Wednesday, 5 September 2012

விண்வெளில் உணவுகள் எப்படி இருக்கும்?


அரை  நூற்றாண்டுகளாக விண்வெளி தொடர்பான நிலைத்தலில் நாடுகளுக்கிடையில் கடுமையான மறைமுகமான போட்டிகள் நடைபெற்றவண்ணம் உள்ளன.உதாரணம் விண்ணிற்கு மனிதர்களை முதலில் அனுப்புவது சந்திரனுக்கு செல்வது போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளில் அமெரிக்க ரஸ்ய பனிப்போர்கள்.இந்த லிங்கில் அவ்வாறான விடயம் நிலவில் கால் வைத்தல் தொடர்பான ரஸ்யா அமெரிக்க முரண்பாடுகள் விண்வெளிப்பொறியியளாளர்கள் விஞ்ஞானிகளுக்கு பெரும் தலையிடியாக இருப்பது விண்வெளிக்கு தமது வீரர்களை பாதுகாப்பாக அனுப்பிவைப்பது.அனுப்பி வைப்பதுடன் இது முடிந்துவிடாது சென்றவர்கள் திரும்ப பூமி வரும்வரை தலையிடிதான்.இரு சந்தர்ப்பங்களிலும் அனைவரும் தலையில் கைவைத்துக்கொண்டிருப்பார்கள் .இதனால் தான் வெற்றிகரமாக ரொக்கட் விண்ணி ஏவப்பட்டதும் அவர்களுக்கிடையில் அவ்வளவு ஆர்ப்பாட்டங்கள்.காரணம் இல்லாமல் இல்லை இதுவரை பல விபத்துக்களில் பெறுமதியான பல வீரர்களை விஞ்ஞானிகள் பலி கொடுத்திருக்கின்றார்கள். விஞ்ஞானிகள் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கினால்தான் விண்வெளிவீரர்களின் சாவின் சந்தர்ப்பங்களை குறைக்கமுடியும்.விண்வெளி உணவு என்பதும் கடினமான விடயம்தான் விண்வெளிக்கு செல்லும்போது ஒரு உழுந்துவடையும் டீயும் இருந்தாபோதும்ணே என்று கேட்கமுடியாது.ஆனால் என்ன உணவை என்ன விதத்தில் கொண்டு செல்லவேண்டும் அங்கு சென்று உணவை உண்ணமுடியுமா? என்றெல்லாம்  யூரிக்ககாரினை முதல் முதல் விண்ணிற்கு அனுப்பும்வரை தெரியாதல்லவா அதனால் அவரே இதற்குப்பரிசோதனைப்பொருள் ஆகிவிட்டார்.விண்வெளியில் இருந்து நீங்கள் நீரை அருந்த முடியாது போத்தலை திறந்தால் நீர் குமிழ் குமிழாக வெளியே சென்றுவிடும். சோ ஸ்ரோ வைத்து உறுஞ்சவேண்டியதுதானே.மன்னிக்கவும் அதுவும் முடியாது.போத்தலின் உள்ளே இருக்கும் அமுக்கம் உங்களால் வாயினுள் ஏற்படுத்தப்படும் அமுக்கத்தைவிட அதிகமாக இருந்தாலே வாய்க்குள் நீர் வரும்.சிம்பிளாக சொன்னால் ஸ்ரோ இல்லாமல்  ஒருகண்ணாடி போத்தலில் உள்ள பெப்ஸியை வாயை எடுக்காமல் குடிக்கமுடியுமா?ஒரு கட்டத்தில் கன்னங்கள் ஒட்டிக்கொள்ள உள்ளே இருந்து பெப்ஸி வராது அதே மாதிரியான நிலைதான்.விண்வெளியில் சாப்பிடுவதில் அத்தனை சிக்கல்கள் உள்ளன,சிலர் விண்வெளிவீரர்கள் உணவையே உண்பதில்லை மாத்திரைவடிவத்தில் மட்டுமே உணவை உண்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளார்கள்.தவறு அவர்கள் நாம் உண்ணும் பல உணவுகளை விண்வெளியில் இருந்துகொண்டே உண்கின்றார்கள்.

