Wednesday, 3 October 2012

WWE ரெஸ்லிங்க் உண்மையா ?பொய்யா?-07


ஒட்டுமொத்தமாக 6 பதிவுகள் போட்டாயிற்று.இது 7 ஆவது பதிவு.அண்ணளவாக 6 வருடங்களுக்கு முன்புவரை யாழ்ப்பாணத்தில் ரெஸ்லிங்க் அவ்வளவு பிரபலமாக இல்லை.சி.டி பிளேயர்களே குறைவாகத்தான் இருந்தன.சி.டி கடைகளும் குறைவாகத்தான் இருந்தன.ஆனால் இப்பொழுது ரெஸ்லிங்கிற்கு பலர் அடிமை.எங்கு எந்த விற்பனை நிலையத்திலும் ரெஸ்லிங்க் சி.டிக்கள் கிடைக்கும்.ஜிம்களிலும் ஜோன்சீனா,ரொக் போன்றவர்களின்  போஸ்ரர்கள் வைக்கப்பட்டுள்ளன. முன்பே கூறியதுபோல் நானும் ஒரு காலத்தில் இதற்கு அடிமைதான்.சோ அடிமையானவர்களுக்கும் இந்த தொடர்பதிவு  நிச்சயம் உதவும் என்று நம்புகின்றேன்.
ஒருவர் இன்னொருவரை எப்படி  தாக்குகின்றார்?ரெஃப்ரி எமக்கு தெரியாமல் என்ன பணியை செய்கின்றார்?இரத்தம்வரும் ரகசியம் என்ன?என்பவற்றை முன்னைய தொடர்பதிவுகளில் பார்த்தோம்.
முன்னைய பதிவுக்கு இங்கேகிளிக்.

முன்னாள் ரெஸ்லிங்க் சாம்பியன் jesse ventura ஆரம்பகாலங்களில் அதாவது 1970,80 களில் ரெஸ்லிங் ஸ்ரார்கள் ஊக்கமருந்துகள் பயன்படுத்தியதை ஒத்துக்கொண்டுள்ளார்.
 jesse ventura

எங்கேயோ பார்த்தமாதிரி இல்ல அர்னோலட்  நடித்த Predator 
தமது உடலை வலுவேற்றுவதற்கும் நிறையை அதிகரிப்பதற்கும் இதைப்பயன்படுத்தினார்கள்.ஆனால் இவற்றைபயன்படுத்தியதால் ரெஸ்லிங்கிற்கு வெளி உலகத்திலும் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டார்கள்.மனதளவிலும் பாதிக்கப்பட்டார்கள் என்று  jesse ventura  கருத்து தெரிவித்துள்ளார்.
தற்பொழுது ஊக்கமருந்துகளைப்பாவிப்பது ரெஸ்லிங்கில் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.ஆனால் சில ஸ்ரார்கள் தற்பொழுதும் ஊக்கமருந்துகளை வெளிப்படையாக யாருக்கிம் தெரியாமல்பயன்படுத்துகின்றார்கள்.

Eddie Guerrero 
WWE இன் குறிப்பிட்டுக்கூறக்கூடிய ஸ்ரார்களில் ஒருவரான Eddie Guerrero  2005 இல் ஹார்ட் அட்டாக்கால் இறந்தார்.இதற்கு இவர் ஆரம்பத்தில் ஊக்கமருந்து பாவித்தமை முக்கிய காரணமாகும்.

இந்தமரணம் காரணமாக WWE இன் ஓனர் Vince McMahon சகல WWE  ஸ்ரார்களையும் பரிசோதிக்க  Jr ஐ நியமித்திருந்தார்.

நாமெல்லாம் ரெஸ்லிங்கை டென் ஸ்போர்ட்ஸிலோ அல்லது சி.டிகளில் அல்லது யூ டியூப்பில்தான் பார்ப்போல் இதனால் இதை உண்மையென்று நம்பும் வாய்ப்புகள்தான் அதிகம்.ஆனால் இதை நேரடியாகப்பார்க்கும் மக்கள் பலர் ரெஸ்லெர்ஸின் வீட்டிற்கு அருகாமையில் வாழ்கின்றார்கள்.பல பொது இடங்களில் இவர்களைக்காண்கின்றார்கள்.ரெஸ்லிங்கில் ஒருவருக்கொருவர் எதிராக இருந்துமோதுபவர்கள் நிஜத்தில் கட்டிப்பிடித்துக்கொண்டு பலமா சிரித்துக்கொண்டு வீதியால் சென்றால் WWEஇன் நிலை என்ன ஆகும்? உயிர் ரசிகன் என்ன செய்வான்?இதனால்தான் ரெஸ்லேர்ஸ் வெளியிலும் ஒருவரை ஒருவர் சந்தித்தால் மூஞ்சையை தூக்கிவைத்துக்கொள்வார்கள்.கடைகளிலும் WWE  இன் கமராவிற்கு முன்பாக மோதிக்கொள்வார்கள்.பொலீஸ்வந்து கைது செய்யும்.இவை எல்லாம் ரசிகர்களுக்கு WWE உண்மை என்று நம்பவைப்பதற்கான முயற்சிகள்.


