Saturday, 13 October 2012

பவர் ஸ்ராரின் ஜெயில் அனுபவங்கள்...அடுத்து முதல்வர் பதவி?(power star )


பவர் ஸ்ராரை அண்மையில் கைது செய்த அதிர்ச்சிகரமான நிகழ்வு நினைவிருக்கலாம் அது ஒரு கருப்பு தரித்திரம் சாரி சரித்திரம்.ஒரே ஒரு பேட்டியில் ஆட்சியைப்பிடித்தவர் முதல்வன் அர்ஜுன் என்றால் பவர் கோபினாத்தின் ஒரே ஒரு நிகழ்ச்சியில் உலக லெவலில் பிரபலமாகிவிட்டார்.அதுவரை கோபியை பேசாமல் விட்ட பேஸ்புக் நீயா நானா வில் பவரை கேட்ட கேள்வியால் ஐ கேட் கோபினாத் என்று பேஜ்களை உருவாக்கத்தொடங்கியிருந்தார்கள்.  நீயா நானாவுடன் நிற்காது அது இது எது என்ற நிகழ்ச்சிக்கும் பவரை அழைத்து விஜய் ரிவி   டி.ஆர்.பி பார்த்தது.
பவர்ஸ்ரார் சீனிவாசன் பலரிடம் கடன் பெற்றுத்தருவதாக கூறி லட்ச லட்சமாக பணம் வாங்கி மோசடி செய்தார் என்று கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம்  பொலீஸார் இ.பி.கோ 420,406 பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.இது ரசிகர்களுக்கு கிடைத்த முதல் ஹார்ட் அட்டாக்

அடுத்து இடையிடையில் கைது செய்யப்பவ்வ பவரைப்பற்றி செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன....போலீஸ்விசாரனை என்றதும் ரசிகர்கள் ஆடிப்போய்விட்டார்கள்

பவர் ஸ்ராரிடம் போலீஸார் விசாரனை உண்மையில் நடந்தது என்ன?

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி; தோல் தொழில் செய்து வருகிறார். கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையைச் சேர்ந்த சீனிவாசன், 50. இவர், லத்திகா என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்தார். தோல் தொழிலை விரிவுப்படுத்த பாலசுப்ரமணிக்கு, 10 கோடி ரூபாய் தேவைப்பட்டது. நண்பர் ஒருவர் மூலம் சீனிவாசனை சந்தித்தார். 10 கோடி ரூபாயை, தனியாரிடம் வாங்கித் தருவதாக சீனிவாசன் கூறினார். கடன் வாங்கிக் கொடுக்க, 50 லட்சம் ரூபாய் முன்பணமாக வேண்டுமென சீனிவாசன் கேட்டார். அத்தொகையை, ஒரு தவணையாகத் தராமல், நான்கு தவணைகளில் பாலசுப்ரமணி கொடுத்தார். மேலும், 15 லட்சம் ரூபாயை கணக்கில் வராமல் தர வேண்டுமென, சீனிவாசன் கேட்டார்.
10 கோடி ரூபாய் கிடைக்கும் ஆசையில், ஒட்டுமொத்தமாக 65 லட்சத்தை சீனிவாசனிடம் கொடுத்தார். அதில், 50 லட்சத்திற்கு மட்டும் சீனிவாசன் ரசீது கொடுத்துள்ளார். கடைசி தவணையாக வாங்கிய 15 லட்சத்திற்கு ரசீது கொடுக்கவில்லை. 10 கோடி ரூபாய்க்கான வரைவு காசோலையை பாலசுப்ரமணியிடம் காட்டிய சீனிவாசன், அத்தொகையை வங்கியில் மாற்றித் தருகிறேன் என, நம்பிக்கை தெரிவித்தார். கடன் தொகையை பெற்றுத் தராமல் சீனிவாசன் ஏமாற்றினார். பாலசுப்ரமணி, பல முறை அவரது அலுவலகத்திற்கு அலைந்தும், சீனிவாசனை சந்திக்க முடியாமல் திரும்பினார். அன்றாடச் செலவுக்கே பணம் இல்லாமல் சிரமப்படும் நிலைக்கு பாலசுப்ரமணி தள்ளப்பட்டார்.

பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு சீனிவாசனை சந்தித்த பாலசுப்ரமணி, எனக்கு நீங்கள் 10 கோடி ரூபாய் கடன் வாங்கித் தர வேண்டாம். நான் கொடுத்த 65 லட்சம் ரூபாயை திருப்பித் தாருங்கள் என, கேட்டார். அப்போது, பாலசுப்ரமணியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்த சீனிவாசன், போலீசுக்கு போனால் தொலைத்து விடுவேன் என, மிரட்டினார். இது குறித்து, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் பவானி ஈஸ்வரியிடம், கடந்த ஜூலை மாதம் புகார் கொடுத்தார். போலீசார், வழக்கு பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டனர். தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு அலைந்த பாலசுப்ரமணி, பல முறை துணை கமிஷனரை நேரில் சென்று பார்த்து, தான் பாதிக்கப்பட்டதை விவரித்தார். அதையடுத்து, கடந்த மாதம் 24ம் தேதி, கீழ்ப்பாக்கம் போலீசார், மோசடி மற்றும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்தனர். அதை தெரிந்து கொண்ட சீனிவாசன், தலைமறைவானார்.
சீனிவாசன், , ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்கும் தகவல், போலீசாருக்கு கிடைத்தது. சீனிவாசனை, மோசடி வழக்கில் போலீசார் அங்கு கைது செய்தனர். வாங்கிய பணத்தைக் கொடுத்து விடுகிறேன்; மூன்று மாதம் அவகாசம் கொடுங்கள் என, போலீசாரிடம் சீனிவாசன் கூறி வந்தார். புகார்தாரரான பாலசுப்ரமணி, சீனிவாசன் ஒரு ஏமாற்று பேர் வழி. அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுங்கள். அவரை வெளியே விட்டால், என்னை அடியாட்களை வைத்து தாக்குவார் என, கூறினார். சீனிவாசனை, , எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.....
இவ்வாறு பவர் கைது செய்யப்பட்டார்...பவரின் கைது பவரின் ரசிகர்களை மிகுந்த கொந்தளிப்புக்கு உள்ளாக்கியிருந்தது.பேஸ்புக்கில் பொலீஸை பிளந்து கட்டிவிட்டார்கள்.பவரின் வளர்ச்சி பிடிக்காமல் பலரது சதி பின்னணியில் இருப்பதாக ரசிகர்கள் சந்தேகப்பட்டார்கள்.அந்த சந்தேக லிஸ்டில் முதல் பெயராக இருந்த பெயர் ரஜனிகாந்த்...அடுத்த பெயருக்கும் 1 ஆம் இலக்கம் இடப்பட்டிருந்தது ....சாம் அண்டர்சன்..

கைது செய்யப்பட்ட காணொளி
"கடவுள்ரா" தலைவா உனக்காக உயிரைக்கொடுப்போம் கவலப்படாத" என்ற கூச்சல்களுடன்...கைது செய்யப்பட்ட பவர்ஸ்ராரை பேட்டி எடுத்தபோது பவர் தனது ஜெயில் அனுபவங்களை பெருமையுடன் பகிர்ந்துகொள்கின்றார்....

என்னடா நாராயணா சட்டை இல்லாம வாறா
உள்ள ஒரே புழுக்கம் ஆமா நீங்க எங்க இங்க

அட அரசியல்வாதிங்க எண்டாலே தியாகிங்கதானே...இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்திலவரும் எனக்கு சிலை வைப்பாங்க ஸ்ருடன்ஸ் ரோட்டில நிப்பாங்க....

கைதுக்குப்பின்
கீழே உள்ளது விகடனில் இருந்து...


'பவர் ஸ்டாரை சினிமாவில பார்த்திருப்பீங்க, ஃபங்ஷன்ல பார்த்திருப்பீங்க, 'நீயா நானா’வில கோபிநாத் கொஸ்டீன் கொக்கிபோட்டுப் பார்த்திருப்பீங்க, பவர் ஸ்டாரை ஜெயிலிலே பார்த்திருப் பீங்களா?’ என்று நாமாகவே ஒரு பஞ்சர் பஞ்ச் சொல்லும் படி ஜெயிலுக்குப் போய் வந்திருக்கிறார் பவர் ஸ்டார். எடுத்த எடுப்பிலேயே,

ஜெயிலுக்குப் போய் வந்தவர் கள் எல்லாம் என்ன சொல்வார் களோ, அதே வார்த்தைகளோடு ஆரம்பித்தார் சீனிவாசன்.

''கோர்ட்ல கேஸ் நடந்து கிட்டிருக்கு. அதனால அதைப் பத்தி ரொம்பப் பேச முடியாது. ஆனா, ஒரு விஷயம்... யாரோ என் வளர்ச்சி பொறுக்காம சதி பண்றாங்க. அது சினிமாக்காரங்களா, கூட இருக்குறவங் களானு தெரியலை... எந்த சதியா இருந்தாலும் சட்டத்துக்கு முன்னாடி நான் ஒரு அப்பாவினு நிரூபிப்பேன்!''
'ஆமா, ஜெயில் அனுபவம் எப்படி இருந்தது?''
'2,000 பேர் உள்ள இருந்தாங்க. என்னைப் பார்த்ததும் 'பவர் ஸ்டார், பவர் ஸ்டார்’னு உற்சாகம் ஆயிட் டாங்க. நானும் உற்சாகம் ஆயிட்டேன். ஆனா ஒண்ணுங்க, என்னோட படத் துக்கு ஜெயில் சீன் எப்படி வைக்கணும்கிறதைக் கத்துக்கிட்டேன்!''
''ஜெயிலுக்கு எல்லாம் போய்ட்டு வந்துட்டீங்க, அப்போ அடுத்து அரசியல்தானே?''
'எனக்கு அந்த மாதிரி ஆசை எல்லாம் இல்லை. இறைவனுடைய அமைப்பு நான் முதல்வர் ஆகணும்னு இருந்ததுனா, ஆக வேண்டியதுதான். ஆனா, எனக்கு சூப்பர் ஸ்டார் மாதிரி ஆகணும்னுதான் ஆசை!''
' 'கண்ணா லட்டு திங்க ஆசையா’ படத்துல நடிக்கிறீங்களா, இல்லை, தூக்கிட்டாங்களா?''
''அட, நீங்க வேற. 'அது வேற இது வேற’னு சொல்லிட்டாங்க. சந்தானம் கூப்பிட்டுப் பேசினாரு. 'ஒண்ணும் பிரச்னை இல்லைண்ணா.  அடுத்த மாசம் வாங்கண்ணா’னு சொன்னாரு. அந்தப் படத்துல மூணு ஹீரோவில நான் ஒரு ஹீரோ!''
''அப்போ ஷங்கரோட 'ஐ’ படத்திலயாவது உங்களைத் தூக்கிட் டாங்களா, இல்லையா?''
''நீங்க ஏங்க அதிலேயே குறியா இருக்கீங்க? 'ஐ’ படத்துக்கு நான் ஷூட்டிங் முடிச்சே கொடுத்துட்டேன். ஷங்கர் நல்லா எனக்கு கோ ஆபரேட் பண்ணினாரு. 'நானும் உங்க ஃபேன்தான்’னு சொல்லி என்னோட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டார் ஷங்கர்!''
'சினிமாவில உங்களுக்குப் போட்டி யாரு?'
''வேற யாரு, சூப்பர் ஸ்டார்தான்!''
''அவரை நேர்ல பார்த்திருக்கீங் களா?''
''பார்த்திருக்கேன். ஆனா, பேசுற வாய்ப்பு கிடைக்கலை. ஆனா, கமலை மட்டும் பார்த்துப் பேசி போட்டோ எடுத்துகிட்டேன்.  ஒரு ஃபங்ஷன்ல என் ரசிகர் எல்லாம் அவர் முன்னாடி ஆரவாரம் பண்ணினப்ப அவருக்கு ஒரே சந்தோஷம்!''
''பவர் ஸ்டாருக்கு ஏத்த ஜோடி யாரு?''
''ஐஸ்வர்யா ராய்தான்!''
''ஏங்க, அவங்களுக்குக் குழந்தை எல்லாம் பிறந்துடுச்சுங்க...''
'அதனால என்னங்க? சினிமாவிலதாங்க ஜோடி சேரப் போறேன். ஒரு தடவையாவது அவங்களோட நடிச்சிடணும். ஆனா ஒண்ணு அவங்க, கதைக்குத் தகுந்த கதாநாயகியாக இருக்கணும். இல்லைனா ஐஸ்வர்யா ராய்னாலும் நோதான்!'.
''பவர் ஸ்டார்ங்கிற முறையில பவர் கட்டைப் பத்தி என்ன நினைக் கிறீங்க?''
'நாம மின்சாரத் தேவை அளவுக்கு இன்னும் மின்சாரம் உற்பத்தி ஆகலைனுதான் நினைக்கறேன். ஆனா, அம்மா பிரமாதமா ஆட்சி பண்ணிட்டு இருக்காங்க. அதனால எல்லாத்துக்கும் சீக்கிரம் கரன்ட் கொடுத்துடுவாங்கனு நம்பறேன்!''
''உங்க தொல்லை ஃபேஸ்புக், ட்விட்டர்லயும் தாங்கலையே...?''
'இதுல ஆச்சர்யம் என்னன்னா நான் எதுலயுமே இல்ல. என் ஃப்ரெண்ட்ஸ் சொல்லித்தான் எனக்கே தெரியும். காலேஜ் பசங்க நிறைய பேர் என்னோட ஃபேன்ஸ். அவங்க என்மேல வெச்சிருக்கிற பாசத்துல அவங்களாவே அக்கவுன்ட் ஆரம்பிச்சிட்டாங்க!''
'ஓப்பனா சொல்லுங்க, நீங்க வில்லனா... இல்லே காமெடி பீஸா?'
''ஒரே வார்த்தையில சொல் லணும்னா....நான் ரொம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்லவன் சார்!''
நா.சிபிச்சக்கரவர்த்தி

No comments:

Post a Comment