Wednesday, 24 October 2012

ஆத்திகர்களே என்னை மன்னியுங்கள்


பிரணவப்பொருளின் அர்த்தம் தெரியாது பிரமன் முழிக்க எம்பெருமான் முருகன் பிரமனை சிறைவைத்தார்.இதை அறிந்த தேவர்கள் எம்பெருமான் ஈஸ்வரனிடம் சென்று ஈஸ்வரா பிஸாரோ இங்காவை அழிக்கும்போது வரல..வஸ்கொடகாமா ஆடியபோது வரல..செங்கிஸ்கான் ரத்தத்தில் தோய்த்தபோது வரல ஹிட்லர் உலகை உருட்டியபோது வரல..வியட்னாமில் பிக்குகள் எரிந்தபோதுவரல..மதக்கலவரங்களில் ,இனக்கலவரங்களில் தாயைத்தொலைத்த கணத்தில் கூக்குரலிடும் குழந்தைகளின் கதறலுக்கும்,கணவனை கண்முன்னால் பலிகொடுத்த மனைவிகளின் கதறலுக்கும் வரல..பாகிஸ்தான் இஸ்ரேலில் அனுதினமும் பக்தர்கள் தவறாது உனக்கு செய்யும் அர்ச்சனை   போல் தொடர்குண்டு வெடிக்கும்போதும் வரல..சிலுவைப்போர் நூற்றாண்டுப்போர்களில் வரல,மங்கோலிய அரசன் தைமூர் டெல்லியில் 3 லட்சம் மக்களை வெட்டித்தள்ளியபோது வரல கஜனிமுகம்மது சோமனாதர் ஆலயத்தில்வைத்து 50 000 மக்களை வெட்டியபோதுவரல  முள்தைத்த வாய்க்காலிலும் வரல அவ்வாறு பல தடவைகள் நம்பிக்கையுள்ளோரால் வரும் ஆனா வாராது பரம்பொருளே.. ஏதோ ஒரு மூலைக்கோவில் கேட்கும் சமஸ்கிருத மந்திரத்திற்கு வரும் பொருளே.. 5 ஆடவனின் மனைவியான திரவுபதிக்கு அவதாரமாக வந்து சேலை கொடுத்து பஞ்சபாண்டவர்கள் ஐவரின் மனைவியான  திரவுபதியின் கற்பைக்காத்த பரம்பொருளே..(ஆனால் பிருந்தாவனத்தில் குளித்துக்கொண்டிருந்த கோபிகையரின் ஆடைகளை கவர்ந்த இறையே...) உம் மகன் பாலகன் முருகன் உலக சனத்தொகையை அதிகரிப்பதையும் ஒரு கௌரவமான  தொழிலாக ஒதுக்கி அதற்கு பிரதிநிதியாக ஒதுக்கினீர்களே பிரமன்.அவரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளான்.நீவிர் தயவு கூர்ந்து பிரமனைக்காத்திடல் வேண்டும்.இல்லையாயின் வீறிட்டு எழும் உலக சனத்தொகை அதிகரிக்காது உலகம் ஸ்தம்பித்துவிடும்.
இதைக்கேட்ட எம்பெருமான் முருகனிடம் சென்றார்.

பாலகா பிஸாரோவை கைதுசெய்திருக்கலாம்,வஸ்கொடகாம,கிட்லர்,முசோலினி,செங்கிஸ்கான்,மத,இன கல்வரங்களுக்கு இதுவரை காரணமானவர்கள் இவ்வளவு ஏன் நித்தியானந்தாமாக திரிகின்றானே ஒருவன் கடைசி அந்த அந்துப்பூச்சியையாவது கைதுசெய்திருக்கலாம் அதைவிட்டு விட்டு.சனத்தொகையை அதிகரிக்கும் ஒப்பற்ற செயலைப்புரியும் பிரமனை எதற்காக கைதுசெய்தாய்?பாலகா?

ஈஸ்வரா சனத்தொகையை இரவுபகல் பாராமல் அதிகரிக்கும் பிரமனுக்கு நமது அடியவர்கள்/எமக்கு அடிமையானவர்கள் தமது குறைகளை எமக்கு முன் கைகளையுயர்த்தி மண்டியிட்டு வேண்டிவிட்டு.அதை நிறைவேற்றுகின்றோமா? நடந்ததா? என்று கூட ஆராயாமல் நமது சட்டங்கள் சகவற்றிற்கும் ப்தில் கூறாது "ஓம்" என்று ஒன்றாக கூறும் பிரணவத்தின் அர்த்தம் தெரிவவில்லையாம்.அதனால்தான் கைது செய்தேன்.

முருகா பாலகனே நல்லவேளை நீ கூறிய அடியவன் என்பதன் விளக்கத்தை கார்ல்  மார்க்ஸ் கேட்கவில்லை கேட்டிருந்தால் முதலாளித்துவசிந்தனை கடவுளிடமும் என்று எம்மை கடிந்து கடவுளிற்கான மூலதனம் எழுதியிருப்பார்.முட்டாள்கள் தினத்தில் அது கொண்ட்டாடப்பட்டிருக்கும்.ஆனால் முருகா ரத்த ஆறு ஓடும் பூமியில் மயில் மீது விளையாடும் உனக்கு அதன் அர்த்தம் தெரியுமா?

