Thursday, 6 December 2012

படம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-04இதுவரை தமிழ் சினிமாவில் நம் நாயகர்கள் செய்யும் அக்கப்போருகளையும் அதற்கு நம் வெறித்தனமான ரசிகர்கள் எவ்வாறு ஏமார்ந்து போகிறார்கள் என்பது பற்றியும் பார்த்துகொண்டிருந்தோம். இனி இவ்வாறு ஏமார்ந்து போன அவர்கள் தங்கள் முத்திப்போன முட்டாள் தனத்தால் செய்யும் வெறிக்கூத்துக்களை பார்கலாம். இதன் முன்னைய பதிப்புக்குஇங்கே கிளிக்கவும்.
                  இந்த பைத்தியம் பிடித்தவர்கள் எல்லாம் சும்மா நாட்களில் தங்கள் மன நிலையை ஆங்காங்கே தவறாமல் வெளிப்படுத்தினாலும் பருவம், அமாவாசை என்று வரும் போது சற்று  மெய்மறந்த நிலையில் பைத்தியம் உச்சமாகி ஊரையே ஒரு ஆட்டு ஆட்டி விடுவார்கள் என்று பிறர் சொல்ல கேட்டிருக்கிறோம் அல்லவா இதுபோலத்தான் நம் வெறியர் பட்டாளமும் சாதாரண தினங்களில் தங்கள் வெறித்தனத்தை அவ்வப்போது வெளிகாட்டினாலும் தாங்கள் முன்னோடியாகக்கருதும் தங்கள் காதலிகளின் படம் வெளிவந்தவுடன் செய்யும் அட்டகாசம் இருக்கிறதே ஐயோ சொல்லில் அடங்காது. எல்லாவற்றையும் விலாவாரியாக பிரித்து மேயலாம் வாருங்கள்.

படம் வெளியாகும் நாளில் நடக்கும் மாபெரும் சாதனைகள்

இவ்வாறு அங்கொன்றும் இங்கொன்றுமாக இழுபட்டு ஒருவழியாக கதாநாயகரின் படங்கள் வெளியாகும் திகதிகளை எப்படியோ இவர்கள் அறிந்து கொள்கிறார்கள். அவ்வளவு தான் தாமதம் ஒரு செத்த வீடு நடக்கும் போது கொல்லிவைப்பதற்கும், அந்தியட்டி கிரிஜைகள் செய்வதற்கும் வேலைகள் எப்படி துரிதமாக அரங்கேறுகிறதோ அதே போலத்தான் இவர்கள் துரிதமாக தங்களை தயார் படுத்திக்கொள்கிறார்கள்.

   
       முதலில் அந்தியட்டிக்கு செத்தவரின் படத்தை முதலே தயார் செய்வதுபோல் கதாநாயகனின் படத்தை பிரம்மாண்டமான அளவிலும் தாங்கள் தூக்கி வருவதற்கு ஏற்ற வகையிலும் தயார் செய்து விடுகிறார்கள். அடுத்து செத்த வீட்டில் பிணத்தை தூக்கிச்செல்லும் போது முழங்கும் பறை மேளங்களை ஏதோஒரு வகையில் தயார் செய்து கொள்கிறார்கள். செத்த வீட்டில் பிணத்தை தூக்கி வருபவர்களும் பிணத்தின் முன்னால் ஆடி வருபவர்களும் முதலில் போகும் இடம் சாராயக்கடையும் கசிப்புக்கடையும் தான். அது போலத்தான் படம் வெளியாகும் நாளன்றும் திரையரங்குக்கு வர முதல் இவர்கள் போகும் இடம் சாராயக்கடையும் கசிப்புக்கடையும் தான்.


