Wednesday, 26 September 2012

செவ்வாய்க்கிரகத்தில் இருந்து வந்த பையன்ஓர் இரவில் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து உரையாடிக்கொண்டு இருக்கின்றீர்கள் அங்கு 7  வயது  சிறுவன் ஒருவன் வருகின்றான்...அவன் செவ்வாயில் இருந்ததாக கூறுகின்றான் அங்குள்ள தொழில்நுட்பங்களைக் கூறுகின்றான் பூமியின் ஆரம்ப வரலாறுகளில் இருந்த லேமூரியக்கண்டம் பற்றியும் அபோது வாழ்ந்த லேமூரியன்கள் பற்றியும் கூறுகின்றான் இவற்றைக்கேட்ட உங்களுக்கு எப்படி இருக்கும் ?
உண்மையில் இப்படியான சம்பவம் நடந்திருக்கின்றது அந்த சிறுவனின் பெயர் "Boris kipriyanorich" , boriska என்பது நிக் நேம் இப்படியான அசாதாரண ஆற்றல் கொண்ட சிறுவர்களை "indigo" சிறுவர்கள் என அழைப்பார்கள்.இவன்  ரஷ்யாவை  சேர்ந்த சிறுவன்  ரஷ்யாவில் பிரபலமான சிறுவன் என்றால் அது இவர்தான் ..
இவரது பிறப்பு முதல் பல சுவாரசியமான அசாதாரணமான விடயங்கள் நடந்து உள்ளன ..boriska "volzhsky " யில் பிறந்தார் ..இவரது தாயார் இவரது பிறப்பு பற்றி கூறும்பொழுது "ஒரு காலையில்தான் boriska பிறந்தான் மற்ற தாய்களைப்போல் எனக்கு மகப்பேறு கடினமாக இருக்கவில்லை சடுதியகவே எல்லாம் முடிந்துவிட்டது ..எனக்கு வலிகூட ஏற்படவில்லை வைத்தியர்கள் boriska  வைக்கொண்டுவந்து எதுதான் என் குழந்தை என்று என்னிடம் தந்தார்கள்
...அவன் பார்வை வளர்ந்த ஒருவரின் பார்வைபோல் இருந்தது ..."என்று கூறி உள்ளார் .borska பிறந்தவுடன் அழவில்லை வளரும் வரை எந்த நோய்க்கும் உட்படவில்லை ...ஆனால் சாதாரண மற்ற குழந்தைகள் போலத்தான் வளர்ந்தார் ...அவர் கதைக்கவும் வாசிக்கவும் தொடங்கியது பிறந்து 8  ஆவது மாதத்தில் இதன் பின்னர் பெற்றோர் இவரை "meccano "    விற்கு கொண்டு சென்றார்கள் அங்கு boriska கணிதரீதியான சரியான உருவங்களை தானாக உருவாக்கினான் ...அவனுக்குள் வேற்று கிரகத்தினர் யாராவது இருக்கிறர்கள என்றுகூட தான் பயந்ததாக அவனது தாயார் குறிப்பிட்டுள்ளார் ...பின்பு இவன் படங்களை வரைய   ஆரம்பித்துள்ளான்...அது விளங்குவதற்கு கடினமாக இருந்தது மனநல வைத்தியர் அந்தப்படத்தை ஆய்வு செய்தார் அவனையும் பரிசோதனைக்கு உட்படுத்தினர்  ...borska அவனை சுற்றி உள்ளவர்களைத்தான் வரைய  முயற்சி செய்திருக்கிறான் என்று மருத்துவர்  கூறினார் ...
இச்சிறுவன் ஆரம்பத்திலேயே கோள்களின் பெயர்கள் உப கோள்களின் பெயர்கள் கலாக்ஸ்சி களின் எண்ணிக்கை என பலவற்றை கூற ஆரம்பித்துள்ளான் ...இப்படியான காரணங்களால் இந்த குழந்தை  விஞ்ஞானியின்  புகழ் ஒளியின் வேகத்தில் பரவியது ..இச்சிறுவன் சிறிய ஹீரோபோல் ஆகிவிட்டான் ..இவனைப்பர்க்கவருபவர்களிடம் வேற்று கிரக வாழ்க்கை பற்றியும் அங்குதான் வாழ்ந்தது பற்றியும் கூறினான் ..பலருக்கு
இவன் எவ்வாறு எவளவு சிறிய வயதில் எவ்வளவு விடயங்களைத்தேரிந்து வைத்திருக்கின்றான் என்பது ஆச்சரியமாக இருந்தது ..ஏனெனில் boriska வின் உரையாடல்  அவனது வயதை ஒத்த  சிறுவர்களின் உரையடளைப்போல் இல்லை terminology வார்த்தைகளையும் சேர்த்து உரையாடினான் இதுவே கரணம் ...


சிலர் அவனிடன் எதோ உளவியல் கோளாறு  இருப்பதாக கருதினர் ...
boriska சற்று வளர்ந்ததும் வீதிக்கு சென்று எதிர்ப்படுபவர்களைப் பற்றி எல்லாம் கூற ஆரம்பித்தான் ...சிலரிடம் போதைப்பொருட்களைப் பாவிக்கவேண்டாம் எனவும் சிலரிடம் உங்கள் மனைவிக்கு துரோகம் செய்யாதீர்கள் எனவும் கூற ஆரம்பித்தான்...
பின்பு எதிர்ப்பட்டவர்களின் எதிர்கால நிகழ்வுகளைக்கூறி அதைப்பற்றி எச்சரிக்கைகள் வழங்கினான் .. இதனால் இவரது பெற்றோருக்கு நெருக்கடி
ஏற்ட்பட்டது ..

தனது நாடு சீராக முன்றும் என்றும் ...உலகத்திற்கு 2009 இலும் 2013 இலும் பாரிய அழிவுகள் நீரினால் ஏற்படும் எனவும் கூறியுள்ளான்


இவை ரஷ்யவிஞ்ஞானிகளின் காதுக்கு எட்டியது அவர்கள் இச்சிறுவனை "earth magnetism & radio waves of the russion academy"யில்  வைத்து  பரிசோதனை செய்தார்கள்
இதை பற்றி prof valadislav lugovenko கூறும் போது இவனைச் சுற்றி  உள்ள கதிர்வீசல்கள் (mind waves)வலிமையானதாக   காணப்படுவதாகவும் இதனால்தான் இவன் அசாத்தியமான அறிவாளியாக இருக்கின்றன் எனவும் கூறி உள்ளார் ...மனித மூளையின் நினைவாற்றல் பகுதிகளில் ஒன்றாக "work and remote memmory"காணப்படுகின்றது இதில் வழக்கமாக பசி தாகம் போன்ற உணர்சிகள்  சம்பந்தமான விடயங்களும் அனுபவம் சார்ந்த விடயங்களுமே இருக்கும் ஆனால் இப்படியான இண்டிகோ சில்டர்ன்ஸ் பிரபஞ்சம் கோள்கள் போன்ற விடயங்களையும் இந்த மேம்மொரியில் இருந்து பெற்றுவிடுகிறார்கள்
இப்படிப்பட சிறுவர்களுக்கு  AIDS  தொற்றுதல் ஈட்படாத அளவுக்கு கூட அவர்களது dna கள் சிலவேளைகளில் உதவுவதாக கூறி உள்ளார் ...
 செவ்வையைப்பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வரும்  விஞ்ஞானிகளுக்கு தெரியாத விடயம் எவ்வாறு இவருக்கு  தெரிந்தது ?


