Sunday, 7 October 2012

பஸ்ஸினுள் அடித்த பெண்ணை திருப்பி அறைந்த இளைஞன்ஒரு இளைஞன் பஸ்ஸில் தன் பாட்டுக்கு சிவனே என்று பிரயாணம் செய்துகொண்டிருக்கிறான் பஸ் இடையிடையில் ஸ்பீட் ப்றேக்கர்,பஸ் ஸ்ரொப்  போன்றவற்றில் சடுதியாக நிற்பது வழமைதான்.அப்படி நிற்கும் போது அந்த இளைஞன் அருகில் இருந்த பெண்மீது தவறுதலாக மோதிவிடுகிறான்.உடனே அந்தப்பெண் அனைவருக்கும் முன்னால் அறைந்துவிடுகிறாள்.இதன் போது பஸ்ஸினுள் சலனம் அதிகரிக்கின்றது.(இப்படியான சந்தர்ப்பத்திற்காக அலையும் ஆண்களை செருப்பால் அடிக்கலாம் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்)
இளைஞன் சற்று நேரத்தில் அவளின் முன்பக்கமாக அவளை விலத்தி நகர்ந்து செல்கின்றான்.மறுபடியும் ஸ்பீட் ப்றேக்கர் அல்லது பஸ் ஸ்ரொப் வரும் இல்லையா? அவள் இவன் மீது மோத(இதற்காகத்தான் முன்னே வந்தான் அவன்) ஓங்கி ஒரு அப்பு லெஃப்ட் அவுட்டு...பஸ்ஸில் எஞ்சின் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

முகப்புத்தகத்தில் ஸேர் செய்யப்பட்டுவரும் வீடியோ இது.இதில் யாரை பிழைசொல்வது என்று தெரியவில்லை? உங்களுக்கு நடந்தால் என்ன செய்வீர்கள்?

11 comments:

 1. அவன் மீது பிழை இருப்பதாகத் தெரியவில்லை!

  ReplyDelete
 2. இது பெண்களை குறை சொல்ல எடுக்கப்பட்ட வீடியோ, 95% பெண்கள் யாருமே ஆண்களிடம் கை நீட்டுவதில்லை, அதிகப்படியாக கத்தி சண்டை போடுவார்கள் அல்லது மௌன்மாகப் போய்விடுவார்கள். இதில் காட்டப்பட்டிருக்கும், அப்பாவி ஆணும், அதிரடியான பெண்ணும் ஒரு கற்பனை அல்லது 1000 இல் ஒன்று

  ReplyDelete
  Replies
  1. சில திமிர் பிடித்த பெண்கள் இருப்பார்களே அவர்களிடம் நல்ல மெத்து கிடைக்கும் பாஸ்

   Delete
 3. இந்த வீடியோ பகிரப் படுவதற்காகவே எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது..

  ஆனாலும் பெரும்பான்மை ஆண்கள் தவறு செய்வதால், இந்த ஆணை நியாயப் படுத்துவது சிரமமே.

  ReplyDelete
 4. ஏற்கனவே திட்டமிட்டு இச்செயலை நடத்தியிருக்கிறான் எனபது தேற்றம். இல்லாவிட்டால் இவன் பின்னாளேயே கேமிராவும் சென்றிருக்குமா? அதே வேளையில் அப்பேருந்திலுள் இருந்த பெண்களும் அறை வாங்கிய பெண்ணும் அப்பாவிகள்; அவர்களுக்குத் தெரியாமாலேயே அவர்கள் போட்டோக்களுள் மாட்டப்பட்டிருக்கிறார்கள். இதற்காகவே அவனைத் தண்டிக்கலாம்.

  இப்போது அக்காட்சிக்குச் செல்வோம். சரியா தவறா?

  தவறு. பெண் என்பவள் பொதுவாக, குறிப்பாக இக்காட்சியில், ஆணைவிட உடல்வலிமை குறைந்தவள். நலிந்தோரை வலிந்தோர் அடிப்பது எந்தப் பண்பாட்டிலும் ஏற்பதன்று. அவள் அடிக்கலாமா? அவன் உரசினால் என்றால், அவள் தன்மானத்திற்கு கேடு என்று நினைத்தபடியால் அதை அவள் காட்டினாள். வேறெப்படி காட்டுவது? செருப்பைத்தூக்கியா? எல்லாமே ஒன்றுதான்.

  உண்மையில் அவன் குற்றமற்றவன் என்றால், அவன் சொல்லிக்காட்டியிருக்கலாம். அவள் அதை பின்னர் உணரும்போது அவளின் குற்றவுணர்ச்சியே ஒரு தண்டனையாகும். இங்கே அவன் ஒன்றும் செய்யாமல் வேண்டுமென்றே முன் வந்து அவளை அடிக்கிறான்.

  அதற்கு மாறாக, அவள் அடித்த பின்னர், தான் குற்றமற்றவன் என்று சொல்லிவிட்டு முன் வந்திருக்கலாம். அல்லது சொல்லாமலும்கூட முன் வந்து பின்னர் பேருந்தின் வேகத்தினால் தன் மீது அவள் விழ் நேரிடும்போது, அவன் அவளிடம்: இப்போது பார்த்தீர்களா? நீங்களே என் மீது சாய்ந்து விட்டீர்கள். இதை நீங்களே செய்தீர்கள் என்று நான் உங்களை அடிக்கலாம். ஆனால் செய்ய மாட்டேன். நீங்கள் உணர்ந்தால் எனக்குப் போதும்! என்று சொல்லியிருந்தால், அவள் தன் தவறையுணர்ந்திருப்பாள்.

  இவன் செய்யவில்லை. பழிக்குப்பழி என்ற உண்ர்வாள் அலைக்கழிக்கப்படுகிறான் இவன். தவறை உணர்வைத்தலே உலகமெங்கும் குற்றவாளிகளுக்குத்தண்டனை கொடுக்ப்பதன் அடிப்படை நோக்கமாகும். நம் சிறைச்சாலைகள் தண்டனைக்கூடங்களல்ல. அவை சீர்திருத்தப்பள்ளிகள். தண்டனைக்காலமுடிந்து மனந்திருந்தியவர்களாக அவர்கள் வெளி வரவேண்டும்; பின்னர் திருந்திய நல்வாழ்வு வாழவேண்டும். சமூகம் அதற்கு உதவவேண்டும். இல்லாவிட்டால் அவன் மீண்டும் தவறுகள் செய்ய ஹேதுவாகும் என்பதுதான் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் நான் படத்தின் கரு. பெண் மென்மையானவள் தன் தவறை நினைந்து நினைந்து வருந்துபவள் என்பதும் அப்படத்தில் வ் வரும் காட்சிகள்.

  இவ்வீடியோவில் வரும் பையன், இதை எதையும் அறியாதவன். அல்லது அவன் கற்ற கல்வி பிழையானது.பண்பட்ட வாழ்க்கையை இன்னும் அறியாதவன்.

  இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
  என்ன பயத்ததோ சால்பு?

  அவளுக்காக நான் அழுகிறேன். அவனுக்காகவும் நாம் அழத்தான் செய்ய வேண்டும். சின்ன வயது. தவறான பாதை.

  ReplyDelete
  Replies
  1. இது திட்டமிடப்பட்டு செய்யப்பட்டிருக்கின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்....ஆனால் ரியாலிட்டி ஸோக்கள் பல இப்படி நடந்திருக்கின்றன.....வொண்டர்லாண்ட் போன்றவர்றிற்கு வருபவர்களை கலாய்ப்பார்கள்....இப்படியான சம்பவத்தால் சுடப்பட்டு இறந்த சம்பவங்கள் கூட வெளி நாடுகளில் நடந்திருக்கின்றன...ஒரு பெண்ணின் மீது இடித்தவுடன் பஸ்ஸில் பயணம் செய்பவளுக்கு எதனால் இடிபடும் என்று தெரியாதா? இடி பட்டவுடன் தனது தன் மானத்திற்கு கேடு அப்படியென்றால் அடிவாங்கிய ஆணுக்கு மட்டும் கேடு இல்லையா சமூகத்தில் ஒரு பண்பு ஏதாவது நடந்துவிட்டால் அங்கு பெண் சம்பந்தப்பட்டால் சரியோ தவறோ எல்லோரும் அந்தப்பெண்ணுக்கே சப்போர்ட் செய்கின்றார்கள்.....

   Delete
 5. இன்னொன்றையும் கவனியுங்கள்;

  அவள் இவன் தன்மீது உரசினான் என்று தெரிந்தே அல்லது நினைத்தே அறைந்தாள்.

  இவனோ தன்மேல் அவள் பேருந்தின் உந்தலினால் மட்டுமே சாய்ந்தாள். அவள் மீது குற்றமில்லையென்று நன்கு தெரிந்தே அறைந்தான்.

  குற்றவாளி அவனா? அவளா?

  ReplyDelete
  Replies
  1. ஸோ நீங்கள் அடித்தாலும் நான்கள் அடியை வாங்கிவிட்டு உங்களுக்கு நான்கள் தவறை உணர்த்தவேண்டும் அப்படித்தானே....ஆணாதிக்க சமூகம் எங்கின்றார்களே அய்யோ...பெண்ணாதிக்க சமூகம்யா இது

   Delete
  2. உடல் வலிமைகள் வெவ்வேறாக இருப்பதனால்...அடியை வாங்குவதுதான் ஆண்மை.

   Delete
  3. 1. உடல் வலிமைகள் வெவ்வேறாக இருப்பதனால்...அடியை வாங்குவதுதான் ஆண்மை/////

   ungalukku pidicha nerathula aanum pennum samam(equal) nu solringa..ipdi vantha naanga ponnunga paava patta jevan nu solringa

   ok ,adi vaanga naanga ready.. so ini mel aanum pennum ella visayathulayum equal nu solratha niruthuvingala..

   2. அவள் இவன் தன்மீது உரசினான் என்று தெரிந்தே அல்லது நினைத்தே அறைந்தாள்.

   இவனோ தன்மேல் அவள் பேருந்தின் உந்தலினால் மட்டுமே சாய்ந்தாள்..//// aangalukkellam perunthu unthaatha ,pengalukku mattum thaan unthuma? ivlo year bus la pora ponnukku athu theriyatha ?


   3. நலிந்தோரை வலிந்தோர் அடிப்பது எந்தப் பண்பாட்டிலும் ஏற்பதன்று. அவள் அடிக்கலாமா? அவன் உரசினால் என்றால், அவள் தன்மானத்திற்கு கேடு என்று நினைத்தபடியால் அதை அவள் காட்டினாள். வேறெப்படி காட்டுவது? செருப்பைத்தூக்கியா? எல்லாமே ஒன்றுதான்.////

   adipathum seruppai thookki kaaruvathum thaan pengalin panpaada ?Veru entha entha vazhiyagavum ungalukku ethirppai kaatta theriyatha ?


   4.
   உண்மையில் அவன் குற்றமற்றவன் என்றால், அவன் சொல்லிக்காட்டியிருக்கலாம். அவள் அதை பின்னர் உணரும்போது அவளின் குற்றவுணர்ச்சியே ஒரு தண்டனையாகும் ////


   ithaye nengalum pannirukkalaame ?


   5. தவறை உணர்வைத்தலே உலகமெங்கும் குற்றவாளிகளுக்குத்தண்டனை கொடுக்ப்பதன் அடிப்படை நோக்கமாகும்.

   eppudi ? intha maathiri yen,ethukkunu ketkaamale adikirathaa?

   6.
   நம் சிறைச்சாலைகள் தண்டனைக்கூடங்களல்ல. அவை சீர்திருத்தப்பள்ளிகள். தண்டனைக்காலமுடிந்து மனந்திருந்தியவர்களாக அவர்கள் வெளி வரவேண்டும்; பின்னர் திருந்திய நல்வாழ்வு வாழவேண்டும். சமூகம் அதற்கு உதவவேண்டும்.

   ipdi adikra samugam epdi uthavum,again avagalukkulla oru veriya than uruvakkum.

   7.
   இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
   என்ன பயத்ததோ சால்பு?

   highlight !!!!!!!!

   itha first antha ponnu pannirukalaamla :)))))))   Delete