Friday, 12 October 2012

அதற்குள் மாற்றான் திருட்டுத்தனமாக வெளிவந்துவிட்டது

இன்றுதான் படத்தையே வெளியிட்டார்கள்.ஆனால் அதற்கு அதை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள் சில விஸமிகள்.இது ஒரிஜினலாக ஹை டெபினிஸனில் வெளியாக வில்லை தியேட்டரில் திருட்டுத்தனமாக தமது கைபேசியால் எடுத்து வெளியிட்டுள்ளார்கள் இவர்கள்.இதை வெளியிட்டுள்ள தளம் திருட்டு வி சி டி டொட் கொம்.இந்ததளம் இந்த படத்தை மாத்திரமல்ல இவ்வாறு பல படங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஒரு படத்தை வெளியிடுதல் என்பது பிரசவத்திற்கு நிகரானது என்று கூறுவார்கள் அந்த அளவிற்கு ஒரு படத்தின் பின்னணியில் பலரது உழைப்புக்கள் தியாகங்கள் இருக்கும்.ஆனால் இவ்வாறானவர்களால் அவ்வாறான தியாகங்கள் உழைப்புக்கள் அவ்வளவும் தரைமட்டமாக்கப்படுகின்றன.

சூரியா ரசிகர்கள் இதன் மூலம் மிகவும் கவலையடைவார்கள் என எதிர்பார்க்கலாம்.

இதுதான் வெளியிடப்பட்ட லிங்க் 

http:///www.thiruttuvcd.com/2012/10/12/watch-maatran-movie-online-maattrraan-moviemaatran-download-maatran-torrent-maatran-links-maatran-free

இதில் 13  நிமிடக்காட்சி மட்டும் வெளியிடப்பட்டுள்ளது மிகுதிக்கு நீங்கள் பணம் கட்டவேண்டுமாம்.

2 comments:

  1. சென்னையில் குடும்பத்துடன் (மூணு பேர்) ஒரு படத்துக்கு செல்ல வேண்டுமென்றால் குறைந்தது முழுதாக ஆயிரம் ரூபாய் எடுத்துவைக்க வேண்டும். டிக்கெட் விலையை விட அங்கு விற்கும் தின்பண்டங்களின் விலை பல மடங்கு அதிகம். வெளியில் இருந்து சாப்பிட எதுவும் எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டார்கள். இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்தாலும் படம் நன்றாக இருப்பதில்லை. மொக்கை படத்துக்கு இவ்வளவு செலவு பண்ணி விட்டோமே என்று வருத்தப்பட வேண்டி இருக்கும். அதைவிட இருபது ருபாய் செலவில் திருட்டு விசிடியில் பார்ப்பது அல்லது இணையத்தில் பார்த்துக்கொள்வது சிறந்தது என்று நிறைய பேர் நினைக்கின்றனர் (நான் உட்பட). படம் ரொம்ப பிடித்திருந்தால் தியேட்டரில் சென்று பார்ப்பேன்.

    ReplyDelete
  2. யாழிலும் இதே நிலைதான்..உள்ளே விலை பல மடங்கு அதிகம் தம்மாத்துண்டு மிக்ஸர் பக்கட்டை 10 ரூபாய்க்கு விற்பார்கள்...
    ஆனால் உள்ளே கொண்டு செல்ல அனுமதியுண்டு...ஒரு நல்ல விடயம் புதிதாக ஒரு படம் வந்தால் அதிகபட்சம் 4/5 நாட்களுக்கு நல்ல சனம் அதன் பின்னர் சனம் வெகுவாக குறைந்துவிடும் அப்போது சென்று பார்க்கலாம் அல்லது ஒரு சி.டியின் விலை இங்கு 60 ரூபாய்...பெரும்பாலும் படம் வெளிவந்த அடுத்த நாளே சி.டி வெளிவந்துவிடும் எந்திரன் படம் ஒறிஜினல் சி.டிபோல் ஹைக்குவாலிட்டியுடன் அடுத்தடுத்த நாட்களில் வெளிவந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete