Sunday, 2 September 2012

இவர்களை பாராட்டலாமே


சினிமாவில் தான் அதில் நடிக்கும் பல நாயகர்கள் ஹீரோ ஆக முடிகிறதே தவிர நிஜ வாழ்கையில் பெரும்பாலானவர்களது நிலைமை உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை ...அவர்கள் படங்களில் சில அபாயகரமான காட்சிகளில் நடிக்ககூட மாட்டார்கள் ...காரணம் மரண பயம் ..இதில் மரணத்தை பற்றிய பஞ்சு வேறு....ஆனால் இவர்களுக்காக ஒரு கூட்ட்டமே இருக்கிறது கொடிபிடிக்க ...தலைவா என கூச்சலிட ...அவர்களது பெயரை பச்சை குத்த ...இப்படி இவர்களை பற்றி கூறிக்கொண்டே போகலாம் ...அவர்களுக்கு பலசமயம் தம்மை முட்டாள்கள்ஆக்குகின்றார்கள் என்பது தெரியாமலே போய் விடுகின்றது facebook கில் கூட தமது தந்தையின் பெயரை எடுத்துவிட்டு தமது ஹீரோ களின் பெயரை போட்டுக்கொள்கிறார்கள் ...(தெரிஞ்சவன் பாத்தா மானம் ஒருபக்கமா போய்டும் ) இவ்வாறானவர்களை தெருவில் நாய்க்குட்டி விபத்தில் அடிபட்டுக்கிடக்கும்போது அதை இரக்கத்துடன் பார்ப்பது போல் தான் பார்க்க தோன்றுகிறது


இவ்வாறான போலிகதாநாயகர்களை விட நிஜத்தில் கதாநாயகர்கள் இருக்கின்றார்கள் இவர்கள் தமது உயிரை பணயம் வைத்து பலரை காப்பாற்றி இருக்கின்றார்கள் இவர்கள் சிறிய வயதினர் என்பது இன்னும் தூக்கலான விடயம்Bravery Awards அசாதாரன சாதனைகளை செய்யும் சிறுவர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் விருது இதுவரை 800 சிறுவர்கள் இவ்விருதை பெற்றிருக்கின்றார்கள் (568 boys ,232 girls ) இவ்விருதை 16 வயதுக்கு குறைந்த 24 சிறுவர்கள் பெற்றிருக்கிறார்கள் 


2012 இற்கான விருதை 24 சிறுவர்கள் பெற்றிருக்கிறார்கள் 

Om Prakash Yadav


11 வயது  சிறுவன் ...............எரிந்து கொண்டிருக்கும் வண்டியில் இருந்து தனது உயிரை பணயம் வைத்து உள்ளே இருந்த சிறுவர்களை காப்பாற்றியவர் பரிசாக எரி காயங்களை முகத்திலும் கைகளிலும் உடலின் பின்புறத்திலும் வாங்கியவர் இவற்றில் இருந்து இன்னும் இவர் பூரணமாக குணமடையவில்லை சரியான சிகிச்சையை பெறமுடியாததால் தனது ஒருவருட பாடசாலை கல்வியை இழந்துவிட்டார் ..
இதே மாதிரி ஒரு சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டால் மீண்டும் காப்பாற்ற முயல்வீர்களா என கேட்டபோது இவளவு  பட்டும் அசராமல் எத்தனை சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் காப்பாற்றுவேன் என சிரிப்புடன் கூறியுள்ளார் Om Prakash Yadav இவரது தந்தை ஒரு விவசாயி இவர் பாடசாலை சென்றுகொண்டிருக்கும்போது வீதியல் எரிந்துகொண்டிருந்த வானிற்குள் இருந்து உயிருக்கு  போராடியவர்களை காப்பாற்றினார் டிரைவர் இறுதியில் கதவை திறந்து தப்பி விட்டார் ஆனால் ஓம் பிரகாஷ் ஆல் தப்ப முடியாமல் போய் விட்டது இவர் 8 சிறுவர்களை காப்பாற்றி உள்ளார் 

