Monday, 1 October 2012

அடையாளம்-நீயா நானா கோபிநாத்(neeya naana gobinath)


பல புதிய நிகழ்ச்சிகளை  அதற்கே உரியபாணியில் தனித்துவமாக அறிமுகப்படுத்துவதில் விஜய் டி.வி வெற்றிகண்டுள்ளது.மக்களிடம் வரவேற்பைப்பெற்ற எந்த புதிய நிகழ்ச்சியையும் முதலில் விஜய் ரி.வி அறிமுகப்படுத்திவிடும்.பின்னர் ஏனைய டி.விக்கள் நிகழ்ச்சிகளை கொப்பி செய்யத்தொடங்கிவிடும்.இதன் உச்சக்கட்டம் நீயா நானாவை பேஸ்பண்ணி கலைஞர் டி.வியில் கருத்து யுத்தம் என்ற ஒன்றை ஒளிபரப்பி மொக்கைபோட்டார்கள். நடந்தது என்ன-நம்பினால் நம்புங்கள் என்று மாறியது(இதில் மிக உச்சக்காட்சி நோக்குவர்மத்தைப்பற்றி போட்டார்கள்...6 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் குரு நோக்குவர்மத்தால் சிஸ்யர்களை வீழ்த்துவார்....ஏலே ஆண்டியப்பா....தயவு செய்து இதே கலையால் ஒபாமாவையும் வீழ்த்திவிடுங்கள்).இப்படி பல நிகழ்ச்சிகள் கொப்பி செய்யப்பட்டுள்ளன.

நடந்தது என்ன?நீயா நானா?ஜோடி நம்பர் வன்,உங்களில் யார் அடுத்த  பிரபு தேவா?,கலக்கப்போவது யாரு?அது இது எது பெரிதினும் பெரிது கேள்,சூப்பர் சிங்கர் என்று மக்களிடம் வரவேற்பைப்பெற்ற பல நிகழ்ச்சிகளை வழங்கிய பெருமை விஜய் டி.விக்கு உண்டு.இன்றைய நிலையில் கருத்தாக்கத்துடன் கூடிய பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்குவதில் முன்னனி விஜய் டி.விதான்.

விஜய் டி.வி மக்களிடம் முன்னணியில் இருந்தால் கூட அதிகப்படியான விமர்சனங்களை சந்திப்பதும் விஜய் டி.விதான்.இது விஜய் டி.விக்கு தோல்வியல்ல வெற்றிதான்.மக்களால் அதிகம் பார்க்கப்படும் விரும்பப்படும் கவனிக்கப்படும் விடயங்கள்தான் அதிக விமர்சனங்களுக்குள்ளாகும்.

விஜய் டி.வி அறிமுகப்படுத்திய கலைஞர்கள்தான் இன்று பல துறைகளில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.மிகப்பொருத்தமான உதாரணம் சந்தானம்.சந்தானம் ஒரு காலத்தில் லொள்ளுசபாவில் கலக்கியவர்தான்.

இதை சந்தானத்துடன் நிறுத்திக்கொள்ளமுடியாது பெரிய லிஸ்டே இருக்கின்றது.சிவகார்த்தி கோபிநாத்,மாகாபா,சின்மயி,நண்டு ஜெகன்,ஜீவா,ரம்யா,தீபக்,திவ்யதர்ஸினி,பாவனா இந்த லிஸ்ட் இன்னும் நீள்கின்றது.இவர்களை எல்லாம் உலகிற்கு அறிமுகப்படுத்தியது விஜய் ரி.விதான்.இவர்களது திறமைகளை வெளிப்படுத்த சரியான தளங்களை அமைத்துக்கொடுத்திருக்கின்றது விஜய் டி.வி.

விஜய்யின் இன்னொரு வித்தியாசமான நிகழ்ச்சிதான்"அடையாளம்".இன் நிகழ்ச்சியில் இவ்வாறு விஜய் டி.வி மூலம் அறிமுகமாகி தமது திறமைகளை உலகிற்கு வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம்பிடித்த பிரபலங்கள் தம் வெற்றிப்பயணத்தை விஜயினூடாக பகிர்ந்துகொள்கின்றார்கள்.9/29 இல் அடையாளம் நிகழ்ச்சியில் ஸ்பெஸல் என்னவென்றால் அன்றைய நிகழ்ச்சியில் தமது பயணப்பாதையை பகிர்ந்துகொள்ள கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜய் டி.வியின் அடையாளமாகிவிட்ட கோபிநாத்.

கோபிநாத் எவ்வளவு பிரபலமோ அந்த அளவிற்கு இணைய உலகில் சர்ச்சைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றார்.கோபிநாத் நிகழ்ச்சித்தொகுப்புக்களை வழங்குவதில்,நீயா நானா நிகழ்ச்சிகளில் கமராவுக்கு பின்னான கோபிநாத் என பல குற்றச்சாட்டுக்கள் உலா வருகின்றன.முக்கியமாக ஒரு முறை நீயா நானாவிற்கு பவர்ஸராரை அழைத்திருந்தார்கள் அந்த நிகழ்ச்சியின் பின்னர் கோபியை சமூகவலைகளில் பிளந்துகட்டிவிட்டார்கள்.

நீயா நானாவில் கோபினாத்தை திணறடித்த பவர்ஸ்டார்

இவ்வளவு ஏன் ஒரு முறை கோபிநாத் தண்ணியடித்துவிட்டு ஒரு பாடசாலை நிகழ்ச்சிக்கு பங்குபற்றினார்கள் என்று கூட குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருந்தன.


எது எப்படி இருந்தாலும் பிரபலம் என்று ஆகிவிட்டால் சர்ச்சைகளும் கூடவே வந்து அமர்ந்துகொள்ளும் என்பது இயற்கை.எது எப்படி இருந்தாலும் கோபி தன் மீது எறியும் கற்களை மயில்கற்களாக்கி தன் பயணத்தைதொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றார்.கோபி பற்றிய அறிமுகம்...அவர் வெளியிட்ட புத்தகங்கள் வாங்கிய அவார்ட்கள் பற்றியவிபரங்கள் மேலே காட்டப்பட லிங்கிலேயே இருக்கின்றன...


வாருங்கள் நிகழ்ச்சிக்கு செல்வோம்....

ஆரம்பத்தில் கோபியை காரில் அழைத்துவருகின்றார்கள்....நிகழ்ச்சி ஆரம்பமாகின்றது....

பேச்சு என்பது ஓர் கலை அது அடுத்தவரை மயக்கும் மகிழ்ச்சிப்படுத்தும் எரிச்சலூட்டும் பேச்சு பெரிய சக்தியுடையது....

ஒருவருடைய பேச்சுத்திறமை பலருடைய வாழ்க்கையில் புத்துணர்ச்சியையும் தன் நம்பிக்கையையும் தரும் என்பதை நிரூபித்தவர்.தன் எழுச்சி மிகுந்த கம்பீரமான தோற்றத்துடன் நல்ல பல கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விஜய் தொலைக்காட்சியின் கேள்விக்கணையாகத்திகழ்பவர் நீயா நானா கோபிநாத் தமிழ் மக்களின் பொழுதுபோக்கு அடையாளமாக அமையும் உங்கள் விஜய் தொலைக்காட்சியில்  தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர் நீயா நானா கோபிநாத்.

உலகத்தமிழர்களை எல்லாம் தன் தமிழ் உச்சரிப்பினால் கவர்ந்திழுத்த இவர் நாம் தமிழர் என்று பெருமைப்பட்டுக்கொள்ள ஒரு முக்கிய காரண கர்த்தா விஜய் தொலைக்காட்சி கோபினாத்.

அரங்கத்தினுள் கோபி அழைத்துவரப்படுகின்றார்....

கோபி தன் அனுபவத்தைப்பகிர்ந்துகொள்ள ஆரம்பிக்கின்றார்....

ஒரு நிகழ்ச்சியாக விஜய் டி.வி யில் எனது முதலாவது அடையாளமாக அமைந்தது மக்கள் யார் பக்கம்
எடுத்த உடனே ஒரு ஆங்கருக்கு இப்படியான நிகழ்ச்சி கிடைப்பது ஒருவித அதிஸ்ரம் என்றுதான் கூறவேண்டும்...
எப்பவுமே ஒரு டெலிவிஸனைப்பொறுத்தவரைக்கும் சினிமா அண்ட் பொலிக்டிக்ஸ் இரண்டுக்குமே கூடிய முக்கியத்துவம் இருக்கும்..
பார்வையாளர்கள் அதிகமாக இருப்பாங்க...
சின்ன வயசிலேயே ஒரு பெரிய பொலிட்டிக்கல் ஸோவை நடத்துவதற்கான வாய்ப்பு ஒன்று கிடைத்தது.அந்த நம்பிக்கை விஜய் டி.விக்கு இருந்தது ரொம்ப மகிழ்ச்சியான விசயம்..