தந்தையே கைலையை சுற்றி உலகெங்குமுள்ளவர்களின் அவலக்குரலுடன் ஓயாத ஓம்கார சத்தத்தில் நடனம் புரிபவரே.யாம் அதன் பொருளை அறிவோம்.ஆனால் அதை கூறுபவர் குருவாகவும் அதைக்கேட்பவர் கைகட்டி வாய்பொத்தி சற்ஸ்கோர் புள்ளிகளை தாறுமாறாக பெற்று வாழ்க்கையை தொலைத்த மாணவன்போலவும் கேட்கவேண்டும் தந்தையே.அத்துடன் இதை படத்துடன் எனது அதிகாரபூர்வமான  அடியவர்களின்  முகப்புத்தகத்தக பக்கத்தில் இட்டு like and share if you proud to be a hindu என்று இடவேண்டும் தந்தையே.

சரி குழந்தாய்..அணுவைத்துளைத்து ஏழ் கடலைப்புகட்டி குறுக த்தறித்த குறள் என்று நமது ஔவையார் கூற அவருக்கு சொட்டுப்பௌதீகம் வரை அனைத்தும் தெரிந்துதான் கூறினார்.like and share if you proud to be a tamilan என்று மொக்கைபோடுவதுடன் நின்றுவிடாது எனது கல்யாணத்திற்கு உலகமே வடபால் திரண்டுவரும்பொழுது தட்டையான பூமி வடக்கே தாழ்ந்தமையால் தெற்கே யாம் அகத்தியரை ஏகினோம். ஆதலால் தெற்கு தாழ்ந்து பூமி சமனிலையடைந்தது.கைகால் இழந்தவர்களது படங்கள்,அனாதைகள் அத்துடன் நிற்காமல் முடமான நாய்க்குட்டிகள் போன்றவற்றை இட்டு தன்னை முகப்புத்தகத்தில் ஒரு ஹீரோவாக சித்திகரித்துக்கொண்டிருக்கும் அந்த முகப்புத்தகத்தில்.ஹீரோக்கள் ஹீரோயின்கள் என தமக்குள் சண்டையிடக்காரணமான உள் நாட்டு தீவிரவாதிகளின் பக்கங்கள் உள்ள அதே முகப்புத்தகத்தில் உனக்கும் ஒரு அதிகார பூர்வ பக்கம் இருக்கின்றது என்று என்னை திகைக்கவைத்துவிட்டாய்.இருந்தாலும் நீ உலகையாளும் பரமசிவனின் மகன் அல்லவா ஆதலால் உனது பக்கத்தை அசஞ்சேயாலும் ஹக் செய்ய முடியாது.ஆதாலால் நீ கூறியதற்கு சம்மதிக்கின்றேன்.
இப்படியாக தந்தைக்கே பாடம்சொல்லிக்கொடுத்ததால் முருகன் தகப்பன் சாமி என்றழைக்கப்பட்டார்.

ஆத்தீகர்களே இதற்காக என்னை மன்னிக்கவும்...எனது கோபம் இந்தபதிவின் வெளிப்பாடு...கடவுளை உணரும் அளவிற்கு இன்னும் எனக்கு அருள் கிடைக்கவில்லை.பக்குவம் வரவில்லை...எதிர்காலத்திலும் வராது என்றுதான் நம்புகின்றேன்.

யாழ்ப்பாணத்தில்கூட அம்மாபகவானை பிரபல தனியார்கல்வி நிலையம் ஒன்று தூக்கிப்பிடித்து பின் தூக்கியெறிந்தது.ஆனால் இப்பொழுதும் பாடசாலை பாடசாலையாக தனியார் கல்விநிறுவனங்கள் தோறும் சென்று தமது வெங்காய பிரச்சாரங்களை செய்துவருவதாக அறிந்தேன்.பல காரணங்களால் கடவுள் மீதிருந்த கோபம்தான் எனது பதிவு.இதற்காக ஆத்திகர்களை அணுகுண்டு போட்டுதகர்க்கவேண்டும் என்று கூறவரவில்லை.அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சுதந்திரம்.ஆத்திகத்தின் பேரில் வளரும் இப்படியான விஷக்கிருமிகள் யாழிலும் முளைக்க அனுமதிக்காதீர்கள் புண்ணியமாகப்போகும்.

இது இந்துசமயத்திற்காக எழுதப்பட்டது அல்ல முருகனின் கதையாகையால் வேறுமதத்தவரை உள்ளே இழுக்க முடியவில்லை.ஆனால் கேள்விகள் சிவனுக்கும்தான் அல்லாவுக்கும்தான் யேசுவுக்கும்தான்

என்னைவிடுங்கள் எத்தனைபேருக்கு பதில்சொல்லவேண்டியிருக்கின்றது? இவர்களுக்கு என்ன பதில்?
அடிமையாக இருப்பது வெட்கக்கேடு, ஆள்வது யாராக இருந்தாலும். அப்படி ஆசைப்பட்டு அடிமையாக இருந்தால், உங்களை ஆள்பவர்உங்கள் நன்மை தீமைகளுக்கு பொறுப்பாவார்.

No comments:

Post a Comment