Saturday, 6 October 2012

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு- நல்லா காட்டுறாங்கபேஸ்புக்கில் ஒரு விடயம் பகிர்ந்துகொள்ளப்பட்டது. நாசாவுக்கே தண்ணிகாட்டிய திரு நள்ளாறு....என்னடா ஆச்சுன்னு போய்ப்பார்த்தா விடயம் இதுதான் தமிழ்வளர்ப்போம் என்று ஆரம்பிக்கப்பட்ட பேஜ்கள் பல,உணர்ச்சிவசப்பட்டு நாம் தமிழர்,அல்லது எமது இந்து சமயம் என பீற்றிக்கொள்பவர்களது பேஸ்புக்கில் இவ்விடயம் நிச்சயம் இருக்கும்.

உண்மையில் இது 2011 இல் இருந்தே பரப்பட்டுக்கொண்டிருக்கும் செய்திதான் என்பதை பின்னர் அறிந்துகொண்டேன்.சரி அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த விடயத்தை முதலில் வாசித்துவிடுங்கள்.

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடுராணுவ பயன்பாடுஉளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில்அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்துகிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்லஉலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேசுவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலக்கதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சியின் போது இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்குஎந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் போது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டாயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிக்கோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி கதிர்வீச்சுகள் அதில் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையைநம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை மிஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் ஏதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவக்கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!

உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள்பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்துஇந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும்அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!! அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு..... அவர்கள் திண்ணையில் இருந்து வானத்தைப்பார்த்து சிந்தித்தற்கு விளக்கம் தெரியாமல் நாம் மடிக்கணணிகளை தட்டிக்கொண்டிருக்கின்றோம்...

Share if u proud to be a hindu.......

சரி மேலே கூறிய உலக மொக்கைக்கு விஞ்ஞான விளக்கங்களுடன் பதில்கூறவேண்டுமல்லவா வாருங்கள் தொடங்குவோம் சும்மா போகிறபோக்கில் ஒரு விடயத்தைக்கூறிவிட்டு சென்றுவிடுவார்கள் காரணத்திற்கு நாம் மண்டையை உடைக்கவேண்டும்.....முதலாவது விடயம் இப்படி ஒரு விடயம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இணையத்தில் இல்லை நாசாவின் இணையத்தளத்திற்கும் சென்று துருவிப் பார்த்தாயிற்று....இந்த தகவல் மெயிலினூடாக ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டு வந்திருக்கின்றது....இந்த மெஸேஜை 10 பேருக்கு அனுப்பினால் நீங்கள் நினைத்தது நடக்கும் அனுப்ப மறுத்த ஒபாமா இரத்தம் கக்கி செத்தார் என்று வருமே அதே மாதிரி....


//ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலக்கதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது//

அந்தக்கதிரை புற ஊதாக்கதிர்கள் என்றும் கூறுவார்கள். அதற்காக அது நீல நிறமாகவோ கரு நீலமாகவோ இருக்காது.புற ஊதாக்கதிர்கள் சூரிய ஒளியுடன் சேர்ந்து பூமியை அடைகின்றன.அது கண்ணுக்கும் தெரியாது அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை அவனில் இருக்கும் மைக்குரோவேவ்ஸ் எக்ஸ் ரேய்,அவ்வளவு ஏன் கைபேசிகளிற்கிடையில் பரிமாறப்படும் நுண் அலைகளும் கண்ணுக்கு தெரியாததுதான்....கண்ணுக்கு தெரியாதது என்பது ஆச்சரியமல்ல...


//ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்// அந்தக்கதிர்கள் அந்தக்கோவிலில் விழுந்துகொண்டே இருக்கும்.அந்தக்கோவிலில் மட்டுமல்ல சூரிய ஒளி விழும் பூமியின் ஒரு பாதி முழுவதிலுமே அந்தக்கதிர்கள் விழுந்துகொண்டேதான் இருக்கும்.
அத்துடன் கதிர்கள் முழுமையாக பூமியில் விழாது 98 வீதமான கதிர்களை ஓஸோன் லேயர் தடுத்துவிடும்.

// சனிப்பெயர்ச்சியின் போது இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். // அதிகமான புற ஊதாக்கதிர்கள் தோல் புற்று நோயை ஏற்படுத்தக்கூடியன.ஸோ எல்லோரும் கான்சரில திரியினமாக்கும் அத்துடன் கதிர்கள் அதிக அளவில் வந்தால் யாரும் கோவிலுக்குள்  நுழையவே முடியாது.


//
செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது//

முதலாவது விடயம் பூமு ஒரு சீரான கோளவடிவம் அல்ல.அத்துடன் அதன் திணிவு சீராகப்பரம்பியும் இல்லை.இடத்திற்கிடம் அடர்த்திகள் மாறுபடும்.

ஒரு செயற்கைக்கோள் பூமியை சுற்றுவதை கற்பனை செய்யுங்கள்.


அது சீராக குறிப்பிட்ட வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அதன் வழியில் எந்தத்தடையும் இருக்காது என்று நினைத்தால் அது தவறு.
தடைகள் இருக்கின்றன.பூமியின் மேற்பகுதியில் இருந்து 1000 கிலோமீட்டருக்கு மேற்பட்ட,உட்பட்ட பிரதேசத்தில்  hydrogen,
helium,oxygen வாயுக்களால் தடை ஏற்படும் இதை Neutral Drag என்பார்கள்.

இதற்குமேற்பட்ட வாயுக்களால் ஆன பகுதியை plasmasphere என்று அழைப்பார்கள்.இப்பகுதியில் hydrogen,oxygen, helium அணுக்கள் அயன் நிலையில் காணப்படும் இதனால் செயற்கைக்கோளில் மின்னேற்றம் ஏற்பட்டு தடை ஏற்படும்.இதற்கும் மேற்பட்ட பகுதியில் ஏற்படுத்தப்படும் தடைக்கு சூரியனும் சந்திரனும்தான் காரணம்.
மேலும் விண்வெளியில் இருக்கும் கொஸ்மிக் கதிர்கள் எக்ஸ் கதிர்களினாலும் செயற்கைக்கோள் பாதிக்கப்படலாம்.ஒரு செயற்கைக்கோளிற்கு இத்தனை தடைகள் இருக்கின்றது.

இத்தடைகள் காரணமாக செயற்கைக்கோள்கள் தமது வேகத்தை இழக்காது.ஆனால் செயற்கைக்கோள்களின் பூமியில் இருந்தான ஆரை மாறும்.இது உடனடியாக நிகழாது  நீண்டகாலத்தில் நடைபெறும் மாற்றம்.

ஒரு செயற்கைக்கோள் முற்றாகத்தடைப்படுமாயில் சம்பவங்கள் நடக்கலாம்.
1.பூமியின் ஈர்ப்புவிசையை விட்டு செயற்கைக்கோள் விண்ணில் தொலைதல்

(பூமியின் ஈர்ப்பில் செயற்கைக்கோள் சுற்றலை-ஒரு கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் ஒரு கல்லை சுற்றுவதற்கு ஒப்பாக சிந்திக்கலாம் கயிற்றுடன் கல் சுற்றும்போது கயிறு அறுமாயின் கல் கயிற்றை சுற்றும் நபரை நோக்கி வராது மாறாக தூர சென்று விழும்)

2.பூமியில் விழுதல்.உண்மையில் பூமியில் விழ முன்னதாகவே செயற்கைக்கோள் எரிந்துவிடும்.(வளி மண்டல உராய்வு காரணமாக)

சில 1000 கிலோமீட்டர்கள் தூரத்தில் செயற்கைக்கோள் இருந்து அது தடைப்படுமாயின் அது பூமியை நோக்கிவிழும்.உதாரணம் ஸ்புட்னிக் 2 14th April, 1958 இல் விழுவது அவதானிக்கப்பட்டமை.

