Friday, 9 November 2012

மலாலாவிற்கு நோபல்பரிசு வழங்கலாமா?மலாலா என்ற 15 வயதுச்சிறுமிக்கு அமைதிக்கான நோபல்பரிசு வழங்குவதற்கான ஆதரவுக்குரல்கள் எழுந்துகொண்டிருக்கின்றன.அறுபதாயிரம் பேரின் ஆதரவோடு, அவளுக்கு நோபல் பரிசு வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.மலாலா யூசப்சையி என்பதுதான் சிறுமியின் முழுப்பெயர்.பாகிஸ்தானின் வடமேற்குப்புறத்தில் உள்ள மிங்காரா என்னும் ஊரின் மாணவிதான் மலாலா.2009 வரை அந்தப்பகுதியில் தலிபான்களின் அட்டூழியம் அதிகரித்திருந்தது.பல பிற்போக்குத்தனமான விடயங்களை மதம் சார்பாக மக்கள் மீது திணித்துக்கொண்டிருந்தார்கள் தலிபான்கள்.முக்கியமாக பெண்கள் கல்விகற்கக்கூடாது,பாடசாலைக்கு செல்லக்கூடாது. என்று அதிகாரம் செய்தார்கள்.வாய்ப்பேச்சாகவும் மிரட்டலாகவும் இவற்றைக்கூறிவந்த தலிபான்கள் 2009 இல் இவற்றை சட்டமாகவே ஆக்கிவிட்டிருந்தார்கள்.மலாலா வாழும்பகுதியில் மட்டும் 400 மேற்பட்ட பாடசாலைகள் தலிபான்களினால் தகர்க்கப்பட்டன.50 000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

2009 இல் மலாலாவிற்கு 11 வயதிருக்கும்போது புனைபெயரில் பி.பி.சி யின் உருது மொழி பிளாக்கினூடாக பாகிஸ்தானில் தலீபான்களின் ஆட்சியின் கீழ் தனது வாழ்க்கை,தலிபான்கள் தம்மை கட்டுப்படுத்தும் விதம் போன்றவற்றை எழுதிவந்தார்

I had a terrible dream yesterday with military helicopters and the Taleban. I have had such dreams since the launch of the military operation in Swat. My mother made me breakfast and I went off to school. I was afraid going to school because the Taleban had issued an edict banning all girls from attending schools.
Only 11 students attended the class out of 27. The number decreased because of Taleban's edict. My three friends have shifted to Peshawar, Lahore and Rawalpindi with their families after this edict.
On my way from school to home I heard a man saying 'I will kill you'. I hastened my pace and after a while I looked back if the man was still coming behind me. But to my utter relief he was talking on his mobile and must have been threatening someone else over the phone.
Malala Yousafzai, 3 January 2009 BBC blog entry


ஊடகங்களின் முன் மலாலாவின் பேச்சு....


.அவர் எழுதுபவற்றுள் பெரும்பாலானவை பெண்கள் கல்வியை ஊக்குவிப்பது தொடர்பாகவே அமைந்திருந்தது.அதுவரை யார் என்று தெரியாத மலாலாவை வெளியே கொண்டுவந்தது 2009இல்வெளியாகிய நியூயோர்க் ரைம்ஸின்ஆவணப்படம்.

கீழே காட்டப்பட்டிருப்பதுதான் அது.
(A 2009 documentary by Adam B. Ellick profiled Malala Yousafzai, a Pakistani girl whose school was shut down by the Taliban.)இதன் மூலம் பாகிஸ்தானின் ஸ்வார்ட் பகுதியில் இருந்து தலிபான்களை விரட்டியடிக்க காரணமாக இருந்தார் மலாலா.இந்த சம்பவங்களின் பின் பத்திரிகை டி.விக்கள் ஊடகங்களினூடாக மலாலா மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.பதவிகள் தேடிவந்தன  District Child Assembly Swat இற்கு செயார்மென் ஆக்கப்பட்டார். Desmond Tutu என்ற பேராயரினால்  International Children's Peace Prize  இற்கு நோமினேட் செய்யப்பட்டார்.அத்துடன் பாகிஸ்தானின் முதலாவது National Youth Peace Prize ஐயும் வென்றுள்ளார்.
9 October 2012 இல் மலாலா பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.அவர் பயணம் செய்த வண்டியை முகமூடியணிந்த மோட்டார் வண்டியில்வந்த குழு நிறுத்தியது.அங்கு நடந்தவற்றை மலாலாவின் தோழி Shazia ஊடகங்களுக்கு தெரிவித்தார்.உள்ளே வந்த முகமூடி அணிந்த துப்பாக்கியேந்திய நபர் யார் மலாலா என்று ஒவ்வொரு பெண்கள் மீதும் துப்பாக்கியைக்காட்டி பயமுறுத்திக்கேட்டுக்கொண்டுவந்தார்.கூறாவிட்டால் நான் அனைவரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார்.

'Which one of you is Malala? Speak up, otherwise I will shoot you all. She is propagating against the soldiers of Allah, the Taliban. She must be punished"

பின்னர் மலாலாவை அடையாளம் கண்டுகொண்ட தீவிரவாதி மலாலாவை இரு தடவைகள் சுட்டுள்ளான்.மல்லாவின் தலையிலும் கழுத்திலும் குண்டுகள் பாய்ந்தன. நினைவிழந்து கீழே சரிந்தார் மலாலா.உடனடியாக இராணுவ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டார் மலாலா.மூளைக்குள் புகுந்த சின்னத்தின் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவதற்காக மலாலாவை பிரிட்டனுக்கும் பின்னர் கொண்டு சென்றார்கள்.
தலிபான்கள் தாம் சுட்டதை ஒப்புக்கொண்டார்கள்.சுட்டதற்கு அவர்கள் கூறிய காரணம் பெண்கள் கல்விக்கு ஆதரவளித்தமை. மத சார்பற்றவராக நடந்துகொண்டமை.அத்துடன் மலாலாவை சுட்டது பற்றி தலீபான் செய்தித் தொடர்பாளர் ஈஷானுல்லா கூறியவை"The TTP (Tehrik-e-Taliban Pakistan) successfully targeted Malala Yousafzai in Mingora, although she was young and a girl, and the TTP does not believe in attacking women. But whoever campaigns against Islam is ordered to be killed by Shariah. And when it is a matter of Shariah and someone tries to bring fitnah (new practice to Islam) with his/her activities, and it involves leading a campaign against Shariah, and tries to involve the whole community in such a campaign, that personality becomes a symbol of anti-Shariah campaign. Then it is not only allowed to kill such a person but it's obligatory." 

Ihsan further said, "Malala was playing a vital role in encouraging the emotions of Murtad (infidel) army and the government of Pakistan, and was inviting Muslims to hate mujahideen.என்று கூறியுள்ளார். (((whoever campaigns against Islam is ordered to be killed by Shariahஇவற்றை விமர்சித்தால் இங்கே மதப்பிரச்சனைதான் வரும்.)))

சுட்டதற்கு கூறிய இந்தக்காரணங்களால் மக்கள் மிகவும் கொதிப்படைந்தார்கள்.மலாலாவுக்கு ஆதரவாக மக்கள் குரல் எழுப்பத்தொடங்கினார்கள்.பல சமூக அமைப்புக்கள் எதிர்க்குரல்களை எழுப்பின.
உலகில் உள்ள அனைத்துமக்களின் மத இன  பேதமற்ற வேண்டுதல்களினால் மலாலா மீண்டும் மெல்ல மெல்ல குணமடைந்தார்.


மலாலாவின் தந்தை  Ziauddin,இரண்டு சகோதரர்கள்Atal, Khushal,கமெராவிற்கு முன்னே நிற்பது மலாலாவின் தாய்


ஆனால் தலிபான்கள் மலாலா பிழைத்தால் மீண்டும் சுடுவோம் என்று அறிவித்தார்கள்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதான தலிபான் போராளியான  Attah Ullah Khanனின் சகோதரிRehana Haleem  CNN க்கு அளித்த பேட்டியில் தனது சகோதரன் தமது குடும்பத்திற்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் சகோதரனுக்காக தான் மன்னிப்புக்கேட்பதாகவும் கூறியிருந்தார்.
இன்றைய தினமானது மலாலா தினமாக பிரித்தானிய முன்னாள் பிரதமர் கோர்டன் புரவுனால் – உலகளாவிய கல்விக்கான ஐ நாவின் விசேட தூதுவர் என்கிற முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் மலாலாவிற்கு சமாதானத்திற்கான நோபல்பரிசும் வழங்கப்படலாம்.மலாலாவிற்கான நோபல்பரிசும் சர்ச்சையைக்கிளப்பலாம்.இதுவரை  சமாதானத்திற்கான நோபல்பரிசு பெற்ற சிலர் நெல்சன் மண்டேலா,அன்னை தெரேசா,மார்டின்  லூதர்கிங்க்..போன்றோர்.ஒரே ஒரு வாழ் நாள் சம்பவத்திற்காக இவர்களுக்கு நோபல் வழங்கப்படவில்லைத்தான்.ஏன் மகாத்மாகாந்திக்கே  அமைதிக்கான நோபல்பரிசிற்கு கமிட்டி மறுப்புத்தெரிவித்திருந்தது.அப்படியானால் மலாலாவிற்கு நோபல் வழங்கலாமா? 

சேர் வாள் 2009 இல் அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கு வழங்கினீர்கள் நினைவிருக்கின்றதா? ஒபாமாவிற்கு....
ஓபாமாவிற்கு அமைதிக்கான நோபல் கொடுத்தது சரி என்றால் மலாலாவிற்கு கொடுப்பதில் எந்தத்தவறுமில்லை என்பதுதான் என் கருத்து. 

"மலாலா தின வாழ்த்துக்கள்"


No comments:

Post a Comment