ரெஸ்லிங்கில் சில வார்த்தைகள் பயன்படுத்தப்படும்.ரெஸ்லேர்ஸால்,கொமெண்டேட்டர்களால் பயன்படுத்தப்படும் அவ்வாறான வார்த்தைகள்.


Smark -ஒரு ரசிகன் உண்மையில் ரெஸ்லிங்க் என்றால் என்ன என்ன நடைபெறுகின்றது என்று தெரிந்துகொண்டு ரெஸ்லிங்கை ரசிப்பானாக இருந்தால் அவனை இப்பெயர்கொண்டுதான் அழைப்பார்கள்.

House show -ஓளிபரப்பப்படாத ரெஸ்லிங்க் இவன்ற்கள்

Promotion -ரெஸ்லிங்கில் ஒன்றாக இருக்கும் குரூப்

Face -ரெஸ்லிங்க் ஸ்ரார் ஒருவர் மிகவும் நல்லவராகவும்,மற்றயவர்களுக்கு முன்மாதிரியாகவும்,ரசிகர்களால் நேசிக்கப்படுபவராகவும் இருந்தால் அவரை இப்படி அழைப்பார்கள்.
Heel-ரசிகர்களால் வெறுக்கப்படுகின்ற வில்லன் காரக்ரர்கள்.

Sell -ரெஸ்லிங்க் மூவ்களை மிகவும் உண்மையானதோற்றத்திலும்,வலியை ஏற்படுத்துவது போன்று  செய்பவர்.

Squash - ரெஸ்லிங்கில் தோற்கடிக்கமுடியாதவராக இருப்பவர்.

Job -வேறொரு ரெஸ்லருக்கு உதவி செய்பவர்.

ரெஸ்லிங்க் சட்டங்களில் பொதுவானது மச்களில் பெரும்பாலனவை அதிகபட்சம் 20 நிமிடங்களில் முடிந்துவிடவேண்டும்.ஒரு ரெஸ்லர் இன்னொரு ரெஸ்லரை வெற்றிபெறுவதற்கு விதிமுறைகள் உள்ளன. pinfall  என்றவார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள்.வீரரின் தோளை 1,2,3 என்று எண்ணும்வரை மேடையில் இருந்து எடுக்காமல் ஒரு வீரர் வைத்திருந்தால் அவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
மச் களில் "one-fall" அல்லது  "three-fall" என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள்."one-fall" என்றால் 3 கவுண்ட்களுக்கு தோளை அழுத்தி வைத்திருந்தால் போதும். "three-fall" என்றால் இவ்வாறு 3 இல் 2 தடவைகள் தோளை அழுத்தி மேடையில் வைத்திருக்கவேண்டும்.
ரெஸ்லேர்ஸ் submission என்ற முறையினாலும் தோற்கடிக்கப்படுவார்கள்.வலியை ஏற்படுத்தக்கூடிய சில லொக் களை பயன்படுத்தும்போது.பாதிக்கப்படும் ரெஸ்லேர்ஸ் கையை மேடையின் மீது 3 தடவைகள் தட்டினால்போதும்.
வேறு முறைகளாக.ரெஸ்லர் ஒருவர் மயங்கிவிழுந்தால் அல்லது உடல் நிலை சரியில்லாது போதல்.டிஸ்குவாலிஃபட் ஆதல் இவற்றால் வெற்றிகள் தீர்மானிக்கப்படும்.இவை அனைத்துமே ஸ்கிரிப்ட் என்பது வேறுகதை.

ரெஸ்லிங்கில் உள்ள அனைத்து மூவ்களையும் அறிவதற்கு இங்கே கிளிக்.

ரெஸ்லிங்க் வரலாற்றிலேயே மிக மோசமான மரணவலியை ஏற்படுத்தும் சில மூவ்கள்.தயவு செய்து இவற்றை முயற்சி செய்துபார்க்கவேண்டாம்.முயற்சிமரணத்திலும் முடியலாம்.
இதே லொக்கை ஒருவருக்கு போட்டால் அவரது சவுண்ட்பொக்ஸ் உடைந்து மூச்செடுப்பது கடினமாகி இறந்துவிடுவார்,வாயால் இரத்தம் பீறிடும்.
இது முதுகெலும்பை மிகவும் பாதிக்கும்


ரெஸ்லிங்க்கிலேயே மிகவும் ஆபத்தான பினிஸ்ஸிங்க்  ஸொட்கள்.இவற்றைமுயற்சி செய்தல் ஆபத்தானது .ரெஸ்லிங்கில் காட்டப்படும் மூவ்களைப்பார்த்து மேற்கொள்ளப்படுவதால் பல மரணங்கள்  அமெரிக்காவில் வருடாவருடன் ஏற்படுகின்றது.இதனால்தான் ரெஸ்லிங்கின் இடையிடையில் இவற்றைமுயற்சி செய்துபார்க்கவேண்டாம் என்று ஒவ்வொரு ரெஸ்லேர்ஸாலும் அறிவுறுத்தப்படுகின்றது.தொடரும்.....

2 comments:

  1. ஒருக் காலத்தில் இவற்றை வெறித்தனமாக ரசித்தது உண்டு !!! ஆனால் இவையாவும் பொய் என தெரிந்த பின் ஆர்வம் போய்விட்டது,

    ReplyDelete
    Replies
    1. ம்ம் எனக்கும் அப்படித்தான் நன்றி சகோ

      Delete