Sunday, 23 September 2012

wwe ரெஸ்லிங்க் உண்மையா? பொய்யா?-03


நண்பர் ஒருவர் கூறினார் இவ்வளவு கஸ்ரப்பட்டு தாங்களும் அடிவாங்காமல் எதிராளியும் அடிவாங்காமல் ஆனால் பார்வையாளர்களுக்கு நிஜமாகவே சண்டையிடுவதுபோல் தோற்றமளிக்கக்கூடிய விதத்தில் தமக்கிடையிலும் யாருக்கும் இலகுவில் புரிந்துவிடாத சைகைகளுடன் ரெஸ்லிங்கில் சண்டையிடுகின்றார்கள் என்றால் நம்பக்கூடிய மாதிரியா இருக்கிறது என்றார்? சரியான கேள்விதான் ஆனால் அதுதான் உண்மை இது ஒன்றும் ஊருக்கு ஒதுக்கப்புறத்தில் போடப்படும் கூத்துக்கொட்டகை அல்ல.ஒரு வருடத்திற்கு குறைந்தது 3 பில்லியன் டாலர்களை wwe ஈட்டுகின்றது.அதற்கான முதலீடுகள்தான் இவை.சாதாரண ஒரு கட்டுமஸ்தான நபர் இதற்குப்போதாது.ஒவ்வொரு ரெஸ்லரும் 3/4 வருடங்களை இதற்கான பயிற்சியில் செலவழிக்கின்றார்கள்.ஒவ்வொரு நாளும் இவர்களுக்கு கடுமையான பயிற்சி வழங்கப்படுகின்றது.இதற்காகத்தான் தனி ஸ்கூலே நடத்துகின்றார்கள்.இவ்வாறான காரணங்களால்தான் மேடையில் இவரகள் சொதப்பாமல் சண்டையிடமுடிகின்றது.எமக்கு இவை சிந்திக்க அசாத்தியமாக இருக்கலாம் ஆனால் இவர்கள் இதற்காக மில்லியன் கணக்கான முதலீடுகளுடன் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.எனவேதான் இன்று ரெஸ்லிங்க் பிரபலமாக இருப்பதுடன் அதிகமக்கள் ரசிகர்களாக உள்ளார்கள்.இவற்றை நாமே செய்துமுடிக்க முடியுமெனில் ரெஸ்லிங்க் எப்போதோ படுத்திருக்கும்.

இதன் முன்னைய பதிவை வாசிப்பதற்கு இங்கே கிளிக்.


சிறிது காலத்திற்கு முன்பாக ஒரு செய்திகிடைத்தது.அமெரிக்காவில் ஒருசிறுவன் தனது சித்தப்பாவை கொன்றுவிட்டான் அவரைக்கொல்ல பயன்படுத்திய சாதனம் என்ன தெரியுமா?ரெஸ்லிங்கில் ஃபின்லி என்பவர் வைத்திருக்கும் கோல்ஃப் விளையாடும் மட்டை போன்ற கருவி.இதைக்கொண்டு  ஃபின்லி பலருக்கு மரண அடி அடித்திருக்கின்றார்.ஆனால் இவை எப்படிப்பட்ட அடிகள் என்பது நமக்குத்தெரியும்.சிறுவனுக்கு தெரிய வாய்ப்பில்லை அவன் ரெஸ்லிங்கில் அவர்களுக்கு பெரிதாக ஒன்றும் நடைபெறவில்லைத்தானே என்ற எண்ணத்தில் தனது சித்தப்பாவிற்கு அடிக்க அவர் இறந்துவிட்டார்.இவ்வாறான துரதிஸ்டங்கள் நடைபெறக்கூடாதென்பதற்காகத்தான்  wwe  இன் ஆரம்பத்தில் "நாங்கள் ஃப்ரொஃபசினல் ரெஸ்லேர்ஸ் நாங்கள் மேடையில் செய்யும் விடயங்கள் எங்கள் வருடக்கணக்கான பயிற்சிகளால் பெறப்பட்டவை தயவுசெய்து இவற்றை உங்கள் வீட்டிலோ பாடசாலையிலோ முயன்று பார்க்காதீர்கள்"என்று ஒவ்வொரு ரெஸ்லர்ஸும் எச்சரிக்கை விடுப்பார்கள்.

பாடசாலை நாட்களில் ரெஸ்லிங்க்மீது வெறிபிடித்துத்திரிந்த காலம் நான் எனது நண்பர்களுடன் பாடசாலையின் இடைவேளையின்போது ஆசிரியர் வராத பாடங்களில்போது ரெஸ்லிங்கில் வரும் லொக்கள் ஃபினிஸ்ஸிங்க் ஸொர்ட்கள் போன்றவற்றை ஒருவர் மீது ஒருவர் முயன்றுபார்த்திருக்கின்றொம்.ஏதோ கொஞ்சம் தாங்கக்கூடிய உடம்பாகையால் எமக்கு பெரியசேதமேற்படவில்லை.நல்லவேளையாக எமக்கு முன்பாக துண்டை விரிக்கவில்லை வேடிக்கை பார்த்த சக நண்பர்கள்  (ஆடுறா ராம ஆடுறா என்று )சில்லறையை போட்டாலும் போட்டிருப்பார்கள்.

