Friday, 21 September 2012

நமது தமிழ் சினிமா - பொது விதிகள்.


நமது தமிழ் சினிமா எத்தனை உன்னதமானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவற்றை ஒத்த கலா சிருஷ்டிகள் எந்த நாட்டிலும், எந்த மொழியிலும் உருவாக்கப்படுவதில்லை. நமது நாயகர்களின் படங்கள் வரும்போது பாலாபிஷேகம் செய்வதிலிருந்தும், நாயகர்களை நாட்டின் தலைவர்களாக்குவதிலிருந்தும், நாயகிகளுக்கு கோயில் கட்டுவதிலிருந்தும், அவர்கள் எத்தனை உன்னதமான, வரலாற்றால் மறைக்கமுடியாத அளவான நல்லவிதமான பங்களிப்பை வழங்குகிறார்கள் என்பதை நாம் அறியலாம்.உலகளவிலான மொத்த சினிமா உலகங்களில், தமிழ் மட்டும் கிளைத்தமிழ் சினிமாக்களில் மட்டுமே காணக்கூடியதாக உள்ள சில, ஏன் பல பெருமைகள் இருக்கின்றன. share if you are proud to be a tamilian என நமது நண்பர்கள் வலைப்பதிய ஏற்றவை.

* சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, சின்ன தளபதி, புரட்சிக் கலைஞர்.. இப்படியாக வேறு எந்த நாட்டிலும் நடிகர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான பட்டங்கள் வழங்கப்படுவதில்லை. கலிங்கப்போரில் ஆயிரம் யானைகளை கொன்று வென்ற தளபதி தொண்டைமானுக்குக் கூட தளபதி என முடியும் பட்டம் இல்லை. சே குவேராவுக்கு கூட புரட்சி சம்பந்தமான அடைமொழி இல்லை. வெற்றி வெடி, சூப்பர் டைரக்டர் என இயக்குனர்களுக்கும் பட்டம் வைப்பது வேறு கதை.

* தனது நடிப்பை அல்ல, அங்கங்களை காட்டி காசு சம்பாதிக்கும் ஒரு நடிகைக்கு கோயில் கட்டி வழிபட்ட ஆன்மீக ரீதியான பிணைப்பு வேறு எந்த வரலாற்றிலும் பதிவாகவில்லை.

* தமிழ்நாட்டில் பிறக்காத, அல்லது தமிழரே அல்லாத மனிதர்களை தொடர்ந்து தம்மை ஆள்வதற்காக அழைக்கவைக்கும் வலிமை வேறு எந்த ஊடகத்துக்கும் இல்லை.

தமிழ் படங்களில் மட்டுமே காணமுடியும் சில காட்சிகள்:* சண்டைக்காட்சிகளின் பொது, முன்னூறு அடியாட்கள் நாயகனை அடிக்க வந்தாலும், பொறுமையாக, ஒவ்வொருவராக வந்துதான் அடிவாங்கி விழுவார்கள்.
* நாயகனை நோக்கி சுடப்படும் குண்டை, இடையில் விழுந்து தடுத்து, தனது மார்பில் வாங்கும் வளர்ப்புத்தாயை நாயகன் மடியில் கிடத்திவைக்க, “நான் இனிமே பிழைக்கமாட்டேன் என டொக்டருக்கு படித்த தாய் சொல்லிவிட்டு நாயகனின் பிறப்பு பற்றிய ரகசியத்தை சொல்லுவாள். அந்த flash back தாயை காப்பாற்ற போதுமான நீண்ட நேரத்தில் சொல்லப்பட்டு, பின்னர் தாய், நாயகியின் கையை நாயகனிடம் ஒப்படைத்துவிட்டு உயிரிழக்க, நாயகன் கண்கள் சிவக்க, பல்லை கடிப்பான்.
* பணக்கார நாயகி திமிர் எப்போதுமே பிடித்தவள். ஏழை நாயகியோ, அடி முட்டாள்.
* நாயகன், நாயகியை ஒருதலையாக காதலிக்கும்போது அவளை எவ்வளவும் சீண்டலாம், அதேவேளை வேறு ஒரு அப்பாவி பெண்ணை ரௌடிகள் சீண்டும்போது தட்டிக் கேட்பவனும் அவனே.

