Friday, 9 November 2012

தலீபான்களால் சுடப்பட்ட சிறுமிக்கு நோபல் பரிசு பரிந்துரை


பெண்களின் கல்விக்காக தலிபான்களின் கோட்டைக்குள் இருந்தே குரல் கொடுத்ததற்காக, பெண்களின் கல்வி கற்கும் உரிமை பற்றி, தலிபான்கள் பெண்களை படிப்பதிலிருந்து தடை செய்ததை பற்றி தனது அனாமதேய வலைப்பூவிலே எழுதியதற்காக தலிபான்களின் பார்வை மலாலாவின் மேல் விழுந்தது.
மிங்கோரா நகரத்தின் ஒதுக்குப்புறத்திலே பாடசாலை வான் ஒன்றிலே அவள் வந்துகொண்டிருந்தபோது பாகிஸ்தான் தீவிரவாத ஆயுததாரி அவளை மறித்து, அவளது தலையிலே துப்பாக்கியால் சுட்டான். அவளுடன் இன்னும் ஒரு பெண்ணும் சூட்டுக்கு இலக்கானாள்.

மலாவாவின் தாடைக்குள் நுழைந்த சன்னமானது தாடை மூட்டை சிதைத்து மண்டையோட்டுக்குள் புகுந்தது. சன்னமானது பாகிஸ்தான் வைத்தியர்களால் எடுக்கப்பட முயற்சிக்கப்பட்டது.

மூளைக்குள் புகுந்த சின்னத்தின் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவதற்காக அவள் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கே பிர்மிங்கம் குவீன் எலிசபெத் வைத்தியசாலையிலே சிகிச்சை பெற்று தேறிவந்த அவளுக்கு உலகெங்கிலுமிருந்து வாழ்த்துக்களும், பரிசுகளும் வந்தவண்ணமிருந்தன. அவளது தந்தை சியாயுதீன் யூஸாஃப்சி தனது மகளுக்காக பிரார்த்தித்த, வாழ்த்திய, பரிசுகள் அனுப்பிய, இறக்கப்பட்ட அனைவர்க்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
தந்தையுடன்

ஆயிரக்கணக்கான பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்ததற்காக, இவளுக்கு நோபல் பரிசு அறிவிக்க முயற்சி எடுக்கப்படுகிறது எனத் தெரிய வருகிறது. வந்து குவிந்துகொண்டிருக்கும் வாழ்த்து அட்டைகளுக்கும், பரிசுப் பொதிகளுக்கும், இனிப்புக்களுக்கும், குறுந்தகடுகளுக்கும், ஆடைகளுக்கும், நகைகளுக்கும் இடையே நிற மத இன பேதமில்லாமல் அவளது சுகத்துக்காக வேண்டிக்கொண்ட அனைவருக்கும் அவளது சார்பாக அவளது தந்தை நன்றிகள் தெரிவித்தார்.

நாளைய தினமானது மலாலா தினமாக பிரித்தானிய முன்னாள் பிரதமர் கோர்டன் புரவுனால் – உலகளாவிய கல்விக்கான ஐ நாவின் விசேட தூதுவர் என்கிற முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவள் சுடப்பட்ட தினம்தான் அவர் பாகிஸ்தானுக்கு கல்வி சம்பந்தமான சுதந்திரத்துக்காக மில்லியன் கையெழுத்துக்கள் அடங்கிய மனுவை ஜனாதிபதி அலி சர்தாரிக்கு கொடுக்க போனார்.
.அறுபதாயிரம் பேரின் ஆதரவோடு, அவளுக்கு நோபல் பரிசு வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஷகிந்தா சவுத்தரி தலைமையிலே பிரித்தானிய பிரதமரை இது தொடர்பாக அவர்கள் சந்தித்தார்கள். இதுபற்றி ஷகிந்தா தெரிவிக்கையில், “மலாலா என்பது வெறும் ஒரு சிறுமி அல்ல. கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரல், அவளுக்கு நோபல் பரிசு கொடுப்பது என்பது அந்த சமூகத்தின் கல்விக்கான உரிமையை அங்கீகரிப்பது ஆகிறது என்றார். ஷகிந்தா என்பவர் பதினாறு வயதிலே கல்வியை முடித்துக்கொண்டு திருமணம் செய்ய நிர்பந்திக்கப்பட்டதால்  போராடி, பின்னர் பாகிஸ்தானை விட்டு வெளியேறியவர். இப்போது அவ்வாறான பெண்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
நோபல் பரிசு கொடுப்பதற்கான எல்லா தகுதியும் மலாலாக்கு இருப்பதால் அவளுக்கே பரிடு கிடைக்கும் என நம்பப்படுகிறது.  ஆனால் பிரச்சனை என்ன என்றால், ஒபாமா மறுபடி ஜனாதிபதி ஆனதற்கு அவருக்கு கொடுக்காமல் விடலாமா?
பொறுத்திருந்து பார்ப்போம்.


இந்த ரணகளத்திலே தலிபான்கள் தங்களது இணையத்தளத்திலே அவள் தப்பி வந்தால் மறுபடி அவளை சுடுவோம் என அறிக்கை விட்டுள்ளார்கள்.

படங்கள், செய்தி : நன்றி : www.dailymail.co.u

3 comments:

 1. இதுக்கெல்லாம் நோபல் பரிசு அநியாயம்..........

  ReplyDelete
 2. நண்பர்களே தங்கள் தளம் பிளாக்கர் -ல் இருந்து ரீச் ஆக முடியவில்லை. கூகுல் ரீடரிலும் இருந்து வர முடியவில்லை. தமிழ் மனம் லிங்கில் இருந்து மட்டுமே வர முடிகிறது. சரி செய்யவும். மேலும் நான் Facebook ல் லைக் கொடுத்து விட்டேன், இருப்பினும் ஒவ்வொரு முறையும் தங்கள் தளத்தை திறக்கும்போது என்னை லைக் பண்ணச் சொல்லி கட்டாயப் படுத்துகிறது பொதுவாகவே இந்த மாதிரி கட்டாயப் படுத்துவது நல்லது இல்லை இது அவரவர் விருப்பத்திற்கு விட்டு விடுங்கள் நண்பர்களே.

  ReplyDelete
  Replies
  1. நோபல் பரிசு அநியாயம்// பிரச்சனைக்குரிய விடயம்தான்...
   பொப் அவுட் லைக் பொக்ஸ்ஸை நிறுத்திவிட்டேம் அய்யா...
   இனிமேல் சைட் இலகுவாக ஓபின் ஆகுமென்று நம்புகின்றேன்..ஆகவில்லையாயின் கூறுங்கள்..தொடர்ந்து நீங்கள் எமக்கு அளித்துவரும் ஆதரவுக்கு மிக மிக நன்றிகள்

   Delete