Saturday, 15 September 2012

நோஸ்ரடாமஸ்ஸின் தீர்க்கதரிசனங்கள் ....நோஸ்ரடாமஸ் இவர் தீர்க்க தரிசனங்களுக்கு மிகவும் புகழ் பெற்றவர் ....இவர் தான் வாழ்ந்தகாலத்தில் எழுதிய தீர்க்கதரிசனங்களில் பெரும்பாலனவை நடந்து முடிந்து விட்டன இவர் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் தனது தீர்க்கதரிசனங்களை பாடல்களாக வெளியிட்டுள்ளார் இவற்றை தி சென்டுரீஸ் என்ற தனது நூலில் நூறு பாடல்களின் தொகுப்பாக வெளியிட்டுள்ளார்  இந்நூல் பைபிளிற்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் விற்பனையாகியது ...

இவர் தனது சென்டுரீஸ் நூலில் நெப்போலியன் ,கென்னடி சகோதரர்களின்கொலை ,நெப்போலியன் ,ஹிட்லர் முசோலினி ,உலகப்போர் என உலக வரலாற்றை மாற்றிய சகல விடயங்களையும் முன்பே குறிப்பிட்டுள்ளார்

..அமெரிக்காவின் ட்வின் டவர் விமானத்தால் தாக்கப்படும் என்பதுவரை குறிப்பிட்டுள்ளார் ...அப்படி முன்பே குறிப்பிட்டிருந்தால் இவற்றை தடுத்திருக்கலாம் தானே என்று நீங்கள் எண்ணலாம்...அதில் ஒரு பிரச்சனை இருக்கின்றது அவர்தனது எதிர்வு கூறல்களை நமது சினிமா படலகளைப்போல் நேரே அர்த்தம் புரியும்படி கூறவில்லை ...புதிர்கள் குறியீடுகள் ,சிம்போலிசம் போன்றவற்றினூடாகவே  குறிப்பிட்டுள்ளார் யாரும்  தனது எதிர்வு கூறல்களை தவறாகபயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்தார்...அதுவே எமக்கு ஆப்பாகிப்போனது ஒருவிடயம் நடந்து முடிந்தத்தன் பின்புதான் அட இதைத்தான் அவர் கூரியிருக்கிரரா என்று நொந்துகொள்ள வேண்டியதுதான் உதாரணமாக ஒரு நிகழ்வு இவரது பாடல்களில் விளங்கமுடியவில்லை என ஒதுக்கிய பாடல்கள் பல உண்டு
"திடீர் என்று ஒருநாள்  மக்கள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் சமயம் ஒரு பயங்கர நெருப்பு ஆகாயத்தில் எழும்பியது ஆர்டிக்கின் வடக்கே உள்ள நாட்டில் அழிவும் மரணமும் ஏற்படும் 
பூமியின் நடுப்பகுதியிலிருந்து புறப்படும் தீ உலகை அச்சுறுத்தும்வண்ணம் புதிய நகரத்தின் கோபுரங்களை தகர்த்து கலகத்தை உண்டு பண்ணும் 
புதிய நகரத்தில் 40-45 டிகிரி அளவில் ஆகாயத்தில் அனல் மழை பொழியும் அதன் தாக்கம் வெகு தூரத்திற்கு பரவும் .அவர்கள் சான்று கேட்பார்கள் சதிகாரர்கள் எங்கேனும் மறைந்து கொள்வார்கள் .வல்லரசுகள் சினமடையும்"
இங்கு புதிய நகரம் என குறிப்பிடப்படுவது நியூயார்க் நகரத்தை கோபுரங்கள் என குறிப்பிடப்படுவது பலமாடிக் கோபுரங்களை...
இவை எல்லாம் நடந்து முடிந்ததன் பின்னர்தான் புரிந்தது அவர் இதைத்தான் குறிப்பிட்டார் என்று ...

இவ்வாறு பல விடயங்கள் உள்ளன ஒவ்வொன்றையும் தொடரும் பதிவுகளில் நோக்குவோம் 

இவர் கூறிய அனைத்து விடயங்களும் நடந்துள்ளன என்று கூறிவிடமுடியாது நோஸ்ரடாமஸ் இவற்றை பிரெஞ்சு மொழியில் தான் எழுதினார் இவற்றை மொழிபெயர்த்த வேற்று மொழி மொழிபெயர்ப்பாளர்கள் எழுத்துப்பிழைகள் தவறாக புரிந்துகொள்ளல் ,பெயர்கள் நேரங்கள் திகதிகள் போன்றவற்றை தமது புரிந்து கொள்ளும்தன்மைக்கு ஏற்றவாறே மொழி பெயர்த்தார்கள் இதை விட மொழிபெயற்பாளர்கள் தமது சிந்தனைகளையும்  சேர்த்து தி சென்டுரீஸ்ஸின் மொழிபெயர்ப்பில்  வெளியிட்டுளர்கள் இவற்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்

நெப்போலியன் 


நெப்போலியன் மே 18 1815 இல் அரசனாகுகின்றான் 
"தகுதியான அரசனாய் அவன் ஆட்சி நடாத்துவான் அனால் அவனது நிம்மதியும் வாழ்கையும் சிறிய காலத்துக்குத்தான் "

எழாம் பியுஸ் முதல்முறையாக பிரான்ஸ் வந்து நெப்போலியனுக்கு முடி  சூட்டுகின்றார் ஆனால் இரண்டாம் முறை வரும்போது அவன் ஒரு சிறைக்கைதி 

"கைது செய்யப்பட்டவன் பல அபாயங்களில் இருந்து தப்புகின்றான் அவனுடைய அதிஷ்டம் வெகு சீக்கிரமே மாறி விடுகின்றது மக்கள் அரண்மனையில் சிக்குகின்றார்கள் நகரம் முற்றுகைஇடப்படுகின்றது "(செய்யுள் 66 )

1815 இல் எல்பா சிறையில் இருந்து நெப்போலியன் தப்புகின்றான் தப்பிய நெப்போலியனை தமது தோளில் சுமந்து சென்ற மக்கள் பதினெட்டாம் லூயியின் அரண்மனையை முற்றுகை  இடுகின்றார்கள் அத்துமீறி நுழைந்து நெப்போலியனை மீண்டும் அரசனாக்குகின்றார்கள் 
"அட்ரியடிக் கடலருகே அந்த கப்பல் படை நாசமடைகின்றது பூமி நடுக்கமுறுகின்றது அவன் சரணடையும்படி அவர்களை கோருகின்றான்"(செய்யுள் 86 )

நெப்போலியனின் படைகள் துருக்கிக்கு சென்று அங்கு முற்றுகையிட்டு இருந்தபோது அவனுடைய படைகளை ப்ளேக் நோய் தாக்குகின்றது துருக்கியின் எதிர்ப்பை சமாளிக்க முடியாவிடில் எகிப்து திரும்புவது என நெப்போலியன் முடிவு செய்கிறான்  துருக்கியர் சரணடைய மறுத்ததால் அவன் முற்றுகையை வலுப்படுத்தும்படியாகுகிறது 

மிகவும் சுவாரசியமான மிகவும் ஒத்துப்போகும் விடயம் இதோ ...

"மிலான் நகரம் திருட்டுத்தனமாய் தாக்கப்படுகின்றது அந்த வல்லூறு அதனை கைப்பற்றுகிறது போருக்குமுன் ஒரு உரை நிகழ்த்தப்படுகின்றது 
புராதன சுவர்களை பீரங்கிகள் பிளக்கின்றன "

நெப்போலியன் வல்லூராக சித்திகரிக்கப்படுகின்றான் அவன் மிலான் நகரை இரண்டு முறை கைப்பற்றி இருக்கின்றான் போர் நடவடிக்கைகளுக்கு முன் நெப்போலியன் தனது வீரர்களிடம் ஆற்றிய உரை ஐரோப்பா முழுவதும் எதிரொலித்தது 
"வீரர்களே உங்கள் உணவு வயிற்றுக்கு போதாததாகவும் உடை உடம்பிற்கு பற்றாததாகவும் இருக்கின்றது அரை பட்டினி அரை நிர்வாணம் அரசு உங்களுக்கு கடன் பட்டிருக்கின்றது ஆனால் உங்களுக்காக எதுவும் செய்ய முடியாத நிலை என்ன இத்தாலி வீரர்களே உங்களுக்கு தைரியம் தேவையில்லையா ?"
இது இத்தாலி வீரர்களை கேலி செய்வதாக அமைந்தது அவர்கள் பின்வாங்கினார்கள்

  "மிகப்பெரிய தேனிக்கள் பட்டாளம் திடீர் என்று கிளம்புகின்றது அவை எங்கிருந்து வந்தன என்று யாருக்கும் தெரியவில்லை இரவில் திடீர் தாக்குதல் "

