Wednesday, 23 January 2013

தயவுசெய்து இந்தப் பதிவை ஷெயார் செய்யவும்...மனிதாபிமானம்.

யாரோ ஒரு குழந்தைக்கு முகத்தில் ஒப்பிரேசன் செய்ய வேண்டுமாம்அதுக்காக போட்டோவை ஷெயார் செய்!ஆபிரிக்காவில் குழந்தைகள் பட்டினியால் வாடுகிறார்கள்எனவே நீ இங்கே சோறு சாப்பிடாதே! இப்படியாக மனிதாபிமான மாமணிகளின் ஷேயார்கள் உங்களையும் கடுப்பாக்கி இருக்கக் கூடும். மனிதாபிமானத்தை வெளிப்படுத்த ஒரே வழி, செயற்படுவதுதான். சொல்லிக் கொண்டிருப்பது இல்லை. இவற்றை ஷெயார் பண்ணினால் சட் பண்ணும் பெண்கள் வேண்டுமானால் அவர்களை மகாத்மாவாக பார்க்கலாம்ஆனால் மில்லியன் ஷேயார்கள் வந்தாலும் அங்கெ ஒரு குழந்தைக்குக் கூட காய்ந்த ரோட்டி கிடைக்கப் போவதில்லை. இதைவிடக் கொடுமை என்ன தெரியுமாபசிப்பிணியை போக்குவதற்கு ஒரு தளம் நடத்துகிறார்கள். அந்தத் தளத்தின் விளம்பர வருமானமானது பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க பயன்படுகிறது. அப்படி ஒரு தளத்தை பேஸ்புக்கில் ஷெயார் பண்ணிப் பார்த்தேன். அதற்கு ஷெயார் ஏன்லைக் கூட கிடைக்கவில்லை. உண்மையாக அக்கறை உள்ளவன் ஷெயார் பண்ணி அல்லவா இருக்க வேண்டும்இப்படி இருக்கிறது நிலைமை.
இதுதான் நிலைமை.
சிறுமி சாகக் கிடக்கிறாள். ஷெயார் பண்ணுகிறார்கள். ஏன் தெரியுமா???
டாக்குத்தர் இப்படி காத்திருக்கிறாராம்...


 இதைவிடக் கொடுமை என்ன என்றால்கான்சரால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவுகிறார்களாம். கான்சர் என்பது ராசிபலனில் (கான்சர் என்பது கடகராசி.) மட்டுமே இருக்கவேண்டுமாம். அதாவது கான்சரை ஒழிக்கப் போகிறார்களாம். என்ன சொல்லகான்சர் என்னசிலாக்கி மலாக்கியால் வரும் எய்ட்சாஅல்லது வள்ளு வதக்கென்று தின்றால் வரும் வியாதியாஒழிக்ககான்சர் என்பது ஒழிக்கக் கூடிய வியாதி என்பதே தெரியாமல்அதை எப்படி ஒழிக்கப் போகிறார்கள்?

தங்களை மனிதாபிமானர்களாகஇரக்க சீலர்களாக காட்டும் பதிவுகள் ஏராளம். அண்மைய சூப்பர் சிங்கரில் தனது அழகை காட்டியே பிழைத்த சிறுமிதனது பேஸ்புக் தளத்தில் குழந்தைளுக்கு இனிப்பு கொடுத்த படத்தை அடிக்கடி கவராக விடுகிறார். என்ன சொல்ல வருகிறார்கள் இந்த இரக்க சீலர்கள்கொடுப்பது தாங்கள்தான் என்பது வாங்குபவர்களுக்கே தெரியாமல் கொடுப்பவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறார்கள்அவர்கள் இருக்கும்போதே இவ்வாறு செய்ய வெட்கமாக இருக்காதாஇதனை எனது முகப்புத்தகத்தில் எழுதும் போதெல்லாம் என்னிடம் ஒரு கேள்வி கேட்பார்கள். நீ என்ன பெரிதாக கொடுத்து கிழித்தாய்? என்று.. நான் கொடுத்ததாகவோஇரக்க சீலனாகவோ எப்போதுமே காட்டிக் கொண்டதில்லை, யாருக்கும் இரக்கப் பட்டதும் இல்லை. சிம்பிள்.


குடும்பம்

எதோ மற்றவன் எல்லோரும் குடித்துவிட்டு தாயை உதைப்பவன் போலவும்தாங்கள் மட்டும் குடியிருந்த கோயில் எம் ஜி ஆர் கணக்காக அம்மாவை தூக்கி வைத்து கொண்டாடுபவர்கள் போலவும்ஹிட் லைக் இப் யூ லவ் யுவர் மாம் என பதிவுகள் வருமே, கடுப்பாகும். அதுவும் அன்னையர் தினம் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். இதேபோலத்தான் தந்தையர் தினம்அக்காக்கள் தினம் என நீளுகிறது பட்டியல்.
நெட் கொஞ்சம் சிலோவாகி, நீ 3 செக்கனில் ஷெயார் பண்ணினால் நீ உன் அம்மாவுக்கு மகன் இல்லை.

பேஸ்புக்கில் அம்மாவை விரும்புகிறேன் என அறிவிக்கும் அளவிலா இருக்கிறது உங்களது தாய்மேலான பாசம்அது ஆத்மா சம்பந்தப்பட்ட உணர்வல்லவாநான் மூச்சு விடுகிறேன் என்பது போலஅதுவும் எந்தக் கணமும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வல்லவா? இதற்குக் கூடவா விளம்பரம்அறிவிப்பு?

//இந்தப் பதிவுகளை எழுதுவதற்கு முன்கலாய்க்கவென ஒரு படத்தை தயார் செய்தேன், காலப்போக்கில் நம்மவர்கள் தந்தை இறந்ததைக்கூட பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டு லைக் வாங்குவார்கள் என்றுஇன்றைக்கு பேஸ்புக்கை உலாவியபோது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்ததுபிரபலமானஅறிவுசார் சிந்தனையாளர் என அறியப்படும் ஒரு கவிஞர்தனது தந்தை இறந்தது சம்பந்தமாக முகப்புத்தகப் பதிவிட்டுள்ளார். தந்தை இறந்த சோகத்தின் நடுவில் ஒருவரால் ஸ்டேடஸ் இட முடியுமாஆச்சரியம்தான். அதற்கு ஷேயார்கள் வேறு. //
இது நான் தயாரித்த படம்.
இது மனா புனா போட்ட ஸ்டேடஸ். உண்மை.

பேஸ்புக்கில் இன்னொரு ஷெயார் சம்பந்தப்பட்ட வதை உள்ளது. அதுதான் போட்டோ டக் பண்ணுவது. தீபாவளிபொங்கல் என்று பண்டிகைகள் வந்துவிட்டால் போதும்அதை நாம் கொண்டாடுகிறோமாஇல்லையா என்றெல்லாம் பார்க்காது ஒரு வாழ்த்து போட்டோ போட்டு ஒரு நூறு பேரை டக் பண்ணி விடுவார்கள். அப்புறம் என்னஅத்தனை பெறாது கொமெண்டுகளும் நோடிபிகேசனாக வருவது முதல் ஆயிரம் சிக்கல்கள். உண்மையாக அன்போடு வாழ்த்து சொல்லுபவர் மெசேஜில் தனியாக வாழ்த்துவாராஅல்லது தான் ஏதோ நாட்டின் தலைவர் போல அனைவருக்கும் பொதுவாக வாழ்த்துக்களை எறிவார்நாம் பொறுக்க வேண்டுமா?


பெண்ணியம்.

பெண்ணியத்தைபெண்ணுரிமையை வைத்து பேஸ்புக்கை ஓட்டுபவர்களை பற்றி தனியாக ஒரு பதிவு இடவுள்ளேன். அங்கே அலம்புகிறேனே...?


தமிழ்!!!!
SHARE IF YOU ARE PROUD TO BE A TAMILAN! பற்றி.. அடுத்த பதிவில்! 
 நான் ஏற்கெனவே இதுபற்றி நாகரிகமாக மூன்று பதிவுகளில் முணுமுணுத்திருந்தது நினைவிருக்கலாம்... இந்தமுறை கொஞ்சம் காமெடியாக...
நாளையே...

இப்படியாக நல்லவர்களாகவோபுத்திசாலிகளாகவோபெண்ணிய வாதிகளாகவோ, புரட்சியாளர்களாகவோ தங்களை காட்டிக்கொள்ளும் வகையிலான பதிவுகளை பார்த்தால் எனக்கு என்ன கொமென்ட் போட விருப்பம் வரும்தெரியுமா?

செத்த மூடுறேளா?

Tuesday, 15 January 2013

ரிசானா படுகொலை : தீராத சந்தேகங்கள்.ரிசானா நபீக்கின் படுகொலையானது (எடுத்த எடுப்பிலேயே படுகொலை என குறிப்பிடுவதுபற்றி உங்களுக்கு ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தால் தயவுசெய்து மேலே வாசிக்க வேண்டாம். இந்தப் பதிவு உங்களுக்காக எழுதப்படவில்லை.) உலகத்தின் மனிதர்களை மதிக்கும் அனைவரையும் வெகுவாகப் பாதித்துள்ளது. ஏழு வருடங்களாக நடந்த இந்த இழுபறிப் போராட்டத்தையும், அதன் பின்னணியையும் நாங்கள் அறிந்துகொள்ள, வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக போன ஒரு பெண் பட்ட துன்பத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள, அந்தப் பெண் கொல்லப்பட வேண்டியிருக்கிறது.

வழக்கின் வரலாறு, பின்னணி என்பவை தொடர்பில் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். 2005 ஏப்ரல் முதல் திகதி, வேலைவாய்ப்பு முகவர்களின் ஊடாக ரிசானா நபீக் என்கிற சிறுமி, (2.2.1988 இல் பிறந்த அவரை, முகவர்கள் கடவுச்சீட்டு மற்றும் வேலை விசா பிரச்சனைகளுக்காக 1982 ஆம் ஆண்டு பிறந்தவர் என பதிந்தார்கள்.) சவூதி தலைநகர் ரியாத்திலிருந்து நானூறு கிலோமீட்டர் தூரத்திலிருந்த அல் ஓடைபி வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கே அல் ஓடைபி வீட்டின் சமையல், துப்பரவு வேளைகளில் உதவுவதும், அல் ஓடைபி, நைப் ஜிசியம் தம்பதியின் ஒன்றரை மாதக் குழந்தையை பராமரிப்பதுவும் அவருக்கு ஒதுக்கப்பட வேலைகள்.

இந்தத் தகவல்கள் தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தரவுகளையே சவூதி போலீசாரும், ஏனையோரும் தருகிறார்கள். வழக்கின்படி, 2005 மே 25 இல், மதியத்தின்போது குழந்தைக்கு பால் புகட்டியபோது குழந்தை விக்கியதாகவும், அந்த நேரத்தில் பதட்டத்தில் ரிசானா குழந்தையின் முதுகிலும், கழுத்திலும் அழுத்தி, குழந்தையின் மூச்சுத் திணறலை நிறுத்த முற்பட்டபோது குந்தை இறந்துவிட்டதாகவும், அதன்பின்னர் ஏழு வருடங்கள் நடந்த வழக்கு விசாரணையில் இலங்கை அரசு, ஐ நா, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல அமையங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்தும், எந்த முயற்சியும் பலனளிக்காது ரிசான மரணதண்டனை நிறைவேற்றப்பட்டார் என்பதுதான் கதை.

இந்த வழக்கிலே பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
·         வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் ரிசானாவை வயது கூடியவராக காட்டி இருக்கா விட்டால், அவர் ஒரு சிறுமி என்பதற்கான சலுகைகள் கிடைத்திருக்கும்.
·         ரிசானாவுக்கு பெரிதாளவில் அரபிக் தெரியாததால் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்த கேரளத்துக்காரர் அத்தனை சிறப்பாக நடந்துகொள்ளவில்லை. அவரது மொழிபெயர்ப்புக்கள் பொருத்தமானதாக இருக்கவில்லை.
·         சவூதி அரசர் உள்ளிட்ட பலர் இறந்துபோன குழந்தையின் பெற்றோரிடம் எவ்வளவு கெஞ்சியும், அவர்கள் ரிசானாவை மன்னிக்கத் தயாராக இல்லை.
·         போலீசார் வற்புறுத்தி ரிசானாவிடம் வாக்குமூலம் வாங்கினார்கள்.

இப்படி பல புறக் காரணிகள் சொல்லப்படுகின்றன. ஒரு சிறுமியால், மொழியோ, மனிதர்களோ தெரியாத தேசத்தில் எப்படி இவற்றை எல்லாம் சமாளித்திருக்க முடியும்? சமாளிக்கவே முடியாத ஒரு பெண், எப்படி கொலை செய்யத் துணிவாள்?

ரிசானாவின் பாஸ்போட்


எனக்கு ஷரீ ஆ சட்டத்தைப்பற்றியோ, ரிசானா அந்தத் தண்டனையை ஏற்றுக் கொண்டாளா என்பது பற்றியோ தெரியாது. நான் விமர்சிக்கப்போவது அந்த சட்டத்தைப்பற்றி அல்ல. மேலும், சவூதியில் ஷரீ ஆ சட்டமானது சரியாக பின்பற்றப் படுவதில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதுபற்றி விமர்சித்தால் எனக்கும் அமரபதவி கிடைக்கும் என்பதை நான் நன்கறிவேன்.
ரிசானாவின் குடும்பம்

என்னிடம் உள்ளவை சில சந்தேகங்களே.

·         ஒரு சிறுமி, அந்த நாட்டுக்கே வந்து ஒரு மாதம்தான் ஆன, முதலாளியுடன் எந்தவித பிணக்கும் இல்லாத சிறுமி, எவ்வாறு ஒரு குழந்தையை கொலை செய்திருக்கிறாள் என நம்ப முடிகிறது? குழந்தையின் பெற்றோருடன் பிணக்கு இருந்தது என்று எடுத்தால்கூட, அதற்காக கொலைசெய்யும் அளவு வன்மமும், கோபமும், துணிச்சலும் ஒரு சிறுமிக்கு வராது என்பது சும்மாவே தெரியாதா?
·         அப்படியே சிறுமி கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டாலும், அவள் இன்னொரு நாட்டின் பிரஜை அல்லவா? என்னதான் சட்டம் இருந்தாலும், வேறு நாட்டின் பிரஜையை கொலை செய்யும்போது அந்த நாட்டை மதிக்கவில்லை என்பதைத்தானே அது காட்டுகிறது?
·         கொலைதான் என்று எடுத்துக் கொண்டாலும், அதற்கு கொலைதான் தண்டனையா? கற்பழிப்புக்கு கற்பழிப்பும், திருட்டுக்கு திருட்டும் தண்டனை அல்லாதபோது கொலைக்கு எப்படி கொலை தண்டனையாகும்?
·         ஒரு மனிதரை கொல்லுவது என்பதே கொடூரமானதாக இருக்கும்போது, நடுச் சந்தியில், மக்கள் மத்தியில் கழுத்தை வெட்டிக் கொல்லுவது காட்டுமிராண்டித்தனம் இல்லையா? ஒருவருக்கு கொலை தண்டனையாக வழங்கப்பட்டபிறகு, அவர் குற்றவாளி இல்லை என்று தெரிந்தால் என்ன செய்வது?
·         ஏழு வருடங்கள் போனபிறகும், இன்னொரு குழந்தை பிறந்தபிறகும், வன்மம் வைத்த கொலை இல்லை என்று தெரிந்தபிறகும், உலக நாடுகள் பல கெஞ்சியபிறகும் இறங்காத, இரங்காத குழந்தையின் பெற்றோரின் மனம் எத்தகையது? இப்படியான மனத்தை அவர்களுக்கு உருவாக்கியது எது? மதமா?
·         வாளால் கழுத்தை வெட்டிக் கொல்லலாம் என்பது என்ன விதமான இறைவனால் அருளப்பட்ட சட்டம்? அப்படி என்றால், வெட்டிக் கொள்ளும் அந்த வேலையை செய்பவர் இறைவனால் அல்லவா அனுப்பப் பட்டிருக்க வேண்டும்? மனிதர்கள் நடத்தும் ஒரு அரசாங்கத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிக்கு, இறைவனால் மொழியப்பட்ட தண்டனையை வழங்கும் அதிகாரத்தை இறைவன் எப்போது அளித்தான்? இறைவனின் பார்வையில் ரிசானா கொலைகாரி என்றால், தண்டனையை நிறைவேற்றியவரும் கொலைகாரன் தானே?
·         மதத்தின் பெயரால், இறைவனின் பெயரால் கழுத்தை வெட்டும் மனிதர்களின் நடுவிலா நாம் வாழ்கிறோம்? ரிசானாவின் கொலையை விமர்சிக்கும் குறித்த பகுதியினர், வழக்கு விசாரிக்கப்பட்ட விதத்தை குறை சொல்லுகிறார்களே தவிர, கொலை செய்யும் வகையான தண்டனை முறையை விமர்சிக்கவில்லை. தவறுதலாக குழந்தையை கொல்லும் சிறுமிக்கு கொலைதான் தண்டனை என்றால், சிறுமிகளை கற்பழித்து கொலை செய்யும் காமுகனுக்கு என்ன தண்டனை? அதே கழுத்து வெட்டுத்தானே? இது எந்த வகை நியாயம்?
·         கழுத்தை அறுத்து கொல்லப்படவேண்டிய மனிதர்களையும், குற்றங்களையும் உருவாக்கியவர் யார்? சட்டங்களை உருவாக்கிய இறைவன் அல்லாத வேறொருவரா?
·         ரிசானாவின் பெற்றோர் சிறுமியின் மரணத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார்களாம். அத்துடன் சவூதி அரசு கொடுத்த பணத்தையும் பெற்றுக் கொண்டார்களாம். இது எந்த வகையில் மனிதர்கள் செய்யும் செயலாக எடுத்துக் கொள்ளுவது?
ரிசானாவின் வாக்குமூலமாக வெளியிடப்பட்ட கடிதம்.


மனிதர்களை விட மதம் பெரிதென்கிற மனிதர்களை மாற்றவே முடியாது. கொலை செய்யுமாறு உனது மதம் அனுமதிக்கிறதென்றால், முதலில் உன்னிலிருந்து அதை தொடங்கு என்று ஒரு வாக்கியம் இருக்கிறது. கமல் ஹாசன் என்கிற இந்தியாவை சேர்ந்த மனித நேய சிந்தனையாளர் சொன்னதுபோல, மரணம் என்பது, இயற்கையை தவிர, வேறு எதனால் ஏற்பாடு செய்யப்பட்டாலும், அது கொலைதான்.ஒரு கொலைத்தண்டனை எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதை இங்கே பாருங்கள். முடிந்தால் மட்டும்.

Sunday, 13 January 2013

சரீஆ சட்டப்படி மகளுக்கு வழங்கிய தீர்ப்பை முழுமையாக ஏற்கிறேன்: ரிசானாவின் தாய்

எனது மகள் ரிசானாவை அல்லாஹ் தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான். இதுதான் என் உறுதியான நம்பிக்கை' என்று சுவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் தயார் ரஸீனா நபீக் தெரிவித்தார். ரிசானா நபீக் மரண தண்டனைக்கு உள்ளானதன் பின்பு அவர் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 'சரீஆ சட்டப்படி என மகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை நான் முழுயாக மதிக்கின்றேன். அதனை ஏற்றுக் கொள்ளுகின்றேன். சரீஆ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் அது எத்தகையதாக இருந்தபோதும் நிரந்தரமான மறுமையில் ரிசானாவிற்கு உயர்ந்த பேறு கிடைக்கும். அவர் இப்போது சுவனத்திற்குச் சென்றுள்ளதாகவே உணர்கின்றேன். உலகெங்கும் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் எனது மகளை அவர்களது சொந்த சகோதரியாகக் கருதி 'துஆ' பிரார்த்தனையில் ஈடுபட்டதானது இதனையே மேலும் உறுதிப்படுத்துகின்றது. இதனால் ரிசானாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றி வேறு எதுவும் என்னால் கூறமுடியாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன். இதேவேளை ரிசானாவுக்கு மன்னிப்பை பெற்றுக்கொடுப்பதற்கு பல்வேறு வழிகளிலும் இறுதிவரை முயற்சித்து வந்த அனைத்து உள்ளங்களுக்கும் ஊடகங்களுக்கும் மனித உரிமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மொத்தத்தில் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அல்லாஹுதஆலா அனைவருக்கும் பேரருள் புரியவேண்டுமென பிரார்த்திக்கின்றேன்' என்றார்.

றிஷானாவின் கடிதம்...

30.01.2007, அல் தவாத்மி சிறைச்சாலை, அல் தவாத்மி, இலங்கையில் எனது முகவரி எம்எஸ்.நபீக், சாலி நகர் மூதூர் எனது உண்மையான வயது 19, நான் பிறந்த திகதி 02.02.1988 எனது வயதை எனது சப் ஏஜன்ட் அஜிர்தீன் என்பவர் 2.2.1982 எனக்குறிப்பிட்டு கடவுச்சீட்டை வழங்கினார்.


நான் 01.04.2005ல் சவூதி அரேபியாவிற்கு வந்தேன். நான் சவூதி அரேபியாவில் ஒன்றரை மாதங்கள் வீட்டில் வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், கழுவுதல், 4 மாதக் குழந்தையை பார்த்தல் ஆகியவற்றை செய்து கொண்டு இருந்தேன். குறித்த சம்பவ தினம் ஞாபகமில்லை. அது ஒரு ஞாயிற்றக்கிழமை பகல் 12.30 மணியிருக்கும் அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை.அங்குள்ள 4மாதக்குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன் வழமை போல அன்றும் பாலூட்டிக்கொண்டிருக்கும் போது குழந்தையின் மூக்கின் மூலம் பால் வெளியேவர ஆரம்பித்தது. அப்போது நான் குழந்தையின் தொண்டயை மெதுவாக தடவினேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் குழந்தை தூக்கமென நினைத்தேன். குழந்தையின் தாய் எனது எஜமானி 1.30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு பிள்ளை பார்த்தார்.


அதன் பின்னர் அந்த எஜமானி எனக்கு செருப்பால் அத்துவிட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு போனார். அப்போது எஜமானி குழந்தையின் தாய் எனக்கு செருப்பால் மூக்கிலும் கன்னத்திலும் அடித்த அடியினால் எனக்கு இரத்தம் வந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை பொலிசிக்கு கொண்டு போய் அங்கு ஒரு பட்டியால் அடித்தார்கள்.


குழந்தையின் கழுத்தை நசித்ததாக கூறுமாறு அடித்து வற்புறுத்தினார்கள். அவ்வாறு கூறும் வரை கரண்ட் பிடிக்கப்போவதாக கூறினார்கள். இந்த நிலையில்தான் அவர்கள் எழுதிய பேப்பரில் கையொப்பம் வைத்தேன். என்னை வேறு இடத்திற்கு கொண்டுபோய் கேட்டமையால்  பயம் காரணமாகவும் ஞாபகமில்லாமையாலும் கழுத்தை நெரித்ததாக கூறினேன்.


அல்லாஹ் மீது சத்தியமாக குழந்தையை கொள்ள நான் கழுத்தை நசிக்கவில்லை மேற்படி எனது வாக்கு மூலம் வாசித்து விளங்கிய பின்னர் உறுதியென உனர்ந்து கையொப்பமிடுகின்றேன்
Thursday, 10 January 2013

டெல்லி ரேப்-ஜாக்கி வாசுதேவ்

500 ரேப் வீடியோக்கேம்கள் உலகில் மிகப்பிரபலமானவை.அதில் ஒரு வீடியோக்கேம் மிக மிக பிரபலம்..ஒரு ரெயில்வே நிலையத்திற்கு ஒரு தாயும் இரண்டு மகள்களும் செல்கின்றார்கள்.அந்த தாயை ரேப்செய்வது எப்படி என்பதுதான் கேம்.நீங்கள் தாயை ரேப் செய்வதில் வெற்றிபெற்றால் ஒருமகள் உங்களுக்கு பரிசு..இப்படியான ஒரு கேம் வணிகரீதியில் மிக லாபத்துடன் விற்றுதீரிந்துள்ளது.பலர் இரசரியமாக இதை விளையாடுகின்றார்கள்.....இப்படியான சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.கேமில் ரெயில்வேஸ்ரெஸன்..ஆனால் நிஜத்தில் நடந்தது பஸ்ஸினுள்...தலை நகராகையால் நாடுமுழுவதும் தெரிந்தது இதுவே எங்கோ ஒரு மூலையாக இருந்திருந்தால் 10 ஓடு 11.ஸ்ரட்டிக்ஸிற்காக கூட அது கணிப்பில் எடுத்துக்கொண்டிருக்கப்பட மாட்டாது...டெல்லியில் நடந்த ரேப் தொடர்பாக ஜாக்கிவாசுதேவ் பேசுகின்றார்...அவசியம் பாருங்கள்Wednesday, 9 January 2013

ஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......


   
உங்களில் பலர் " ஜோதா அக்பர்(2008)" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் செய்யப்பட்ட ஒரு திரைப்படம். உண்மையிலேயே அழகான, காதலை மையப்படுத்திய ஒரு திரைப்படம் என்றால் அது மிகையாகாது. மொகலாயப் பேரரசர் அக்பருக்கும் (இஸ்லாமியர்), ஜோதா எனும் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த அவரின் ராணிக்கும் (இந்து) இடையிலான காதலை ஊடல் கலந்து ரசிக்கும் படியாகக் காட்டியிருந்தார்கள். "ஜோதா அக்பர்", காதலை விடவும் மேலதிகமாக சமயங்களுக்கிடையிலான சமத்துவத்தையும் வலியுறுத்தியிருந்தது - மாமன்னர் அக்பரின் கதாபாத்திரம் மூலமாக. இது அதன் திரைவிமர்சனம் என எண்ணியிருக்கும் அன்பர்கள் என்னை மன்னித்து, தொடர்க.
அக்பரின் தொலைநோக்குப் பார்வையும், ஆட்சித் திறமையும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு நல்லதோர் முன்னுதாரணம். ஒரு மன்னன்- அதுவும் பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்றதொரு நாட்டின் மன்னன் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அக்பர் பாதுஷா 100% சரியான உதாரணம்.
         
             திரைப்படத்தில் ஜோதா பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் (ம்ம்... எப்பிடி இருந்த பொண்ணு ....!?.) . ஜோதா எனும் கதாபாத்திரம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறவில்லை என்றும், அவர்களின் காதல் வெளியுலகிற்குத் தெரியாமலே போயிற்று என்றும் திரைப்படத்தின் இறுதியில் கூறியிருந்தார்கள். உண்மை. வரலாறு ஜோதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பதிலாக, அக்பர் பாதுஷா ராஜபுத்திரர்களை எப்படித் தன் 'மாமனார் ஆக்கும்' மார்க்கத்தின் மூலம் வழிக்குக் கொண்டு வந்தார் என்ற நோக்கில் 'அக்பர்- ஜோதா' திருமணத்தை அது பார்க்கிறது.

         ஆஜ்மீரை ஆண்ட பிஹாரிமால் அல்லது பார்மால் என்ற ராஜபுத்திர மன்னரிடம் பாதுஷா (அவ்விடம் ஒரு ஞானியின் கல்லறைக்குச் சென்று வணங்கிவிட்டு போனால் போகிறது என்று...) விஜயம் செய்ய நேர்ந்தது... அரண்மனையில் மன்னரின் மகளை (ஜோதா) அக்பர்   சைட் அடிக்க, அண்ணலை அவளும் நோக்க, நம்ம ஊராக இருந்தால் பின்னியிருப்பார்கள்... சக்கரவர்த்தி அல்லவா?  காதல் கல்யாணத்தில் போய் முடிந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு மிகப் பெரிய அதிசய சம்பவமாக இருந்தது. இதைப் புரிந்து கொள்ள, ராஜபுத்திரர்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும்.
     
             ராஜபுத்திரர்கள் மொகலாய சாம்ராஜ்யத்தின் தோற்றத்துக்கு (1526 - பாபர்) நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே இந்தியாவை ( குறிப்பாக வட இந்தியாவை ) ஆட்சி செய்தவர்கள்.. உதாரணமாக, சம்யுக்தையைக் கடத்திச் சென்று மணம் புரிந்த பிருத்விராஜ் ( தெரியாதவர்கள் காதலியால் கைவிடப்பட சபிக்கிறேன்...) ராஜபுத்திர மன்னன். வீரம் என்று சொல்வார்களே... அந்தச் சொல்லுக்கு மிகப்பொருத்தமான உதாரணம் ராஜபுத்திர வம்சம். வேறெந்த இனத்தையும் விட மண் மீதான பற்றிலும், 'வெற்றி அல்லது வீரமரணம்' என்ற கொள்கையிலும் ராஜபுத்திர மாவீரர்கள் சிறந்து விளங்கினார்கள். சிறுவயதிலிருந்தே அவர்கள் தாய்நாட்டின் மீதான பற்றுடனும், வீரத்துடனுமே வளர்க்கப்பட்டார்கள். அதன் காரணமாக உயிரைத் துச்சமென மதித்து மரணம் வரை போராடும் அவர்களை எந்த அந்நிய சக்தியாலும் முழுமையாக அடக்கி விட முடியவில்லை. வந்த எதிரி நாட்டவர்கள்  வென்றாலும், தோற்றாலும் ராஜபுத்திரர்களின் வீரம் பற்றி வியக்காமல் இருந்ததில்லை ( பாபர் முதல் ஔரங்கசீப் வரை ).

           நாம் ஜோதா - அக்பர் கதைக்குத் திரும்பலாம். மொகலாயர்களையும் ராஜபுத்திரர்கள் எதிர்க்கத் தயங்கவில்லை. இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவில் இஸ்லாமிய மன்னரின் ஆட்சியை அவர்கள் எதிர்த்ததில் வியப்பேதுமில்லை. இவ்வாறு மொகலாயர்களால் வழிக்குக் கொண்டு வர முடியாது போன ராஜபுத்திரர்களை முதன்முறையாக அன்பினால் அரவணைத்து வெற்றி கண்டார் மாமன்னர் அக்பர்; ஜோதாவுடனான திருமணத்தின் மூலம். ( அக்பருக்கும், ஜோதாவுக்கும் பிறந்த மகனே அடுத்ததாகப் பட்டத்துக்கு வந்த ஜஹாங்கீர் பாதுஷா. அவரும் ராஜபுத்திரப் பெண்களை மணந்து கொள்ள, மொகலாய - ராஜபுத்திர உறவு வலுப்பட்டமை பிந்திய கதை .)

           ஜோதா அக்பரில் குறிப்பிடப்படாத இன்னொரு விடயம் , ஜோதாவை விடவும் அக்பர் பாதுஷாவுக்குப் பல மனைவிமார் இருந்தனர் - சில இந்து ராணிகள் உட்பட. நம்மவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பீர்பால் - அக்பரின் முக்கிய அமைச்சர்களில் ஒருவர்- பிராமண குலத்தைச் சேர்ந்தவர். அக்பர் - பீர்பால் கதைகள் இன்றளவும் நம் மத்தியில் பிரபலம்... ( தெரியாதவர்கள் எ.சோதியைக் கேட்கலாம்).
        பாதுஷாவின் மதம் சார்ந்த நோக்கைப் பார்ப்போமானால், இந்து - இஸ்லாமிய உறவுக்கு அக்பரின் வாழ்க்கை ஓர் எடுத்துக் காட்டாக  இருந்தது. ஒரு தடவை  மதுரா நகருக்கு விஜயம் செய்கையில், அங்குள்ள  கிருஷ்ணர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறிப்பிட்ட தொகை வரியாக விதிக்கப்படுவதை அறிந்த அக்பர் பாதுஷா அதை உடனடியாக நீக்கியதுடன் , முஸ்லிம் அல்லாதவர்கள் மீது விதிக்கப்படும் 'ஜிஸியா' எனும் வரியையும் நீக்கினார். கூடவே, " நான் எல்லோருக்கும் பொது. இந்து - முஸ்லிம் யாவரும் என் மக்களே.." எனவும் முழங்கினார். இது நடந்தது 1563 இல். ( கிட்டத்தட்ட இப்படி ஒரு காட்சியை ஜோதா அக்பரில் நாம் காண முடியும்.) பாதுஷாவின் உயர்மாண்பினைத் தீர்மானிக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.
                                              அக்பர்- ஒரு மொகலாய ஓவியம்.

           இந்துக்கள் பெரும்பான்மையான இந்திய நாட்டை அவர்கள் ஆதரவின்றி ஆள முடியாது, அச்சப்படுத்தி மாற்றி விடவும் முடியாது; அன்பின் மூலமே ஆட்கொள்ள முடியும் என்பது அக்பரின் அசைக்க முடியாத நம்பிக்கை. பாதுஷாவின் அரசவையில் மதப் பாகுபாடின்றிப் பதவிகள் வழங்கப்பட்டன (அரசவை ஆஸ்தான ஓவியர்கள்  பதினேழு பேரில் 14 பேர் இந்துக்கள், ஜோதாவின் சகோதரன் பகவான்தாஸ் முக்கிய அமைச்சர்களில் ஒருவர்). சிவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் அரண்மனையில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டன; இந்து சமய நிகழ்வுகளில் மன்னர் குங்குமம் இட்டுக்கொண்டு பங்கேற்றார் என வரலாறு பகர்கின்றது. காலப்போக்கில் இறைச்சி உண்பதையும், தாடி வைப்பதையும் கூட நிறுத்திக் கொண்டாராம் ( ஜோதா அக்பரில் ரித்திக்கிற்கு தாடி இல்லை..!). இவையெல்லாம் அரண்மனையைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுருக்களுக்குச் சங்கடம் ஏற்படுத்தின என்பது மெய். எது எப்படியிருந்த போதிலும் மனதளவில் தனது மதத்திற்கு விரோதமின்றி இறுதி வரை இஸ்லாமியராகவே வாழ்ந்தவர் பாதுஷா.தனிமனித ரீதியில்,சமயம் சார்ந்த விடயங்களில் சற்றே ப்ராக்டிகலாக நடந்து கொண்டார் பாதுஷா என்பதே பொருத்தமான கூற்றாகும்.
     
                                                              தர்பார் (அரசவை)

இன, மத பாகுபாடுகளால் நாட்டினைப் (அது எந்த நாடென்றாலும்  சரி) பிளவுபடுத்தும் இன்றைய காலத்தவர்களுக்கு பேரரசர் அக்பரின் வார்த்தைகள் ஒரு படிப்பினை - (விரும்பின், சொற்களை இக்காலத்திற்கேற்ப மாற்றிப் போட்டுக் கொள்ளலாம்..): " மதத்தின் பெயரால் மோதிக் கொண்டிருந்தால் உருப்படியாக எதையும் சாதிக்க முடியாது. இந்துவாக நீங்கள் இருப்பின் முஸ்லிம்களுடன் போய் பழகுங்கள், முஸ்லிமாக இருந்தால் இந்துக்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மதத்தவருடனே உழன்று கொண்டிராமல் மற்றவர்களுடன் பழகுவதன் மூலமாகத் தான் நட்புணர்வு வளரும். மாற்றுக் கருத்துக்களைக் கோபப்படாமல் கேட்டு, அவற்றை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் பரந்த மனப்பான்மை வளரும்."      வாள்முனையில் தன் மதத்தினைத் திணிக்காமல் அன்பின் மூலம் இந்துக்கள் வாழும் பரந்த தேசத்தை வெற்றிகரமாக 49 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரு சக்கரவர்த்தியின் வார்த்தைகள் இவை.  ஜோதா அக்பரின் இறுதிக் காட்சியில் ரித்திக் ரோஷன் பேசும் வார்த்தைகளிலும் இதன் சாயலை நாம் காண முடியும்.
           
             'ஜோதா அக்பர்' பேரரசர் அக்பரின் ஒரு பக்கமே என்பது மெய். காதலை மட்டுமின்றி அக்பரின் சமயம் சார்ந்த பார்வையையும் அது தொட்டுச் செல்கிறது. மூன்றரை மணி நேரத்தில் அழகான ஒரு காதல் கதையும், இந்திய மக்களுக்கு ஒரு படிப்பினையும் கூறியதில் அது வெற்றியடைந்து விட்டது என்று தான் கூறவேண்டும். ஆனால், அக்பர் பாதுஷா இவ்வளவேயல்ல. இதனை விடவும் ராஜதந்திரம், வீரம், சாம்ராஜ்ய விஸ்தரிப்பு, நீதி தவறாத ஆட்சி என்பவற்றின் மூலம் இந்திய மன்னர்களில் ஒரு ' சூப்பர் ஸ்டார்' எனத் திகழ்ந்த இம் மன்னர் எழுதப் படிக்க இயலாதவர் என்பதை அறியும் போது பிரமிப்பு இரு மடங்காகிறது. அக்பரைப் பற்றி அறிய விரும்பும் வாசகர்கள் "அக்பர் நாமா ( அக்பரின் வரலாறு - அப்துல் ப(f)ஸல்)" படிக்கலாம். அல்லது மதனின் "வந்தார்கள்... வென்றார்கள்" பொருத்தமானதொரு படைப்பு. இந்தக் கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள் அதிலிருந்து பெறப்பட்டவை.
பிற்குறிப்பு: பாபர் மசூதி நினைவிருப்பவர்களுக்கு- அது அக்பரின் தாத்தாவான பாபரால் கட்டப்பெற்றது.
                                                     


                                                                                                                         
                                                                                                                                       -S.Selvanigethan.

அசத்திய ஆட்டோ அண்ணா

ஒரு ஆட்டோக்காரனால் சமூகத்திற்கு என்ன செய்துவிடமுடியும்? இனிமேல் இக்கேள்வி எழாது.பொதுவாக ஆட்டோக்களில் வாசகங்களைத்தான் எழுதிவைப்பார்கள்.சீறும்பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே போன்றவை.ஒரு சிலர் பிரசவத்திற்கு இலவசம் என்று எழுதிவைத்திருப்பார்கள்.இது அவரவர் வசதிக்கேற்றது.தம்மால் இயன்றதை செய்கிறார்கள்.ஆனால் ஒரு ஆட்டோ ரைவர் நாம் நினைத்துப்பார்க்காத வேலை ஒன்றை செய்திருக்கின்றார்.வெளியில் இருந்து பார்த்தால் சாதாரண ஆட்டோ போலத்தான் தோன்றும் உள்ளே சென்று பார்த்தால் உள்ளே ஒரு மினி லைபிரரியையேவைத்திருக்கின்றார் அண்ணாத்துரை.40க்கும் மேற்பட்ட பத்திரிகைகள்,மாலை மலர்கள்,ஆங்கில நாளிதழ்கள் போன்றவற்றைக்கொண்ட மினி லைபிரரியே ஆட்டோவினுள்ளே இருக்கின்றது.வரும் பயணிகள் தாம் சென்றுசேரும் இடம்வரும்வரை வேண்டியவற்றைப்படிக்கலாம்.உள்ளே ரி.வி இருக்கின்றது.போன்களுக்கான ரீசார்ஜ் வசதிகள் இருக்கின்றன.போன் பற்றிகளையும் சார்ஜ் செய்யும் மல்ரிபின் சார்ஜ்ஜர் இருக்கின்றது.வைபை வசதி இருக்கின்றது.அதோடு சிறுவர்களுக்கு இலவசம் ,காதலர் தினத்தில் ஜோடிகளுக்கு இலவசம் போன்ற சலுகைகள் இவ்வளவும் இருந்தும் சாதாரண ஆட்டோக்களின் கட்டணத்தைத்தான் அண்ணாத்துரை வாங்குகின்றார்.

ஆட்டோவில் இவ்வளவு வசதியுடன் முக்கியமானவிடயமாக மினி லைபிரரி.கல்விகற்றவர்களுக்கே கற்கஉதவி செய்ய தன்னால் முடியும் என காட்டியிருக்கின்றார் அண்ணாத்துரை.உண்மையில் ஆட்டோக்காரர்களைப்பற்றிய எமது அபிப்பிராயங்களை ஒருபடி மேலே உயர்த்தியிருக்கின்றார் அண்ணாத்துரை.தன்னால் இயலுமான சமூகசேவை.வாழ்த்துக்கள் அண்ணாத்துரை அவர்களே.உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட் சேர்


Tuesday, 8 January 2013

வருமானவரி -எம் ஆர் ராதா பேச்சு


actorகளைப்பற்றி உங்களுக்கு பிரச்சனை இருக்கக்கூடாது.ஆக்ற் நல்லா செய்யிறம் சந்தோஸப்பட்டுக்கிட்டு போங்க.கோவிலுக்குள்ள போறீங்க சாமிய கும்புடுங்க மரியாதையா வெளில வாங்க சாமிக்கிட்டயே உக்காந்துக்கிட்டு குடும்பம்  நடத்தாதீங்க நல்லா இருக்காது.அதேமாதிரி எங்களை பாத்தா அபிப்பிராயம் நல்லா இருக்கு சொல்லிட்டு போயிடனும்.அதனால நாங்கதான் பெரிசின்னு காலம் பூரா எங்களையா நினைச்சுக்கிட்டிருக்கிறது?
ஒரு அறிவாளியைப்பற்றி நினைக்கக்கூடாதா நீங்க? இந்த நாட்டில எத்தனை எத்தனையோ அதிகாரிகள் இந்த அதிகாரி நல்லவர்.அந்த அதிகாரி நல்லவர் இவர்களைப்பற்றிப்புகழுங்கள் எங்கோ கூத்தாடுறம் அத இங்கவந்து திரைல காமிக்கிறான். நாங்க எல்லாம் கலைஞர் என்று பேசுறாங்க எல்லாரும் அது இப்ப வந்தது பேரு சமீபத்தில எங்களுக்கெல்லாம் பணம் வந்த உடன கலைஞர்னு குடுத்தாங்க அத எவன் காசுவாங்கிட்டு குடுத்தானோ அதுவே எனக்குத்தெரியல

கலைஞரின்ன ரொம்ப உயர்ந்தவர்களா?அப்படி அல்ல நான்களெல்லாம் எப்படி இன்னைக்கு கோடீஸ்வரங்க கோடீஸ்வரங்க மட்டுமில்லை இங்கம் ராக்ஸ் பாக்கிகாரணுங்க நான்கதான் நான்க பெரிய தப்பெல்லாம் அங்க செய்வோம்.இங்கம் ராக்ஸ்ன்னா என்ன ? ஜனங்களுக்கு தெரியல அறிவில்லை.இங்கம் ராக்ஸ்னா மக்களின் பணம்.மக்களின்ர பணத்தை குடுக்காம ஏமாத்துற கூட்டம் இந்த கலைஞர் பசங்க அவளவு பேரும் என் உள்பட.
 நான் 13லச்சம் கட்டணம். அவங்க எங்கிட்ட இருந்து எங்க வாங்கப்போறான் நான் எங்க கட்டப்போறேன் அது ஒன்னுமில்லை வருசா வருசம் வரும் ஆகட்டும் பாக்கலாம்னு  சொல்லிவிட்டுக்கிட்டே இருக்கிறேன்.எதுக்காக சொல்கிறேன் நான்க இவளவு தப்பு செய்யிறவங்க மக்களுடைய பணத்தை மோஸம் செய்யிற கூட்டம் இந்த சினிமாக்காரர்களுடைய கூட்டம்.

நான்க இன்னைக்கு பணக்காரனாகிறம்னா ராவும் பகலும் நினைக்கவேண்டியது உங்களை நீங்க பாத்து கொடுத்தபணம் சினிமாடிக்கட்டைவாங்கிக்கிட்டு கொடுக்கிறீங்களே அந்தப்பணத்தில்தான் நாம பணக்காரனானோம்.அந்தப்பணம்தான் உங்களுடைய பணம்.உங்களுடைய பணத்தாலே முன்னேறிய கூட்டம் சினிமாக்காரர்கள். நீங்கள்தான் எங்களுக்குத்தலைவர்கள்.அதைவிட்டுட்டு எங்களைத்தலைவர்களாக்கிக்கிட்டு ரொம்பப்பேர் இருக்காங்க அந்த நிலமை மக்களுக்கு வரக்கூடாது.

வீடியோ-மிமிக்ரி ஆர்டிஸ்ட் சீனிப்பிரபு

Sunday, 6 January 2013

டெல்லிய மாணவியின் தந்தைபேட்டி

டெல்லியில் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் பெயரைவெளியிட அரசுமறுத்திருந்தது.எனவே அந்தப்பெண்ணுக்காக போராடியவர்கள் அவரை டாமினி“India’s Daughter,” “Nirbhaya,” “Abhaya,”“Amaanat”  என்றுஅழைத்தார்கள்.பேஸ்புக்கில் அந்தப்பெண்ணின் பெயர் என பல்வேறுபட்ட பெயர்களும் பல போலி போட்டோக்களும் உலாவிக்கொண்டிருக்கின்றன. இன் நிலையில் அப்பெண்ணுன் தந்தையான பத்ரிசிங் பாண்டே  மகளின் பெயரை வெளியிட்டுள்ளார்.அந்தப்பெண்ணின் பெயர் ஜோதிசிங் பாண்டே 


ஜோதி சிங் பாண்டேவின் தந்தை பத்ரிசிங் பாண்டே
டெய்லி மிறரிற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள  Ballia வில் இருந்து பேட்டியளித்துள்ளார்.

"We want the world to know her real name. My daughter didn't do anything wrong, she died while protecting herself. I am proud of her. Revealing her name will give courage to other women who have survived these attacks. They will find strength from my daughter,"

தனது புகைப்படத்தைவெளியிட தந்தை அனுமதித்துள்ளார்.தனது பமிலி அல்பங்களை ரிப்போட்டருக்கு காட்டியிருக்கின்றார்.அதில் அப்பெண் பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தார்.ஆனால் தனது மகளின் புகைப்படத்தைவெளியிட பத்ரிசிங் அனுமதிக்கவில்லை.
At first I wanted to see the men responsible face to face but I don't want to any more. I just want to hear that the courts have punished them and they will be hanged,"

"Death for all six of them. These men are beasts. They should be made an example of and that society will not allow such things to happen
There was no question of her marrying because we belong to different castes. She never expressed a desire to marry. She was concentrating on her studies and wanted a job first,
"She kept telling her mother he tried his best to help but they kept beating him with a rod,"
அதோடு அப்பெண்ணுடன் இருந்த ஆண் அவரின் போய்பிரண்ட் இல்லை ஆனால் மிக மிக தைரியமான பையன் என்று பத்ரிசிங் பாண்டே கூறியுள்ளார்.

mirror இல் வெளிவந்த செய்தி


he grieving father of murdered gang-rape victim Jyoti Singh Pandey wants a hospital built in her name as a lasting memorial.
Badri Singh Pandey, 53, spoke out after finally deciding to reveal his tragic daughter’s identity – to give strength to other victims.
He called for the 23-year-old’s life to be commemorated in a positive way after she became known simply as India’s Daughter following her murderous sex ordeal on a public bus .
Speaking at his ancestral village Billia in the northern state of Uttar Pradesh, Badri said: “Our village doesn’t have any health facilities. It has no amenities, not even consistent electricity.
“My daughter wanted to be a doctor and help people so the best thing would be to construct a hospital in her name. I would be very proud of that.”
Badri admitted yesterday that he has found it difficult to remember any memories of Jyoti since her death. All he can focus on is his last moments with her – just minutes before she suffered a massive heart attack.
He said: “That conversation will remain etched on my heart for life.” But the distraught dad realises he must carry on for the sake of his daughter’s treasured memory. He added: “She was a brave girl and if we stopped living she would be very disappointed with us. Once we get through these first few weeks we’ll be more determined to carry on living for her.
“I will fulfill her dreams and make sure my sons get a good education and stand on their own two feet and do well. They have to fulfill her dreams now.”
Badri’s wife Asha, 46, was still too upset to talk yesterday.

Court hearings are due to continue today at the district court in the Saket area of India’s capital New Delhi.
DNA tests have linked five men and a 17-year-old with the alleged rape and murder.
The teenager will be tried separately as a juvenile.
Badri said that at first he wanted to see the men accused of killing his daughter face to face.
But he has changed his mind and will now only go to court to watch the case if he is forced to.
He said: “I don’t want to see them and I don’t want to be there. I’ll only go if I have to and I’m called by the police.”
He had no regrets about moving to Delhi and will move back eventually.
He explained: “I will never hate the place because my daughter loved it. She loved everything about the city, its people, food and culture.
“Delhi was the place that changed my life, gave me hope for a better future. Bad incidents can happen anywhere and anytime. It is just that it happened to us in Delhi.”
Badri’s decision to identify his daughter – exclusively revealed in the Sunday Peopleyesterday – was welcomed around the world.
Millions took to social networking sites such as Twitter to express their respect for Jyoti – and said they were glad they could finally give India’s Daughter a name.
Many acknowledged how fitting it was that she was called Jyoti, which means “light”.
Her brother Gaurav, 20, said: “I used to think I was a strong person but I’ve cried so many times since her death. I can’t think ahead right now. She was my best friend. Whenever I had a problem I would talk to her. We shared a special bond.”
Gaurav added that he wanted all six alleged attackers to face the death sentence – including the juvenile.
He said: “I think he deserves to face the ultimate punishment too. He is close to 18 years old and anyone above 14 has common sense and knows the difference between right and wrong.”

நித்தியானந்தா வேர்ஸ் ரகுமான்


எனக்கு மிக அதிர்ச்சியளித்த செய்தி இதுதான்.இன்று நித்தியின் பிறந்த நாள்.இன்றுதான் ஏ.ஆர்.ரகுமானின் பிறந்த நாள் மக்களே 2 பேருக்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கா.எதுக்காக கேட்கிறேன் தெரியுமா?இனிமேல் சாத்திரத்தை நம்புறவன் நிமூமரோலொஜியை நம்புறவன் எல்லாம் அதை நம்பத்தேவையில்லை என்பதற்கு ஆதாரம் வேண்டுமா? அது இன்றைய நாள்தான் இன்றுதான் ரகுமானும் பிறந்தார் நித்தியும் பிறந்திச்சிது...பிரண்ட் ஒருதன் இருக்கான் புதிதாக எவனாவது அவனுக்கு அறிமுகமானால் போதும்.ஆமா உங்கட டேட் ஆப் பேர்த் என்ன? அப்படின்னா 1+4=5 அமைதியான நம்பர்.நான் 9 ஆம் நம்பர் சோ ஒத்துப்போகும்.2 ஆம் நம்பர்காரனை நம்பாத அவன் துரோகி(ஆனா அவன்ர அப்பா 2 ஆம் நம்பர்).சாத்திரத்தைவிட நியூமரோலொஜியை கற்றுக்கொள்ளல் இலகு என்பதால் தெருவிற்குத்தெரு இப்படியானவர்கள் உலாவுகின்றார்கள்.எக்ஸ்ஸாமுக்கு அட்மிஸன் நம்பர் வந்தால்கூட கூட்டிப்பார்க்கிறான்.

சரி சிலர் கீழே  நித்தியானந்தாவும்,ரகுமானும் ஒரே நேரத்திலா பிறந்தாரக்ள்?வேறுவேறு நேரம் வேறு வேறு கிரக நிலை சோ எப்படி ஒரே மாதிரி இருப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?பதிலை நான் சொல்வதை விட ஒரு படத்தின் டயலக் தெளிவாகவே சொல்லும்.வெங்காயம் என்ற படத்தின் வசனங்கள் இவை.ஆமா யோசியம் எல்லாம் எதைவச்சுக்கண்டுபிடிக்கிறீங்க?

வானத்தில இருக்கிற 9 கிரகங்களை வைச்சுக்கணிக்கிறம்.

வானத்தில 9கிரகம் சுத்துதாம் அது பூமிக்கு வந்து ஒவ்வொரு மனிசரையும் ஒவ்வொருமாதிரி பாதிக்கிதாம்.எங்கடாப்பா கண்டுபிடிச்சீங்க இந்தக்கதையை.

ஆமாடா நீங்க எல்லாம் கண்டுபிடிபீங்க எண்ணுதாண்டா இத்தனை காலமா காத்துக்கிட்டிருந்தன் வேற வேலை இல்லாமலா நம்ம முன்னேர்கள் எல்லாம் சொல்லிட்டுப்போனாங்க அவங்க எல்லாம் முட்டாளா?

அவங்க சொன்னது எல்லாமே சரின்னு சொல்லல அதே நேரம் அவங்க சொன்ன எல்லாம் சரியின்னும் ஆகிடாது.முன்னோர்கள் பூமி தட்டை என்னு சொன்னாங்க ஆன விஞ்ஞானிகள்  உருண்டை என்னு நிரூபிச்சிட்டாங்களே?

சரி ஒரு குழந்தை பிறந்த நேரம் என்னு என்த நேரத்தை சொல்லுறீங்க?

அந்தக்குழந்தை கண்ணுமுழிக்கிற நேரத்தைத்தான் கணக்கில வச்சிருக்கணும்.

தொப்புள் கொடி அறுந்த நேரம்தான் கணக்கு

இல்லை குழந்த மூச்சு விட்ட நேரம்தான் கணக்கு.

இல்ல இல்ல குழந்தை முழுசா வெளில வர்ர நேரந்தான்.

ஏலே இதையே நீங்க ஆளுக்கு ஒவ்வொரு மாரி சொல்லுறீங்க அப்ப ஒரே குழந்தைக்கு நீங்க 4 பேரும் வெவ்வேறமாதிரில்ல சாதகம் எழுதுவீங்க

ரொம்ப புத்திசாலித்தனமா பேசுறதா நினைச்சுக்காத..ரத்தத்திற்கும் யோசியத்துக்கும் சம்பந்தம் இருக்குதென்னு விஞ்ஞானத்திலேயே சொல்லியிருக்காங்க..

அப்படியா? எப்புடி?

தம்பி ரத்தக்குடும்பத்தில பாத்தேன்னா ஆர் ஏஹ் பாஸிட்டிவ்,ஆர் ஏஜ் நெக்கட்டிவ் என்னு இருக்கு..ஆர் ஏஹ் பாஸிட்டிவ் ஆர் ஏஹ் நெக்கட்டிவ்வோட கலக்கமுடியாது.அதனாலதான் செவ்வா தோஸம் இருக்கிறவங்களுக்கு செவ்வாய் தோஸம் இல்லாதவங்க ரத்தம் சேராது.
குழந்தையோட உடம்பில ரத்தம் எப்ப ஊறுது?வயித்தில இருக்கும் போது 3 மாசத்திலேயே ஊறிக்கிது.அப்பவே அதோட  ரத்தம் அதுதான்னு முடிவாகிக்குது.
ஆனா பிறந்த நேரங்கிறது நம்ம இஸ்ரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னாடியோ பின்னாடியோ ஆப்பிரேசன் பண்ணிக்கூட எடுத்துக்கலாம்ல?
அந்தப்பிறந்த நேரத்தை வச்சுக்கணிக்கிற யோசியத்துக்கும் எப்பவுமே நிலையா இருக்கிற இரத்தத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு எப்படி சொல்லுறா?

 நல்ல நேரமா பாத்து எல்லா குழந்தைகளையும் ஆப்பிரேசன்  பண்ணி எடுத்துட்டா உலகத்தில எவனுக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லையே?
சொல்லுங்கடா உங்க பித்தலாட்ட யோசியத்தை அறிவியல் என்னுவேற சொல்லுறீங்க

ஒரே ஆஸுபத்திரில ஒரே நேரத்தில 2 குழந்தை பிறக்குது.அப்ப அந்த 2 குழந்தைக்கும் ஒரே மாதிரித்தானே யோசியம் எழுதுவீங்க?அப்ப அந்த 2 குழந்தைக்கும் ஒரே மாதிரி வாழ்க்கை அமைந்திடுமா?

அதெப்பிடி ஒரே மாதிரி அமையும் அவங்க அப்பா அம்மா வேற வேறதானே?அவங்க வாழ்க்கை வெவ்வேற மாதிரித்தான் அமையும்.
அடியே என் புத்திசாலித்தங்கத்த அண்ணா அறிவைப்பாரன் ஏ எருமை ஒரே நேரத்தில ஒரே வயித்தில பிறந்த இரட்டைக்குழந்தைங்க வாழ்க்கை ஒரே மாதிரித்தான் இருக்குமா?அங்க இங்க ஏன் போறா இங்க இருக்குதே செல்லம் இதுவும் இரட்டைப்பிறவியாத்தான் பிறந்திச்சு அதுவும் ஒட்டிக்கிட்டேதான் பிறந்தாங்க ஆப்பிரேசன் பண்ணித்தான் பிரிச்சாங்க
இதோட பிறந்த இன்னொரு குழந்தை ஒரே வருசத்திலேயே செத்துப்போச்சே? ஆனா செல்லம் இன்னும் இருக்குதே?ஒரே நேரத்தில ஒரே இடத்தில ஒரே வயித்தில பிறந்த இவங்க 2 பேரோட வாழ்க்கையை கிரகம் ஏன் வேற  வேற மாதிரி பாதிச்சுது?சொல்லுறி தங்கம்.

ஏண்டி பேசமாட்டேங்கிறீங்க..

ராசாத்தி வாய திறங்கடி

எப்படி பேசமுடியும் இத்தனை நாள இத சொல்லித்தானே ஊரை அடிச்சு உலையில போட்டாங்க
அதெப்பிடிடா சாதகப்பொருத்தத்தைப்பார்த்து கல்யாணம் என்ன ஒன்னைப்பாக்கிறீங்க?
அவன் எப்படிப்பட்டவன்? நல்லவனா?கெட்டவனா ?அறிவாளியா?முட்டாளா?படிச்சவனா?படிக்காதவனா?ன்னு எதுவுமே  தெரியாம ஒரு ஆளைக்கட்டிக்கிட்ட நல்லா இருக்கலாம்னு எதை வச்சுடா சொல்லுறீங்க?
ஒரு வேளை உங்க ஜாதகப்படி எல்லாம் பொருந்தி வருது.அவன் ஒரு பொம்பிளைப்பொருக்கியா ஒரு குடிகாரனா இருக்கிறான் எண்டு வையு
அந்தப்பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்குமா?சொல்லுங்கடா?

கிரகங்களை வச்சு ஒரு மனிசனோட வாழ்க்கை தீர்மானிக்கப்படுதின்னா.ஒரு குழந்தை பிறக்கும்போதே கண்ணில்லாம வாய்பேசமுடியாம பிறக்குதே அதோட வாழ்க்கையெல்லாம் எப்படிடா தீர்மானிக்கப்படுது?கர்ப்பத்தில இருக்கும்போதே இதயக்கோளாறால சாகாம இருக்கிற குழந்தையும் பிறக்கும்போதேஎயிட்ஸ் நோயோட பிறக்கிற குழந்தையயையும் ரொம்ப நல்ல நேரம் வெங்காயம் மிளாகாய் எல்லாம் சூப்பரா இருக்கிற நேரம்  பாத்து வெளில எடுக்கிறம்
அந்தக்குழன்தைக்கு எந்தப்பிரச்சனையும் இருக்காதா?அந்தக்குழந்தை பிழைச்சுக்குமா?
அது....அது...விதி...
ஏய் அவன  வச்சு மிதி..

இவ்வளவு நேரமும் மனிச வாழ்க்கையை கிரகம்தான் பாதிக்குமென்னு அடிச்சு சொன்னான்.இப்ப எங்கடா வந்திச்சு விதி?ஆயுள் 60 வருசம் அது மட்டும் சாகமாட்டன் என்னு யோசியத்தில இருக்குது திடீர் என்னு ஆக்ஸிடண்ட் பட்டு செத்துப்போயிடுறாங்களே அது ஏன்?

அது விதி

ஜாதகம் பாத்து கல்யாணம் பண்ணின எல்லாருமே கடைசிவரைலும் சந்தோசமா இருக்கணுமே?எத்தனையோ பேர் பாதிலயே பிரிஞ்சிருக்கிறாங்களே?அதாண்டா சனியனுங்களா விதி

எல்லாம் விதிப்படி நடக்குதா?ஜோசியம் பாக்கிறீங்க தோஸம் இருக்குது என்கிறீங்க பரிகாரம் பண்ணனும்கிறீங்க பலி கொடுக்கணும் என்கிறீங்க ஏலே தேவடியா பசங்களா எதுக்கடா அப்பாவிப்பொண்ணுங்களை கற்பழிச்சு நாசம்பண்ணுறீங்க?

மனிசனோட எல்லாத்தையும் விதியை வச்சு கண்டுபிடிக்கமுடியுமின்னா ஏன் விதி எப்படி இருக்குதென்னு கண்டுபிடிக்க முடியாது?

உங்களை எல்லாம் கேள்விகேக்க ஆள் இல்லைடா ஒரு ரீக்கடைல ரீ நல்லா இல்லைன்னா ரீக்கடைக்காரனோட சண்டைக்குப்போறம்..ஒரு கூல்றிங்க்ஸ் பாட்டில்லா ஈகிடந்திச்சின்னா அந்தக்கம்பனி மேல கேஸ் போடுறம் நஷர ஈடு கேக்கிறம்.ஆனா நீங்களும்தான் காசுக்கு தொழில் பண்ணுறீங்க.நீங்க சொன்னது மட்டும் நடந்திச்சின்னா ஆகா ஓகோ என்னு தலைல தூக்கிவைச்சி ஆடுறாங்க
நடக்கலைன்னா ஏன் நடக்கலை என்னு சட்டையைப்பிடிச்சு கேள்வி கேக்கிறாங்களா?
நீங்க ஜோசியம் பாத்து எத்தனை பேற்ற வாழ்க்கையை சீரழிச்சிருப்பீங்க?
எத்தனை குடும்பத்தை  அநியாயமா கொண்ணிருப்பீங்க?
ஏ.ஆர் ரகுமானைrole modelலாக கொள்ளலாமா?


கலைஞர்கள் என்ற லிஸ்டில் இன்னபிறதுறைகளுடன் சினிமாத்துறையும் சேர்ந்தே அடங்குகின்றது.கலைஞர்களில் யாரையாவது நமது ரோல்மொடலாக கொள்வதென்றால் அதிலும் பல பிரச்சனைகள் வரும் கலையுலகில் மேதாவிகளாக இருப்பார்கள் ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை சற்று பிரச்சனைக்குரியதாக சர்ச்சைக்குரியதாக இருக்கும்.மைக்கல் ஜாக்ஸனை ஒரு உதாரணத்திற்கு எடுத்தால்கூட இதே நிலைதான்.ஆனால் ஏ.ஆர் ரகுமான் ரகுமானின் எந்த பரிமாணத்தையும் யாரும் ரோல்மொடலாக கொள்ளமுடியும்.அதுதான் ரகுமானின் ஸ்பெஸல்.பல பிரபலங்கள் முதற்கொண்டு அனைவரும் ரகுமான்போல் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.இசை ஒரு மாஜிக் அதில் என்னைப்பொறுத்தவரை மிகப்பெரிய மாஜிக்ஸன் ஏ.ஆர் ரகுமான்.

கலைஞனுக்கு ஞானச்செருக்கு அழகு என்று கூறுவார்கள்.ஆனால் அதையும் உடைத்தெறிந்தவர் ரகுமான்.வந்தே மாதரம் பாடல்மூலம்தான் எனக்கு ரகுமான் அறிமுகம்.பின்னர் அனைத்துப்பாடல்களுமே மயக்குவனவாகத்தான் இருந்தன.இறுதியாக தற்போது வெளிவந்த கடல் திரைப்படத்தின் பாடல்களிக்  என்னை கட்டிப்போட்ட பாடல் "அடியே என்ன .... எங்க நீ கூட்டி... போறா ?".பிற கலைஞர்களின் பாடலும் பிடிக்கும் ஆனால் அவர்களின் பாடல்களில் பெரும்பாலும் ஏதோ ஒன்று குறைந்திருப்பதாகவே உணரமுடிகின்றது.(இதில் இளையராஜா விதி விலக்கு)அமைதியான அறையில் எமக்கே தெரியாமல் எங்கோ ஒரு ஜன்னல் திறந்திருக்கும்போது ஏற்படும் இரிட்டேட்டிங்க் போன்ற உணர்வு.


 ரகுமானின் தந்தையாரான  R K Shekhar ரகுமானின் 9 வயதில் இறந்துவிட்டார்.இன் நிகழ்ச்சியும் ரகுமானின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.ரகுமானின் வாழ்க்கையில் அடுத்த திருப்புமுனை திலீப்குமாரை ரகுமானாக்கியது.ரகுமானின் தங்கை தீவிரகாய்ச்சலில் வீழ்ந்தார் ரகுமானின் முஸ்லீம் நண்பன் ரகுமானை பள்ளிவாசலில் தொழுகைசெய்யுமாறு கூற திலீப்குமார் தொழுகைசெய்தார்.தங்கைக்கு குணமாகியது ஒட்டு மொத்த குடும்பமும் முஸ்லீம் மதத்தை தழுவினார்கள்.1992 இல் ரோஜாபடத்தில் இசையமைத்து Best Music Director  க்கானதேசிய விருதான  Silver Lotus Award ஐ பெற்றுக்கொண்டார் ரகுமான்.அடுத்த முக்கிய திருப்பம் ஒஸ்கார்.உலகத்தையே தமிழை நோக்கி திரும்பவைத்தார் ரகுமான்.உலக்த்தமிழருக்கான ஒரு முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக ஆகிப்போனது அந் நிகழ்வு.ரகுமான் பொங்கல் பேட்டி-பி.எச்.அப்துல் ஹமீர் 

எந்தவொரு துறையிலும் புதிய திருப்பங்களை ஏற்படுத்தமுனையும்போது பல முனைகளில் இருந்து விமர்சனத்தாக்குதலுக்குள்ளாவதை தவிர்க்கவே முடியாது.அந்தவகையில் காழ்ப்புணர்ச்சிகாரணமாக சிலர் அள்ளிவீசும் குற்றச்சாட்டுக்கள்,அரைகுறை ஞானம் கொண்டவர்கள் எழுதும் ஆரோக்கியமற்றவிமர்சனங்கள்,தம்மை அறிவு ஜீவிகள் என தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமக்கு சம்பந்தமானவிடயம்கூட ஜனஞ்சக அந்தஸ்துப்பெறும்போது அதைப்பற்றி சொல்லும் அரைவேக்காட்டுத்தனமான அபிப்பிராயங்கள் அத்தனையும் கடந்து ஏ.ஆர் ரகுமானின் புகழ் சர்வதேச அளவில் பெருகி அவரது படைப்புகள் உலகளாவிய ரீதியில்  வரவேற்பைப்பெறுகின்றன என்றால் அதற்குகாரணம் என்ன என்று பலரால்விடை சொல்லமுடியாது.இதனால்தான் கலா அபிமானிகளின் பார்வையில் ஏ.ஆர் ரகுமான் புதிராக காணப்படுகின்றார்.

வணக்கம் ரகுமான் இந்தத்திருப்பம் உங்கள் வாழ்க்கையைப்பொறுத்தவரையில் நீங்கள் எதிர்பார்த்த ஒன்றா?

நீங்க சின்ன கேள்விகேக்கிரீங்க அதற்கு பெரிய ஆன்சர் தரப்போறன்

சொல்லுங்கள்

மனிதன் ஆசைப்படுவதெல்லாம் இறைவன் தருவதில்லை உடனே
யாராவது உங்க எதிர்காலத்தைப்பற்றி நீங்க என்ன யோசிக்கிறீங்க என்று  கேட்டால் என் எதிர்காலம் இறைவனிடம் இருக்கின்றது என்னு சொல்லுவேன்
அந்த நாள்ள நான் சினிமாவேர்ல்ட்ல கீபோர்ட் பிளேயராய்த்தான் இருந்தேன்.கிட்டத்தட்ட 15 வருசம் கீபோர்ட் வாசிச்சுக்கிட்டிருந்தேன் திடீர் என்று விரக்தி வந்துவிட்டது என்னது டெய்லி இதையே வாசிச்சுக்கிட்டிருக்கோம் காலைல டண்டுடக்கா  டண்டுடக்கா சாயந்த்ரம்  அதே மாதிரி இதைவிட்டுட்டு போகனும் அந்த ரைம்ல கடவுள் பக்தி அதிகமாகிடிச்சு...அதனால நம்ம எதுவும் நினைக்கதேவையில்லை அவனே கொடுப்பான் என்று டிஸைட்பண்ணிட்டன் அதில இருந்து எனக்கு எல்லாமே சஸ்ஸஸ்ஸாகவந்துகொண்டிருக்கு

எல்லாப்புகழும் இறைவனுக்கே என்கிறீர்கள்

பெண்களிடம்தான் வயதைக்கேட்கக்கூடாது என்பர்கள் ஆனால் ரகுமானிடம் கேட்கலாம் பிழையில்லை உங்களுக்கு இப்போது என்னவயது?
27 முடிந்து 28

ஏன் கேட்கிறேன் என்றால் 15 வருடமாக நீங்கள் கீபோர்ட் வாசித்துவருவதாக குறிப்பிட்டீர்கள் 28வயதை எட்டிப்பிடித்தால் நீங்கள் 12,13 வயதுகளிலேயே இசைக்குழுக்களிலே அங்கம்வகிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள் ஆகவே நீங்கள் இளம் வயதிலேயே இசைக்கலைஞனாக அறிமுகமாகி இருக்கின்றீர்கள்.உங்கள் தந்தை புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆர்.கே சேகர் அவர்மட்டுமல்ல இதுபோன்று கலைத்துறையிலே புகழ்பெற்றவர்கள் எல்லோரும் அத்துறையிலே பெற்றகசப்பான அனுபவங்களின் காரணமாக தங்கள் பிள்ளைகள் தமது எதிர்கால சந்ததி இந்தத்துறையில் ஈடுபடவேண்டாம் என்றுதான் விரும்புவார்கள் பெரும்பாலும் விரும்புவார்கள்.உங்களை பொறுத்தவரை வெகுஇளம் வயதிலேயே தந்தையை இழந்தவர் என்பது நமக்குத்தெரியும்.உங்கள் அன்னைக்கு அல்லது தந்தைக்கு நீங்கள் ஒரு இசைக்கலைஞனாக வரவேண்டும் என்ற விருப்பம் இருந்ததா?

6,7 வயது இருக்கும்போது அப்பாகூட ஸ்ரூடியோவுக்கு போய் இருக்கேன்
அப்போ ஒரு ஆர்மோனியெப்பெட்டிவச்சு வாசிக்கும்போது எல்லாருமே
இவன் பெரிய மியூஸிக் டயரக்ரராவருவான்னு தமாஸா சொல்லுவாங்க
அப்பாவும் அவங்ககூட சேர்ந்துசிரிப்பாரு அப்போ பெயினாகத்தான் எனக்கு நினைவிருக்கு

ஆனா அப்பா இறந்ததும் என் அம்மா உங்க அப்பாசெய்த தொழில நீயும் செய்யனும் என்னு ரொம்ப அக்ஸெப்ட் பண்ணினாங்க அவங்களாலதான் இந்த பீல்டுக்குவந்தேன்

இன்றைய இசையமைப்பாளர்களைப்பொறுத்தவரையில் ஒருமாற்றம் படைப்பாட்டல் திறமைமட்டும்போதாது விஞ்ஞான ரீதியான தொழில் நுட்ப அறிவும் தேவை என்பது நிர்ப்பந்தமாகிவிட்டது.உங்களைப்பொறுத்தவரை உங்கள் தந்தை இசைக்கலைஞராக இருந்தாலும் இளம்வயதிலேயே அவரை இழந்துவிட்டீர்கள் அதன்பிறகு கல்வித்துறை மட்டுமல்லாது கம்பியூட்டர் துறைசார்ந்த அறிவையும் எப்படி பெற்றுகொண்டீர்கள்?

நான் ஹை ஸ்கூலில் இருக்கும்போது எலக்ரோனிக் ஹட்ஜேட்ஸ் , கம்பியூட்டர் துறையில் எனக்கு இன்ரெஸ்ட் இருந்தது ஆனா குடும்ப சூழ் நிலைகாரணமாக மியூஸிக் உனக்குத்தெரியும் அதனாலயே  நீ சம்பாதிக்கலாம் என்று அம்மா சொன்னாங்க அப்பதான் கம்பியூட்டர்கள் வர ஆரம்பிச்சுது.மனுவல்ஸ் எல்லாவற்றையும் பார்த்து ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டேன்

கிராமப்புறங்களில் உள்ள மக்கள் சிறுவர்களிடம் கூட உங்கள் இசை ஒலிக்கின்றது.பட்டிதொட்டியெல்லாம் உங்கள் காதலன் பட பாடல்கள்தான் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.இவற்றிற்கு உங்கள் திறமை மட்டும்தான் காரணமா அல்லது இப்பொழுதெல்லாம் செய்மதிகள் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்,அதனால் வெளி  நாட்டு நிகழ்ச்சிகள் இசைப்பாணிகளை கேட்கும் வாய்ப்பு இருக்கின்றது.இதன் மூலம் ஏற்பட்ட கலாச்சாரக்கலப்புத்தான் காரணம் என்று நினைக்கின்றீர்களா?

சொல்லப்போனா ஒரு ஸீஸன் சேஞ் என்று சொல்லலாம் எல்லாம் ஒன்னா நடக்குது சட்டலைட் வந்துதான் நடக்குதென்னும் சொல்லமுடியாது நான் வந்துதான்  நடக்குதென்னும் சொல்லமுடியாது மாறனும்னு இருந்துதென்னா அது மாறும்.

அங்கிருந்து இங்கு வந்திருக்கிறது இங்கிருந்து அங்குபோகுமா? அதாவது நம் நாட்டு பாரம்பரிய இசைவடிவங்கள் எல்லாம் மேலை நாட்டவர்கள் ரசிக்கக்கூடிய காலம் வரும் என்று நினைக்கின்றீர்களா?


அங்கேயும் ஒரு மாஸ்ரர்பீல்ட் ஓடியன்ஸ் இருக்கு ஒரு சுஜர் கோடிங்க் கொடுத்த மியூஸிக்தான் போய் சேரும்

நம்ம கிளாஸிக்கல் மியூஸிக் என்னவடிவத்தில் அங்கு சென்று சேரும் என்பதைப்பொறுத்து அதை யார் செய்யிறாங்க என்பதைப்பொறுத்து கடவுளுக்குத்தான் தெரியும் அதை நான் பண்ணுவனா அல்லது வேறுயாராவது செய்வார்களா என்றுஉலக விழாக்களில் எல்லாம் ஆங்கிலப்பாடல்களுக்குத்தான் அவார்ட்கள் கொடுப்பார்கள் என்று அர்த்தமில்லை வேற்றுமொழிப்பாடல்களுக்குக்கூட வழங்குகின்றார்கள் அப்படி ஒரு பொன்னான காலம் நமது தமிழ்ப்பாடல்களுக்கு வரும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?அந்தத்திசையை நோக்கி நீங்கள் பயணம் செய்வீர்களா?

நம்ம தமிழ் மியூசிக்குக்கிடைக்கனும்னா அது 10 ஓடு 11 ஆக இருக்கக்கூடாது அது முதலாவது இடத்தைப்பெறனும் அதால இப்ப இருந்தே நான் வேர்க் பண்ண ஆரம்பிக்கிறேன்.

வைரமுத்து-
ஒரு நாள்  நள்ளிடவு லண்டனில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசிவந்தது.பேசியவர் எனது அருமை நண்பர் லண்டன் தமிழ்ச்சங்கப்பொருளாளர் அசோகன் அவர்கள் என்ன இந்த நெரத்தில் என்று கேட்டேன் ஸ்ரார் டி.வியில் உங்கள் பாட்டு ரகுமான் இசையமைத்த பாட்டு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது இதைவிட பெரிய மகிழ்ச்சி எங்களுக்கு எதுவுமில்லை என்று கூறினார்.

அகில உலக் தொலைக்காட்சியில் தமிழ் இசையும் தமிழ்வார்த்தைகளும் இடம்பெறக்கூடிய அளவிற்கு ரகுமான் அதை உயர்த்தியிருக்கின்றார் என்றால் சர்வதேச இசையின் தரத்தில் ஒலிப்பதிவு செய்யவேண்டும் சர்வதேச தரத்திற்கு இசையை கொண்டுவரவேண்டும் தமிழ்த்திரைப்பாட்டிசையைக்கொண்டுவரவேண்டும் என்ற அவருடைய திட்டமிடல்தான்.

அப்துல் ஹமீர் 

பாடல்வரிகளுக்கு மெட்டமைப்பது அல்லது மெட்டிற்கேற்ப  பாடல்வரிகளை எழுதுவது.இரண்டில் எது இலகுவாக இருக்கின்றது?எது மிகவும் பிடித்திருக்கின்றது

ஒரு பாட்டுப்பாடனும்னா ஒரு இன்ஸ்பிரேஸன் ஏதாவது வேண்டும்
நல்ல லைனோ அல்லது நல்ல மியூஸிக்கல் ரேஸோவேணும் 
ரேக் இட் ஈஸீ என்ற பாட்டில் ரேக் இட் ஈஸி என்ற காஸுவல் வேர்ட் இருந்திச்சு
பெடராப் என்றது பெடராப் என்ற வேர்ட்
சின்ன சின்ன ஆசை என்ற பாட்டுக்கு மியூஸிக் ஒன்டு இன்ஸ்பிரேஸனா இருந்திச்சு பீ ரோன் என்ற ரியூன்.
கண்ணுக்கு மை அழகு என்றபாடல் லிரிக் 

ஒரே சமயத்தில் நீங்கள் மெட்டை உருவாக்கும்போதே பாடலை எழுதுபவர் பக்கத்தில் இருப்பது சாத்தியம் இல்லை.இருந்தாலும் எப்போதாவது அந்தக்காலத்தில் கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் விஸ்வனாதனும் இணைந்து செயலாற்றியதுபோல் மெட்டை உருவாக்கும்போதே  ஒரு கவிஞர் உங்கள் பக்கத்தில் இருந்து பாடல் உருவான பாடல்கள் ஏதும் உண்டா?

செந்தமிழ் நாட்டு தமிழ்ச்சியே என்ற பாடல் இருக்கு.சும்மா நானும் வைரமுத்துவும் பேசிக்கிட்டிருக்கும்போது தமிழச்சி என்று ஒரு பாடல் பாடனும்னு வைரமுத்துசேர் சொன்னாரு.சிற்றிவேஸன் அட்வைஸ் சோங்க் மாதிரி இருந்திச்சு. செந்தமிழ் நாட்டு தமிழச்சி என்னு வச்சுக்கலாமா என்று கேட்டேன் வச்சுக்கிட்டா போச்சு என்றாரு.பிறகு அந்த தோற்றைவச்சு போர்ம்பண்ணி அந்த பாட்டு உருவாகிச்சு

சூழ் நிலையின் பிரதிபலிப்புத்தான் கலைஞனின் படைப்பு என்பார்கள்.உங்களைப்பொறுத்தவரையில் ஒரு கதாசிரியர் இயக்குனர் வந்து உங்களிடம் கதையை சொல்லி இதுதான் காட்சி இதுதான் பாத்திரம் அதன் மனோ நிலை இப்படி என்று சொன்னதன் பிறகுதான் மெட்டை நீங்கள் உருவாக்குகின்றீர்கள்.அப்படி உருவாக்கினாலும் கூட அந்த கதைக்கரு பாடல் வரிகள் அந்த கதாப்பாத்திரத்தின் தன்மை இதற்கேற்பத்தான் உங்கள் பாடல்களுக்கு இசைக்கருவிகளை தெரிவுசெய்கின்றீர்களா?அல்லது பொதுவாக திரைப்படம் என்பதை மறந்துவிட்டு பிறகும் இது எங்கெல்லாமோ ஒலிக்குமோ இந்தப்பாடல் அங்கெல்லாம் எல்லோரும் இந்தப்பாடலை ரசிக்கவேண்டும் என்பதற்காக இசைக்கருவிகளின் சப்தஜாலங்களை எல்லாம் வேண்டுமென்றே பயன்படுத்துகின்றீர்களா?
ஒஸ்கார் வாங்கியபோது குடும்பத்தின் மகிழ்ச்சி


சில பாட்டுவந்து சொல்லுறாங்க நீ நல்ல பாட்டொன்னு போட்டுக்கொடு நான் சிற்றிவேஸன் போட்டுக்கிறன்ன்னு அதுக்கெல்லாம் நீங்க சொன்னமாதிரி தாம் தூம்னுதான் போடனும்.

ஆனா கதைக்கேற்ற சாங்க்கா உருவாக்கினது சின்ன சின்ன ஆசை,காதல் ரோஜாவே,மார்கழிப்பூவே,

நீங்கள் சுயமாக உருவாக்கிய பாடல் மெட்டுக்கள் அல்லது பாடல்கள் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவா?

ஸ்ரோறி சொல்லி சிற்றிவேஸன் சொல்லி உருவாக்கின பாடல்வந்து ரோஜா,டூயிட்,கிழக்குசீமையிலே, அப்புறம் கருத்தம்மாஜெண்டில்மென்னில நாம முதலே முடிவுபண்ணிட்டம் 5 பாட்டுவெணும் ஸ்ரோறியை பலன்ஸ் பண்ணுறமாதிரி ஸ்ரோறி ரொம்ப சீரியஸ்ஸா இருக்கு அதனால பாட்டு தமாஸா இருக்கலாம்

ஒரு பாடலை உருவாக்கும்போது குறிப்பாக மெட்டமைப்புமட்டுமல்ல அதன் ஆரம்ப இசை இடை இசை பி.ஜி.எம் என்று கூறுவார்கள் இவற்றையெல்லாம் நீங்கள் உருவாக்கும்போது உங்கள் மனதிலே ஒரு காட்சிவிரியும்.அந்தக்கதாப்பாத்திரம் கதா நாயகன் நடிகை பின்னணிக்காட்சி எப்படி அமையும் இவற்றை நீங்கள் மனதிலே உருவகிப்பீர்கள்.அதனை 100க்கு 100 ஒரு இயக்குனர் படமாக்குவார் என்பது அபூர்வம்தான்.ஆனால் அப்படி  மன நிறைவுடன் படத்தை உருவாக்கியுள்ளார் என நீங்கள் கருதிய பாடல்கள் உள்ளனவா?


இமாஜினேஸனுக்கும் மீறி சில பாட்டு பிக்ஸரைஸ் பண்ணியிருக்காங்க..பம்பாயில உயிரே உயிரே..கிழக்கு சீமையிலேயில் மானுத்தும் மந்தையிலே அப்படி ஒரு சிற்றிவேஸன் இருக்குமென்னு நான் நினைச்சுப்பார்க்கல.காதலே காதலே என்ற பாடல் பாலச்சந்திரர் அதுக்குள்ள ஒரு கதை சொல்லியிருப்பார்

இயக்குனர் பாலச்சந்திரர்

காதலே என் காதலே என்பது ஒரு இடக்கான ஒரு சிற்றிவேஸன்.அண்ணன் தம்பி 2 பேருமே காதலிக்கின்றபோது இருவருமே காதலிக்கின்ற அதே பெண் வருகின்றாள் அப்போது இருவருமே பாடுகின்றார்கள்.அப்படின்னா எப்படி ஒரு எடக்கான சிற்றிவேஸன்னு நீங்க நினைச்சுப்பாருங்க.

அண்ணனும் தம்பியும் ஒரே பெண்ணைக்காதலிக்கின்றார்களே  என்னமோ பண்புக்கு விரோதமான செயல் என்று நினைக்கக்கூடிய ஒரு சூழ்னிலைல இருக்கிறோம் நாம என்ன தப்புன்னு எனக்கு புரியல.
2 சகோதரிகள் ஒரு ஆணை காதலிக்கலாம் ஆனால் 2 சகோதரிகள் ஒரு பெண்ணை காதலிக்கக்கூடாது  இது என்ன நியாயம் என்னு எனக்குப்புரியல.நியூ டோமினேட்டட் சொஸைட்டில ஏற்படுத்தப்பட்ட விடயங்க்ள் இவை எல்லாம்.அப்படியான எடக்கான சிற்றிவேஸனை நான் பேஸ்பண்ணிக்கிட்டிருக்கும்போது ஒருதர் இன்ஸுமென்டில வாசிக்கிறான் ஒருதன் வாய்ப்பாட்டுபாடுறான்.சோ இவர்களது காதலுக்கு ஏற்பட்ட தோல்வியையோ சிக்கலையோ சங்கடத்தையோ பாடல்வழியாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற சிற்றிவேஸன் அது அப்படின்னு சொல்லுற இடத்தில.இதவந்து மியூஸிக் டயரக்டருக்கு புரியவைக்கிறாது என்கிறது பெரியவிஸயம்.அவர் அதை புரிஞ்சுக்கிட்டது மட்டுமில்லாமல் ஒரு டியூனையும் உருவாக்கினது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

அப்துல் ஹமீர் 
உங்கள் இசையமைப்பில் மட்டும் நானொரு வித்தியாசத்தை உணர்கின்றேன் சில பாடகர்களின் குரல் முழுக்க முழுக்க வித்தியாசமாக ஒலிக்கின்றது.குறிப்பாக எஸ்.பி பாலசுப்பிரமணியம்,ஜெயச்சந்திரன் போன்றவர்களின் குரல்கள் சில பாடல்களிலே அவர்கள்தான் பாடுகின்றார்களா என்று இனம் கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு கிராமிய மணம் நிறைந்திருக்கின்றது.இவற்றைஅவர்கள்தான் குரல்மாற்றிபாடுகின்றார்களா அல்லது நீங்கள் கொம்பியூட்டர் உதவியுடன் செய்கின்றீர்களா?

கம்பியூட்டரால ஒரு நாச்சுரல் மியூஸிக்கமாத்தனும்னா அது நல்லா இருக்காது.புல்லங்குழல் மியூஸிக்கை நேரேகேட்கும்போது ஒருமாதிரி இருக்கும் ஆனா மைக்கில் கேட்கும்போது வேறமாதிரி இருக்கும்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ரகுமானை ரொம்ப சின்னவயசில இருந்தே எனக்குத்தெரியும்.அவற்ற அப்பாதான்  நான் மலையாழப்படங்களில் பாடுறதுக்கு முக்கியமாக காரணம்.அவர்தான் என்னைக்கொண்டுபோய் தேவராஜன் மாஸ்ரருக்கு இன்ரடியூஸ்பண்ணி கடல்பாலம் என்ற படத்தில முதல் முதலா எனக்கு சான்ஸ் வாங்கித்தந்தாரு.எல்லாரும் சஸ்ஸஸ்ஸானதுக்கப்புறம் எனக்கு அப்பவே தெரியும் என்று சொல்லுறமாதிரி இல்லை இது.ஒரு நல்ல மியூஸிக்ஸனா வருவார்னு தெரியும் ஆனா நம்ம நாட்டில மட்டுமில்லாம மற்ற நாட்டிலைகூட இவரது மியூஸிக்கைகேட்டு ஓ அமர்க்களமா பண்ணுறாராமே ரொம்ப சின்னபையனாமே என்று பேசக்கூடிய அளவிற்கு இவர் முன்னுக்குவருவார்னு எனக்குத்தெரியாது.
இப்ப அந்தப்புதிரெல்லாம் சால்வாகிப்போச்சு நிறையபடங்களுக்கு மியூஸிக்பண்ணி அத அவர் புரூபண்ணிட்டார்.ஆனா சிலர் இப்பவும் என்ன சொல்லுறாங்க தெரியுமா?இந்த ராப் மியூஸிக்கு அது இதுன்னு இந்த சவுண்டெல்லாம் போட்டுட்டு பண்ணுவாருன்னு.எல்லாருமேதான் ராப் சாங்க் போடுறாங்க ஆனா இவற்றமட்டும் ஹிட்டாகுதென்றால் இவரது மியூஸிக் ஏனையவர்களிடமிடுந்து வித்தியாசம்.ஒரு சோங்கிற்கு அவர் எடுத்துக்கொள்ளும் ரைம் சில புரொடியூஸர்,டயரக்ரேஸுக்கு கோபம் வருது என்னப்பா ஒரு பாட்டுபோடுறதுக்கு இவளவு நேரம் எடுக்குதுன்னு.ஆனா  முதலல்ல ஒத்துக்கும்போதே தனக்கு ரைம்தேவைன்னு சொல்லிட்டுத்தான் பண்ணுறாரு.அந்த ரைம் எடுக்கிறதால ரிபிரண்ட் டைமென்ஸன் கிடைக்குது அவருக்கு.திடீர்ன்னு நைட்டு 2 மணிக்கு எழுந்திரிக்கிறாரு ஏதோ ஐடியாவருது.அவரிட்ட இருக்கிறமாதிரி பாங்க் ஆப் சவுண்ட் வேறயாருக்கிட்டையும் கிடையாது.எங்க கேட்டாலும்  சாம்பிள்பண்ணி ரெடிபண்ணிவச்சிருக்கிறாரு.நல்ல காலம் எங்க வாயிஸை சாம்பிள்பண்ணி வச்சுக்கல

இன்றுகூட நீங்கள் அருமையான எத்தனையோ மெட்டுக்களை உருவாக்கியிருக்கின்றீர்கள்.ஆனால் அந்த அருமையான் மெட்டுக்களுக்கு இல்லாத வரவேற்பு அர்த்தமல்லாத சொற்களை கொண்டபாடலுக்கு கிடைக்கின்றன.குறிப்பாக முக்கப்புல்லா நீங்கள் மட்டுமல்ல ஆரம்பத்தில் இளையராஜாகூட வாடி என் கப்பகிழங்கே ஓரம்போ ருக்குமனி வண்டிவருது.அவற்றையும் அவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.இவை உங்கள்  சிந்தனையில் உதித்ததா அல்லது இயக்குனர்களின் வேண்டுகோளிற்கிணங்க உருவாக்குகின்றீர்களா?

நாம டெய்லி ஒரு  சாப்பாட்டையே சாப்பிட்டிக்கிட்டிருக்கம்.வருசம் பூரா அதைத்தான் சாப்பிட்டிக்கிட்டிருக்கம்.ஒரு நாள் மாறி சாப்பிட்டம்னா பிடிச்சிடும் இது நல்லா இருக்கேன்னு அத சாப்பிடுவம் ஆனா அதுவும் சலிச்சிடும்.இந்தமாதிரிப்பாட்டு அடிக்கடி வர்ரதில்லை.வித்தியாசத்திற்காக உடனே கச் ஆகுது.ஆனா இது ஆரோக்கியமானதல்ல.கதைக்குதேவைப்பட்டது.

ரகுமானில் உள்ள பொதுவான குற்றச்சாட்டு அவர் தாமதமாக செயற்படுகின்றார் என்பது.

வைரமுத்து-அதை நானும் ஒத்துக்கொள்கின்றேன்.அவர் திட்டமிட்டு தாமதமாக இல்லை வேண்டுமென்றே தாமதமாக இல்லை.அந்தப்பாடலின் விளைச்சலுக்காக பாடல் என்ற நிலக்கரி வைரமாக முதிர்வதற்காக அவர் நேரம் எடுத்துக்கொள்கின்றார்.அந்த நேரத்தில் மெட்டுக்களைபோட்டுப்போட்டு அழித்திருக்கின்றார்.
இது காதுக்கு சுகமில்லை இது நெஞ்சுக்கு நெருக்கமில்லை இது தமிழர்களுக்கு ஆகாது.இது ஏற்கனவே வந்த மெட்டு எனக்குமுன்னால் பெரும் சாதனையாளர்கள் பலர் இருந்திருக்கின்றார்கள்.ராமனாதன் அவர்கள்,கே.வி.மகாதேவன் அவர்கள்,விஸ்வனாதன் அவர்கள் இளையராஜாஅவர்கள்.இவர்கள் எல்லாம் செய்யமுடியாதவற்றை என்னால் செய்யமுடியுமாஎன்று அந்த சின்னஞ்சிறுவன் யோசித்து இந்தப்பெரியவர்களின் ஆசியோடு அந்தப்பெரியவர்களின் பாதிப்பில்லாது இசையமைக்கமுயல்கின்றான் அதற்குத்தான் நேரம் எடுத்துக்கொள்கிறார்.பாரம்பரிய வாத்தியக்கருவிகளும் கம்பியூட்டரும் சங்கமமாகும் இசை பொங்கல் ஸ்பெஸல் ரகுமானிடமிருந்துவைரமுத்து-ரகுமான் ஒரு புதிர்தான் பழகாதவர்களுக்கு பழகிப்பார்த்தவர்களுக்கு சின்னவயசில் விழைந்த கதிராக இருப்பார்என்பது எனக்குத்தெரியும்.இந்த வெற்றி இந்தப்புகழ் இந்த பெரியவிலாசம் இவைகளெல்லாம் ரகுமானுக்கு அதிஸ்ரத்தாலோ வானுலக தேவதைகளின் ஆசீர்வாதத்தாலோ கிட்டியது என்று நான் நினைக்கவில்லை முயற்சி பயிற்சி திட்டமிடல் மக்களின் ரசனையை புரிந்துகொண்டபோக்கு இவையெல்லாம்தான் அவரின் வெற்றிக்குகாரணம் என்று நினைக்கிறேன்.ரகுமான் ஒரு புதிரல்ல சின்னவயதிலேயே விழைந்தகதிர்.

ரகுமானிற்கு பிறந்த நாள்வாழ்த்துக்கள்.

Happy birthday to

legendary a.r rahman
♫♪♫♪♫♪ Happy Birthday to You! ♫♪♫♪♫♪.......°\(ツ)/° .. │▌▌▌│▌▌│▌▌▌│▌▌│▌▌▌│▌▌│▌▌▌│▌▌│▌▌▌│▌▌│▌▌▌ └└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└

•*¨`*•..¸♫♫.•*¨`*•..¸ ☼ ¸.•*¨`*•.♫♫♫.•*¨`*•.
╔═════════════ ೋღღೋ ═══════════════╗
*******░H░A░P░P░Y░* ░B░I░R░T░H░D░A░Y********
╚═════════════ ೋღღೋ ═══════════════╝
•*¨`*•..¸♫♫.•*¨`*•..¸ ☼ ¸.•*¨`*•.♫♫♫.•*¨`*•.