை கொண்டுவரவேண்டும் தமிழ்த்திரைப்பாட்டிசையைக்கொண்டுவரவேண்டும் என்ற அவருடைய திட்டமிடல்தான்.

அப்துல் ஹமீர் 

பாடல்வரிகளுக்கு மெட்டமைப்பது அல்லது மெட்டிற்கேற்ப  பாடல்வரிகளை எழுதுவது.இரண்டில் எது இலகுவாக இருக்கின்றது?எது மிகவும் பிடித்திருக்கின்றது

ஒரு பாட்டுப்பாடனும்னா ஒரு இன்ஸ்பிரேஸன் ஏதாவது வேண்டும்
நல்ல லைனோ அல்லது நல்ல மியூஸிக்கல் ரேஸோவேணும் 
ரேக் இட் ஈஸீ என்ற பாட்டில் ரேக் இட் ஈஸி என்ற காஸுவல் வேர்ட் இருந்திச்சு
பெடராப் என்றது பெடராப் என்ற வேர்ட்
சின்ன சின்ன ஆசை என்ற பாட்டுக்கு மியூஸிக் ஒன்டு இன்ஸ்பிரேஸனா இருந்திச்சு பீ ரோன் என்ற ரியூன்.
கண்ணுக்கு மை அழகு என்றபாடல் லிரிக் 

ஒரே சமயத்தில் நீங்கள் மெட்டை உருவாக்கும்போதே பாடலை எழுதுபவர் பக்கத்தில் இருப்பது சாத்தியம் இல்லை.இருந்தாலும் எப்போதாவது அந்தக்காலத்தில் கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் விஸ்வனாதனும் இணைந்து செயலாற்றியதுபோல் மெட்டை உருவாக்கும்போதே  ஒரு கவிஞர் உங்கள் பக்கத்தில் இருந்து பாடல் உருவான பாடல்கள் ஏதும் உண்டா?

செந்தமிழ் நாட்டு தமிழ்ச்சியே என்ற பாடல் இருக்கு.சும்மா நானும் வைரமுத்துவும் பேசிக்கிட்டிருக்கும்போது தமிழச்சி என்று ஒரு பாடல் பாடனும்னு வைரமுத்துசேர் சொன்னாரு.சிற்றிவேஸன் அட்வைஸ் சோங்க் மாதிரி இருந்திச்சு. செந்தமிழ் நாட்டு தமிழச்சி என்னு வச்சுக்கலாமா என்று கேட்டேன் வச்சுக்கிட்டா போச்சு என்றாரு.பிறகு அந்த தோற்றைவச்சு போர்ம்பண்ணி அந்த பாட்டு உருவாகிச்சு

சூழ் நிலையின் பிரதிபலிப்புத்தான் கலைஞனின் படைப்பு என்பார்கள்.உங்களைப்பொறுத்தவரையில் ஒரு கதாசிரியர் இயக்குனர் வந்து உங்களிடம் கதையை சொல்லி இதுதான் காட்சி இதுதான் பாத்திரம் அதன் மனோ நிலை இப்படி என்று சொன்னதன் பிறகுதான் மெட்டை நீங்கள் உருவாக்குகின்றீர்கள்.அப்படி உருவாக்கினாலும் கூட அந்த கதைக்கரு பாடல் வரிகள் அந்த கதாப்பாத்திரத்தின் தன்மை இதற்கேற்பத்தான் உங்கள் பாடல்களுக்கு இசைக்கருவிகளை தெரிவுசெய்கின்றீர்களா?அல்லது பொதுவாக திரைப்படம் என்பதை மறந்துவிட்டு பிறகும் இது எங்கெல்லாமோ ஒலிக்குமோ இந்தப்பாடல் அங்கெல்லாம் எல்லோரும் இந்தப்பாடலை ரசிக்கவேண்டும் என்பதற்காக இசைக்கருவிகளின் சப்தஜாலங்களை எல்லாம் வேண்டுமென்றே பயன்படுத்துகின்றீர்களா?
ஒஸ்கார் வாங்கியபோது குடும்பத்தின் மகிழ்ச்சி


சில பாட்டுவந்து சொல்லுறாங்க நீ நல்ல பாட்டொன்னு போட்டுக்கொடு நான் சிற்றிவேஸன் போட்டுக்கிறன்ன்னு அதுக்கெல்லாம் நீங்க சொன்னமாதிரி தாம் தூம்னுதான் போடனும்.

ஆனா கதைக்கேற்ற சாங்க்கா உருவாக்கினது சின்ன சின்ன ஆசை,காதல் ரோஜாவே,மார்கழிப்பூவே,

நீங்கள் சுயமாக உருவாக்கிய பாடல் மெட்டுக்கள் அல்லது பாடல்கள் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவா?

ஸ்ரோறி சொல்லி சிற்றிவேஸன் சொல்லி உருவாக்கின பாடல்வந்து ரோஜா,டூயிட்,கிழக்குசீமையிலே, அப்புறம் கருத்தம்மாஜெண்டில்மென்னில நாம முதலே முடிவுபண்ணிட்டம் 5 பாட்டுவெணும் ஸ்ரோறியை பலன்ஸ் பண்ணுறமாதிரி ஸ்ரோறி ரொம்ப சீரியஸ்ஸா இருக்கு அதனால பாட்டு தமாஸா இருக்கலாம்

ஒரு பாடலை உருவாக்கும்போது குறிப்பாக மெட்டமைப்புமட்டுமல்ல அதன் ஆரம்ப இசை இடை இசை பி.ஜி.எம் என்று கூறுவார்கள் இவற்றையெல்லாம் நீங்கள் உருவாக்கும்போது உங்கள் மனதிலே ஒரு காட்சிவிரியும்.அந்தக்கதாப்பாத்திரம் கதா நாயகன் நடிகை பின்னணிக்காட்சி எப்படி அமையும் இவற்றை நீங்கள் மனதிலே உருவகிப்பீர்கள்.அதனை 100க்கு 100 ஒரு இயக்குனர் படமாக்குவார் என்பது அபூர்வம்தான்.ஆனால் அப்படி  மன நிறைவுடன் படத்தை உருவாக்கியுள்ளார் என நீங்கள் கருதிய பாடல்கள் உள்ளனவா?


இமாஜினேஸனுக்கும் மீறி சில பாட்டு பிக்ஸரைஸ் பண்ணியிருக்காங்க..பம்பாயில உயிரே உயிரே..கிழக்கு சீமையிலேயில் மானுத்தும் மந்தையிலே அப்படி ஒரு சிற்றிவேஸன் இருக்குமென்னு நான் நினைச்சுப்பார்க்கல.காதலே காதலே என்ற பாடல் பாலச்சந்திரர் அதுக்குள்ள ஒரு கதை சொல்லியிருப்பார்

இயக்குனர் பாலச்சந்திரர்

காதலே என் காதலே என்பது ஒரு இடக்கான ஒரு சிற்றிவேஸன்.அண்ணன் தம்பி 2 பேருமே காதலிக்கின்றபோது இருவருமே காதலிக்கின்ற அதே பெண் வருகின்றாள் அப்போது இருவருமே பாடுகின்றார்கள்.அப்படின்னா எப்படி ஒரு எடக்கான சிற்றிவேஸன்னு நீங்க நினைச்சுப்பாருங்க.

அண்ணனும் தம்பியும் ஒரே பெண்ணைக்காதலிக்கின்றார்களே  என்னமோ பண்புக்கு விரோதமான செயல் என்று நினைக்கக்கூடிய ஒரு சூழ்னிலைல இருக்கிறோம் நாம என்ன தப்புன்னு எனக்கு புரியல.
2 சகோதரிகள் ஒரு ஆணை காதலிக்கலாம் ஆனால் 2 சகோதரிகள் ஒரு பெண்ணை காதலிக்கக்கூடாது  இது என்ன நியாயம் என்னு எனக்குப்புரியல.நியூ டோமினேட்டட் சொஸைட்டில ஏற்படுத்தப்பட்ட விடயங்க்ள் இவை எல்லாம்.அப்படியான எடக்கான சிற்றிவேஸனை நான் பேஸ்பண்ணிக்கிட்டிருக்கும்போது ஒருதர் இன்ஸுமென்டில வாசிக்கிறான் ஒருதன் வாய்ப்பாட்டுபாடுறான்.சோ இவர்களது காதலுக்கு ஏற்பட்ட தோல்வியையோ சிக்கலையோ சங்கடத்தையோ பாடல்வழியாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற சிற்றிவேஸன் அது அப்படின்னு சொல்லுற இடத்தில.இதவந்து மியூஸிக் டயரக்டருக்கு புரியவைக்கிறாது என்கிறது பெரியவிஸயம்.அவர் அதை புரிஞ்சுக்கிட்டது மட்டுமில்லாமல் ஒரு டியூனையும் உருவாக்கினது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

அப்துல் ஹமீர் 
உங்கள் இசையமைப்பில் மட்டும் நானொரு வித்தியாசத்தை உணர்கின்றேன் சில பாடகர்களின் குரல் முழுக்க முழுக்க வித்தியாசமாக ஒலிக்கின்றது.குறிப்பாக எஸ்.பி பாலசுப்பிரமணியம்,ஜெயச்சந்திரன் போன்றவர்களின் குரல்கள் சில பாடல்களிலே அவர்கள்தான் பாடுகின்றார்களா என்று இனம் கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு கிராமிய மணம் நிறைந்திருக்கின்றது.இவற்றைஅவர்கள்தான் குரல்மாற்றிபாடுகின்றார்களா அல்லது நீங்கள் கொம்பியூட்டர் உதவியுடன் செய்கின்றீர்களா?