  
       சாராயக்கடைகளுக்கு சென்று முழு மப்பை ஏத்திய பின் செத்த வீட்டில் பிணத்தை தூக்கி வருவது போல கதாநாயகனின் படத்தை ஒரு குழு தூக்கிய படி வெறியில் ஆடி வந்து கொண்டிருப்பார்கள். இவர்களின் முன்னால் ஒரு குழு இவர்களின் வரவை செப்பியபடி பெண்களும் சிறார்களும் நடமாடும் வீதியில் தூஷனை வார்த்தைகள் காதைகிழிக்கும் அளவுக்கு “ஏய் பு*** மக்களே வழியை விடுங்கடா......”” என்று கூவியபடி ஏதோ தாங்கள் தான் நாட்டுக்கு போராடி உயிரை கொடுப்பவர்கள் எனும் மிதப்பில் சட்டைகளை திறந்து விட்டு தங்கள் சாராய வாடையும் வியர்வை நாத்தமும் வீசும் உடம்பை காட்டியபடி செத்த பிணத்துக்கு முன்னால் ஆடுவது போல் பறைமேளங்கள் முழங்க கதாநாயகனின் படத்தின் முன்னால் ஆடிக்கொண்டு வருவார்கள்.

             இன்னும் ஒரு சாரார் தங்களின் குடும்ப கௌரவத்தை காப்பாத்திய காரணத்துக்காகவும், தங்களின் குடும்ப வறுமையை போக்கி தங்களை அடுத்த பில்கேட்ஸ் தரத்துக்கு  உயர்த்தியதற்காகவும், தங்கள் குடும்ப பெண்ணை கரை ஏற்றியதற்காகவும் தங்களின் பெற்றோரின் மருத்துவச்செலவுக்கு உதவியதற்காகவும் கதாநாயகர்களை போற்றி அவர்களின் வெற்றி திருப்பாக்களை பாடியபடி இடையிடையே தூஷனை அர்ச்சனைகளும் புரிந்து தாங்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க பாற்காவடி எடுப்பது முதற்கொண்டு தேங்காய் உடைப்பதுவரை செய்து தங்கள் நேர்த்தியை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

        இன்னும் ஒரு சிலர் படம் ஓடி முடிந்து சில நாட்களில் குப்பையில் வீசிஎறியப்பட்டு நாய்கூட சிறுநீர் கழிக்க யோசிக்கும் தங்கள் கதாநாயகனின் கட்டவுட்டுகளை மெச்சி போற்றியபடி அதன் உயரத்துக்கு அருகில் ஏறி தாரைதாரையாக பாற்குடங்களை தூக்கி பாலவிஷேகம் செய்து தங்களை இரண்டுமணிநேரம் மகிழ்விக்கும் கதாநாயகனை பாலால் குளிப்பாட்டுகிறார்கள். இதில் கதாநாயகனை காதலியாக கருதும் சில காதலர்கள் ஏதோ துர் தேவதைகளுக்கு இரத்தக்காவு கொடுப்பது போல் தங்கள் கையை வெட்டி இரத்தத்தால் கதாநாயகனைதிணறடிக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் தங்கள் கைகளில் கதாநாயகனின் பெயரை பிளேட்டால் வெட்டி பதித்துக்கொள்கிறார்கள். சிலர் திரையரங்கின் மேல்மாடங்களில் ஏறிநின்று தாங்கள் ஊதும் சிகரட்டால் தங்கள் கையை சுட்டுக்கொல்வதன் மூலம் தங்கள் நாயகனின் பெயரை பதித்துக்கொள்கிறார்கள். சிலர் தங்கள் உடலின் பாகங்களில் நாயகனின் படத்தை பச்சை குத்திக்கொள்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவெனில் கதாநாயகியுடன் நாயகன் கட்டியணைத்துக்கொண்டு நிற்கும் போஸ்டரில் கதாநாயகியை பார்த்து பொறாமைபட்டு நாயகியை அடிப்பதுடன் நாயகனின் உதட்டில் தங்கள் உதட்டை பதித்து முத்தம் இட்டு தங்கள் உடலை ஒரு வகை ஆனந்த பூரிப்பில் ஆட்டிக்கொள்கிறார்கள். [இது நேரடியில் நான் கண்ட காட்சி] இவ்வாறு முத்தமிட்ட பூரிப்பில் என் அண்ணனுக்காக உங்கள் எல்லோருக்கும் ஒரு பரிசு என கையிலிருக்கும் பால்பக்கேட்டை கீழே நிற்கும் சாதாரண ரசிகர்கள் மத்தியில் மாடத்தில்நின்றபடி விசிறியடித்து பெருமைபட்டுக்கொள்கிறார்கள். [கீழிருந்தவர்கள் செருப்பால் இவரின் மீது எறிந்து கீழே வா என கூப்பிட்ட போது மாடத்தால் குதித்து ஓடிவிட்டார் என்பது வேறு கதை]
  
          இவர்களை பார்க்கும் போதுதான் ஆண்கள் மத்தியில் ஆண்கள் நடமாடுவது கூட பயங்கரமான விடயம்தான் என்று எண்ணத்தோன்றுகிறது. நாயகரின் சாயலில் இருக்கும் ஒரு ஆண் இவர்கள் மத்தியில் நின்றால் அவரை தூக்கிச்சென்று சீரழிக்கமாட்டார்கள் என்று என்ன நிச்சயம். காதல் வெறி கொண்டவர்கள் தங்கள் காதலிபால் அன்பின் உச்சத்தில் செய்யும் வேலைகளை நாயகன் பால் இந்த வெறியர்கள் செய்வதிலிருந்து இவர்களை ஆணோடு ஆண் சேரும் சுயவர்க்க போகிகள் என்று எண்ணாமல் வேறு எப்படி நினைப்பது. மேலும் இப்படி பாலூத்துவோரில் பெரும்பாலானவர்கள் இன்றுவரை பெற்றோரின் உழைப்பில் இருப்பவர்கள் என்பதுடன் கூலிவேலைக்கு போகும் பெற்றோரை கொண்டவர்கள் என்பது கவலைக்குரிய விடயம்,.

வெறியர்களை இனம் காண்பது எப்படி

நாலு பேர் மத்தியில் இப்படிப்பட்ட உச்சக்கட்ட வெறியர்களை சில அடையாளங்களை வைத்து இனம் கண்டு கொண்டுவிடலாம்.

v 4000 ரூபாவுக்கு வாங்கிய விலையுயர் ஜீன்ஸில் 3000 கிழிசல்கள் போட்டு ஆங்காங்கே ஆஞ்சநேயரின் வால்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொங்கும் வகையில் உடை அணிந்திருப்பார்கள்.

v வானவில்லின் ஏழு வர்ணங்களையும் தாண்டி கண்ணுக்கு குத்தும் பச்சைகடும் ஊதா போன்ற நிறங்களில் கூட இல்லாத தலைமுடிக்கு கோழிச்சாயம் பூசியிருப்பார்கள்.

v நான்கு வார்த்தைக்கு மூன்று வார்த்தை காதிலே கேட்கேலாத தூஷனப் பிரஜோகங்களாக இருக்கும்.

v பார்த்தாலே கண்ணவிந்து போகும் நிற உடைகளை எங்கே தேடிப்பிடிக்கிறார்களோ தெரியாது ஆனால் அப்படியானஉடைகள் தான் அணிந்திருப்பார்கள்.

v 18000 ரூபாவுக்கு வாங்கின போன் எண்டாலும் நிச்சயம் சதத்துக்கு உதவாத சைனாபோனாத்தான் இருக்கும்.

v அதில விஜய் அன்ரனி போன்றோரது குத்துப்பாட்டுகளை வைதிருப்பதுடன் ரோட்டால போகும் போது ஐஸ் கிரீம்வான்காரன் சத்தமா பாட்டுப்போடுவதுபோல போட்டபடியே போவார்கள்.

v பெரும்பாலும் தாயின் தாலிக்கொடியை அடகுவைத்து ஒரு பல்சர் வாங்கி வைத்துக்கொண்டு அதுக்கும் பச்சை கலரு சிங்குசா .... ஊதா கலரு சிங்குசா... என்று நிறத்தை மாத்தி அடித்திருப்பார்கள்.

v தாங்கள் வெட்டியாய் இருந்து கொண்டு கூலிவேலைக்கு போகும் பெற்றோரின் காசை தர்மப்பிரபு ரேஞ்சுக்கு நண்பர்களுடன் பார்டி எனும் பெயரில் கரைத்துக்கொண்டிருப்பார்கள்.

  இப்படி ஒன்றா இரண்டா இதை ஒரு தனிப்பதிவாகவே இடும் அளவுக்கு அல்லவா தனிப்பெருமைகளை வைத்திருக்கிறார்கள்.
.
  அடுத்த பதிவில் இவர்கள் தங்களை நியாயப்படுத்த கூறும் பதில்களையும் அதன் விளக்கங்களையும் பார்க்கலாம்.
              
                                     ..............தொடரும்............

No comments:

Post a Comment