Sunday, 28 October 2012

I, Robot தவறுகள்,பிகைன்ட் த சீன்I, Robot படத்தைப்பற்றிய விமர்சனத்தை முன்பு பார்த்தோம்.அதை படிப்பதற்கு இங்கே கிளிக்.


அசத்தலான படமாக இருந்தாலும் ஐ ரோபோட்டிலும் சில தவறுகளும் உள்ளன.முதலில் அவற்றைப்பார்துவிடுவோம்.


ஸ்பூனர் தனது பைக்கை freeway இல் செலுத்தும் போது அங்கு சென்றுகொண்டிருந்த அனைத்துக்கார்களிற்கும் சில்லுகள் இருந்தன.ஆனால் வில்சிமித் பயணம் செய்யும் காரைக்காட்டும்போது அது சக்கரம் இல்லாத வேறுவிதத்தில் பறப்பதாக காட்டப்பட்டது.அத்துடன் படத்தின் ஆரம்பத்திலேயே சில்லுகள் இல்லாத கார்கள்தான் காட்டப்பட்டன.

ஸ்பூனர் கார் விபத்தில் சிக்கிய பின் கார் கதவை திறக்க கதவு உடைந்துவிட்டது.ஆனால் ரோபோ காரை இவர் மீது தள்ளுவதற்கு காரை நிமிர்த்திய போது உடைந்த கதவு மீண்டும் காரிலேயே இருந்ததுபடத்தின் ஆரம்பத்தில் பெரிய ரோபோட் ஒன்றின் உருவம் யு.எஸ்.ஆர் கம்பனியின் உள்ளே காட்டப்பட்டது அதே இடத்திற்கு மீண்டும் ஸ்பூனர் வரும்போது அது இருக்கவில்லை

ஸ்பூனர் முதன் முதலில்Sonnyயை சந்தித்தபோது Sonny ஸ்பூனரின் துப்பாக்கியை தட்டிவிடுகின்றது.உடனே ஸ்பூனர் தனது சூவிற்குள் இருக்கும் வேறொரு துப்பாக்கியை எடுக்கின்றார்.அது முன்னர் இருந்த துப்பாக்கியை விட சிறியது.Sonnyயை சுட்டுவிட்டு அதை வைக்கும்போது அது முன்னைய துப்பாக்கியாகிவிடுகின்றது.

 nanites கள் மிகவும் வலிமையான செக்கிருட்டி பீல்ட்களால் ஆக்கப்பட்டவை.ஒரு ரோபோவை Sonny தூக்கி எறிய அது போய் அந்த பீல்டில் விழும்போது அந்த ரோபோவின் ஒரு பகுதி காணமலே போய்விட்டது.Sonnyயின் உடல் அந்த வலிமையான புலத்தை தாங்குவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தாலும்.உள்ளே  nanites ஐக்கொண்டுள்ள சிலிண்டர் அதை நிச்சயம் தாங்காது.ஆனால்Sonnyஎப்படி அதை வெளியே எடுத்தது என்பதை காட்டவில்லை.


Sonny ஸ்பூனரிடம் இருந்து தப்பி ரோபோட்களின் தொழிற்சாலைக்குள் சென்றுவிடுகின்றது.அங்கு 1000 ரோபோட்கள் இருக்கவேண்டிய இடத்தில் 1001 ரோபோக்கள் இருக்கின்றன.ரோபோக்கள் அனைத்தும் நீள் சதுர உருவில் நிற்கின்றன.1001 ரோபோக்களை நீள் சதுர உருவில் நிறுத்தவேண்டுமெனில் 13x77 ஆகத்தான் நிறுத்தமுடியும் ஆனால் ஒரு ட்ரோவில் 13க்கு மேற்பட்ட ரோபோக்கள் உள்ளன.

படத்தில் இறுதிக்கட்டத்தில் 200 மாடி யு.எஸ்.ஆர் கட்டிடத்தின் உச்சிப்பகுதிக்கு செல்லும் ஸ்பூனர்,கல்வின் முகத்தில் ஒரு துளி வியர்வையையும் காணமுடியவில்லை.