ஆரம்பகால விண்வெளி உணவுகள்

ஆரம்பத்தில் கூறியதுபோல என்ன உணவை சாப்பிடலாம் எப்படி பொதி செய்து அனுப்பவது என்பது யூரிக்ககாரினில் பரிசோதனை செய்யப்பட்டது.ககாரினுக்கு உணவுகளை நாம் பயன்படுத்தும் டுத்பேஸ்ட் மாதிரியான ரியூப்களில் அடைத்து அனுப்பினார்கள்.உணவு லிக்குவிட்டாக அனுப்பட்டது.இதை வீரர்கள் வேண்டாவெறுப்பாகத்தான் உண்டார்கள் அவ்வளவு கடினமாக இருந்தது.முதலில் வெண்வெளிக்கு மனிதனை அனுப்பும்போட்டியில் தோவியைக்கண்ட அமெரிக்காவும் அண்ணளவாக இதே  நுட்பத்தைத்தான் பயன்படுத்தியது. உணவுகளை விண்ணில் வைத்து உண்பதில் இருக்கும் கடினம் என்னவெனில் உணவில் இருந்து நீர் உடனடியாக ஆவியாகி கருவாடுபோல் ஆகிவிடும்.மனிதன் தான் அணிந்திருக்கும் ஸ்பேஸ்சூட்டில் இருந்து வெளியேவந்தால் அவனும் கருவாடுதான்.அத்துடன் பல உணவுகள் உறைந்துவிடும்.


ஆனால் தற்போது விண்வெளிவீரர்கள் உண்ணும் உணவிற்கும் நாம் பூமியில் உண்ணும் உணவிற்கும் அதிகம் வேறுபாடு இல்லை.உணவுகளை பொதி செய்யும் முறையில்தான்வேறுபாடுகள் உள்ளன.முக்கியமாக இவை அந்தரத்தில் மிதக்கும்போது கொட்டிவிடாமல் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.யூரிக் ககாரின் கஸ்ரப்பட்டதுபோல் இப்பொழுது இல்லை.தற்போது காற்றடைத்த அறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.இவை கதிர்வீச்சுக்களில் இருந்தும் பாதுகாப்பானவை.இந்த அறைகளினுள் ஸ்பேஸ் சூட் அனியாமலே பறந்து திரியமுடியும்.ஆனால் இவ்வாறு அறைக்குள் இருந்து உணவை உண்ணும்போது கவனமாக இருக்கவேண்டும்.பொதிகளை உடைக்கும்போது தவருதலாக தப்பி செல்லும் உணவுத்துண்டுகள் ஸட்டிலின் முக்கியமான ஏதாவது பகுதிக்குள் சென்று ஆபத்தைக்கொண்டுவரலாம் அல்லது விண்வெளிவீரரின் தொண்டையினுள் அடைபட்டுவிடலாம்.இங்கு நாம் உணவை சர்வசாதாரணமாக விழுங்குவதர்கு ஈர்ப்புவிசையும் உதவுகின்றது.ஆனால் பூமிக்கு வெளியே ஈர்ப்புவிசை நமக்கு உதவாது.எனவே தொண்டையினுள் ஏற்படும் அசைவின் மூலம் மட்டுமே உணவு கடத்தப்படும்.உணவு சற்று பெரிய துண்டாக இருப்பின் அது இடையில் தடைப்பட வாய்ப்புக்கள் உள்ளன.

கூல்ரிங்க்ஸ்,டீ போன்றவை பௌடர்களாக பொதி செய்துஅனுப்பப்படுகின்றன.வீரர்கள் அவற்றுள் நீரை இட்டுக்கலக்கி குடிப்பார்கள்.
ஆரம்பத்தில் இருந்து விண்வெளி உணவில் ஏற்பட்ட மாற்றங்கள்.

ஆரம்பத்தில் வின்வெளிப்பயணங்கள் குறைந்த நேரமாக இருந்தமையால் உணவுகளைக்கொண்டு செல்ல அவசியம் இருக்கவில்லை.1965 இல் ஜெமினி என்ற விண்கலத்தை அனுப்பிய போது ஆரம்பகால வெறுப்படையும் உணவுகளை விட சற்று சுவையான உணவுகள் அனுப்பப்பட்டன.சமைத்த உணவுகளை உறை நீரகற்றி உறை நிலையில் வெற்றிட அறையினுள் வைத்து அனுப்பப்படுகின்றது.விண்வெளிவீரர்கள் அந்த உணவில்  மீண்டும் நீர்த்தன்மையை ஏற்படுத்திவிட்டு அதை உண்பார்கள்.இதற்காக அவர்களுக்கு நீர் துப்பாக்கி வழங்கப்பட்டிருக்கும்.

இந்த முறையை  freeze-dried என்று அழைப்பார்கள்.இம்முறையினால் உணவின் சுவை கெட்டுப்போகாது. 

1969 ஜூலையில் அப்பலோ விண்கலத்தின் உதவியுடன்  நிலவில் கால்பதுக்கும் மனித முயற்சியின்போது வீரர்களுக்கு நாசா சுடு நீரை உணவுடன் சேர்த்து அனுப்பியது.சுடு நீரினால் உணவை  விரைவாக  நீர்த்தன்மை அடையச்செய்யமுடியும்.அப்பலோவில் சென்ற விண்வெளிவீரர்கள்தான் உணவிற்காக பாத்திரங்களை முதல் முதலில் பயன்படுத்தையவர்கள்.இதற்கு முன்னதாக முழு உண்வையும் வாயினுள்ளே நீண்ட நேரம் உண்ணவேண்டி இருந்தது.இந்த அப்பலோ மிஸினில் spoon bowl என்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டது.


இதன் மூலம் பக்கட் செய்யப்பட்ட  நீரற்ற உணவினுள் நீரை செலுத்தி உண்ண முடியும் இவ்வாறு  நீரை செலுத்துவதன் மூலம் உணவு களித்தன்மையாக மாறுவதால்.பொதியில் இருந்து ஈர்ப்புக்குறைவால் வெளியே பறந்து செல்லாது

அப்பலோ மிஸினில் இன்னொரு  விடயமும் அறிமுகப்படுத்தப்பட்டது.wetpacks என் அழைக்கப்படும் பொதிகள்.இவை அலுமினியத்தாலோ அல்லது பிளாஸ்டிக்காலோ ஆக்கப்பட்டவை.இந்தக்கண்டுபிடிப்பின் காரணமாக உணவுகளை freeze-dried செய்ய அவசியமில்லாதுபோனது.

1973 இல் ஸ்கைலாப் என்ற ஸ்பேஸ் ஸ்ரேசன் ஏவப்பட்டது.இதில்  முன்னரை விட வசதிகள் அளிக்கப்பட்டன.வீரர்கள் சுற்றி இருந்து உண்பதற்கு டைனிங்க் டேபிள்  வழங்கப்பட்டது.அத்துடன் ஸ்பேஸ் ஷட்டிலிலேயே குளிர்சாதனப்பெட்டியும் இணைக்கப்பட்டிருந்தது.ட்ரேக்களையும் பயன்படுத்தினார்கள்.இவற்றின் உதவியுடன் உணவை சூடாக்கமுடியும்.

2980 இல் முதலாவது ஸ்பேஸ் ஷட்டில் ஏவப்பட்டபோது வீரர்கள் அங்கேயே பூமியில் தயாரிக்கும் உணவைத்தயாரித்தார்கள்.74 வகையான உணவுகள் மற்றும் 20 வகையான குடிபானங்களை அங்கு தயாரித்தார்கள்.

விண்வெளி வீரர்களுக்கு எவ்வாறு உணவுகள் அனுப்பப்படுகின்றன?

ஒரு ஸ்பேஸ் ஸட்டில் அனுப்பப்படுவதற்கு 1 மாதம் முன்னதாகவே உணவுகள் தயாரிக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட அறைகளினுள் பாதுகாக்கப்படும்.ஸட்டில் புறப்படுவதற்கு 2 / 3 நாட்களுக்கு முன்னதாக  உணவுகள் ஸட்டிலுக்குள் அனுப்பப்படும்.
1 வீரருக்கு 3.8 பவுண்ட் ஒரு நாளுக்கான உணவை ஸட்டில் கொண்டு செல்லும்.

லொக்கர் ரேக்களில் உணவுகள் அடுக்கப்பட்டிருக்கும்.அடுக்கப்பட்டிருக்கும் ஓர்டரிலேயே வீரர்கள் உணவை உண்பார்கள்.

சில உணவுதயாரிக்கும் முறைகள்.

Rehydratable அல்லது freeze-dried foods-இம்முறையை முன்பே பார்த்திருக்கின்றோம்.உணவில் இருந்து நீரை அகற்றிவிடுதல்Intermediate moisture foods-இம்முறையில் நீரகற்றுவார்கள் ஆனாக் முற்றாக நீக்கமாட்டார்கள். (பழங்கள் போன்றவை)
Thermostabilized foods-உணவுகளை சூடாக்கி பக்ரீரியாக்களை அழித்துவிட்டு சாதாரண சூழல் வெப்ப நிலையில் பாதுகாத்தல்
Irradiated foods-சமைத்த உணவுகளை.அலுமினியம் அல்லது பிளாஸ்டிக் பைகளில் அடைத்துவிட்டு கதிர்த்தொழிற்பாட்டால் கிருமிகளை அழித்தல்.மிளகு,உப்பு போன்றவை பூமியில் இருப்பது போல் பளிங்காகவோ அல்லது துகள்களாகவோ வழங்கப்படுவதில்லை.லிக்குவிட்டாகவே வழங்கப்படுகின்றது.
 fuel cells களின் மூலமே வீரர்கள் நீரைப்பெற்றுக்கொள்கின்றார்கள்.அத்துடன் இதன் மூலமே மின்சாரமும் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.ஐதரசனையும்,ஒட்சிசனையும் நீராக மாற்றுகின்றது இது.இதன் போது மின்சாரமும் பெறப்படுகின்றது.

(பலவகையான  ஃபியூவல் செல்கள் உள்ளன.PEMFC,SOFC,AFC
இவற்றின் மூலம் சூழல் மாசு இல்லாமல் சக்தியைப்பெற்றுக்கொள்ளமுடியும்2020 இல் அமெரிக்காவில் கார்களில் இவற்றைப்பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது)
Engineers replaced the engine of the GM HydroGen3 with a microwave-oven-sized fuel-cell stack.  

சரி விண்வெளியில் விண்வெளிவீரர்கள்  நமது உணவைத்தான் உண்கின்றார்கள் எனில் அது  பூமியில் உண்ணும்போது  கிடைக்கும் சுவையைப்போல் இருக்குமா?என்றால் விஞ்ஞானிகளின் பதில் இல்லை என்பதே.உணவின் சுவையில் முக்கிய பங்கு வகிப்பது நறுமணம்.ஆனால் ஈர்ப்புக்குறைவான சூழலில் நறுமணத்தை உணர்தல் அவ்வளவு சாத்தியமல்ல.இதனால் சுவைகள் வித்தியாசமானவையாக இருக்கும்.நிறைகுறைவின் காரணமாக உடல் திரவங்கள் அதிகமாக விண்வெளிவீரரின் உடலின் மேற்பகுதியிலேயே குவிகின்றன.இதனால் சற்று சுவாசிக்கத்தடை அல்லது கடினம் ஏற்படும் இதன் காரணமாக நறுமணத்தை முழுமையாக உணர்தல் தடைப்படுகின்றது.சிம்பிளாக  கூறவேண்டுமானல் உங்களுக்கு சளியின் காரணமாக மூக்கடைக்கும்போது சுவையான உண்வை உண்டால் எப்படி இருக்குமோ அதே போலவே இருக்கும்.
ஸ்பேஸ் ஸட்டில்களில் உணவை சமைப்பதில்லை காரணம் பெரும்பாலான உணவுகள் உண்பதற்குத்தயாராகவே அனுப்பப்படுகின்றன.சில உணவுகள் மட்டும் 20-30 நிமிடங்கள் சூடாக்கவேண்டியேற்படலாம்.

நாசா எதிர்காலத்தில் ஸ்பேஸ்பார்ம்களை  hydroponic system முறையில் உருவாக்கதிட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஸ்பேஸ் பார்ம்களில் தேவையான காய்கறிகளை பெற்று அங்கேயே சமைக்கவும் முடியலாம்.

hydroponic system இம்முறையில் தாவரங்கள் வளர்ப்பதற்கு மண் அவசியமில்லை.தாவரத்திற்கு தேவையான கனிமம்,நீர் நேர அட்டவணைப்படி தேவையான அளவு வழங்கப்பட்டு வளர்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment