Wednesday, 14 November 2012

Mentos ஐ கோலாவினுள் போட்டால் என்னா ஆகும்? மாஜிக்


கோலா  குடித்தால்தான் அதுவும் ஸ்ரைலாக குடித்தால்தான் அவன் யூத் அத்துடன்  ஜெண்டில்மேன் டீஸெண்ட் பெல்லோ என்ற மாயையை உருவாக்கிவிட்டார்கள்.கோலா பற்றி முன்பும் ஒரு பதிவு போடப்பட்டுள்ளது.189க்கு மேற்பட்ட நாடுகளில் coca cola தற்பொழுது சுவைக்கப்பட்டு வருகின்றது....இது வரை வெளிவந்த coca cola போத்தல்களை ஒன்றுடன் ஒன்றாக இணைத்தோமேயானால் பூமியிலிருந்து நிலவுக்கு மீண்டும்மீண்டுமாக 1677 தடவைக்கு மேலாக சென்று வர முடியும் ...அந்த அளவிற்கு விற்று தீர்த்திருக்கிறது coca cola ..இதுவரை வெளிவந்த சகல coca cola போத்தல்களையும் நயாகரா நீர் வீழ்ச்சியில் இருந்து கீழே கொட்டினால் 1 செக்கனுக்கு 1.6 மில்லியன் போத்தில்கள் வீதம் கீழே விழும் முழுப்போத்தல்களும் கொட்டி முடிவதற்கு 83 மணித்தியாலங்கள் எடுக்கும் ..அந்தப்பதிவை வாசிப்பதற்கு இங்கே கிளிக்

Mentos ஐ கோலாவினுள் போட்டால் என்ன ஆகும்?பின்வரும் வீடியோவைப்பாருங்கள்.அப்படியே சீறி  நுரையுடன் வெளியே பாய்கின்றது கோலா.யூ டியூப்பில் இவ்வாறான பரிசோதனை வீடியோக்கள் மிக அதிகமாகப்பார்க்கப்பட்டுவருகின்றன.
என்னதான் நடக்கின்றது.

இணையத்தில் இதற்குக்காரணம் தேடியபோது கெமிக்கல் ரியாக்ஸன் நடைபெறுகின்றது போன்ற பல காரணங்கள் கூறப்பட்டன.கோலாவின் உள்ளீட்டுப்பொருட்கள் இரகசியமானவையாகையால் இரசாயனத்தாக்க சமன் பாடுகள் கூறமுடியாது என்றும் கூறினார்கள்.உண்மையில் இரசாயனத்தாக்கங்கள் நடைபெறுவதில்லை.Mentos இன் மேற்பரப்பு ஊக்கியாக( catalyze) செயற்படுகின்றது.
தெளிவாகக்கூறுகின்றேன்.கோலா போன்ற சோடாக்களை திறந்தவுடன் நுரை பொங்கி எழும் காரணம் உள்ளே CO2 (carbon dioxide) சற்று உயர் அமுக்கத்தில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும்.உள்ளே இருக்கும் carbon dioxide சோடாவை அடைக்கும்போதே சோடாவுடன் கலக்க ஆரம்பித்துவிடும் பின்னர் CO2  பெருமளவிற்கு சோடாவில் கரைந்து CO2  கரைசலாக இருக்கும்.சோ போத்தலினுள் தற்போது CO2  கரைசல் நிலையிலும் வாயு நிலையிலும் இருக்கின்றது.இரண்டுக்குமிடையில் ஒரு சம நிலை இருக்கும்.

இதை ஒரு தாக்க சமன்பாடாகவும் காட்டலாம்.. CO2(aq) --> CO2(g)...சாதாரணமாக போத்தல் மூடியை திறந்தால் அவ்வளவாக ரியாக்ஸன் இருக்காது.நன்றாக குலுக்கிய பின் திறந்தால் சீறியடித்துவிடும்.காரணம் போத்தலினுள்ளே சோடாவுடன் கலக்காது மீதமாக இருக்கும் CO2 குலுக்கல் காரணமாக சோடாவுடன் கலந்துவிடும். இதன் காரணமாக சோடாவில் கரைசல் நிலையில் உள்ள CO2 வின் அளவு அதிகரித்துவிடும்.இதனால் சோடாவினுள் உள்ள அமுக்கம் அதிகரித்திருக்கும்.போத்தலின் வெளியே உள்ள அமுக்கம் உள்ளே உள்ளதை விட குறைவாகத்தான் இருக்கும்.மூடியைத்திறந்தவுடன் சீறுகின்றது.கரைசல் நிலையில் உள்ள CO2 வாயு நிலைக்கு மாறுவதனால் அதிக அளவு நுரை குமிழ்கள் தோன்றுகின்றன.

((கெமிஸ்ரி,பிஸிக்ஸ் தெரிந்தவர்களுக்கான விளக்கம்-போத்தலின் உள்ளே கரைசலில் உள்ள CO2  வும் வாயு நிலையில் உள்ள CO2 விற்குமிடையே மீளும் தாக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்.போத்தலை குலுக்கினால் கரைசலில் உள்ள CO2 வின் செறிவு அதிகரித்துவிடும்.சோ திறக்கும்போது கரைசலில் உள்ள CO2 வின் செறிவைக்குறைக்கும்முகமாக CO2 வாயுவாக நுரையுடன் வெளியே சீறுகின்றது.இது சாதாரணமாக நடப்பது.இதில் Mentos இன் பங்கு என்னவென்றால் Mentos இன் மேற்பரப்பு இத்தாக்கத்திற்கு ஊக்கியாகத்தொழிற்படுகின்றது. இதோடு மேற்பரப்பிழுவிசை தொடர்பிலும் விளக்கம் கூறப்பட்டுள்ளது.Water molecules strongly attract each other, linking together to form a tight mesh around each bubble of carbon dioxide gas in the soda. In order to form a new bubble, or even to expand a bubble that has already formed, water molecules must push away from each other. It takes extra energy to break this "surface tension." In other words, water "resists" the expansion of bubbles in the soda.
))

