Sunday, 23 September 2012

innocence of muslims பின்னனியில் இருப்பவரை கொலை செய்தால் $100,000


அண்மையில் innocence of muslims என்ற திரைப்படத்தின் ட்ரெயிலர் ஒன்று வெளிவந்தது.இது யு ரியூப்பில் 3 மாதங்களுக்கு முன்னரே அப்லோட் செய்யப்பட்டாலும் அண்மையில்தான் உலகம்முழுவதும் இது சர்ச்சைக்குரியதாக மாறி பல நாடுகளில் கலவரங்களை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை இக்கலவரங்களினால் இதுவரை 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.200 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்கள்.இப்படத்தில் இறுதி இறை தூதரான நபி அவர்கள் சிறுவர்கள் பெண்களை கொல்லுங்கள் என ஏவும் காட்சிகள் நபி ஒரு பெண் பித்தர் போன்ற காட்சிகள், நபியை பெண்கள் துரத்தி துரத்தி செருப்பால் அடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தை இயக்கியவர் 65 வயதான அலன் ரோபேர்ட் அப்லோட் செய்தவர் நேக்குலா பாஸிலி என்ற எகிப்திய கெப்பிரிக் கிறீஸ்தவர் என்று நம்பப்படுகின்றது.50 லட்சம் டொலர்கள் செலவில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதுவரை 12,870,769 பார்வையாளர்கள் இந்த வீடியோவைப்பார்த்துள்ளார்கள்.

சர்ச்சைக்குரிய வீடியோ இதுதான்....

பல நாடுகளில் இஸ்லாமிய அமைப்புக்கள் இதனால் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன.யூ ரியூபில் நபிகளுக்கெதிரான வீடியோவை அகற்றுமாறு கேட்க கருத்துச்சுதந்திரத்தை காரணம்காட்டி  அகற்றமுடியாது என மறுத்துவிட்டது.இன்நிலையில் அதில் நடித்த சிந்தி லீ கார்சியா லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்டில்  யு டியூப்பில் உள்ள வீடியோவை அகற்றுமாறு  வழக்கொன்றை தொடர்ந்திருந்தார்.இதற்கு சில காரணங்களை கோர்டில் முன்வைத்திருந்தார் படத்தின் நிஜ ஸ்கிரிப்ட் எனக்கு வழங்கப்படவில்லை.படத்தில் ஒலிக்கும்  குரல்கூட என்னுடையதில்லை.திரைப்படத்தில் ஜார்ஜ் என்பவரின் மனைவியாக நடிப்பதாகவே நான் நம்பிக்கொண்டிருந்தேன்.அது பின்னர் நபிகளின் மனைவியாக மாற்றப்பட்டிருக்கின்றது.எனது அனுமதி இல்லாமல் படத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.இதன்காரணமாக படத்தை தடை செய்யவேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு வெற்றிபெற்றால் உலகெங்கிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கலவரங்கள் முடிவுக்குவரலாம் என்று நம்பிக்கொண்டிருக்க கோர்ட் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
நடிகைக்கும் இயக்குனருக்கும் இடையே ஒப்பந்தம் எதுவுமில்லை.இருந்தால் அது சமர்பிக்கப்படவில்லை.எந்தவித மாற்றத்தையும் செய்யக்கூட்டாது என்ற ஒப்பந்தமும் இடப்படவில்லை .இவற்றின் காரணமாக வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் இப்படத்திற்கு ஆதரவுதருவதாகவும் முஸ்லீம்களின் எதிர்ப்புகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் சில ஊடகங்களில் கருத்து வெளியிடப்பட்டுள்ளன.எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றியுள்ளன ஊடகங்கள்.பிரான்ஸ் நாட்டுப்பத்திரிகைஒன்று நபியை அவமதிக்கும் விதமாக கேலிச்சித்திரம் ஒன்றைவெளியிட்டிருந்தது. உடனடியாக உஸாரான பிரான்ஸ் அரசு தூதரகங்கள் பள்ளிக்கூடங்களை மூட உத்தரவிட்டுள்ளது.

அயார்ன்ஹிர்ஸி அலி 
இன் நிலையில் அமெரிக்க பத்திரிகையான நியூஸ்வீக் என்ற பத்திரிகை Muslim rang என்றதலைப்பில் அட்டைப்படத்துடன் கட்டுரைஒன்றை வெளியிட்டுள்ளது.நபியையும் முஸ்லீம்களையும் விமர்சித்து சர்ச்சைக்குள்ளான வலதுசாரி சோமாலியாவை சேர்ந்த ஆதரவாளர் பெண் எழுத்தாளர் அயார்ன்ஹிர்ஸி அலி என்பவராலேயே இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.பல தீவிரவாத அமைப்புக்கள் இதற்கு எதிரான பழிவாங்கலுக்கு மக்களை அழைத்துள்ளன.அல்கொய்தாவும் அமெரிக்க தூதுவரை கொன்ற நடவடிக்கைக்கு மேலதிகமாக பல தாக்குதல்களுக்கு அழைத்துள்ளது.பல முஸ்லீம் நாடுகளில் ஆர்ப்பாட்டம்  நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

 Ahmed Ghulam Bilour
இது இப்படியிருக்கா பாகிஸ்தானை சேர்ந்த மத்திய ரெயில்வே அமைச்சரான  Ahmed Ghulam Bilour  முஸ்லீம்களை அவமதிக்கும் இந்த வீடியோவை ஏற்றுக்கொள்ளமுடியாது.இந்த வீடியோவிற்கு பின்னனியில் இருக்கும் நபரை கொலை செய்தால் எனது சொந்தப்பணத்தில்  $100,000  பரிசாக அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இத்தோடு நிற்காமல் தலிபான்,அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்களையும் அழைத்துள்ளார்.

said: “I also invite Taliban and Al Qaeda brothers to be partners in this noble deed.”

உலக் அளவில் இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருந்தாலும் அமெரிக்காவை  பொறுத்தவரை கருத்துச்சுதந்திரத்தை கொண்டு இதற்கெதிரான கோசங்களை தூசியாக்கிவிடமுடியும். அமெரிக்க ஜனாதிபதித்தேர்தல் காரணமாகத்தான் அமெரிக்கா இதன் மீது கவனம் செலுத்துகின்றதோ என்றும் எண்ண தோன்றுகின்றது.
நம் சகோதர வலைப்பூக்கள் தளங்களிலும் இது தொடர்பான பாதிப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
ஒரு சாரார் இது சரிதான் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.ஒரு மதத்தை சார்ந்த மற்ற மதத்திற்கு எதிரானவர்களை ஒன்றும் செய்யமுடியாது தண்டிக்கத்தான் முடியும்.ஆனால் பகுத்தறிவான கருத்தை முன்வைப்பதாக நினைத்துக்கொண்டு இவ்வாறான கருத்துக்களுக்கு எண்ணை ஊற்றுவதால் மேலும் பற்றி எரியுமே தவிர தீ அணையாது.சமயத்தால் ஏற்படும் அழிவுகளை மூட நம்பிக்கைகளை தட்டிக்கேட்க அல்லது அழிக்க அல்லது மாற்ற பகுத்தறிவு பயன்படலாம்.

ஆனால் பகுத்தறிவாளர்களாலேயே இவ்வாறான கலவரங்களை உருவாக்கிவிட முடிந்தால் உங்களது கொள்கைகளுக்கும் சமய நம்பிக்கையாளர்களுக்கும் வித்தியாசம் இல்லாது போய்விடும்.எந்த தீயை நீங்கள் அணைக்க முயல்கின்றீர்களோ உங்கள் வடிவிலேயே அதை எரியவைத்தால் பகுத்தறிவு என்ற வசனம் அர்த்தமற்றது.

தமது சமய மார்க்கத்தை மறந்து உணர்ச்சிவசத்தில் முஸ்லீம்கள் இதற்கு எதிராக போராடிவருகின்றார்கள்.இன்னிலையில் சமய சகிப்புத்தன்மை என்பவற்றை கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை.ஒரே வழி அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கிவிடுவதுதான்.சகலவற்றைவிடவும் மனித உயிர்கள் மதிப்புமிக்கவை..கொள்கைகளைக்காப்பாற்றவாவது மனிதர்கள் வேண்டுமல்லவா?

4 comments:

  1. முட்டாள்கள் !!! என்பதை பலரும் நிரூபித்துவிட்டார்கள் .. சக மனிதன் மீதான மனிதாபிமானம் செத்துவிட்டது ... !!!

    ReplyDelete
  2. இந்த போஸ்டுல லிங்கு வேற குடுத்துருக்கீங்க, உங்கள ஒன்னும் செய்ய மாட்டாங்கதானே??!!

    ReplyDelete
  3. விட்டா நீங்களே உசுப்பேத்திடுவீங்க போல பயப்படுத்தாதீங்க பாஸ்

    ReplyDelete