 அங்கு அவனைப்பார்க்க வந்த அனைவருக்கும் அவன் தனது கதைகளைக்கூறி ஆச்சரியப்படவைத்துக்கொண்டிருந்தான். ஏதோ ஸ்டார் வேர்ஸ்ஸைப்பார்த்துத்தான் பில்டப் விடுகின்றானோ எனவும் எண்ணமுடியவில்லை.கதைகள் அவ்வளவு திருத்தமாகவும் தெளிவாகவும் 7 வயது சிறுவனிடமிருந்து வந்துகொண்டிருக்கின்றன.லெமூரியங்கள் வேற்றுக்கிரக சமூகத்தினர் பற்றிய விடயங்கள் 7 வயது சிறுவனுக்கு மிகவும் அப்பாற்பட்ட விடயங்கள்.விஞ்ஞானமே மண்டையக்குழப்பிக்கொள்ள இவன் மட்டும் தைரியமாக அனைவருக்கும் இவற்றைப்பற்றிக்கூறிக்கொண்டிருப்பதுதான் ஆச்சரியமாக இருந்தது.
(பொறிஸ்காவுடனான இந்த அனுபவத்தை எழுதியவர் Gennady Belimov  பொறிஸ்கா தனது 7 வது வயதில் செவ்வாயைப்பற்றி கதைக்க ஆரம்பித்தபோது எழுதப்பட்டது எழுத்தாளரின் பார்வையிலேயே பதிவு தொடர்கின்றது)

பொறிஸ்கா பிறந்து January 11, 1996 at 8:30 AM. 15 நாட்களில் தனது தலையை தூக்கிவிட்டான்.இவனிடம் இருந்துவந்த முதலாவது வார்த்தை "பாபா" அவர்களது மொழியில் பாட்டி.7 மாதத்தில் முதலாவது முழுமையான வசனத்தைக்கூறினான் பொறிஸ்கா "எனக்கு ஒரு ஆணி வேண்டும்".தனது 1 அரை வயதில் செய்தித்தாள்களைப்படிக்கத்தொடங்கிவிட்டான் பொறிஸ்கா.அந்த வயதிலேயே நிறங்களை வேறுபடுத்த தொடங்கினான்.2 வயதில்  வரையத்தொடங்கிவிட்டான்.இவனது ரம்யமான சிரிப்பின் காரணமாக இவனது ஆரம்ப கல்வியின்போது யாருமே இவனிடம் கடுமையாக நடந்துகொள்ளவில்லை.


இப்படி வளர்ந்துவரும்போதுதான் பொறிஸ்கா தான் செவ்வாயின் பையன் என அறிவித்தான்."செவ்வாயும் பூமையைப்போல் வாழ்வதற்கான வசதிகளைக்கொண்ட கிரகம்தான்.மோசமான அசம்பாவிதம் காரணமாக செவ்வாய் தனது வளிமண்டலத்தை இழந்துவிட்டது.இதனால் அங்கே யாரும் வாழமுடியாத சூழ்னிலையேற்பட்டது.ஆனால் அவர்கள் நிலத்தின் கீழ் இப்போது வசிக்கின்றார்கள்.செவ்வாய்க்கிரகத்தில் நான் ஒரு விமானியாக இருந்தேன் விஞ்ஞான பரிசோதனைகளுக்காக நான் அடிக்கடி பூமிக்குவருவது வழக்கம்.அப்போது இங்கே லெமூரியன்கள் இருந்தார்கள்.லெமூரிய சமூகத்தை சேர்ந்த ஒருவன் எனக்கு நண்பனாகவும் இருந்தான்.எனது கண்முன்னாலேயே எனது நண்பன் இறப்பதை பார்க்கவேண்டியிருந்தது." இவ்வாறு பொறிஸ்கா கூறினான்.


