Monday, 5 November 2012

விஜய் அஜித் ரசிகன்னா முட்டாளா?நாம் சிலவற்றைஆராயாமல் எடுக்கும் முடிவுகளால் முட்டாள்களாக்கப்படுகின்றோம் இதில் கவலையான விடயம் எதுவெனில் அவ்வாறு நாம் முட்டாள்களாக்கப்பட்டுக்கொண்டிருப்பதை உணர மறுப்பதுதான்  நம்மைமுட்டாளாக்கும் பல துறைகள் உள்ளன அரசியல்,சமயம்,விஞ்ஞானம்,சினிமா,இணையம்,முகப்புத்தகம்...என அவை நீண்டு செல்லும்..அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயங்களைபற்றித்தான் இங்கு கவனிக்க உள்ளோம்..சினிமா,மற்றயது இணையம் இவைஇரண்டினதும் பயன்பாடுகள் அதிகமாக இருப்பதால் இவற்றை பற்றிய விழிப்புனர்வுகள் அவசியம்

முதலில் இணையத்திற்கு வருவோம் இதைப்பயன்படுத்தி நாம் எமக்கு தேவையான தளங்களை பார்வையிடும்போது அத்தளங்களில் சில விளம்பரங்கள் இருக்கும் பிரபல நடிகர் ஒருவரின் பெயருடன் அவர் உங்களுடன் டின்னர் சாப்பிடுவதற்கு காத்திருக்கின்றார்,சில பாலியல் விளம்பரங்கள்,ஒரே நாளில் வீட்டில் இருந்த படியே 1000 டாலர்களை சம்பாதிக்க வேண்டுமா?,நீங்கள் நமது தளத்தின் 99,999,999 ஆவது பார்வையாளர்,மிக குறைந்த தொகையில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு என்றவ்வாறு பல விளம்பரங்கள் இருக்கும்..இவை அனைத்திலும் உள்ள ஒரு ஒற்றுமை என்னவெனில் அனைத்தும் இறுதியாக கேட்பது உனகள் கிரிடிற்காட் டெபிட் காட் பாங் எகவுன்ட் களின் விபரங்களைத்தான் அதையும் நேரடியாக கேட்காது ஒரு அப்லிகேசன் வரும் இதை ஃபில் பன்னுங்கள் என்று ஃபில் பன்னினால் நீங்கள் கோவிந்தா....

அடுத்த விடயம் இணையத்தில் அனைவரையும் முட்டாள் ஆக்கிக்கொண்டிருக்கும் முகப்புத்தகம் பற்றியது ஃபேஸ்புக்கில் நாம் ஃபான் பேஜ்களை உருவாக்கலாம் நாம் உருவாக்கும் ஃபான் பேஜ்களை விரும்புகின்றவர்கள் லைக் செய்து இணைந்து கொள்வார்கள்
நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் பிரபலமானவர்கள்,விஞ்ஞனிகள்,பிள்ளையார்,முருகன் ,மாரியாத்தா செல்லாத்தா,வீட்டு நாய் வரை பேஜ்கள் உள்ளன இவற்றை நான் தவறு என்று கூற வரவில்லை அவரவர் விருப்பம் பிடித்தவர்கள் லைக் செய்கிறார்கள் பிடிக்காதவர்கள் விட்டு செல்கிறார்கள்
ஆனால் இவற்றால் நாம் எவ்வாறு முட்டாளாக்கப் படுகின்றோம் தெரியுமா?

முக்கியமாக நடிகர்களின் ஃபான் பேஜ்களை எடுத்துக்கொள்வோம்( நான் இந்த  போஸ்ட் போட்டதே இதற்காகத்தான்)
ஒரு நபர் I like vijay /ajith என்று ஒரு பேஜ்ஜை ஆரம்பிக்கின்றார் 35 000 லைக்குகள்
அதே நேரம் அதே நபர் I hate ajith/vijay  என்று ஒரு பேஜ்ஜை ஆரம்பிக்கின்றார் 35 000 லைக்குகள் (ஒரு நடிகரை சாடி அவரை எள்ளி நகையாடல்/மிகையாக புகழ்தல் சரியா என்ற விவாதத்தை பிறகு பார்ப்போம்) இவர்களை மன்னித்துவிடுவோம்
ஆனால் ஒரு நபர்
I hate vijay mokka actor (40 000) like
I hate ajith mokka actor (40 000) like
இந்த இரண்டு பேஜ்களையும் உருவாக்கி நடத்தினால் என்ன செய்வது? இவர் ஒட்டுமொத்தமாக 80000 நபர்களை முட்டாள்களாக்கி விட்டார்(இப்படிப் பலர் கிளம்பி உள்ளார்கள்) 2 பேஜ்ஜிலும் மாறி மாறி ஒவ்வொரு நடிகர்களைப்பற்றியும் தரக்குறைவாகாப் போஸ்ட்களைப்போட்டு நம்மளை உசுப்பேத்தி அவரவர் உணர்ச்சிகளுக்கு தீனி போட்டு அவரவர் உணர்ச்சிகளைப்பயன்படுத்திக்கொள்கிறார்கள்