Mittal Patadiya


இவரது வயது 12 தம்மை தாக்க வந்தவர்களை எதிர்த்து போராடியவர் ..அகமதாபாத் ஐ சேர்ந்தவர் ..நவம்பர் 3 2010 அன்று இவரது வீட்டின் கதவு தட்டப்பட்டது இவரது பாட்டி சென்று கதவை திறந்தார் வெளியே படிக்கு பழக்கமான டிரைவர்ரும் வேறு இரண்டுபேரும் நின்றிருந்தார்கள் சடுதியாக பட்டியை உள்ளே தள்ளி தாளிட்டு கடுமையாக தாக்கினார்கள் இதை பார்த்த 
மிட்டல் பாய்ந்து ஒருவனை பிடித்தார் அவன் மிட்டலின் கழுத்தில் பலமாக மீண்டும் மீண்டும் தாக்கினான் இதனால் மிட்டலின் கழுத்தில் இரத்தம் வந்தது இறக்கும் நிலைக்கே சென்றுவிட்டார் எனினும் சமாளித்துக்கொண்டு எழுந்து கதவை திறந்தார் அப்பொழுதுதான் அயலவர்களுக்கு செய்தி தெரிந்தது அயலவர்களால் தாக்கியவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர் ...இவர் சிறிய வயதில் இவ்வாறு செயற்பட்டதால் இவர் சுற்றத்தாரால் ஜான்சி ராணி என அழைக்கப்படுகின்றார் 

 Prasannata Shandilya இவருக்கு வயது 11 ..ஓடிசாவை சேர்ந்தவர் ...ஏப்ரல் 12 2011 இரவு இவரது வீட்டுக்குள்  கொள்ளையர்கள் ஐந்து பேர் புகுந்து இவரது கண் முன்னாலேயே  இவரது பெற்றோரை இரும்புக்கம்பிகளால் தாக்கி உள்ளார்கள்   விழித்துக்கொண்ட இவர் பயந்து ஓடவில்லை சமயலறைக்கு ஓடினார் மிளகாய் பொடியை எடுப்பதற்கு அங்கு இரண்டு போத்தல்கள் இருந்தன எதற்குள் மிளகாய் பொடி இருக்கின்றது என கும்மிருட்டில் கண்டுபிடிக்கமுடியவில்லை புத்திசாலித்தனமாக இரண்டையும் கலந்து கொண்டு சென்று அவர்களுக்கு அவற்றால் தாக்கியவர்களை தாக்கினர் இவரது பெற்றோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்கள் ...


 Uma Shankar Age
இவரது வயது 12 நகரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டால் மக்கள் உதவிசெய்ய முன்வரமாட்டார்கள் இவர் பாடசாலைக்கு சென்று கொண்டிருக்கும்போது  ஒரு வான் விபத்துக்குள்ளானது உள்ளே இவரை போன்ற மாணவர்கள் பலர் ரத்த வெள்ளத்தில் காயப்பட்டுக்கிடந்தர்கள் இவர் தான் பிரயாணம் செய்துகொண்டிருந்த பஸ்சில் இருந்து ஜன்னலினூடாக பாய்ந்து அவர்களுக்கு உதவி செய்தார் உள்ளே இருந்த சிறுவர்களை வெளியே இழுத்து எடுக்க வேண்டியதை இருந்தது ..சாலையில் விபத்து நடந்தும் யாரும் தமது வாகனங்களை நிறுத்தவில்லை ..நிறுத்துமாறு தனது சட்டையை கழற்றி கொடி அசைத்தும் நிறுத்தவில்லை ..அவர்களை காப்பற்ற  வேறு வழியில்லாமல் போகவே  உடனே வீதில் வந்த வாகனத்தின் முன் பாய்ந்துவிட்டார் அப்பொழுதுதான் நிறுத்தினார்கள் ஆறு சிறுவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் ஐந்து பெண்களையும் காப்பாற்றி உள்ளார் 


நடிகர்கள் ஒரு விடயத்திற்கு பணம் கொடுப்பார்கள் உண்மையில் இது அவர்களின் விளம்பரத்துக்ககவே உதாரணமாக தானே புயலிற்கு நடிகர்கள் கொடுத்த பணத்தின் அளவு உங்களுக்கு தெரிந்திருக்கும் அவர்களது சொத்து மதிப்பு 500 அல்லது 600 கோடிகளுக்கு மேல் அனால் கொடுத்தபணம் லட்ச கணக்கில் மட்டுமே இது எமது வீட்டுக்கு பிச்சை கேட்டு வருபவனுக்கு ஐந்து ரூபாய் போடுவதற்கு சமனானது ....இதை விட கேவலமான விடயம் இவர்களது ரசிகர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் "புயல் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்த கடவுளே வாழ்க "என்று போஸ்டர் அடித்து ஓட்டுகிறார்கள் (அவர்களுக்காக இரங்கி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி விடுவோம் )


இவர்கள் எல்லாம் நடிகர்கள் நாம் கொடுக்கும் பணத்தில் அவர்கள் திளைப்பவர்கள் இவர்களுக்கு லட்சங்கள் பெரிய விடயமல்ல ஆனால் ஒரு ஆசிரியருக்கு 50 லட்சம் என்பது ஒரு மிகப்பெரிய தொகை அதை கல்விக்காக வழங்கி உள்ளார் ஒரு ஆசிரியர் 
ஈரோட்டில் சித்தோடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பொன்மணி தேவி இவர் ஓய்வு  பெற்ற தமிழ் ஆசிரியர்  "எனது கணவரும் ஒரு தமிழ் ஆசிரியர் ஆசிரியர் என்பது ஒரு உயர்ந்த துறை பலமாணவர்களை நல்ல குடிமகன்களாக ஆக்கும் பொறுப்பு எங்களுடையது கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன இவற்றை ஓரளவிற்கு தீர்க்கவே இத்தொகையை வழங்கி உள்ளதாக கூறி உள்ளார் 
பாடசா
லைக்காக நிலத்தையும்  வழங்கி உள்ளார் 10 000 சதுர அடி நிலத்தையும் வழங்கி உள்ளார் ...ஆழ்வார் தாத்தாவின் கல்விப்பணி.....


சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி யாரிடம் கேட்டாலும் ஆழ்வார் பழைய புத்தககடையை கேட்டால் வழி சொல்லி விடுவார்கள். கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஒரு புத்தகவங்கி செய்ய வேண்டிய பணியை சப்தமின்றி தனி மனிதராக தமது தள்ளாத 78 வயதிலும் செய்து வருகின்றார் ஆழ்வார் தாத்தா. எனவே மயிலாப்பூரின் அடையாளங்களில் ஒருவராக அவர் மாறிப்போனதில் ஆச்சர்யமில்லை.

நான் அவரை சந்திக்கச் சென்ற போது லேசான மழை தூறல் தூரிக்¢ கொண்டிருந்தது. மழை தூறலில் புத்தகங்களை நனைந்து விடாமல் காக்க பிளாஸ்டிக் உரைகளால் புத்தகங்களை மூடிக் கொண்டிருந்தார் ஆழ்வாரின் துணைவியார் மேரி. புத்தகக் குவியலுக்கு நடுவே ஒரு நாற்காலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் ஆழ்வார் தாத்தா.

தோலில் வெள்ளை நிற கோர்ட்டும், டேதஸ் கோப்புமாக புத்தங்களை வாங்க வந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சேவியர் “மருத்துவ புத்தகங்கள் குறைந்தது ரூ.1,000க்கு குறையாமல் கிடைப்பதில்லை. பொருளாதாரத்தில் பின் தங்கிய என்னைப் போன்ற மாணவர்களால் இவற்றை விலை கொடுத்து வாங்குவது என்பது முடியாத ஒன்று. நான் கடந்த மூன்று வருடங்களாக தாத்தாவிடம் தான் புத்தகங்களை மலிவான விலைக்கு வாங்கி வருகின்றேன்’’ என்றார்.

பத்து வருடங்களாக நான் ஆழ்வார் தாத்தாவிடம் புத்தகங்களை வாங்குகின்றேன் என்று பேசிய பள்ளி ஆசிரியர் முத்துக்குமார் “ஐஏஎஸ் படிப்பவர்களில் இருந்து ஐடிஐ பயிலும் மாணவர்கள் வரையிலும் தங்களின் கல்விக்காக அனைத்து புத்தகங்களையும் விலை கொடுத்து வாங்குவது என்பது இயலாத ஒன்று. இந்த மாணவர்களுக்கு எல்லாம் பழைய புத்தகங்களை தேடி அவற்றை குறைந்து விலைக்கு விற்று ஆழ்வார் தாத்தா ஆற்றி வரும் கல்விப்பணி மகத்தானது. ஆனால் யாரும் அவரை கண்டு கொள்ளாதது. மிகவும் அநியாயமானது’’ என்றார்.