* தகப்பனை முற்றிலும் மதிக்காமல், வேலையில்லாமல் ஊர் சுற்றுவான் நாயகன். ஆனால் நாயகி அவனை காதலிக்கவேண்டும். ஆனால் நாயகன் காதலிக்கும்போது அழகான பெண்ணை மட்டுமே காதலிப்பான்.

* வில்லனிடம் கெட்ட செய்தி கொண்டுவரும் அடியாளை சுட்டு, கோபத்தை காட்டுவான் வில்லன்.

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங் என்பதுபோல, ஒவ்வொரு ஜனர் படத்துக்கும் தனித்தனி விதிகள்.

யதார்த்தப்படங்கள்
# நாயகன் எவருக்கும் அடங்காதவன், படிப்பறிவில்லாதவன், முரடன். (அறிமுக நாயகர்களே பொருத்தமான சொயிஸ்)

# நாயகி பாடசாலை போகும் அல்லது அவ்வயதுப் பெண். அவளுக்கு நாயகன் மேல் – அவன் என்னதான் முரடன், பொறுக்கி என்றாலும் – காதல்.

# கிளைமக்ஸில் நாயகி செத்துப்போவாள். அதுவரை விட்டேத்தியாக திரிந்த நாயகனுக்கு அப்போதுதான் உயிரின் வலி புரியும். கதறி அழுதபடி அவளின் சாவுக்கு காரணமான ஆள், அவன் மனைவி, தாய், குழந்தைகள், வீட்டு நாய் எல்லாவற்றையும் வெட்டிவிட்டு  அவனும் செத்துப்போவான்.

# கண்டிப்பாக நாயகனும், நாயகியும் சிறுவர்களாக இருந்தபோது காடுவயலெல்லாம் ஓடி ஓடிப் பாடிய பாட்டு ஒன்று இருக்கவேண்டும்.

# ‘கொண்டே புடுவேன் என்கிற வசனம் மிக முக்கியம். தே.. மனே!! என்பது உள்ளிட்ட கேட்ட வார்த்தைகள் (அதை ம்யூட் பண்ணிவிடுவார்கள் என்றாலும்) இருக்கவேண்டும், பெண்கள் கட்டாயம் அவற்றை பேசவேண்டும்.

# எங்காவது உயரத்திலிருந்து நாயகன், அரிவாளை பல்லால் கடித்தபடி பாயும் காட்சி இருக்கவேண்டும்.

# கஞ்சா கருப்பு இல்லாவிட்டால் அது யதார்த்தப் படமே அல்ல. 

*** கழுவாதவர்கள் போல சறத்தை பல்லால் கடித்தபடி,  உடலின் ஏதாவது ஒரு பாகத்தை மட்டும் ஆட்டுவதாக நடனம் அமைந்த ஒரு பாடல் கட்டாயம். நாற்பது வயதுப் பெண் பாடுவதாக அது இருக்கவேண்டும்.

# யதார்த்தப்பட இயக்குனர்கள் தாடி வளர்த்திருப்பது அவசியம். கண்ணாடியும் இருந்தால் கூடுதல் அழகு. தொலைக்காட்சி பேட்டிகளின்போது பதில் சொல்லமுதல் தாடியை சொறிபவரே அறிவுஜீவி.

கல்லூரிக் கதைகள்# கல்லூரி என்பது சகல வசதிகளுடன் கூடிய பார்க்கேயன்றி வேறில்லை. இரண்டு பேர் மட்டுமே அமரக்கூடிய பெஞ்சுகள் அங்கே ஏராளம்.

# மனோபாலா, எம் எஸ் பாஸ்கர் போன்றவர்களே அங்கே பேராசிரியர்கள். அவர்கள் வகுப்பெடுக்கும்போது யாரும் வரலாம், போகலாம். அவர்களை கலாய்க்கலாம். கேள்வித்தாள்களில் அவர்கள் கைவைக்க மாட்டார்கள்.

# நாயகன் நண்பர்களோடு கண்டீனில் இருக்கும்போது நாயகி வந்து ‘உங்ககிட்ட ஒன்னு பேசணும் என கேட்பது கட்டாயம். அதே கண்டீனிலேயே எவ்வித சண்டைகளும் தொடங்க வேண்டும்.

# காலேஜ் எலெக்சன் என்பது நடந்தே ஆகவேண்டியது. அதில் நாயகன் வென்றே ஆகவேண்டியது.

# காலேஜில் படிக்கும் உள்ளூர் எம் பி யின் மகன்தான் வில்லன். அவனது தங்கைதான் நாயகி. நாயகியே நாயகனை ஒருதலையாக காதலிப்பாள்.

# கல்ச்சுரல்ஸ் என்பதாக ஒரு நிகழ்ச்சி நடந்தே ஆகவேண்டும். அங்கே நாயகன் குழுவினர் ஒரு பாடலை பாட தொடங்கி, பின் எல்லோரும் பாடி, கடைசியில் கல்லூரியே பாடுவதாக அது முடியும்.

# பிக்னிக் ஒன்று போவார்கள். அங்கே ஒரு காதல் சேரும் அல்லது பிரியும். 

# கல்லூரி முடிந்து சில வருடங்கள் கழித்து வரும்போது அது நாயகனே ஆனாலும் கண்ணாடி போட்டுக்கொண்டுதான் வரவேண்டும்.


Action படங்கள்நாயகன் அண்ணனை தேடியோதங்கையை காணவோ சென்னைக்கு வருவான். வரும் பஸ்ஸை விட்டு இறங்கும்போதே ரௌடிகளின் அராஜகத்தை காணுவான்.

# சகல அதிகாரமும் உள்ள ஐம்பது வயதுக்காரர் ஒருவரே மெயின் வில்லன். அவருக்கு ஒரு தம்பி இருப்பான். அவன் நாயகனால் கொல்லப்படுவதே நாயகனுக்கும், வில்லனுக்கும் இடையே சண்டை வர காரணமாக அமையும். 

# வில்லனின் அடியாளாக இருக்கும் ஒரு தடியனை நாயகன் மக்கள் முன்னிலையில் அடித்து துவம்சம் பண்ணுவார். கிளைமக்சில் மெயின் வில்லனை மட்டும் எங்காவதுஆளரவமற்ற இடத்தில் வைத்து அழிப்பார்.

# சென்னை என்பது முழுக்க முழுக்க ரௌடிகளின் அரசு. அங்கே நல்லவர்களே இல்லை. போலிஸ், அரசியல்வாதிகள் அனைவருமே அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள். பான்பராக்கை மென்றபடி ஒரு ரௌடி கட்டளையிட, தொப்பியை கழற்றி கக்கத்தில் வைத்தபடி போலிஸ் கேட்பார்.

# சந்தை (மார்க்கெட்) இழந்த பழங்கால நாயகி ஒருவருடன் நாயகன் ஆடுவதாக ஒரு குத்துப்பாடல் சந்தையிலே படமாக்கப்பட வேண்டும்.

# மிக முக்கிய விதி : அதிரடி நாயகனை நாயகிதான் துரத்தித் துரத்திக் காதலிக்கவேண்டும். நாயகனோ, திரும்பியும் பார்க்கமாட்டார்.

ரஜினி படம்


# ரஜினி என்பவர் கோடிக்கணக்கான சொத்துக்களின் உரிமையாளர். அனால், ஒன்று, அந்த விடயம் அவருக்கு தெரியாது, அல்லது, காட்டிக்கொள்ளாமல் இருப்பார். வேறு ஏதாவது ஒரு குடும்பத்தின் ஆதரவில் அவர் இருப்பதாக தோன்றும். கடைசியில் பார்த்தால், அவர்தான் அந்த குடும்பத்துக்கு ஆதரவாக இருந்தவர்.

# ஒரு பதினெட்டு வயதுப் பெண் அவரை காதலிப்பாள். ரஜினியின் காதலில் மட்டும் சாதி, மத, இன ரீதியாக பிரச்சனை வராது. அவ்வாறான சில்லறை விஷயங்களுடன் போராடவா அவர் பிறந்தார்? மன்னிக்கவும் அவதரித்தார்?

# ரஜினியின் அறிமுகப் பாடலில், தமிழ்தான் தனது உயிர் மூச்சு என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்வார். 

# ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவரை அனைவரும் தவறாகப் புரிந்துகொள்வார்கள். அப்போது அவரை அடித்துத் துவைப்பார்கள். யாரோ ஒருவரின் நன்மை கருதி அவற்றை ரஜினி தாங்குவார்.

 பாடல் காட்சிகள், விஜய் படங்கள், கமல் படங்கள், இடைக்காலப் படங்கள், பழைய படங்கள்.. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதிகள். இன்னும் எத்தனையோ.. அவற்றை....

பார்ப்போ

No comments:

Post a Comment