தேனிக்கூட்டம் அவனது இலச்சினை நெப்போலியனிடம் பாரிஸ் நகரத்தை ஒப்படைத்தவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு வழிவிட்டிருக்கிறார்கள் 

"முன்பு எந்த ஒரு பிரெஞ்சு மன்னனுக்கும் இல்லாத பெயர் அவனுடையது .ஒருபோதும் அச்சுறுத்தும் விதமாய் அப்படி ஒரு இடி இடித்ததில்லை இத்தாலி ,ஸ்பெயின் ,இங்கிலாந்து நடுகல் நடுக்கமுறும் .அந்நிய நாட்டுப் பெண்களிடம் அவனுக்கு ஓர் ஈர்ப்பு இருக்கும் "

பிரெஞ்சு அரச மரபில் இல்லாத போனபர்ட் என்ற பெயர் நெப்போலியன் கொண்டுவந்ததுதான் ..லூயி ஹென்றி சார்ல்ஸ் என்றவாறுதான் முன்னைய மன்னர்களின் பெயர்கள் இருந்தன அவனுடைய இரண்டு மனைவிகளுமே அயல் நாட்டினர்தான் 


"ஒரு சாதாரண சிப்பாய் நிலையில் இருந்து சாம்ராஜ்ஜியத்தை ஆளும் நிலையை அடைவான் பூஜை பராக்கிரமம் உடையவன் என்றாலும் சர்ச் விடயத்தில் மோசமானவன் கடற் பஞ்சில் இடம் பிடித்துக்கொள்ளும் நீரினைப்போல் மத குருமார்கள் நெஞ்சில் அவன் மீது கோபங்கள் இருக்கும் "

நெப்போலியன் இராணுவத்தளபதிக்கு உதவியாளராக இருந்தவன் போரில் திறமையானவன் கிறீஸ்தவ மதகுரு முறையை ஒழித்தவன் எனவே மதகுரு மாரின் கோபத்தை சம்பாதித்தான்
வாசித்தால் தலை சற்று சுற்றவே செய்யும் அவர் இத்துடன் நிறுத்தவில்லை 
நோஸ்ரடாமஸ் உலகப்போர்களைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளார்....3 ஆம் உலகப்போர் 4 ஆம் உலகப்போர் என அவற்றின் வரிசை நீள்கின்றது அவரின் கூற்றுப்படி மனித இனம் 3797 இல் தான் அழியும் என குறிப்பிட்டுள்ளார் ..இதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய மகிழ்ச்சியான விடயம் எதுவெனில் உலகம் 2012 இல் அழியாது என்பதுதான் 

"அந்த பெண்மணி இரண்டாம் முறை பதவிக்கு வருவாள் இம்முறை அவளது அவளுடைய பகைவர்கள் சதி செய்து அவளை கொல்வார்கள் எழுபது வயதிற்குள் அவள் இறந்துவிடுவாள் தொடர்ந்து ஒரு விமான ஓட்டி பதவியில் இருப்பார்  "
இந்திரகந்தி

யாரை பற்றி குறிப்பிடுகிறார் தெரியுமா இந்திரகந்தியைப்  பற்றித்தான் குறிப்பிடுகிறார் அந்த விமான ஓட்டி ? அது ராஜீவ் காந்தி!!!!!!!!!!!!!!!!!
ராஜீவ் காந்தி
டயானா மரணம் ...

"அந்த துரதிஷ்டமான திருமணம் அதிக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் ..ஆனால் முடிவில் மகிழ்ச்சி அற்று போகும் ...தாய்க்காரி மருமகளை இழிவாக கருதுவாள் மருமகளின் நிலை இரங்கத்தக்கதாகும் "

இது சார்ல்ஸ் டயானாவை குறிக்கிறது இவர்களின் காதலால் மாமியாரான எலிசபத்திற்கு கடுமையான வெறுப்பு ஏற்பட்டது ..டயானாவும் அவரது காதலரான Dodi Fayed கார் விபத்தில் இறந்தது உங்களுக்கு தெரிந்த விடயம் 


எதிர்வரும் பதிவில் ஹிட்லர் ...
தொடரும் ....

2 comments:

  1. இந்த பதிவை இடுபவர் இரண்டு ஆற்றுக்கு நடுவில் மரணத்தை தழுவுவார்.

    இது என்னோட தீர்க்க தரிசனம்

    ReplyDelete