Friday, 19 October 2012

காந்தியும் கத்ரீனா கைஃபும்

பேஸ்புக்கில் பல விடயங்களை பகிர்ந்துகொள்வார்கள்.ஒரு பான் பேஜ்ஜில் பகிரப்பட்ட ஒரு படத்திற்கு கீழே ஒருவர் போட்ட ஸ்ரேட்டஸ்தான் இப்பதிவுக்கு காரணம்.முதலில் அதை ஸ்கிறீன் ஸொட் எடுத்துவைத்துள்ளேன் பார்த்துவிடுங்கள்.
மேலே சாருக் கத்ரீனாவின் நெருக்கமான காட்சி காட்டப்பட்டுள்ள படம் கீழே மகாத்மா காந்தி த பெஸ்ட் மான் எவெர் போர்ன் இன் இண்டியா

பேஸ்புக்கில் போதுமான அளவிற்கு தற்பொழுது பான் பேஜ்கள் எல்லாம் உருவாகியுள்ளன.இது ஹீரோக்கள் செலிபிரேட்டிகள் போன்றவற்றுடன் நின்றுவிடாது தனி நபர்களுக்கும் ஆரம்பிக்கப்படுகின்றது.நீங்கள் விரும்பினால் உங்களுக்கே ஒரு பான் பேஜ்ஜை உருவாக்கிக்கொள்ளமுடியும்.இது அனைவருக்கிம் தெரிந்தவிடயம்.சினிமா ஆர்ட்டிஸ்ட் நடிகர்களுக்காக உருவாக்கப்படும் தளங்கள் ஏதோ அவர்களின் படங்கள் வாழ்க்கைகுறிப்புக்களை மட்டும் பகிர்ந்துகொள்கின்றன என்று தவறாக எண்ணிவிடாதீர்கள்.பான் பேஜ்களில் உலக யுத்தமே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

சாதாரண வார்த்தைகளால் அல்ல பப்பிளிக்காக கூறமுடியாத வார்த்தைகளில் குடும்ப உறுப்பினர்களையும் வம்புக்கிழுத்து இந்த சண்டைகள் தொடர்கின்றன.இது பெரும்பாலும் அஜித் வேர்ஸ் விஜய் பான்களுக்கிடையில் தொடர்கின்றது.இப்படியான பான் பேஜ்களை உருவாக்கிவிட்டு 14000 ,20000 லைக்குகளை பெற்றுக்கொள்வது என்பது சாதாரணமான விடயமல்ல.ப்ரொமோட் பண்ணவேண்டும்.ஒவ்வொரு நாளும் பேஜில் அப்டேட் செய்யவேண்டும்.இதன் மூலம் பேஜிற்கு அதிக லைக்குகளை கொண்டுவரமுடியும்.விளம்பரப்படுத்துவதற்கு பேஸ்புக்கே வசதிகள் செய்துதந்தாலும் அவற்றிற்று பேஸ்புக்கட்டணம் அறவிடுவதால் வேறுவழிகளைத்தான் கையாளவேண்டும்.பேஸ்புக் குறூப்களில் தமது பேஜ்களை பகிர்ந்துகொள்ளல்.வேறு பிரபலமான செலிபிரேட்டி.அக்ரர்களின் பேஜ்களில் கொமெண்டாக பேஜ் லிங்கைக்கொடுத்துவிடுதல் போன்றவைதான் அவை.

சினிமா ஆர்டிஸ்ட்களின் பேஜ் ஆகையால் ரசிகர்கள் கேவலமாக மோதிக்கொள்வதை நாம் கண்டுகொள்ளத்தேவையில்லை சினிமாதான் அவற்றை சொல்லிக்கொடுத்தது சோ பிரச்சனை இல்லை.சம்பந்தப்பட்ட நடிகர்களே கூறியும்கூட இவர்கள் அடங்குவதாக இல்லை.ஆனால் உண்மையில் ஒரு நடிகருக்கு ரசிகராக இருக்கும் ஒருவர்தான்  அந்த நடிகருக்கு சார்பான அல்லது வேறு ஒரு நடிகருக்கு எதிரான பேஜ்ஜை உருவாக்குகின்றாரா என்று பலர் சிந்திப்பதில்லை என்பது வேறுவிடயம்.சினிமா சார்ந்தது இதற்கு கத்தி ஒரு பயனும் இல்லை.நாசமாய் போகட்டும் விடுங்கள்

ஆனால் காந்தி ,நேரு,ஐன்ஸ்டீன்,பாரதியார் போன்றவர்களுக்காக பான்பேஜ்ஜை உருவாக்கிவிட்டு அதை விளம்பரப்படுத்துவதற்கு சன்னிலியோனின் பான் பேஜ்ஜிலாய்யா கொண்டே ஸெயார் செய்வது...கொய்யால...
இப்படியானவர்களின் பேஜை உருவாக்குவதற்கு குறைந்தது அவர்கள் மீது மரியாதைவருமளவிற்காவது அவர்களைப்பற்றியவிடயங்களை தெரிந்திருக்கவேண்டும்.அடிக்கடி அவர்கள் வரலாறு அவர்கள் கூறியவிடயங்கள் அது இது என்று எதையாவது போடுவதற்கு விடயம் தெரியவேண்டும்.சோ அவர்களைப்பற்றி தெரிந்த ஒருவன் செய்யும் காரியமாக இது படவில்லை.இவ்வாறான வரலாற்றுப்பிரபலங்களின் பேஜ்ஜை நடத்துபவர்களின் கவனத்திற்கு பெரும்பாலும் காந்தி,நேரு ,பாரதி போன்றவர்களின் பேஜை லைக் செய்வதற்கு ஒரு சென்ஸ்வேண்டும் அதை சாருக்கான் ரசிகர்களிடமோ சன்னிலியோன் ரசிகர்களிடமோ எதிர்பார்ப்பது அடிமுட்டாள் தனம்.

நீங்கள் உங்கள் பேஜிற்கு அதிக லைக்வாங்குவதற்காக அவர்கள் மானத்தையுமல்லவா சேர்ந்து அடகு வைக்கின்றீர்கள்.சாருக்கான் கத்ரீனா  நெருக்கமாக இருக்கும் போட்டோவிற்குக்கீழே மகாத்மா காந்தி பேஜ் வந்து லைக் செய்யவும் மிகவும் நன்றாக இருக்கின்றது.ஆயுதம் செய்வோம் படத்தில் ஒரு சீன் வரும் சுந்தர் சி அடித்து சத்திய சோதனை புத்தகத்தை விற்பார்.பின்னர் நாசர் கூட்டி சென்று காட்டுவார் புத்தகங்கள் குப்பைக்கூடையில் கிடக்கும்.அதற்கும் இதற்கும் அவ்வளவாக வித்தியாசம் தெரியவில்லை.பான் பேஜ்ஜிற்கு அதிக லைக்வாங்குவதற்கு ஆயிரம் வழிகள் உண்டு.ஐ லைக் பவர் ஸ்ரார் என்று ஆரம்பியுங்கள் கூட்டம் பிய்த்துக்கும்.ஆனால் காந்தியின் பேஜை ஆரம்பித்துவிட்டு இவ்வாறான கறுமங்களை செய்யாதீர்கள்.

4 comments:

 1. நீங்கள் சிறிலங்காவை சேர்ந்தவரா? உங்கள் பெயரை பார்த்தவுடன் தோன்றியது. (சொந்த பெயரை)

  ReplyDelete
  Replies
  1. யெஸ் சிறிலங்காதான்

   Delete
  2. "Yogaraja"
   யோகராஜா என்ற பெயர் ஸ்ரீலங்கா தமிழர்கள் மட்டும் கொண்டுள்ள பெயர்.
   மற்றும் கந்தையா, கார்த்திகேசு போன்ற பெயர்களும் ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு உரியது. இந்தியாவில் இவாறான பெயர்களை இதுவரை காணவில்லை.
   கந்தவனமும் ஸ்ரீலங்கா தமிழர்களுக்கான பெயர் என்று நினைக்கிறேன்

   Delete