Thursday, 3 January 2013

அடுத்த ஜென்மத்தில் சந்தானம் எனக்குத்தம்பி-பவர் ஸ்ரார்


எனக்குத்தம்பி இல்லையே என்கிறகுறை இருந்தது ஆனால் சந்தானம் அந்தக்குறையை நிவர்த்தி செய்துவிட்டார்.அடுத்த "ஜென்மம்" எண்டு ஒண்டிருந்தா அவரே எனக்கு தம்பியாவரணும் என்று நான் ஆசைப்படுகின்றேன்.அந்த அளவுக்கு என்னில அவர் பாசம் வச்சிருக்கிறாரு.இப்படி  நெஞ்சு நெகிழ( நெகிழத்தான்)கூறியிருக்கிறார் தலிவர் பவர் ஸ்ரார்.சந்தானம்சூட்டிங்க் ஸ்பொட்டில் உங்களை நன்றாக கலாய்த்துவிட்டாராமே என்று கேட்கப்பட்டகேள்விக்கு பதில் அளிக்கும்போதே பவரு இதைக்கூறியுள்ளார்.(யார் தன்னை எப்படிக்கலாய்த்தாலும்,தாக்கினாலும் தன் தாய் உள்ளத்தால் அவர்களை மன்னிப்பவர் பவரு என்று தலிவர் மரு(று)படி நிரூபித்துள்ளார்.

உங்கள் வயது எவ்வளவு என்று கேட்டகேள்விக்கு?
என் அருமைத்தம்பி சிம்புவை விட எனக்கு 10 வயது கம்மி என்றுகூறி ரசிகர்களை  இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் தலிவரு.இதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல்-பவரு

அதோடு சிம்புகூறினாராம் நான் தான் இவ்வளவு நாளா மற்றவங்கள சிரிக்கவச்சுக்கிட்டிருந்தன் ஆனா நீங்க என்னையே சிரிக்கவச்சிட்டீங்களே என்று.இதற்கு சிம்புவுக்கு வன்மையான கண்டனங்கள் சிம்பு கூறியதைப்பார்த்தால் பவர் என்ற சூரியன் உருவாக முன்னதாக சிம்பு  வேறொருபவராக ஜொலித்துக்கொண்டிருந்தேன் என்பதை மறைமுகமாக கூறுவது தெளிவாகவே தெரிகின்றது.உலகத்திற்கு ஒரே ஒரு சூரியன் ஒரே ஒரு சந்திரன்,ஒரே ஒரு ஞாயிற்றுத்தொகுதி,ஒரே ஒரு பால்வீதி அதேபோல் ஒரே ஒரு பவருதான் இருக்கமுடியும்.சிம்பு கூறிய இவ்வார்த்தையால் "கோடிக்கணக்கான"பவர் ரசிகர்கள் கொந்தளித்துப்போய் உள்ளார்கள்.

அடித்த கட்டமா பாலிவூட்டு ஹாலிவூட்டு எல்லாம் போவீங்களா?
இல்லை தமிழ் நாட்டைவிட்டு நான் எங்கயுமே போறதா இல்லை
(முதல்ல ஒரு நடிகனா இந்தவார்த்தையை  சொன்னதுக்கே பவரைப்பாராட்டனும்)

2013இல மக்களுக்கு நீங்க என்னதரப்போறீங்க?
2,3 படம் பண்ணிக்கிட்டிருக்கன்( I an waiting )

உங்க பாடிக்கார்ட் எத்தனைபேரு அவங்களுக்கு சம்பளம் எல்லாமெவ்வளவு தாறீங்க?
எனக்கு அன்புத்தம்பிமாருதான் எனக்கு பாடிகார்ட் அவங்க அன்புக்குத்தான் அடிமை வேற எதுக்குமே இல்லை

உங்கபடத்தில என்ன பஞ்சுவச்சிருக்கிறீங்க?
சூப்பர் ஸ்ராருக்குபோட்டின்னா அது ப்வர் ஸ்ரார்தான்

எனக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்கும்.இப்ப உள்ள அம்மாவா இருந்தாலும் சரி என்னைப்பெத்தெடுத்த அம்மாவா இருந்தாலும் சரி"

மக்களே ரசிகப்பெருமக்களே இதன்மூலம் பவரு எதிர்காலத்தில் அரசியலுக்குவருவேன் என்பதைமறைமுகமாக கூறியிருக்கிறார்.இவரும் வருவேன் வரமாட்டேன் விளையாடமாட்டார் என்று நம்புவோம்.

(வரும் ஆனா வராது
தலைவர் தன்ர பிறந்த நாளுக்கு சொன்னாரு அரசியலுக்குவருவேன் என்று பொய் வாக்குறுதி கொடுக்கதயாரில்லைன்னு ஆனா சிதம்பரத்தின் நூல்வெளியீட்டுக்குப்போய் சொன்னாரு நான் அரசியலுக்கு வந்தா என் வழி தனி வழின்னு-தலிவா அரசியலுக்குவர இதவிடவேற என்ன தகுதிவேனும்)

தலிவர் பவரின் பேட்டியைக்காண இங்கே கிளிக்

ரசிகர்களுக்காக "பவர் ஸ்ரார் அரிய புகைப்படங்கள்"


No comments:

Post a Comment