Sunday, 13 January 2013

சரீஆ சட்டப்படி மகளுக்கு வழங்கிய தீர்ப்பை முழுமையாக ஏற்கிறேன்: ரிசானாவின் தாய்

எனது மகள் ரிசானாவை அல்லாஹ் தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான். இதுதான் என் உறுதியான நம்பிக்கை' என்று சுவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் தயார் ரஸீனா நபீக் தெரிவித்தார். ரிசானா நபீக் மரண தண்டனைக்கு உள்ளானதன் பின்பு அவர் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 'சரீஆ சட்டப்படி என மகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை நான் முழுயாக மதிக்கின்றேன். அதனை ஏற்றுக் கொள்ளுகின்றேன். சரீஆ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் அது எத்தகையதாக இருந்தபோதும் நிரந்தரமான மறுமையில் ரிசானாவிற்கு உயர்ந்த பேறு கிடைக்கும். அவர் இப்போது சுவனத்திற்குச் சென்றுள்ளதாகவே உணர்கின்றேன். உலகெங்கும் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் எனது மகளை அவர்களது சொந்த சகோதரியாகக் கருதி 'துஆ' பிரார்த்தனையில் ஈடுபட்டதானது இதனையே மேலும் உறுதிப்படுத்துகின்றது. இதனால் ரிசானாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றி வேறு எதுவும் என்னால் கூறமுடியாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன். இதேவேளை ரிசானாவுக்கு மன்னிப்பை பெற்றுக்கொடுப்பதற்கு பல்வேறு வழிகளிலும் இறுதிவரை முயற்சித்து வந்த அனைத்து உள்ளங்களுக்கும் ஊடகங்களுக்கும் மனித உரிமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மொத்தத்தில் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அல்லாஹுதஆலா அனைவருக்கும் பேரருள் புரியவேண்டுமென பிரார்த்திக்கின்றேன்' என்றார்.

றிஷானாவின் கடிதம்...

30.01.2007, அல் தவாத்மி சிறைச்சாலை, அல் தவாத்மி, இலங்கையில் எனது முகவரி எம்எஸ்.நபீக், சாலி நகர் மூதூர் எனது உண்மையான வயது 19, நான் பிறந்த திகதி 02.02.1988 எனது வயதை எனது சப் ஏஜன்ட் அஜிர்தீன் என்பவர் 2.2.1982 எனக்குறிப்பிட்டு கடவுச்சீட்டை வழங்கினார்.


நான் 01.04.2005ல் சவூதி அரேபியாவிற்கு வந்தேன். நான் சவூதி அரேபியாவில் ஒன்றரை மாதங்கள் வீட்டில் வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், கழுவுதல், 4 மாதக் குழந்தையை பார்த்தல் ஆகியவற்றை செய்து கொண்டு இருந்தேன். குறித்த சம்பவ தினம் ஞாபகமில்லை. அது ஒரு ஞாயிற்றக்கிழமை பகல் 12.30 மணியிருக்கும் அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை.அங்குள்ள 4மாதக்குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன் வழமை போல அன்றும் பாலூட்டிக்கொண்டிருக்கும் போது குழந்தையின் மூக்கின் மூலம் பால் வெளியேவர ஆரம்பித்தது. அப்போது நான் குழந்தையின் தொண்டயை மெதுவாக தடவினேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் குழந்தை தூக்கமென நினைத்தேன். குழந்தையின் தாய் எனது எஜமானி 1.30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு பிள்ளை பார்த்தார்.


அதன் பின்னர் அந்த எஜமானி எனக்கு செருப்பால் அத்துவிட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு போனார். அப்போது எஜமானி குழந்தையின் தாய் எனக்கு செருப்பால் மூக்கிலும் கன்னத்திலும் அடித்த அடியினால் எனக்கு இரத்தம் வந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை பொலிசிக்கு கொண்டு போய் அங்கு ஒரு பட்டியால் அடித்தார்கள்.


குழந்தையின் கழுத்தை நசித்ததாக கூறுமாறு அடித்து வற்புறுத்தினார்கள். அவ்வாறு கூறும் வரை கரண்ட் பிடிக்கப்போவதாக கூறினார்கள். இந்த நிலையில்தான் அவர்கள் எழுதிய பேப்பரில் கையொப்பம் வைத்தேன். என்னை வேறு இடத்திற்கு கொண்டுபோய் கேட்டமையால்  பயம் காரணமாகவும் ஞாபகமில்லாமையாலும் கழுத்தை நெரித்ததாக கூறினேன்.


அல்லாஹ் மீது சத்தியமாக குழந்தையை கொள்ள நான் கழுத்தை நசிக்கவில்லை மேற்படி எனது வாக்கு மூலம் வாசித்து விளங்கிய பின்னர் உறுதியென உனர்ந்து கையொப்பமிடுகின்றேன்
15 comments:

 1. மதங்கள் மனித மனங்களை கல்லாக்கிவிடும் என்பதற்கான சாட்சி..

  ReplyDelete
 2. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இதை வைத்தே ஓட்டிட்டு இருப்பீங்க.. விடுங்கய்யா உததமர்களே.. நீங்க எல்லாரும் பாசக்கார மக்களுன்னு தெரியும்யா,,

  ReplyDelete
 3. சரீஆ சட்டப்படி மகளுக்கு வழங்கிய தீர்ப்பை முழுமையாக ஏற்கிறேன்:

  இஸ்லாம் மதத்தை சேர்ந்த ரிசானாவின் தாய்க்கு இப்படி சொல்வதை தவிர வேறு வழியிருக்கிறதா? ஆரம்பத்தில் என் மகளை கொன்னுட்டாங்களே என் பிள்ளை என்ன குற்றம் செய்தாள் என்றவர் இன்று இப்படி சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார். பாசத்தை மட்டுமல்ல நீதி, நியாயங்களையே மதத்திற்காக இஸ்லாமியர்கள் புதைத்து விடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக அந்தத்தாய் தனியே அறைக்குள் நெஞ்சிலடித்துப்புலம்பியிருப்பார் ஆனால் அழுவதோ கதறுவதோ வெளியிலேயே கேட்டிருக்காது.வெளியில் இப்படி சொல்லவேண்டியேற்பட்டிருக்கலாம் எல்லாம் முடிந்துவிட்டது இனி என்னசெல்லி என்ன செய்யமுடியும்..சிந்திக்கவேண்டியவர்கள் சிந்திக்க தவறிவிட்டார்கள்

   Delete
 4. 'மதங்கள் மனித மனங்களை கல்லாக்கிவிடும் என்பதற்கான சாட்சி..'
  மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

  பிபிசியில் இவர்கள் படங்கள் போட்டுள்ளார்கள். சோகமயமாக உள்ளார்கள்.
  அதுதான் உண்மை, பின்பு யாரைச் திருப்திப்படுத்த இந்த தாயாரின் வாக்கு மூலம்.
  சுவனத்தை பக்கத்தில் நின்று பார்த்ததுபோல் இத் தாயாரைப் பேச வைத்தது எது?
  சுவனத்துக்குக் இச் சொற்ப வயதில் கூட்டிச் செல்ல, ஆண்டவன் - பூவுலகில் இப் பெண்மேல் இப்படி ஒரு பழியைச் சுமத்தியா?
  புரியவில்லையே!

  ReplyDelete
  Replies
  1. யாரைச் திருப்திப்படுத்த இந்த தாயாரின் வாக்கு மூலம்...அதுதான் சரீஆ சட்டம் என்று கூறிவிட்டார்களே...புலம்புவதைக்கூட மதத்திற்கு எதிரானதாக மாற்றப்படும் அபாயம் உள்ளது மகளுடன் முடிந்துவிடட்டும் என எண்ணிவிட்டார் போலும்

   Delete
 5. இதையும் பாருங்கள்
  சரீஆ சட்டப்படி இப்படித்தான் தூக்கிலிட்டார்கள்....
  http://www.youtube.com/watch?v=sTqO3jshilw

  ReplyDelete
 6. இந்த மதம் பிடித்த மனிதர்களால் தன்க்கு எதுவும் பிரச்சினை வந்து விட கூடும் என்று பயந்து விட்டார் போல அந்த ஏழை தாய்.

  உங்களின் காணொளியை கண்டேன் மிகவும் கொடுமையாக இருக்கிறதையா. இந்த சட்டத்தை கொடுத்தவனையா மிக்க கருணயுள்ளவன் என்று இன்னமும் உருகிக் கொண்டிருக்கிறார்கள்
  இந்த மதவாதிகள் :(

  ReplyDelete
  Replies
  1. இந்த மதம் பிடித்த மனிதர்களால் தன்க்கு எதுவும் பிரச்சினை வந்து விட கூடும் என்று பயந்து விட்டார் போல அந்த ஏழை தாய்.// அதுதான் நடந்திருக்கும்

   Delete
 7. http://naadodimanithan.blogspot.com/2013/01/blog-post_13.html

  ReplyDelete
 8. நண்பர் கரிகாலன்,
  //இந்த சட்டத்தை கொடுத்தவனையா மிக்க கருணயுள்ளவன் என்று இன்னமும் உருகிக் கொண்டிருக்கிறார்கள் இந்த மதவாதிகள் :(//
  இவ்வளவு நாளும் கருணயுள்ளவனையையும், அவன் மதத்தையும், சவூதி அரேபியாவையும் துதித்து கொண்டிருந்தார்கள். ரிசானாவுக்கு நடந்த கொடுமைக்கு காரணமான மதத்தை நோக்கி எல்லோரும் கண்டிப்பதை பார்த்ததும் மதத்தை காப்பாற்றுவதற்காக இப்போ தான் சவூதி அரேபியாவை லேசா குறை சொல்ல தொடங்கியிருக்கிறார்கள்.அதுவும் முதல் குற்றவாளி ரிசானாவை சவூதி அரேபியா அனுப்பிய பெற்றோர்கள், பின்பு ஏஜன்ட்காரன், இலங்கை, ரிசானா, பின்பு தான் சவூதி அரேபியா.
  காணொளியை பார்த்து நானும் தான் பயந்திட்டேன். தமிழ்மணத்தில் தேடினால் ஹஜ் யாத்திரை நகைசுவை கட்டுரைகள் கிடைக்கும். படித்துவிட்டு தூங்க போங்க.

  ReplyDelete
 9. காணொளியை பார்த்தேன். உடம்பெல்லாம் நடுங்குகிறது. அந்த பெண்ணின் தலையை வெட்டும் ஆள் மற்றும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டத்தினரின் கொலைவெறி மிகுந்த அச்சத்தை தருகிறது. இவர்கள் கையில் நம் நாடும் சிக்கிக்கொண்டால்? நல்லவேளை நாம் அந்த காட்டுமிராண்டிகளின் நாட்டில் பிறக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் அதிஸ்ரம் செய்தவர்தான் சகோ வருகைக்கு நன்றிகள்

   Delete