Monday, 5 November 2012

விசிறிவிற்கும் சிறுவன் 10 மொழிகளைப்பேசி அசத்துகின்றான்


நண்பர்கள் பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட வீடியோவில்தான் இதைப்பார்த்தேன்.ஒரு சிறுவன் சரளமாக சர்வ சாதாரணமாக மயில் தோகையினால் ஆன விசிறிகளை வெவ்வேறு  மொழிகளில் கூவி விற்றுக்கொண்டிருந்தான்.கொஞ்சம் பெரியவிடயம்தான் ஆனால் அவ்வளவு  பெரியவிடயமல்லவே இது என்று நினைத்தால்.அவன் இதுவரை எந்தப்பாடசாலைக்கும் சென்றதே இல்லை என்றொரு குண்டைத்தூக்கிப்போட்டார்கள்.


பையனின் பெயர்  Ravi Chekaliyas யூ டியூப் வீடியோ எடுக்கப்பட்ட ஆண்டு 2009.அப்போது வயது 16.பையன் Mumbai யை சேர்ந்தவன் அங்குள்ள சேரிப்புறத்தில் உள்ள Hanging garden என்ற இடத்தில் தன் வியாபாரத்தைத்தொடருகின்றான்.அவன் பேசும் 10 மொழிகள்  English, French, Spanish, Chinese, Japanese, German, Italian, Arabic, Russian and Israeli.ஏதோ திக்கித்திணறிப்பேசவில்லை ஏதோ சொந்த தாய்மொழியைப்பேசுவது போலே பேசுகின்றான் சிறுவன்.
ஆரம்பத்தில் எனக்கு ஆங்கிலம் தெரியாது மிகக்கடினமாக இருந்தது,முதன் முதலில் வன்,ரூ,த்ரீ என்று கற்றேன் பின்னர்,வன்  டொலர் ,ரூ டொலர் என்றுகற்றுக்கொண்டேன். நான் விற்கும்போது பலர் என்னைக்கேள்விகேட்டார்கள் ஹௌ மச் பிறைஸ்? இதன் மூலம் கற்றுக்கொண்டேன்.எனது சகோதரிக்கு திருமணமாகிவிட்டது அவர் தனது கணவனுடன் சென்றுவிட்டார். எனது குடும்பமும் சென்றுவிட்டது நான் எனது பாட்டியுடன் இருக்கின்றேன்.8 வயதில் இருந்தே இவற்றை விற்க ஆரம்பித்துவிட்டேன்.இங்குவரும் சுற்றுலாப்பயணிகளுடன் பேசுவதனூடாக நான் பெருமளவு கற்றுக்கொள்கின்றேன்.

குடும்பத்தில் 4 சகோகதர்கள் 1 சகோதரி. நான் உழைக்கும் பணத்தை எனது பாட்டிக்கு கொடுத்துவிடுவேன்.சிறுவன் குஜராத்தை  சேர்ந்தவன்.பாட்டியின் குடும்பத்தில் 12 அங்கத்தவர்கள்.பாட்டி வீடு வீடாக உணவுகள் சமைத்து வழங்குகிறாராம்.மொத்தகுடும்பத்தையும் சிறுவனும் பாட்டியுமே உழைத்து கவனிக்கின்றார்கள்.

குடியரசு தினத்தன்று Nirmal Nagar Ground, Mulund West இல்  40 பாடசாலைகளில் இருந்து 1000க்கு  மேற்பட்ட மானவர்களின் முன் ரவி பேசி அனைவரது பாராட்டுதலையும் பெற்றான் என்று அறியமுடிகின்றது.ரவி படித்திருந்தால் எப்படி வந்திருப்பான் என்று  சிந்திக்கதோன்றுகின்றது.அவன் படித்த அனைத்துமொழிகளுமே அவன் விசிறிவிற்கும் அயல் நாட்டவரிடமிருந்து சிறிது சிறிதாக கற்றுக்கொண்டவைதான்.வயதுக்கு மீறியதேடல் உள்ளவன் ரவி என்று தெரிகின்றது.இதை நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை மொழி புரியாத தேசத்தில் நீங்கள் மாட்டிக்கொண்டால் 3 மாதத்தில் ஓரளவிற்கு அந்த மொழிக்குப்பழக்கப்பட்டுவிடலாம் ஆனால் 10 மொழிகளை கற்கவேண்டிய அவசியம் எவருக்கும் ஏற்படாத அவசியம்.(நேவி சீல் படையணியில் இருப்பவர் வேண்டுமானல் கற்கவேண்டிய அவசியம் ஏற்படலாம்)அவன் ஆங்கிலம் கற்றுக்கொண்டது கூட பெரிய விசயமாக தெரியவில்லை.சகல மொழிபேசுவோரும் பேசவேண்டும் என்று  உலகமயமாதலால் வலிந்து கட்டாயமாக்கப்பட்ட மொழி அது.ஆனால் வேர்வாசனை அல்லாத பிறமொழிகளையும் கற்றுக்கொண்டானே அதற்கு ஒரு சல்யூட்.
எவ்வாறு கற்றுக்கொண்டான்?
இதே சிறுவன் 14 வயதாக இருக்கும்போது எப்படி பேசுகின்றான் என்று பாருங்கள்இந்தசிறுவனைப்பற்றி தேடும்போது இன்னொருவீடியோ கிடைத்தது.இன்னொரு  திறமையான சிறுவன்


1 comment:

  1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete