Thursday, 1 November 2012

ஆப்கானிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்?
ஆப்கானிஸ்தான் பயணம் செல்வதற்கு பாதுகாப்பான இடமா என்றால் பதில் இல்லை என்பதுதான்.தலிபான்கள் தற்கொலைக்குண்டுகள் என்று ஆப்கானிஸ்தான் ரணகளப்பட்டுக்கொண்டிருக்கும்.இதற்குள் எவனாவது தானாக சென்று தலையைக்கொடுப்பானா?
Afghanistan has a high threat of terrorism and specific methods of attack are evolving and increasing in sophistication. No part of Afghanistan should be considered immune from violence and the potential exists throughout the country for hostile acts. Please see the Safety and Securityஇது லண்டன் கவர்மெண்டின் தளத்தில் தன் நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

ஆப்கானிஸ்தான் பற்றிய எனது பார்வையும் இவ்வாறாகத்தான்  இருந்தது.ஒரு நிகழ்ச்சியை fox traveler  என்ற சனலில் தவறுதலாக பார்த்துவிட்டேன்.ஆச்சரியம்தான் சற்றும் எதிர்பார்க்காதவிடயம் நடந்துகொண்டிருந்தது.fox traveler சனலில்  Extreme Tourist in Afghanistan என்ற நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் ஒருவர் போய் அங்குள்ள வித்தியாசமான விடயங்கள் கலாச்சாரங்கள் வாழ்க்கைமுறைகள் நம்பிக்கைகளை நிகழ்ச்சித்தொகுப்புக்களாக வழங்குகின்றார்...பள்ளிவாசலுக்குள் செல்கின்றார்..ஆனால் அவர் முஸ்லீம் அல்ல தொழுகையில் ஈடுபடுகின்றார்.. சாத்திரம் கேட்கின்றார்(குர்ரானில் சாத்திரம் பார்ப்பது தவறு என்று உரைக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன்)

அதிகப்படியான மதக்கெடுபிடிகள் இருக்கும் என்று நினைத்தேன் அங்குள்ள ராக்ஸிகளுக்கு லவ் பேர்ட்ஸ் என்று பெயராம் முழுவதுமாக மூடியிருப்பார்கள்...மூடியிருப்பதற்கும்..லவ் பேர்ட்ஸ் என்ற பெயர் வரக்காரணத்தையும் ரைவரிடம் கேட்டபோது...எமது சமூகத்தில் காதல் ஜோடிகள் சந்தித்துக்கொள்ள இடமே இல்லை. முத்தம் கொடுத்ததற்கு ஒரு காதல் ஜோடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்...ஆகவே  நாங்கள் இவ்வாறான ஏற்பாட்டை செய்கின்றோம்..உள்ளே காதல் ஜோடிகள் சந்தித்து பேசிக்கொண்டே நகரை உலாவரமுடியும்...வெளியே தெரியாது ஆனால் தற்போது பொலீஸ் அதற்கும் தடைவிதித்து விட்டது இரண்டு பக்கமும் திறந்திருக்கவேண்டும் என்று சட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்...

நான் நினைத்ததை விட ஆப்கானிஸ்தான் இயல்பாகத்தான் இருக்கின்றது.இந்த  நிகழ்ச்சிக்காக உயிரைப்பணயம் வைத்து பிரயாணம் மேற்கொள்பவரின் பெயர் Sabour Bradley.இரண்டு  டி.வி  producers  பிராட்லியை சந்தித்து ட்ரவல் சோ ஒன்றை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள்.ஆனால் அது சாதாரணமாக டி.வி நிகழ்ச்சிகளில் நடைபெறும் ஸோக்களாக இருக்கப்போவதில்லை என்று கூறப்பட்டது.யுத்தம் நடைபெற்ற நாட்டின் பிரதேசத்தின் இன்னொரு முகத்தை வெளியில் கொண்டுவரவேண்டும் என்பதுதான் இவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டவிடயம்.இன் நிகழ்ச்சி 6 பாகங்களைக்கொண்ட பிரயாணத்தொடராக வெளிவந்துள்ளது.

இன் நிகழ்ச்சி முதன் முதலில் லண்டனில் 25 January 2011 இல் ஒளிபரப்பாகியது.பின்னர் இது 150 நாடுகளில் பல்வேறு டி.வி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.National Geographic Adventure,Fox History & Traveler போன்றவற்றிலும் ஒளிபரப்பப்பட்டது.பிரஞ்மொழியில் Bienvenue Chez Les Afghans என்றவாறு ஒளிபரப்பப்படுகின்றது.இவ்வளவு பிரபல்யத்திற்கு காரணம்  உலகிலேயே மோசமான சண்டைப்பகுதியில் உயிராபத்துக்கள் நிறைந்தபகுதியில் இந்த புரோக்கிராமை செய்வதுதான்.ஆப்கான் மக்களுக்கே அங்கு பாதுகாப்பில்லை என்னும்போது வேற்று நாட்டவர்கள் கதி  அவ்வளவுதான்.அத்துடன் மதக்கெடுபிடிகள் அதிகம்.இந்த நிகழ்ச்சியைப்பார்க்கும்போது பிராட்லி ஒரு சந்தர்ப்பத்தில் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றார் அங்கு பாமியன் என்பவர்தான் அதை நடத்துபவர்.

அவர் கூறினார் நாங்கள் சில்வெஸ்ரரது ராம்போ பட போஸ்ரரை இங்கே சுவரில் மாட்டியிருந்தோம் தலிபான்கள் வந்தார்கள்.இந்த மனிதன் யார்? என்று கேட்டார்கள்.இவர் வைத்திருக்கும் ஆயுதங்களை தங்களுக்கு தந்துவிடும்படி கேட்டார்கள்.உரிமையாளர் அவர் ஒரு  வெளி நாட்டுப்பட நடிகர்  என விளக்கியும் அவர்கள் நம்பவில்லை இறுதியில் உரிமையாளர் சில காலம் சிறையில் இருக்கவேண்டியேற்பட்டது.இப்படியெல்லாம் ஆப்கானில் நடக்கும்போது.பிராட்லியின் தைரியம் மெச்சத்தக்கதுதான்.வெளி நாட்டு ஊடகவியளாளர்களுக்கு மட்டுமல்ல  ஆப்கானை சேர்ந்தவர்களுக்கும் ஆப்கான் ஆபத்தான பிரதேசம்தான்.தீவிரவாதிகளால் இல்லையெனினும் குறைந்தபட்சம் மதவாதிகளால் ஆப்பு நிச்சயம்.

நிகழ்ச்சியில் பிராட்லி ஒசாமாவின் வீட்டு முற்றத்தில் விருந்து வைத்தார்,முக்கிய போராளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்,தலிபான்களை பின் தொடர்ந்தார்,ஆப்கானிஸ்தானின் பெண்கள்  குத்துச்சண்டை டீமுடன் இணைந்து பயிற்சி எடுத்துக்கொண்டார்,Afghan death இல் மோதிக்கொள்கின்றார் இப்படி சுவாரஸ்யமாக செல்கின்றது நிகழ்ச்சி.
produced by Afghan television production company Kaboora Productions, post-produced by UK production company Speak-It Films and distributed by the UK's Target Entertainment.

அவுஸ்ரேலிய ஊடகங்களில் இந்த நிகழ்ச்சிக்கு அப்படியொருவரவேறுபுக்கிடைத்துள்ளது.அவுஸ்ரேலிய பிரபல பத்திரிகையான The Sydney Morning Herald இன் நிகழ்ச்சி "highly recommended " என  தன் கருத்தை வெளியிட்டுள்ளது.லண்டனின் Guardian நியூஸ்பேப்பரில் தலிபான்கள் பற்றிய கட்டுரையில் இன் நிகழ்ச்சி மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.அமெரிக்காவின் McClatchy news group இன் நிகழ்ச்சியை பாராட்டியுள்ளது.
BBC ,Afghan Voice Radio யும்Sabour Bradley ஐ பேட்டிகண்டுள்ளன.ஆப்கானின் சொந்த தமக்கே உரிய வெளிப்படுத்தலை வெளிக்காட்டும் நிகழ்ச்சி இது இதைப்பார்த்தால் ஆப்கான் பற்றிய எண்ணங்கள் மாறுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு.இந்த நிகழ்ச்சியில்  நான் பார்த்த ஆப்கான் எனக்கு சற்று அதிர்ச்சியை அளித்தது.


இன் நிகழ்ச்சி தொடர்பான போட்டோக்களுக்கு இங்கே கிளிக்

###############################################################################

நமீதாவை இந்தியாவின் சிறந்த அழகி என்று ஜப்பான் டி.வி அறிவித்துள்ளதாம்.....
இந்தியாவின் புகைப்படக் கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த புகைப்பட ஆல்பத்திலிருந்து நமீதாவின் ஒரு புகைப்படத்தைத் தேர்வு செய்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

என்ன கொடுமைசார் இது? இதுக்கு பறவைமுனியம்மா தேவல..கடைசி நம்ம ஐசு ஆண்டியையாவது தெரிவு செய்திருக்கலாம்....மக்களே இந்த  முகத்தை குளோசப்பில பார்த்திருக்கிறீங்களா?...ஐயையோ ஒருவேளை தூக்கி உள்ள போட்டுடுவாங்களோ......( நமீதா மேடம் இது சும்மா..உலுல்லாயி எவ்வளாஆஆஅவு பெரிய..நடிகை நீங்க)##############################################################################

50 வயது முதியவர்கள் வைத்துள்ள பானர் திரிஷாவின் பிறந்தா நாளை முன்னிட்டு .....

"ஏண்டா தகப்பா இந்த வயதில பண்ணுற காரியமாடா இது?"

2 comments:

 1. >> தாஜ்மஹால் மும்தாஜின் சமாதியா சிவன் கோவிலா << என்ற பதிவுக்கு


  பின்னூட்டகருத்து

  மீட்போம்! மீட்போம்!

  சிவபெருமானின் உறைவிடமான‌ பூலோக சொர்க்கமான திரிக்கைலாய மலையை, வத்திகனை, மக்கா, மதீனாவை, தாஜ்மஹாலை????


  தாஜ்மஹால் என்ன? கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை பீடமான இத்தாலியில் உள்ள வத்திகன் நகரமும்

  அரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனித தளங்களான மக்கா மதீனா கூட இந்துக்களுடையது தானாம். இந்துக்களின் கோயிலாக இருந்ததுதானாம்.


  Purushottam Nagesh Oak (March 2, 1917 – December 4, 2007), commonly referred to as P. N. Oak, was an Indian writer, notable for his Hinducentric brand of historical revisionism.

  Oak's "Institute for Rewriting Indian History" issued a quarterly periodical called Itihas Patrika in the 1980s.

  Oak's claims, e.g. that Christianity and Islam are both derivatives of Hinduism,

  or that the Catholic Vatican,

  Kaaba and the Taj Mahal were once Hindu temples to Shiva,[1]

  and their reception in Indian popular culture have been noted by observers of contemporary Indian society,

  who variously characterized Oak as a "mythistorian"[2] or more directly as a "crackpot".[3]

  In addition to this Oak again asserted that the Vatican was allegedly originally a Vedic creation called Vatika and that the Papacy was also originally a Vedic Priesthood.


  In his book, Some Missing Chapters of World History, Oak claimed that the first civilization was developed in India from which all world civilizations grew. He wrote books in three languages.

  சொடுக்கி.
  >>
  மெக்காவையும் , மதீனாவையும் தங்களுடையது என
  பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.
  << காணுங்கள்.

  திருக்கைலயங்கிரி என்ற தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம்.

  இது திபெத் பகுதியில் உள்ளது.

  சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட எல்லைப் பிராந்தியம்;

  `கைலாஸ் மானஸரோவர் எனும் இப்பிரதேசம்.

  பாரதத்தின் கலை - கலாசார ஆன்மீகத்துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம்.

  இதற்கு பாரதத்தில், வழங்கிய புராதனப் பெயர் `த்ரிவிஷ்டபம் (திப்பெத்).

  சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில் தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது.

  பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப் பகுதியிலிருந்துதான்.

  ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன.

  ``மூன்று தைவ சக்திகள் - அக்னி இடி மின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்;

  இப்பகுதியை `த்ரவிஷ்டபம் (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.

  மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை `த்ரதவிஷ்டபம் என்றே குறிப்பிட்டு, ஆர்ய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார்.

  கிம் புருஷவர்ஷம். கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் வர்ணிக்கிறார்.

  கைலாஸ பர்வதத்தை ``ஹேம கூடம் என்று மகாபாரதமும் `கிரௌஞ்ச பர்வதம் என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.