கம்பியூட்டரால ஒரு நாச்சுரல் மியூஸிக்கமாத்தனும்னா அது நல்லா இருக்காது.புல்லங்குழல் மியூஸிக்கை நேரேகேட்கும்போது ஒருமாதிரி இருக்கும் ஆனா மைக்கில் கேட்கும்போது வேறமாதிரி இருக்கும்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ரகுமானை ரொம்ப சின்னவயசில இருந்தே எனக்குத்தெரியும்.அவற்ற அப்பாதான்  நான் மலையாழப்படங்களில் பாடுறதுக்கு முக்கியமாக காரணம்.அவர்தான் என்னைக்கொண்டுபோய் தேவராஜன் மாஸ்ரருக்கு இன்ரடியூஸ்பண்ணி கடல்பாலம் என்ற படத்தில முதல் முதலா எனக்கு சான்ஸ் வாங்கித்தந்தாரு.எல்லாரும் சஸ்ஸஸ்ஸானதுக்கப்புறம் எனக்கு அப்பவே தெரியும் என்று சொல்லுறமாதிரி இல்லை இது.ஒரு நல்ல மியூஸிக்ஸனா வருவார்னு தெரியும் ஆனா நம்ம நாட்டில மட்டுமில்லாம மற்ற நாட்டிலைகூட இவரது மியூஸிக்கைகேட்டு ஓ அமர்க்களமா பண்ணுறாராமே ரொம்ப சின்னபையனாமே என்று பேசக்கூடிய அளவிற்கு இவர் முன்னுக்குவருவார்னு எனக்குத்தெரியாது.
இப்ப அந்தப்புதிரெல்லாம் சால்வாகிப்போச்சு நிறையபடங்களுக்கு மியூஸிக்பண்ணி அத அவர் புரூபண்ணிட்டார்.ஆனா சிலர் இப்பவும் என்ன சொல்லுறாங்க தெரியுமா?இந்த ராப் மியூஸிக்கு அது இதுன்னு இந்த சவுண்டெல்லாம் போட்டுட்டு பண்ணுவாருன்னு.எல்லாருமேதான் ராப் சாங்க் போடுறாங்க ஆனா இவற்றமட்டும் ஹிட்டாகுதென்றால் இவரது மியூஸிக் ஏனையவர்களிடமிடுந்து வித்தியாசம்.ஒரு சோங்கிற்கு அவர் எடுத்துக்கொள்ளும் ரைம் சில புரொடியூஸர்,டயரக்ரேஸுக்கு கோபம் வருது என்னப்பா ஒரு பாட்டுபோடுறதுக்கு இவளவு நேரம் எடுக்குதுன்னு.ஆனா  முதலல்ல ஒத்துக்கும்போதே தனக்கு ரைம்தேவைன்னு சொல்லிட்டுத்தான் பண்ணுறாரு.அந்த ரைம் எடுக்கிறதால ரிபிரண்ட் டைமென்ஸன் கிடைக்குது அவருக்கு.திடீர்ன்னு நைட்டு 2 மணிக்கு எழுந்திரிக்கிறாரு ஏதோ ஐடியாவருது.அவரிட்ட இருக்கிறமாதிரி பாங்க் ஆப் சவுண்ட் வேறயாருக்கிட்டையும் கிடையாது.எங்க கேட்டாலும்  சாம்பிள்பண்ணி ரெடிபண்ணிவச்சிருக்கிறாரு.நல்ல காலம் எங்க வாயிஸை சாம்பிள்பண்ணி வச்சுக்கல

இன்றுகூட நீங்கள் அருமையான எத்தனையோ மெட்டுக்களை உருவாக்கியிருக்கின்றீர்கள்.ஆனால் அந்த அருமையான் மெட்டுக்களுக்கு இல்லாத வரவேற்பு அர்த்தமல்லாத சொற்களை கொண்டபாடலுக்கு கிடைக்கின்றன.குறிப்பாக முக்கப்புல்லா நீங்கள் மட்டுமல்ல ஆரம்பத்தில் இளையராஜாகூட வாடி என் கப்பகிழங்கே ஓரம்போ ருக்குமனி வண்டிவருது.அவற்றையும் அவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.இவை உங்கள்  சிந்தனையில் உதித்ததா அல்லது இயக்குனர்களின் வேண்டுகோளிற்கிணங்க உருவாக்குகின்றீர்களா?

நாம டெய்லி ஒரு  சாப்பாட்டையே சாப்பிட்டிக்கிட்டிருக்கம்.வருசம் பூரா அதைத்தான் சாப்பிட்டிக்கிட்டிருக்கம்.ஒரு நாள் மாறி சாப்பிட்டம்னா பிடிச்சிடும் இது நல்லா இருக்கேன்னு அத சாப்பிடுவம் ஆனா அதுவும் சலிச்சிடும்.இந்தமாதிரிப்பாட்டு அடிக்கடி வர்ரதில்லை.வித்தியாசத்திற்காக உடனே கச் ஆகுது.ஆனா இது ஆரோக்கியமானதல்ல.கதைக்குதேவைப்பட்டது.

ரகுமானில் உள்ள பொதுவான குற்றச்சாட்டு அவர் தாமதமாக செயற்படுகின்றார் என்பது.

வைரமுத்து-அதை நானும் ஒத்துக்கொள்கின்றேன்.அவர் திட்டமிட்டு தாமதமாக இல்லை வேண்டுமென்றே தாமதமாக இல்லை.அந்தப்பாடலின் விளைச்சலுக்காக பாடல் என்ற நிலக்கரி வைரமாக முதிர்வதற்காக அவர் நேரம் எடுத்துக்கொள்கின்றார்.அந்த நேரத்தில் மெட்டுக்களைபோட்டுப்போட்டு அழித்திருக்கின்றார்.
இது காதுக்கு சுகமில்லை இது நெஞ்சுக்கு நெருக்கமில்லை இது தமிழர்களுக்கு ஆகாது.இது ஏற்கனவே வந்த மெட்டு எனக்குமுன்னால் பெரும் சாதனையாளர்கள் பலர் இருந்திருக்கின்றார்கள்.ராமனாதன் அவர்கள்,கே.வி.மகாதேவன் அவர்கள்,விஸ்வனாதன் அவர்கள் இளையராஜாஅவர்கள்.இவர்கள் எல்லாம் செய்யமுடியாதவற்றை என்னால் செய்யமுடியுமாஎன்று அந்த சின்னஞ்சிறுவன் யோசித்து இந்தப்பெரியவர்களின் ஆசியோடு அந்தப்பெரியவர்களின் பாதிப்பில்லாது இசையமைக்கமுயல்கின்றான் அதற்குத்தான் நேரம் எடுத்துக்கொள்கிறார்.பாரம்பரிய வாத்தியக்கருவிகளும் கம்பியூட்டரும் சங்கமமாகும் இசை பொங்கல் ஸ்பெஸல் ரகுமானிடமிருந்துவைரமுத்து-ரகுமான் ஒரு புதிர்தான் பழகாதவர்களுக்கு பழகிப்பார்த்தவர்களுக்கு சின்னவயசில் விழைந்த கதிராக இருப்பார்என்பது எனக்குத்தெரியும்.இந்த வெற்றி இந்தப்புகழ் இந்த பெரியவிலாசம் இவைகளெல்லாம் ரகுமானுக்கு அதிஸ்ரத்தாலோ வானுலக தேவதைகளின் ஆசீர்வாதத்தாலோ கிட்டியது என்று நான் நினைக்கவில்லை முயற்சி பயிற்சி திட்டமிடல் மக்களின் ரசனையை புரிந்துகொண்டபோக்கு இவையெல்லாம்தான் அவரின் வெற்றிக்குகாரணம் என்று நினைக்கிறேன்.ரகுமான் ஒரு புதிரல்ல சின்னவயதிலேயே விழைந்தகதிர்.

ரகுமானிற்கு பிறந்த நாள்வாழ்த்துக்கள்.

Happy birthday to

legendary a.r rahman
♫♪♫♪♫♪ Happy Birthday to You! ♫♪♫♪♫♪.......°\(ツ)/° .. │▌▌▌│▌▌│▌▌▌│▌▌│▌▌▌│▌▌│▌▌▌│▌▌│▌▌▌│▌▌│▌▌▌ └└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└

•*¨`*•..¸♫♫.•*¨`*•..¸ ☼ ¸.•*¨`*•.♫♫♫.•*¨`*•.
╔═════════════ ೋღღೋ ═══════════════╗
*******░H░A░P░P░Y░* ░B░I░R░T░H░D░A░Y********
╚═════════════ ೋღღೋ ═══════════════╝
•*¨`*•..¸♫♫.•*¨`*•..¸ ☼ ¸.•*¨`*•.♫♫♫.•*¨`*•.

2 comments:

  1. உண்மையாகவே வைரமுத்து ஏராளாமான இளைஞர்களுக்கு ரோல் மாடலாக விளங்குகிறார்.சச்சினை விட அதிக ரசிகர்கள் உடையவர்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஆனால் ரகுமானை விட்டுவிட்டீர்களே...கருத்துக்கு நன்றிகள்

      Delete