Monday, 29 October 2012

ராஜன் கைது காணொளி-கோப்பியம்

ஆனால் இதில் தன்னை 2 வருடங்களாக ஆபாசமாக பல்வேறு கோணங்களில் சித்திகரித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.இதைப்பற்றிய தொகுப்பை வெளியிட்ட ராஜ் டி.விற்கு சின்மயி சார்பிலான விடயங்கள் மட்டுமே தெரிந்துள்ளது என்பது  தெளிவாகின்றது. மீனவர்கள் பற்றி சின்மயி வெளியிட்ட கருத்தோ இட ஒதுக்கீடு பற்றி சின்மயி கூறிய கருத்தோ வெளியிடப்படவில்லை.2011 இல் இருந்து இவைகள் தொடர்பாக சின்மயி கூறிவந்த விடயங்கள் எதுவுமே இங்கு ஆராயப்படவில்லை.ஆக செக்ஸ் மிரட்டல் கொடுத்தார்கள் பொலீஸ் ராஜன் ,சரவணகுமார் போன்றவர்களது கைதும் ஆணாதிக்கம் தொடர்பான கருத்துக்கள் வழக்கறிஞரால் வெளியிடப்பட்டுள்ளதும் காணொளியில் உள்ளது.

இது தொடர்பில் நீங்கள் வாசிக்கவேண்டிய பதிவு

ஒரு பெண் சம்பந்தப் படுத்தப்பட்டு, பாலியல் தொல்லையோடு  தொடர்புபடுத்தி மேற்கொள்ளும் எந்த ஆதாரமுமற்ற குற்றச்சாட்டு ஒன்றே சாமானியன் ஒருவரின் வாழ்க்கை முழுவதற்கும் தண்டனை தரப் போதுமானது - நம் சமூகத்தில்!


சாமானியர்கள் மீது சந்தேகம் என்ற என்று வந்துவிட்டாலே ஆயுள் முழுவதும் குற்றவாளியாகவே பார்த்து ஒதுக்கும் சமூகம் நம்முடையது. ராஜன் விடுதலை செய்யப்பட்டபின் வேறு வேலை தேடிக்கொள்ளலாம். ஆனால்.. சுற்றத்திலுள்ளவர்களின் அவர்மீதான பார்வை? அதை மாற்ற முடியுமா?

4 comments:

  1. நண்பர்களே தங்கள் வலைப்பூவை பிளாக்கரில் இருந்து அடைய முயற்சித்தால் மணிக்கணக்காக ஆனாலும் திறக்க மாட்டேன்கிறது. சற்று கவனியுங்கள். தற்போது தமிழ் மனத்தில் இருந்து வந்திருக்கிறேன். கூகுள் ரீடரில் திறக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா என்ன பிழை என்று தெரியவில்லை கவனிக்கின்றோம் தகவலுக்கு நன்றி

      Delete
  2. சின்மயிக்கு எதிராக மீனவர் ஆதரவு அமைப்போ, இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான அமைப்போ களத்தில் இறங்கி இருக்க வேண்டும். அப்போது தான் ஊடகங்கள் சின்மயி அவர்களுக்கு எதிராக பேசியவற்றை வெளியிடும், யாருக்கும் தெரியாத இணைய எழுத்தாளர்களின் கருத்துக்களை அவர்கள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். எல்லாம் பணம் மற்றும் டிஆர்பி ரேட்டிங் சாமி.

    ReplyDelete
    Replies
    1. //மீனவர் ஆதரவு அமைப்போ, இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான அமைப்போ களத்தில் இறங்கி இருக்க வேண்டும். அப்போது தான் ஊடகங்கள் சின்மயி அவர்களுக்கு எதிராக பேசியவற்றை வெளியிடும், யாருக்கும் தெரியாத இணைய எழுத்தாளர்களின் கருத்துக்களை அவர்கள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.// உண்மைதன் ஆனால் பிரச்சனை சம்பந்தப்பட்டிருப்பதே இணையத்தினூடகத்தான்... நாம் ஒரு போஸ்ட்டைப்போடுவது என்றாலே விக்கியைப்பார்த்து,மேலும் 4 தளங்களைப்பார்ட்து இதை யாரும் தமிழில் போட்டிருக்கின்றார்களா என்று பார்த்துத்தான் போஸ்ட்டே போடுகின்றோம் அப்படியிருக்க..ஒரு பிரச்சனை தொடர்பான ஆராய்தலை வெளியிடும் நிகழ்ச்சி எவ்வளவுக்கு தனது முயற்சியை செய்திருக்கவேண்டும்....அவர்கள் ரேப்பண்ணினது மாதிரியல்லவா போட்டிருக்கின்றார்கள்....நீங்கள் கூறியது போல் ஏதாவது அமைப்புக்கிளம்பினால்தான் உண்டு நாம் இங்கு கத்தி பயன் இல்லை

      Delete