  ஏழாம் நூற்றாண்டிலிருந்து 1954-ல் சீனா இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முன்பு வரையில் பாரதத்தின் பகுதி போல இங்கு இந்திய யாத்திரிகள் போய் வந்து கொண்டிருந்தார்கள்

  கைலாஸ் - மானஸரோவர் பகுதியிலுள்ள மகன்ஸர் கிராமத்திலிருந்து பாரதம் 1948-க்கு முன்பு வரைக்கும் கிஸ்தி வசூல் செய்து கொண்டிருந்தது.

  1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதால் 1962-ல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்குப் பின் கைலாஸ் மானஸ ரோவர் புனித யாத்திரை தடைப்பட்டு விட்டது.

  -திரு. சௌரி எழுதிய `இந்தியாவின் கலையும் கலாசாரமும் என்ற நூல் - பக்கம் 145, 146

  பூலோக சொர்க்கம் என்று போற்றப்படுகின்ற இடம்!

  சிவபெருமான் உறைவதாகக் கூறப்படுகின்ற இடம்!

  இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நிய சீனாக்காரன் எப்படி ஆக்கிரமித்தான்? -

  சொடுக்கி >>>
  சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் ! சொர்க்க லோகமும் !! எப்போது எப்படி மீட்பது ?
  <<< படியுங்கள்

  ReplyDelete
 2. தாஜ்மஹால் என்ன? கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை பீடமான இத்தாலியில் உள்ள வத்திகன் நகரமும்

  அரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனித தளங்களான மக்கா மதீனா கூட இந்துக்களுடையது தானாம். இந்துக்களின் கோயிலாக இருந்ததுதானாம்.


  உலகனைத்தும் உள்ள அனைத்துமத வழிபாடு தலங்களும் அனைத்துமத புனித தளங்களும் இந்துமத கோயில்களின் மேல் உருவாக்கப்பட்டவைகள் என்ற இந்துத்வா காவிக‌ளின் ஓல‌த்தை கேட்டு கேட்டு ப‌டித்து ப‌டித்து புளித்துவிட்டது.

  வரலாற்றை திரித்து திரித்து
  பொய்களை திரும்ப திரும்ப கூறி திரும்ப திரும்ப எய்தி எய்தி ஜகதாள புரட்டு செய்வதில் வல்லவர்கள் இந்த‌ இந்துத்வா காவி புழுதிகள் என்று உலக‌றியும்.
  ===============================================
  Purushottam Nagesh Oak (March 2, 1917 – December 4, 2007), commonly referred to as P. N. Oak, was an Indian writer, notable for his Hinducentric brand of historical revisionism.

  Oak's "Institute for Rewriting Indian History" issued a quarterly periodical called Itihas Patrika in the 1980s.

  Oak's claims, e.g. that Christianity and Islam are both derivatives of Hinduism,

  or that the Catholic Vatican,

  Kaaba and the Taj Mahal were once Hindu temples to Shiva,[1]

  and their reception in Indian popular culture have been noted by observers of contemporary Indian society,

  who variously characterized Oak as a "mythistorian"[2] or more directly as a "crackpot".[3]

  In addition to this Oak again asserted that the Vatican was allegedly originally a Vedic creation called Vatika and that the Papacy was also originally a Vedic Priesthood.

  In his book, Some Missing Chapters of World History, Oak claimed that the first civilization was developed in India from which all world civilizations grew.
  He wrote books in three languages.

  ===========================

  இத‌ற்கு ஆய்வு ஒன்றும் தேவையில்லை.


  சீனா கைபற்றிக்கொண்ட சிவபெருமானை,
  சிவனின் உறைவிடத்தை ,கைலாஸ பர்வதத்தை, (கைலாஸ் மானஸரோவர்) திருக்கைலாய‌த்தை நோக்கி இந்துத்வாக்க‌ள் எப்பொழுது ர(த்)தயாத்திரை ந‌ட‌த்த‌ப்போகிறார்க‌ள்.?

  முதலில் 1950 வாக்கில் சீனா ஆக்கிரமித்து கொண்ட‌
  தலையாய கடவுளான‌
  சிவபெருமான் உறையும் திருக்கைலாயத்தை சீனாவிடமிருந்து இந்துத்வா காவிகள் மீட்கட்டும்.


  ReplyDelete