சரி வாருங்கள் தொடருவோம். அடுத்த விடயம் ரெஃபிரி பொதுவாக ரெஸ்லிங்க்கை பார்க்கும்போது மிகவும் பாவப்பட்ட ஜீவன்களாக எமக்கு தோன்றுபவர்கள் இவர்கள் தான்.சாதாரண மனிதர்கள் எந்த பலமும் இல்லை.ரெஸ்லேர்ஸிடம் அதிகம் சட்டம் கதைத்தால் ஓங்கி ஒரே அடி ஒரே அடியில் முறிந்த பனைமரம்போல் விழுபவர்கள் இவர்கள்தான்.ஏதோ இடையிடையில் மறித்துவிடுவது மச்சில் ஈடுபடுபவர்களை பரிசோதனை செய்வது.சாம்பியன் பெலிட்டை தூக்கிக்காட்டுவது போன்றவேலைகளை செய்பவர்கள்.இவ்வளவுதானா என்று நினைக்கவேண்டாம் ரெஸ்லேர்ஸுக்கிடையில் செய்திகளைக்கொண்டு செல்லும் முக்கிய பணியை செய்பவர் இவர்தான்.அதாவது ஒருவர் அடிவாங்கி மூலையில் நிற்கும்போது அவரை மற்றவர் தொடர்ந்து அடித்துக்கொண்டிருப்பார்.இடையில் சடுதியாக ரெஃப்ரி வந்து அவர்களை பிரித்து வைத்துவிடுவார்.பின்னர் அடித்தவர் கூறுவதை அடிவாங்கி மூலையில் நிற்பவரிடம் கூறுவார்.என்ன கூறுவார்.மூலையில் நிற்பவருக்கு விலத்துமாறு கூறுவார்.இதன் பின்னர் அடிவாங்கியவர் மூலையில் நிற்க மற்றவர் மெடையின் அடுத்த எதிர் மூலையில் நின்று ஓடிவருவார்.வந்து இவரை தாக்குமுன் இவர் விலத்த ஓடிவந்தவர் மேடையின் மூலையில் மோதி விழுந்துவிடுவார்.இப்படியான பல சந்தர்ப்பங்களில் இருவரிடையேயும் தகவல்களைப்பரிமாறுவதற்கான ஊடகமாக செயற்படுபவர்தான் ரெஃப்ரி'
ரெஸ்லிங்கில் அடுத்தவிடயம்.இரண்டு சோடிகளுக்கிடையில் நடைபெறும் ராக் டீம் மச்சைப்பார்த்திருப்பீர்கள் அதில் ஒருவர் இன்னிருவருடன் மோதிக்கொண்டிருப்பார்.எதிர்ப்பக்கத்தில் இருப்பவர் சட்டவிரோதமாக உள்ளே னுழைய முயல்வார்.உடனே ரெஃபிரி இவர்களை விட்டுவிட்டு அவரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது.இங்கே இருவர் சேர்ந்து அடித்துவிடுவார்கள்.ஆனால் இவர்கள் அடித்து முடிந்ததன் பின்னர் தான் ரெஃபிரி திரும்பிப்பார்ப்பார்.இதுவும் ஸ்கிரிப்டின் ஒரு பகுதிதான்.(ஒருவரை இருவர் சேர்ந்து இவருக்கு அருகாமையிலேயே அடிக்கும் போது இவர் அது தெரியாமல் மற்றவரை வெளியில் செல்லுமாறு கூறுவாராம் நல்ல வேடிக்கை) அத்துடன் இவ்வாறு அடி வாங்குபவர் நிச்சயம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு வாங்கிய ஹீரோவாகத்தான் இருப்பார்.பல தடவைகள் இப்படி ஹீரோக்களின் டீம் தோற்றிருக்கும்.இதனால் ரசிகர்கள் கடுப்பாவார்கள்.சரி கேட்டும் கேட்காதது போல் திரும்பியும் பார்க்காமல் இவர் மற்றவரை மறித்துக்கொண்டிருந்தால் அடி கொடுத்து முடிந்து விட்டது என்பதை எப்படித் தெர்ந்துகொள்வார்?
யாரை வெளியே செல்லுமாறு ரெஃப்ரி கூறினாரோ அவரே அதற்கான சைகையையும் காட்டி விடுவார்.