தமிழ் நாட்டினுடைய மிகப்பெரும் தலைவர்கள் எல்லோரையும் வன் டு வன் இன்டெர்வியூ பண்ணுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைச்சுது...ஒரு பெரிய ரீம் எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க...

நிறைய விமர்சனங்களுக்கு இருந்தாலும் கூட இவை எல்லாவற்றையும் தாண்டி விஜய் டி.வி ஒரு நியூட்ரல் பிளாட்போம் என்கிறதால கூடுதல் கவனத்தோட கவனிக்கப்பட்டது காரணம் நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய அந்த காலப்பகுதி என்கிறதால

///ரஜனி- நதி நீர் இணைப்பு அத செஞ்சே ஆகணும் நாளைக்கே எனவுன்ஸ் பண்ணுங்க நானு என் பாக்கட்டில இருந்து ஒரு கோடி ரூபா  என் பாக்கட்டில இருந்து குடுக்கிறன்.....//

அழகியின் அழகான சில தருணங்கள் செல்கின்றது...

ரொம்ப கஸ்ரப்பட்டு பண்ணின ஒரு ஸோ இன்பாக்ட் எமோஸனலாயும் அந்த ஸோ இருக்கும் அதே நேரம் அங்கருடைய ரோல் மாறிக்கிட்டே இருக்கும் சில இடத்தில பனியா இருக்கணும் சில இடத்தில பிரண்ட்லியா இருக்கணும் சில இடத்தில ரொம்ப ஸ்ரிட்டா இருக்கணும்.அங்கராக பல பரிமாணங்கள் எடுக்கவேண்டிய ஸோ அது.
எனக்கே பல டைமென்ஸன அது கற்றுக்கொடுத்தது.


சிகரம் தொட்ட மனிதர்கள்,சிகரம் தொட்ட தமிழர்கள் இது இரண்டும் என் கரியர்ல மறக்கமுடியாத ஸோஸ் அப்படின்னு சொல்லலாம்...

தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய தமிழர்கள் பல துறைகளில் சாதித்த தமிழர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அவங்க எழுதின புத்தகங்கள நாம படிச்சிருப்பம் அவங்க பேச்சுக்களைக்கேட்டிருப்பம் ஆனா அவங்க கூட புல்லா ஒரு நாள்பூரா ட்ரவல் பண்ணுற வாய்ப்பை ஸோ உருவாக்கிக்கொடுத்தது.

சிலரைப்பார்க்கிறபோதே வாழ்க்கையில் உயரவேண்டும் என்கிற எண்ணம் பீறிட்டுவரும்...இப்போது நாம் சந்திக்கப்போகும் மனிதரும் அப்படித்தான் ஒரு தேனிக்குரிய சுறு சுறுப்போடு இன்றளவும் வீறு நடை போட்டுவருபவர்.ஒரு  நீண்ட அரசியல் பயணம் அந்த பரபரப்பான அரசியல் பயணத்திலும் தான் காதலிக்கும் இலக்கியத்தை இவர் ஒரு போதும் கைவிட்டதில்லை..தமிழ்சமுதாயத்தின் அடையாளம் இவர்.

(காலை நடைப்பயிற்சியின்போது கலைஞரை சந்திக்கின்றார் கோபிநாத்)
சிகரத்தை  நோக்கி நீங்கள் அடி எடுத்துவைக்க அடிப்படையாக அமைந்தது எது?

சுய மரியாதை உணர்வுதான்....

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பார்த்தவரை திருப்புமுனை என்று எதை நீங்கள் கருதுகின்றீர்கள்

திருப்புமுனை என்று கருதுவது தந்தை பெரியாரை சந்தித்தது....தொடர்ந்து அறிஞர் அண்ணாவை சந்தித்தது...இரண்டும்தான் என்னுடைய வாழ்க்கையிலே அரசியல் ரீதியான திருப்பு முனையாகும்...

