Monday, 24 September 2012

பார்க்கவேண்டிய சில குறும்படங்கள்


குறும்படங்கள் தயாரித்தல் அவளவு சாதாரண விடயமல்ல ...அண்ணளவாக சாதாரண திரைப்படங்களில் இரண்டு இரண்டரை மணித்தியாலங்களில் வெளிப்படுத்துகின்ற விடயங்களை குறுகிய நேரத்தில் காட்சிப்படுத்திவிடவேண்டும் ....அதாவது 10 நிமிட குறும்படம் இரண்டரை மணித்தியால திரைப்படம் பார்த்த உணர்வு ,கருத்துக்கள் ,விடயங்களை இயலுமான அளவு உள்ளடக்கி இருக்க வேண்டுமென எதிர் பார்க்கிறார்கள் .இதற்கு குறும்படங்களில் நடிக்கும் நடிகர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் ...சாதாரண திரைப்படத்தில் வேண்டுமானால் நடிக்கவே தெரியாத ஹீரோவை அவரது நடனத்திறமையலோ அல்லது 400 பேரை பந்தாடும் திறமையை வைத்து இயக்கலாம் ஆனால் குறும்படத்தில் இதற்கு வாய்ப்பே இல்லை...குறும்படத்திற்கு அதிக அளவில் சப்போர்ட்ஆக இருப்பது பின்னணி இசை ..பல குறும்படங்களில் இசையே கதைகூறுபவராக இருந்திருக்கிறது ..திரைக்கதை குறுகிய நேரத்தை கொண்டிருப்பதால் இசை இங்கு முக்கிய பங்கை வகிக்கின்றது ... 

பல சினிமா இயக்குனர்களே திரைப்படங்களில் சொதப்புகிறார்கள் ....அவர்களது படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது தியட்டர் ஆயுள்  தண்டனை சிறைக்கைதிபோல் உங்களை பீல் பண்ண வைத்துவிடும் ..உதாரணமாக நமது இயக்குனர் இமயம் ...பேரரசு இவர் ஜேம்ஸ் கமேரோன் னுக்கே பாடம் கற்பிக்ககூடியவர் .....இவரைப்போல் இன்னும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள் (திரிஷ்டிக்கு 4 பூசணிக்காய் தேவைதானே ) இக்குறும்படங்களை பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியான விடயம் எதுவெனில் ...எதிர்கால தமிழ் சினிமா பிழைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதுதான் ...அதுவும் இளைஞர்கள் முன்வந்து இவற்றை தயாரிக்கிறார்கள் ..புதிய தலைமுறை புதிய தளம் புதிய சிந்தனை புதிய கதைக்களங்கள் என இவர்கள் சற்று பிரமிக்க வைத்திருக்கிறார்கள் ....ஹோலோகிராம் வேச்சுவல் காட்சிகள் ஏலியன் டேக்ட்நோலோஜி போன்றவற்றை குறும்படங்களிலேயே  கருப்பொருளாக பயன்படுத்தி இருக்கிறார்கள் நிச்சயமாக இவர்களுக்கு சரியான சந்தர்ப்பம் வழங்கப்படுமானால் இவர்கள் முன்னை இயக்குனர்கள் என நாம் நினைத்துகொண்டிருக்கும் இயக்குனர்களை பின்னே தள்ளிவிட வாய்ப்புள்ளது அதிலும் ஒரு பிரச்சனை உள்ளது ..ரசிகர்களின் ரசிப்புத்தன்மை ..எதை கூற வருகிறேன் என்றால் ..ஆந்திர சினிமா கேரளா சினிமா
போன்றவற்றிற்கும் தமிழ் சினிமாவிற்கும் வேறுபாடு இருக்கின்றதல்லவா அந்த வேறுபாடு ரசிகர்களின் அறிவைப்பொறுத்த விளங்கும் தன்மையைப் பொறுத்த ரசிக்கும் திறனில்  தங்கி உள்ளது
துரதிஷ்ட வசமாக தமிழ் சினிமா ரசிகர்களின் சிந்திக்கும் ஆற்றலை வளர விடாமலேயே செய்துவிட்டார்கள் ..(சிலர் மாறுபட்ட முயற்சிகளையும் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் )..இதனால் வழக்கமான தனக்கு பழக்கப்பட்ட பாணியில் இல்லாத திரைப்படத்தை பார்த்ததும் தமிழ் சினிமா ரசிகன் குழம்பி விடுகிறான் உதாரணமாக தமிழ் படங்களில் ஹீரோக்கள் இறப்பது ரசிகர்களால் தாங்கிக்கொள்ள முடியாத விடயம் ..அவர்கள் தீக்குளித்து விடுவார்களோ என்று பயந்து அவ்வாறான திரைப்படங்களை தவிர்த்து வருகிறது தமிழ் சினிமா(என்ன கொடுமை  சரவணா?).. ..இவ்வாறான முட்டாள் தனங்கள் .இளம் இயக்குனர்களால் ஓரளவிற்கு சரி செய்யப்படும் என்பதை நம்புவோம் கீழே காட்டப்பட்டுள்ள வீடியோக்களில் 
சில, நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டவை ..நாளைய இயக்குனர் ப்ரோக்ராமை பற்றி கூறுவதானால் புதிய இயக்குனர்கள் இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது ...அவர்களுக்கு புதிய தளத்தை அமைத்துக் கொடுக்கின்றது ..எல்லாம் சரிதான் ஆனால் இந்த நிகழ்ச்சியில் புதிய இயக்குனர்களின் வெற்றி நாட்டாமை வேலை செய்பவர்களது ...அறிவிலும் தங்கி உள்ளது 
மதனும் பிரதாப்பும் நாளைய இயக்குனரில் இந்த நாட்டாமைவேலையை பார்க்கும் போது புதிய இயக்குனர்களின் தளங்கள் கருத்துக்கள் புரிந்துகொள்ளப் பட்டன ..ஆனால் அவர்களுக்குப் பதிலாக சுந்தர் சி யும் பாக்கிய ராஜ்ஜும் தெரிவு செய்யப்பட்டார்கள் ...அவர்களால் புதிய இயக்குனர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போவது ஒவ்வொரு குறும்பட முடிவிலும் அவர்கள் கூறும் விமர்சனத்தில் இருந்து தெளிவாக புரிகின்றது ..ஒருவர் வெர்ச்சுவல் தொழில்நுட்பத்தை எதிர்காலத்தில் நேர்முகத் தேர்விற்காக பயன்படுத்துவதாக ஒரு குறும்படத்தை இயக்கி இருந்தார் பாவம் பாக்கியராஜ் அவருக்கு என்ன இழவு என்றே புரிய வில்லை .... சுந்தர் சி க்கு ஓரளவுக்குத்தான் புரிந்து விட்டிருந்தது ..பாக்கிய ராஜ் மீண்டும் மீண்டும் அந்த இயக்குனரை தான் ஏதோ அவரது படத்தில் பிழை பிடிப்பதாக எண்ணி தானே மூக்குடைபட்டுக்கொண்டிருந்தார் ..ஆனால் இதே இடத்தில் மதன் இருந்திருந்தால் ..நிலைமை வேறு ....எனவே புதிய இயக்குனர்களின் வேகம் அறிவு தளங்களுக்கு ஈடுகொடுக்க கூடிவர்களை நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக தெரிவு செய்தால்தான் திறமையுள்ள புதிய இயக்குனர்களுக்கு ஆக்கபூர்வமான ஊக்கப்படுத்தும் விமர்சனங்களும் ,நிறை குறைகளையும் சுட்டிக்காட்டமுடியும்..


..MUGAPUTHAGAM - FACEBOOK SHORT FILM
நிச்சயம் பார்க்கவேண்டிய குறும்படம் 


2 comments: