Monday, 5 November 2012

Lifebook : வாழ்க்கையை இலகுவாக்கப்போகும் புதிய சாதனம்


இன்றைய நவீன காலத்திலே முக்கிய பிரச்சனைகளாக இருப்பவற்றுள் மிக முக்கியமான பிரச்சனையாக  இருப்பது Phone , Camera , Tablet computers , Laptops , mp3 players , etc. போன்ற அனைத்தையும் எவ்வாறு இலகுவாக  இடத்துக்கிடம் கொண்டு செல்வது என்பதாகும். அந்த பிரச்சனையினை தீர்க்கும் விதமாக இந்த சாதனம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்று நம் life இல் முக்கியமாகிவிட்ட இச்சாதனங்கள் அனைத்தையும் கொண்டமைந்த ஒரே சாதனமாக இது அமையும் என்பதால் இதற்கு Lifebook என பெயரிட்டுள்ளனர்.


இன்றுவரை சாதனங்களிடையே ஒரு Gadget பிரச்சனை இருந்து வருகின்றது. எனினும் அதை நாம் பெரிதாக நினைத்ததில்லை. அதாவது ஒரே செயற்பாடுகளை தான் வெவ்வேறு சாதனங்கள் மூலம் நாம் மேற்கொள்கிறோம். உதாரணமாக Camera மூலமும் Phone மூலமும் படங்களை எடுக்கிறோம் , Tablet மூலமும் mp3 Player மூலமும் பாடல்களை கேட்கிறோம் , Laptop மூலமும் Phone மூலமும் தரவுகளை சேமிக்கின்றோம். இந்த பிரச்சனையினை முதன் முதலில் தீர்க்கும் சாதனமாக இது அமையபோகிறது.



இந்த Lifebook concept ஐ design செய்தவர் Prashant Chandra என்பவராவார். இவரது இந்த யோசனை அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பது உறுதி. ஆனால் இந்த சாதனம் நம் கைகளில் தவழ நாம் 2013 வரை காத்திருக்க வேண்டும் என்பதே இப்போதைக்கு சற்று வருத்தம் அளிக்கும் விடயம். 


இந்த சாதனத்தில் Laptop ஆனது மற்றைய அனைத்து devices இற்குமான தளமாக இருக்கும். இதில் Keyboard ஆனது தனியாக இருக்காது. பதிலாக Tablet ஐ இதில் இணைத்ததும் அதில் Touch keyboard தோன்றும். Laptop இலிருந்து ஒவ்வொரு device ஐயும் தனியாக எடுக்கும் போது அவை தமக்கேயான பாணியில் மாறும். மீண்டும் Laptop இல் இணைத்ததும் மிக வேகமாக connect ஆகிவிடும். பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து Laptop ஆக பயன்படுத்தலாம்.


இந்த Lifebook ஆல் இன்னொரு பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்துள்ளது. அதாவது நாம் ஒவ்வொரு சாதனத்திற்கும் தனித்தனியாக Charge பண்ணவேண்டிய தேவை இல்லை. அனைத்தையும் ஒரே தடவையில் இலகுவாக Charge பண்ணிக்கொள்ளலாம்.  இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் இன்னொரு மைல்கல்லாக அமையும் என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும். பொறுத்திருந்து பாப்போம்.


No comments:

Post a Comment