சரி இது நோர்மலாக சோடாவை குலுக்காமல் திறக்கும்போதும் குலுக்கிவிட்டுத்திறக்கும்போதும் நடைபெறும் விடயங்களுக்கான காரணங்கள் அப்படியானால் இங்கே Mentos ஐப்போடும்போது கோலா சீறுவதற்கான விளக்கம்.

சோடாவினுள் கரைந்துள்ள CO2 வாயுவாகுவதை Mentos இன் மேற்பரப்பு ஊக்குவிக்கின்றது.இதுதான் Mentos ஐப்போட்டதும் கோலா சீறுவதற்குக்காரணம்.அப்படியானால் புரிந்திருக்கும் இதை கோலா மட்டும் செய்யாமல் பல சோடாக்கள் செய்யும்.காரணம் பல சோடாக்களில் CO2 வாயுதான் அடைக்கப்பட்டிருக்கும். ஆனால் வேறுசோடாக்களைவிட கோலா அதுவும்  Diet Coke தான் அதிக உயரத்திற்கு சீறுகின்றது அதிக CO2 வைக்கொண்டிருத்தல்காரணமாக.

இதை நீங்கள் மாஜிக் போல் மற்றவர்களுக்கு செய்துகாட்டலாம்.ஆடிப்போவார்கள் பலருக்கு Mentosஇல் இப்படி ஒருவிடயம் இருப்பதே தெரிந்திருக்காது.

கோலா வுடன்  Mentos இன் றியாக்ஸன் தொடர்பான  இரசாயன் பௌதிகவியல் விளக்கங்களை விரிவாக அறிவதற்கு பின்வரும் லிங்கை கிளிக் செய்க. American Journal of Physicsஇல் June 2008 இல் வெளிகியுள்ளது. இங்கே கிளிக்

இத்துடன் இந்த மேட்டரை விட்டார்களா என்றால் இல்லை.இதை வைத்து கின்னஸ் சாதனை செய்தபின்தான் ஓய்ந்தார்கள்.2865 கோலாப்போத்தல்களில் நீர் ஊற்றுக்கள் பொங்கி எழுந்தன.முகத்திலடித்தால் எப்படி இருக்கும்?சிலோ மோஸனில் காட்டப்பட்டுள்ளது தெளிவாக விளங்கும் பாருங்கள்கோலாவை குடிப்பதற்கு மாத்திரமல்ல வேறு பல விடயங்களுக்கும் பயன்படுத்தலாம்.
துருக்களை அகற்றுவதற்குப்பயன்படுத்தலாம்.இதற்கு கோலாவில் துரு அகற்றவேண்டிய பொருளை 12 மணி நேரம் வரை ஊறவிடவேண்டும்.
இரத்தக்கறைகளை அகற்றமுடியும்.உலகப்போரின்போது கலன் கலனாக அனுப்பினார்கள் இரத்தக்கறையை அகற்றுவதற்காக.
கெட்டவாடைகளை அகற்றமுடியும்.கெட்டவாடை வீசும் பொருட்கள் மீது ஊற்றிப்பாருங்களேன்.
உங்கள் மலசலகூடத்தை சுத்தம் செய்யலாம் ஹார்பிக் போல் செயற்படுகின்றது என்று இணையத்தில் கூறப்பட்டுள்ளது.கெமிக்கல் ரியாக்ஸனாக இருக்கலாம்.(நீண்ட நேரம் ஊறவிடவேண்டுமாம் கார்பிக் போல் உடனே செயற்படாது)
தலைவலிக்கு நிவாரணி(கோலா ஆரம்பத்தில் தலைவலி மருந்தாகத்தான் உருவாக்கப்பட்டிருந்தது)
பெயின் கில்லராக செயற்படும்.ஜெலிபிஸ் கடி மிகவும் மோசமானது.அதன் வலியைக்குறைப்பதற்கு கோலாவைப்பயன்படுத்த முடியும்.அடி பிடித்த பாத்திரங்களை சுத்தம் செய்யுமாம்.உடைகளின் அழுக்கை போக்கும்.(Grease stains are famously difficult to remove from clothing and stain removers can be very expensive. Here is a cheap solution: empty a can of coke into your wash along with the usual detergent and run it through a normal cycle. This is also quite effective for removing blood and it helps to deodorize smelly clothes.)

Coca cola is useful for a variety of ailments. The most common is for soothing upset stomachs. Just slowly sip a glass of flat coke and it should help to alleviate nausea. It is also good for people suffering from diarrhea or a sore throat


ரஜனி ஸ்ரைலில் தீவாவளி வாழ்த்துக்கள்ரஜனி கிறிக்கற் விளையாடினால் எப்படி இருக்கும்?எல்லாம் ஒரு நகைச்சுவைக்காகத்தான்.சர்த்தார்ஜி ஜோக் என்பது போல் ரஜனி ஜோக்கும் இணையத்தில் பிரபலமாகிவருகின்றது.இதைப்பற்றி முன்பு இடப்பட்ட பதிவுக்கு இங்கே கிளிக்

No comments:

Post a Comment