Tuesday, 9 October 2012

ப்ரூஸ்லீயின் அரிய புகைப்படங்கள்

சிலரின் பெயர்கள் எம்மத்தியில் நிரந்தர இடத்தை பெற்றுள்ளன சில செயல்களுக்கு சிலரின் பெயர்களை வைத்துள்ளோம் அப்படியானவற்றிற்கு உதாரணம்தான் ப்ரூஸ்லீ முரட்டுத்தனமாக நடக்கும் ஒருவனை பார்த்து நாம் ஆமா உனக்கு ப்ரூஸ் லீ எண்ட நினைப்பு இந்த வார்த்தை உடனேயே வந்துவிடும் 1940 இல் அமெரிக்காவில் பிறந்தவர் ப்ரூஸ்லீ மூன்று வயதில் ஹாங்ஹங் இற்கு இடம்பெயர்ந்து விட்டார் இன்று சீனாவை சேர்ந்த ஒருவர் ஏனோ தானோ என்று கலை தூக்கினால் நிச்சயம் பயம் வரும் அவருக்கு தற்பாதுகாப்புக் கலை தெரியுமோ இல்லையோ அந்த பயம்வரும் காரணம் ஒவ்வொரு சீனா பிரஜையையும் நாம் ப்ரூஸ்லீ ஆக பார்க்குமளவிற்கு பதிப்பை ஏற்படுத்தி விட்டார் ப்ரூஸ்லீ இவரது படத்தில் சாதாரண அடியாளாக வேடத்தில் அறிமுகமானவர்தான்ஜாக்கி ஜான் ஒரு முறை சண்டைக் காட்சியில் தவறுதலாக ப்ரூஸ்லீயின் அடி ஜாக்கிக்கு பட்டுவிட ஜாக்கி துடித்து அலறி விட்டார் பின்பு ஜாக்கியிடம் ப்ரூஸ்லீ 10 ,15 தடவை மீண்டும் மீண்டும் வந்து மனிப்புக் கேட்டார் ...ஜாக்கி இப்பொழுதும் ப்ரூஸ் லீ யை பற்றி நினைவு கூறும் தருணங்களில் தான் ப்ரூஸ்லீயிடம் அடி வாங்கியதைப் பற்றி பெருமையாக கூறிக்கொள்வார் ப்ரூஸ்லீ நடிக்கும் பொழுது நொடிக்கு 24 பிரேம்கள் தான் இருந்தது ஆனால் லீயின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை பின்னர் நொடிக்கு 34   பிரேம் கொண்ட கேமராவை பயன்படுத்தினார்கள் உலக வரலாற்றில் ஒரு மனிதரின் படத்திற்கு அலை மோதிய கூட்டத்திற்கு பயந்து ஒரு நாட்டு அரசாங்கம் ஊரடங்கு சட்டம் போட்டது என்றால் அது ப்ரூஸ்லீயின் படத்திற்குத்தான் ...இதனால் தான் ஹோலி வூட் பயந்தது ...ப்ரூஸ் லீ மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இன்று ஹோலிவூட் சீனாவில் இருந்திருக்கும் 
அடி வாங்கும் ஜாக்கி ஜான் 


POSTERS 
Stamp Collection
8 comments:

 1. நிஜசண்டை தெரிந்த வல்லவர்

  ReplyDelete
 2. தமிழர்களுக்கே உரித்தான மிகைப்படுத்தல் உணர்வுடன் இப்பதிவை இட்டிருக்கிறீர்கள்.
  "ப்ரூஸ் லீ மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இன்று ஹோலிவூட் சீனாவில் இருந்திருக்கும் " இந்த வசனத்தை வாசிக்கும் போது உங்களுக்கு சிரிப்பே வரவில்லையா? ஒரு மாபெரும் கலைஞன் மற்றும் நடிகனை பற்றி எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்குரியது. அதற்காக இப்படி கணக்கு வழக்கு இல்லாமல் புழுகுவது. அவர் செய்த சாதனைகள் பல உண்டு. அதை பற்றி எல்லாம் எழுதலாம். அதை விட்டு விடு

  எப்போதுதான் இந்த தமிழர்கள் திருந்த போகிறார்களோ தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. அது மிகைப்படுத்தல் என்பதை நான் ஒத்துக்கிறன்....அதில் ஒரு சிறிய சந்தோஸம்தான்...அதில் ஒரு சிறிய லொஜிக்...அரசாங்கத்தின் ஊரடங்கு சட்டம் லீயின் படத்திற்கு மட்டும் நடைபெற்றவிடயம்...அத்துடன் ஹொலிவூட் படங்களில் அப்பொழுதெல்லாம் ஹீரோக்கள் கைதுசெய்யப்படமாட்டார்கள்...சாகமாட்டார்கள்(தமிழ்ப்படங்களின் தற்போதைய நிலை ஹொலிவூட்டிலும் இது இப்பொழுதும் சில இடங்களில் இது தொடர்கின்றது) ஆனால் லீயின் படத்தில் லீ கைது செய்யப்பட்டார்..இறந்தார்..உண்மையான சண்டைக்காட்சிகள் அத்துடன் விஜய் படத்தில் 100 பேரை பந்தாடுவார் நிஜத்தில் குழந்தை ஆனால் லீ நிஜத்தில் மோதுவார் பல பத்திரிகைகள் வேண்டுமென்றே லீயுடன் வலிந்து மோதின லீயுடன் மோதுபவருக்கு மில்லியன் டொலர்கள் பரிசு என்று இதனாலேயே பலர் போய் மூக்குடைந்து திரும்பினார்கள்....லீயின் படப்பிடிப்பில் லீயை கொலை செய்யமுயற்சிகள்(அவை தற்செயலான விபத்துக்களாக மாறியிருந்தன) இவ்வாறான காரணங்களால் இந்த லீ அலை ஹொலிவூட்டை வெகுவாகப்பாதித்தது உண்மை ஹொலிவூட் இயக்குனர்கள் லீ யிடம் வரிசையாக வந்து நின்றார்கள் என்பதும் உண்மை சோ அதனால் அப்படி ஒரு வசந்த்தைபாவித்தேன் மிகைப்படுத்தலுக்காக மன்னிக்கவும்...

   Delete
 3. "சோ அதனால் அப்படி ஒரு வசந்த்தைபாவித்தேன் மிகைப்படுத்தலுக்காக மன்னிக்கவும்..."

  இதுக்கு எல்லாம் மன்னிப்பு எதற்க்கு. நான் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டிற்க்கு முதன் முறையாக வந்தேன். நான் போன அனைத்து இடங்களிலும் இருந்த சலூன் களில் ப்ரூஸ் லீ படம் இருந்தது.
  ப்ரூஸ் லீ மக்களின் மனதை எவ்வளவு பாதித்திருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ள கூடியதாக இருக்கின்றது.
  இது அவருடைய ORIGINALITY காரணமாக இருக்கலாம். இந்த விடயம் தொடர்பாக நீங்கள் மேலும் ஆய்வு செய்து பதிவிடலாம். (புதிய நுட்பம், வேகம் கூட மக்களுக்கு அப்போது புதிதாக இருந்திருக்கலாம்)  ReplyDelete
  Replies
  1. ம் ப்ரூஸ்லியைப்பற்றிய அரிய தகவல்களுடன் ஒரு போஸ்ட் ரெடி பண்ணிக்கிட்டிருக்கன் பார்ப்போம் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பகிர்ந்துகொள்கின்றேன்..

   Delete
 4. இன்றைய ஜாக்கி ஜான் அன்றைய டம்மி பீஸ் என்பதை பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. அதென்னமோ உண்மைதான்....ஆனால் ஜாக்கியுடன் ஒப்பிடும்போது இன்று பலர் டம்மிப்பீஸ்களே

   Delete