இன்னைக்கு கூட என் மனதுக்கு மிக நெருக்கமான ஸோவா நா சிகரம் தொட்ட மனிதர்களையும் சிகரம் தொட்ட தமிழர்களையும் சொல்லுவன் ஏன்னா அதுக்காக நாங்க நிறைய இடங்களுக்கு ட்ரவல் பண்ணி இருக்கம். வெவ்வேறு மானிலங்களுக்கு பயணம் செய்திருக்கோம்..
 நிறைய நெருக்கடியான சூழல்களை சந்திச்சிருக்கம்.12 மணி நேரம்  20மணி நேரம் 25 மணி நேரம் எல்லாம் எப்ப அவர் வெளியேவருவார் என்னு காத்துக்கிட்டிருந்திருக்கோம்..இதெல்லாம் தாண்டித்தான் அவுட் புட் வருது என்னு பாக்கிறவங்களுக்கு தெரியாது..

////

சிவ கங்கை சீமை தந்த இந்த புதல்வன் ஒரு பொருளாதார வல்லுனர்.தனக்குரிய அடையாளங்களை இழக்காமல் தேசிய நீரோட்டத்தில் பயணிப்பவர் நமது நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவர்கள்

பெரும்பாலும் நாடாளுமன்றத்திலேயே பணிபுரிந்தாலும் கூட உங்கள் அடையாளங்களை விட்டுக்கொடுத்ததாக தெரியவில்லை...குறிப்பாக வேஸ்டி சட்டை அணிதல் இது போன்ற விடயங்கள் இதில் நீங்கள் உறுதியாக இருப்பதற்கு ஏதாவது சிறப்பான காரணங்கள் இருக்கின்றதா?

காரணம் இதுதான் என் அடையாளம் இதுதான் என் அரசியல் அடையாளம்.


///தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தவறிய காலத்தில் இதுதான் தமிழ் என்று தமிழிற்கு அறிமுகம் கொடுத்த விஜய் டி.வி யின் தத்துப்பிள்ளையே ....///

எல்லாரும் ரொம்ப கவனிச்ச ஸோ அது கமலஹாஸன் ரஜனிகாந்த் மோகன்லால் மம்முட்டி என்று திரையுலகப்பிரபலங்கள் அவ்வளவு பேர் ......கமல் 50

ரஜனி-என் கலை உலக அண்ணா கமலஹாசன் அவர்களே.................


கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சினிமாவை ரசிக்கக்கூடிய எல்லோருக்குமான ஒரு அழகான பக்கேஜா இன்னைக்கும் கமல் 50 பற்றி பெருமையாக கதைக்கிறாங்க யூ டியூப்பில எல்லாம் போய்ப்பாத்தீங்கென்னா இன்னைக்கும் அத அடிக்கடி போய் பாக்கிறாங்க என்கிறது ரொம்ப சந்தோஸமா இருக்கும்.

.....

ரஜனிகாந்த் லைவ் அது ஒரு பிறஸ்கொன்பிரன்ஸ் திடீர் என்று முடிவு பண்ணினம் அன் கொன்ரோல்ட் லைவ் ரஜனிகாந்த் என்ன சொல்லப்போகின்றார் என்னு கேக்கிறதுககக நிறைய மீடியாக்கள் ரசிகர்கள் என்று பெரிய கூட்டம் எங்க கமராமான்கள் எங்க நிக்கிறாங்க என்றே கண்டுபிடிக்கமுடியல...
(வந்த சன நெரிசலில் கோபிநாத் மயங்கியேவிட்டார்)

அகரம் பவுஸ்டேஸன்+விஜய் டிவி இணைந்து சூர்யாவுடன் ஒரு கோடி தொடக்கம்.

ஒரு டெலிவிஸன் ஆங்கரா சஸ்ஸஸ்புல்லா இருக்கிறதெங்கிறது அவ்வளவு சாதாரண விசயமில்லை.அது ஒரு தனி மனிதனுடைய சிந்தனையாலும் அவனுக்கு  இருக்கக்கூடிய அறிவாலும் மட்டும் நடந்திடாது.அதற்கொரு பெரிய ரீம் எஃபோர்ட் இருக்கணும்

என்னை பெரிய அளவில் அடையாளப்படுத்திய விஜய் டி.விக்கு என்றைக்குமே  நான் தாங்க்ஸ் சொல்லிக்கிட்டே இருப்பேன்....

நான் எப்பவுமே பெருமையாக நினைக்கக்கூடிய விடயம் ஐ ஆம் ஏ ஸ்ரார் ஸரார் விஜய் ஸ்ரார்.....

Untitled 245 by dm_503ccb4feddba

Untitled 246 by dm_503ccb4feddba
Untitled 247 by dm_503ccb4feddba

No comments:

Post a Comment