எந்த ரெஸ்லிங்க் மச்சின் இறுதிக்கட்டமும் ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் அளவிற்கு விறுவிறுப்பை ஏற்படுத்தக்கூடியவை.ஆனால் சப்பலாக ஆரம்பிப்பது எவ்வாறு திடீரென்று இறுதிக்கட்டத்தை நெருங்குகின்றது.அத்துடன் மச்சின் நேரம் எவ்வாறு தீர்மனிக்கப்படுகின்றது?
அதற்கான விடை இதுதான்....
ரெஸ்லிங்க் மேடைக்கு வெளியே...ஓ அது அண்டர்டேக்கர் ஓ மை கோட்..வாட் த ஹெல்..என்று கத்துவாரே எனவுன்சர் அவரில்தான் இந்த விடயங்கள் தங்கியிருக்கின்றன.இவர்தான் ரசிகற்களுக்கு மச்சில் நடப்பவற்றை சுவாரிசயமாக எடுத்துக்கூறி  உளவியல் ரீதியாக ரசிகர்களை உசுப்பேற்றுபவர்.


இந்த இரண்டுவிரல் சிக்னலுக்கான அர்த்தம் மச்சை நிறுத்தாமல் மேலும் 10 நிமிடங்கள் தொடர்க.ஆனால் ரசிகர்களின் கூட்டம் தொடர்ந்து அதே கிளர்ச்சியில் இருக்காது. ரசிகர் கூட்டம் கிளர்ச்சியை இழக்கமுன்பே மச்சை முடிப்பதற்கான சிக்னலை வழங்குவார் எனவுன்ஸர். மச் நடைபெறும் விறுவிறுப்பில் ரசிகர்கள் இவற்றை கவனிக்கமாட்டார்கள்.

அத்துடன் ஹீரோவாக கருதப்படுபவர் ரிங்கிற்குள் நுளைந்தால் கத்துவதற்கும்,வில்லன் நுளைந்தால் பூஊஊஊ....என்று கத்துவதற்கும் ரெஸ்லிங்கை நடத்துபவர்களது மைக்குரோ போந்தான் ஆரம்பித்து வைக்கின்றது.

ரெஸ்லிங்கின் பார்வையாளர்களை நம்பவைப்பதற்கு நடத்தப்படும் அடுத்தவிடயம்.பார்வையாளர்களுக்கு அருகாமையில் ரெஸ்லேர்ஸ் தமக்குள் வெளியே சத்தம் வரும்படி அடித்துக்கொள்வார்கள்.ரெஸ்லிங்கின் ரசிகர்கள் யாராவது ஒருவர் அடிவாங்குவதை விரும்புகிறார்கள். அதற்காக நம்பி பணம் செலவளித்து வருகின்றார்கள்.இதனால் இவற்றை நம்பிவிடுகின்றார்கள்.நம்ப விரும்புகின்றார்கள்.


சரி அடுத்ததாக ரசிகர்களைக் ஹீட் ஏற்றுவதற்கு செய்யும் வேலை ரெஸ்லேர்ஸ் அழைத்துவரும் கேர்ல் ஃப்ரண்ட்ஸ். ரெஸ்லேர்ஸ் மிகவும் துடிப்புடன் சுவாரிஸ்யமாக மோதிக்கொண்டிருக்கும்போது இடையில் காலை இழுத்துவிழுத்தி விடுவார்கள்.அதோடு நின்றுவிடாது வெளியே இழுத்தி விழுத்திய அந்தப்பெண் அவருக்கு அடித்தும் விடுவார்.இதனால் விழுந்தவரின் ரசிகனுக்கு செமக்கடுப்பாகி விடும். ஜோன் சீனா ராக் போன்றவர்கள் அண்டர் டேக்கர் போன்றவர்கள் கூட இப்படி தோற்றிருக்கின்றார்கள்.ஆனால் ரெஃப்ரி உள்ளுக்குள் இருக்கும் மற்றவரை சமாதானப்படுத்திக்கொண்டிருப்பார்.பின்பு உள்ளே இருப்பவர் திரும்பிப்பார்க்கும்படி கூறிய பின்னர்தான் திரும்புவார் ரெஃப்ரி.

ஹீரோக்கள் ரிங்கிற்குள் வரும்பொழுது ரசிகர்களிடம் கைகளைக்கொடுத்துக்கொண்டுவருவார்கள்.ஆட்டோக்கிராஃப் எல்லாம் கொடுப்பார்கள்.ஆனால் வில்லன்கள் வரும்பொழுது கைகளைத்தட்டி விடுவார்கள்.இதனால் ரசிகர்கள் கொதிப்படைவார்கள்.ஆனால் கையால் தட்டு வாங்கியயவர்  வில்லனால் ரசிகர் கூட்டத்தில் யாரொருவர் அடி வாங்கினாரோ அவரும் இந்த நாடகத்தின் ஒரு பகுதி நடிகர்கள்தான்.

வாசித்து போரடித்திருக்கும் இல்லையா? சரி கொஞ்சம் சுவாரஸ்யமான  விடயங்கள்

ஷோன் மைக்கலின் ஃபினிஸ்ஸிங்க் ஸோர்ட் வெளிப்படையாக பிழைத்த சந்தர்ப்பங்கள் இதோ...


தொடரும்.....


2 comments:

  1. இதில இவ்வளவு இருக்கா?

    ReplyDelete
  2. yes boss இன்னும் இருக்கு

    ReplyDelete