Saturday, 15 December 2012

வானம்/தமிழ் படத்தில் மறைகுறியீடுகள்


பொதுவாக தமிழ்ப்படங்களில் குறியீடுகளை அவதானிப்பதென்பது குதிரைக்கொம்புதான் யாரும்  தமிழ்ப்படங்களில் இவற்றின் மூலம்  நேரடியாக சொல்லமுடியாத செய்திகளை குறியீட்டின் மூலம் கூறுவதாக தெரியவில்லை.ஆனால் கமல்படங்கள் விதிவிலக்கு பொதுவாக சிலகமல்படங்களில் இவ்வாறானவற்றை நன்றாகவே அவதானிக்கமுடியும் சோ கமல்படங்கள் என்றால் சற்று உன்னிப்பாக கவனிப்பதுதான் என் வழக்கம்.ஹேராம்,பஞ்சதந்திரம்,உன்னைப்போல் ஒருவன்,தசாவதாரம்போன்றபடங்களில் பல செய்திகள் குறியீடுகளாக சொல்லப்பட்டிருக்கும்.ஆனால் சற்றும் எதிர்பார்க்காதவிதத்தில் வானம் படத்தில் இதேமுறையில் சிம்பலாக செய்திகள் கூறப்பட்டிருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.ஆனால் நீங்கள் அவதானித்தீர்களோ இல்லையோ தெரியாது.என் கண்ணில் சிலவை தட்டுப்பட்டுவிட்டன.இயக்குனர் கிரிஸ்ஸிற்கு சற்று  தைரியம் அதிகம்தான்போலும் அனேக இடங்களில் தி.மு.காவை கழுவிக் கழுவி ஊற்றியிருக்கின்றார்.

பையனின் படிப்பிற்குப்பணம் இல்லையென்பதற்காக தாய் தனது கிட்னியை விற்று பணம் சம்பாதிக்கவேண்டிய நிலை.இதற்கு ஒருவருடன் பேச்சுவார்த்தை நடக்கின்றது.அவர் 40 000 யிரத்தை புடுங்கிக்கொண்டு மீதி 40 ஐகொடுப்பதாக சொல்கின்றார்.இந்தக்காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிம்போது பின்னணியில் யாருடையபடம் இருக்கின்றது என அவதானித்தீர்களா? ஒரு ரூபாய்க்கு அரிசிதிட்டம் முதல் பல திட்டங்களைக்கொடுத்த கருணானிதி ஒரு ரூபாய்க்கு அரிசி ஆனால் மகனின் படிப்பிற்காக கிட்னிவிற்கவேண்டிய நிலையில்தான் இந்தியர்கள் என்பதுதான் இதன் கருத்து.

அதே கிட்னிவிக்கும் படலம் கருணாநிதி-லாபம்

அக்கா எல்லாரும் நம்மளையே பாத்திக்கிட்டிருக்காங்க பாக்கட்டும் பாக்கட்டும் எங்களையும்(விபச்சாரி)சினிமாககாரங்களையும்  அப்படித்தான் பாப்பாங்க
கிட்னியை விக்கமுயன்றது வைத்தியரிடம் அகப்பட்டுவிட்டது அவர் வெளியே கலைத்ததும்.இவர்களை கூட்டிவந்தவர் பேசிக்கலைக்கின்றார்.மகனின் படிப்பிற்காக கிட்னிவிப்பதற்காக இருவரும் அவனின் காலில்விழுந்து கெஞ்சுகின்றனர்.பின்னனியில் பாபா.உண்மையில் இந்த இடத்தில் இவர்களுக்கு கடவுளும் உதவி செய்யவில்லை கடவுளின் காலடியில் அவர்கள் உதவிகேட்டுவிழுவது பயனற்றதால் மனிதனின் காலடியில் விழுகின்றனர்.அதுவும் பயனற்றதாகின்றது.கடவுள் முன்னிலையிலேயே மனிதனின் காலில் விழுதல் இதுதான் உச்சக்கட்டம்.

இதை வித்திட்டா நிம்மதியா இருக்கும்மாமா..எப்புடி விக்கிறது கிட்னி விக்கிறது தப்புத்தானேம்மா என்றுகூறும் சீன் பின்னணியில் உள்ள நோட்டீஸில் "பிஸ்னஸ் தமிழகம்"


அந்த சாமிதான் நம்மள காப்பாத்திச்சு....சாமி என்னக்கா சாமி அந்த சாமி இருந்திருந்தா நம்ம தலை எழுத்த இப்படியா எழுதியிருக்கும்..இந்த டயலக்கை அனுஸ்கா கூறியபின்னர் பின்னால் எழுதப்பட்டிருக்கும் உதய சூரியனை ஒரு கணம் அவதானிப்பார்.மேலே கூறியது யாரை நோக்கி கூறப்பட்டிருக்கும்?
மிக உச்சதைரியம் சிவசேனாவின் அடாவடியையும் படத்தில் காட்டியுள்ளார் கிரிஸ்


கமலாஸன் படத்தில் இவ்வாறான செய்திகள் அதிகமாகவே இருக்கும்.
கீழே காட்டப்பட்ட சீன் உங்கள் சிந்தனைக்கு..

சம்பந்தர்,அப்பர் ஏனைய சமயக்குரவர்கள் என்றாலே அமைதி சாந்தத்தின் மறு உருவங்களாக சமயப்பாடலகள் நமக்கு உருவகித்துள்ளன.ஆனால் அவர்கள் மதம் பிடித்தவர்களாகவும் இருந்திருக்கலாம்.கல்லோடு கட்டி கடலில் ஒரு அப்பர்தான் போடப்பட்டாரா என்பதும் எமக்கு தெரியாது.கீழே சம்பந்தரின் உருவ ஒப்புமையில் ஒரு கதாப்பாத்திரம் விஸ்னுவை வணங்கியதற்காக கல்லால் எறிகின்றது.

அப்பாராக உருவகப்படுத்தும் கதாப்பாத்திரம் தான்வைத்திருந்த தடியை ராமானுஜனை நோக்கி எறிகின்றது.
உன்னைப்போல் ஒருவனில் பல சீன்கள் உள்ளன.அதில் ஒன்று பாம்வைக்கும் பாக்குகளில் ஐ லவ் இண்டியா என்று எழுதப்பட்டிருக்கும்.அதில் ஒரு பக்கில் வெங்கடாச்சலபதியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.
இவை என் சிற்றறிவுக்கு எட்டியவை இதில் பிழைகளோ மாற்றுக்கருத்துக்களோ இருந்தால் தயவு செய்து தெரிவியுங்கள்

2 comments: