Saturday, 15 September 2012

wwe ரெஸ்லிங்க் உண்மையா? பொய்யா?-02


சென்றபதிவில் wwe ரெஸ்லிங்கின் உண்மைத்தன்மையை ஓரளவிற்கு ஆராய்ந்தோம் உண்மையில் wwe சில விபத்துக்கள் நடந்ததையும் துரதிஸ்ரவசமான ஒரு மரணத்தைப்பற்றியும்,நான் ஹீரோக்கள் என நினைப்பவர்களை நாம் தீர்மானிப்பதில்லை wwe ஆல் அப்படி நினைக்குமாறு திணிக்கப்படுகின்றோம் என்பதையும் பார்தோம்.ரெஸிலிங்கிற்கென பிரத்தியேகமாக மேடை செய்யப்பட்டிருக்கும்.இதனால் சாதரணதரையில் விழும்போது ஏற்படும் பாதிப்பை விட பாதிப்புக்குறைவாக இருக்கும்.
முதல் பதிவை படிப்பதற்கு...

camera ரிக்ஸ்ஸும் இன்நிகழ்ச்சி திறம்பட நடைபெறுவதற்கு உதவியாக இருக்கின்றது.அடிக்கும் போதும் சரி,பாயும் போதும் சரி அதை கமரா மிகைப்படுத்திக்காட்டுவதில் உதவியாக இருக்கின்றது.ரெஸ்லிங்க்கை பார்க்கும் போது அதில் ஒருவர் இன்னொருவருக்கு ஃபினிஸ்ஸின் சோர்ட் அடிக்கும் போது கவனமாக அவதானித்திருக்கிறீர்களா?ஃபினிஸ்ஸின் சோர்ட்  டை அடிப்பதற்கு சில செக்கண்ட்கள் வரை ஒரு வியூவில் இருக்கும் கமரா ஃபினிஸ்ஸின் சோர்ட்  அடிக்கும் போது தூரமாக வேறு வியூவிற்கு சென்றுவிடும்.இதற்கெற்றாற் போல் 3/4 கமறா மான்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அத்துடன் ஒவ்வொரு ரெஸ்லரும் தமது கதாப்பாத்திரங்களுடன் நின்றுவிடாது அதற்கு மேலதிகமான வேலையையும் செய்கின்றனர்.தன்னுடன் மோதுபவரை பாதுகாப்பது கதிரை,சுத்தியல் போன்ற சாதனங்களால் அடிக்கும் போது எப்படித்தாக்கவேண்டும்? ஒருவர் இன்னொருவரை தாக்கும்போது தக்கப்படுபவர் எப்படி ஒத்துழைப்புத்தரவேண்டும்? என்றெல்லாம் பயிற்சியளிக்கப்படுகின்றது.இதன்காரணமாகத்தான்  நடிக்கத்தெரிந்த ஒருவர் மட்டும் இதற்கு போதாது.

யு டியூப்பில் பிரபலமான சில வீடியோக்கள்

ஓஸ்ரினிடம்  ஸ்ரனர் வாங்கிக்கட்டிய ஜோன்சீனா....உண்மையில் பின்வரும் வீடியோதான் மிகவும் அதிகமானோரால் பார்வையிடப்பட்ட வீடியோ.20,029,941 பார்வையாளர்கள்....

காலி வேர்ஸ் ரேய்மஸ்ரிறியோரொக் வெர்ஸ் கோல்ட் பேர்க்...ரொக் துண்டைக்காணோம் என்று ஓடியது இதில்தான்...
டேக்கர் காலியை முதல் முதலில் சந்தித்தல்


அத்துடன் ஸ்கிரிப்ரில் இருக்கும்படி அத்தனையும் நடைபெற்றுவிடாது.சில விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை.சரி ஒவ்வொன்றாக நோக்குவோம் ரெஸ்லேர்ஸ் அறிந்திருக்க வேண்டிய சில அடிப்படை விடயங்கள் இருக்கின்றன.

உடலை தூக்கி தரையில் மோதுதல்.இது பொதுவாக சகல ரெஸ்லேர்ஸும் செய்வதுதான்.நன்றாக கவனித்தால் உண்மை புலப்படும்.இதில் கீழே போடப்படுபவர் தம்மை தூக்க மற்றவருக்கு உதவிசெய்வார்.அத்துடன் தூக்கி கீழே மோதுபவர் கீழே விழுபவரை ஓரளவு தாங்குவார்.கீழே விழுபவர் மற்றவர் மீது தனது கைகளை ஊன்றி  உடல் பாரத்தின் ஒரு பகுதியை செலுத்துவார்.இவற்றினால் கீழே விழுபவர்க்கான சேதம் பெருமளவில் குறைக்கப்படும்.பின்வரும் படத்தை கவனியுங்கள். அதில் அடி வாங்குபவரின் கைகளை கவனியுங்கள் சீனா அவரை தூக்கி எறியமாட்டார் கீழே மேடையில் விழும்வரை சீனாவின் கைகள் அவர்மீது இருக்கும்.(சில சமயங்களில் தூகியும் எறிந்திருக்கிறார்கள்)

அடுத்த விடயம் பஞ்கள்(punch). ஆரம்பத்திலேயே கூறியிருந்தேன் சாதாரண ஒருவருக்கு ஓங்கி ஒரு குத்துவிட்டாலே முகம் புடைத்துவிடும் ஆனால் ரெஸ்லிங்கில் அடிவாங்கியதும் முகத்தை உலுப்பிவிட்டு மீண்டும் சண்டையிடத்தொடங்குகிறார்கள் என்று.பஞ்சிலும் ரகசியம் இருக்கின்றது.சாதாரணமாக  ஒருவரை கையால்குத்தும்போது கையினுள் காற்றுப்புகாதவாறு நன்றாக கைகளை இறுக்கு முஷ்டியால் ஓங்கி குத்துவோம்.இது மிகவும் வலிக்கவும் செய்யும்.ஆனால் ரெஸ்லிங்கில் குத்தும்போது ஆரம்பத்தில்  நாம் ஒருவரக்குத்துவதுபோல்தான் கையை ஓங்குவார்கள்.ஆனால் எதிராளியிடம் அடி செல்லும்போது இறுக்கியிருந்த கைகளை தளர்த்தி உள்ளே காற்று இருக்குமாறுதான் தாக்குவார்கள்.இதனால் பார்வையாளர்களுக்கு உண்மையில் தாக்கப்படுவது போல் தோன்றினாலும் உண்மையில் யாரும் வலுவாகதாக்கப்படுவதில்லை.

அடுத்து ஒரு ரெஸ்லருக்கு தெரிந்திருக்கவேண்டியது ஸ்ரொம்ப்.ஒரு ரெஸ்லர் தன்னுடன் மோதுபவரை கையால் தாக்கும்அதேநேரம் மேடையின் மீது கால்களால் வலுவாக உதைத்துக்கொண்டு தாக்குவார். இதனால் அந்த சத்தம் பெரிய அளவில் கேட்கும். நடனமாடுவது போல் காலல் மேடையை உதைப்பார்கள்.(இதுவரை கவனிக்க வில்லையாயின் மீண்டும் அவதானிக்கும்போது கவனியுங்கள்)இதனால் ஒருவர் உண்மையில் வலுவாக தக்கப்படுகின்றார் என்ற மாயைஏற்படுத்தப்படுகின்றது.அடிவிழும் கணத்தில் பஞ்சுடன் மட்டும் எமது கவனம் செல்லாமல் அந்த சத்ததின் மீதும் கவனத்தை செலுத்தவைக்கப்படுகின்றோம்.

அடுத்தவிடயம் கிக்(kick).ஒருவர் அடிவாங்கியபின் மேடையின் மூலையில் நிற்கமுடியாமல் நின்றுகொண்டிருப்பார்.மற்றயவர் எதிரே இருக்கும் மூலையில் இருந்து இவரை நோக்கி ஓடிவருவார்.உடனே மூலையில் நின்றவர் தனது கால்களைத்தூக்கி ஓங்கி உதைத்துவிட ஓடிவந்தவர் தட்டுத்தடுமாறிப்போய் விழுந்துவிடுவார்.இது நாம் பார்க்கும் காட்சி ஆனால் உண்மையில் என்ன நடக்கின்றது.மூலையில் நிற்பவர் உண்மையில் தனது கால்களை சரியான நேரத்தில் தூக்கிவைத்திருப்பாரே தவிர உதைக்கமாட்டார்.ஆனால் ஓடிவருபவர் தனது முகம் காலினருகேவந்ததும் தனது கையை காலின் குறுக்கே கொண்டு சென்று கையினால் காலைவலுவாக தள்ளுவார்.இதனால் ஓடிவந்தவர் தாக்கப்பட்டவுடன் பெறவேண்டிய அதிர்ச்சியைப்பெற்றுக்கொள்கின்றார்.

ரெஸ்லர் ஒருவர் தெரிந்திருக்கவேண்டிய 5 அடிப்படையான விடயங்களில் இறுதிவிடயம் இதுதான் தலையால் அடுத்தவரின் தலையை மோதுதல்.
உண்மையில் ஒருவர் தலையின் மீது இன்னொருவரின் தலை பலமாக தாக்கப்பட்டால் இருவருமே னிலைகுலைந்து விடுவார்கள்.சரி இதில் உள்ள தந்திரம் என்ன?ஒருவரை தலையில் தாக்கும்போது தாக்கவேண்டியவரின் தலையைப்பிடித்து வைத்து தலையை இழுத்துதன் தலைமீது மோதுவார்கள்.ஆனால் தாக்கவேண்டியவரின் தலையின் மேற்பகுதிமீது தாக்குபவர் தனது கைகளை வைத்திருப்பார்.தாக்குபவர் அதன் மீதே அதாவது தன் கைமீது தானே தாக்குவார்.அடி வாங்கியதும் வாங்கிய எஃபக்டை கொடுக்கவேண்டியது வாங்கியவரின் பொறுப்பு.
அடிப்படையான இந்த 5 விடயங்களையும் ஒரு ரெஸ்லர் திறமையாகக் கையாள்வதனால் எமக்கு இவை உண்மைஎன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது.


அடுத்தபதிவில் மேலும் இரகசியங்களை துகிலுரிப்போம்...
தொடரும்..

No comments:

Post a Comment