Saturday, 22 September 2012

நீங்க பாட்மான் ஆகணும்னா எவ்வளவு பணம் தேவை


பாட்மான் உலக ஹீரோக்கள் வரிசையில் தனி இடத்தைபிடித்தவர்.அண்மையில் டார்க்னைட் படம்வெளிவந்து சக்கைபோடுபோட்டது. பல ஹீரோக்களை கொமிக்ஸ் உலகம் நமக்கு அறிமுகப்படுத்தியது அல்லது திரைப்படங்கள் அறிமுகப்படுத்தின.சூப்பர் மான்,பாட் மான்,ஸ்பைடெர் மான்,தோர்,அயர்ன் மான்,ஹல்க் போன்ற ஹீரோக்கள். இவர்களில் யாரைப்போலாவது வந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுவது இயல்புதான்.ஆனால் என்ன செய்வது நம்ம ஹீரோக்களுக்கெல்லாம் அசாத்திய சக்திகளை வேற்றுக்கிரகத்தவர்கள் வந்து கொடுக்கிறார்கள் அல்லது அசாதாரண நிகழ்ச்சிகள் மூலம் சக்திகளைப்பெற்றுக்கொள்கின்றார்கள். நாம் ஹீரோக்களானால் கட்டடத்திற்கு கட்டடம் பாய்வதற்கு யாழ்ப்பாணத்தில் பெரிய மாடிக்கட்டடங்களும் குறைவு.வேண்டுமானால் பனை மரத்திற்கு பனைமரம் தாவலாம்.சரி விடுங்கள்.ஆனால் பாட்மான் அசாத்திய சக்திகொண்ட ஹீரோ அல்ல எம்மைப்போல் சாதாரண மனிதன்தான் என்ன கொஞ்சம் செல்வந்தர்( என்னாது கொஞ்சமா???!!).இதனால்தான் சூப்பர் மானை விட எனக்கு  பாட்மானைப்பிடிக்கும்.சாதாரண மனிதராக இருந்து இப்படிதாக்குப்பிடிக்கிறாரே என்று.ஜுஸ்ரிஸ் லீக் என்றொரு கார்ட்டூன் உள்ளது.அதில் பல ஹீரோக்கள் சாகசங்களை செய்வார்கள்.அதில் சூப்பர் மான் தான் தலைவர்.ஆனால் பல இடங்களில் பவறே இல்லாத பாட்மான் தான் அவர்களை காப்பாற்ருவார்.

ஸோ பாட்மான் சூட் கொஞ்சம் பயிற்சி இருந்தால் நாமும் பாட்மான் தானே? இதில் என்னய்யா கடினம் இருக்கின்றது? என்று நினைக்கலாம்..
அந்த விடயத்திற்கு முன்னால் Dark Knight Rises பற்றிய தெரியாத சில தகவல்களைப்பார்த்துவிடுவோம்.

Christopher Nolan  மூன்று பாட்மான் திரைப்படங்களை இயக்கிய ஒரேஒரு இயக்குனர்.Batman BeginsThe Dark Knight ,The Dark Knight Rises என்ற 3 படங்கள்.
கிறிஸ்ரோபர் நோலன் ஸ்பைடர் மான் தொடர்கள் 3 ஐ தொடர்ந்து இயக்கிய Samuel Marshall இற்கு நிகராக இதன்மூலம் பார்க்கப்படுகின்றார்.


 Jonathan Nolan தான் கட் வுமன் பாட்மானில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விடாப்பிடியாக இருந்தாராம்.பாட் மான் பார்ட்னர் இல்லாவிட்டால் முழுமையடைய மாட்டார் என்பது அவரது கருத்தாக இருந்தது.இந்த ஒரு படத்தில் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.ஆனால் ஏற்கனவே ஒருமுறை தொடர்ந்து ரொபினை பார்ட்னராக கொமிக்ஸ்களில் கார்ட்டூன்களில் அறிமுகப்படுத்த ரசிகர்கள் கடுப்பாகிவிட்டார்கள்.


Christopher Nolan  தனது இறுதி இரண்டு பாட்மான் படங்களிலும் பாட்பிளேனை பயன்படுத்தவில்லை அது நம்புவதற்குக்கடினமாக இருக்கும் என்பதுடன் ரசிகர்கள் அவ்வளவாக அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று விட்டுவிட்டார்.ஆனால் டார்க் நைட்டில் சூப்பர் பாட்மொபைல் பயன்படுத்தப்பட்டது.

வழக்கமாக பாட்மான் குகையை செட்டாக அமைப்பார்கள்.ஒவ்வொரு பகுதியாக கமராவினால் காட்டப்பட்டு பெரியகுகையாக பார்வையாளர்களுக்குக்காட்டப்படும்.ஆனால் டார்க்னைட்டில் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெரிய ஸ்ரேஜ்ஜில் குகை எடுக்கப்பட்டது.குகை முழுமையாக செய்யப்பட்டது.இதனால்நோலம் கமராவை எந்த ஆங்கிளில் இருந்து படம்பிடிக்கவும் அனுமதித்தாராம்.

கோதம் சிட்டியில் ஃபுட்போல் மச் நடைபெறுவதை படத்தில் காட்டியிருப்பார்கள் அந்த சூட்டிங்கில் பங்குபற்றியவர்களின் எண்ணிக்கை 15 000.ஆனால் படப்பிடிப்புக்குழுவிற்கு ஒரு தடங்கள் ஏற்பட்டது.அசாதாரணமான கால நிலைகாரணமாக மக்கள் கலைந்துசெல்ல முற்பட்டார்கள்.இதனால் அவர்களுக்கு கார்,ஐ பொட் போன்ற பரிசுகளை வழங்கி சமாதானப்படுத்தி மிகுதி படப்பிடிப்பை நடத்தினார்கள்.

டார்க்னைட் ரைஸெஸ்ஸை நோலன் மிகவும் வேகமாகவே முடித்திருக்கின்றார்.ஆரம்பித்ததில் இருந்து 118 நாட்களில் முடித்திருந்தார். இது மற்றைய இரு பாட்மான் திரைப்படங்களை படம்பிடித்த நாட்களிலும் குறைவானது.

பேனுடைய முகமூடி உடனெ அந்த உருவத்திலே தெரிவு செய்யப்படவில்லை. வழுக்கையாக இருக்கும் நடிகருக்கு பொருந்தவேண்டும் என்றகாரணத்தால் பல முக மூடிகள் மாற்றப்பட்டு இறுதியில் மெக்ஸிக்கன் ரெஸ்லிங்க் ஸ்ரைல் முகமூடி தெரிவு செய்யப்பட்டது.அதுதான் படத்தில் பேன் அணிந்திருக்கும் முகமூடி.

பேன் Wall Street இல் பொலீஸுடன் மோதவேண்டி இருந்தது.ஆனால் பேன் உண்மையான் பொலீஸிடம்தான் மோதிக்கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் போலீஸார் ரோந்திற்கு வந்திருந்தார்கள். நடிகர்களும் போலீஸ் உடையில் இருந்ததால் பேனாக நடித்தவர் குழம்பிவிட்டார்.அதானால் உண்மையான போலிசாருடன் பேன் மோதினார்.(ஹி...ஹி...அப்ப பாட் மானை கண்டதும் புகைந்திருக்காது)

Brooklyn Bridge, Wall Street இல் 2 நாள் படப்பிடிப்பிற்கு 8 மாதங்கள் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டது.பாட் பிளேன் வீதியில் கிரேன்களால் கொண்டு செல்லப்பட்டது.

சரி சரி இதுதான் சாரே முக்கிய கட்டம் அதாவது நாமா பாட்மான் ஆகணும்னா எவ்வளவு செலவளிக்கணும்.ஏதோ பாட்மான் மாதிரி ரெஸ்ஸை ரெயிலறிடம் தைக்கக்கொடுத்து மாட்டிவிட்டு ஒரு கேபிள் கம்பியை எடுத்து கட்டடத்திற்கு கட்டடம் தாவினால் சரி என்றா நினைத்தீர்கள்? செலவை பார்த்துவிட்டு மயங்கிவிட்டேன்.ஏதோ ஒன்று இரண்டு மில்லியன் என்றால் பறுவாயில்லை(ஆமா பெரிய மில்லியனர் இவரு)நித்திட்டையோ..அல்லது ராசாவிடமோ வாங்கி கொடுக்கலாம்.ஆனால் செலவு ஓவரோ ஓவர்...

பாட்மானின் பல கவசங்கள் கருவிகள் அடங்கிய உடையின் விலை அண்ணளவாக -1 000 000 டொலர்கள்

டாங்கி போல் ஒரு கார்வைத்திருக்கிறாரே(தம்லர்) அதன் விலை-18,000,000 டொலர்கள்

அந்த (தம்ப்லர்) காரில் இருந்து தப்பிக்கும் பைக் இருக்கிறதே(பாட் பொட்) அதன் விலை-1 500 000 டொலர்கள்

பாட் பிளேன் விலை 60 000 000 டொலர்கள்

மொத்தமாக வாகனச்செலவு மட்டும்-80 000 000 டொலர்கள்

வேன் வசிக்கும் எஸ்ரேட் இருக்கின்றது அல்லவா அதன் பெறுமதி-600 000 000 டொலர்கள் இப்படி பல செலவுகளைத்தாண்டித்தான் நீங்கள் பாட் மான் ஆக முடியும்.(இதற்கு பேசாமல் ஜோக்கராகிவிடலாம்)
மேலதிக செலவுகள் சாரி தகவல்கள் கீழே...


BatmanInfographic Top 10 Interesting Facts About Dark Knight Rises You Probably Didnt Know

2 comments:

  1. அம்மாடியோ!
    நான் வெறும் மேன் ஆகவே இருந்துட்டுப் போறேன்.

    ReplyDelete