Thursday, 29 November 2012

படம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-03


தமிழ் சினிமா எங்கள் தமிழர்களிடையே ஏற்படுத்தியுள்ள மாய விளைவுகளை பற்றி பார்துக் கொண்டிருக்கிறோமில்லையா....?? இதன் முன்னைய இரு பதிவுகளையும் படித்து விட்டு எங்கள் வெங்காயத்தின் வாசகர்கள் சிலர் “.....நீங்கள் தமிழ் சினிமா வெறியர்களை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் சரி ஆனால் உங்கள் எழுத்தில் ஒரு காட்டம் தெரிகிறதே அதை சற்று குறைத்திருக்கலாம் ஏனெனில் இப்பதிவுகளை வாசிக்கும் உங்கள் சாதாரண வாசகர்கள் இதை வாசிக்கும் போது அவர்களையும் அல்லவா தாங்கள் ஏசுவதுபோல இருக்கிறது....“ என வினவியிருந்தார்கள்.
  
        ஆம் வாசகர்கள் கூறும் கருத்துக்களை ஒத்துக்கொள்கின்றேன் ஆனால் இப்பதிவுகளை எழுத ஆரம்பிக்கும் போதே நான் கூறியிருந்தேன் இப்பதிவு ரசிகர்களுக்கு உரியதல்ல வெறியர்களுக்கானது என்று. மேலும் அண்மையில் வெளியான பறந்து பறந்து அடிக்கும் நடிகர் ஒருவரின் படத்துக்கு நண்பர்களுடன் போக வேண்டியிருந்தது. அங்கு நடந்த கேவலம் கெட்ட சம்பவங்கள்தான் என்னை இவ்வளவு தூரம் இப்பதிவை எழுதத் தூண்டியது. [இதன் முன்னைய பதிவிற்கு இங்கே கிளிக்]

      
    அங்கு நடிகரின் படத்துக்கு பால் ஊத்திக்கொண்டிருந்த ஜட்டி தெரியும் படி அரைகாட்சட்டை அணிந்திருந்த பில்கேட்சின் மகன் ஒருவர் நடிகரின் பெயரால் படம் பார்க்க வந்தவர்களை  தான் ஆசீர்வதிப்பதாக கருதி பாலை படம் பார்க்க வந்து இருந்தவர்கள் மேலும் விசிறிவிட்டார். அப்படி பால் அபிஷேகத்துக்கு உள்ளான படம் பார்க்க போனோர்களில் நானும் ஒருவன். அதனால் ஏற்பட்ட கோபமும் இவர்களின் மூட மயக்கத்தனத்தை பற்றிய கவலையும்தான் இப்பதிவுகளை காட்டமாக எழுதுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. தயவு செய்து வெங்காயத்தின் வாசகர்கள் இதை உணர்ந்து கொண்டு பதிவிற்குள் நுழையுங்கள்.         

ஆபாசம் தந்த பணமும் ஆன்மீக வேசமும்

தமிழ் சினிமாவில் இருக்கும் 90% ஆன நடிகர்களால் போடப்படும் சண்டை முதல் கொண்டு பேசும் பஞ்வசனங்கள் வரை எதுவுமே இவர்களால் செய்யப்படுவதில்லை. இதை பற்றி போன பதிப்பில் விரிவாக பார்த்தோமில்லையா...??? அப்படி இவர்கள் செய்யும் ஒரே உருப்படியான வேலை என்னவென்றால் நாயகிகளுடன் காதல் லீலைகளை அள்ளி அள்ளி புரிவது. அது எந்தளவுக்கு உச்சமாக இருக்கிறது என்றால் தமிழ் சினிமாவில் மூத்த வயது மிகுந்த நடிகர் ஒருவர் தன் பேர்த்தியின் வயதில் இருக்கும் ஒரு இளம் நாயகியின் உச்சம் தலை முதல் உள்ளம் கால் வரை தன்னுதட்டால் அளவெடுத்து அவளின் அங்கங்களை மோர்ந்து பார்த்து ரசிகர்கள் மத்தியில் ஆபாச உணர்ச்சிகளை தாறுக்கும் மாறுக்கும் தூண்டிவிடுவார் [அந்த நடிகரின் பெயர் நாகரீகம் கருதி இங்கு தரப்படவில்லை]. இதன் விளைவாக தியேட்டர்களில் எழும் கோஷங்கள் இருக்கிறதே அடிமட்ட தூஷனங்கள் முதல் கொண்டு கேட்கேலாத வார்த்தை பிரஜோகங்களாக இருக்கும்.

               இப்படி ஆன்மிகம் எதையெல்லாம் கூடாது என்கின்றதோ அதையெல்லாம் தானும் செய்து ரசிகர்களையும் செய்யத்தூண்டி விட்டு சம்பாதித்த அந்த நடிகையின் உடல்மணம் வீசும் விபச்சாரக்காசில் தான் இவர் ஆன்மீகப் பயணம் எல்லாம் மேற்கொள்வார். இதை பார்த்துவிட்டு தியேட்டரில் கேவலமான வார்த்தைகளை கையாண்ட அதே வெறியர் கூட்டம்   தற்போது ஆன்மீக உணர்வு மேலெழும்ப  “டோய் இனிமேல் இவரை பற்றி இனிமேல் ஏதாவது கதைச்சாய் எண்டால் உடம்பில உயிர் இருக்காது. நம்மாளு எவ்வளவு பெரிய பக்திப்பழம் தெரியுமோ.....” என்று வம்பளக்க ஆரம்பித்துவிடுவார்கள். [ஆமாம் அண்ணை  பக்திப்பழம் தான் ஆனா பல காய்களை பழுக்க வைச்ச பக்திப்பழம்]  விபச்சாரி கோயிலுக்கு நெய்விளக்கு ஏத்துவதும் ஒன்றுதான் இவர்கள் இமயத்தில் தவம் செய்வதும் ஓன்றுதான். 

                ரஜனியின் நரித்தனம்


உழைப்பும் கொடுப்பும்

இவ்வாறு நாங்கள் இதை பற்றிக்கதைத்தால் இவர்களிடம் இருந்து கிளம்பும் கேள்வி இதுதான் என்ன தான் இருந்தாலும் அவர்கள் சமூகத்துக்கு செய்யும் உதவிகளை மறுக்க முடியாது அல்லவா...???
      
           எங்கட நடிகர்தான் ஆசியாவிலேயே கூடச்சம்பளம் வாங்குறார், உச்சத்துக்கு அடுத்தது எங்காளுதான் ,தம்பி நம்மாளுக்கு பின்னாலைஇருக்கிற படை தெரியுமில்லை யாருக்கு சம்பளம்கூட ?? என்றெல்லாம் ஏலம் விட்டு இவர்கள் கூறும் உச்சகட்ட நடிகரின் சம்பள காசுகளை கேட்டால் நாம நான்கு தலைமுறையா உழைச்சாலும் உழைக்கேலாத காசா ஏன் நடிகரே சொந்தமா நடிச்சா கூட உழைக்கேலாத காசா இருக்கும். 55 கோடி [55,00,00,000] ,45 கோடி [45,00,00,000], 40 கோடி [40,00,00,000], 35 கோடி [35,00,00,000] என்று கூறி இந்தப்பட்டியலை ஒரு நீட்டு நீட்டுவார்கள் பாருங்கள் ஆண்டவா சனியன் துளையாதோ என்று கத்திக்கொண்டே செத்திடலாம் போல இருக்கும். [ஆனா ஒண்டுய்யா  நடிச்சு சாகடிக்க உங்கட நடிகரால முடியுமெண்டா கதைச்சே சாகடிக்க உங்களாலை மட்டும்தான்யா முடியும்].
     
          இந்த சம்பளத்தையும் சொல்லி விட்டா அடிச்சு போடுவன் என்பது போல கதைப்பதும் இவனுகள் தான் அப்புறம் என் ஆளு அந்தப்புயலுக்கு 500,000 கொடுத்திருக்காரு இந்த நிறுவனத்துக்கு 10,00,000 கொடுத்திருக்காரு அந்த ஆயாக்கு அம்பூட்டையும் கொடுத்திருக்காரு என்று கூவுவதும் இவனுகள் தான். அரக்கப்பரக்க நாங்க போய் கணக்கை பார்த்தா 55,00,00,000 சம்பளம் வாங்கிற அதே ஆளு 500,000 ரூபா கொடுத்திருப்பாரு அப்படின்னா தன் வருமானத்திலை கேவலம் 0.0909 % வீதம் தான் கொடுத்திருப்பாரு. இதைவிட எந்த வருமானமும் இல்லாத நாம பிச்சைகாரனுக்கு 10 ரூபா கொடுக்கிறது எவ்வளவோ மேலுயா                   [தான் சம்பாதிக்காத காசையே தான் சம்பாதிச்சதா பீத்திக்கிற இந்த நாய்கர்கள் அந்த காசுலேயே சனத்துக்கு உதவ இவ்வளவு கஞ்சல் பிகு பன்னுதுகளே அரசியலுக்கு வந்து என்னத்தை கிளிக்கப்போகுதுகள் இதுக்கை இவர்கள் அரசியலுக்கு வரோனும்னுதான் இவர்களுக்கு பின்னாலை கூட்டம் திரியுதாம்]
         
             இனிமேலும் நீங்க அவர் அதை செய்தார் இதை பண்ணினார் என்று பீத்திக்கொள்வதாயின் பீத்திக்கொள்ளுங்கள் ஆனால் அவ்வசனத்துடன் யாழ்பாணத்தில் இருக்கும் பிச்சைகாரன் ஒருவன் பிச்சைகாரனுக்கு உதவுவதை விட குறைவாகத்தான் உதவுகிறார்கள் என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அவர் உழைக்கிறார் அவற்றை இஷ்டம் கொடுப்பதும் விடுவதும்

இப்படி நாங்கள் நடிகரின் உழைப்பையும் அவர் கொடுக்கும் வீதத்தையும் பற்றிக் கதைத்தால் அடுத்ததாக இந்த வெறியர்களிடமிருந்து எழும் கேள்வி இதுதான்
  
   
    இதை வினவும் பலர் உண்மையில் யதார்த்தத்தை அறிந்திருப்பதில்லை. உண்மையில் உங்கள் நடிகர் எதுவுமே உழைக்கவில்லை. உண்மையில் சச்சின் டெண்டுல்கர் ஒரு சிக்ஸ் அடித்தார் என்றால் அது அவரால் தான் அடிக்கப்பட்டது, அதே போல் பிடல் காஸ்ட்ரோ போராடுகிறார் என்றால் அந்த சண்டையில் அவர் நேரடியாக முன்னிலையில் பங்கு பெற்றிருந்தவர், ஆனால் உங்கள் நடிகர் நடித்தார் என்றால் அவரது நடிப்பின் பின்னால் எத்தனையோ வசன கர்த்தாக்களும், டூப் ஆர்டிஷ்டுகளும், ஸ்டன்ட் மாஸ்டர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரின் உழைப்பையும் தான் உள்வாங்கி தன்னால் செய்யப்பட்டது போல் அவர்களின் உழைப்புக்கும் தான் பணம் பெற்றுக் கொள்பவர்தான் நடிகர்.


  
               மேலும் படங்களில் தன் சொத்தை முழுதும் ஏழைகளுக்கு கொடுப்பது போலவும், தான் தான் இரக்க மகாபிரபு என்றும் காட்டித்தான் பணத்தையே சம்பாதிக்கிறார்கள். இந்த இரக்க உணர்வுகளுக்கும் ஆபாச நடிப்புக்களுக்கும் மதிமயங்கி பார்க்கும் மக்களின் எண்ணிக்கை கூடக்கூடத்தான் மக்களால் இவர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட அரசியல்வாதிகள் எவ்வாறு மக்களின் செல்வாக்கால் உயர்ந்து மக்களுக்கு உதவாதது பிழையோ அது போலத்தான் மக்களின் மூட உணர்ச்சிகளை பயன்படுத்தி மேலெழுந்த நடிகர்களும் மக்களுக்கு உதவித்தான் ஆகவேண்டும்.
         
             இதுவரை நடிகர்களின் போலி விம்பங்களையும் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் மாயதோற்றங்களையும் பார்த்தோம். வரும் பதிப்புக்களில் பாலூத்துவதற்கு வெறியர்கள் கூறும் காரணங்களையும் அதற்கான பதில்களையும் பார்க்கலாம்.
                   
                 
                                ..........தொடரும்.............

No comments:

Post a Comment