இந்தத்தடைகளை விட்டுவிட்டால் இன்னொரு தடை இருக்கின்றது.அது பூமியின் சமனற்ற அடர்த்திப் பரம்பலால் ஏற்படும் தடை புவியின் 11 பாகை தொடக்கம் 162 பாகை வரையான நெட்டாங்கு பிரதேசத்தில் அடர்த்தி அதிகம்.இதன் காரணமாக இப்பகுதிக்குள் செயற்கைக்கோள் நுழைந்ததும் செயற்கைக்கோள் சற்றுபதியும்.ஆனால் செயற்கைக்கோளில் ஏற்படும் உயரமாற்றம் அண்ணளவாக 65 மீட்டர்.செயற்கைக்கோளின் தூரம் பூமியில் இருந்து 3,600,000 மீட்டர்களுக்கு மேல் ஸோ இந்த தூரத்துடன் 65 மீட்டரை எல்லாம் யாரும் கணக்கில் எடுப்பதில்லை.ஆனால் வேகம் மாறாது.திரு நள்ளாறு கோவிலும் இந்த பகுதிக்குள்தான் இருக்கின்றது.அண்ணளவாக 80 பாகை நெட்டாங்கு பிரதேசத்தில் திரு நல்லாறு அமைந்துள்ளது.ஆனால் இவர்கள் குறிப்பிடுவது போல்வேகம் குறையாது.அத்துடன் உயரம் குறைதலானது 80 பாகையில் மட்டும் நடைபெறாது.11 பாகை தொடக்கம் 162 பாகை வரையான பகுதி முழுவதிலும் நடைபெறும்.(பின்பு கதையை மாற்றி 80 பாகையில் உள்ள திரு நள்ளாற்றில் செயற்கைக்கோள் சற்று பதிந்தது என்று ஆக்கிவிடுவார்கள்).வேகம் குறையுமாயின் செயற்கைக்கோள் பூமியில் இருந்து வெளியே தப்பி சென்றுவிடும்.
மேலே படத்தில் A,B,C  எனக்குறிப்பிடப்படுபவை பூமியின்  அடுத்தடுத்த நிலைகள். a,b,c என குறிப்பிடப்படுபவை செயற்கைக்கோள்களின்
நிலைகள்.

இவர்கள்
கூறியது போல் செயற்கைக்கோள் செக்கண்ட்கள்
ஸ்தம்பித்தது என்று வைத்துக்கொள்வோம்.புவி என்ற பகுதிக்கு வந்ததும் செயற்கைக்கோள்
ஸ்தம்பிக்கின்றது.ஆனால் சூரியனை சுற்றும் பாதையில் செல்லும் பூமி தொடர்ந்து தன்
பாதையில் சென்றுகொண்டிருக்கும். செயற்கைக்கோள் ஸ்தம்பிக்காது இருந்திருப்பின்
செயற்கைக்கோள் புவியுடன் சேர்ந்து bஇல் இருந்து ற்கு சென்றிருக்கும்.ஆனால்
செயற்கைக்கோள் ஸ்தம்பித்து நின்றால் செயற்கைக்கோள் bயிலேயே நிற்க புவி தன் பாட்டுக்கு
சென்றுவிடும்.அதாவது புவியின் ஈர்ப்பில் இருந்து செயற்கைக்கோள்
விடுபட்டுவிடும்.எனவே செயற்கைக்கோள் அப்படியே அண்டவெளியில் தொலைந்துவிடும்.3செக்கண்ட்கள் நிற்கின்றது என்கிறார்கள் பூமி
சூரியனை சுற்றும் வேகம் 30
km/s or 108,000 km/h or 67,000 mi/h இந்தவேகத்தில் பூமி செல்ல செயற்கைக்கோள் செக்கண்ட்கள் நின்றால் நன்றாகத்தான் இருக்கும்.

 //நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு
கண்டறியும் சனிக்கோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து//ஆமா பிடித்து
ஆற்றில் போட்டுவிட்டார்கள்...

சனி என்பது கிரகம் அதற்கு சுய
ஓளி கிடையாது.கதிர் வீசலும் கிடையாது.அது நட்சத்திரமாக இருந்தால் நீங்கள் கூறியது
சரியாகலாம்.அத்துடன் பூமியில் இருந்து சனிக்கிரகத்தின் தூரம் 1.2 billion கீலோமீட்டர்கள்.அந்தத்தூரத்தில்
இருந்து சரியாக திரு நள்ளாறு கோவிலுக்கு மேல் கதிர்கள் விழுகின்றது என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள். (சனியை விடுங்கள்எங்களுக்கு மிக அண்மையிலே இருக்கும்கரும் பொருளாக சகல விதமான கதிர்ப்புக்களையும் வீசும்
சூரியனில் இருந்தே கதிர்ப்புக்கள் வந்து கோயில்களில் விழுவது வெறும் ஒரு சதவீதம் கூட இல்லை.
சனியோமுனியோ எதுவும் வரக் கூடாது என்றுதானே ஐயா உங்களின் கடவுள் ஓசோன் படையை உருவாக்கினார்பிறகு ஏன் ஐயா அவரே கதிர்களை விடுகிறார்?
சூரியன் என்கிற நட்சத்திரமே கதிர்களை முழுதாக விட முடியாதாம்இதிலே சனி விடுகிறதாம்.
முட்டாள்களேசனி எப்போதுமே பூமியை நேரடியாக பார்க்க முடியாது என்பதை கூடவா
சிந்திக்க மாட்டீர்கள்இடையிலே எத்தனை கிரகங்கள்.. சிலவேளைகளில் சூரியனே இடையிலே வருகிறதே, (பூமிக்கும் சனிக்கும் இடையிலே.)
அப்போதெல்லாம் என்னசனி பகவான் பை பாஸ் வழியாக வருவாரா? )

சரி செக்கண்ட் வரை செயற்கைக்கோள் நிற்கும்
என்றார்களே அதைக்கூட மன்னிக்கலாம்(கவுண்டமணி குரலில்)அதர் கன்றி அதர் ஸ்ரேட்டு
இந்தா நிக்கிறாங்களே அம்மா ஒரே அப்பு லெஃப்டு அவுட்டு....இதே அடி நான் வாங்கியது
போல் இருந்தது...

 //இந்த சம்பவத்திற்கு பிறகு
நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை
மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.//ஆமா அப்படியே நாஸா சென்று நாஸா நிறுவனத்தை
பூட்டிவிட்டு  திரு நள்ளாற்றிற்குவந்து அங்கு அனைத்து
விஞ்ஞானிகளும் அன்னதான மடத்தை பெருக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

இன்னொன்றும் கூறினார்கள்
மிராக்கிள் என்று  நாஸாவிஞ்ஞானிகள் கூறினார்களாம். ஒரு விஞ்ஞானி
அதுவும் நாஸா விஞ்ஞானி இப்படி கூறினானா அடி முட்டாள் எனக்கே இவ்வளவு தெரிந்தால்
அவனுக்கு எவ்வளவு தெரியும்?அத்துடன் தமக்கு மேல் ஒரு சக்தி
இருக்கின்றது என்று உணர்ந்து சனி பகவானை கும்பிட்டார்கள்.ஏன் இந்து சமயத்திற்கு
மாறி  மதுரை ஆதீனத்தில் இணைந்தார்கள் என்று
கூறாதுவிட்டீர்களே அதுவரை புண்ணியம்....


அடுத்த டக்கால்டிக்குவருவோம்....
//நீங்கள் ஏதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவக்கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள்//
அஸ்ரோலொஜி ரீதியாக சமய ரீதியாக கிரகங்களை வைத்திருக்கின்றார்கள் முன்னோர்கள் அவற்றிற்கு  நவக்கிரகங்கள் என்று பெயர்.
சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு(வியாழன்),சுக்கிரன்,சனி,ராகு,கேது
அறிவியல் ரீதியாக கிரகங்கள்
புதன்,வெள்ளி,புவி,செவ்வாய்,வியாழன்,சனி,யுரேனஸ்,நெப்டியூன்,புளூட்டோ
நமது முன்னோர்கள் கூறிய கோள்களில் சந்திரன் என்பது துணைக்கோள்/கிரகம்  முக்கிய கோள் அல்ல.அத்துடன் ராகு,கேது என்ற எந்த கோள்களும் எமது ஞாயிற்றுத்தொகுதியில் கிடையாது.
அத்துடன்  நாம் வாழும் புவி எங்கே போய்விட்டது?,யுரேனஸ்,நெப்டியூன் கிரகங்கள் எல்லாம் எங்கேய்யா போய்ட்டுதுநீங்கள் கூறிய 9கிரகங்களும் கிரகங்களே அல்ல.

சூரியன் என்பது கிரகமல்ல நட்சத்திரம்.

நவக்கிரகங்கள் என்று பெயர் ஒற்றுமை வந்துவிட்டால் என்னவேண்டுமானாலும் கூறிவிடுவதா?

(இன்னொரு விடயம் இது அஸ்ரோலொஜி சம்பந்தப்பட்டது...மனிதனின் நடத்தைகளில் வெற்றிகளில் சகலவிடயங்களிலும்  கோள்களின் ஆதிக்கம் நிச்சயம் என்று கூறுகின்றது அஸ்ரோலொஜி...ஆனால் நாம் எந்தக்கிரகத்தின் மீது இருக்கின்றோமோ அந்தக்கிரகத்தை பற்றி அஸ்ரோலொஜி கூறவே இல்லை...மற்றைய எல்லா கிரகங்களைவிட சூரியனைவிடகூட எம்மீது அதிக தாக்கம் செலுத்துவது நாம் வாழும் புவி....ஆனால் அதைப்பற்றி கூறவே இல்லை....இது சாத்திரத்தின் மிகப்பெரிய ஓட்டை)

இந்த லட்ஷணத்தில் கிரகங்களுக்கு (சூரியன் உட்பட) என்ன நிறம் என்று விளக்கம் கூறுகின்றீர்களா?கொய்யால..கேக்கிறவன் கேணையனா.....

((((தமிழ் வளர்ப்போம்,தமிழ் வாழ்கநாம் தமிழர் என்று பல பான் பேஜ்கள் ஆரம்பித்து இவ்வாறான முட்டாள் தனங்களை பரப்பி வருகின்றார்கள்.ஆனால் நம்மவர்கள் ஒன்றையும் சிந்திப்பதில்லை முதல் வேலையாக பேஸ்புக்கில் ஸெயார் செய்துகொள்கின்றார்கள்.இப்படி நமது முன்னோர் நமது சமயம் நமது சமயம் முன்பே அணுகுண்டைக்கண்டுபிடித்துவிட்டது என்ற போஸ்ட்கள் எங்காவது இருந்தால் தயவு செய்து நமக்கு அறியத்தாருங்கள்.....))))

16 comments:

 1. http://www.unmaionline.com/new/36-unmaionline/unmai2012/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-31/681-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.html

  ReplyDelete
  Replies
  1. thanks ....அதை வாசித்துவிட்டேன்

   Delete
 2. Read the book Chariots of the Gods?
  And after that write.
  http://en.wikipedia.org/wiki/Chariots_of_the_Gods%3F

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கூறியது போன்று பல புத்தகங்கள் உள்ளன.அவற்றைப்பற்றிய உண்மைத்தன்மைகளும் விரைவில் ஆராயப்படும் நன்றிகள்..

   Delete
 3. Replies
  1. வருகை தந்தமைக்கு நன்றி சகோ....மூட நம்பிக்கை ஒரு புறம் எதை எடுத்தாலும் கண்மூடித்தனமாக நம்புகின்றார்கள் என்ன செய்ய?

   Delete
 4. நம்ம 2 பைசா

  http://govikannan.blogspot.sg/2011/01/blog-post_28.html

  :)

  ReplyDelete
  Replies
  1. வாசிச்சேன் பின்னீட்டீங்க

   Delete
 5. இவனுங்க அடிக்கர கூத்து பயங்கரம். நல்ல காலம் பெரியார் கருப்பு சட்டை போட்டதே சனிக்காக என்று சொல்லாமல் விட்டானுன்களே! அதுவே பெரிசு.

  http://www.nambalki.com/2012/10/7-oct-2012.html

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி வருகை தந்தமைக்கு நன்றி சகோ

   Delete
 6. //இந்த லட்ஷணத்தில் 9 கிரகங்களுக்கு (சூரியன் உட்பட) என்ன நிறம் என்று விளக்கம் கூறுகின்றீர்களா?//

  நிறம் மட்டுமில்லை - இந்த கிரகங்களின் பல பண்புகளையும் பராசுரர் ”ஹோர சாத்திரத்தில்” அருளியவைகளைப் படித்து தெளிவு பெருங்கள்.

  http://www.reliableastrology.com/mphs.htm

  சனி:
  வருணத்தில் - சூத்திரன்.
  உடையில் - பன்னிற ஆடை.
  உதவுவதில் - பாதகன்.
  துக்கத்தைக் குறிப்பவன்.
  கிரகங்களின் அரசவையில் - எடுபிடி.
  நிரத்தில் - கருப்பு.
  பாலினத்தில் - ஆண்மையற்றவன்.
  பஞ்சபூதங்களில் காற்றின் அதிபதி.
  குணங்களில் - மந்தன்.

  ஒல்லியான நீண்ட உருவம், பழுப்பு நிறக் கண்கள்,
  காற்றுபோல அலை பாயும் மனதினன்,
  பெரிய பற்கள், பரட்டைத்தலை கொண்டவன்.

  சோம்பேறி, முட்டாள்.
  உடல் உறுப்புகளில் சதையைக்குறிப்பவன்
  காலங்களில் ஆண்டுகளைக் குறிப்பவன்.
  சுவையில் - கசப்பு.
  திசைகளில் மேற்கிலும், நேரத்தில் இரவிலும் பலம் பெருபவன்.
  மரங்களில் பயனற்றவகளின் அதிபதி.
  பருவங்களில் குளிர்காலத்தை ஆள்பவன்.

  நீங்கள் சொல்லும் அறிவியல் விவரங்களெல்லாம், பொருட்களின் ஸ்தூல உருவைக் குறிப்பவை. ஜோதிடமோ அவற்றின் ஆன்ம நிலையை பேசுகின்றன.

  ReplyDelete
 7. ஆக, என்ன கூற வருகிறீர்கள் நண்பரே? பாதகன், ஆண்மையற்றவன், மந்தன், சோம்பேறியான சனி, கடவுள்களின் தலைவனான, இரண்டு பெண்களுக்கு ஆண்மை காட்டுபவனான, தனது மயிர், நெற்றியில் இருந்தெல்லாம் உயிர் உருவாக்கும் ஆணிலும் ஆணான, எண்குணத்தானான , எந்நேரமும் ஆடிக்கொண்டிருபவனின் மேலே அருள் ஒளியை செலுத்துகிறானா?

  ReplyDelete
 8. அறிவியல் என்பது மனிதன் தனது ஐம்புலன்களினால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அறிந்ததே...!!!
  நமக்கு உள்ள புலன்களை தவிர வேறு புலன்களை பற்றி நாம் முழுதும் அறிய இயலாது.
  சிலவற்றை அறிந்திருக்கிறோம் , வௌவால்கள் ultrasound உற்பத்தி செய்வதுபோல், புறாக்கள் திசை உணர்வதுபோல் .
  இவ்வாறு இருக்கும்போது , அனைத்தையும் அறிவியலால் விளக்கி விட முடியும் என்று எந்த உண்மையான விஞ்ஞானியும் நம்ப மாட்டான்.
  இந்த அடிப்படை புரிதலோடு நோக்குங்கள். தெளிவடைவீர்கள்.
  ஒன்றை நீங்கள் நம்ப வேண்டுமானால் , அதன் ஆதாரம் உங்களுக்கு வழங்கப்படும்போது அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு நமது மூளையில் எதாவது பதிவு இருக்க வேண்டும் . இல்ல விட்டால் நம்ப மாடீர்கள்.
  உங்கள் மூளையில் உள்ள பதிவுகள், உங்களுக்கு கற்பிக்கப்பட்ட அறிவியலின் அடிப்படை மட்டுமே.
  நிரூபிக்க பட்டதாக கூறப்படும் புதிய அறிவியல் உண்மைகளை உங்களுக்கு கூறினால் உங்களால் உடனே நம்ப முடியுமா..?
  ஆதாரமாக ஒரு புதிய phenomenon பற்றி சொன்னால் , எப்படி ஏற்றுகொள்ள முடியும் , ஏனெனில் அந்த புதிய phenomenon பற்றி நாம் கற்பனை கூட செய்திருக்க மாட்டோம் . ஆனால் ஏற்கிறோம் .

  ReplyDelete
  Replies
  1. அறிவியல் என்பது மனிதன் தனது ஐம்புலன்களினால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அறிந்ததே...!!!
   நமக்கு உள்ள புலன்களை தவிர வேறு புலன்களை பற்றி நாம் முழுதும் அறிய இயலாது.///உண்மைதான் இதைத்தான் பரடொக்ஸ் என்று கூறுவார்கள் ஐம்புலங்களால் அறியமுடியாதவை இருக்கின்றன அல்லது இருக்கலாம் என்பதை எந்த புலத்தை வைத்துக்கண்டுபிடிப்பீர்கள்

   எனக்கு மாஜிக்,மிராக்கிள்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை நிரூபிக்கப்பட்டால் உண்மை என நம்புபவன் குறைந்த பட்சம் லாஜிக்காவது இருக்கவேண்டும்...அல்லாவிட்டால் அனைத்துமே புனை கதைத்தான்...எனக்கு தெரியாத கேள்விகளுக்கு நான் கடவுளையோ எனக்கு மேற்பட்ட சக்தியையோ பதிலாக கூறி நான் தப்பிக்கமாட்டேன் தெரியாதென்றால் தெரியாது...எல்லாவற்றிற்கும் பதில் கடவுளாக இருந்தால் எதற்குமே ஆராய்ச்சி தேவையில்லை ஆய்வகங்களும் தேவையில்லை...பகுத்து அறிதல் தொடர்பான விடயங்களில் நம்பிக்கைகளுக்கு இடமில்லை...உங்களிடன் ஆதாரம் இருக்கின்றதா? நிரூபியிங்கள் லொஜிக் இவற்றைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம்... நான் கூறியவற்றுள் ஏதாவதுடன் நீங்கள் நம்புபவற்றிற்கு பதில்கொடுத்தால் நான் அதை நம்புகின்றேன்

   Delete
 9. நான் மூடநம்பிக்கைகளை ஏற்றுக்கொள்பவன் இல்லை.
  நான் சொல்ல வந்தது , மனிதனால் நிருவப்பட்டவைகள்(proved ) மற்றும் நிறுவப்பட இருப்பவைகள் மட்டுமே உண்மைகள் இல்லை.
  உண்மைகள் இருந்தவை , இன்றும் இருப்பவை , என்றும் இருக்க இருப்பவை.
  இவைகள் அனைத்தையும் மனிதன் நிறுவி விடுவான் என்று நாம் நினைத்தால் , நாம் பகுத்தறிவு வாதிகள் இல்லை, அறிவிலிகளே..!!
  கடைசி மனிதன் இந்த பூகோளத்தில் இறந்த பிறகும் , சில உண்மைகள் நிறுவப்படாமல் இருக்கும் என்பது உறுதி.
  அதனால் அந்த உண்மைகள் பொய்யாகாது.
  நான் உண்மைகள் என்று சொல்வதை .. நீங்கள் திருநள்ளாறு கோவிலுடன் பொருத்தி பார்க்காதீர்கள் . பொதுப்படையாக பாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மனிதனால் நிருவப்பட்டவைகள்(proved ) மற்றும் நிறுவப்பட இருப்பவைகள் மட்டுமே உண்மைகள் இல்லை.
   உண்மைகள் இருந்தவை , இன்றும் இருப்பவை , என்றும் இருக்க இருப்பவை.
   இவைகள் அனைத்தையும் மனிதன் நிறுவி விடுவான் என்று நாம் நினைத்தால் , நாம் பகுத்தறிவு வாதிகள் இல்லை,//இவைகளை மனிதனால் நிறுவமுடியாது அல்லது கண்டுபிடிக்க முடியாது என்பதை எதைவைத்து கண்டுபிடித்தீர்கள்

   Delete