Monday, 17 December 2012

நீதானே என் பொன்வசந்தம் நம்பிப்பார்க்கலாமா?

பேஸ்புக்கில் அனேகமாக எதிர்மறையான விமர்சனங்களையே படம் சந்தித்திருக்கின்றது.ஒரு சிலரைத்தவிர ஏனையோர்  மொக்கைப்படம் என்னும் லெவலில் கருத்துக்களைப்பகிர்ந்துகொள்கின்றார்கள்.இவற்றை வாசித்துவிட்டதால் ஒருவித பயத்துடனேயே தியேட்டரிற்குள்  நுழைந்தேன்.படம்  மொக்கை என்ற விமர்சனங்களை தாண்டியும் நான் பார்க்கசென்றதற்கு ஒரே ஒரு காரணம் சமந்தா.

சமந்தா ஜீவாவிற்கிடையில் சைல்கூட்டில் இருந்தே பழக்கம் ஆரம்பித்துவிடுகின்றது ஈகோவும் அப்போதே ஆரம்பித்துவிடுகின்றது.பாடசாலைப்பருவத்தில் காதலாகமாறுகின்றது.
காதல்...பாடசாலைப்பருவக்காட்சிகளைப்பார்க்கும்போது அட இது எனக்கு நடந்த சீனாச்சே என்று நீங்கள் நினைக்கக்கூடும்.

முதலில் இந்தப்படத்தைப்பார்ப்பதற்கு நீங்கள் காதலித்திருக்கவேண்டும் அல்லது காதலித்துக்கொண்டிருக்கவேண்டும் குறைந்தபட்சம் வரும்காலத்தில் காதலிக்கவேண்டும் என்ற எண்ணமாவது இருக்கவேண்டும்.

பாடசாலைக்காட்சிகளில்  ஜீவாவுக்கு ஏற்படும் ஐ அழகாகக்காட்டியிருக்கிறார் கௌதம்மேனன்.காதலிக்கும் பெண் இன்னொருவனுடன் எம்முடன் கதைப்பதைப்போல் சிரித்துப்பேசுவதை விட காதலிக்கு ஒரு தண்டனை கிடையவே கிடையாது.அங்கிருந்து பிரச்சனை சற்று பெரிதாகின்றது.

சந்தானத்தின் நகைச்சுவை வழக்கமாக இல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்கின்றது.படத்தின் ஆரம்பத்தில் சந்தானமா ஜீவாவா ஹீரோ என்னுமளவிற்கு சந்தானத்தை ஹாண்ட்சமாக காட்டப்பட்டுள்ளது.வழக்கமான படங்களில் காதலில் புரிந்துணர்வின்மையால்,குழப்பங்களினால் ஆண்கள்தான் படாதபாடுபடுவார்கள் பெண்களுக்கு தெரிந்த ஒரே ஒரு ரியாக்ஸன் அழுதுகொண்டு ஓடுவது.ஆனால் நீதானே என்  பொன் வசந்தத்தில் நிலைமை தலை கீழ் முழுக்க முழுக்க சமந்தாவை சுற்றியே கதை செல்கின்றது.காதலை ஆழமாக அனுபவித்ததால் சமந்தா ஒவ்வொரு பிரிவின்போதும் படும்வேதனை உச்சமாக காட்டப்பட்டுள்ளது.ஆனால் பெண்கள் வழமையாக செய்வதுபோல் முகத்திற்கு முன்னே நோ ரியாக்ஸன் ஆனால் ரூமுக்குள்போய் இருந்துகொண்டு அழுவதை சமந்தாவும் செய்திருக்கின்றார்.இருவரிலிம் பிழைகள் இருந்தாலும் யாரும் அதை ஒத்துக்கொள்ளவோ அல்லது விட்டுக்கொடுக்கவோ முயலவில்லை.அதுதான் படத்தை தாங்கி செல்கின்றது.

ஜீவா ஒரு சாதாரண பையனைப்போல்தான் நடித்திருக்கின்றார்.படங்களில் காதலை சொல்லும்போது காட்டப்படும் மிகைப்படுத்தப்பட்ட சீன்கள் எல்லாம் இல்லை மிகைப்படுத்தப்பட்ட நடிப்பும் இல்லை எம்மோடு இருக்கும் நண்பன் ஒருவன் காதலில் எப்படி  ரியாக்ஸன் கொடுப்பானோ அதே ரியாக்ஸன்.காதலில் பிரச்சனை என்றால் சில வேளைகளில் ஓ என்று அழ்வேண்டும் போல் இருக்கும் ஆனால் அழமால் எப்படியாவது சமாளித்துக்கொள்வோம்.உணர்ச்சிவசப்படாத அணைத்தல்கள் காதலியின் தலைமுடிவருடல்கள் ஒரே கட்டிலில் படுத்திருந்தும் எல்லை மீறாமல் கிஸ் ஸ்பரிசம்..கொஞ்சல்கள்..அணைத்தல்கள் இவையெல்லாம் ஒவ்வொருகாதலர்களின் கனவுலகங்கள் எனது கனவுலகமும் கூட சோ வெகுவாகப்பிடித்திருந்தது.ரியாலிட்டி லைபில் லவ் யூ என்ற வார்த்தையை நேரடியாக சொன்னால் சிலவேளைகளில் அது செயற்கைகாக தெரியும் அதுவும் நீண்டகாலம் பழகிய ஜோடிகளுக்கு அது வோல்ட்டேஜை அவ்வளவாக ஏற்றாது.காதலை சொன்னவுடன் பதிலுக்கு கிஸ்பண்ணியது பிடித்திருந்தது.

ஜீவாவின் அண்ணன் கல்யாணம் தடைப்பட்டதற்கு ஜீவாவின் தந்தைக்கு ஆறுதல் கூறப்போகும் சீன் தரமாக இருந்தது.என்ன அம்மா அனுப்பிவிட்டாவா?ஐ ஆம் கூ ஐ ஆம்..சூப்பரோ சூப்பர்..எமது வீடுகளில் இப்படியான சந்தர்ப்பங்களில் நடைபெறும் மிகைப்படுத்தப்படாத சீன்களாகவே எனக்குப்பட்டது.
சமந்தாவின் நடிப்பு ஓகே..சில இடங்களில் ஓவர் மேக்கப்  போட்டுவிட்டார்களோ என்று நினைக்கதோன்றியது.

படத்தின் இறுதியரைப்பகுதி எனக்கு இன்னும் வெகுவாகப்பிடித்திருந்தது ஏது சமந்தா தற்கொலைமுயற்சியில் இறங்கிவிடுவாளோ என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.
கிளைமேக்ஸ் சொதப்பல் இல்லை என்றுதான் எனக்குப்படுகின்றது.
ஸ்கூல் யூர்னிபோமில் வரும் சமந்தாவை பார்த்ததும் ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது ஆவ்வ்வ்வ்...

இடையில் விண்ணைத்தாண்டிவருவாயா படத்தை கௌதமே இமிட்டேன் செய்திருந்தார் நகைச்சுவையின் உச்சக்கட்டம் அதுதான்.சிம்பு இதைப்பார்த்தால் தற்கொலை முயற்சியில் இறங்கவும் வாய்ப்புக்கள் உள்ளன.
சந்தானத்தின் ஒரு டயலக் எப்போதுமே இளைஞர்களின் மனதில் நிற்கக்கூடியது...அது டயலக் என்பதைவிட வலி என்றும் கூறலாம்..

கரண்டைக்கூட இ சொல்லிட்டு கட் பண்றாங்கடா, இந்த பொண்ணுங்க சொல்லாமலே நம்மை கட் பண்ணிடுறாங்க... 

படத்தில் கதையே இல்லைன்னும் ஒரு கொமண்ட் வந்திச்சு உங்க சொந்தலைப்ல நடந்த காதல்கதையை சொல்லசொன்னா அதில கதைஎன்ற ஒன்று பெரும்பாலும் இருக்கப்போவதில்லை அனேகம் பேருக்கு இது பொருந்தும்..வெறும்சம்பவங்களாலேயே காதல் நிறைந்திருக்கும் காரணம் எமது காதல்வாழ்க்கை ஸ்கிரிப்ட் அல்ல யாரும் அதை 10,15 தடவை வெட்டி வெட்டி திருத்தியிருக்கமாட்டார்கள்.

விண்ணைத்தாண்டிவருவாயா காதல் படங்களை இன்னொருதளத்திற்கு எடுத்துசென்றபடம் படம் வந்து நீண்டகாலம் ஆனபிறகும் இளைஞர்கள் மத்தியில் ஜெஸ்ஸி ஜெஸ்ஸி என்பது ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது.திரிஷாவின் அபார நடிப்பை அதில்தான் நான் பார்த்தேன்.ஆனால் நீதானே என் பொன்வசந்தத்தை விண்ணைத்தாண்டிவருவாய படரேஞ்சிற்கு என்னால் உயர்த்தமுடியாது.படம் அந்த அளவிற்கு இல்லை என்பது உண்மை.காரணம் படத்தின் மிகப்பெரிய மைனஸ்ஸாக ஒருவிடயம் குறுக்கே நிற்கின்றது இசை.என்ன இழவிற்கு இளையராஜாவை கௌதம் தெரிவு செயதார் என்று தெரியவில்லை படத்தில் உணர்ச்சிவசப்படவேண்டிய ,அழவேண்டிய படத்துடன் ஒன்றவேண்டிய இடங்களிலெல்லாம் நல்ல பாடலை ரசனையுடன் கேட்கும்போதுஅருகில் இருக்கும் கோவில் லவுட்ஸ்பீக்கரை உரத்த சத்தத்தில் போட்டு எரிச்சலூட்டுவார்களே அந்த எரிச்சல்தான் வந்தது.இந்த இசையின்காரணமாக பாடலின் காரணமாக சமந்தா ஜீவா இருவருமே திரையில் இருந்து மறைந்துவிடுகின்றனர்.சில இடங்களில் பின்னணி இசை எதுவும் இல்லை அப்போதும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது ஆனால் சடுதியாக இசை எனக்கு நாறாசமாகத்தான் கேட்டது.என்னைப்பொறுத்தவரை விண்ணைத்தாண்டிவருவாயா படத்தை உங்களுக்கு பிடித்திருந்தால் இந்தப்படமும் உங்களுக்கு பிடிக்கும் என்றுதான் நான் நம்புகின்றேன்.

சமந்து சமந்து என்ன ஒரு அழகுதேவதை ஊகும்....போய் பாருங்கள் கடைசி சமந்தாவிற்காகவாவது ஏனையோர் படத்தைப்பார்க்கலாம்.

இசையின் காரணமாக தியேட்டரில் இருந்துவரும்போது தலைவலியுடனேயே வெளியில்வரவேண்டியேற்பட்டது.மியூஸிக்கிற்கு இளையராஜாவை கௌதம் தெரிவுசெய்தது ஏனையோருக்கு ஒரு பாடமாக அமைந்துவிட்டதாக எனக்குப்படுகின்றது.

பேஸ்புக்கில் காலாய்த்தவை...1 comment:

  1. போங்கய்யா நீங்களும் ஒங்க ராஜாவும்
    http://www.sekkaali.blogspot.com/2012/09/blog-post.html

    ReplyDelete