Monday, 29 October 2012

வாலி-வாலில்லையே எப்படி வாலியானாய்?


ஒருமுறை வாலியென்ற கையொப்பமுடன் வாலி வரைந்த பாரதியின்
படத்தை வாங்கிப் பார்த்த தமிழ் வாத்தியார், படத்தைப் பாராட்டியதோடு
நக்கலாக வேறொன்றையும் சொன்னார்.
“உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலின்னு பேர் வெச்சுக்கிட்டே?”
அதைக் கேட்டு சுற்றி நின்ற மாணவர்கள் சிரிக்க, வாலி ஒரு துண்டுச் சீட்டில்
இப்படிப் பதில் எழுதிக் கொடுத்தார்.
“வாலில்லை என்பதனால்
வாலியாகக் கூடாதா?
காலில்லை என்பதனால்
கடிகாரம் ஓடாதா?”


All India Radio வில் ஆரம்பத்தில் பணிபுரிந்தவர் பின்னர் நண்பர்களுடன் நேதாஜி என்ற பத்திரிகையை வெளியிட்டார் முதல் பிரதியை வெளியிட்டவர் யார் தெரியுமா கல்கி.
அந்தகையெழுத்துப்பத்திரிகையில் சேர்ந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவர்தான் எழுத்தாளர் சுஜாதா.

இயற் பெயர் ரங்கராஜன் சைக்கிள் காப்பில் ஆட்டோ ஓட்டுவதில் வாலி வல்லவர் உதாரணம் வேண்டுமா? தசாவதாரம் படத்தில் கல்லைமட்டும் கண்டால் கடவுள் தெரியாது பாடல் கேட்டிருப்பீர்கள்..அதில் ஒரு வரிவரும் நீங்கள் கவனித்திருக்கலாம்.." நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர்தான் ராஜனுக்கு ராஜன் இந்த ரங்க ராஜன்தான்" எந்த ரங்கராஜன் என்று நினைத்தீர்கள் எல்லாம் இந்த ரங்க ராஜன்தான்.

“ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!”
கவிஞர் வாலி அவர்கள் தன் பள்ளிப் பருவத்தில் எழுதிய வைர வரிகள்!

ஒரே ஒரு பாடலில் புகழின் உச்சிக்கு சென்றவர் வாலி
 இப்பொழுதும் பலரால் முனுமுனுக்கப்படும் பாடல் படகோட்டி படத்தில் 

“கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -
அவன் யாருக்காகக் கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான் -
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!

இப்பாடல் 1964 இல் வந்து இன்னமும் உயிருடன் உலா வந்துகொண்டிருக்கின்றது....

இதுவரை 10 000 மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
பிறந்தது திருவரங்கத்தில்

நம்மைக் கொண்டு எத்தனை
சிலுவைகள் செய்கிறார்கள்..
ஆனால் அவர்களுக்குள் ஒரு
இயேசுவைப் படைக்க முடிய வில்லையே!
- கவிஞர் வாலி

கவிஞர் வாலி, கவியரசர் கண்ணதாசனோடு ஒரு பட்டிமன்றதிற்கு போயிருந்தாராம் . பட்டிமன்ற தலைப்பு, ‘கற்பில் சிறந்தது கண்ணகியா?  மாதவியா?‘  என்பது.
‘நீ சொல்லு யார் மேல் கண்ணகியா ?மாதவியா?’ என்று கவியரசர் கேட்க கவிஞர் வாலி சொன்ன பதில் ‘அண்ணே ! ரெண்டு பேருமே பீமேல் (female) தான்

அவதார புருசன்,பாண்டவர் பூமி,ராமாணுஜ காவியம் போன்றபல நூல்களையும் எழுதியுள்ளார்.திரைப்பட பாடல்களுக்கு மட்டும் பங்களிப்பை செய்யாமல் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.ஹேராம் ,சத்தியா போன்ற படங்களில் நடித்துள்ளார்.


ஒரு முறை வாலி வாழ்க்கை வெறுத்துப்போய் தற்கொலை செய்வதற்காக சென்றாராம்.பாடல் கேட்டது "மயக்கமா தயக்கமா.....உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு"கண்ணதாசனின் வரிகள் வாலையைக்காப்பாற்றின.

கமலஹாசன் அபூர்வசகோதரர்கள் படத்திற்காக வாலியை காதல்தோல்விப்பாடல் எழுதித்தரும்படி கேட்டார்.அவரும் எழுதிக்கொடுக்க கலல் திருப்தி இல்லை மாற்றுங்கள் என்று கூற இவர் 6 தடவைகள் மாற்றிக்கொடுத்து இதற்குமேல் என்னால் முடியாது இவ்வளவுதான் என்னால் முடிந்தது என்று கூறி கொடுத்தார்.பாடல் உன்னை நினைத்தேன் பாட்டுப்படித்தேன் தங்கமே ஞானத்தங்கமே" தேசியவிருதை வாங்கியது பாடல்.

ஒரு எலிமெண்ட்ரி ஸ்கூல். ஸ்ரீரங்கம் உயர்நிலைப் பள்ளியின் பராமரிப்பில் உள்ளது.அங்கு ‘காலேஜ் குமாரி’ என்று ஒரு நாடகம் நான் எழுத பள்ளி மாணவர்களை வைத்துப்போட்டேன்.
அதன் ஒத்திகையை மாலை நேரங்களில் பார்க்க, இரு பையங்கள வருவார்கள். இருவரும் இருபதை நெருங்கிக்கொண்டு இருந்தவர்கள். சற்று முன்பின் இருக்கலாம்.
குடுமி வைத்துக்கொண்டு செக்கச் செவேலென்றிருந்த பையனை – நாடகத்தில் பெண் வேஷம் போடக் கேட்டேன். அவன் வேத பாடசாலையில் படித்துக்கொண்டிருந்ததால் வேஷம் கட்ட ஒப்பவில்லை.
இன்னொரு இளைஞன் – நாடக ஒத்திகையை வேடிக்கை பார்க்க வந்தவன்.
அந்த இளைஞன் பக்கத்தில் உள்ள T.S.T. பஸ் டிப்போவில் பயிற்சி மெக்கானிக்காகப் பணியாற்றிக்கொண்டிருப்பவன். 
நாடகத்தை வேடிக்கை பார்த்த – T.S.T. பஸ் டிப்போவில் பயிற்சி மெக்கானிக்காகப் பணிபுரிந்த பையன் பேர் –திரு.கணேசமூர்த்தி. சிவாஜி கணேசன் என்று சொன்னால் புரியும்


“நான் திருச்சியில் நாடகம் போட்டபோது புக்
செய்திருந்த நடிகைக்கு காய்ச்சல்  வந்து விட்டது.
இதை  அறிந்ததும்   நாடகம்  நடக்குமோ
நடக்காதோ என்று எனக்கும்காய்ச்சல் வந்து  விட்டது.

அப்போது திருச்சி வானொலியில்

ஒரு  நாடகத்தில் நடிப்பதற்காக சென்னையிலிருந்து
ஒரு பெண்  வந்திருந்தார்.

என்னுடைய நண்பர் ஒருவரின் பரிந்துரையில்

அவர் என் நாடகத்தில்  நடித்தார்.  அடுத்த நாள்
அவரை ரெயில்  ஏற்றி அனுப்பும்போது
“நீ  வாழ்க்கையில் பெரிய ஆளாக வருவாய்”
என்று வாழ்த்தி அனுப்பினேன்.

அந்த பெண்  தான்  முதல்வரின் துணைவியார்
ராஜாத்தி” !!

((கவிஞர் வாலி (நினைவு நாடாக்கள்)))

2007 இல் வாலிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது
ஒரு லெஜண்டைப்பற்றி இன்னொரு லெஜண்ட் சொன்னால் அது எப்படி இருக்கும் நாகேஸ் வாலிபற்றி
"இறைவரில்லா ஆலயத்தில் ஏற்றிவைத்த
தீபம் இரவுபகல் எரிவதனால் எவருக்கென்ன லாபம்?"

கடலோரம் நெடு நேரம் கதைபேசினாய்
என்னை கடல் சேர்த்து நீ மட்டும் கரை ஏறினாய்

காலமகன் போட்டுவைத்த ஆலமர ஊஞ்சலிலே
ஏழைமக்கள் ஆடுகின்றார் ஆராரோ ஆராரோ
இதில் எதிர்கால மன்னவர்கள் யார் யாரோ யார்யாரோ

இளையராஜா வாலியைப்பற்றி
No comments:

Post a Comment