Friday, 4 January 2013

வெங்காயம் சினிமா விருதுகள் -2012
தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு அம்சம் விருதுகள். படம் ஓடுகிறதோ இல்லையோ, விருது வேண்டும் நமது கலைஞர்களுக்கு. அதற்காக ஏற்கெனவே விருதுகள் கிடைத்த படங்களை கொப்பி பண்ணி விருது வாங்கவும் அவர்கள் தயங்குவதில்லை. நடிகர்களுக்கு வாளி வைக்கும் பொருட்டு தமிழ் ஊடகங்கள் பலவும், தமக்குத்தாமே விருது வழங்க சங்கங்களும், காசு வாங்கி விருது கொடுபவர்களும், செல்வாக்கால் விருது கொடுக்கும் மாநில, மத்திய அரசுமாக சினிமா விருது என்பதே ஒரு கேலிக்கூத்தாக ஆகிவிட்ட நிலையிலே, எண்பத்தொரு வருட தமிழ் சினிமாவின் உண்மையான தகுதியுடைத்தோருக்கு விருது வழங்க வெங்காயம் குழுமம் முடிவு செய்தது. இரண்டு மாத காலமாக நூற்று இருபத்தேழு அறிஞர்கள், விமர்சகர்கள் கொண்ட ஒரு குழு, திறமை, தகுதி அடிப்படையிலே விருதுக்குரியோரை தெரிவு செய்தது. விருதுக்குரியோருக்கு வெங்காய வடிவிலான ஐம்பது கிராம் தங்கத்தாலான விருதுப் பொறியின் புகைப்படமும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றும் வழங்கப்படும்.

நகைச்சுவை
சிறந்த சந்தேகர் : செந்தில்
சிறந்த கோபம் வாற மாதிரி காமெடி பண்ணுபவர் : பவர் ஸ்டார்
சிறந்த ஆள் வர்ணனையாளர் : கவுண்டமணி
சிறந்த நாகரிக நகைச்சுவையாளர் : சந்தானம்
வாழ்நாள் அல்லக்கை காமெடியன் விருது : மனோபாலா
சிறந்த நகைச்சுவை திரைப்படம் : ஸ்டெப்னி (யாருக்கு யாரோ? – சாம் ஆண்டர்சன்)
சிறந்த அடி வாங்குனர் : வடிவேலு (வாழ்க்கையிலும்.)
சிறந்த அடி வழங்குனர் : கவுண்டமணி

யாருக்கு யார் விருது கொடுக்கிறதுன்னு ஒரு விவஸ்தை வேணாம்?

இசை
சிறந்த பாடலாசிரியர் : விவேகா (மியா மியா பூனை)
சிறந்த இலக்கிய நயம் செறிந்த பாடல் : வை தில் கொலவெறி.. (மூணு)
சிறந்த குடும்பப்பாங்கான பாடல் : சிச்சிச்சிச்சிச்சிச்சீ! என்ன பழக்கமிது... (மஜா)
சிறந்த தமிழ் பண்பாட்டு பாடல் : கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.. (சாமி)
சிறந்த பக்திப் பாடல் : கண்ணா நீ கருப்பன் என்றாலும் மூக்கும் முழியும் அழகல்லவா?.. (கோபாலா கோபாலா)
சிறந்த தத்துவப் பாடல் : சீனா தானா... தப்புக்கள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா, தத்துவம் பிறக்கட்டுமே தப்பு செய்யேண்டா... (வசூல்ராஜா எம் பி பி எஸ்)
சிறந்த மனோதத்துவப் பாடல் : லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே... (மன்மதன்)
சிறந்த சுய கொப்பியாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
சிறந்த இந்திய கொப்பியாளர் : யுவன்
சிறந்த சர்வதேச கொப்பியாளர் : ஜி வி பிரகாஷ்
சிறந்த கதறுபவர் : அல்போன்ஸ் ஜோசப்
சிறந்த உதறுபவர் : தேவிஸ்ரீபிரசாத்
சிறந்த கத்துபவர் : வேல்முருகன்
வாழ்நாள் பரிதாபத்துக்குரியவர் : இளையராஜா
சிறந்த தொலைந்துபோனவர் : ஏ ஆர் ரஹ்மான்

தயாரிப்பாளர்கள்
சிறந்த பலிகடா : மார்ட்டின் (இளைஞன்)
சிறந்த கை சூடு : கலைப்புலி தாணு
சிறந்த தற்கொலையாளர் : காஜா மைதீன்
சிறந்த கஞ்சர் : ஷங்கர்
சிறந்த செலவாளி : உதயநிதி
வாழ்நாள் தயாரிப்பாளர்கள் விருது : ஏவிஎம் குடும்பம்
சிறந்த காணாமல் போனோர் : விகடன் டாக்கீஸ்
சிறந்த கண்டும் காணமல் போனோர் : டுவேன்டியத் செஞ்சரி ஃபொக்ஸ்

நடிகர்கள்
சிறந்த தசையமைப்பாளர் விருது : சூர்யா
சிறந்த சொறிமுக நடிகர் : காதல் தண்டபாணி
இலட்சிய நடிகர் விருது : கார்த்தி
இலட்சிய நடிகை விருது : சோனா
பிளாஸ்டிக் சேர்ஜரி விருது : கமல்ஹாசன்
உயர்ந்த நடிகருக்கான அமிதாப் பச்சன் விருது : சூர்யா
மெல்லிய நடிகருக்கான ஓமக்குச்சி விருது : அஜித்
சிறந்த குடும்பப்பாங்கான நடிகை : சிலுக்கு ஸ்மிதா
சிறந்த நடிகர் விருது : பவர் ஸ்டார்
சிறந்த நடிகை விருது : கமல் ஹாசன் (அவ்வை சண்முகி)
சிறந்த கட்டழகு நடிகை விருது : நமீதா
சிறந்த கட்டழகு நடிகர் விருது : உசிலைமணி
சிறந்த கதை பிரட்டி : ரஜினிகாந்த்
சிறந்த புதுமுக நடிகர் : கமலஹாசன் (ஒவ்வொரு முகமும் புதுமுகமே.)
சிறந்த பல்லழகர் : ராஜகுமாரன் (தேவயாணி கணவர். நடிக்க வருகிறாராமாம்.)

இயக்குனர்கள்
சிறந்த ஆங்கில இயக்குனர் : கௌதம் மேனன்
சிறந்த தெலுங்கு இயக்குனர் : ராஜா
சிறந்த காதல் மயக்குனர் : வசந்த்
சிறந்த காதல் தயக்குனர் : கதிர்
சிறந்த கண்டுபிடிப்பாளர் : கே பாலசந்தர்
சிறந்த முக சிதைப்பாளர் : பாலா
சிறந்த வீண் செலவாளி : ஷங்கர்
குடும்பப்பாங்காக படம் எடுப்பவருக்கான சிறப்பு விருது : எஸ் ஜே சூர்யா
நளினமாகவும், நாகரிகமாகவும் படம் எடுப்பவருக்கான சிறப்பு விருது : பாலா
அறிவியல் ரீதியாக படம் எடுப்பவருக்கான சிறப்பு விருது : கே எஸ் ரவிக்குமார்
சிறந்த தமிழாக்க இயக்குனர் : ஏ எல் விஜய்
சிறந்த இயக்குனர் : பேரரசு


திரைப்படங்கள்

கலாசாரத்தை செழுமைப்படுத்தும் சிறந்த படம் : அ.. ஆ..
தமிழர் பண்பாட்டை செழுமைப்படுத்தும் சிறந்த படம் : ஆயிரத்தில் ஒருவன்
சிறந்த ஆன்மீக திரைப்படம் : வெடி (இது பார்த்து வாழ்க்கை வெறுத்துப்போன பலர் துறவறத்தை தெரிவு செய்ததால்.)
கோட் விளம்பரத்துக்கான சிறந்த படம் : பில்லா
உள்ளாடை விளம்பரத்துக்கான சிறந்த படம் : ஜித்தன்
சாராய விளம்பரத்துக்கான சிறந்த படம் : வ குவாட்டர் கட்டிங்
பூச்சிமருந்து விளம்பரத்துக்கான சிறந்த படம் : சுறா (புரியவில்லையா? இந்தப் படம் வந்த புதிதில் முப்பதாயிரம் பூச்சி மருந்து போத்தல்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. படம் பார்த்த எழுபதாயிரம் பேர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை!)


வாழ்நாள் விருதுகள்
வாழ்நாள் நாட்டாமை விருது : விஜயகுமார்
வாழ்நாள் சோதனையாளர் விருது : அருண் விஜய்
வாழ்நாள் போலிஸ் விருது : விஜயகாந்த்
வாழ்நாள் அரசியல்வாதி விருது : பிரகாஷ் ராஜ்
வாழ்நாள் கிராமத்தான் விருது : ராமராஜன்
வாழ்நாள் பூசை விருது : பூர்ணம் விஸ்வநாதன்
வாழ்நாள் **** விருது : ஷகீலா
வாழ்நாள் இயக்குனர் விருது : டி பி கஜேந்திரன்
வாழ்நாள் பாடகர் விருது : மோகன்
வாழ்நாள் விதவை விருது : மனோரமா
வாழ்நாள் கல்லூரி மாணவர் விருது : முரளி
வாழ்நாள் பாடசாலை மாணவர் விருது : பாண்டி
வாழ்நாள் நல்லவர் விருது : எம் ஜி ஆர்
வாழ்நாள் கெட்டவர் விருது : எம் என் நம்பியார்


பொது
சிறந்த வசனகர்த்தா : கருணாநிதி, சுஹாசினி (ராவணன்)
சிறந்த நடனம் : பாக்யராஜ், சாம் அண்டர்சன்

மொழி விருதுகள்
சிறந்த தமிழ் உச்சரிப்பு : வினய்
சிறந்த ஆங்கில உச்சரிப்பு : விமல்
சிறந்த ஆங்கில ஆசிரியர் : மேஜர் சுந்தர்ராஜன்
சிறந்த அடுக்குமொழி அரசன் : டி ராஜேந்தர்
சிறந்த உறவுமொழி : நமீதா (மச்சான்!)
தமிழ் சினிமாவின் மிக சோதனைக்குரிய பெயர் : விஜய் (நடிகர் விஜய், விஜயகாந்த், இயக்குனர் விஜய்.)
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான சொல்லு : ஏய்!!!
தமிழ் சினிமா அதிகம் பயன்படுத்திய சொல் : ஆத்தா
தமிழ் சினிமா கண்டுபிடித்த அதி உன்னதமான சொல் : ங்கோ**

குரல் விருதுகள் :

வெண்கலக் குரலோன் விருது : வி டி வி கணேஷ்
தடிமல் குரலோன் விருது : எம் ஜி ஆர்
சிறப்பு விருதுகள்
தியாக செம்மல் விருதுப்பொறி (அதிக தடவைகள் தியாகம் செய்தவர்) : சந்திரசேகர்
குருட்டு அதிர்ஷ்டத்துக்கான கூட்டு விருது : தனுஷ், ஐஸ்வர்யா, அனிருத்
கலாசார காவலர் சிறப்பு விருது (பெண்) : நயன்தாரா
கலாசார காவலர் சிறப்பு விருது (ஆண்) : சிம்பு
சென்னை காவலர் விருது : விஜய்
தமிழ்நாட்டு காவலர் விருது : அர்ஜுன்
இந்தியக் காவலர் விருது : விஜயகாந்த்
உலக காவலர் விருது : கமல் ஹாசன்
இட்லி விருது : குஷ்பூ
சிறந்த எண்ணை விருது : ஜோதிகா
சிறந்த வெண்ணை விருது : எம் ஜி ஆர்
தொடர்ச்சி மொக்கை நாயகன் விருது : சூர்யா
முன்கதை சுருக்கம் விருது : சக்ரி டோலேட்டி
பின்கதை பெருக்கம் விருது : கமல் ஹாசன்

ரசிகர்களுக்கான விருதுகள்
சிறந்த ஏமாளி விருது : ரஜினி ரசிகன்
சிறந்த கோமாளி விருது : விஜய் ரசிகன்
சிறந்த ரசிகன் (பெருமூச்சுடன்..) விருது : நயன்தாரா ரசிகன்
சிறந்த பொறுமைசாலி விருது : அஜித் ரசிகன்
(neethujan bala)

No comments:

Post a Comment