"மிகப்பெரிய அழிவு ஒன்று பூமியில் நடைபெற்றது.மலைகள் வெடித்தன.கண்டத்தகடுகள் உடைந்து கடலுக்கடியில் மூழ்கின.இவையெல்லாம் சடுதியாக நடைபெற்றன.எனது லெமூரிய நண்பன் எனக்கு இவற்றை அறிவித்து தன்னை காப்பாற்றுமாறு கூறினான்.ஆனால் நான் செல்வதற்கிடையில் ஒரு பெரிய பாறை அவனது பில்டிங்கின் மேல் விழுந்து அவன் இறந்துவிட்டான்.அந்த சம்பவத்தின் பின்னர் என்னால் மீண்டும் பூமிக்கு செல்ல முடியவில்லை.இப்பொழுது நான் இங்கே இருப்பது போல் அவனும் எங்காவது இருக்கக்கூடும் நாம் திரும்பவும் சந்திக்கலாம் என்று நினைக்கின்றேன்."


இவ்வறு பொறிஸ்கா தனது அனுபவங்களை கூறிக்கொண்டிருக்கும்போது அவனது தாயால் பொறிஸ்காவுக்கு ஒரு புத்தகம் வழங்கப்பட்டது.Ernst Muldashev என்ற எழுத்தளரின் "From Whom Do We Come?"என்ற புத்தகம்.சற்று வித்தியாசமான உணர்ச்சியுடன் அவற்றைப்புரட்டிப்பார்க்கின்றான்.அதில் லெமூரியன்கள்,பகோடாக்கள் போன்றவற்றைப்பார்க்கின்றான்.அந்த புத்தகத்தை 2 மணித்தியாலங்கள் படித்துவிட்டு.லெமூரியன்களின் கண்டுபிடிப்புக்கள் பற்றிப்பேசுகின்றான்.

"லெமூரியன்களின் உயரம் 9 மீட்டர் .அத்துடன் அவர்கள் இறந்து 800 000 வருடங்களுக்கு மேல் ஆகின்றது இருந்தும் உங்களுக்கு அவர்களை நினைவிருக்கின்றதா? என்று கேட்க.

"ஆம் எனக்கு நினைவிருக்கின்றது.ஆனால் அவர்கள் இறந்து இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது என்று எனக்கு யாரும் சொல்லவில்லை.இப்பொழுதான் தெரிகிறது."

பொறிஸ்காவுக்கு அடுத்து வழங்கப்பட்ட புத்தகம் Muldashev எழுதிய  "In Search of the City of Gods" இதில் பிரமிட்டுக்கள் எகிப்தியர்களைப்பற்றி எழுதப்பட்டுள்ளது.அவற்றையும் பொறிஸ்கா வாசிக்கின்றான்.அதில் படங்களும் வரையப்பட்டுள்ளன.

இவர்கள் பிரமிட்டில் இருந்து தமது அறிவைப்பெற்றுக்கொள்ள வில்லை அதை விட மாறுபட்ட ஒன்றில் இருந்துதான் இவர்கள் தமக்கு தேவையான அறிவைப்பெற்றுக்கொண்டார்கள்.ஆனால் அவர்களால் இன்னும் அவர்கள் பெற்றுக்கொள்ள முனைந்ததைப்பெற்றுக்கொள்ள முடியவில்லை.Sphinx ஐ எப்பொழுது அவர்கள் திறக்கின்றார்களோ அப்பொழுது அவர்களது வாழ்க்கை முற்றாக மாறிவிடும்.எதிர்காலத்தில் Sphinx திறக்கப்படும் ஆனால் எப்பொழுது திறக்கப்படும் என்பதில் என்னால் தெளிவான கருத்தைக்கூறமுடியவில்லை.

மாயன் இனத்தவர் பற்றி கருத்துக்கூறும் போது உண்மையில் அவர்கள் நவீன மனிதர்களைப்பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.

அத்துடன் பொறிஸ்கா தொடர்ந்து கூறினான்.பூமியில் இப்பொழுது என்னைப்போன்றவர்கள் பிறப்பதற்கு அவசியமான காலமாகும்.பூமி புதிய விடயங்களை அறிந்து கொள்ளவும் பூமியின் மனனிலையில் பெரிய மாற்றத்தைக்கொண்டுவரவும் என்னைப்போன்றவர்கள் அவசியமாகின்றனர்.

ஏன் இவ்வாறான ஸ்பெஸலான குழந்தைகளைப்பற்றி உங்களுக்கு எவ்வாறு தெரியும்?இப்படி ஏன் நடக்கின்றது?இவ்வாறான குழந்தைகள் இண்டிகோ குழந்தைகள் என அழைக்கப்படுகின்றார்கள் என உங்களுக்குத்தெரியுமா?

அவர்கள் பிறக்கின்றார்கள் என்பதை என்னால் உணர முடியும்.ஆனால் அப்படிப்பிறந்த யாரையும் இதுவரை இந்த நகரத்தில் நான் சந்திக்கவில்லை.
ஆனால் ulia Petrova என்ற பெண்ணும் என்னைப்போல் வித்தியாசமானவராக இருப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளது.காரணம் அவரும் தம்மில் வித்தியாசங்களை உணர்ந்துள்ளார்.
பூமியில் முக்கியமாக இரண்டு வருடங்களில் பெரிய அழிவுகள் இடம்பெறப்போகின்றது 2009 இல் முதலாவது அழிவு(இந்தக்கட்டுரை 2004 இல் வெளியிடப்பட்டது ) அடுத்த அழிவு 2013 இல்.2013 இன் அழிவு 2009 ஐ விட அதிகமாக இருக்கும்.

அப்படியானால்  நீங்கள் பயப்படவில்லையா? நீங்கள் இதனால் பாதிக்கப்படமாட்டீர்களா?

இல்லை நான் பயப்படமாட்டேன். நான் தொடர்ந்து இருப்பேன் என்பது எனக்குத்தெரியும்.செவ்வாயில் நான் வாழ்வதற்கு முன்னர் இருந்தவர்கள்  இதைவிட பயங்கரமான அழிவை எதிர் நோக்கினார்கள்.அது அணு யுத்தம்.ஆகையால் பெரும்பாலானோர் தப்பவில்லை ஒரு சிலரே தப்பினார்கள்.எஞ்சியவர்கள் புதிதாக கட்டிடங்கள் ஆயுதங்களைத்தயாரித்தார்கள்.ஆனால் முன்னர் இருந்ததை விட இதன் அளவு குறைவாகத்தான் இருந்தது.Martians(செவ்வாயில் இருப்பவர்களை இப்படித்தான் அழைப்பார்களாம்) carbon dioxide ஐத்தான் சுவாசிப்பார்கள்.(சிரித்துக்கொண்டு)எனவே இங்கு அவர்கள் வந்தால் புகைபோக்கிகளுக்கு அருகாமையில் இருக்கக்கூடும்.

அப்படியானால் நீங்கள் இப்பொழுது இலகுவாக carbon dioxide ஐ சுவாசிக்கலாமே? அல்லது ஓக்ஸிஜன் தான் தேவையா?

venkkayam
நீங்கள் ஒன்றைப்புரிந்துகொள்ள வேண்டும்.எனது உடம்பு பூமியின் காலனிலைக்கேற்ப பூமியில் உருவாக்கப்பட்டது அதனால் என்னால் ஒக்ஸிஜனைத்தான் சுவாசிக்கமுடியும்.உண்மையில் எமக்கு பூமியில் நீங்கள் சுவாசிக்கும் காற்றை வெறுக்கின்றோம்.காரணம் உங்கள் காற்று முதுமையை தரக்கூடியது.எமது கிரகத்தில் 30,35 வயது சென்றாலும் யாரையும் வயது கூடியவர் என் நீங்கள் அடையாளப்படுத்த மாட்டீர்கள்.

நீங்கள் அங்கிருக்கும் போது உங்களது பெயர் என்னவாக இருந்தது என்று நினைவிருக்கின்றதா?

இல்லை என்னால் யாருடைய பெயரையும் நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை.

உங்களின் எந்தவயது உங்களுக்கு நனைவிருக்கின்றது?
13 வயதுவரை நினைவிருக்கின்றது.அப்பொழுது நாங்கள் ஸ்பெஸல் கிளாஸ்களைக்கண்களில் அணிந்வண்ணம் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றோம்.ஒரு விசித்திரப்பொருள் ஒன்றை நாம் அழிக்கவேண்டும்.அதை அழித்துவிட்டால் செவ்வாய் மீண்டும் தப்ப வழி உள்ளது.நாம் அதை நெருங்கி யுத்தம் செய்துகொண்டிருக்கின்றோம்.ஆனால் எமக்கு காலம் சாதகமாக அமையவில்லை.அந்தப்பொருள் எப்படி இருந்தது என்று என்னால் வரைந்து காட்ட முடியும்.

போறிஸ் நாம் செவ்வாய்க்கிரகத்திற்கு அனுப்பும் கலங்கள் உடைந்துபோகின்றதே அதற்கு என்ன காரணம்?

அங்குவாழ்வோர் தமது பாதுகாப்பிற்காக ஆபத்தைவிளைவிக்கக்கூடிய கதிர்களை பயன்படுத்துகின்றார்கள்.அதனால் தான் இவை அழிவடைகின்றன.
 இது எனக்கு சற்று ஆச்சரியத்தைத்தந்தது.செவ்வாய்க்கு 1988 இல்  அனுப்பிய ரஸ்யக்கலங்களான Phobos 1,2 போன்றவை உடனேயே செயலிழந்தன.இதற்கு காரணம் ஆபத்தான Fobosov rays என கண்டுபிடித்திருக்கின்றார்கள்.ரஸ்யாவை சேர்ந்த Yuri Lushnichenko என்ற ஈ.எஸ்.பி கூடிய நபர்  USSR ஐத்தொடர்புகொண்டு உத்திகளை மாற்றாவிடில் உங்கள் மிஸின் செயலிழந்துவிடும் என எச்சரித்தாட் ஆனாலும் யாரும் இவரது எச்சரிக்கையை கருத்தில் கொள்ளவில்லை.

மல்டிபில் பரிமானங்களைப்பற்றி உங்களுக்குத்தெரியுமா?அவற்றினூடாக பயணம் செய்ய முடியுமா? கஸ்ரமான படிமுறையில்லாமல் விளங்கக்கூடியவகையில் கூறுங்கள். இவ்வுலகத்தாண்டிய சில கேள்விகளை பொறிஸ்காவிடம் கேட்டேன்.

பரிமானங்களினூடனா பிரயாணத்தை நாம் முயற்சி செய்து பார்த்துள்ளோம்.அந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தது.பூமியின் அருகில் அதன்மூலம் பிரயாணம் செய்துள்ளோம்.
இதைக்கூறிக்கொண்டு ஒரு சோக்கை எடுத்து போர்ட்டில் வரைய ஆரம்பிக்கின்றான் பொறிஸ்கா.முக்கோண உருவில் வரைகின்றான்.
இதில்  6லேயர்கள் உள்ளன. ஆகவும் வெளிப்புறத்தில் 25% durable material இருக்கவேண்டும்.அடுத்த லேயர் 30% இறப்பர் போன்ற பொருள்.அடுத்த 30% மீண்டும் அதே மெட்டல்.இப்படி தொடர்ந்து 6 லேயர்கள் இருக்கும்.ஆகவும் உட்புறட்தில்  4% மக்னட்டிக்காலான பொருலொன்று இருக்கும்.அந்த மக்னட்டிக்கிற்கு நீங்கள் சக்தியை வழங்கினால் பிரபஞ்சம் எங்கும் நீங்கள் பிரயாணம் செய்ய முடியும்.

ஆச்சரியமாக இருந்தது பொறிஸ்கா 7 வயதில் இவற்றைக்கூறிக்கொண்டிருக்கின்றான்.

தொடரும்...

No comments:

Post a Comment