ஸ்பூனர் பிளாஸ்பக்கை கூறும்போது ரோபோ  அந்த சிறுமியைக்காப்பாற்றுமாறு கூறியதை செவிமடுக்கவில்லை என்று கூறினார்.சோ ரோபோ அசிமோ உருவாக்கிய விதிப்படி நடக்கவில்லை என்றுதானே அர்த்தம்.மனிதன் இடும் கட்டளைக்கு அடிபணியவில்லை.ஆனால் எந்த  கட்டளைக்கு ஆபத்தின் சதவீதம் குறைவு என்பதன் அடிப்படையில் முடிவு செய்திருப்பதாக கருதலாம்.

முதன் முதலில்  அல்பிரட்டின் ஹோலோக்கிராம் ஸ்பூனரிடம் பேசி முடிந்ததும் ப்ரோக்கிராம் ரேமினேற்ரெட் என்று கூறி முடிகின்றது.பின்னர் இறுதியிலும் திரும்ப பேசி விட்டு அதே வார்த்தையைக்கூறிவிடுகின்றது.ஒரு தடவை ப்ரோக்கிராம் டேர்மினேர்ரேட் ஆனால்/அழிந்தால் அவ்வளவுதான்.பின்னர் எப்படி மீண்டும் பேச முடிந்தது?

யு.எஸ்.ஆர் கட்டிடத்தின் உச்சிக்கு சென்றதும் முதலில் Sonny சென்று கதவைத்திறக்கின்றது.அப்போது ஸ்பூனரின் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய  லைட் Sonnyயை ஊடுருவிக்கொண்டு சென்றுவிட்டது.அதாவது Sonnyயின் நிழல் விழவில்லை.


என்னைப்பொறுத்தவரை படத்தின் ஹீரோ சிமித் அல்ல Sonny ான்.படத்தில் முழு அளவில் Sonnyயின் பாதிப்புத்தான் இருந்தது.
Sonnyயாக நடித்தவர் alan tudyk
Advanced Motion Capturing technology யின் உதவியுடன்  Sonnyயின் உணர்ச்சிகள் alan tudykமிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.

விக்கியின் மேற்பகுதி


கண்ணை சிமிட்டிய சீன்படத்தில் தெருவில் கண்டபடி ரோபோக்கள் திரியுமே..அதெல்லாம் மனிதர்கள்தான்.ரோபோ போல் நடப்பதற்கு பயிற்சியளிக்கப்பட்டபின் நடக்கவிடப்பட்டிருந்தார்கள்.ஸ்பூனரது கார் தாக்கப்பட்ட சீன் ரோபோ ஜன்ன்லை உடைத்துக்கொண்டு பாய்ந்து தப்பும் சீன்ஒரு ரோபோவைப்போட்டுத்தள்ளும் ஸ்பூனர்
படத்தில் எனக்கு பிடித்தபல விடயங்களில் முக்கியமானது எதுவெனில் ரோபோ கூர்ப்படையும் காலத்தில் சுற்றியுள்ள அனைத்துமே அந்த தொழில் நுட்பத்தை நம்பும் படி  மாறி இருந்தது.கார்களின் வடிவம் மாறியிருந்தது.வீதியில் நாய்களை மேய்க்கும் ரோபோக்கள் குப்பை அள்ளும் ரோபோக்கள்.அங்கு ரோபோ என்பது சாதாரண விடயமாகிவிட்ட நிலையில் Sonnyயில் மட்டும் மாற்றம்.


காரை எப்படி பார்க் செய்வது என்று காட்டினார்கள் பாருங்கள்...சப்பா...
லைபிரரியில் புத்தகங்களை அடுக்குவது போல் கார்கள் அடுக்கப்பட்டன.நல்ல ஐடியா இடத்தேவையும் நிவர்த்தி செய்யப்படும்


இதில் காட்டப்பட்ட Audi RSQ என்ற காரை டிஸைன் செய்தது தொடர்பில் ஒரு கதை இருக்கின்றது தேவையானவர்கள் வாசிக்க...இங்கே கிளிக்பிகைண்ட் த சீன்


No comments:

Post a Comment