தாத்தாவிற்கு உடல்நலம் சரியில்லாததால் அன்னாரின் மனைவி மேரி என்னிடம் பேசினார் “எங்களுக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள். மூன்று பெண் குழந்தைகளையும் இந்த புத்தக்கடையை நடத்தி தான் கரையேற்றினோம். முன்னமாதிரி இவரால் நடமாட முடியவில்லை. ஒரு வருடமாக ஆஸ்பத்திரி வீடு என்று அழைத்த வண்ணம் உள்ளோம். இதனால் கடையை நானும் எங்க புள்ளைகளும் தான் பார்த்து கொள்கின்றோம். போலீஸ்காரங்கள் தான் அடிக்கடி கடை நடைபாதையில் இருப்பதாகச் சொல்லி அடிக்கடி இடத்தை மாற்றக் கோருகின்றார்கள். மழைக்காலங்களில் புத்தகங்களை பாதுபாப்பதும் மிகச் சிரமமாக இருக்கின்றது’’ என்றவர் மேலும் எனது கணவரிடம் புத்தகங்களை வாங்கி இன்று எத்தனையோ பேர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். அவர்களிடம் ஐயா இந்தப் புத்தகங்களை எல்லாம் பாதுகாக்க ஒரு கொட்டகை மட்டும் போடுவதற்கு அனுமதி பெற்றுத் தாங்கள். பெரிய புண்ணியமாகப் போகும் என்று, கண்ணீருடன் தங்கள் கதையை பகிர்ந்து கொண்டார்.

நான் ஆழ்வார் தாத்தாவை அணுகி தங்களை புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். உடனே தமது மனைவியை அருகில் அழைத்து ஒரு புத்தகத்தை எடுத்து வரச் சொன்னார். அந்த புத்தகம் என்ன தெரியுமா? நமது முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதமான அக்னி சிறகுகள். இந்த புத்தகத்தோடு சேர்த்து என்னை புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். மாணவர்களையும், இளைஞர்ளுக்கும் இன்று கலங்கரை விளக்கமாக கனவு நாயகனாகவும் திகழும் அப்துல் கலாமின் சாதனைகளை ஒப்பிடும் போது, டாக்டர், இன்ஜினியர், கலெக்டர் என பலரது கனவுகளை நிறைவேற்றிருக்கும் ஆழ்வார் தாத்தாவின் சாதனையும் கிஞ்சிற்றும் குறையாதது. மேரி பாட்டி கூறியது போன்று புத்தகங்களை வைக்க ஒரு கொட்டகை வைக்க அரசாங்கத்திடம் கையேந்த தேவையில்லை. ஆழ்வார் தாத்தாவிடம் புத்தகளை வாங்கிய என்னைப் போன்றோர்கள் உதவினாலேப் போதும், இன்னும் பல கலாம்கள் கூட உருவாகுவார்கள்.

நன்றி : தோழர் .ரபி

உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் 
: 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கௌரவம்:


ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக “அக்ஷயா டிரஸ்ட்’ என்ற அமைப்பையும் “ஸ்பான்சர்கள்’ உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏழை எளிய மக்களை தேடிசென்று உணவு கொடுப்பதென்பது அரிய மகத்தான பணி .. கோவில் உண்டியலில் பணத்தை கொட்டுபவர்கள இவரின் கைகளின் குடுங்கள் உங்களுக்கு கடவுள் குடுப்பதை விட இது பெரிய புண்ணியம் ..வளரட்டும் இவரின் சேவை.. வாழ்த்துக்கள்நாம் செலவழிக்கும் பணத்தை வாங்கி நமக்கே செலவழித்து புகழ் தேடும் நடிகர்கள் அரசியல் வாதிகள் மத்தியில் ,படங்களில் மட்டுமே இரண்டு மணித்தியால   ஹீரோவாக  வாழ்கை நடத்தும் நடிகர்கள் மத்தியில் இவர்கள் நிஜ ஹீரோக்கள் .............
இவர்களையும் பாராட்டுங்கள்

No comments:

Post a Comment