Saturday, 29 September 2012

WWE ரெஸ்லிங்க் உண்மையா ?பொய்யா?-06


இத்துடன் 6 ஆவது பதிவு இதில் தலைவர் அண்டர்டேக்கரைப்பற்றி கூறுவதாக கூறியிருந்தேன்.அதற்குமுன்பாக சில விடயங்களைப்பார்த்துவிடுவோம்.சில பிரபலமான டி.வி நிகழ்ச்சிகளில் ரேட்டிங்க் குறைந்தவிடன் பார்வையாளர்களை மீண்டும் அதிகரிப்பதற்காக சில பிரபலங்களை அழைப்பது வழக்கம்.அவ்வாறு WWEயும் பல துறையை சேர்ந்த பல பிரபலங்களை அழைத்துள்ளது.இதற்குள்WWEஇன் சில பழைய லெஜண்ட்களும் அடக்கம்.

யார் யார் வந்துள்ளார்கள்? ஒவ்வொருவராகப்பார்ப்போம் ஒரு லிஸ்டே இருக்கின்றது.


.5ஆவது பதிவுக்கு இங்கேகிளிக்.

மைக் டைசன்...ஆமான ஆளைத்தான் ஆமான இடத்திற்கு அழைத்திருக்கின்றார்கள்...
டைஸன் 2,3 தடவைகள் WWEற்கு கெஸ்ட்டாக வந்திருக்கின்றார்.டி.எக்ஸ் என்ற டீமுக்கு சப்போர்ட்டாக வந்த டைஸன் கிறிஸ் ஜரிக்கோவை நொருக்கியபோது....இது 1998 இல் டைஸன்வந்தபோது ஸ்ரோன் கோல்ட் டைஸனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டபோது...எனக்கு மிகவும் பிடித்தவர் ஸ்ரோன் கோல்ட்தான்.ஆனால் உண்மையை ஒத்துக்கொண்டுதானே ஆகவேண்டும்.இது ரெஸ்லிங்க் ஆகையால் டைஸன் சும்மா தள்ளியதுடன் விட்டார்.இல்லையெனில் ஸ்ரோன் கோல்டின் முகரை பெயர்ந்திருக்கும்..42 இற்கு ஒன்று என்ற வீதத்தில் தான் டைஸன் வென்றிருக்கிறான் 42 பேர் அவுட் ஒருவரிடம்தான் தோல்விஎன்றால் சும்மாவா?
ஸோன்மைக்கல் வாங்கிக்கட்டியபோது.....


அடுத்து வருகை தந்த பிரபலம் ஆணழகர் பொடிபில்டிங்கின் கடவுள்போல் போற்றப்படும் ஆர்னோல்ட் சுவாஸினேக்கர்......
ஆள் வந்ததும்தான் வந்தார் டைட்டிலை தூக்கி அவரிடமே கொடுத்துவிட்டார்கள்....hasta la vista baby.......வந்ததும் ஒஸ்ரினுக்கு உதவி செய்தார் கதிரையை எடுத்துக்கொடுத்து.இதனால் கடுப்பாகிய ட்ரிபிள் ஏஜ் தாக்குவதற்கு வர ஆர்னோல்ட் ஓங்கி ஒரு அடி அவ்ளவுதான்...முதலில் ரோக்கை சந்தித்தபோது..மேலும் வருகைதந்த பிரபலங்கள் சிலர்.....

David Michael Hasselhoff(நைட் ரைடர் ஹீரோ)

Criss Angel (பிரபல மாகிக்ஸன் மற்றயவர்களது கைகளை துண்டாக பலர் முன்னிலையில் வெட்டி முரட்டு மாஜிக் செய்பவர்.இவரைப்பற்றி தனிபோஸ்டில் பார்ப்போம்)

Hugh Michael Jackman(எக்ஸ்மான் பட ஹீரோ)

லிஸ்ட் இவர்களுடன் நிற்கவில்லை பெரிய பட்டாளமே இருக்கின்றது.இதை கிளிக் செய்து அந்த லிஸ்டை அவதானியுங்கள்.

அட முக்கியமான ஒருவரை மறந்துவிட்டேன் சில்வெஸ்ரர் ஸ்ரெலோன்...ராம்போ......அத்துடன் WWE மிகப்பெரிய லெஜன்ட் ஹல்க் ஹோகன் வந்திருந்தார்.2,3 ஜெனரேசன் ரசிகர்கள் அவருக்கு.ரண்டி அவரது தோளில் சிறுவனாக போட்டோ எடுத்தவர் என்றால் பாருங்கள்.ரசிகர்கள் கதைக்க விடவே இல்லை.ஹோகன் ஆணழகராக தெரிவு செய்யப்பட்டவர்.
இந்த சிறுவந்தான் ரண்டி ஓர்ரன்அண்டர்டேக்கர்....

டேக்கரின் சகோதரன்தான் கேன் என்று WWE காட்டியுள்ளது.ஆனால் உண்மையில் இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.பொதுவாக WWE இல் காதலர்களாக மனைவிகளாக சகோதரர்களாக காட்டப்படும் உறவுகள் டி.வி சீரியல் போன்றே போலிகளாகத்தான் இருக்கும்.

டேக்கரின் உண்மையான பெயர் Mark William Calaway . ரேக்கரின் மனைவியின் பெயர் சாரா.இது உண்மை ரேக்கரின் 2 ஆவது மனைவியின் பெயர் சாராதான்.இப்பொழுது அவரையும் விவாகருத்துச்செய்துவிட்டார்.
ரேக்கருடன்  மனேஜர் ஒருவர்( Paul Bearer) வருவார் கையில் ஜாடியுடன்.உண்மையில் இவர் ரேக்கரின் மனேஜர்தான்.
ரேக்கரின் ஃபினிஸ்ஸிங்க் சோர்ட்டான டொம்ஸ்ரோனில் உள்ள ரகசியம்.தலையை முட்டிக்கு மேலேகவைத்திருக்கவேண்டும்.இதற்கு நிச்சயம் பலசாலியான ஒருவர்தான் தேவை சாதாரணமாக ஒருவர் இன்னொருவரை இப்படிதூக்கி அடிக்க முயன்றால் இருவரும் விழுந்துவிடுவார்கள்.சோ மிகவும் கவனமாகத்தான் இருக்கவேண்டும்.ஆனால் ஒரு இடத்தில் இது வெளிப்படையாக தெரிந்துவிட்டது.முட்டிக்கும் தலைக்குமான தூரம் அதிகரித்துவிட்டது.


ஒருவரை சவப்பெட்டிக்குள் இட்டுக்கொளுத்துவது.கண்ணாடிக்கூடுக்குள் ஒருவரை வைத்து சீமெந்தால் நிரப்பிவிடுவது போன்றவிடயங்களை ரேக்கர்தான் வழமையாக செய்வார்.அப்படி ஒரு முறை தனது மனேஜரை சீமெண்ட்டினால் மூடிய போது எடிட் செய்யாது விட்ட காட்சிகள்.இந்தக்காட்சி ரசிகர்கள் இல்லாதபோது எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கார என்ற WWEஇன் ஸ்ரார் அதிகஉயரத்தால் பாய்வதை ஏதோ அவரே பாய்வதுபோல்தான் காட்டுகின்றார்கள்.ஒரு பதிவில் தெளிவில்லாத போட்டோதான் போட்டிருந்தேன்.இந்த பதிவில் அதற்கு ஆதாரமான வீடியோவே கிடைத்துவிட்டது.நீங்களே பாருங்கள்.No comments:

Post a Comment