இதனை நாம் சிந்திக்காமல் அவரவர் விருப்பப்படி லைக்குகள் செய்து விட்டு அவர்களைத்தொடர்கின்றோம்..அவர்கள் போடும் போஸ்ட்களை ஷேர் செய்கின்றோம்...(இதனால் ஏமாந்த அனுபவம் எனக்கும் உண்டு)
அட லைக் செய்தால் கூட பறுவாயில்லி பேஜ்ஜின் அட்மின் மிக இலகுவாக உசுப்பேற்றிவிட்டுவிட்டு பார்த்துக்கொண்டிருப்பார்.இருக்கும் கெட்ட வார்த்தைகள் அம்மா ஆத்தாள் என்று சகலரையும் இழுத்து கீழே ரசிகர்கள் மோதிக்கொண்டிருப்பார்கள்.அதில் அட்மினுக்கு ஒரு சந்தோஸம்.அட பான் பேஜ்ஜா இருந்தா அந்த ஹீரோ என்னென்ன பொதுப்பணிகளை செய்தார் என்ன வசூல் என்ன அவார்ட் போட்டீங்கண்ணா பறுவாயில்லை பேஜ் ஆரம்பிப்பதே அஜித் பேஜ் ஆரம்பிச்ச அதன் நோக்கம் விஜய் பான்ஸை மொக்கையாக்கணும்.விஜய் பேஜ் ஆரம்பிச்சா அஜித்தை மொக்கையாக்கணும்.குரங்கு தொடக்கம் பிச்சைக்காரன் வரை போட்டோஸொப்பில் வந்து செல்கின்றார்கள்.அட அதை உண்மையான ரசிகன் ஒருவன் தன் ஹீரோவிற்காக செய்தால் கூட மன்னிப்பேன் ஆனால் லைக் வாங்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக?I hate vijay mokka actor ,I hate ajith mokka actor என்று ஒருவனே ஆரம்பித்து கூத்துப்பார்ப்பதைப்பார்த்தால்தான் கடுப்பேறுகின்றது.சிந்தியுங்க மக்களே.
வேறு வேறு போலி ஐ டி க்களில் பேஜ்களை உருவாக்கினால் யார் நடத்துகிறார்கள் என்பதையும் கண்டுபிடிப்பது கடினம் எனவே இவ்வாறான பேஜ்களை லைக் செய்யும் போது சற்று விழிப்புணர்வாக இருப்பது அவசியம் அவரவர் சுயலாபங்களுக்காக  நம்மை பகடைக்காய் ஆக்குவதை நாம் அனுமதிக்கக்கூடாது....

அடுத்து நாம் போலியான ஐ.டிக்களில் இருந்து கவனமாக இருக்கவேண்டும் ஃபேஸ்புக்கில் யாருடைய இடையூறுமின்றி கடலைபோடுதல் தனி சுகம் என்பதை நான் ஒத்துக்கிறன்...ஆனால் எதிர்த்தாப்புல reply செய்பவர் உண்மையில் யார் என்பது தெரியாமல் கடலை போடுவதுதான் ஆபத்தானது நமக்கு நான்றாக தெரிந்த நமது சகபாடியே ஒரு போலி கணக்கொன்றை உருவாக்கி நம்மை கலாய்க்கலாம்..ஆனால் இது நகைச்சுவையாக முடிந்தால் நல்ல விசயம்தான் ஆனால் சிலருக்கு மிகுந்த மன வேதனையையும் அளித்துவிடுகின்றது சட் டில் தொடங்கி காதலிக்க ஆரம்பித்தபின்னர் அது போலி என்று அறிந்தால்...காதலித்தவரின் பாடு கோவிந்தா..அதை உருவாக்கிய நண்பர் சர்வசாதரணமாக சாரி சொல்லிவிட்டு சென்றுவிடுவார்

என்னைப்பொறுத்தவரை இவ்வாரு மற்றயவர்களது உணர்ச்சியில் இவ்வாறு விளையாடுதலை ஒரு மனநோயாகவே கருதுகிறேன்..
ஒரேமாதிரி உலகத்தில ஏழுபேர் இருப்பாங்க எண்டு சொல்லுவாங்க அது இதுதான்


இதைத்தவிர்க்க ஒரெ வழி நமக்கு நன்றாக தெரியாதவர்களிடம் கடலைபோடுவதை தவிர்த்துக்கொள்ளல் அல்லது அது போலிதான் என்ற எண்ணத்துடன் வேண்டுமானால் நீங்கள் கடலை போடலாம்
எமக்கு வரும் request களை கண்டபாட்டுக்கு accept செய்யக்கூடாது...அப்படி செய்தால் மேலே கூறிய விடயங்கள் நடைபெறும்.அத்துடன் உங்கள் வால்லில் கண்ட படங்கள் உங்களை பற்றிய தரக்குறைவான தகவல்களை போட்டுவிடலாம் எந்தநாளும் முகப்ப்புத்தகத்தையே பார்த்துக்கொண்டிருக்க முடியாது மானம் போய்விடும்

பேக் ஐடிக்களை கண்டுபிடிப்பது பற்றிய போஸ்ட்டை பார்ப்பதற்கு இங்கே கிளிக்

இவற்றால் அதிகம் பாதிக்கப்படப்படுவது பெண்கள்தான் ..தமது ஃஃபோட்டோக்களை ஃபேஸ் புக்கில் பப்லிக் ஆக போட்டுவிடுவதல் இவ் ஃஃபோட்டோக்களை சில விஸமிகள் தமக்கு தேவையானது போல் பயன்படுத்திக்கொள்கிறார்கள்...ஃஃபோட்டோ ஷோப்பும் இவர்களுக்கு உதவியாக இருக்கின்றது..அத்துடன் இப்பொழுது பரவலாக ஃபேஸ்புக்கில் வலம் வந்துகொண்டிருக்கும் விடயம் 
ஒரு ஃபோட்டோவுடன்...இதை ஷேர் செய்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஒரு பனீஸ்(பண்) போகும் லைக் செய்தால் குழந்தைக்கு டீ போகும் என்று போட்டிருப்பார்கள்...(.இதை ஷேர் செய்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 2$ லைக் செய்தால் குழந்தைக்கு 1$ )ஆனால் நாம் லைக் ,ஷேர் செய்வதால் ஃபேஸ்புக் எந்தப்பணத்தையும் யாருக்கும் வழங்குவதில்லை....அப்படி ஒரு திட்டமும் அதனிடமில்லை வேண்டுமானால் ஒரு லைக் ஒருஷேர் இலேயே நாம் கருணாய்யுள்ளம் மிக்கவர்கள் என காட்டிக்கொள்ளமுடியும்...இவைகள் தம்மை பிரபலப்படுத்தும் மறைமுகமான விளம்பரங்கள்தான்
விட்டால் நம்மள பைத்தியக்காரனாக்கிடுவாங்க...


எனக்கு சில விடயங்கள் புரியவில்லை-
1.முகப்புத்தகத்தில் தமது பெயருக்கு பின்னால் வரும் தனது தந்தையின் பெயரை எடுத்துவிட்டு தனது ஹீரோவின் பெயரை /படத்தின் பெயரை சேர்த்துக்கொள்கிறார்கள்(தந்தை அவளவு கேவலமாக போய் விட்டாரா? தெரிஞ்சவன் பார்த்தா குடும்பத்தை பற்றிதப்பாக நினைக்கமாட்டானா?)


2.முகப்புத்தகத்தில் தமது படங்கள் இருக்க வேண்டிய இடத்தில் நடிகர்களின் புகைப்படங்களை இடுகிறார்கள்.அதை பெருமையாக நண்பர்களுடன் பீத்திக்கொள்கின்றார்கள்((((தம்மை தமக்கே பிடிக்க வில்லையா? தமது அடையாளமே தொலைக்கப்படுகின்றது தெரியவில்லையா? பெண்களை மன்னிக்கலாம் அவர்கள் தமது சொந்த படங்களை போட்டால் அவர்களுக்கு தேவையில்லாத சிக்கல்கள் வரும்)))) என்னைபொறுத்தவரை அவர்களை விட நாம் தினமும் களைத்து வீடு வரும்போது நமக்காக காத்து நின்று வாலாட்டி வரவேற்கும் நமது செல்ல நாய்க்குட்டியின் படத்தையேனும் போடலாமே...சரி விடுங்கள் அது உங்கள் இஸ்ரம்

4 comments:

 1. Replies
  1. நன்றி சகோ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

   Delete
 2. அட இதில கருத்து சொல்ல நான் தகுதியானவன் இல்லை.!
  ஏன்னா நானே பேஸ்புக்கில் சொந்த போட்டோவில் இல்லை.!!

  ReplyDelete
  Replies
  1. அவ்வளவு கடுமையாக அந்தக்கருத்தை நான் கூறவில்லை சகோ போகிறபோக்கில் ஒரு படத்தைப்போடுவதில் எந்த தவறும் இல்லை...ஹீரோக்களின் படத்தை போட்டுவிட்டு அதை ஒரு குவாலிப்பிக்கேஸனாக வெளியில் சொல்லிக்கொண்டு திரிவதுதான் வெங்காயத்தனம் என்றேன்...நீங்க யாரு?

   நன்றி சகோ

   Delete